ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

அய்யா வைகுண்டர்

பின்னர் நடக்க இருப்பதை முன்பே கூறிய அய்யா வைகுண்டர்

பிற் காலத்தில்; நடக்க இருந்த பல நிகழ்ச்சிகள் பற்றி அய்யா வைகுண்டர் புனித நூல்களான அருள்நூல் மற்றும் அகிலத்திரட்டில் எழுதி உள்ள செய்திகள் பல உண்டு. அருள்நூல் மற்றும் அகிலத்திரட்டில் எழுதி உள்ள செய்திகளை எவராவது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு அதில் இருந்து கிடைக்கும் வருங்கால நிகழ்வுகள் பற்றிய செய்திகளை எழுத பக்கம் போதாது. உண்மையான ஆனால் நம்ப முடியாத செய்திகள் அவை. அவற்றில் சில இது.

இராம ஜென்ம பூமி- பாபரி மசூதி

அயோத்திப் பட்டினம்தான் அழியுதே என் மகனே ---  அருள்நூல்
மகனே அயோத்திப் பட்டிணம் அழியப் போகின்றது

பல நூற்றாண்ண்டுகளுக்கு முன்பு இராமர் பிறந்த இடத்தில் இருந்த ஆலயத்தை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அதை அழிக்க பலரும் முயன்றனர். பலரும் இராமர் பிறந்த அயோத்தி நகரம் வேறு இடத்தில் இருப்பதாக நம்புகின்றனர் என்றாலும் பெருவாரியான மக்கள் இராமர் பிறந்தது இந்த இடத்தில்தான் என்றே நம்புகின்றனர். நாற்பது ஆண்டுகள் முன் எழுந்த சர்ச்சையினால் அந்த இடத்தில் இருந்த ஆலயம் மூடப்பட்டது. பின்னர் அது இந்துக்களின் பூஜைக்கென திறந்து விடப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் அந்த கட்டிடத்தின் மீது  கொடி ஏற்ற முயன்றனர். இறுதியாக அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டு இராமஜென்ம பூமி அமைக்கப்பட்டது. ஆனால் நடந்துள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி 'என்ன நடக்க உள்ளது, அதன் முடிவு என்ன' என்பதை மகனே அயோத்திப் பட்டிணம் அழியப் போகின்றது என்று அய்யா வைகுண்டர் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறி உள்ளார். 

சாலைகளும் வாகனங்களும்

நாழுக்குநாழிகை நடக்கும் வழி குறுகும் - அகிலத் திரட்டு

அய்யா வைகுண்டர் வாழ்ந்திருந்த காலத்தில் சாலை வசதிகளும் போக்குவரத்து வாகனங்களும் அதிகம் இல்லை. பணம் படைத்தவர்கள் குதிரை மீதும், மற்ற விலங்குகள் இழுக்கும்  வண்டிகளிலும் சவாரி செய்தனர்.  சாதாரணக் குடி மகன் பல்வேறு இடங்களுக்கும் நடந்தே செல்ல              வேண்டி இருந்தது.  நல்ல சாலைகளும் கிடையாது. மன்னர்களால் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டு இருந்ததாக நாம் படித்து இருந்தாலும் அந்த சாலைகளில் அனைவரும் நடக்கக் கூடது என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இன்றைக்குள்ள சாலைகள் முற்றிலும் மாறுபட்டவை. எங்கு செல்ல வேண்டும் எனிலும் இருசக்கர வண்டிகளிலும், கார் மற்றும் அரசு வாகனங்களில் பயணம் செய்ய முடியும். ஆக வைகுண்டர் அன்றே கூறியது நிஜமாகி உள்ளது. 

பிரோபிஸ் - பிரோபிஸ் ஜூலிபோரா

வெட்டவெளிதனிலே மக்கள் வேலிபயிராகுதப்பா – அருள் நூல் 
மகனே, வெட்டவெளிக்கு தடுப்பு வேலி உருவாகுமப்பா


இந்திய நாட்டின் எந்த வெட்ட வெளிப் பகுதிகளுக்குச் சென்றாலும் பிரோபிஸ் ஜூலிபோரா என்ற புதர் செடி மண்டிக் கிடப்பதைப்; பார்க்கலாம். இதன் மற்ற பெயர்கள்  வெளிக்  கருவை, டெல்லி  முள், காந்தி முள் போன்றவை. இந்த

செடியைப் புதர் போல நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பல   இடங்களிலும் பயிரிட்டனர். அதன் காரணம் அது பயங்கரக் காற்றினால் ஏற்படும் பூமி அரிப்பைத் தடுத்து நிறுத்தும். அது மட்டும் அல்ல பயங்கரமாக வீசும் காற்றின் சக்தியையும் குறைக்கும். அய்யா அவர்கள் கூறியது போல இவை இப்போது மரங்களாக வளர்க்கப் பட்டு அடுப்புக் கரி மற்றும் மரப்பட்டைகளாக பயன் படுத்தப்படுகின்றன.  

பெண்கள் ஆதிக்கம்

நாரியர்கள் கூடி நாடெங்கும் வாசமித்து 
ஒரு குடை கீழ் ஆள்வார்                                 - அகிலத் திரட்டு

உலகின் ஆட்சி பெண்கள் கைகளில் இருக்கும்


அய்யா வைகுண்டர் வாழ்ந்திருந்த காலத்தில் பெண்கள் மிகவும் கொடுமை படுத்தப்பட்டனா.; அவர்களுக்கு எந்த விதமான சுதந்திரமும் கிடையாது. வெளியில்; செல்ல முடியாமலும்  கல்வி அறிவு பெற முடியாமலும் இருந்து வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இன்றைய நிலையைப் பாருங்கள். ஆணுக்கு நிகராகப் பெண்கள் உள்ளனர். எவரெஸ்ட் சிகரம் ஏறுகின்றனர், ஆகாய விமானம் ஓட்டுகின்றனர், ஏன் சில நாடுகளில் ஆட்சியிலும் இருந்து வந்தனர். ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், இந்தியா, பங்ளாதேஷ் போன்ற நாடுகளை சில வருடங்களுக்கு முன்பு பெண்கள் ஆட்சி செய்தனர். அய்யா வைகுண்டர் முன்பே கூறி  இருந்தது போல  உலகெங்கும் பெண்கள் ஆதிக்கம் 
துவங்கி விட்டது.


அழிக்கப்படும் காடுகள்;

நாடுNhறும் புமியெல்லாம் காடு தனிந்துவராம்  - அகிலத் திரட்டு
நாடெங்கும் உள்ள காடுகள் அழியத் துவங்கும்

அனைத்து இடங்களிலும் காடுகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன. அவைகளை மீண்டும் தோற்றுவிக்கப்படுவது அவசியம் ஆகி விட்டது. மரவேலைகள், அடுப்பெறிக்க, விலங்குகளுக்கு தீவனம் என பல்வேறு காரியங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்ஒரு வருடமும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் இந்தியாவில் அழிக்கப்பட்டு வருகின்றன. நம்முடைய நாட்டுப் பரப்புத் தொகையில் இருபத்தி மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகவே காட்டு வளம் உள்ளது. ஆனால் வன வளம் ஒரு நாட்டிற்கு மிகவும் அவசியமானது. 
அதைதான் அய்யா வைகுண்டர் அருள் நூலில் நாடுதிறவை உலா என்ற பாகத்தில் கூறி உள்ளார்கள். ஆனால் சிவகண்ட அதிகாரப்பாத்திரத்தில் நாடெல்லாம் காடாக்கும் என கூறி உள்ளார். நாட்டில் வன வளம் பெருகும் எனக் குறிப்பிட்டு உள்ளது ஆறுதலான விஷயம்.

பால் மற்றும் பசு மாடுகள்

ஆடுமாடு அறுகுதாடி காத்த அவினங்கள் தோணுதடி
ஆடுமாடுகள் குறைந்து போனாலும் அவற்றின் பால்வளம் பெருகும்

ஆடு மாடுகள் அதிகப் பால் சுரக்க வேண்டும் என்பதற்காக அவற்றுக்கு ஊசி மருந்துகள் போடுகின்றனர். அதனால் பால் வளம் இரு மடங்காகி விட்டது. அய்யா வாழ்ந்திருந்த காலத்தில் அப்படிப்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகள் கிடையாது என்றாலும் இதை அய்யா வைகுண்டர் 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறி உள்ளார். அதை; தவிற விஞ்ஞானிகள் அதிகப் பால் தரும் மாடுகள் பிறக்க வகை செய்யும் கரு முட்டைகள் தயாரிக்கின்றனர். அருள்நூலில் அய்யா கூறியபடியே அது  நடக்கின்றது.  

ஸ்ரீலங்கா

ஸ்ரீலங்கா மரியாத்து சென்னில் விளையுதடா தீ மீளுக நலச்சு
என்னுடைய தம்பிமார்களே இலங்காபுரி ஆளுவாய் - அகிலத் திரட்டு 

ஸ்ரீலங்காவில் இரத்தம் சிந்தி தீயும் மூண்டு
என் தம்பிமாரே நீயே அதை ஆள்வாய்


ஸ்ரீலங்காவில் நடக்கும் உள்நாட்டுச் சண்டைப் பற்றி அருள் நூலில் அய்யா முன்பே கூறி உள்ளார். ஸ்ரீலங்காவை தங்களுடைய பகுதிகளுடன் இணைத்துக் கொள்வதில் பல தமிழக மன்னர்கள் முயன்றனர். 1815 ஆம் ஆண்டில் கண்டியை ஆண்டு வந்த கடைசி தமிழ் மன்னனான விக்ரம் இராஜசிங்கம் ஆங்கில அரசை எதிர்த்து சண்டையிட்ட பொழுது அவரை தமிழ் நாட்டில் உள்ள வேலூர் சிறையில் அடைத்தனர். அப்பொழுது அய்யா வைகுண்டர் அவதரிக்கவில்லை. அது முதற்கொண்டே அங்கு தமிழர்களுடைய நலிவுக் காலம் துவங்கியது. அதிபர் ஜெயவர்தனே பதவி ஏற்கும் முன்பு தமிழர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இரண்டாம் குடிமகனைப் போல அவர்கள் நடத்தப்பட்டனர். கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு இனப் போர் நடந்து கொண்டு இருக்கின்றது. அய்யா வைகுண்டர் சென்னில் விளையுதடா எனக் கூறியதின் மூலம் அங்கு சிந்த இருக்கும் இரத்தக்களரியைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். இதுவரை பதினைந்தாயிரம் உயிர்கள் பலியாகி உள்ளன. அய்யா வைகுண்டரின் குறிப்பின்படி தமிழ் ஈழம் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முழுவதுமே தமிழர் ஆட்சியில் மலரப் போகின்றது என நம்பலாம்.

அய்யா வைகுண்டரும் மற்றவர்களும்

அய்யா வைகுண்டருடைய புகழ் பெரும்பாலும் கீழ் ஜாதியினரிடம் மட்டுமே பரவி வந்தது. அதன் காரணம் அன்றைய எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மேல் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதினால் அவருடைய இயக்கத்தைப் பற்றி எந்த குறிப்புக்களையும் வேண்டும் என்றே; எழுதி வைக்கவில்லை. மேலும் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டில் இருந்த திருவான்கூர் சமஸ்தான ஏடுகளிலும் அவரைப் பற்றி எந்தக் குறிப்புக்களையும் பதிவு செய்யவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை என்ற கவிஞர் , நாஞ்சில் நாட்டில் அப்பொழுது வெள்ளாளர்கள் கடை பிடித்து வந்த கலாசார சமுதாய வாழ்க்கையை நையாண்டி செய்து எழுதி இருந்த புத்கமான மறுமக்கள் வழி மான்மியம் என்பதில் அய்யா வழி பற்றிக் குறிப்பிட்டு உள்ளார்.  அவர் அய்யா வழி இயக்கத்தினர் கடைப்பிடித்து வந்த பால்வைப்பு மற்றும் கணக்குக் கேட்டல் போன்றவற்றைக் குறிப்பிட்டு, அய்யா வழியினர் மேற்கொண்டிருந்த வழிமுறைகளை சுட்டிக் காட்டி உள்ளார். அவர் எழுதியதற்குச் சான்று போல சாமித்தோப்பில்  பால்வைப்பு மற்றும் கணக்குக் கேட்டல் போன்ற இரண்டும் இன்றளவும் அய்யா வழியினரால் கடை பிடிக்கப்படுகின்றது. 

கவிமணி இருந்த தேவூர் எனப்பட்ட இடம் சாமித்தோப்பிற்கு அருகில்தான் உள்ளது. கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் அய்யா வழி இயக்கத்தை நம்பினார் என்பது மட்டும் அல்ல அதனை பெரிதும் மதித்தார். மேல் ஜாதியினரில் அவர் மட்டுமே அய்யா வைகுண்டரை ஏற்றுக்கொண்டு அவரைப் பற்றிய குறிப்பை எழுதி வைத்துள்ளார். 

ஆங்கில மதப் போதகர்கள்

இந்தியாவுக்கு மதப்பிரசாரம் செய்ய வந்த ஆங்கிலேய மதப் போதகர்கள் அய்யா வழி தங்களுடைய பிரசாரத்திற்கு முட்டுக் கட்டையாக உள்ளது என நம்பினர். அவர்கள்  அய்யா வழி குறித்து மேலிடத்திற்கு தவறான செய்திகளை நிறைய தந்தனர்.  1863 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த  ஜேம்ஸ் நகர மதபோதகர் பிரிவு சமர்பித்த ஆண்டு அறிக்கையில் அய்யா வழி பக்தர்கள் தேவாலயங்களை விட மிகச் சிறிய கட்டிடங்களில் ஒன்று கூடுகின்றனர் எனவும், காட்டுத் தீப்போல பரவி வரும் அய்யா வழியினரால் தங்களுடைய உறக்கமே கெட்டு விட்டது எனவும் குறிப்பிட்டு உள்ளனர். 

அது போல சாந்தாபுரம் மதப் பிரசாரக் குழுவினருடைய ஆண்டு அறிக்கையில் இப்படிக் குறிப்பிட்டு உள்ளனர்.  சில வருடங்களுக்கு முன்பு முத்துக்குட்டி என்ற பனைமரமேறி ஒருவர் தன்னை விஷ்ணு என்ற ஆண்டவனின் அவதாரம் எனக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றார். அவருடைய பக்தர்கள் பல இடங்களில் சிறு ஆலயங்களை எழுப்பி வருகின்றனர். முத்துக்குட்டியை விஷ்ணுவின் அவதாரம் என்று அவர்கள் நம்புவதினால்; அவரை பெரிதும் போற்றி வணங்குகின்றனர். நம்முடைய மதப் பிரசாரத்திற்கு அந்த போலி மனிதர் தடையாக இருக்கின்றார் ' 

1894 ஆம் ஆண்டு சமர்பித்த தமது ஆண்டு அறிக்கையில், கொட்டாரா மாவட்டத்தில் இருந்த  நாகார்;கோவில் லண்டன் மத போதகக் கிளை, தாமரைக்குளம் மற்றும் சாமித்தோப்பில் அப்பொழுது நிலவி இருந்த நிலையை தெளிவாக குறிப்பிட்டு இருந்தது. முத்துக்குட்டி இயக்கத்தினர் கிருஸ்துவ மதத்திற்கு சவாலாக உள்ளனர் எனவும், ஒவ்ஒரு வருடமும் ஆயிரக்கணக்கானவர்கள் அந்த இயக்கத்தில் வந்து சேருவதாகவும் சாமித்தோப்பில் நடைபெற்ற தேர்த் திருவிழா பற்றியும் எழுதி இருந்தனர். 

அன்றைய அரசாங்கம், ஆட்சியில் இருந்தவர்கள் போன்றவர்களுடைய முழுமையான ஆதரவு ,மற்றும் அவர்களுக்குக் கிடைத்து வந்த பெரிய அளவிலான மானியத் தொகைகள் என அனைத்தும் இருந்தும் கிருஸ்துவ மதப் போதகர்களினால் அய்யா வழி இயக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.  கடந்த 150 வருடத்தில் மற்ற எந்த ஒரு மதமும் மிகக் குறுகிய காலத்தில் காட்டுத் தீப்போல பரவிய அய்யா வழிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

சாமித்தோப்பில்

சாமித்தோப்பில் பாலபிரஜாபதி அடிகளார் வயதானவர்கள் தங்க ஒரு இடம், அனாதை இல்லம், மற்றும் அன்னதானசாலையை போன்றவற்றை நிறுவி அதை நிர்வாகித்து வருகின்றார்கள். முத்துக்கிணற்றின்; பக்கத்தில் உள்ளது அன்புவனம். அருள்நூலில் ஒவ்ஒருவரும் தர்மம் செய்ய வேண்டும் என அய்யா வைகுண்டர் அறிவுறுத்தி உள்ளார். அதற்கேற்ப அன்புவனம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அன்புவனம் உள்ள இடத்தில் அய்யா தானே உழுது பயிரிட்டுள்ளார். 

அன்புவனத்தில் அன்னதானசாலையும் உள்ளது. ஏழைகளுக்கு உணவு தருவது நம் முன்னோர்கள் கடைபிடித்தப் பழக்கம். அன்னதானம் செய்பவர்கள் தேவலோகம் செல்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு. புனித நூல்களான அகிலத் திரட்டு மற்றும் அருள் நூல்களும் அதை அறிவுறுத்துகின்றன.  ஆகவே அய்யாவின் விருப்பப்படி அந்த அன்னதானசாலை நிறுவப்பட்டது. தினமும் இருநூறுக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப்படுகின்றது. பண்டிகை நாட்களில் இரண்டாயிரத்துக்கும் மேலானவர்கள் அன்னதானம் பெறுகின்றனர். அரசு மானியம் இந்த திட்டத்திற்கு கிடைப்பதில்லை என்பதினால் பாலபிரஜாபதி அடிகளார் மக்களிடம் இருந்து பெறும் நன்கொடைகள் மூலம் இதை நடத்தி வருகின்றார். 

பாலபிரஜாபதி அடிகளார் மற்ற மடாதிபதிகளைப் போல் தனி மரமாக வாழ்ந்து கொண்டு இருக்காமல்;, குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு குழந்தைகளும் உண்டு. 'இல்லத்தை விட்டு தவம் இலைக்கான் வெறும் தவம்' என்பது அய்யாவின் வாக்கு. ஆகவே அவர் கூறியது போலவே குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே நன்னெறி வாழ்க்கை முறையைக் கடைப் பிடிக்கின்றார். பாலபிரஜாபதி அடிகளாருடைய மனைவி திருமதி இரமணிபாய் அவர்கள் அன்புவனத்தை பராமரித்துக் கொண்டு  இருக்க வயதான அவருடைய அன்னையோ அவருக்கு மற்ற உதவிகளை செய்தவண்ணம் அங்கு இருக்கின்றார். முதலில் அந்த இடத்தின் மேற்கூறை ஓலையினால் வேயப்பட்டிருந்தது. அன்புச்சங்கு என்ற மாத இதழ் அங்கிருந்து வெளியாகின்றது. ஒரு மரவேலை செய்யும் பிரிவும் துவக்கப்பட்டு; உள்ளது.  ஆலயத்திற்கு வேண்டிய தெய்வ வாகனங்கள் அங்குதான் செய்யப்படுகின்றன. மற்றவர்கள் கொண்டு வந்து விடும் பசுக்களைப் பராமரிக்க கோசாலை உள்ளது. அன்புவனத்தின் பக்கத்தில் சிறிய குளமும் உள்ளது. ஒவ்ஒருவரும் வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி முப்பத்தி இரண்டு அறம் ( சேவைகள் ) செய்ய வேண்டும் என அய்யா கூறி உள்ளார். அதில் ஒரு அறமாக அன்புவனம் நிறுவப்பட்டது. அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளை தன்னுடைய குழந்தைகள் போல பாலபிரஜாபதி அடிகளாருடைய மனைவி திருமதி இரமணிபாய் அவர்கள் பராமரித்து வருகின்றார். அன்புவனத்தில் அன்றாட வேலைகளான தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, கோசாலையில் உள்ள மாடுகளை பராமரிப்பது போன்றவற்றை அந்த குழந்தைகள் செய்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் அந்தக் குழந்தைகளுக்கு கல்வி அறிவு தருகின்றனர்.

மிகவும் வயதாகிவிட்ட இருபது குடும்பத்தினர் அந்த இடத்தில்  தங்கி உள்ளனர். தனிக் குடும்ப வாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்களினாலும், பொருளாதார நிலைகளின் காரணமாகவும்,பல குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப் செல்லத் துவங்கிவிட்டனர். அதனால் நம் முன்னோர் கடைபிடித்து வந்த ஒரே குடும்பம் என்ற பழக்க முறையும் மாறி விட்டது. அப்படிப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட வயதானவர்கள் வந்து தங்கி அமைதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வகையில் இந்த இல்லம் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அங்கு வேறு எந்த வேலையும் செய்யத் தேவை இல்லை. தினம் ஒன்றுக்கு மூன்று முறை உணவும் தரப்படுகின்றது. அன்புவனத்தில் தொடர்வழிபாட்டுக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் அணையாது தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் விளக்கு வைக்கப்பட்டு உள்ளது. அந்த விளக்கு அணையாமல. எண்ணை ஊற்றி எரிய விட்டுக் கொண்டு இருப்பதே அந்த வயதானவர்கள்  செய்யும் வேலை. தொடர்வழிபாட்டுக்கூடத்தில் பக்தர்கள் அய்யா சிவ சிவா, அரகரா அரகரா என்ற மந்திரத்தைத் தொடர்ந்து ஓதிக் கொண்டு இருக்கின்றனர்.

அன்புவனத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து செய்திகள் ஜெர்மனி மற்றும் ஜப்பானிய போன்ற வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன என்றாலும் இந்தியாவில் அன்புவனத்தைப் பற்றி எந்த பத்திரிகைகளிலும் செய்திகள் வெளி வரவில்லை. பல்வேறு பிரபலங்கள் அந்த இடத்திற்கு வந்து தங்களுடைய கருத்துக்களை அங்குள்ள விருந்தினர் பதிவேட்டில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் திரு நடேசன் பால்ராஜ், திரு குமரி ஆனந்தன், திரு கே.கே.எஸ்.எஸ்.இராமசந்திரன், திரு அரங்கநாயகம் மற்றும் திரு நீலலோகிதாசன் போன்றவர்கள். பணப் பற்றாக்குறை இருந்தும் கூட அன்புவனத்தை பாலபிரஜாபதி அடிகளால் எப்படியோ சமாளித்தபடி நிர்வாகித்து வருகின்றார். அதற்குக் காரணம் அய்யா வைகுண்டருடைய அருள்தான் எனப் பெருமையுடன் கூறுகின்றார். 

சாமித்தோப்பில்

புதிய பணிகள்

சாமித்தோப்பில் கடந்த பன்னிரண்டு வருடங்களில் பல வளர்ச்சிப் பணிகள் நிறைவேறி உள்ளன. 1947 முதல் அய்யா வழி இயக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றது. பலரும் சாமித்தோப்பிற்கு வந்து அய்யா வைகுண்டரை வணங்கிச் செல்கின்றனர். 1947 ஆம் ஆண்டு முதல் பால பிரஜாபதி அடிகளார்; வருடா வருடம் அய்யா வைகுண்டர் ஊர்வலத்தை நடத்தி வைக்கத் துவங்கி உள்ளார். அதற்கு முன்னர் எந்த ஒரு ஊர்வல நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. அதற்கென அவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுடைய ஆதரவைத் திரட்டி ஊர்வல நிகழ்ச்சியை நடத்தத் துவங்க அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. 1975 ஆம் ஆண்டு முதல் ஊர்வல நிகழ்ச்சிகள் துவங்கின. 

கேரளத்தில் இருந்து வந்த பக்தர்கள் தேர் போன்ற அழகிய வாகனங்களை எடுத்து வந்து அதல் பங்கேற்றனர். இந்த ஊர்வல நிகழ்ச்சிகள்தான்; இந்தியா எங்கும் அய்யா வழி இயக்கம் பரவுவதற்குக் காரணம் ஆயிற்று. அது முதல் கன்யாகுமரியில் மாசி மாதத்தில் நடைபெறும் அந்த ஊர்வலம் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து அதில் பங்கேற்கின்றனர்.

மத நல்இணக்கம்- சமாதானப் பேச்சு வார்த்தைகள்

மண்டைக்காட்டு கலவரத்தினால் பல இந்து மதத் தலைவர்கள் தலைமறைவான பொழுது, பால பிரஜாபதி அடிகளாரும், குன்றக்குடி அடிகளாரும் அமைதி குழு அமைத்து மதத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, மேலும் பல முயற்சிகள் எடுக்க இருதரப்பு மதத் தலைவர்களிடையே சமாதானம் ஏற்பட்டு அந்த இடங்களில் அமைதி திரும்பியது. ஆயிற்று. அது முதல் கன்யாகுமரியில் மாசி மாதத்தில் நடைபெறும் அந்த ஊர்வலம் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. பல மதத் தலைவர்களும் சாமித்தோப்பிற்கு வந்து அய்யா வைகுண்டரைப் பற்றி  விவரம் அறிந்து கொண்டும் விவாதித்து விட்டும் சென்றனர். கோட்டுர் டிகோஸ் பாதிரியார், ஜப்பான் நாட்டு புத்தமதத் தலைவர்கள் மற்றும் தென் இந்திய முஸ்லிம் மதத் தலைவர்கள் போன்றவர்கள் சாமித்தோப்பிற்கு வந்து அய்யா பற்றிய பெருமைகளை தெரிந்து கொண்டு சென்றனர். 

அய்யா வழி மாநாடு 

அய்யா வழி இயக்கத்தைப் பரப்பும் முயற்சிக்கென மாநாடுகள் நடத்தப்பட்டன. முக்கியமாக அய்யா வழி பக்தர்களை ஒன்றிணைக்கும் பாலமாக அவை திகழ்ந்தன.  முதல் மாநாடு மார்த்தாண்டத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.  அதன் பின் வேலூர், ஆறுமுகனேறி, சென்னை, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் கன்யாகுமரி மாவட்டத்தின் அனைத்துத் தாலுக்காக்களிலும் மாநாடுகள் நடைபெற்றன. குருமார்களும், பல்வேறு அறிஞர்களும் அய்யா வழி இயக்கத்தின் பெருமைகளையும், தத்துவங்களையும் விவரமாக எடுத்துக் கூறினர். ஏடுவாசித்தலும், அகிலத்திரட்டு நூலின் விளக்க உரையும் அந்த மாநாடுகளில் முக்கிய நிகழ்ச்சியாயின. மாநாட்டில் ஊர்வல நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  அதன் முடிவில் வரும் காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.; பிற மதத் தலைவர்களும் அந்த மாநாடுகளில் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 

புதிய தேர்வாகனம், மற்றும் கொடி மண்டபம்; 

நான்கு லட்ச ரூபாய் செலவில் 1978 ஆம் ஆண்டில் ஆலயத்திகு புதிய தேர் கட்டப்பட்டது. அதற்கு முன்பிருந்த தேர் நூறு ஆண்டுகள் தொடர்ந்து உபயோகத்தில் இருந்து பழையதாகி விட்டதினால் புதிய தேர் வாகனம் தேவைப்பட்டது. பழைய தேரினை கன்யாகுமரி மாவட்ட காட்சியகத்திற்கு தானமாகத் தந்து விட்டனர்.  பால பிரஜாபதி அடிகளாருடைய அறிவுறைப்படி சென்னவன்னன்வில்லையைச் சேர்ந்த திரு தங்க நாடார் புதிய தேர் செய்யத் தேவையான நன்கொடைகளை வசூலித்தார். திரு அரிராமகிருஷ்ண நாடாரின் நன்கொடையைக் கொண்டு 1990 ஆம் ஆண்டு கொடிமண்டபம் கட்டப்பட்டது.  

அய்யா வழி அன்புகோடி மக்கள் திருச்சபை

அய்யா வழி திருச்சபை சமிபத்தில் துவக்கப்பட்டது. ஒவ்ஒரு கிராமத்திலும் அதற்கான நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவை மேலும் பல பகுதிகளில் விரிவாக்கப்பட்டு   அவை ஒவ்ஒன்றுக்கும் தனித்தனியான பொறுப்புக்கள் தரப்பட்டு உள்ளன. அந்த திருச்சபைகளுக்கான சட்ட திட்டங்களை பால பிரஜாபதி அடிகளார் வகுத்துள்ளார். இப்படியாக ஆயிரக்கணக்கான கிராமப்புற திருச்சபைகள் நிறுவப்பட்டு உள்ளன. 

அய்யா வைகுண்டர் பிறந்த நாள் திருவிழா - விடுமுறை

அய்யா வைகுண்டருடைய பிறந்த நாள் பெருவிழா விமர்ச்சையாக நடைபெறுகின்றது. அன்றைய தினத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமித்தோப்பிற்கு வந்து ஆலயத்தில் வணங்கிச் செல்கின்றனர்.  அய்யா வைகுண்டருடைய பிறந்த தினமான மாசி மாதம் இருபத்தி ஒன்றாம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை எற்று அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் அறநிலைய அமைச்சர் திரு நடேசன் பால்ராஜ் மற்றும்  கன்யாகுமரி மாவட்ட மானில மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியே அதற்குக் காரணமாக இருந்தது.

தினப் பூஜைகள்

சாமித்தோப்பில் தினமுமே திருவிழா போன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருடம் ஒன்றுக்கு மூன்று முறை தேர் திருவிழா நடைபெறுகின்றது. திருஏடுவாசிப்பு வருடத்தில் ஒரு முறை தொடர்ந்து பதினேழு நாட்கள் நடைபெறுகின்றது. 

தினப் பூஜைகள்

பணிவிடை விடியற்காலை துவங்குகின்றது. காலை மூன்று மணிக்கு ஆலயத்தில் உள்ள குருமார்களும் மற்றவர்களும் எழுந்து முத்துக்கிணற்றில் குளித்தப் பின் ஆலயத்திற்கு வந்து பணிவிடை செய்கின்றனர். குருமார் உகப்படிப்பு படிக்க, சுற்றி இருப்பவர்கள் அதை திரும்பச் சொல்கின்றனர். அதன் பின் கருவறை திறக்கப்படுகின்றது. அந்த நேரத்தில் பன்னிரண்டுக்கும் அதிகமான ஆலய மணிகள் ஒலி எழப்ப சங்கு ஊதுதலும் நடைபெறுகின்றதை காண்பதே மனதுக்கு மகிழ்வாக இருக்கும். அடுத்து வாகன பவனி நடைபெறுகின்றது. 

ஆலயத்தை சுற்றி நான்கு தேர் வீதிகளிலும் வாகனப் பவனி நடைபெறுகின்றது. சாமித்தோப்பில் அய்யா வசித்து இருந்த பொழுது அவர் உண்ட உணவான நிதியப்பல் தவறாமல் தயாரிக்கப்பட்டு, அது  நேவித்தியமாக படைக்கப்படுகின்றது. குருகுலத்தின் முதன்மை குருவான புதுக்குட்டி அவர்கள்  அதை தயாரிக்கின்றார். தவனிப்பல் என்ற பிரசாதம் மற்றவர்களுக்குத் தரப்படுகின்றது. 

காலை பதினோறு மணிக்கு நண்பகல் பணிவிடை நடக்க , உச்சிப்படிப்பு படிக்கப்படுகின்றது. உச்சிப் படிப்பு படிக்கப்பட சுற்றி இருப்பவர்கள் அதை திரும்பச் சொல்கின்றனர். அப்பொழுது தவனிப்பல் பிரசாதமும் வினியோகிக்கப்படுகின்றது.  ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும் திரளான மக்கள் அதில் கலந்து கொள்ளுகின்றனர். மாலை  ஐந்து மணிக்கு பணிவிடை நடக்க கருவறை திறக்கப்படுகின்றது. குரு உகப்படிப்பு படிக்க சுற்றி இருப்பவர்கள் அதை திரும்பச் சொல்கின்றனர். அடுத்து வாகன பணிவிடை நடைபெறுகின்றது. வாகனப் பவனி ஆலயத்தை சுற்றி நான்கு தேர் வீதிகளிலும் நடைபெறுகின்றது. அதன் பின் அன்னதானம் நடைபெறுகின்றது. இவை ஆலயத்தில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள். எப்பொழுது வேண்டுமானாலும் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் பெறலாம். 

தேர் திருவிழா

ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் வருடத்தில் மூம்முறை தேர் திருவிழா நடைபெறுகின்றது. ஆவணி மற்றும் தை மாத முதல் வெள்ளிக் கிழமையிலும் வைகாசியில் இரண்டாவது வெள்ளிக் கிழமையும் தேர் திருவிழா நடைபெறுகின்றது. விடியற்காலை கொடிக் கம்பத்தில் காவி நிற கொடி ஏற்றப்பட்ட திருவிழா துவங்குகின்றது. மாலை அய்யாவை சுமந்து செல்லும் பல்லக்கு வாகனப் பவனி ஆலயத்தை சுற்றி நான்கு தேர் வீதிகளிலும் பவனியாக எடுத்தச் செல்லப்படுகின்றது. இரண்டாம் நாள் ஆங்கிலேய பாணியில் தயாரிக்கப்பட்ட பல்லக்கில் அய்யாவை அமர வைத்து ஆலயத்தை சுற்றி நான்கு தேர் வீதிகளிலும்  ஊர்வலம் செல்கின்றது. மூன்றாம் நாள் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகன பவனியும், நான்காம் நாள் சாபரம் எனப்படும் பவனியும், ஐந்தாம் நாள் இன்னொரு பச்சை நிற சாபர பவனியும், ஆறாம் நாள் நாக வாகன பவனியும், ஏழாவது நாள் சிவப்பு வண்ண கருட வாகன பவனியும் நடைபெறுகின்றன. அய்யா வழி தொண்டர்கள் அந்தப் பண்டிகையின் பொழுது கிராமம் கிராமமாகச் சென்று அரிசி தானம் பெற்று வருகின்றனர். அதை அவர்கள் அன்ன தானத்துக்கும் மற்ற நாட்களின் தேவைக்கும் பயன் படுத்துகின்றனர். 

எட்டாவது நாள் வைபவம் மிகவும் முக்கியமானது. அன்று அய்யாவை குதிரை வாகனத்தில் வைத்து அனைத்து வீதிகளிலும் உலா வருகின்றனர். அதன் பின் அந்த பவனி முத்துக் கிணற்றை அடைய அங்கு வில் அம்பு கொண்டு கலியை அவர் அழிக்கும் சம்பிரதாய விழா நடைபெற்று முடிந்ததும் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து மக்கள் அருந்துகின்றனர். அதன்  பிறகு சாஸ்தான்கோவிலில்வில்லை, தெரிவில்லை, செட்டிவில்லா, காமராஜபுரம் போன்ற கிராமங்களுக்கு அய்யா ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றார். அந்த விழாவில் அய்யாவிற்கு மக்கள் காணிக்கை என்ற பெயரில் சுருள் கொடுக்கின்றனர். அதன் பின்னர் வடக்கு வாசல் வீதியை ஊர்வலம் வந்தடைந்ததும் அன்ன தானம் நடைபெறுகின்றது. 

ஓன்பதாவது நாளன்று அய்யா அனுமார் வாகனத்திலும், பத்தாவது நாள் மிகக் கனமான இந்திர வாகனத்திலும் பவனி வருகின்றார். அந்த வாகனத்திற்கு நடு இரவில் பணிவிடை செய்யப்படுகின்றது. சிறிய தேர் போல இருக்கும் அந்த வாகன பவனி மிக முக்கியமானது. ஞாயிற்றுக் கிழமையில் வரும்; பத்தாவது நாள் வைபவத்தில் படித்தவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்ற எந்த பேதமும் இன்றி பலரும் வாகனத்தை தூக்கப் போட்டிப் போட்டுக் கொண்டு வருகின்றனர். பதினோராம் நாள் தேர் பவனி நண்பகல் 12 மணிக்குத் துவங்குகின்றது. மாலை ஐந்து மணிக்கு முடிவடையும் அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 

திரு ஏடு வாசிப்பு

கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் தொடர்ந்து பதினேழு நாட்கள் திரு ஏடு வாசிக்கப்படுகின்றது. அந்த விழாவில் மாலை 4.30 முதல் 9.30 வரை தினமும் அகிலத்திரட்டு புனித நூலும் வாசிக்கப்படுகின்றது. அகிலத்திரட்டு நூலில் உள்ளதை ஒரு அறிஞர் விளக்கிக் கூறுவார். கடைசி நாள் பட்டாபிஷேகம் என்று கூறப்பட்டு அன்று ஏடு வாசிப்பு நடைபெறும். 

வைகுண்டர் பிறந்த நாள் -மாசி மாதப் பவனி

மாசி மாதம் இருபதாம் தேதி வைகுண்டருடைய பிறந்த நாள் விழா விமர்ச்சையாகக் கொண்டாடப்படுகின்றது. திருவனந்தபுரத்தில் அய்யா விடுதலை செய்யப்பட்டதை குறிக்கும் விதத்திலும் மற்றும் திருச்செந்தூரில் இருந்தும் ஊர்வலம் புறப்பட்டு இங்கு வருகின்றன. மாசி மாதம் பத்தொன்பதாம் தேதி அன்று சென்னை, கன்யாகுமரி, நெல்லைக் கட்டபொம்மன், வாவுசி மாவட்டம்,தேனி, வத்தலகுண்டு போன்ற இடங்களில் இருந்து பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள வருகின்றனர்.  சாமித்தோப்பு குரு தலைமையில் காலை எட்டு மணிக்கு கடலுக்குச் சென்று அதில் குளிக்கின்றனர். குரு அனைவருடைய நெற்றியிலும் நாமம் அணிவிக்க ஊர்வலம் அங்கிருந்து புறப்படும். அவர்கள் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என கோஷம் இட்டபடி வந்து கொண்டிருக்க ஐம்பதுக்கும் குறைவின்றி வாகனங்கள் அந்த ஊர்வலத்தின் பின்னால் வருகின்றது. ஊர்வலம் சீர்கட்சி, நைநான்பாத்து , உடன்குடி, செட்டியர்பட்டு , தேயூர், கோட்டன்காடு , முத்துகிருஷ்ணபுரம், பாதுகாபட்டு , தட்டான் மடம், திசையன்விளை போன்ற இடங்கள் வழியாக எருமைக் குளத்திற்கு நண்பகலில் போய் சேரும்.   அங்கு அன்னதானம் முடிந்தப் பின் அது மீண்டும் புறப்பட்டு ஆயான் குளம், கரைச்சுத்தப்புதூர், கூடான் குளம், செட்டிக் குளம், ஆவரைப்புரம், அம்பலவாணன்புரம், அ10ரல்வாய்மொழி, தோவளை, போன்ற இடங்கள் வழியாக ஆதலவி;ளையை சென்றடையும். 

அதே சமயத்தில் கேரள மக்கள் மற்றும் பலரும் பங்கேற்கும் ஊர்வலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு பலராமபுரா, பாரசாலா, களியாக்கவிளை, மார்த்தாண்டம், தக்கலை போன்ற இடங்கள் வழியாக ஆதலவி;ளையை சென்றடையும். ஆதலவி;ளையில் உள்ள மலையில் வைகுண்ட ஜோதி ஏற்றப்பட ஊர்வலம் மீண்டும் புறப்பட்டு நாகர்கோவில் சென்றடந்ததும் அந்த ஊரில் நகர ஊர்வலத்தை நடத்தும். இரவு அந்த ஊரில் தங்கியப் பின் மறு நாள் விடியற் காலை மீண்டும் ஊர்வலம் துவங்கும். அந்த ஊர்வலத்திற்கு சாமித்தோப்பு குருமார் தலைமைத் தாங்குவார்.

இருபதாயிரத்திற்கும் மேல் பங்கேற்கும் அந்த ஊர்வலத்தினர் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என கோஷம் எழுப்பியவாறு நடக்கின்றனர். கைகளில் காவிக் கொடி ஏந்தியபடி நடக்கும் அந்த ஊர்வலத்தில் யானை மற்றும் குதிரைகளும் அணி வகுத்து வரும். இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கான் பாறை, ஏத்தன் காடு மற்றும் வடக்கு தாமரைக் குளம் வழியாக சுமார் பன்னிரண்டு மணி அளவில் சாமித்தோப்பை ஊர்வலம் சென்றடைந்து முத்திரி கிணறு,  நாலு வீதிகள் என அனைத்து இடங்களுக்கும் செல்லும் ஊர்வலம் இறுதியாக ஆலயத்தைச் சென்றடைந்ததும் கொடிகளை ஆலயத்தில் கொடுத்து விடுகின்றனர்.  அதன் பினனர்; வாகனப் பணிவிடை, அன்னதானம் போன்றவை நடைபெறுகின்றன. சிறுவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இரவில் நடைபெறும். தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்களில் இருந்து பிரபலமான மனிதர்கள் வந்து. விழாவில் பங்கேற்கின்றனர். முன்பு அய்யா பாலகிருஷ்ண நாடார் மற்றும் கிருஷ்ணநாமமணி நாடார் போன்றவர்கள் விழா மலர் வெளியிட்டனர். அந்தப் பழக்கம் தற்பொழுது நின்று விட்டது.

சுய மரியாதை

அய்யா வைகுண்டர் துவக்கி வைத்த சமூக மத சீர்திருத்தங்கள் பலருடைய எண்ணத்தையும் மறு பரிசோதனை செய்ய வைத்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மன எழச்சி பெறத் துவங்கினர். அவர்களுடைய எண்ணங்களில் மாற்றமும், மறுமலர்ச்சியும் எற்பட்டன. அய்யா வழியின் இயக்கத்தினால் ஏற்பட்ட மறு மலர்ச்சியினால் நாராயண குரு போன்றவர்கள் அனைவரையும் அனுமதிக்கும்படியான ஆலயப் பிரவேசம் போன்ற போராட்டங்களைத் துவக்கினர்.                                                                                                          

சுய மரியாதை

அய்யா வைகுண்டருடைய போதனைகள் மக்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தின. அவர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்குப் போராடத் துவங்கினர்.  அந்த காலத்தில் நம்பூத்திரி மற்றும் நாயர் போன்ற உயர் ஜாதிப் பெண்கள் மட்டுமே துணிகளால் தங்களுடைய மார்பகங்களை மறைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தனர். கீழ் ஜாதி பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியக் கூடாதென்றும், தங்களுடைய மார்பகங்களை துணியினால் மறைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படாத காலம் அது. அப்படி அவர்கள் தங்களுடைய மார்பகங்களை அவர்கள் மறைத்துக் கொண்டால். அது மாபெரும் குற்றம். அப்படி மார்பகங்களை மறைத்துக் கொண்ட பெண்களுடைய மார்பகங்களை ஆளுனர் அறுத்து எரிந்த சம்பவங்களும் உண்டு. பெண்களுடைய இடுப்பில் தண்ணீர் குடங்களை வைத்தபடி செல்லக் கூடாது, தலையில்தான் தூக்கி வைத்தபடி செல்ல வேண்டும். அய்யாவின் போதனைகளினாலும், கிருஸ்துவ பாதிரிகளின் செல்வாக்கினாலும் கவரப்பட்ட நாடார் இனத்தவர் அத்தகைய செயல்களை எதிர்த்துப் போராடத் துவங்கினர். அவர்கள் தங்களுடைய தலையில் தங்கள் இஷ்டப்படி தலைபாகை அணிந்து கொள்ளத் துவங்கி, பெண்களின் மார்பகங்களை சேலையினால் மறைத்துக் கொள்ளும்படி கூறலாயினர். பெண்கள் குப்பாயம் என்று அழைக்கப்பட்ட இரவிக்கையை அணியத் துவங்கினர். பக்கத்து நாடான பாண்டிய நாட்டில் இருந்த வழக்கப்படி பெண்கள் சேலைகள் உடுத்தத் துவங்கினர். 

அவற்றைக் கண்ட உயர் ஜாதியினர் நாடார் இன பெண்கள் மீது முரட்டுத்தனமான தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்தனர். பல ஆளுனர்கள்  சீர்திருத்தத்தைத் துவங்கிய பெண்களுக்கு அபராதங்கள் விதிக்கத் துவங்கினர். கன்யாகுமரி மாவட்டத்தில் இருந்த கல்குளம் என்ற இடத்தில் அப்படிப்பட்ட கொடுமைகள் அளவுக்கு மீறிப் போனதினால் கிருஸ்துவ அமைப்பினர் அரசிடம் புகார் மனு தாக்கல் செய்தனர். அகஸ்த்தீஸ்வரம் தாலுக்காவில் முஸ்லிம்களும், சூத்திரன் எனப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்து நாடார் இன பெண்களுடைய இரவிக்கைகளை கிழித்தெறிந்தனர், அவர்களுடைய வீடுகள் தீக்கிரயாகப்பட்டன. நாடார்களும் அரசிடம் அது குறித்து புகார் மனு செய்தனர். அவற்றை விஜாரிக்க சுசீந்திரத்திற்கு வந்த திவான்களோ நாடார்களிடம் அமைதியாக இருக்குமாறும், அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பழைய பழுக்க முறைகளை மாற்றிக் கொள்ளக் கூடாது எனவும் அறிவுறைக் கூறினர். 

ஆலயப் பிரவேசம்

உயர் ஜாதி இந்துக்களின் கொடுமைகளைக் கண்டு கொதித்துப் போன பலர் கிருஸ்துவ மதத்திற்கு மாறினர். அதனால் பாதிரியார்களின் அடைக்கலம் அவர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் மூலம் மதம் மாறியவர்கள் மரியாதை பெற்றனர். அய்யா வழியைப் பின் பற்றிய பெருவாரியான இந்தக்களும் தங்களடைய பழைய கட்டுப்பாடுகளை மாற்றிக் கொள்ளத் துவங்கினர். அமைதியான முறையில் மாற்றம் ஏற்படத் துவங்கிற்று. 
திருவான்கூர் சமஸ்தானம் மற்றும் அன்றைய மதராஸ் பகுதிகளிலும் (சென்னை) தாழ்த்தப்பட்ட குடி மக்களுக்கு ஆலயங்களுக்குள் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. அது மட்டும் அல்ல அவர்களுக்கு தேர் வீதிகளில் நடக்கக் கூட அனுமதி இல்லை. இத்தனைக்கும் அவர்கள்தான் ஆலயங்களைக் கட்டும் பணிகளில் கடுமையான வேலைகளை செய்தனர். அய்யா வைகுண்டர் ஆலயங்களை வெறுத்தாலும் சமூக நீதியை நிலைநாட்ட பாடுபட்டார். அவருடைய கொள்கைகளில் கவரப்பட்ட தாழ்த்தப்பட்ட குடி மக்களும் நாடார்களும் ஆலயங்களுக்குள் நுழையத் துவங்க அங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தன. ஆகவே ஆலயங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தமது பக்தர்களுக்கு ஆணையிட்ட அய்யா அதற்குப் பதிலாக அங்காங்கே நிழல் தாங்கள்களை அமைத்து வணங்குமாறு போதனை செய்தார். ஆகவே அவர்களில் சிலர் காளி மற்றும் கிருஷ்ணர் ஆலயங்களையும் நிறுவி காளி கோவில்களை அம்மன் ஆலயம் என அழைக்கத் துவங்கினர்.   

சைவ உணவும் சுயக் கட்டுப்பாடும்   

அய்யா வைகுண்டர் சுத்த சைவர். மாமிசம் உண்டதில்லை. ஆகவே தம்மைப் பின்பற்றுபவர்களும் சைவ உணவை உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அந்த காலத்தில் அங்கிருந்தவர்களில் பெரும்பாலோனோர் அசைவ உணவு அருந்தியவர்கள். ஓரு வேளையேனும் மீன் இல்லாத சமையல் இல்லை. புகையிலைப் போடுவது மிக அதிகம். ஆனால் அய்யாவின் போதனைகளினால் கவரப்பட்ட அவர்களிடம் இருந்த அந்த பழக்கங்கள் மெல்ல மாறத் துவங்கின. அவருக்குத் தெரியும் மாற்றங்கள் ஒரே நாளில் வந்து விடாது என. ஆகவே வாரத்தில் இரண்டு நாளாவது – வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் - சைவ உணவு மட்டும் அருந்துமாறு  கட்டளை இட்டார். அதை ஏற்ற அவருடைய பக்தர்கள் கட்டுப்பாட்டுடன் அந்த பழக்கத்தைக் கடை பிடித்தனர். பண்டிகை நாட்களிலும் விழாக் காலத்திலும் அங்குள்ள மக்கள் கடுமையான கட்டுப்பாட்டுடன் இருந்து அசைவ உணவு அருந்தாமல் இருந்தனர். அது போல கள் குடிப்பதையும், புகையிலை போடுவதையும் தவிற்குமாறு அய்யா கூற அதை அங்குள்ளவர் ஏற்றுக் கொண்டனர். அந்த ஊரில் கள் இறக்கப்படுவது இல்லை. 

வீட்டு அமைப்பு

அய்யா வைகுண்டர் தன்னுடைய பக்தர்களை ஒன்று சேர்ந்து வாழுமாறு வலியுறுத்தினார்.  முன்பெல்லாம் கிராமங்களில் ஓலை குடிசையில்தான் மக்கள் இருந்து வந்தனர். நிழல் தாங்கல்கள் துவக்கப்பட்டதும் அதைச் சுற்றி பலரும் தங்கத் துவங்கினர். அவர்களில் பலரும்  ஓடு வேய்ந்த வீடுகளை அமைக்க முயன்றனர், ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே அவர்கள் அரசின் ஆணையை எதிர்த்து ஓடு வேய்ந்த வீடுகளை அமைக்கத் துவங்கினர். அப்படிப்பட்ட நிலையில் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக பல வீடுகள் அமையத் துவங்க சமுதாய வாழ்க்கை தானாக அமைந்தது.  சொந்த வீடுகளில் இருந்த ஆலயங்கள் பொது ஆலயங்களாக மாறத் துவங்கின. கிராமத்தில் இருந்தவர்கள் ஒன்றிணைந்து அவற்றை நிர்வாகிக்க குழுக்களை அமைத்தனர். அப்படி ஒரே சமுதாயமாக வாழத் துவங்கியவர்களின் எண்ணம் பெருமளவு விரியத் துவங்கிற்று.அதைதான் குறிப்பிடும் வகையில் அய்யா அவர்கள் ' பொறுமை பெரியது, பிரியாதிரு மனமே ' என்றார்.  

சுரண்டலுக்கு எதிரான போராட்டம்
அந்த காலத்தில் நாடார்களுக்கும் கீழ் ஜாதி மக்களுக்கும் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. அரச மரம் மற்றும் பெண்களின் மார்பகங்களுக்குக் கூட வரிகள் விதிக்கப்பட்டன. பனை மரங்களுக்கும் வரிகள விதிக்கப்பட்;டன. ஆகவே வரி செலுத்த முடியாதவர்கள் திருவான்கூரை விட்டு வெளியேறினர். ஆனால் ஓடிவிட்டவர்களுக்குப் பதிலாக அவர்களுடைய சொந்தக்காரர்களிடம் வரி வசூலிக்கப்பட்டது. அரசினர் சார்பில் வரி வசூலித்தவர்கள் உயர் ஜாதி இந்தக்கள். ஆகவே அவர்கள் கூறியபடி கீழ் ஜாதி மக்கள் நடக்க வேண்டியதாயிற்று. பனை மரங்களில் இருந்து கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் கேட்ட பொழுது இனாமாக கொடுக்க வேண்டி இருந்தது.  உயர் ஜாதி இந்தக்களின் வீடுகளில் கூலி வாங்காமல் வேலை செய்ய வேண்டியதாயிற்று. அதை பரி எனக் கூறினர். அதை எதிர்த்து அய்யா அவர்கள் ' அவரவர் தேடும் முதல் அவரவர் வைத்தாடிடுங்கோ' எனக் கூறியது பெரும் புயலை எழுப்பியது. பரிக்கு எதிராக கீழ் ஜாதியினர் தொடங்கிய போராட்டம் வெற்றி பெற்றது. வரி கொடுக்கவும் மறுத்தனர். உயர் ஜாதியினரையும் அரசையும் எதிர்த்தப் போராடத் துவங்க அவர்கள் செலுத்த வேண்டிய வரி சேமிப்பாக மாறியது. அதை அவர்கள் தங்களுடைய பிற்கால வாழ்க்கைக்கு சேமிப்பாக வைக்கத் துவங்கினர். 

கல்வியும் தொழிலும்
அய்யா வைகுண்டர் தம்முடைய பக்தர்களிடம் தொழில் முறைகளை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவர்கள் விவசாயமும்; தோட்டத் தொழிலும் செய்யத் துவங்கினர். அவர்கள் மேலும் பல்வேறு தொழில்களைத் துவக்கினர். அரிசி, உப்பு, மீன், எண்ணை, மரம், மளிகை சாமான் போன்றவற்றில்  தொழில்களை செய்யத் துவங்கினர்.  பல சிறு தொழில் சாலைகள் அமைத்தனர். 
நிழல் தாங்கல்களை கல்வி போதிக்கும் இடமாகவும் பயன் படுத்தினர். இரவு பாடசாலைகள் துவக்கப்பட்டன. வயதானவர்களையும் கல்வி அறிவு பெற்றுக் கொள்ள நிர்பந்தித்தனர்.  அகிலத்திரட்டு புனிதப் புத்தகத்தின்படி நடக்கத் துவங்கினர். ஏடு வாசிப்பு பற்றிய விளக்க உரைகள் தரப்பட்டன. தேனியைச் சேர்ந்த கே.பி.பி.ஈ. பண்டார நாடார் குடும்பம் அய்யா வைகுண்டர் பெயரில் ஒரு ஆங்கிலப் பள்ளி நிலையம் நிறுவி உள்ளார். அது மிகச் சிறந்தப் பள்ளியாக விளங்குகின்றது. 

ஆலய நிர்வாகம்
ஆலயத்திற்குள் நுழைவதற்குத் தடை செய்யப்பட்ட  கீழ் ஜாதி மக்கள் தாங்களாகவே சில ஆலயங்களை நிறுவி நிர்வாகித்தனர். ஆலயப் பிரவேசம் அனுமதிக்கப் பின்னரும் அவர்களில் பலரும் தங்கள் ஆலயத்தைத் தவிற பிற ஆலயங்களுக்குச் செல்லவில்லை. காரணம் அய்யா வைகுண்டருடைய போதனைகள்.  நிழல் தாங்கல்கள் மேலும் மற்ற குடும்ப ஆலயங்களின் மேம் பாட்டிலும் கவனம் செலுத்தினர். சாமித்தோப்பில் ஆலயத்திற்கு வேண்டிய வாகனங்களைத் தயாரித்தனர். பாதினோறு நாள் ஆலயத் திருவிழாக்களில் ஒன்றிணைந்து வேலை செய்து ஒரே குடும்பம் போல இருந்தனர். தங்களுடைய வீட்டுத் திருமணங்களில் தங்களுடைய குருமார்களையே அழைத்து அவர்கள் தலைமையில் திருமணம் செய்தனர்.  நிழல் தாங்கல் நிர்வாகக் கமிட்டிகளை ஜனநாயக முறையில் தேர்ந்து எடுத்தனர். மாதாந்திரக் கூட்டங்களை நடத்தினர். அனைரும் கலந்து ஆலோசித்தப் பின்னரே முடிவுகள் எடுக்கப்பட்டன. 

நிழல் தாங்கல்களும் ஜாதிகளும்

இன்றைக்கும் கூட பலர் அய்யா வழி என்பதை நாடார்களுடைய இன இயக்கமாகவே கருதுகின்றனர்.  ஆனால் அய்யா வைகுண்டர் தன்னுடைய நோக்கம் ஒரு ஜாதி அல்ல தாழ்ந்த குலத்தில் உள்ள பதினெட்டு ஜாதியினரையும் உயர் ஜாதி இந்தக்களுடையப் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே  என்று  அகிலத்திரட்டில் கூறி உள்ளார். திருவான்கூர் சமஸ்தான ஒப்பந்த பனை ஓலையில் அதனால்தான் அவர் கையெழுத்து இட மறுத்தார். அப்படி கையெழுத்துப் போட்டு விட்டால் பிற ஜாதி மக்களிடம் பிரசாரம் செய்திருக்க முடியாது. வைகுண்டரின் நோக்கமே ஜாதியற்ற சமுதாயம் அமைக்க வேண்டும் என்பதே. அப்படி என்றால் நாடார் இன மக்களுக்காக ஏன் அதிக அக்கரை எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி எழம்பலாம். அய்யா அதிக அக்கரை எடுத்துக் கொண்டதற்குக் காரணம் கீழ் ஜாதியினரில் நாடார்கள் மட்டுமே பெருமளவு தொல்லைப் படுத்தப்பட்டிருந்தனர் என்பதினால்தான். மேலும் அய்யா வாழ்ந்து கொண்டிருந்த அகஸ்தீஸ்வரபுரத்தில் அந்த ஜாதி மக்களே அதிகம் இருந்தனர். 

அய்யா வைகுண்டரின் நிழல் தாங்கல்களை பல ஜாதியினரும் நிறுவி நிர்வாகித்து வருகின்றனர். உதாரணமாக நெல்லை கட்டபொம்மன் மாவட்டத்தில் செட்டிக் குளத்தில் உள்ள நிழல் தாங்கல் தொண்டமான் ஜாதியினரால் நிர்வாகிக்கப்படுகின்றது. வெள்ளாளர், நாயர், கோனார், பணிகர், மரவர், வண்ணார், நநீத், செட்டியார் போன்ற ஜாதியினரும் பல நிழல் தாங்கல்களை நிறுவி நிர்வாகித்து வருகின்றனர். அவற்றில் அம்பலவாணபுரம், நாரி குளம், செங்கனூர் , வெண்சாரமூடு போன்ற இடங்களில் உள்ள நிழல் தாங்கல்களே சாட்சியாகும். சென்னையிலும் சமீபத்தில்  ஐந்து நிழல் தாங்கல்கள்; அமைக்கப்பட்டு உள்ளன.  பம்பாயில் ஒரு நிழல் தாங்கல்கல் அமைக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீலங்காவிலும் கூட ஒரு பக்தர் ஒரு நிழல் தாங்கல் அமைத்து உள்ளார். பால பிரஜாபதி அவர்களிடம் அனைத்து நிழல் தாங்கல் பட்டியலும் உள்ளன. இதுவரை 3500 நிழல் தாங்கல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  அதற்குக் காரணம் அய்யா வைகுண்டரிடம் பக்தர்களுக்கு உள்ள ஈடுபாடுதான்.  

மற்ற சீர்திருத்தவாதிகள்

அய்யா வைகுண்டரின் இயக்கத்தால் கவரப்பட்ட கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு மற்றும் அய்யன் காழி போன்றவர்களும் அவரவர்கள் பாணியில் அப்படிப்பட்ட இயக்கங்களைத் துவக்கி உள்ளனர்.  ஏன் ஸ்வாமி விவேகானந்தர் கூட கன்யாகுமரிக்கு பயணம் செய்த பொழுது அய்யா பற்றிக் கேள்விப் பட்டு சாமித்தோப்பிற்கு வருகைத் தந்தார். அது முதல்தான்; அவர் தலைப்பாகை அணியத் துவங்கினார்  எனக் கூறப்பட்டது. 

முத்துப்பதி

அய்யா அவர்கள் ஐந்து பதிகளை நிறுவினார். பதி என்றால் விருந்தினர்கள் வந்து தங்கும்     இடம். அதை தவிற பல நிழல் தாங்கல் என்ற தங்கும் இடங்களையும் நிறுவினார்.     அவற்றில் முக்கியமான பதி அய்யா வழியின் தலைமை இடமான சாமித்தோப்பில் அமைந்து உள்ளது. மற்ற பதிகள் வருமாறு:-

1)    முத்துப்பதி
2)    தாமரைக்குளம் பதி
3)    அம்பலப்பதி
4)    பூப்பதி 

முத்துப்பதி

அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் முதலில் நடத்திய துவையல் பதியின் கடைசி கட்டத்தை நடத்தியது இங்குதான். அந்த இடத்தில் எழுநுர்று குடும்பங்கள் ஒன்றாக வசித்தபடியும் சைவ சமையல் அருந்தியபடியும் எளிமையாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைக் காண பலர் அங்கு வந்து சென்றனர். துவையல்பதி நடந்த இடமான தேங்காய்த் தோப்பு கன்யாகுமரியில் இருந்த ஒரு ஆசார பிராமணர் ஒருவருடைய இடமாகும். அந்த இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைப் பார்த்த அவர், அய்யா வைகுண்டரின் பக்தராகவே மாறி அந்த இடத்தை அவருக்கே தானமாகக் கொடுத்து விட்டார். 

முத்துப்பதி அந்த இடத்தில்தான் அமைக்கப்பட்டு சாமித்தோப்பு குருகுலத்தின் நேரடிப் பார்வையில் உள்ளது. அதன் பின் சில காரணங்களினால் அரசு அந்த இடத்தை ஏலத்தில் விட வேண்டியதாயிற்று. அதை ஏலத்தில் எடுத்தவர்கள் அங்கு பணிவிடையை செய்தனர்.  இப்போதும் அவர்களுடைய சந்ததியினர் தொடர்ந்து பணிவிடை செய்கின்றனர். முத்துப்பதி தனி ஆலயமாக அமைக்கப்பட்டு விட்டதினால் டிரஸ்ட் ஒன்றின் கீழ் இந்த ஆலயம் இயங்குகின்றது.

கைது ஆகும் முன் அய்யா வைகுண்டர் கடலுக்குள் நுழைந்து விஷ்ணுவைக் கண்டு ஆசி பெறச் சென்ற கடல் பால் கடல் எனக் கூறப்பட்டது. அது இந்த பதியின் பக்கத்தில்தான் உள்ளது. அந்த கடலில் சென்று குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என மக்கள் எண்ணுவதால் ஒவ்ஒரு வருடமும் பங்குனி மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் சாமித்தோப்பில் இருந்து ஆயிரக்கணக்கான  பக்தர்கள் முத்துப்பதிக்கு நடந்தே வந்து அந்த இடத்தில் உள்ள கடலில் குளிக்கின்றனர். சாமித்தோப்பு குருகுலத்தில் இருந்து குருமார்களும் அங்கு வந்து பணிவிடை செய்து அன்னதானமும் செய்கின்றனர். கன்யாகுமரி கடலில் இருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது முத்துப்பதி.  கன்யாகுமரியில் இருந்து அந்த இடத்திற்கு பஸ் மூலமும் செல்ல முடியும்.  

தாமரைக்குளம்பதி

அய்யா வைகுண்டருடைய ஒரு பக்தரான அரிகோபாலன் என்பவருடைய பிறந்த ஊர்     தாமரைக்குளம். அவரை சகாதேவன் என்றும் கூறுவார்கள். அவர்தான் அகிலத்திரட்டு என்ற   புனித நூலை இயற்ற அய்யா வைகுண்டருக்கு உதவியவர். அதனால் அவர் அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் மத்தியில் பிரபலமானவர். ஓரு முறை அய்யாவை அந்த இடத்திற்கு வருமாறு பக்தர்கள் அழைத்தனர். அவரும் அவர்களுடைய அழைப்பை ஏற்று அங்கு சென்று ஒரு நாள் தங்கி விட்டு சாமித்தோப்பிற்குத் திரும்பினார். அங்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அது முதல் ஒவ்ஒரு வருடமும் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அய்யாவை வாகனத்தில் ஏற்றி அவர்கள் அந்த இடத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த பழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது.  தினப் பணிவிடைகள் அங்கு நடைபெறுகின்றன. அங்கு பண்டிகைகளில் எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன். அந்த பதியை  உள்ளுர் கிராம மக்கள் குழு ஒன்று கவனித்துக் கொள்கின்றது. சாமித்தோப்பில் இருந்து ஒரு கிலோ தொலைவில் தெற்கு பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் இந்தப் பதி அமைந்து உள்ளது. கன்யாகுமரி மற்றும் நாகர் கோவிலில் இருந்து அந்த இடத்திற்கு பஸ் மூலமும் செல்ல முடியும். நாகர்கோவிலில் இருந்து பதினாலு கிலோ தொலைவில் உள்ளது இந்தப்பதி.  

அம்பலப்பதி 

அய்யா வைகுண்டர் பலம் என்ற இடத்திற்குப் போய் இரண்டு வருட காலம் தங்கி இருந்தார். அம்பலப்பதி என்ற அந்த இடத்தில்தான் அய்யா சிவசொருபியாக இருந்தார். அய்யா அந்த இடத்தில் இருந்த பொழுது பார்வதி மற்றும் பகவதியின் சக்திகளை தனக்குள்; எடுத்துக் கொண்டார்.  முருகனாக இருந்து வள்ளி மற்றும் தேவானையின் சக்திகளையும், பிரும்மாவாக இருந்து மண்டைக்காட்டம்மனின் சக்தியையும் பெற்றுக் கொண்டார். அங்கிருந்து அய்யாவின் பக்தர்கள் அவரை குதிரை ஒன்றின் மீது அமர வைத்து கடம்பான்குளம், பாம்பன்குளம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அந்த இடங்களில் எல்லாம் அய்யா நிழல் தாங்கல்களை அமைத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சாமித்தோப்பிற்குத் திரும்பி விட்டார். அவர் நிறுவிய அம்பலம் கவனிக்கப்படாமல் அழிந்து போக அதன் பின் வேறு சிலர் அந்த இடத்தில் ஆலயம் அமைத்து பணிவிடை செய்யத் துவங்கினர். அவர்களுடைய சந்ததியினர் இன்றும் அந்த நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்தவண்ணம் உள்ளனர்.  ஒவ்ஒரு வருடமும் அங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அய்யாவை ஆலயத்தைச் சுற்றி பவனியாக் எடுத்துச் செல்ல பல வாகனங்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன. நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளது இந்த முக்கியமான பதி. இந்தப் பதியை பல்லத்துப்பதி என்றும், மூலகுண்டப்பதி என்றும் அழைக்கின்றனர்.  

பூப்பதி 

அய்யா வைகுண்டர் தன்னுடைய கடைசி ஆறு வருடங்களை சாமித் தோப்பில்தான் கழித்தார். அவர் மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். அவருக்கு நிலங்களும் தோட்டங்களும் இருந்தன.  அவர் மாடுகளையும் வைத்திருந்தார். ஈதமொழி என்ற இடத்தில் பூமதன்தாய் என்ற உருவில் ஆறு வயது சிறுமியாக பூமாதேவி இருந்தாள். தெய்வீகத் தம்பதிகளான அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்விக்க சிலர் விரும்பினாலும் அந்த சிறுமியின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்தச் சிறுமியோ அய்யா வைகுண்டரின் புகழைப் பாடிக் கொண்டே இருந்து அவள் சாதாரணப் பெண் அல்ல என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டினாள். 

அதன் பின் அவளுடைய உறவினர்கள் அய்யா வைகுண்டரை தங்களுடைய ஊருக்கு அழைத்து அவருடன் அவளைத் திருமணம் செய்து வைத்தனர். அதன் பின் அந்த இடத்தில் இருந்த குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்த புன்னை மரத் தோப்பில் சென்று அய்யா தங்கினார். அந்த இடத்தில்தான் பின்னர் பூப்பதி என்ற பதி நிறுவப்பட்டது. அந்த பதியையும்  உள்ளுர் கிராம மக்கள் குழு ஒன்று நிர்வாகிக்கின்றது. ஒவ்ஒரு வருடமும் அங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பூபு;பதி நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளது . அந்த இடத்திற்கு பஸ் மூலம் செல்ல முடியும்.

எளிமையான மதம்

தெற்கு திருவான்கூர் பகுதிகளில் இருந்த கீழ்குடி மக்களின் முன்னெற்றத்திற்கென முதலில் தம் பணியினை அய்யா துவக்கினார். அதற்கு முன்னோடியாக சமுதாய, மத மற்றும் கலாச்சார சீர்திருத்தங்களை கொண்டு வரத் துவங்கினார். அந்த காலத்தில்; ஆலயங்கள் உயர் ஜாதி பிராமண இந்துக்களின்; கட்டுப்பாட்டில் இருந்தன. ஆகவே கீழ் ஜாதியினர் எனப்பட்ட மக்கள் கடவுளை வணங்க புதுமையான வழி முறையை அய்யாகொண்டு வந்தார். வேதங்களும் உபனிஷத்துக்களும் மத சம்மந்தப்பட்ட நூல்கள்.  உபனிஷத்துக்களில் தனி நபர் பற்றிய செய்திகள் நிறையக் கிடையாது என்றாலும் மற்ற நூல்களில் அப்படிப்பட்ட கதைகள் நிறையவே இருந்தன. புராணங்கள் எனப்பட்டவை வேதம் மற்றும் உபனிஷத்திற்கு அடுத்தபடியானவை.  அவை அனைத்தும் சமிஸ்கிருத மொழிகளில் இருந்ததினால் அவற்றை சாதாரண குடி மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

எளிமையான மதம்

மதக் கொள்கைகள் மிகவும் எளிமையாக இருந்தால் மட்டுமே அதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும் என அய்யா நினைத்தார். இந்து மதத்திலோ எண்ணற்ற தெய்வங்கள் உண்டு. ஒவ்ஒரு தெய்வத்திற்கும் தனித் தனியான ஆராதனைகள் உண்டு. அவற்றை சாதாரண குடி மகனால் சரி வரக் கடை பிடிக்க முடியாது. திதியும், பிரதோஷ காலமுமே கடவுளை ஆராதிக்க சிறந்த நேரம என நினைத்தனர்;. அவற்றை கடை பிடிப்பதும் சுலபம் அல்ல. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட எண்ணையை விளக்கேற்ற பயன்படுத்துவதின் மூலம் குறிப்பிட்ட பலன் கிடைக்கும். இவை நடைமுறையில் இருந்த நம்பிக்கைகள்.

ஆகவே அவற்றுக்கு மாறாக எளிமையான முறையில் ஆலயம் அமைக்கப்பட்டாலே போதும், வழிபாடு  எளிமையாக அமைந்து விடும் என நினைத்த அய்யா நிழல் தாங்கல்கள் என்று அழைக்கப்பட்ட சாதாரண கட்டிடங்களில் இறை வழிபாட்டைத் துவக்கினார். அங்கு வழிபட வேண்டும் எனில் ஒவ் ஒருவரும் நல்ல ஆரோக்கியமாகவும், சுத்தமான உடம்புடனும், மனதுடனும் வரவேண்டும். அய்யாவை எவர் வேண்டுமானாலும் எந்த முறையிலும் வழிபடலாம். பூஜைகள் போன்ற நியதிகள் கிடையாது, பூஜாரிகளும் கிடையாது, கற்பூர ஆரத்தி, ஊதுபத்தி ஏற்றுதல் போன்றவை கிடையாது. ஏன் புஜாரிகள் கூடக் கிடையாது. ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் இல்லை. ஆண்கள் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டுதான் வரவேண்டும் என்பது அல்லாமல்  நல்ல வெளுத்த வேட்டி உடுத்தி மேலாடை இன்றி வரவேண்டும் என்ற நியதி இருந்தது. 

மொழி;

நிழல்தாங்கல்களிலும், ஆலயத்திலும் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் மொழியாக இருக்க வேண்டும். அய்யா எழுதிய புனித நூல் தமிழ் மொழியில்தான் உள்ளது. அய்யா வைகுண்டர் ஆலய வழிபாட்டிற்கு தமிழை பயன் படுத்தியதின் காரணம் ஆலயத்திற்கு வரும் அனைவரும் அங்கு நடப்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதினால்தான். அனைத்து மதத்தினரும் அதை கடைபிடிக்க முடியும். கல்யாணத்தில் ஓதப்படும் மந்திரங்கள் கூட தமிழ் மொழியில்தான் இருந்தன.

பூஜை, பூஜாரிகள் மற்றும் உருவ வழிபாடு

ஆலயத்தில் பூஜைகள் செய்வதை அய்யா வைகுண்டர் விரும்பவில்லை. சாமித்தோப்பில் உள்ள கருவறை மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அதை பணிவிடை என அழைக்கின்றனர். அதை செய்பவர்களுக்கு பணிவிடைக்காரன் என்ற பெயர் உண்டு. ஜாதி பேதம் இன்றி எவர் வேண்டுமானாலும் பணிவிடை செய்ய முடியும்.

அய்யா வைகுண்டர் உருவ வழிபாட்டை வெறுத்தார். ஒவ் ஒருவரிடமும் கடவுள் இருக்கின்றார் என நம்பினார். கடவுள் இல்லாத இடமே இல்லை எனவும், அவர் அனைத்து இடத்திலும் இருக்கின்றார் என்பதினால் உருவ வழிபாடு ஆலயத்தில் தேவை இல்லை என்று கூறினார்
மிருக பலி

ஆலயங்களில் நடைபெற்றுவரும் மிருக பலிகள் தற்பொழுது பல சமூகத்தினராலும் விரும்பப்படவில்லை. ஆனால் அய்யா வைகுண்டர் அதை 150 வருடத்திற்கு முன்னரே கடைபிடித்தார். திருவான்கூர் சமஸ்தானத்தில் இருந்த மக்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். அவர்களுக்கு கடவுள் மீது பக்தியைவிட பயமே அதிகம் இருந்தது. அந்த மக்கள் பலி தரும் பழக்கம் வைத்திருந்தனர். ஆகவே அவற்றைத் தவிற்திடுமாறு தான் எழுதிய புனித நூலின் மூலம் அய்யா அறிவுறை தந்திருந்தார். அகிலத்திரட்டு நூலில் பலயிடுவதற்கு  கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்.
எதற்காகஉம்பெயரால் ஈனங்கேழு மாமுனியே
ஆடு கோழி அறுத்து பலியிடார்

அந்த காலத்தில் பெரிய ஆலயங்களில் கூட இந்துக்கள் பலி தரும் பழக்கங்களை கைகொண்டு இருந்தனர். பல ஆலயங்களிலும் உள்ள பலிபீடங்களே அவற்றுக்கு சான்று. அய்யா வைகுண்டர் தமது ஆலயத்தில் தேங்காய் உடைப்பதைக் கூட தடுத்துவிட்டார். ஏன் எனில் அதுவும் ஒரு விதமான பலியே எனக் கூறினார். இன்றும் கூட அது கட்டுப்பாட்டுடன் அய்யா வழி நிழல் தாங்கல்களில் கடைபிடிக்கப்படுவதைக் காணலாம்.

பலி தருவோர் தன்னுடைய பக்தன் அல்ல என்று அய்யா கூறினார். அதை மிகவும் கட்டுப்பாட்டுடன் அவர் கடை பிடித்ததினால் அந்த பழக்கம் அய்யா வழி ஆலயயங்களில் இல்லை. கடவுள் தான் படைத்த எந்த உயிரினமும் படுகொலை செய்வதை பொறுத்துக் கொள்ள மாட்டார் என நம்பினார்.

தர்மயுகமும் தர்மமும்

மனிதன் தோன்றிய காலம் முதலே பல்வேறு சமயங்கள் தோன்றிவிட்டன. ஒவ்ஒரு மதத்தின் கொள்கையும் ஒருவன் நேர்வழியில் நடக்க வேண்டும் என்றே கூறுகின்றன. உலகத்தில் ஏராளமான மதத் தலைவர்கள், போதனைகள் மற்றும் மதங்கள் இருந்தும் மக்களுடைய இன்னல்கள் குறையவே இல்லை. மதத்தின் பெயரால் அக்கிரமங்கள் பெருகி விட்டன. மதத்தின் பெயரால் சச்சரவுகள் ஏற்படும் பொழுது சமாதான குழுக்கள் அமைத்து அறிவுறை தரப்படுகின்றன. ஆனால் அவை எதுவும் நிரந்திரமாக சண்டைகளை தீர்த்து வைக்கவில்லை. ஆகவே மதச் சச்சரவுகள் நிரந்திரமாக தீர வேண்டும் எனில் தர்மம் தழைக்க வேண்டும்.

தர்மம் என்பதுதான் என்ன ? நேர்வழியில் வாழ்க்கையை நடத்திச் செல்வதின் பெயரே தர்மம். அதைக் கடைபிடித்தால் மதச் சண்டைகளொ, சமுதாய சண்டைகளோ, மத மாற்றங்களோ நிகழ முடியாது.  அதை அடையவே அய்யா விரும்பினார். ஆனால் அதை திடீர் எனக் கொண்டு வரமுடியாது என்பதினால் தர்மமே இறைவனிடம் சென்றடையும் வழி எனவும், எந்த ஒருவனும் வழிபாட்டுத் தலம் சென்றால் இறைவனை வழிபட்ட பின் வயிறு நிறைந்து திரும்ப வேண்டும். அப்பொழுதுதான் இறைவனுடைய நினைப்பும், நேர்மையும் அவர்களுக்கு இருக்கும் எனவும் நினைத்தார். அந்த நிலையில் வர இருக்கும் யுகமே தர்மயுகம் ஆகும். கலியை அழித்து தர்மயுகத்தை அடைவதே தன் கடமை என்றும் அப்பொழுது உலகில் அக்கிரமங்கள் நடக்காது , ஓரே மதம்தான் இருக்கும் என்றும் கூறினார்.ஒரே அரசின் கீழ் உலகம் இயங்கும், ஆளுபவர், ஆளப்படுவோர் என்ற பேதம் இருக்காது. நோய்களும், ஏழ்மையும் இருக்காது, கடவுளே தர்மமாக இருப்பார். குற்றங்கள் இருக்காது என்பதினால் ஆலயங்களும், காவல் நிலையங்களும், வழக்கு மன்றங்களும் இருக்காது என்றார்.

அய்யா வழி

அய்யா வழியின் சமுதாய மற்றும் மத சீர்த்திருத்தங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. அவரை அன்புடன் அய்யா என அழைத்து அவரிடம் தங்களுக்கு இருந்த ஈடுபாட்டை காட்டினர். அவர் நடத்திக் காட்டிய அற்புதங்களினால் அவர் மும்மூர்திகளின் அவதாரமான பிரும்மாதான் என்று நம்பினர். கல்வி அற்றவர்கள்கூட அவர் காட்டிய நன்னெறிப் பாதையில்  நடந்தனர். அந்த காலத்தில் அய்யா என்பவர் உருவில் கடவுளே வந்திருக்கின்றார் என மக்கள் கருதினர்.  அவர் இயக்கத்தில் பெருவாரியான அளவில் பல இடங்களில் இருந்தும் வந்து மக்கள் இணைந்துள்ளனர்.  அவர் காட்டிய வழிபாட்டு முறை உலகெங்கும் பரவும் என அருள் நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

அய்யா வழியினர்

உற்சவ நாட்களில் பல்வேறு இடங்களுக்கும் அய்யா வழியினர் சென்று யாசகம் பெற்று வந்தனர். உற்சவத்தின் எட்டாவது நாளன்று அந்த பணத்தைக் கொண்டு 'உண்பான்' என்ற உணவு தயாரிக்கப்பட்டு கரண்டி இன்றி அவர்களுடைய வெறும் கரங்களினாலேயே அனைவருக்கும் பரிமாறு கூறினார். அதற்குக் காரணம் மனிதர்களில் பேதம் இல்லை என்பதை நிருபிக்கத்தான். இன்றும் பலரும் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டு உணவு அருந்துகின்றனர். 
ஒரு காலத்தில் கீழ் ஜாதியினர் சமைத்த உணவுகளை உயர் ஜாதியினர் அருந்த மறுத்தனர். ஆகவே அய்யா தன்னுடைய சீடர்களை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி கீழ் ஜாதியினருடன் உணவு அருந்திவிட்டு வருமாறு கட்டளை இடுவது உண்டு.  அப்படித்தான் ஒரு முறை தலக்குளம் என்ற இடத்தில் உள்ள கருப்பாரி என்ற கிராமத்திற்கு தன்னுடைய இரண்டு சீடர்களை அய்யா அனுப்பினார். அங்கு சென்று வண்ணார் வகுப்பைச் சேர்ந்த பிச்சம்மாள் என்ற பெண்மணியின் வீட்டில் உணவு அருந்துமாறு கூறி இருந்தார். அந்த சீடர்களும் வேறு எங்கோ சென்று விட்டு அந்த கிராமத்திற்கு செல்லாமல் திரும்பி விட்டனர். அய்யா கூறிய ஆணையை ஏற்று பிச்சம்மாள் அந்த விருந்தாளிகளுக்கு உணவு தயாரித்து வைத்தப் பின் வெகு நேரம் காத்திருந்தாள். அப்படியும் அவர்கள் வரவில்லை என்பதினால் அவர்களக்காக தயாரித்த உணவை ஒரு குழி தோண்டி அதில் கொட்டி விட்டு குழியை மூடி விட்டாள்.  அதை அறிந்து கொண்ட அய்யா திரும்பி வந்த சீடர்க்களை விடவில்லை. அவர்களை மீண்டும் அவள் வீட்டிற்கு அனுப்பி இரண்டு நாட்கள் முன்பு அவள் சமைத்து வைத்திருந்த உணவையே அருந்துமாறு ஆணையிட்டார். அவர்களும் வேறு வழி இன்றி அந்த கிராமத்திற்கு சென்றதும் அந்த உணவை எந்த குழியில் புதைத்து வைத்திருந்தாளோ அதை தோண்டிய பொழுது , என்ன ஆச்சரியம் அந்த உணவு புத்தம் புதியதாக சமைத்தது போல மண் வாசைன இன்றி அங்கேயேஇருந்தது. அந்த சீடர்களும் அதை அருந்தி விட்டு வந்து அய்யாவுடைய மகிமைகளை மற்றவரிடம் கூறினார். 

அடுத்து அய்யா சமுதாயக் கிணறுகளைத் தோண்டினார். அந்த காலத்தில் ஜாதியினர் வாரியாக அவரவர்கள் பயன் படுத்த பல கிணறுகள் இருந்தன. முத்திரிக் கிணறு என்ற இடத்தில் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் ஒரு சமுதாயக் கிணறு தோண்டப்பட்டு உபயோகத்திற்கு விடப்பட்டது.

முன் காலத்தில்  கீழ் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு ஆலயங்களில் நுழையத் தடை இருந்தது. ஆனால் அய்யா காலத்தில் அது மாறுதல் அடைந்தது.  ஆகவே அடுத்த சீர்திருத்தம் 'தொட்டு நாமம் சாற்றுதல்' என்ற பெயரில் வந்தது. பக்தர்கள் நெற்றியில் ஒருவர் நாமம் இடுவதே அது.  பூசாரிகள் ஆலயங்களில் தரப்படும் வீபுதிப் பிரசாதத்தை தொடாமல் மேலிருந்து தூக்கிப் போடுவார்கள். ஆகவே நிழல் தாங்கல் அனைத்திலும் நாமம் இடும் பழக்கம் துவக்கப்பட்டது.  அங்கிருந்த குருமார்களை இரு விரல்களைக் கொண்டு பக்தர்கள் நெற்றியில் ஜோதி போன்ற நாமம் இடுமாறு கட்டளை இட்டார். 

சமுதாயத்தில் கௌரவம்

அந்த காலத்தில் கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் தலைப்பாகை அணிய தடை செய்யப்பட்டு இருந்தனர். அது போலவே உயர் ஜாதியினர் அணிந்த ஆடைகள் போல ஆடைகள் அணிவதிலும் கட்டுப்பாடுகள் இருந்தன. கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் இடுப்புக்குக் கீழாகவும் முழங்காலுக்கு மேலாகவும் இருக்குமாறு மட்டுமே வேட்டி அணிய முடியும். முதலில் அந்;த பழக்கத்தை ஒழிக்க அய்யா முடிவு செய்தார். 

தற்பொழுது உருமல்காட்டு என்று அழைக்கப்படும் இடம் முன்பு உரிமைக்காட்டு என கூறப்பட்டது. பதினாறு வயதான கீழ் ஜாதியை சேர்ந்த சிறுவர்களுக்கு அந்த ஊரில் தலைப்பாகை அணிவித்து ஒரு சடங்கு செய்யப்பட்டு வந்தது. ஆனால் உயர் ஜாதியினர் செய்த கொடுமையால் அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.  கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் இடுப்புக்கு மேல் துணிகள் உடுத்தக் கூடாது. தோளில் துண்டு போட்டுக் கொள்ளக் கூடாது.துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும்.  தலையில் பாரத்தை சுமந்து செல்லும் பொழுது கூட தலைப்பாகை அணியக் கூடாது. பனை ஓலைகளால் ஆன குடுவைகளை வைத்துக் கொள்ளவே அனுமதிக்கப்பட்டனர். அதை உடைக்கும் முறையில் அய்யா தன்னுடைய பக்தர்களை தலைப்பாகை கண்டிப்பாக அணிய வேண்டும் எனவும், கால் விரல் தொடும் அளவுக்கு வேட்டி உடுத்துமாறும் கூறி தாழ்த்தப்பட்டோர் இனத்திற்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார். 
அய்யா கூறினார்
கந்தல் துணிக்குள்ளே தந்தேன்
நன்கனகமணி முத்திரையும்  
துவையல் பந்தி
இப்பொழுதெல்லாம் எந்த திட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும் எனில் அதில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. அது போல அன்றைக்கே துவையல் பந்தி என்ற பெயரில் அனைத்து வகுப்பினரையும் ஒன்றிணைத்து தூய்மைப் படுத்துவதை துவையல் பந்தி என்ற பெயரில் அய்யா செய்தார். 

முன் காலத்தில் கீழ் ஜாதியினர் சுத்தமாக இருந்தது இல்லை. கள் அருந்துவதும் புகையிலைப் போடுவதும் தொடர் பழக்கமாக அவர்களிடம் இருந்தது. மீன் இல்லாத உணவு தயாரிக்கப்பட மாட்டாது. ஆகவே அவர்களுடைய எண்ணத்தை மாற்ற அய்யா நினைத்தார். முதலில் அவர்கள் சைவ சாப்பாடு அருந்துபவர்களாக மாறினாலேயே சமுதாயாத்தில் அவர்களக்கு மதிப்பு ஏற்படும் என நினைத்தார்.  துவையல் பந்தி என்ற பெயரில் கடலில் தினமும் மூன்று வேளைகள் குளிக்க வேண்டும்,  அவர்களுடைய துணிகளை உடனடியாகத் துவைத்து உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும, பச்சரிசி மற்றும் பருப்பை உப்புத் தண்ணீரில் சமைத்து அருந்த வேண்டும, ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு வைத்த பயிற்சியைத் துவக்கினார். இப்படியாக வாகைப் பதி என்ற இடத்தில் ஆறு மாதம் பயிற்சி தந்தார். அதன் பின் முத்தப்பதிக்கு சென்று அங்கும் அதை தொடர்ந்தனர். அந்த இடத்தில் அவர்கள் காய்கறிகள் மட்டுமே அருந்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் துவையல்காரர்கள் என அழைக்கப்பட்ட அவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று அய்யா வழி இயக்கத்தைப் பரப்பினர். 
அன்பு இயக்கம்

இந்த இயக்கத்திற்கு ஒரு கொடியை உருவாக்கினார். அதன் பெயர் அன்புக்கொடி. இருபுறமும் ஜோதி வடிவில் நாமம் போடப்பட்ட காவி நிறக் கொடி அது. அன்பே அனைவரையும் இணைக்கும் பாலம் என நம்பிய அய்யா நிழல் தாங்கல்களிலும், இல்லங்களிலும் அந்த கொடியை பறக்க விடச் சொன்னார். மாசி மாத வைபவத்தில் அந்தக் கொடிகளை ஏந்திக் கொண்டுதான் சாமித்தோப்பில் ஊர்வலம் நடைபெறுகின்றது.  அந்த கொடி அய்யா வழியின் சின்னமாகும். அதை அகிலத்திரட்டில் அய்யா வெளிப்படுத்தி உள்ளார். 

நிழல் தாங்கல்கள்
செட்டிக்குடியிருப்பு, அகஸ்தீஸ்வரம், பாலுர், சுண்டவில்லை பொன்ற இடங்களிலும் கடம்பான்குளம், வடலிவில்லை, பாம்பன் குளம் போன்ற இடங்களிலும் அய்யா வழி இயக்கத்தை விரிவுப் படுத்த தன்னுடைய பக்தர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி வழிபாடு நடத்த நிழல் தாங்கல்களை அய்யா அமைத்தார்.   அந்த இடங்களுக்கு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து பலரும் வந்தனர். 

ஒவ்ஒரு நிழல் தாங்கலும் இரண்டு அறைகள் கொண்டவை. பணிவிடைக்காரர்கள் என அழைக்கப்பட்டவர்கன் அங்கு தினமும் வந்து வணங்குபவர்கள். அந்த நிழல் தாங்கல்கள் கல்விக் கூடங்களாகவும், அய்யா வழி இயக்கத்தை புரிந்து கொள்ள பயிற்சி பெறும் இடமாகவும் விளங்கின.

ஓவ்ஒரு நிழல் தாங்கல்களிலும் வாரம் ஒரு முறை உச்சிப் படிப்பும் உகப் படிப்பும் நடந்தன. வருடம் இரு முறை அந்த இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறும். மாதம் ஒரு முறை முதல் ஞாயிற்றுக் கிழமையில் பால் வைப்பு என்ற பெயரில் உடைத்தப் பச்சரிசியில் உணவு செய்து நாராயணருக்கு நைவித்தியம் படைப்பது பல நிழல் தாங்கல்களிலும் நடைபெறுகின்றன.  

நிழல் தாங்கல்களை அய்யாப்பட்டி, நாராயணசாமிபதி மற்றும் நாராயணசாமி கோவில்  எனவும் பெயரிட்டு அழைத்தனர். அந்த இடத்தில் உருவ வழிபாடு தடை செய்யப்பட்டு உள்ளது. கூடி உள்ள அனைவரும் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என கோஷம் போடுவர். ஒரு நாற்கலியில்  காவி நிறத் துணி வைக்கப்பட்டு  அதன் மீது ருத்திராட்ச மாலை வைக்கப்பட்டு இருக்கும்;. அதன் பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடி மாட்டப்பட்டு இருக்கும். தினமும் பணிவிடைக்காரர்கள் அதன் முன்பாக குத்து விளக்கு ஏற்றி வைப்பர். 
மறுப்பு இயக்கம்
அய்யா வைகுண்டர் தம்முடைய பக்தர்களிடம் முழு சம்பாத்தியத்தையும் வரியாகச் செலுத்த வேண்டாம் எனக் கூறியதால் அதை அவர்கள்வரி செலுத்த மறுத்தனர்;. அதற்கு முன் உயர் ஜாதியினர் கீழ் ஜாதி மக்களிடம் பரி என்ற பெயரில் வரி வசூலித்து வந்தனர். அதனால் அய்யா வைகுண்டர் அரசர்களிடம் அபராதம் விதிக்கக் கூடாது என முறையிட்டார். அய்யாவுடைய ஆணையை ஏற்ற கீழ் ஜாதியினர், முக்கியமாக நாடார் இன மக்கள் வரி செலுத்தவும் சம்பளம் இன்றி வேலை செய்யவும்  மறுப்புத் தெரிவித்தனர். 

அய்யாவின் காலத்திற்கு முன்பும், அவர் வாழ்ந்திருந்த காலத்திலும் பிராமணர் ஆதிக்கம் அதிகம் இருந்தது. சமஸ்கிருத மொழியில் மட்டுமே ஆலயங்களில் பூஜைகள் செய்தனர். திருமண மந்திரங்களும் சமிஸ்கிருத மொழிகளில் மட்டுமே இருந்தன. சமிஸ்கிருத மொழி தேவர்களில் மொழி எனவும் அதை மற்ற ஜாதியினர் கற்கக் கூடாது எனவும் தடை செய்தனர்.  ஆகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அய்யா அனைத்து நிகழ்ச்சிகளையும் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தினார். 

அய்யா வழி திருமணம் என்ற புதுப் பாணியில் தமிழ் மொழியில் திருமண மந்திரங்கள் ஓதப்பட்டன. திருமணத்தை கந்தன் திருமணம் என்றும் அதை சிவபெருமான் விஷ்ணுவின் முன்னிலையில் நடத்தி வைப்பதாகவும் அய்யா கூறினார்.  மணப்பெண்ணும், மணமகனும் தெற்குப் பக்கத்தை நோக்கி அமர்ந்திருக்க அவர்களடைய நெற்றியில் நாமம் சாத்தப்பட்டு  அந்த கிராமத்தில் உள்ள வயதானவர் திருமணத்தை நடத்தி வைப்பார்.  
சமூக சீர்திருத்தங்கள்

திருமணத்தில் அகிலத்திரட்டில் எழுதி உள்ள கல்யாணப் பாட்டு படிக்கப்படும். 'மவுனி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ ' என்ற ஐம்பத்தி ஆறு வரிகள் கொண்ட வாழ்த்து படிக்கப்படும் அதைப் படிக்க சுமார் ஏழு நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்படும். குரு அதைப் படிக்கப் படிக்கப்படிக்க கூடி உள்ளவர்கள் அதை திரும்பக் கூறுவர். கீழ் கண்ட வரிகளை குரு ஐந்து முறை படிப்பார். 
அரகரா என்று சொல்லி அம்மையுமாய்தான் எழுந்து 
அதன் பின் குரு தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுத்தப் பின்  
சிவ சிவா என்று சொல்லி திருச் சரடு சேர்த்தனரே 
என குரு படிக்க, மணமகன் தாலியை மணமகள் கழுத்தில் கட்டி விடுவான். கல்யாண வாழ்த்தில் உள்ள மற்ற வரிகள் மணமக்களை வாழ்த்தும் வரிகள்.  கல்யாணம் முடிந்ததும் மணவறையை சுற்றி ஐந்து முயை மணமக்கள் நடப்பார்கள். திருமணம் நிறைவேறிவிடும். இப்படியாக 150 வருடங்களாக அய்யா வழித் திருமணங்கள் நடந்து வருகின்றன. சாமித்தோப்பிலும் திருமணங்கள் நடைபெறுகின்றன.