அகிலத்திரட்டு அம்மானை , இது அய்யா வழி மக்களின் புனித நூல் ஆகும். இது அய்யா வைகுண்டர் அருளால் அவரது சீடரின் ஒருவர் ஆன அரிகோபால சீடரால் எழுதப்பட்டது.

              அகிலத்திரட்டு அம்மானை தினமும் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்

அகில வாசகம் :

" தினமொரு நேரம் எந்தன் திருமொழி அதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவப் பறத்திடும் நிசமே சொன்னோம் "

விளக்கம் :

       தினமும் ஒரு முறையாவது அய்யாவின் திருமொழியை கேட்டால்  , சூரிய ஒளி கண்ட பனியை போல பாவம் பறந்து போகும்.

அகில வாசகம் :

     " நானுரைக்க நீயெழதி நாடுபதி  னாலறிய
  யானுரைக்க நீயெழதி அன்போர்கள் தங்கள்முன்னே
  வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு
  பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா "

விளக்கம் :

     இந்த அகிலத்திரட்டு அம்மானை வாசித்து கேட்டு மகிழ்ந்தாள் இறைவனை நேரில் கண்ட பயன் கிடைக்கும்.

அகில வாசகம் :

  " மலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடினகி
 தலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில்
என்னானை பார்வதியாள் ஈஸ்வரியின் தன்னாணை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா "

விளக்கம்  :
   
   மலடி என ஊரில் உள்ளவர்கள் அழைக்கபடும் பெண் ,  இந்த அகிலத்திரட்டு அம்மானையை மன விருப்பத்துடன் கேட்டு மகிழ்ந்து இருந்தால்,  இறைவனை  நடி கேட்டல் மதலை உடனே கிடைக்கும்.

அகில வாசகம் :

" திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத்
திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர்
எண்ணமிந்த வினைதீர்ந்து ஞான மான்
இறையவரின் பாதாரத் தியல்பு பெற்று
வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று
மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சையாக
நீடுழி காலமிருந் தாள்வார் திண்ணம்.

விளக்கம் :

    அகிலத்திரட்டு அம்மானையை தினமும் நம் மன விருப்பமாக கேட்டால் இறைவன் அருள் கிடைக்கும். அது மட்டுமல்ல தர்மயுக வாழ்வு கிடைக்கும்.


அகிலத்திரட்டு அம்மானை படிப்போம் !
அதன்படி நடப்போம் !
தர்மயுக வாழ்வு பெறுவோம் !

அய்யா உண்டு