புதன், 26 நவம்பர், 2014

அகில வரிகள்...

நாலு மூணு கணக்கு நடுதீர்த்த ஞாயமதும்
மேலெதிரி இல்லாமல் வினையில்லாது ஆண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் யெடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமை தன்னை
காரணமாய் எழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக ஊழ்வினை நோய் தீருமென்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே.

- அகிலம் -

விளக்கஉரை :-

ஏழு யுகங்களாக இந்த உலகுக்கு இடையூறு செய்த பாதகர்களின் பாவக்கணக்கையெல்
லாம் தெளித்துப்பார்த்து,
அவர்களுக்கெல்லாம் அய்யா நடுத்தீர்ப்பு செய்த நியாயத்தையும்,
இனியுள்ள தர்மயுகத்தில் எதிரிகளே இல்லாவண்ணம் நல்லாட்சி புரியும் விபரங்களையும், முற்காலத்தில் வேத வியாசர் எழுதி வைத்த ஆகம விதிப்படியே அய்யா வைகுண்டப்பரம்பொருள் இந்த அவனியில் வந்து நடத்துகின்ற அற்புதமான வரலாறுகளையும், காரணக் காரியங்களோடு எழுதி அதை கதைபோல் படிப்போருக்கு, முப்பிறவி வினைகளால் உண்டான நோய்களெல்லாம் உடனே தீர்ந்து, மகத்துவமாய் வாழ்வார்கள் என்று அய்யா இந்த அறிய வரலாற்றை அருளுகிறார்.
- அய்யா உண்டு -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக