திங்கள், 24 நவம்பர், 2014

அகிலதிரட்டு உரை:-

யாருக்கெல்லாம் நாமம் கொடுக்கும் தகுதி உள்ளது????????
யாரெல்லாம் நாமமிட்டால் நொம்பலங்கள் தீரும்.... அய்யா சீசன்மாருக்கு இவ்வாறு சொல்லுகிறார்..
.........
எறும்பு முதல் எண்ணாயிரப்பட்ட மிருகப்பிறவி செய்து இருப்பதால், வாய்பேசாத மிருகத்தை தள்ளி எந்தெந்த சாதி வாய்பேசுமோ அதிலே ஐந்து ஆணானாலும் ஐந்து பெண்ணானாலும் அவரவர் தேவிமார் முகம் பார்த்து பேசினதே அல்லாது வேறு தேவிமார் முகம்பார்த்து பேசினதேயில்லை என்று ஆண்பிள்ளைகளும்; அவரவர் ஆம்படையானத்தள்ளி இன்னொரு முகம் பார்த்து பேசவில்லை என்று ஐந்து தேவிமார்களும் கொடி மரத்தில் ஐந்து நேரம் சத்தியம் செய்து நாமம் கொண்டு இடச்சொல்ல,............ இந்தப்படி தானம் பண்ணிச் சத்தியம் செய்து நாமம் கொண்டிட நொம்பலம் இதமாகிப்போகும். இதை சீசர் எல்லோரும் நகர் எல்லாம் இந்த ஒழுங்கைத் தெரியச் சொல்லவும். இன்னும் கணக்கு நிரம்பயிருக்கிறது! அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா..

எறும்பு முதல் யானை உள்ள எண்ணாயிரம் மிருகப்பிறவி செய்திருக்கிறேன், இவற்றில் வாய்பேசாத மிருகத்தை (நல்லது கெட்டது ஆராயதெரியாத, ஆறாம் அறிவு இல்லாத, சிந்தனை செய்யும் ஆற்றல் இல்லாதவைகளை தள்ளி) எந்தெந்த சாதி வாய் பேசுமோ - வாய் தானாக பேசாது, அதை மனம் இயக்கினால்தான் பேசும், மனம் தானாக இயங்காது அனுபவ அறிவும் சிந்தனை சக்தியும் வேண்டும், அப்படிப்பட்ட ஆறறிவுள்ள மனிதர்களில் யார் ஒருவர் அவரவர் தேவிமார் (மனைவிமார், அவரவரின் உடைமையைத்தவிர பிறரின் பொருட்களின் மீது ஆசை கொள்ளாதவர்கள்) முகம் - (ஆசை) பார்த்து பேசியது (இச்சைகொள்ளல்) அல்லாது வேறொருவரின் முகம் பார்த்து பேசாத ஆணும் பெண்ணுமே பிறருக்கு நாமம் இடும் தகுதி உள்ளவர்கள்... அய்யா வைகுண்டர்.
ஆக, அன்பு குடிகொண்ட அறிவு உள்ள கண்ணு மக்கா! புரிகிறதா? அய்யா யாருக்கெல்லாம் அந்த தகுதியை கொடுத்துள்ளார் என்று! "கண்டதெல்லாம் தெய்வம் என்று கைஎடுத்தால் பலனும் உண்டோ?" இது இங்கேயும் பொருந்தும்........... அய்யா உண்டு, ஆட்டுவானும் நீயே! இங்கே ஆடுவதும் நீயே! வைகுண்டா சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக