செவ்வாய், 25 நவம்பர், 2014

அகிலத்திரட்டு அம்மானை அருளியது யார்?

காவிஷ்ணு தன் ஒவ்வொரு அவதாரத்தையும் மகாலெட்சுமியிடம் சொல்வதுதான் அகிலத்திரட்டு அம்மானை.அகிலத்திரட்டு அம்மானை நூலை மகாவிஷ்ணு அருளி அரிகோபாலன் சீடர் (சகாதேவன் சீடர்) மூலமாக வெளிப்படுத்தியத்தை கொட்டங்காட்டில் பாதுகாக்கப்பட்ட ஆதி ஏட்டின்பிரதியில்
“ ராத்திரி தூக்கம் நான் உறங்கும் வேளையிலே
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் என்னை எழுப்பி செப்பினார் அம்மானை
காப்பில் ஒரு சீரும் கனிவாய் மிக திறந்து
தாப்பிரியமாக சாற்றினார் எம்பெருமாள்”
இங்கே எம்பெருமாள் என்பது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது.அதன்படி நாதன் என்பது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது.மகாவிஷ்ணு அரிகோபாலன் அருகில் இரவில் வந்து அவரை எழுப்பி அகிலத்திரட்டு அம்மானை முதல் வரியை எடுத்துரைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
“மகனே எந்தன் வாய்மொழியை வகுக்க காண்டமதுக்கு
உகமோர் அறிய உரை ஊனு முதல் காப்பாக
அதில் மேல் நடப்பு உன் அகமே நானிருந்து
சரி சமனாய் வகுப்பேன் நாதனும் தானே எழுது காண்டம்” என்றார்.
நான் சொல்லுகிற காண்டத்திற்கு உலக மக்கள் அறியும்படி முதல் காப்பு நீ சொல்.அதன்பின்பு உன் உள்ளத்திலே உன் உள்ளத்திலே இருந்து நான் சொல்லுவேன் நாதனாகிய மகாவிஷ்ணு எழுதும் காண்டம் என்றார். அதாவது மகாவிஷ்ணுவாகிய நான் உன் மூலமாக நான் எழுதுகிறேன் என்று பொருள்.
“நான் உரைக்க நீ எழுதி நாடு பதினால் அறியும்”
மகாவிஷ்ணுவாகிய நான் உன் உள்ளத்தில் இருந்து சொல்ல சொல்ல நீ எழுது,அதை நாடு பதினாலும் (எல்லா லோகாத்தார்களும்) அறிந்து கொள்வார்கள்.
“பாரேழும் அளந்த பச்சமால் மாயவரும்
முன்னர் கயிலையிலே முதல்நூல் முறைப்படியே
இன்னாள் என்னிடத்தில் எடுத்து உரைத்ததையும்
அய்யா சொன்னதையும் அடியேன் எழுதுகிறேன்”
ஈரேழு பதினாலு உலகத்தையும் அளந்த பச்சைமால் நாராயணர் முன்பு கயிலையங்கிரியில் எழுதி வைத்ததையும் இப்போது என்னிடத்தில் சொன்னதையும் (அய்யா மகாவிஷ்ணு) அடியேன் (அரிகோபாலன்) எழுதுகிறேன் பொருளாகும்.
பக்கம் 359ல்,
“ஒப்பார் ஒருதர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாதன் எழுதி வைத்த அகிலத் திரட்டம்மானை இதே”
உலகில் மனிதர்கள் தன்னுடைய விருப்பத்திற்கு அகிலத்திரட்டு அம்மானையையை எழுதக்கூடாது.அப்பா நாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டு அம்மானை இது என்று மகாவிஷ்ணுவே குறிப்பிட்டு உள்ளார்.
எனவே அகிலத்திரட்டு அம்மானையை அருளியது மகாவிஷ்ணு என்றும் அவர் அருளால் அரிகோபாலன் (சகாதேவன் சீடர்) எழுதினார் என்று குறிப்பிடுவது சிறப்பாகும்.
நிகழ்காலத்தில் முத்துக்குட்டி தான் வைகுண்டர் என உலக பதிவுகள் இருப்பதால் முத்துகுட்டி ஞான நிலை அடைந்து அகிலத்திரட்டை எழுதினார் என்ற ஒரு கருத்து இருப்பதால்,வைகுண்டர் எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்று குறிப்பிடாமல் மகாவிஷ்ணு எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்று குறிப்பிட்டால் மகாவிஷ்ணுவின் பக்தர்களும் இந்நூலை அறிந்து கொள்ள ஒரு ஒரு வாய்ப்பாக

அய்யாவழிக்காரர்கள் என்றால் யார்?

அய்யா என்றால் தந்தை என்று பொருள்.தந்தை என்றால் அனைத்து உயிர்க்கும் தந்தை.”தேசமயம் ஏகம் திருஷ்டித்த மகாபர இந்திர நாராயணர் அய்யா”.உலகத்தை படைத்தவனை வணங்குவது தான் அய்யாவழி,வழிபாடு.அய்யா என்றால் மகாவிஷ்ணு நாராயணரை குறிக்கும்.நாராயணரின் அவதார பாதையை வைத்து புனிதநூல் அகிலத்திரட்டு அம்மானை உள்ளது. அய்யாவழிக்காரர்கள் என்றால் நாராயணரை தெய்வமாக வணங்கி அவர் காட்டிய அறவழியில் வாழ்பவர்கள் என்று பொருள்

ய்யாவுக்கு கலிநீசன் செய்த சோதனைகள்

ரி சாமி என்கிறானே நாமும் ஒரு சோதனை செய்து பார்ப்போம் என என்னிய மன்னன் தனது கை விரலில் இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் கழற்றி தன் கையில் வைத்து கொண்டான் பின் வைகுண்டரை நோக்கி நீ உண்மையான சாமி என்றால் என் கையில் இருப்பதை கூறடா என்றான் எல்லாம் அறிந்த வைகுண்டர் "' தாழ்ந்துயிரு என் மகனே சட்டைக்குள்ளே நான் பதுங்கி ''' என்ற தனது தந்தையாகிய நாராயனரின் உபதேசத்துக்கு ஏற்ப தன் சக்திகளை வெளிக்காட்டாமல் இருந்தார் மேலும் இப்போது இவனிடம் இதை உரைத்தால் நம்மை அறிந்து அவர்களுடன் நம்மையும் சேர்க்க பார்பான் ஆகவே நாம் நினைத்த காரியம் நிரைவேறாமல் போகும் என்று எண்ணி அமைதியாக இருந்தார் பின் மன்னனை நோக்கி இறைவனின் என்னப்படி எது இருக்குமோ அது இருக்கும் என்று உரைத்தார் கோபங்கொன்ட மன்னன் இவனா சாமி இவன் கள்ளசாமி இவனை கொடுமையான சரடனின் அழைத்து செல்லுங்கள் என உத்தரவிட்டான் பின்னர் வைகுண்டரை கொடிய சரடன் முன் கொண்டு நிறுத்தப்பட்டார் கொடிய சரடன தன்னிடமிருந்த சாராயத்தில் ஐந்து கொடிய விஷங்களை கலந்து நல்ல பால் எனக் கூறி வைகுண்டரை குடிக்க சொன்னான் தொடரும் அய்யா உண்டு

அய்யாவை கலிநீசன் செய்த சோதனைகள்

விஷமென்பதை அறிந்த நாராயனர் சிரிதும் அச்சமின்றி முழுவதும் பருகினார் அந்த விஷமானது வைகுண்டரை வெகு நேரமாகியும் ஒன்னும் செய்யவில்லை விஷத்தால் பாதித்த படாத வைகுண்டர் எவ்வாறு விஷத்தின் கொடுமையிலிருந்து தப்பினார் என்று எண்ணாத சரடன் மேலும் ஒரு சோதனை செய்வோம் நினைத்தார் விஷத்தை உண்ட வைகுண்டர் மாளாமல் இருப்பதை உனர்த்த சரடன் வைகுண்டரை மேலும் ஒரு சோதனை செய்ய என்னினான் அதன்படி வைகுண்டரை கொடிய டாணா சிறையில் வைக்க சேவர்களுக்கு உத்தரவிட்டான் மிகவும் தூர்னாற்றம் வீசக்கூடிய அந்த சிறையில் வேகுண்டரை அடைத்தான் அந்த அறையில் மனிதர்களின் கழிவுகளும் மிருகங்களின் கழிவுகளுமே அங்கு முகுதியாக காணப்பட்டன பூச்சிகளும் அட்டைகளும் பல்வேறு வகையான புழுக்களும் கொட்டிக் கிடந்தன அதில் பெரும்பாலான பூச்சிகளும் புழுக்களும் அய்யாவின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தன கொடிய நகரத்தை போன்ற அக்குழியில் வைகுண்டர் தனக்கு நேர்ந்த அனைத்து சோதனைகளையும் சான்றோருக்காய் பொருத்துக் கொண்டு அமைதியாக இருந்தார் வைகுண்டரின் அமைதியை கண்ட நீச மன்னன் அவரை மேலும் பல்வேறு சோதனைகள் செய்ய திருவணந்தபுரம் சிங்காரதோப்பு சிறைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டான் தொடரும் அய்யா உண்டு

அய்யா துணை

சாட்டு நீட்டோலைதன்னை நாக்கு மூக்கொடியாமல் தாக்கி எழுதச் சொன்னேன் சிவனே அயயா. பனை ஓலையின் நாக்கு மூக்கு பகுதிகளை அறுத்தெறியாமல் இந்த சாட்டோலையை வேகமாக எழுதச் சொன்னேன் சிவனே அய்யா. அய்யாஉண்டு

அய்யா துணை

ஆறுசெஞ்சடை சூடிய வையனே!

அலையிலேதுயி லாதி வராகவா!

நீறுமேனி நிரந்தரம் பூசிவாநீ!

சிவாசிவ மைத்துன ராகவா!

வீறுசத்தி மணவாள ரானவா!

வீரலட்சுமி மன்னரரி ராகவா!

ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா!

எமையாட்கொள்ளும் நாராயணா போற்றியே!.
நாராயணா பொற்றியே!.

அய்யா துணை

மகனே உனக்கு வைத்தவிஞ்சை மனதி லறிந்து கொண்டாயோ

அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடத்து அல்லாமல்

யுகமே அழியு முன்னாக ஒருசொல் இதிலே குறைவானால்

தகமோ ரறியத் தீமூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே

நல்லோர் மகனே சொல்லுவதுகேள் நாணோ உரைத்த விஞ்சையெல்லாம்

வல்லோ னான திருமகனே மனதி லறிந்து அறிந்துநட

எல்லாம் நமதுள் ளாச்சுதென்று எண்ணி நடப்பெ னுன்னாலே

சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே

கொடுக்கும் வரங்கள் உனக்கீந்தேன் கொடுத்த வரத்தைப் பறிப்பதற்கு

உடக்கு வரமுந் தந்தேனான் உன்ற னாணைத் திருவாணை

அடக்கு முடக்குந் தந்தேனான் ஆதி சிவனா ரவரானை

நடக்கும் படியே சட்டமெல்லாம் நாரா யணனே தந்தேனே

தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுந் தரைமீது

எந்தன் மீது மறவாதே என்னாண் டருளு மிறையோனே

அந்தன் மீது மறவாதே ஆயா னெனவே அறிவில்வைததுச்

சிந்தை மகிழ்ந்து முறைநடந்தால் சிவனு முனக்குள் வசமாமே

தாயா ரோடு சிவமாது சரசு பதியே பொன்மாது

நேயா மாதர் மடமாது நீணில மறிய வந்துனது

பூசா பலன்கள் செல்லிமிகப் புலம்பித் திரிவார் துயர்தீர

மாயா திருக்கு மகனேவும் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே

செல்ல எளிதோ என்மகனே சொல்லா தனேகம் தோன்றுமினி

வெல்ல எளிதோ என்மகனே மேலோரா ராரா லும்

கொல்ல எளிதோ வுனைமகனே கோவேங் கிரியின் கோனாலும்

வெல்ல எளிதோ உனைமகனே மேலாங் கண்ணே மிகவளராய்

இந்தப் படியே நாரணரும் இயம்பு மகவு ஏதுரைக்கும்

கந்த னுறுவே லென்றகப்பா கடியா வுனது படிநடக்க

எந்தப் படியோ நான்றமியேன் எதோ அறியப் போறேனைனச்

சிந்தை மகிழ்ந்துத் தகப்பனுட திருத்தாள் பிடித்துச் செப்பலுற்றார்

அய்யா உண்டு

கடலெல்லாம் குளமாக குளமெல்லாம் கடலாக கண்ணுக்குத் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா

ஊசிமுனையதிலே கடலும் மலையுடனே ஊரும் பதியுங்கண்டேன் சிவனே அய்யா

கோரைக்குருத்துக்குள்ளே தாரணிதன்னிலுள்ள குடிகளும் வாழக்கண்டேன் சிவனே அய்யா

திரைக்கடலில் சிறுமீன் பெரியமீனைப் பிடித்துத்தின்னவும் கண்டேனையா சிவனே அய்யா

ஈரத்தின்மேல் கிடந்த ஆடையை அட்டைகண்டு எடுத்து விழுங்கக்கண்டேன் சிவனே அய்யா

போர்வெள்ளைக்கொக்கு புழுத்திங்க போனயிடத்தில் புழு வெட்டிக்கொத்திக் கண்டேன் சிவனே அய்யா

முடுக்கன்மார் பெற்றமக்கள் தூக்கம்வைத்த பாயதிலே மூச்சோடி போகக்கண்டேன் சிவனே அய்யா

அய்யா துணை

தெட்சணாமூலையிலே பதிபோட்டிருக்குதடா

அதுகுட்டிபோட்டு இருக்குதப்பா முக்கோடிதவஞ்செய்து

பார்தனில் அக்குருவும் பதிபோட்டடு இருக்கின்றாரே

இரவுபகல் எப்போதும் அவர்குயிரை போட்டாற்றுவதில்லை

அஞ்சாம் பிடித்திடுங்கோ அடங்கிடுவாரக்குருவும்

நஞ்சுதின்று நாளாச்சு நான்மறைப்போறேனடா

வஞ்சகமில்லை சொன்னோம் வழிபார்த்துப் பிடித்திடுங்கோ

வையகத்தில்யாபேர்க்கு மொருவலுச்சக்கரம் வருகுதப்பா

கந்தன்திருவேலனே என்னை ஆண்டியெனறறிய மாட்டான்

கண்டதுண்ட மாகவல்லோ கனத்தபூமி வெடிக்குதடா

கோலநடுமாலயனும் சாலங்கட்டி ஆடுகிறேன்

காளிவெள்ளம் வருகிறது கப்பல்செய்து வைத்திருங்கோ

நாடெல்லாம் காடாகும் நல்அக்கினிவந் தாகுதடா

நாலுகாலு ஜீவஜெந்து நாட்டிலில்லை ஓட்டமடா

கங்கைபால் வற்றுமப்பா கிழவன் பன்டாரம் சொல்லுகின்றேன்

வெட்டவெளிதனில் மக்காள்வேலி பயிராகுதப்பா

ஊரோட்டம் தேரோட்டம் மக்காளொன்றுவட்டம் ஆகுதடா

மாரிவெள்ளம் அழிக்குதடா மாயான்டி சொல்லுகிறேன்

கூத்தாடிக்கூத்தாடி நாள்கொள்ளி வைத்துப் போவேனடா

கொள்ளிவைக்கும் குமரனடா கொப்பன்நந்தி யீசனடா

பள்ளிக்கணக்கனடா நான் பள்ளியிலே ஆடிவாரேன்