ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
முறை செய்து கர்ணனுக்கு முத்தி மோட்சம் கொடுக்க
மறை தேர்ந்த மாயன் வந்தார் அவன் அருகே 
அப்போது வேதவியாசர் அவர் அங்குவந்து
செப்போடு ஒத்த திருமாலோடு ஏதுரைப்பார்
பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட
ஆவிக்கு மோட்சம் அருளுவதோ மாயவரே
என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பார் எம்பெருமாள்
---------
உரை
---------
இவ்வாறு எல்லாவிதமான விதிமுறைகளையும் செய்யக் கூறி விட்டுக் கர்ணனுக்கு மோட்சம் கொடுக்க வேண்டுமென்று வேத நாயகனாகிய கிருஷ்ணன், கர்ணனின் அருகே வந்தார். அப்போது வேதவியாசர் அங்கு வந்து, கருஞ்சிவப்பு நிறத்தையொத்த கிருஷ்ணனைப் பார்த்து, "பாவிகளுடன் கூடிப் போர் செய்த கர்ணனுடைய உயிருக்கு மோட்சபதவி அருளுவது ஏன்? தயவு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன், மாயவரே" என்று சந்தேகம் கேட்டார்.
---------------------
அய்யா உண்டு 




முறை செய்து கர்ணனுக்கு முத்தி மோட்சம் கொடுக்க
மறை தேர்ந்த மாயன் வந்தார் அவன் அருகே 
அப்போது வேதவியாசர் அவர் அங்குவந்து
செப்போடு ஒத்த திருமாலோடு ஏதுரைப்பார்
பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட
ஆவிக்கு மோட்சம் அருளுவதோ மாயவரே
என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பார் எம்பெருமாள்
---------
உரை
---------
இவ்வாறு எல்லாவிதமான விதிமுறைகளையும் செய்யக் கூறி விட்டுக் கர்ணனுக்கு மோட்சம் கொடுக்க வேண்டுமென்று வேத நாயகனாகிய கிருஷ்ணன், கர்ணனின் அருகே வந்தார். அப்போது வேதவியாசர் அங்கு வந்து, கருஞ்சிவப்பு நிறத்தையொத்த கிருஷ்ணனைப் பார்த்து, "பாவிகளுடன் கூடிப் போர் செய்த கர்ணனுடைய உயிருக்கு மோட்சபதவி அருளுவது ஏன்? தயவு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன், மாயவரே" என்று சந்தேகம் கேட்டார்.
---------------------
அய்யா உண்டு 



துரியோதனனுக்கு நடுத்தீர்ப்பு*****
முன்னே உனக்கு உற்ற பிறப்பு ஆறதிலும்
என்னை நினைப்பு எள்ளளவும் நம்பவில்லை 
ஏழாம் பிறப்பதிலும் என்னை நினையாது இருந்தால்
பாழாவாய் மேலும் பகை இல்லை என்றனக்கு
என்று திருமால் இயம்பித் துரியோதனனை
அன்று அவர் கொன்று ஐவரையும் தாம் வருத்திக்
கர்மச் சடங்கு கழிக்க விடைகொடுத்தார்
தர்மமுள்ள கர்ணனுக்குச் சாத்திரத்தில் உள்ளமுறை
எல்லாச் சடங்கும் இருவருக்கும் நூற்றுவர்க்கும்
உல்லாசமுள்ள தர்மர் ஓக்க முறை செய்தாராம்
---------
உரை
---------
(கிருஷ்ணர் துரியோதனனிடம்...)உனது முன் பிறப்பு ஆறிலும் என்னைப் பற்றிய மெய்யறிவு உண்டாகியும் உன் ஆணவத்தால் என்னைச் சிறிதளவுகூட நம்பவில்லை. இனி வரும் ஏழாவது பிறப்பிலும் என்னை ஒரு நினைவின்கண் நினையாது இருந்தால் நீ நரகக் குழிக்கே செல்லுவாய். அதன் பிறகு, எனக்குப் பகை இருக்காது" என்றார்.
இவ்வாறாகத் திருமால் கூறித் துரியோதனனைக் கொன்று விட்டு, பஞ்ச பாண்டவர்களை வரவழைத்துச் செய்ய வேண்டிய கர்மச் சடங்கு முறைகளைச் செய்யச் சொல்லி விடை கொடுத்தார். அதன்படி, அறச்செயல்கள் செய்து வந்த கர்ணன், தீய துரியோதனன் ஆகிய இருவருக்கும், கௌரவர்களுக்கும், சாத்திரத்திலுள்ள முறைப்படி சகலவிதமான இறுதிச் சடங்கு முறைகளை, மகிழ்வு பொருந்திய தருமரும் ஏனையோரும் சேர்ந்து செய்ய ஆரம்பித்தனர்.
---------------------
அய்யா உண்டு 


துரியோதனனுக்கு நடுத்தீர்ப்பு*****
தண்டு கொண்டே அடித்த தமிழ் வீமன் அல்லாது
இன்றும் உன்னால் ஏலாது இடையா போ என்றனனே 
அப்போது மாலும் அதிக கோபம் வெகுண்டு
துப்புரவுகள் கெட்ட தீயனுக்கு அங்கே எதுரைப்பார்
உன்னை இன்னும் இந்த உலகில் ஒரு பிறவி
சின்னப் பின்னமாகச் சிரசு ஒன்றாய்த்தான் படைத்து
அறிவு புத்தியோடும் ஆணுவங்கள் தம்மோடும்
செறியும் கலையோடும் சிறப்போடும் தான்படைத்து
என்பேரில் அன்பு இருக்க வெகுசாத்திரமும்
தன்போதம் அறியத்தான் படைப்பேன் கண்டாயே
---------
உரை
---------
உடனே, துரியோதனன் "தண்டாயுதம் கொண்டு அடித்த பீமன்தான் என்னைக் கொன்றது; இன்றுகூட உன்னால் என்னைக் கொல்ல முடியாது. இடையனே, தூரப் போ" என்று இகழ்வாகக் கூறினான். அத்தருணத்தில் கிருஷ்ணன் அதிகமான கோபம் கொண்டு, ஒழுக்கம் கெட்ட தீயவனான துரியோதனனிடம், "துரியோதனா, உன்னை இன்னும் இந்த உலகத்தில் சிறிய அளவுள்ள தலையை உடையவனாகவும் அறிவு புத்தி உள்ளவனாகவும், பலவித இன்பத்துக்குரிய பொருளோடும். அதிகமான பல கலைகளை அறிந்தவனாயும், இன்னும் பல சிறப்போடும், என்னை அறிந்து கொள்வதற்காகப் பல சாத்திரங்களும், அதன்மூலம் உன் மெய்யறிவை அறியும் வழிவகைகளையும் ஏற்படுத்தி நான் உன்னை இவ்வுலகில் படைப்பேன், அறிந்து கொள்வாயாக.
---------------------
அய்யா உண்டு
---------------------




துரியோதனனுக்கு நடுத்தீர்ப்பு*****
அப்போது மாயன் அரவக் கொடியோன் இடத்தில்
தப்பாமல் வார்த்தை ஒன்றுதான் கேட்கப் போயினாரே 
முன்னே பிறப்பில் முடி இலங்கை ஆண்டிருந்தாய்
தென்னன் இராவணனாய்ச் சிரசு பத்தாய் நீ இருந்தாய்
அப்போது நீதான் அநியாயம் செய்ததனால்
செப்போடு ஒத்த ஸ்ரீராமனாய் நான் தோன்றிப்
பத்துச் சிரசு அறுத்துப் பார் மீதிலே கிடத்தி
உற்று ஒருவசனம் உரைத்தேன் நான் உன்னிடத்தில்
தம்பியால் என்னைச் சரம் அறுத்தாய் அல்லாது
எம் பிராணன் வதைக்க ஏலாது என்றனையே
தம்பி ஒரு நூறோடே தான் படைத்து உன்னையுந்தான்
கொம்பில் ஓர்ஆளை விட்டுக் கொன்றேனே உன்னையுந்தான்
என்றுரைக்கப் பாவி இகழ்த்துவான் அப்போது
---------
உரை
---------
அப்பொழுது கிருஷ்ணன், பாம்புக் கொடியையுடைய துரியோதனன் முன் பிறவியில் சொன்ன பிழையான சில மொழிகளை மறந்து விடாமல் அவன் அருகில் சென்று "துரியோதனா, நீ முன் பிறப்பில் பத்துத் தலைகளுடைய இராவணனாய், அரசனாக முடிதரித்துத் தெற்கே காணும் இலங்கையை அரசாண்டு கொண்டிருந்தாய், அச்சமயம் நீ பல அநியாயங்களைச் செய்த காரணத்தால் கருஞ்சிவப்பு நிறத்தையுடைய ஸ்ரீ இராமனாய் நான் தோன்றினேன். உன் பத்துத் தலைகளை அறுத்து உன்னைப் பூமியின் மேல் கிடத்தி உன்னிடம் 'உன் ஆணவத்தால் நான் உன்னைக் கொன்றேன்' என்று சொன்னேன். அதற்கு நீ உன்னுடைய தம்பியின் உதவியால் உன் மூச்சை நிற்கச் செய்தேன் என்றும், இல்லாவிட்டால் என்னால் உன்னைக் கொல்ல முடியாது என்றும் கூறினாய். எனவே இப்போது நூறு சகோதரர்களில் உன்னையும் ஒருவனாகப் படைத்துத் தண்டாயுதம் வைத்திருந்த பீமன் என்னும் ஓர் ஆளைவிட்டு உன்னைக் கொன்று விட்டேன்" என்றார்.
---------------------



வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
திலதமுள்ள மாயன் செயவீமனை நோக்கி
வலது தொடைதனிலே மாயன் கண்காட்டிடவே 
அடித்தானே வீமன் அதுதான் குறி எனவே
துடித்தான் கடாபோல் துரியோதனன் விழுந்து
மூடற்ற மாமரம்போல் முறிந்து கீழ்தான் விழுந்து
கூடற்ற உயிர்போல் குலைந்து கீழ் வீழ்ந்தனனே
---------
உரை
---------
நெற்றித் திலகம் அணிந்த கிருஷ்ணர் வெற்றி சூடும் வீமனை நோக்கித் துரியோதனன் வலது தொடையில் அவன் உயிர்நிலையுள்ளது என்பதைப் புரியும்படி கண்களால் சைகை காட்டினார்.
உடனே, வீமன் தனது தண்டாயுதத்தால் பலமாகத் துரியோதனன் வலது தொடையைக் குறி பார்த்து அடித்தான். அடிபட்ட துரியோதனன் வெட்டுப்பட்ட கடாபோன்று துடித்து, மூடற்ற மாமரம் முறிந்து கீழே விழுவதுபோலும், உயிரற்ற உடம்புபோலும் நிலை குலைந்து கீழே விழுந்தான்.
---------------------
அய்யா உண்டு
---------------------




வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
கள்ளன் கௌசலமாய்க் கபடு உரைத்த ஞாயம் எல்லாம்
எள்ளளவு போலே இசையாத வீமனுக்கு 
மெய் உரைத்தான் என்று மேலான போர்வீமன்
கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே
அடிக்கவே வீமன் அலங்காமல் மற்றோனும்
திடுக்கமுடனே சென்று அவன் வீமன்பேரில்
மாறி அவன் அடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன்
தேறியே மாயவரைச் சிந்தைதனிலே நினைக்க
---------
உரை
---------
கள்ளனான துரியோதனன் சூழ்ச்சியுடன் பொய்யாகக் கூறிய சத்திய மொழி முழுவதிலும் எள்ளளவுகூட உண்மையை வீமனுக்குக் கூறவில்லை என்பதை அறியாத வீமன் துரியோதனன் உண்மைதான் உரைத்தானென்று எண்ணி அவன் இடது புறத்தில் தனது தண்டாயுதத்தால் ஓங்கிப் பலமாக அடித்தான். அவ்வாறு வீமன் அடித்தும் துரியோதனன் சிறிதுகூட வேதனையினால் அசையவில்லை.
இவ்வாறு திடமுடன் இருந்த துரியோதனன் சென்று வீமன் உயிர் நிலைகளில் அடித்தான். இவ்வாறு அடித்தவுடன் வீமன் கலக்கமுற்றுச் சோர்வுற்றான். பிறகு ஒருவாறு தேறி, கிருஷ்ணனை மனதில் நிறுத்தித் தியானித்தான்.
---------------------
அய்யா உண்டு 


வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
வாயால் சபதமிட்டு வகுத்தே பொருவோம் என்று
கட்டான கள்ளன் கசடன் வெகுகெடும்பன் 
துட்டாளன் ஆன துரியோதனன் உரைப்பான்
இத்தனை நேரம் இருபேரும் சண்டை இட்டு
புத்தி இல்லாவண்ணம் பொருதோமே வம்பதிலே
உன்பலமும் உன்னுடைய உயிர்நிலையும் நீ உரைத்தால்
என்பலமும் உன்னோடே இயம்புகிறேன் என்றுரைத்தான்
அப்போது வீமன் அவன் நிலைகள் அத்தனையும்
தப்பாமலே உரைத்தான் சகலோர் அறிந்திடவே
கேட்டுத் துரியோதனனும் கேளு நீ என்பலங்கள்
தீட்டுகிறேன் என இடது செய்ய புறம் என்றுரைத்தான்
---------
உரை
---------
எனவே, மிகவும் கள்ளத்தனமுள்ள கசடனும், மிகுந்த கெடும்பனும் துஷ்டனுமான துரியோதனன், "நாம் இருவரும் இவ்வளவு நேரமாகச் சண்டையிட்டு வம்பாகப் புத்தி இல்லாமல் போர் புரிந்தோம். இனி நாம் இருவரும் வாயால் பேசி ஒரு முடிவெடுத்துப் போர் புரிவோம். உன்னுடைய பலத்தையும், உயிர் நிலையையும் நீ கூறினால் என்னுடைய பலத்தையும், உயிர்நிலையையும், உனக்கு நான் வெளிப்படுத்துவேன்" என்று கூறினான்.
உடனே, வீமன் அதைச் சம்மதித்து எல்லாரும் அறியும்படி தன் உயிர்நிலை சக்திகளைத் தவறாமல் எடுத்துரைத்தான்.
இதைக் கேட்டுத் துரியோதனன் "வீமனே, நான் சொல்வதை நீ கவனமாகக் கேள். என்னுடைய உயிர்ப்பலங்கள் அத்தனையும் என் உடம்பின் இடது புறத்திலேதான் உள்ளது" என்று கூறினான்.
---------------------
அய்யா உண்டு
---------------------



வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
துரியோதனன் அடிக்கத் துடி வீமன் சாயாமல்
மரியாதை வீமன் மாறி அவன் அடிக்க 
அடிக்க அவன் பிடிப்பான் அப்படியே சண்டை இட்டு
சாயா விதத்தைத்தான் அறிந்து இருபேரும்
---------
உரை
---------
துரியோதனன் அடிக்கும்போது அதைத் துடிப்பு மிக்க வீமன் தளர்வுறாது தடுத்தும், மரியாதையான வீமன் அதற்குப் பிரதிபலனாக அடிக்கும்போது அந்த அடியைத் துரியோதனன் பிடித்துத் தப்பித்தும் யுத்தம் செய்தனர். இப்படியே இருவரும் ஒருவருக்கு ஒருவர் தோல்வி அடையாத நிலையை உணர்ந்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------



*வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
துரியோதனன் அடிக்கத் துடி வீமன் சாயாமல்
மரியாதை வீமன் மாறி அவன் அடிக்க 
அடிக்க அவன் பிடிப்பான் அப்படியே சண்டை இட்டு
சாயா விதத்தைத்தான் அறிந்து இருபேரும்
---------
உரை
---------
துரியோதனன் அடிக்கும்போது அதைத் துடிப்பு மிக்க வீமன் தளர்வுறாது தடுத்தும், மரியாதையான வீமன் அதற்குப் பிரதிபலனாக அடிக்கும்போது அந்த அடியைத் துரியோதனன் பிடித்துத் தப்பித்தும் யுத்தம் செய்தனர். இப்படியே இருவரும் ஒருவருக்கு ஒருவர் தோல்வி அடையாத நிலையை உணர்ந்தனர்.
---------------------
அய்யா உண்டு 


*வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
வேதா சிவமும் வெம்மருண்டு தாம்பதற
நாதாந்தம் ஓதும் நன்மறையோர் தாம் பதற 
துரியோதனன் போரும் செய வீமன்தான் போரும்
எரியோடு எரிதான் எதிர்த்துப் பொருதாற் போல்
ஒண்ணுக்குள் ஒண்ணு ஒல்கிப் புறம் சாயாமல்
மண்ணும் விண்ணும் அதிர மண்டி யுத்தம் இட்டார்
---------
உரை
---------
திருமாலும் சிவமும் இந்த அதிர்ச்சி ஏன்? என்று பயந்து பதறினார்கள் நாதாந்த வேதத்தை ஓதுகின்ற பிரம்மாவும் பதறினார். துரியோதனனின் போரும், முழு வீரமுள்ள வீமன் போரும் தீப்பந்தத்தோடு தீப்பந்தம் எதிர்த்து மோதியதைப் போன்று இருந்தது.
ஒருவருக்கு ஒருவர் தளர்வுற்றுத் தோல்வியுறாமல் பூலோகமும் வானலோகமும் அதிரும் அளவில் மண்டியிட்டு யுத்தம் செய்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------


*வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
மண் விண் அதிரும் வானமதுதான் அதிரும்
திண் திண் எனப் பூமி தொம் தோம் என அதிரும் 
மலைகள் அசைந்து மடமட என ஓசையிட
கலைகள் கரிகள் கதறி மிகஓட
அலைகள் சுவறி அங்கும் இங்கும் ஓடிடவே
இலைகள் உதிர்ந்து இடிந்து விழும் மாமரங்கள்
தூள் எழும்பிச் சூரியனைத் தோன்றாமலே மறைக்க
வேழ் எழும்பிக் காட்டில் விழுந்து அலறி ஓடிடவே
தவமுனிவர் நிஷ்டைதான் நெகிழ்ந்து தட்டழிந்து
திசை மாறித் திக்கில் திரிந்து அலைந்து போயினரே
---------
உரை
---------
வானலோகமும், பூலோகமும் அதிர, வானம்கூட அதிர்ந்தது. பூமி 'திண்திண்' எனவும், 'தெய்' 'தோம்' எனவும் அதிர்ந்தது. மலைகள் அசைந்து 'மடமட' என ஓசை இட்டன. இந்த அதிர்ச்சியால் கலைமான்களும் யானைகளும் கதறிக் கொண்டு விரைவாக ஓடின. கடல் அலைகள் சிதறி ஓடின. அங்குள்ள பெரிய பெரிய மரங்களின் இலைகள் உதிர்ந்து முறிந்து விழுந்தன. போர்க் களத்திலிருந்து தூள் கிளம்பிச் சூரியனைத் தோன்றாமல் மறைத்தது. யானைகள் எழும்பிக் காட்டில் அலறி விழுந்து எழுந்து ஓடின. தவத்தில் இருந்த முனிவர்கள் தவம் திடீரென நழுவி அழிந்த காரணத்தால் தாம் இருந்த இடத்தின் திசை தெரியாமல் கலங்கி அலைந்து திரிந்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------


துரியோதனனும் வீமனும் போருக்குப் புறப்படுதல்*****
விசையன் பரிநகுலன் வெற்றிச் சகாதேவனையும்
இசையொத்த தர்மரையும் இன்று அகல நில்லும் என்று 
வீமனையும் கூட்டி வெளியில் அரி வந்திடவே
காமக் கனல் மீறிக் கரியோன் எழுந்தது போல்
வந்தானே பாவி வணங்கா முடியோனும்
சந்தானமான தமிழ் வீமன்தான் அறிந்து
எதிர்த்தார் இருவர் எனக்கு எனக்கு என்றேதான்
செருத்தான வலிமை செய்வது கேள் அம்மானை
---------
உரை
---------
அருச்சுனன், சிறப்பையுடைய நகுலன், வெற்றியையுடைய சகாதேவன், இசையொத்த தருமர் ஆகியோரைப் பார்த்து, "இன்று நீங்கள் போருக்கு வராமல் தள்ளி நில்லுங்கள்" என்று கூறினார். பிறகு, கிருஷ்ணன் வீமனைக் கூட்டிக் கொண்டு வெளியே வரவும், காமவெறி பிடித்த யானை எழுந்து வந்தது போல, துரியோதனன் என்னும் பாவியாகிய வணங்கா முடியோனும் போர்க்களத்துக்கு வந்தான். நல்ல மகனான வீமனும், துரியோதனனும் ஒருவரை ஒருவர் "எனக்குதான் வெற்றி, எனக்குதான் வெற்றி" என்று கூறிப் போரிட்ட வீரத் தன்மை பற்றி இனிக் கூறுகிறேன் கேள்.
---------------------
அய்யா உண்டு 


*துரியோதனனும் வீமனும் போருக்குப் புறப்படுதல்*****
வாறான் படைக்கெனவே வாள்வீமனை அழைத்து
உன்றனக்கு நல்ல உறுவேட்டை இன்று அடவா 
என்றனக்கு இன்றுமுதல் இளைப்பாறலாம் அடவா
வண்ணமகள் தனக்கு மயிர் முடித்தல் இன்று அடவா
எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவும் இன்று அடவா
என்று அந்த வீமனுக்கு இசைந்த போர்க் கோலம் இட்டு
வண்டு சுற்றும் மார்பனுக்கு வரிசை மிகக்கொடுத்து
வீமனுட தண்டத்துக்கு விசைமால் விசை கொடுத்து
போம் எனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து
---------
உரை
---------
பிறகு ஒளி படைத்த வீமனை அழைத்து, "வீமனே, உனக்கு இன்று நல்ல பெரிய வேட்டையாகும். இன்றுமுதல் எனக்கு வேலை முடிந்து இளைப்பாறலாம். அழகு மகளான திரௌபதி இரத்தம் விட்டுத் தனது கூந்தலை முடிப்பது இன்றுதான். எல்லாவிதமான துன்ப எண்ணங்களுமற்றுத் தருமர் தெளிவாக இருப்பது இன்றுதான். எனவே, அடே வீமா, "நீ வருவாயாக" என்று வீமனுக்குப் பிடித்தமான போர்க்கோலம் இட்டு, வண்டுகள் சுற்றும் மணம் பொருந்திய மார்பையுடைய வீமனுக்குப் பல பட்டப்பெயர்கள் சூட்டி, வீமனுடைய தண்டாயுதத்துக்கு விசைசக்தி கொடுத்து, விசைமாலாகிய கிருஷ்ணர் வீமனைப் போருக்குப் போக விடை கொடுத்தார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
கேட்டு ஸ்ரீகிருஷ்ணரும் கிளி மொழியோடு ஏதுரைப்பார்
ஓட்டில் இரந்துண்ண ஊர் வழியேதான் திரியும் 
ஆண்டிக்கே அல்லாது அரவணையிலே துயிலும்
காண்டீபனுக்கு ஏவல் கருதோம் என உரைத்தீர்
தோகையரே கங்கை இனித் திரட்டுவதைப் பார்ப்போம்
---------
உரை
---------
இதைக் கேட்டுக் திருமால், "கிளி போன்று அழகாகப் பேசும் கன்னிகளே ஓட்டில் இரந்து உண்பதற்காக ஊர் ஊராகச் சுற்றித் திரியும் அந்த ஆண்டிக்கே அல்லாது பாம்பு மெத்தையில் துயின்று கொண்டிருக்கும் திருமாலுக்கும் ஊழியங்கள் செய்வதற்கு எண்ண மாட்டோம் என்று கூறினீர்கள். மயில் தோகை போன்ற கூந்தலுடையவரே, இனி நீங்கள் கங்கை நீரை எப்படித் திரட்டி எடுப்பீர் பார்ப்போம்" என்று கோபத்துடன் கூறி வழிவிட்டார்.
அக்கன்னிகள் தமது வழியில் சென்று கங்கையில் நீராடினர்.
---------------------
அய்யா உண்டு 



அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
அப்போது கன்னி எல்லோரும் ஏதுரைப்பார்
எப்போதும் தாமாய் இருப்பவர்க்கே அல்லாது 
மாயவர்க்கும் மற்றுமுள்ள மகேசுரர் தமக்கும்
வாயமுள்ள வானவர்கோன் மறைமுனிவர் தமக்கும்
எருது ஏறி நித்தம் இறவாது இருக்கின்ற
ஒருவருக்கே அல்லால் ஊழியங்கள் வேறிலையே
---------
உரை
---------
உடனே, கன்னிகள் "எப்போதும் தமக்கு நிகர் தாமேயாகி இருப்பவரும், காளை வாகனம் ஏறி என்றும் இறவாநிலை பெற்றவராகி இருப்பவரும் ஆகிய அவருக்கே நாங்கள் இக்கிரியைகளைச் செய்து வருவோமே அல்லாது, மாயவர்க்கோ, மற்றுமுள்ள மகேசுரருக்கோ, நல்ல உயர்வான வழிகளைக் கடைபிடிக்கும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கோ, பிரம்மாவுக்கோ, நாங்கள் இந்தக் கிரியை வேலைகளைச் செய்ய மாட்டோம்" என்றனர்.
---------------------
அய்யா உண்டு 



அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
ஏல் அறிந்து கன்னி இவரல்லர் ஈசர் என்று
சாய்ந்து விலகித் தையல் நல்லார் போகையில் 
ஆய்ந்து தெளிந்து அச்சுதரும் முன் ஏகிப்
பலநாளும் ஈசருக்குப் பாவையரே நீங்களுந்தாம்
சலம் திரட்டி மேன்முடியில் செய்தீர் அனுஷ்டானம்
இனி எனக்கு நீங்கள் எல்லோரும் மிக்கவந்து
கனிநீர்தனை எந்தலையில் கவிழும் என்றார் எம்பெருமாள்
---------
உரை
---------
(சப்தகன்னிகள்) ஈசருக்கும், சன்னியாசிக்கும் உள்ள ஒப்புமையை ஆராய்ந்து அறிந்து, "இவர் ஈசர் அல்லர்" என்று முடிவு செய்து, அவரை விட்டு விலகி ஒதுங்கிச் சென்றனர். இவ்வாறு கன்னியர் ஒதுங்கிச் செல்லும்போது, அவர்களின் போக்கை ஆராய்ந்து தெளிந்து ஒரு முடிவுடன் அச்சுதராகிய திருமால் அவர்கள் முன்பு சென்று வழிமறைத்து, "கன்னிகளே, இதுவரை நீங்கள் ஈசருக்குப் பல நாள்கள், கங்கை நீரைத் திரட்டி மேன்மையான அவர் முடியில் இட்டு வழிபாடு முதலிய திருச்செயல்கள் செய்து வந்தீர்கள். இனி நீங்கள் எல்லாரும் சேர்ந்து அந்தக் கனி போன்ற இனிய நீரை எமது தலையில் இட்டு வழிபடுங்கள்" என்றார்.
---------------------
அய்யா உண்டு 



அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
அவ்வனத்தில் உள்ள அமிழ்தகங்கை ஆனதிலே
குளித்து விளையாடிக் கூவந்தனில் இறங்கிக் 
களித்து மகிழ்ந்து கையில் கங்கைதான் திரட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரம் குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கும் மடவார்
மரகதம் வல்லி வள்ளி சலிகை இன்னும்
சரகதகன்னி சரிதை அரிமடவையும்
ஏழு மடவாரும் என்றென்றும் இப்படியே
நாளும் முறையாய் நடத்திவரும் நாளையிலே
மால் அறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசி என
---------
உரை
---------
அந்த அயோக அமிழ்த வனத்தில் அமைந்திருக்கும் அயோக அமிழ்த கங்கையில், கயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த வாசம் பொருந்திய கன்னியர் குளித்து விளையாடி, கங்கைச் சுனையில் இறங்கி மகிழ்ச்சியுடன் கங்கை நீரைத் திரட்டி எடுத்துச் சென்று ஈசரின் முடிமேல் இட்டுக் கரங்குவித்து வழிபடுவர், தினந்தோறும் இப்படியே மரகதம், வல்லி, வள்ளி, சலிகை, சரகதகன்னி, சரிதை, அரிமடவை ஆகிய ஏழுபேரும் முறையாக வழிபாடு நடத்தி வருகின்ற சமயத்தில் வைகுண்டம் செல்லும் வழியில் அரிகோண மலைக்கு வந்த திருமால் இவர்களைப் பற்றி அறிந்து, ஒரு சிவசன்னியாசி போல வேடமெடுத்து, நீராடச் செல்லும் அக்கன்னிகள் முன்னால் தோன்றினார்.
---------------------
அய்யா உண்டு 





*அரிகோண மலை வளமை*****
வைகுண்டம் காண வந்த தர்மி எல்லோரும்
மெய்குண்டம் கண்டோம் என இருப்பார் அவ்வனத்தில் 
அப்படியே நல்ல அயோக அமிழ்தவனம்
இப்படியே நன்றாய் இயல்பாய் இருப்பதுதான்
புட்டாபுரம் கிழக்கும் பூங்காவு நேர்மேற்கும்
வட்டமுள்ள ஸ்ரீரங்கம் வடக்கு வனம் நேர்கிழக்கு
தெற்கே திரிகோணம் செங்காவு நேர்வடக்கு
மிக்கவகை மேற்கு மிகுந்த வனம் நேர்கிழக்கு
இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமிழ்தவனம்
---------
உரை
---------
வைகுண்டத்தைக் காணச்செல்லும் தருமிகள் இவ்வனத்தைக் கண்டு, "மெய்குண்டமாகிய வைகுண்டத்தைக் கண்டு விட்டோம்" என அங்கே அமர்ந்துவிடுவர். இச்சிறப்புடையதான இந்த நல்ல அயோக அமிழ்தவனம் நல்ல இயற்கை வளமுடையது.
அயோக அமிழ்தவனமாகிய பூங்காவிற்குக் கிழக்கே புட்டாபுரமும், அந்த வனத்திற்கு வடக்கே வட்டமுள்ள ஸ்ரீரங்கமும், அமிர்தவனமாகிய செங்காவிற்குத் தெற்கே திரிகோணமும், இயற்கை வளம் மிகுந்த அவ்வனத்திற்கு மேற்கே பல வகையான சோலை வளங்கொண்ட இடமும் அயோக அமிழ்த வனத்தின் எல்கைகளாம்.
---------------------
அய்யா உண்டு
---------------------



அரிகோண மலை வளமை*****
சோலையிலே வீற்றிருக்கும் சீர் பறவையின் பெருமை
தூலம் இன்னது என்று சொல்லத் தொலையாது 
பார்வதியும் ஈசுவரனும் பாவித்து இருப்பதுபோல்
தேர்ப்பதியும் மேடைகளும் சிங்காசனம் காணும்
அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல்
நிலையில் முனிவோர் நிற்பது எண்ணக் கூடாது
கயிலை இது என்று கண்ணான மாமுனிவர்
ஒயிலாகக் கூடி உகந்திருப்பது அவ்வனத்தில்
---------
உரை
---------
அச்சோலையில் அமர்ந்திருக்கும் பறவைகளின் உடல் அழகினை இத்தகையது என்று கூறுவது இயலாது. அங்கே, பார்வதியும் ஈசுரனும் அமர்ந்து இருப்பதைப்போன்ற சிறந்த தேர்ப்பதியும், ஆசன மேடைகளும், சிங்காசனங்களும் காட்சியளிக்கும். அங்கே, அலையிலே பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் நிலைபோன்று அறிதுயிலில் இருக்கின்ற முனிவர்களின் எண்ணிக்கை எண்ணித் தாங்காது. 'இதுதான் கயிலை' என்று சிறப்பு வாய்ந்த முனிவர்கள் ஒய்யாரமாகக் கூடி மகிழ்ச்சியுடன் அவ்வனத்தில் இருப்பர்.
---------------------
அய்யா உண்டு 




அரிகோண மலை வளமை*****
அரிகோண மாமலையில் அயோக அமிழ்தகங்கை
பரிகோண மாமலையை பகுத்து உரைக்கக் கூடாது 
தேன்கமுகும் மாங்கமுகும் தென்னங் கமுகுகளும்
வான்கமுகும் வாழை வழுவிலா நற்கமுகும்
சோலைமரமும் சுக சோபனவனமும்
ஆலமரமும் அகில் தேக்கு மாமரமும்
புன்னைமரமும் புஷ்ப மலர்க்காவும்
தென்னை மரமும் செஞ்சந்தன மரமும்
மாவுமரமும் வாய்த்த பலாமரமும்
தாவும் மரத்தின் தன்மை சொல்லக் கூடாது
---------
உரை
---------
அதிசயமான வளைவுடன் கூடிய அரிகோண மலையில் இருக்கும் அயோக அமிழ்த கங்கையின் வளமையைப் பற்றி எடுத்துரைத்தல் முடியாது. தேன்கமுகும், மாங்கமுகும், தென்னங்கமுகும், வான்கமுகும், வாழைகளும், வழுவில்லா நற்கமுகும், சோலை மரமும், சுகசோபன மரமும், ஆழ மரமும், பெரிய அகில் தேக்கு மரங்களும், புன்னைமரமும், மலர்ச் சோலைகளும், தென்னை மரமும், செஞ்சந்தன மரமும், மாமரமும், சிறந்த பலா மரமும், இவ்வாறு எங்கும் பரந்து கிடக்கும் மரங்களின் உயர்வு பற்றி விரிவாகச் சொல்வது இயலாது.
---------------------
அய்யா உண்டு
---------------------




திருமால் ஸ்ரீரங்கம் புறப்படுதல்*****
வைகுண்டம் ஏக மனதிலுற்று எம்பெருமாள்
பொய் கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பு ஏறி 
ஆங்கார மோகத்து அம்புக் கணையாலே
ஓங்கார மாமுனிவன் உறுதி பெற்றுத் தான் மெலிந்து
பஞ்சவர்க்குள்ள பாரப் பெலங்களையும்
துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கும்
மேல் நடப்புள்ள விசளம் எல்லாம்தான் உரைத்து
நூல் நடந்து வாரும் என்று மோட்சத் திறவோனும்
சீரங்க மாபதியில் செல்லுகின்ற அப்போது
சாரங்கர் செய்த தன்மை கேள் அம்மானை
---------
உரை
---------
இவ்வாறு பஞ்சபாண்டவர்கள் நல்ல முறையில் நாட்டினை ஆண்டு வருகின்றபொழுது, எம்பெருமானாகிய கிருஷ்ணன் வைகுண்டம் அடைய மனதில் எண்ணிப் பொய்யான கிருஷ்ண அவதார உடம்போடு பர்வதாமலை மேல் ஏறி, அங்குச் சரண் என்னும் வேடனின் அம்புக் கணையால் எய்யப் பெற்றுப் பொய் உடம்பைத் துறக்க உறுதி பூண்டார்.
எனவே, கண்ணன் தாம் மெலிந்தவராகத் தோற்றமளித்து, தமக்கு உதவ வந்த பஞ்சவர்களின் மேன்மையான பலத்தை அழியும்படி பறித்து, அவர்களுக்கு இனி வரப்போகின்ற கலியுகத்தின் துன்பங்களை எல்லாம் எடுத்துரைத்து, "நீங்கள் சூட்சம உடம்போடு வைகுண்டத்திற்கு நூல் பாலம் வழியாக வந்து சேருங்கள்" என்று நல்லோருக்கு மோட்சபதவி அருளும் சக்தி படைத்த கண்ணன் கூறிவிட்டு, தம் கிருஷ்ண அவதார உடலைப் பர்வதா மலையில் கிடத்தி விட்டு, ஸ்ரீரங்கம் புறப்பட்டு, வழியில் அரிகோண மலைக்குச் சென்றபொழுது, திருமால் செய்த திருவிளையாடலை இலட்சுமிதேவியே கேட்பாயாக.
---------------------
அய்யா உண்டு 



கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
எல்லை வைத்த பாரதப்போர் இன்று முடிந்தது என்று
கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு 
வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி
ஐபேரும் பத்தினியும் அச்சுதரையும் போற்றி
மெய் போகமான வியாசரையும் குவித்து
ஆண்டார்கள் சீமை அச்சுதனார் உண்டெனவே
பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே
---------
உரை
---------
"பாகப் பிரிவினைக்கான பாரதப்போர் இன்று முடிவுற்றது" என்று பஞ்சவர்கள் மகிழ்வுற்றுக் கிருஷ்ணனை வணங்கினர். வண்டுகள் சுற்றும் கூந்தலையுடைய அழகு நிறமான திரௌபதி சபதம் முடித்து நீராடித் தன் கூந்தலை முடிந்து கொண்டாள். பஞ்சவர்களும் திரௌபதியும் ஸ்ரீகிருஷ்ணனைத் துதித்து, உண்மைப் பொருளில் எப்போதும் விருப்பம் வைத்திருப்பவரான வியாசரையும் கரங்குவித்து வணங்கி, ஸ்ரீகிருஷ்ணன் எப்போதும் துணை இருப்பார் என்னும் திடமான எண்ணத்துடன் அரசாண்டார்.
---------------------
அய்யா உண்டு 



கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
என்று அவனை அழித்து இப்பிறவி ஐவருடன்
முந்தி உதித்து முதல்பிறவி செய்து அவனை 
அரவக் கொடியோன் இடத்தில் அனுப்பி வைத்து
இரவலர்க்கும் ஈந்து என்புத்தி உள்ளிருத்தி
அன்னையுட சொல்லை அசராமல் ஐபேர்க்கும் விசையன்
தன்னே ஒரு கணைமேல் விடேன் என்ற உத்தமன்காண்
ஆனதால் முன்னே அருளி வைத்த சொற்படிக்கு
மானமாய் மோட்சம் வகுத்தேன் இவனுக்கு என்றார்
நல்லதுதான் என்று நன்முனிவன் தான் மகிழ்ந்தான்
---------
உரை
---------
இப்போது இந்த யுகத்தின் பிறவியில் பஞ்சவருடன் வாலியை, மூத்த பிள்ளை கர்ணனாகப் பிறக்கச் செய்து, அவனைத் துரியோதனனின் அரண்மனைக்கு அனுப்பி வைத்தேன். இரப்பார்க்குக் கேட்டவை கொடுக்கும் கர்ணனிடம், அவனது தாய் குந்திதேவி, நான் சொன்ன அறிவுரையை மனதில் கொண்டு, 'ஐவருக்கும் அன்பான விஜயன்மேல் நாகப்பாணத்தை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த மாட்டேன்' என்று கேட்ட வாக்குறுதிக்குச் சிறிதளவும் பிழைவராமல் காத்த உத்தமன் கர்ணன். எனவே, முன்பு அருளிய வாக்குப்படி உயர்வான மோட்சபதவி இவனுக்கு அளித்தேன்" என்றார்.
உடனே, அந்த நல்ல வியாசமுனி, "மிகவும் நல்ல காரியம்தான்" என்று கூறி, மகிழ்வுற்றான்.
---------------------
அய்யா உண்டு 




*கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
அன்று வாலி தனக்கு அருளினதை நீ கேளு
எனக்கு ஏவலாக இப்பிறவி நீ பிறந்து 
தனக்கேராப் பாவிதனைச் சங்காரம் செய்ததனால்
இனிமேல் அவனோடு இருந்து என்சொல் கேட்க வைத்து
கனியான மோட்ச கயிலாசமே தருவேன்
என்று அவனை அழித்து இப்பிறவி ஐவருடன்
---------
உரை
---------
அப்பொழுது நான் வாலிக்கு அருளியதை வியாசனே, நீ கேள் "வாலியே, இப்பிறவியில் நீ பிறந்து எனக்கு ஏவலனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாய். என் புத்திமதிகளைக் கேட்காத பாவியாகிய இராவணனை நானே கொன்றதால் இனிவரும் (துரியோதனன்) பிறவியில் நீ அவனுடன் இருந்து என் சொற்களைக் கேட்கும் நல்ல மனத்துடன் இருந்தால் இனிமை பொருந்திய மோட்சமாகிய கயிலை பதவி உனக்குத் தருவேன்" என்று கூறி அவனை மடியச் செய்தேன்.
---------------------
அய்யா உண்டு 




கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
சிராமனாய் நான் இருந்து செயித்த விதம் அறிந்து
வந்து பணிந்தானே வாலி அவன் என்காலில் 
நன்றியுள்ள மாலே நானுனக்கு ஏவலனாய்
முன்னே நீர் அமிழ்தம் உவரிதனில் கடைய
என்னை ஒருபுறமாய் ஏவல் கொண்ட மாயவரே
பத்துத் தலையுள்ள பாவி அந்த ராவணனைக்
கொத்திச் சிரசு அறுத்துக் கொல்லேனோ நானடியேன்
என்று அந்த வாலி இறைஞ்சித் தொழுதிடவே
---------
உரை
---------
இராம அவதாரமாக நான் அவதரித்து வெற்றி கொண்ட நிலை அறிந்து என் பாதங்களை அந்த வலிமை பொருந்தியவன்(வாலி) சரணடைந்து, 'நன்றியுள்ள திருமாலே, முன்பு நீர் கடலில் அமிழ்தம் கடையும்போது நான் உமக்குக் காவலனாய் இருந்தேன். என்னைத் தாங்கள் ஊழியங்கள் செய்ய ஏவினீர். அவ்வாறு ஏவல் செய்ய ஏவிய மாயவரே, இப்போதும் என்னை ஏவி இருந்தால் பத்துத் தலைகளையுடைய இராவணனின் தலைகளை அடியேனாகிய நான் அறுத்துக் கொல்லமாட்டேனா?' என்று அந்த வாலி பணிந்து தொழுது நின்றான்.
---------------------
அய்யா உண்டு 



*கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
நன்றுநன்று மாமுனியே நான் உரைக்கக் கேட்டருள்வாய்
தொண்டு பண்ணி நின்ற துய்ய வானரங்களிலே 
வல்ல பெலமுள்ள வாலி இவன் முற்பிறப்பில்
நல்லவனாய் முன்னே நாட்டில் இருக்கையிலே
இராவணனோடே கூடி இராமச் சரத்தால் இறந்தான்
---------
உரை
---------
உடனே, கிருஷ்ணன், "நல்லது, கேட்டீர், மாமுனியே, நானுரைப்பதைக் கவனமாகக் கேட்பீராக. இவன்(கர்ணன்) முன் யுகத்தில் நல்ல தொண்டு செய்து வந்த தூய்மையான வானரங்களில் அதிக பலம் வாய்ந்த வாலியாவான். இவன் முன் பிறப்பில் நல்லவனாய்த் தன் நாட்டில் வாழ்ந்தான். அப்போது, இராவணனோடு சேர்ந்து தீமை செய்து (சுக்கிரீவன் மனைவியை அபகரித்து) என் அம்பினால் இறந்தான்.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

கன்னியர் நீரைத் திரட்ட முடியாமல் அழுது புலம்பல்*****
துகிலை எடுத்துடுத்தித் திரட்டினார் கங்கைதனை
கையில் சலந்தான் கட்டித் திரளாமல் 
கலங்கி அழுது கண்ணீர் மிகச்சொரிந்து
மலங்கி அழுது மண்ணில் அவர் புரண்டு
அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே
மெய்யோடே குத்தி விழுந்து அழுதார் அம்மானை
---------
உரை
---------
ஏழுபேரும் தங்கள் ஆடைகளை எடுத்து உடுத்திவிட்டுக் கங்கை நீரைத் திரட்டினர். ஆனால், கங்கை நீரோ திரளவில்லை. ஆகவே அப்பெண்கள் மனம் கலங்கி அழுது அதிகமான கண்ணீர் வடித்து, மயங்கி விழுந்து, மீண்டும் எழுந்து, மண்ணின் மேல் புரண்டுபுரண்டு அழுதனர். "அய்யோ, மெய்ப் பொருளை அறியாமல் மனதைச் சிற்றின்ப நாட்டத்தில் விட்டுவிட்டோமே" என்று உடம்பில் இரு கைகளாலும் குத்திப் பூமியில் விழுந்து அழுதனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------



கன்னிகள் கற்பழிந்து சான்றோர் பிறப்பு*****
உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளைத்
தடம் மேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார் 
வெருவிப் பயந்து விழி மடவார் எல்லோரும்
கருவி தொண்ணூற்று ஆறும் கலங்கியே தாமோடித்
---------
உரை
---------
கன்னித் தன்மை இழந்த பெண்கள் ஏழுபேரும் கருத்தரித்து உருவான குழந்தைகளைப் பூமியின் மேல் பெற்றனர். பிறகு மனம் சலனமுற்று, பயந்து ஒடுங்கி, அழகான விழிகளையுடைய அப்பெண்கள் உடம்பில் தொண்ணூற்றாறு தத்துவக் கருவிகளும் கலக்கமுற்றுத் தமது ஆடைகளை நோக்கி ஓடினர்.
---------------------
அய்யா உண்டு
---------------------




கன்னிகள் கற்பழிந்து சான்றோர் பிறப்பு*****
கன்னி ஏழுபேரும் கனலை மிகஆவ
உன்னித் திருமால் ஓங்கார மோகமதாய் 
மங்கை ஏழுபேருக்கும் வயிற்றிலுற்றது அம்மானை
சங்குவண்ண மாலோன் சச்சுருவம் கொண்டாரே
---------
உரை
---------
குளிரினால் துன்புற்ற அக்கன்னியர் அந்த அக்கினி உருவை அனைத்துக் கொண்டனர். உடனே, திருமால் அகரம் உகரம் இணைந்த ஓங்கார நிலை போல் மோகம் கொண்டவராய் அவர்களை உன்னித் தழுவிக் கருவுறும்படி செய்தார். தாம் நினைத்தது முடிந்து விடவே, அவர் அக்கினித் தன்மை மாறி சங்குவண்ணம் போன்ற உண்மையான வெள்ளை மனமான திருமாலாக அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
---------------------
அய்யா உண்டு 



அரி ஓம் எனவே ஆடிக் கரை ஏறித்
தரி தோம் எனவே சலக்கரையை விட்டு அவரும் 
உயர வரவே உள்ளுதறத் துள்ளல் கண்டு
அயரக் கரம்கால் அங்கம் எல்லாம் தொங்கலிட
கிடுகிடு எனத் தேகம் கிளிமொழி வாய் கொட்டிடவே
திடுதிடு என அக்கினியைத் திரைபோல் வளையலுற்றார்
---------
உரை
---------
கன்னியர் 'அரி ஓம்' என்று கூறிக் கொண்டே நீராடி வீட்டுக் கங்கைக்கரை ஏறினர். தண்ணீர்க் கரையைவிட்டு அவர்கள் மேலேறி வரவர, "தரி, தோம்" என்று குளிரினால் உடம்பின் உள்ளும் புறமும் உதறித் துள்ளல் கண்டது. உள்ளம் சோர்வுற, கால்களும், கைகளும், உடம்பும், சோர்ந்து தொங்கலிட்டு 'கிடுகிடு' என ஆடி, கிளிபோல் பேசும் வாய் குளறிச் சத்தம் எழும்பியது.
அப்பொழுது, அக்கினி உருவாய் நின்ற திருமால் ஏழுபேரையும் திடுதிடு எனக் கடல் திரை போல் வளைத்தார்.
---------------------
அய்யா உண்டு 




பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றிக்
குரமாய் வருணன் குளிரத் தொளித்திடவே 
காமத் தணலாய்க் கருமேனி ஆனதிலே
வேமக் கனல்போல் விழி கொழுந்திட்டு எரிய
சாந்து அணியும் கொங்கை தையல் தெய்வக் கன்னியர்
கூந்தல் விரித்துக் கூபந்தனில் இறங்கி
---------
உரை
---------
பிரம்மாவின் மந்திர உபதேசப்படி சான்றோர் பிறப்புக்குரிய குழல் உருவாகியது. வருணன் கருமேனியனான திருமால்மேல் குளிர்ச்சி ஏற்படும்படி ஒலியுடன் நீரைத் தெளித்தார். திருமால் காமக்கனலாய்க் காட்சி அளித்தார்.
அதனால், வேமக்கருவிக் கனல்போல் அவர் விழிகளில் காமத்தீ கொழுந்து விட்டெரிந்து திருமால் இப்படித் தீத்தணலாய் இங்கு நிற்க, வாசனை பொருந்திய சந்தனச் சாந்தினை அணிந்த மார்பையுடைய தெய்வ மாமணிகளாகிய கன்னிகள் தங்கள் கூந்தலை அவிழுந்து விரித்துக் கங்கையினுள் இறங்கினார்.
---------------------
அய்யா உண்டு 





*அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
இப்படியே மேலோக ஏழு உகமதிலும்
அப்படியே நல்ல ஆக்கமுள்ள வித்தேழும் 
எடுத்துத் திருமால் இருதயத்திலே அடக்கி
கொடுத்து நின்ற தாதாவைக் குவித்துப் பதம் போற்றி
கன்னியுட கற்பதுக்குக் கருத்து ஏது செய்வோம் என்று
உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தாராம்
பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம் வேறு இல்லை என்று
தீத்தழலாய்ப் போகத் திருவுருவம் கொண்டாராம்
---------
உரை
---------
ஆக, மேலோகம் ஏழுலோகங்களிலும் உள்ள நல்ல சக்தியுள்ள வித்துக்கள் ஏழையும் எடுத்துத் திருமால் தமது எண்ணத்தில் அடக்கி, இவற்றை எல்லாம் கொடுத்த பரம்பொருளாகிய தந்தையைக் கைக்குவித்து வணங்கித் துதித்தார். பிறகு 'கன்னிகளின் கற்பை அழிக்க என்ன வழி செய்வோம்?' என்று எண்ணி மனம் ஒருமித்து ஆய்ந்தார். கடைசியில் 'அவர்கள் கற்பினைப் போக்கத் தீத்தழலாக அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை' என முடிவெடுத்தார்.
---------------------
அய்யா உண்டு 


அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
ஆகட்டும் என்று அச்சுதரும் கோபமுற்று
மேலோகமாய் இருக்கும் வேத ஏழு உகத்தில் 
சாலோகமான சத்தி பரலோகமத்தில்
ஆருரூபம் அல்லாத ஆகாசச்சத்தி ஒன்றும்
சீருரூபமான சிவலோகம் ஆனதிலே
மெய்கொண்ட வானோர் வித்து ஒன்று ஆனதுவும்
வைகுண்ட லோகமதில் வாய்த்த தர்மி ஆனதிலே
தர்மி ஒரு வித்துதான் எடுத்து வேதாவின்
சென்மித்து எடுத்தார் சிவரிஷி ஒன்று அதிலே
தபோதனராய்ச் சண்டன்தன் உகத்தில் வாழும் அவரில்
சகோதரராய் ஒன்றுதான் எடுத்தார் அம்மானை
சொர்க்க லோகமதிலே ஸ்ரீராமர் தமக்குப்
பக்குவங்களாகப் பணிவிடைகள் செய்வோரில்
நல்ல குலமான நயனவித்து ஒன்றதுவும்
வெல் அமரர்கோன் வாழும் வெற்றித் தெய்வலோகமதில்
சத்தியுள்ள வித்து ஒன்றுதான் எடுத்தார் அம்மானை
---------
உரை
---------
"பார்ப்போம்?" என்று சவால் வீட்டுக் கோபமுற்ற திருமால்,
(1) நல்லோருக்கு வழிவிடும் உலகமான சக்தி வாழும் பரலோகத்திலிருந்து எந்த உருவமும் இல்லாத ஆகாச சக்தி வித்து ஒன்றும்,
(2) அழகான உருவம் அமைந்த சிவலோகத்திலிருந்து உண்மை அறிவு பெற்ற வானோர் வித்து ஒன்றும்,
(3) தருமிகள் வாழும் வைகுண்ட லோகத்திலிருந்து தருமி வித்து ஒன்றும்,
(4) பிரம்ம லோகத்திலிருந்து பிறவி எடுக்கும் சிவரிஷி வித்து ஒன்றும்,
(5) எம லோகத்தில் வாழும் தபோதனர் வித்து ஒன்றும்,
(6) சொர்க்க லோகத்தில் திருமாலுக்கு உகந்த வழியில் பணிவிடைகள் செய்வோரான நல்ல குலமான உயர்ந்த நயன வித்து ஒன்றும்,
(7) வெற்றி பொருந்திய தேவர்களுக்குத் தலைவனான தெய்வேந்திரன் வாழும் தெய்வ லோக சக்தியுள்ள வித்து ஒன்றும் எடுத்தார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கன்னியரின் குழந்தைகள் நிலைமை*****
தெய்வேந்திரன் பசுக்கள் திரை மேயக் கண்டு அவரும்
கையதிலே சீங்குழலைக் கனி வாயில் வைத்து இருத்தி 
நிரை வா எனவே நியமித்து அங்கு ஊதிடவே
அரை நொடியில் ஆவும் அங்கு ஒன்றும் இல்லாமல்
இங்கு வந்து மாயனிடம் அழைத்தது என்ன கேட்டிடுமாம்
சங்குதனில் பால் உமிழ்ந்து தாரும் என்றார் எம்பெருமாள்
பால் உமிழ்ந்து ஆவும் பலநாளும் பாலருக்கு
நாள் ஒருநாள் மட்டும் நடந்து வரும் வேளையிலே
கன்றுக்குப் பாலு காணாமல் மேய்ப்போர்கள்
ஏது என்று பார்த்து இயல் அறிந்து வானவர்கோன்
---------
உரை
---------
தெய்வேந்திரனின் பசுக்கூட்டம் காட்டில் இரை மேய்வதைக் கண்டு, திருமால் தமது ஊதுகுழலைக் கையில் எடுத்து, இனிய மொழி பேசும் வாயில் வைத்து இசைத்து, "பசுக் கூட்டத்தினைத் தமது பக்கத்தில் வாருங்கள்" என்று இசை மூலம் அன்புக் கட்டளையிடவே, பசுக்கூட்டம் மாயனிடம் வந்து, "எங்களை அழைத்த காரணம் என்ன?" என்று கேட்டன. அப்போது திருமால், "பசுக்களே, இந்தச் சங்கினில் சிறிது பாலைச் சொரிந்து தாருங்கள்" என்றார்.
உடனே, பசுக்கள் தமது பாலைச் சொரிந்து கொடுத்தன. இப்படியாகப் பல நாள்கள் ஒரு நாளைக்கு ஒருபொழுது மட்டும் பசுக்கள் பால் கொடுத்து வந்தன. அச்சமயம் பசுக்களை மேய்ப்பவர்கள் கன்றுகளுக்குப் பால் இல்லாவண்ணம் பசுக்கள் திரும்பி வரக்காரணம் என்ன? என்று ஆய்ந்து விடை காணாமல் தெய்வேந்திரனிடம் தெரிவித்தனர்.
---------------------
அய்யா உண்டு 


*கன்னியரின் குழந்தைகள் நிலைமை*****
இப்படியே பிள்ளைதமை ஈன்ற பின்பு கன்னியர்
அப்படியே சென்று அவர் போய்த் தவசு நிற்க 
பிள்ளைதமைப் போட்டுப் புண்ணியனார் போகாமல்
வள்ளல் அந்த மாலும் மதலைதமை எடுத்து
ஆரிடத்தில் இம்மதலை அடைக்கலமாய் வைப்போம் என்று
விசாரித்து நன்றாய் விசாரமுற்றார் அம்மானை
---------
உரை
---------
இவ்வாறாகத் திருமால் மூலம் உருவான குழந்தைகளை அங்கேயே போட்டு விட்டுக் கன்னியர் தவம் செய்யச் சென்று விட்டனர்.
அனால், புண்ணியத்தின் இருப்பிடமும் வள்ளலுமான திருமால் தமக்குப் பிறந்த குழந்தைகளைத் தனியாக இட்டுச் செல்லாமல் அவர்களை எடுத்து, "இந்தக் குழந்தைகளை யாரிடத்தில் அடைக்கலமாக ஒப்படைக்கலாம்" என்று ஆராய்ந்து மிகவும் வேதனையுற்றார்.
---------------------
அய்யா உண்டு 



ஆசிரியர் கூற்று*****
அறம் தழைக்கும் நாராயணர் மகவாகிய ஓர்
சான்றோர் பிறந்ததுவும் தரணி அரசாண்டதுவும் 
வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும்
அய்யா உரைக்க அடியேன் அதை எழுதி
மெய்யான போதம் மேலோர்கள் முன்பதிலே
அன்பான இந்த அகிலத்திரட்டு அம்மானை
தன்போதமாய் இருந்து தாழ்மையுடன் கேட்டவர்க்குக்
கன்மம்முதல் சஞ்சலங்கள் கழியும் என்று எம்பெருமாள்
உண்மையுள்ள இலட்சுமிக்கு உபதேசமாய் உரைத்தார்
---------
உரை
---------
அறம் தழைக்க வைக்கும் நாராயணரின் குழந்தைகளாகிய சான்றோர் பிறப்புப் பற்றியும், அவர்கள் இவ்வுலகை அரசாண்ட விதம் பற்றியும், அவர்கள் எல்லா விதமான பட்டயம், விருது போன்ற பெருமைகளைப் பெற்றது பற்றியும், அய்யா வைகுண்டர் திருவாய் மொழிய அடியேன் அதைப் பணிவோடு எழுதி, உண்மை அறிவினைப் பெற்ற உயர்ந்தோர்களின் முன்பாக அன்பினை ஊட்டுகின்ற இந்த அகிலத்திரட்டு அம்மானையைப் படைக்கின்றேன். "இந்த நூலை விழித்த அறிவோடிருந்து பணிவுடன் கேட்டு அறிந்தவர்களுக்குக் கர்ம வினைகள் மனச் சஞ்சலங்கள் அவ்வளவும், பறந்து ஓடிடும்" என்று திருமால் தமக்கு உண்மையாய்ப் பணிவிடை செய்துவரும் இலட்சுமிக்கு உபதேசித்தார்.
---------------------
அய்யா உண்டு 


கன்னியர் தவம்*****
கற்பழிந்து எங்கள் கையில் கன்னி திரளாமல் வைத்தோர்
பொற்பாதம் உண்டெனவே பூவையர் தவசு நின்றார் 
பால் இளகி நல்லமிழ்தம் பாலாறாய் ஓடிடவே
கால் இளகாவண்ணம் கடுந்தவசு செய்தனரே
பிள்ளை ஏழுபேரும் பெற்றுப் பெருகிடவும்
கள்ளம் செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும்
மக்களையும் எங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து
ஒக்க ஒருமித்து உலகாள வைத்திடவும்
நின்றார் தவசு நேரிழைமார் எல்லோரும்
நன்றான மாமடவார் நடித் தவசிருக்க
பிறந்த பிள்ளை புதுமை கேள் அன்போரே
---------
உரை
---------
அவர்கள் (கன்னிகள்), "எங்கள் கற்பினை அழித்து, கங்கை நீர் திரளாமல் வைத்தவரின் பொன் போன்ற பாதத்தினைக் காண வேண்டும்" என்று ஈசரை நோக்கித் தவம் இருந்தனர். நல்ல அமிர்தமாகிய பால் இளகிப் பாலாறாக ஓடியபொழுதும், எங்கும் செல்லாவண்ணம் கடுமையான தவம் புரிந்தனர்.
தாம் பெற்ற பிள்ளைகள் ஏழுபேரும் சந்ததிகளைப் பெற்றுப் பெருகி வாழ்ந்திடவும்; கற்பழிக்கக் கள்ளத்தனமான வழியைக் கடைபிடித்த திருமால் எங்களைக் கைபிடித்துத் திருமணம் செய்யவும், எங்களையும் எங்கள் குழந்தைகளையும் அவரே வந்தெடுத்து ஆட்கொண்டு எல்லாரையும் ஒற்றுமைப்படச் செய்து இவ்வுலகினை ஆளச் செய்திடவும்; ஏழு பெண்களும் தவம் செய்தனர். இவ்வாறாகப் பெண்கள் ஏழுபேரும் இங்கே தவமிருக்க, ஏற்கெனவே பிறந்த பிள்ளைகளின் நிலைமையைக் கேளும், அன்பரே.
---------------------
அய்யா உண்டு 



கன்னியர் தவம்*****
இன்று எங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர்
வந்து எங்கள் தம்மை மாலையிட வேணும் என்று 
பந்து தனம் மின்னார் பாவை ஏழு கன்னியரும்
ஈசுரரே தஞ்சம் என இருந்தார் தவசத்திலே
மாசு ஒன்றும் இல்லா மாதர் ஏழுபேரும்
தெற்கே முகமாய்த்தேவி ஏழுபேரும்
மிக்க தவசு மிகப்புரிந்தார் அம்மானை
---------
உரை
---------
பந்து போன்று பருத்த தனங்களையும் மின்னல் போன்ற கண்களையும் உடைய அப்பெண்கள் ஏழுபேரும், "ஈசுரரே, எங்கள் கற்பினை அழித்துச் என்று வரம் வேண்டி, 'ஈசுரே தஞ்சம்' என்று தவத்தில் இருந்தனர்.
இவ்வாறாக எவ்விதக் குற்றமும் இல்லாத அப்பெண்கள் ஏழுபேரும் தெற்கே பார்த்த முகமாக அமர்ந்து ஒரே நினைவாய்த் தவம் புரிந்து வந்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------




*கன்னியர் தவம்*****
கன்னியர் மேனி கனிந்து மினுமினுத்து
மின்னித் தனங்களிலே மிகுபால் சுரந்திடவே 
கற்புக் குழறிக் கயிலையுகம் ஆனதற்கு
அற்புத வேழ்கங்கை அவர் நினைவும் இல்லாமல்
எல்லோரும் ஒருமிக்க ஈசுரைதாம் நினைத்து
வல்லோனே என்று வரம் பெறவே நின்றனராம்
நின்றார் தவத்தின் நிலைமை கேள் அம்மானை
---------
உரை
---------
பிள்ளை பெற்றதால், கன்னியர் உடல் சற்றுப் பருத்துக் கனிவுற்று மினு மினுத்தது; மின்னிய தனங்கள் பெரிதாகி அதிகமான பாலைச் சுரந்தன. கற்பு நிலை மாறியதால் கயிலை செல்வதற்கோ, கரும்பு சூழ்ந்த அற்புதமான அமிழ்த கங்கையில் நீராடுவதற்கோ சிறிதுகூட எண்ணமின்றி, எல்லாக் கன்னியரும் ஈசுரரை நினைத்தனர்.
இப்படி ஈசுரரை நினைத்து, "எல்லாம் வல்லோனே, அருள் பாலிப்பாயாக" என்று அவரிடம் வரம் பெறுவதற்காக அவர்கள் தவத்தில் இருந்தார்கள்.
இனி, அத்தவத்தின் நிலைமைப் பற்றிக் கேட்பாயாக.
---------------------
அய்யா உண்டு 



விருத்தம்*****
கனலைத் துணையாம் என்று ஆவிக் கற்பை இழந்தோம் கன்னியரே
புனலைத் திரட்டப் பெலமின்றிப் புத்தி அழிந்தோம் பூவையரே 
அனலைத் தரித்த அரன் முன்னே அங்கே சென்றால் பங்கம் வரும்
இனத்தைப் பிரிந்த மானது போல் இருப்போம் வனத்தில் என்றாராம்
---------
உரை
---------
"கன்னியரே, நாம் குளிரைத் தீர்க்கக் கனலைத் துணையென்று அணைத்து நமது கற்பினை இழந்தோமே! பூவையரே, கங்கை நீரைதிரட்ட சக்தியின்றிப் புத்தி கெட்டோமே. இனித் தீப்பிழம்பாலான நெற்றிக் கண்ணையுடைய சிவனின் முன்னால் சென்றாலும் நமக்குத் தீங்கே உண்டாகும். எனவே எனது இனத்தைப் பிரிந்த மானைப்போன்று நாம் இந்த வனத்திலேயே வாழ்வோம்" என்றார்.
---------------------
அய்யா உண்டு 

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
வானோர்கள் போற்றும் மாமுனியும் தான்மகிழ்ந்து
உள்ளதுதான் என்று உடனே மனமகிழ்ந்து 
வள்ளல் சிவனார்தனையும் மறைவேதனையும் அழைத்து
முப்பத்து முக்கோடி முனிவர் அவர்தங்களையும்
நாற்பத்து நாற்கோடி நல்ல ரிஷிகளையும்
தேவர் முதலாய்த் தெய்வேந்திரன் வரையும்
மூவர் முதலாய் உள்ளோரையும் வருத்தி
கிணநாதர் வேத கிம்புருடரையும் வருத்தி
குணமான தந்தி குமரனையும் வருத்தி
சத்தி உமையும் சரசுவதி பார்வதியும்
எத்திசையும் வானோர் எல்லோரையும் வருத்தி
சங்கமது கூடிச் சாத்திரங்கள்தாம் ஓதி
---------
உரை
---------
வானோர்கள் போற்றுகின்ற திருமால் மனம் மகிழ்ந்து, "காளியே, நீ சொல்வது சரியானதே" என்று கூறி, மனம் மகிழ்ந்தார். வரம் கொடுக்கும் வள்ளலான சிவனையும், பிரம்மாவையும், அழைத்தார். பிறகு, முப்பத்து முக்கோடி முனிவர்களையும், நாற்பத்து நான்கு கோடி நல்ல ரிஷிகளையும், தேவர்கள்முதல் தெய்வேந்திரன்வரையும், மூவர் முதலாய் அங்குள்ள எல்லோரையும் வரவழைத்தார்.
கிணநாதரையும், கிம்புருடரையும் நல்ல குணம் பெற்ற யானைமுகக் குமாரனையும், சத்தி உமையையும், சரசுவதியையும், இலட்சுமியையும், எல்லாத் திசையிலும் உள்ள வானோர்களையும் வரவழைத்தார். இவ்வாறாகச் சங்கம் கூடியது; ...
---------------------
அய்யா உண்டு 



திருமாலின் குழந்தைகளைக் காளி அடைதல்*****
அனைத்து உயிரும் காக்கும் அச்சுதரும் தாமறிந்து
மக்கள் ஏழுபேர்களையும் மாகாளி கைகொடுக்க 
கொக்கரித்துக் காளி கொண்டாடித் தான்மகிழ்ந்து
வாங்கும் அளவில் மாமுனியைத் தானோக்கி
தாங்கி நின்று பாதத்தடி தாழ்ந்து ஏதுசொல்வாள்
வேதமுனியே வித்தைக் கருத்தோனே
மாதவங்கள் கற்ற மாமுனியே இம்மதலை
ஆனோர்க்கு நாமம் அருளி நீர் தாரும் என்றாள்
---------
உரை
---------
"தமது குழந்தைகளை வளர்க்க யாரிடம் ஒப்படைக்கலாம்" என்று அனைத்து உயிரையும் காக்கும் திருமால் வேதனையுற்று, காளியின் தவத்தை அறிந்து, தமது மக்கள் ஏழுபேரையும் மாகாளியின் கைகளில் கொடுத்தார். காளி உடனே மகிழ்ச்சியுடனும் அதிக சிரிப்புடனும் அந்தப் பாலர்களைப் பெற்றுக் கொண்டாள்.
அவ்வாறு பெற்றுக் கொள்ளும்போது குழந்தைகளை வாங்கிக் கொண்டே திருமாலின் பாதங்களைத் தாழ்ந்து வணங்கி, "வேத முனியே, வித்தைகளில் கருத்தாக நிற்போனே, பெருந்தவங்கள் கற்ற மாமுனியே, இக்குழந்தைகளுக்குப் பெயர் சூட்டித் தந்தருள வேண்டும்" என்றாள்.
---------------------
அய்யா உண்டு 



*காளியின் முன் வரலாறும் தவமும்*****
அப்போது ஈசுரரும் ஆங்காரியை நோக்கி
கற்போடு ஒத்த கன்னியே உன்றனுக்குத் 
தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி
மரித்துப் பிறக்காத மாகாளியே உனக்கு
விடையாய் ஒருவசனம் விரிக்கக் கேள் ஒண்ணுதலே
படைக்காகப் பாலர் பச்சைமால் தா எனவே
தவசு மிகப்புரிந்தால் சங்கு சரத்தாமன்
விவசுதனில் பிறந்த வீரர் ஏழுபேர்களையும்
உன்னை அழைத்து உன் கையிலே தருவார்
முன்னே தவசு மிகப்புரியப் போ எனவே
அரனார் விடையும் அருளி மிகக்கொடுத்து
பரமானதேவி பச்சைமால் தனைதான்
நினைத்துத் தவசு நெடுநாளாய் நின்றிடவே
---------
உரை
---------
அப்போது, ஈசர் காளியை நோக்கி, "கற்பில் சிறந்த கன்னிப் பெண்ணே, நீ கருத்தரித்து உனக்குக் குழந்தை பிறக்க விதி இல்லையே? மரித்துப் பிறக்காத மாகாளியே, அதற்குப் பதிலாகச் சில வழிகளைக் கூறுகிறேன், கேட்பாயாக.
தக்கனை அழிக்கும் படைக்காகத் திருமலை நோக்கி, 'பாலர்கள் தர வேண்டும்' என்று தவம் செய். அப்படித் தவமிருந்தால் சங்குசரத்தாமன் ஆகிய திருமாலின் விசேஷ அக்கினியால் பிறந்த குழந்தைகளாகிய ஏழு வீரர்களையும் திருமால் உனக்குக் கொடுப்பார். எனவே, முதலில் நீ தவமிருக்கப் போவாயாக" என்று கூறி ஈசர் காளிதேவிக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
அந்தக் காளிதேவி அங்கே திருமாலை நோக்கி அதிக காலமாகத் தவம் இருக்கின்றாள்.
---------------------
அய்யா உண்டு 




*காளியின் முன் வரலாறும் தவமும்*****
வேலுகந்த காளிதனை விளித்தார்காண் பதம் பணிந்து
உடன் அறிந்து மாகாளி உடையோன் பதம் பணிந்து 
வடவாக்கினி முகத்தாள் வருத்தினது ஏன் என்னை என்றாள்
தக்கன் தலை அறுத்துச் சங்காரம் செய்திடவே
மிக்க நீ போ என்று விடைகொடுத்தார் ஈசுரரும்
விடைவேண்டிக் காளி விமலன் அடிபோற்றி
படைகாரி பின்னும் ஒன்று பராமனோடே கேட்டாள்
என்னோடு உதவி இயல் படையாய்த் தான்வரவே
வன்ன புதல்வர் வகிரும் என்றாள் மாகாளி
---------
உரை
---------
ஈசர் போருக்கு ஏற்ற காளியை அழைத்து வரக் கட்டளை பிறப்பித்தார். இதை அறிந்து வந்த வடவாக்கினி முகத்தையுடைய காளி சிவனின் பாதங்களைப் பணிந்து, "ஈசுரரே, என்னை அழைத்த காரணம் என்ன?" என்று கேட்டாள்.
இது கேட்ட ஈசர் காளியிடம், "காளியே, தக்கனுடைய தலையை அறுத்து அழிக்க நீ விரைவாகப் போக வேண்டும்" என்று பதிலுரைத்தார்.
இப்பதிலைக் கேட்ட அதிக படையுள்ள காளி, ஈசர் பாதங்களைத் துதித்து மீண்டும் வணங்கி, "ஈசுரரே, எனக்கு உதவி செய்யும் சக்தி பெற்ற படைகளாக வல்லமையான புதல்வர்களைப் படைக்க வேண்டும்" என்றாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------



காளியின் முன் வரலாறும் தவமும்*****
தேட்டமுடன் ஏழு செகல் கடந்து அப்புறத்தே
கோட்டையது இட்டுக் குறும்பு செய்து ஆண்டனனே 
தேவர்கள் சென்று சிவனார்க்கு அபயமிட
மூவர்களும் ஒத்திருந்து முழுதும் விசாரம் இட்டார்
ஆணாலே தக்கனையும் அழிக்கவகை இல்லை இங்கே
பூணாரம் பூண்ட புட்டாபுரக் காளி
காளிப் படையும் கமண்டலத்தில் சென்றதுண்டால்
தூளிபடத் தக்கனுட சிரசு அறுப்பாள் என்று மிக
மால் உரைக்க ஈசுரரும் மறையோரும் சம்மதித்து
---------
உரை
---------
தேவர்கள் சிவனுக்கு அபயமிட, சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூவரும் சேர்ந்து தக்கனை அழிக்க நாள் முழுவதும் ஆலோசித்தனர். கடைசியில் திருமால், "தக்கனை ஆண் இனத்தினால் அழிப்பதற்கு வழி இல்லை; எனவே, நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மண்டை ஓடுகளை ஆரமாக அணிந்துள்ள புட்டாபுரத்துக் காளி அவள் படையுடன் தக்கனது கொடுமையான ஆட்சி பீடத்துக்குச் சென்றால் அவனது தலையானது அறுபட்டுப் புழுதியில் விழும்படி செய்வாள்" என்று கூறியதை ஈசுரரும், பிரம்மாவும் சம்மதித்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------



*காளியின் முன் வரலாறும் தவமும்*****
மாகாளி என்னும் வடபத்திர காளி
ஓகாளி என்னும் உயர்ந்த பலக்காரி 
பெண் அல்ல போர்க்குப் புருடர் மிகப்போராது
விண்ணவரும் மண்ணவரும் விறுமாவும் போராது
அப்படியே துஷ்ட ஆங்கார மாகாளி
இப்படியே நன்றாய் இவள் இருக்கும் நாளையிலே
ஆணொருவர் தம்மால் அழியா வரங்கள் பெற்று
தாணொருவன் தனையும் சத்தி உமைதனையும்
கணியா வரங்கள் பெற்று கீழும் மேலும் அடக்கி
துணிவாகத் தேவர்களைத் தூளிபட ஏவல் கொண்டு
---------
உரை
---------
மாகாளி என்றும், ஓம்காளி என்றும் கூறுகின்ற வட பத்திரகாளி உயர்வான பலத்தை உடையவள்; அவள் போர் புரியும்போது பெண்ணாகவே காட்சி அளிக்க மாட்டாள். ஆண்கள் அவளுக்கு ஈடாகார். இப்படியாகத் துஷ்ட ஆங்காரம் கொண்டு மாகாளி வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது தக்கன் என்பவன் சிவனையும்,சக்தியையும் நோக்கித் தவம் புரிந்து, ஆண்களால் தன்னை அழிக்க முடியாத வரத்தையும், எண்ணரிய வேறு வரங்களையும் பெற்று வாழ்ந்து வந்தான். கீழலோகத்தையும் மேல் லோகத்தையும் அடக்கித் துணிச்சலாகத் தேவர்களைப் புழுதிப்படும்வண்ணம் வேலை வாங்கினான். மிகுந்த செல்வாக்குடன் ஏழு கடல்களுக்கும் அப்பால்வரை கோட்டையிட்டு மக்களுக்கும் தேவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான்.
---------------------
அய்யா உண்டு 



தான் அறியச் சொல்லிச் சண்டையிட வந்தனனே
வந்தவனுக்கு எதிரே மாமுனிவன் சூலமதை
இந்தாப் பார் என்று எறிந்தார் அவன் பயந்து 
ஆரோ எனப் பயந்து அயிராவதத் தோனும்
போர் ஒல்கிப் போனான் பொன்னு லோகந்தனிலே
நல்லது என மாமுனியும் நளினமுடன் மகிழ்ந்து
செல்ல மகவான சிறுவர்தமை வளர்க்க
---------
உரை
---------
தெய்வேந்திரன் உண்மையை ஆய்ந்து அறிந்து தான் அறிந்ததை எல்லாம் சொல்லிப் போர் புரியவன்தான். அவனுக்கு எதிராகத் திருமால் சூலாயுதத்தை எடுத்து, "இதோ பார்" என்று கூறி எறிந்தார். அந்தச் சூலாயுதத்தைக் கண்டு, "நம்மைவிட வல்லவரான இவர் யாரோ?" என்று அயிராவதத்தையுடைய இந்திரன் பயந்து பதுங்கித் தனது இந்திர லோகத்தை நோக்கி ஓடிப் போனான். "மிகவும் நல்லது, நன்மைதான்" என்று மனம் மகிழ்ந்து தம் குழந்தைகளை வளர்க்கக் காளிதேவியை நாடினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமம் இட்டு
அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பு அணிந்து 
சத்தி உமையும் சரசுவதி பார்வதியும்
எத்திசையும் மெய்க்க எடுத்து தாராட்டுவாராம்
அமுதமது சேனை இட்டு எல்லோரும் தாம் மகிழ
குமுதமொழி மாதர் குரவை இட்டுத் தாம் மகிழ்ந்து
அண்டர் முனிவோர் எல்லோரும் பார்த்திருக்க
தண்டாமரை மாது தாலாட்ட உத்தரித்தாள்
---------
உரை
---------
இவ்வண்ணமாக ஈசர்முதல் எல்லாரும் அக்குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி, அவ்வண்ணமே அவர்களுக்குக் காப்பு அணிவித்து அமர்ந்தனர். சக்தி உமையும், சரசுவதிதேவியும், இலட்சுமிதேவியும், எல்லாரும் அதிசயிக்கும் வண்ணம் அக்குழந்தைகளை எடுத்துத் தாராட்டத் தயாரானார்கள்.
பிறகு அமுதமாகிய தேனைச் சேனையாகக் குழந்தைகளுக்கு ஊட்டி எல்லாரும் மகிழ்ந்தனர். அழகு மொழி பேசும் மாதர்கள் எல்லாரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்க, குளுமை பொருந்திய வெண்தாமரையில் இருக்கும் சரசுவதிதேவி அப்பாலர்களைத் தாலாட்டத் தாலாட்டுப் பாட்டுப் பாடலானாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------



*சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
கர்மம் இல்லாத் தேவர் கரியமால் பாலருக்கு
மெய்யுடைய பாலர் மேன்மேலும் வாழ்ந்திருக்க 
தெய்வக் குல மன்னர் என்று திருநாமம் இட்டாரே
வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்கு
சூரியகுல வேந்தர் என்று சொன்னார்காண் அம்மானை
வாசவனும் தான் மகிழ்ந்து மாயனுட பலருக்கு
வீசைவிசைய வேந்தர் என்று நாமம் இட்டார்
இப்படியே நாமம் இவர் மொழிந்ததன் பிறகு
கற்புடைய சன்னாசி கருத்தாகவே உரைப்பார்
நாட்டுக்கு உடைய நாதனுட கண்மணிக்கு
காட்டு ராசர் எனவே கருத்தாக நாமம் இட்டார்
---------
உரை
---------
வினைகள் தீர்ந்த தேவர்கள், மெய்யுடைய இந்தப் பாலர்கள் மேலும் பெருகி வாழ்ந்திருக்க வாழ்த்தி, கரிய மாலின் குழந்தைகளுக்கு 'தெய்வக் குல மன்னர்' என்று பெயர் சூட்டினர்.
சக்தியுள்ள சூரிய பகவான் வெற்றியடைய திருமாலின் பலருக்கு 'சூரிய குல வேந்தர்' என்று பெயர் சூட்டினார்.
இப்படியாக இவர்கள் எல்லாரும் பெயர்கள் சூட்டிய பிறகு நாரதர் "நாட்டுக்குரிய நாதனுடைய இந்தக் கண்மணிகளுக்கு 'காட்டுராசன்' என்று பெயர் சூட்டுகிறேன்" என்று மனம் நிறைந்த கருத்தோடு கூறினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------


சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
கற்பகத்துக்கு ஒத்த கன்னி சரசுவதியும்
வெள்ளானை வேந்தர் என்று வெண்டாமரை உரைத்தாள் 
பிள்ளையார் தாமும் பிரியமுடன் மகிழ்ந்து
நன்றான வீர நகுலவேந்தர் எனவே
அன்று ஆனை முகத்தோன் அருளினர்காண் அம்மானை
சண்முகனும் தான் மகிழ்ந்து தவலோக மன்னர் என்று
விண்ணுலகு மெய்க்க விளம்பினர்காண் அம்மானை
வானோர்கள் வேத மாமுனிவர் தாம் மகிழ்ந்து
தானான மாயவனார்தாம் பெற்ற பாலருக்கு
தர்மகுல வேந்தர் என்று சாற்றினார் அம்மானை
---------
உரை
---------
கற்பக மரம் போன்ற கன்னி சரசுவதியாகிய வெள்ளைத் தாமரையாள் 'வெள்ளானை வேந்தர்' என்று பெயரிட்டாள்.
பிள்ளையார் ஆகிய ஆனைமுகத்தோன் விருப்பத்துடன் மகிழ்ச்சியுற்று நல்ல தன்மையுள்ள 'வீர நகுலவேந்தர்' என்று உண்மையான பெயர் சூட்டினார்.
சண்முகன் மகிழ்ச்சியுற்று விண்ணவர்களும் ஆச்சரியப்படும்படி 'தவலோக மன்னர்' என்று பெயர் சூட்டினார்.
வானோர்களும், வேதத்தில் சிறந்த மாமுனிவர்களும் மகிழ்ச்சியுற்று, "எல்லாம் தாம் என்னும் நிலை ஏகிய மாயவனார் பெற்ற இப்பாலருக்கு 'தரும குல வேந்தர்' என்று பெயர் சூட்டுகிறோம்" என்றனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------


சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
தாடாண்மை யுள்ள சத்தி அங்கு ஏது சொல்வாள்
அண்ணர் விநோதமதில் அவதரித்த பிள்ளைகட்கு 
வண்ணமுள்ள பேரு வாழ்த்தி விடைகொடுத்தாள்
எங்கும் புகழ்பெற்று இராஜ பட்டம்தான் சூடும்
சங்கு மன்னர் என்றுதான் உரைத்தாள் சத்தி உமை
பேறு பெற்ற பாலர் என்று பிதனமுடன் மகிழ்ந்து
பார்வதி நாமம் பகருவாள் அம்மானை
சென்றஇடம் வென்று சீமை கட்டித் தானாண்டு
மண்டலந்தோறும் வரிசை பெற்று வாழ்ந்திருக்கும்
பொற்பமுடி மன்னர் என்று பேரிட்டாள் பார்பதியும்
---------
உரை
---------
மிகுந்த சக்தி பொருந்திய பாதங்களையுடைய சத்தி உமை, "அண்ணர் விநோத விந்துவில் அவதாரம் எடுத்த இப்பிள்ளைகளுக்கு எங்கும் புகழ் பெற்று இராஜ பட்டம் சூடும் 'சங்கு மன்னர்' என்று பெயர் சூட்டுகிறேன்" என்று கூறி அழகு பொருந்திய அப்பெயரைச் சொல்லி வாழ்த்திக் குழந்தைகளுக்கு விடை கொடுத்தாள்.
"பேறு பெற்ற பாலர்கள்" என்று கூறி மிகுந்த அடக்கத்துடன் மனம் மகிழ்ந்த பார்வதிதேவி, "சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்று இந்த நாட்டை எல்லாம் ஒருங்காக்கி ஆட்சி புரிந்து எல்லா மண்டலங்களிலும் சிறப்புப் பட்டம் பெற்று வாழ்ந்திருக்கும் இக்குழந்தைகளுக்கு, 'பொற்பமுடி மன்னர்' எனப் பெயர் சூட்டுகிறேன்" என்றாள்.
---------------------
அய்யா உண்டு 



சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்*****
நல்லதுதான் என்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே உன் நாதவிந்தில் வந்து தோன்றினதால் 
தோணாப் பொருளைத் தொடர்ந்து கண்ட மன்னவர்க்கு
சாணார் என நாமம் சாற்றினார் ஈசுரரும்
முதல்பேர்தான் ஈசர் மொழிந்து பின்பு வேதாவும்
மதமான விந்து மாயமுனி சேய் அதற்கு
சான்றோர் என நாமம் சாற்றினார் வேதாவும்
ஆண்டார் இது உரைக்க அச்சுதரும் பின் சொல்லுவார்
நாடாள்வார் என்று நாமம் இட்டார் பாலருக்குத்
---------
உரை
---------
பிறகு ஈசர் "சரி, நல்லதுதான்" என்று நினைத்து விருப்பத்துடன் திருமாலை நோக்கி, "வல்லவனே, உனது நாத விந்துவில் இக்குழந்தைகள் தோன்றினர். எனவே, தோன்றாப் பொருளைத் தொடர்ந்து தியானித்துக் கண்டறியும் சக்தி பெற்ற இந்த மன்னவர்களுக்கு 'சாணார்' என்று பெயர் சூட்டுகிறேன்" என்று கூறினார்.
இவ்வாறு முதலப்பெயரை ஈசர் சூட்டியவுடன் பிரம்மா 'ஞானம்' பிரகாசிக்கும் மாயமுனியின் விந்திலிருந்து தோன்றிய குழந்தை என்பதால் 'சான்றோர்' என்று பெயர் சூட்டுகிறேன்" என்றார்.
ஈசரும், பிரம்மாவும் இவ்வாறு பெயர் சூட்டியதும் திருமால், அக்குழந்தைகளுக்கு 'நாடாள்வார்' என்று பெயர் சூட்டினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------



சங்கமது கூடிச் சாத்திரங்கள்தாம் ஓதி
மங்கள வாத்தியங்கள் மடமட எனவே அதிர
இப்படியே சங்கம் எல்லோரும் தாம்கூடி 
அப்படியே தாம் இருக்க அருளுவார் அச்சுதரும்
பிறந்த பிள்ளை ஏழதுக்கும் பேரிட வேணும் என்று
அறம் தழைக்கும் ஈசர் முன் அவர் வைத்தார் அம்மானை
அப்போது ஈசுரரும் அன்பாய் அகம் மகிழ்ந்து
இப்போது மாயவனே எல்லோருக்கும் பொதுவாய்
நீர்தாமே நாமம் இட்டால் அதுபோதும்
பார்தான் அளந்த பாலவண்ணா என்றுரைத்தார்
கார்வண்ணரும் கேட்டுக் கறைக் கண்டரோடு உரைப்பார்
தார்வண்ணரே முதல்பேர் தாம் உரைக்க வேணும் என்றார்
---------
உரை
---------
வேத சாத்திரங்கள் ஓதப்பட்டன; மங்கள வாத்தியங்கள் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன.
இப்படிக் கூடி இருந்த சங்கத்தில் திருமால், ஈசரிடம், "ஈசரே, எனக்குப் பிறந்த இந்தப் பிள்ளைகள் ஏழுக்கும் பெயர் சூட்டி அருள வேண்டும்" என்று கூறி அறத்தை நிலை நாட்டும் ஈசர் முன்னிலையில் குழந்தைகளை வைத்தார்.
அச்சமயம் ஈசரும் மனம் மகிழ்ச்சியுற்று, "உலகளந்த மாயவனே, பாலவண்ணா, இப்போது எல்லாருக்கும் பொதுவாக இருந்து நீயே இக்குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினால் அதுபோதுமே." என்றார்.
அதற்குத் திருமால், "வெண்மையான மலைகளின் நிறத்தவரே, நீவிர்தாம் முதலில் குழந்தைகளுக்குப் பேர் சூட்ட வேண்டும்" என்று வற்புறுத்தினார்.
---------------------
அய்யா உண்டு 




அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

விருத்தம்*****
தங்க மணியோ நவமணியோ சலத்தில் விளைந்த தரளமுதோ
சிங்க முடிகள் பெற்றவரோ சீமை அடக்கி ஆண்டவரோ 
துங்க வரிசை பெற்றவரோ திருமால் விந்தில் உதித்தவரோ
சங்கம் மகிழ வந்தவரோ சான்றோர் வாழ ராராரோ
*****நடை*****
சந்தோசமாகச் சரசுவதி தாலாட்டி
வெந்தோசம் எல்லாம் விலகவே நீராட்டி
வைகுண்ட மூர்த்தி மாமுனிதம் கைக்கொடுக்க
மைகொண்ட வேதன் மதலைதமை வாங்கி
ஈசர் முதலாய் எல்லோரும் கூடியிருந்து
---------
உரை
---------
தங்கத்திலான மணியோ, நவமணியோ, மழை நீரினால் விளைந்த முத்தோ, சிங்கக் கிரீடம் பெற்றவரோ, இந்நாட்டை முழுதும் அடக்கி அரசாண்டவரோ, வெற்றிக்குப் பட்டங்கள் பல பெற்றவரோ, திருமாலின் விந்திலிருந்து தோன்றியவரோ, மக்கள் சத்சங்கக் கூட்டம் மகிழ்ச்சி பெற வந்தவரோ, சான்றோரே, நீவிர் நீடூழி வாழ்க! ராராரோ, ராராரோ.
இவ்வாறாகச் சரசுவதி பாடல்கள் பாடித் தாலாட்டி, கொடுமையான தோசங்கள் எல்லாம் நீங்கும்படி நீராட்டித் திருமாலின் கையில் கொடுத்தாள்.
பிறகு, ஈசர்முதல் எல்லாரும் அமர்ந்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------


சரசுவதி சான்றோரைத் தாலாட்டுதல்*****
துட்டர் என்னும் பேரைச் சூரசங்காரம் இட்டு
கொட்டமிட்டுக் கோட்டை கொடிவிருது கெட்டிமிக 
ஆண்டிருக்கும் மன்னவரோ அச்சுதரின் பாலகரோ
தாண்டி வரம்பெற்றுத் தரணி அரசாண்டவரோ
பாண்டவரோ ஆண்டவரோ பால்வண்ணர் பெற்றெடுத்த
சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ
---------
உரை
---------
சாணாரைத் துஷ்டன் என்று சொன்னவரைக் கொன்று அழித்து, தேவலோகம் போன்ற கோட்டைகள் இட்டு, அக்கோட்டை மதிலில் விருதுக் கொடி கட்டிப் பெருமையோடு ஆளும் மன்னவரோ; அச்சுதரின் பிள்ளையோ;
எல்லாத் தடைகளையும் தாண்டி வரம் பெற்று நாட்டை அரசாண்டவரோ; பாண்டவரோ; இறையவரோ;
பால்வண்ணர் பெற்றெடுத்த சான்றவரோ;
இக்குழந்தை என்றும் தழைத்து வாழ ராராரோ, ராராரோ.
---------------------
அய்யா உண்டு 


சரசுவதி சான்றோரைத் தாலாட்டுதல்*****
கல்விக்கு உகந்த கருணாகரர் ஆனவரோ
செல்விக்கு உகந்த சென்னமது கொண்டவரோ 
தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிகள் ஆனதற்கும்
மூவர்க்கும் உதவிசெய்ய உதித்துவந்த கற்பகமோ
சென்ற இடமெல்லாம் சிறப்பு வெகுமானமுடன்
மண்டலங்கள் மெய்க்க வாழுகின்ற சாணரோ
சாணாருக்குள்ளே சர்வதுமே அடக்கி
கோணாத மாயன் குருகொடுத்து ஈன்ற கண்ணோ
அறிவும் ஞானத்தோடும் ஆதிபிறவியோடும்
செறியும் கலையோடும் செடம் எடுத்த சாணாரோ
---------
உரை
---------
சகல கல்விக்கும் தகுந்த கருணாகரர் ஆனவரோ; நல்ல மனைவிக்கு ஏற்ற பிறவியாக உதித்து வந்தவரோ;
தேவர்களுக்கும் வானவர்களுக்கும், இன்னும் பல செல்வம் பொருந்திய பதிகளுக்கும் மூவர்க்கும், உதவி செய்ய இப்போது உதித்து வந்த கற்பகமரம் போன்றவரோ;
சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பான பட்டங்களைப் பெற்று மண்டலங்கள் எல்லாம் அதிசயிக்கும்படி வாழுகின்ற சாணாரோ;
எல்லாவற்றையும் சாணார் இனத்துக்குள்ளே அடக்கி, நேர்மையான மாயத் திருமால் தந்தையாக நின்று விந்துவைக் கொடுத்துப் பெற்ற கண்மணியோ;
அறிவோடும், நல்ல ஞானத்தோடும், ஆதி பிறப்போடும், பிரகாசிக்கும் சகல கலைகளோடும் உருவெடுத்த சான்றவரோ;
---------------------
அய்யா உண்டு 



சரசுவதி சான்றோரைத் தாலாட்டுதல்*****
பூதமது பந்தம் பிடித்து முன்னேதான் வரவே
நாதம் இரட்டை ஊதி நாடாளும் மன்னவரோ 
எக்காளம் ஊதி இடம்டம் மானமுடன்
மிக்கான சீமை எங்கும் மேவிவரும் மன்னவரோ
வாரணங்கள் கட்டி வையகத்தைத் தானாண்டு
தோரணங்கள் நாட்டிவைத்த தெய்வத் திருச்சான்றவரோ
தர்மமுடி பெற்றவரோ சாத்திரத்துக்கு ஒத்தவரோ
கர்மமது இல்லாமல் களி கூர்ந்து இருப்பவரோ
உடற்கூறு சத்தி உயிரோடு உதித்துவந்த
சடக்கூறு மூலச் சட்டமது கொண்டவரோ
---------
உரை
---------
பூதங்கள் பந்தம் பிடித்து முன்பாக வர, இரட்டை நாதம் ஊதி வெற்றி முழக்கமிட்டு நாடாளும் மன்னவரோ, எக்காளச் சத்தம் உருவாக்கி, "டம், டம்" ஆன சத்தத்துடன் பரந்த தேசம் எங்கும் சென்று வருகின்ற மன்னவரோ;
யானைகள் கட்டி நாட்டைப் பாதுகாத்து ஆண்டு, பலவகை அலங்காரங்களை உருவாக்கி வைத்த தெய்வத்தன்மை பொருந்திய சான்றோரோ;
அறச் செய்கைக்குரிய கிரீடம் பெற்றவரோ; சாத்திரங்கள்படி நடக்கும் நல்லவரோ; முன்வினைத் தோசம் இல்லாது வாழும் மகிழ்ச்சிக்குரியவரோ;
சக்தியின் உடற்கூறும், உயிரும் பெற்றுப் பிறந்து சகல சாமுத்திரிக இலட்சணங்களும் பெற்றவரோ;
---------------------
அய்யா உண்டு 



சரசுவதி சான்றோரைத் தாலாட்டுதல்*****
கொத்து முங்கை ஆபரணம் கொடி விருது பெற்றவரோ
மூலப்பொருள் கண்ட முதல்சாதி ஆனவரோ 
தாலம் பால் உண்டு தாம் இருக்கும் மன்னவரோ
நடைக் காவணங்கள் இட்டு நல்ல தீவெட்டமுடன்
படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ
வெள்ளானை மேலேறி வீதி வலம் சுற்றிவந்து
துள்ளாடிச் சிங்காசனம் வீற்றிருப்பவரோ
---------
உரை
---------
முன்கை ஆபரணங்கள் கொத்தாகவும் கொடிவிருதும் பெற்றவரோ;
மூலப்பொருளைக் கண்டறிந்த முதல்சாதி மனிதன் ஆனவரோ;
பனை மரத்துப் பால் உண்டு வாழும் மன்னவரோ;
நடைக் காவணங்கள் இட்டு நல்ல தீவட்டிப் பாதுகாப்புடன் சகலப் படையோடும் வீற்றிருந்து நாட்டை ஆளும் முடி பெற்ற மன்னவரோ;
வெள்ளை யானை மீது ஏறி வீதிகள் தோறும் பவனி சுற்றி வந்து துள்ளி விளையாடிச் சிங்காசனத்தில் வீற்றிருப்பவரோ;
---------------------
அய்யா உண்டு 




சரசுவதி சான்றோரைத் தாலாட்டுதல்*****
வைகுண்ட கண்ணோ வரம் பெற்ற மாதவமோ
கைகண்ட வித்தை கருத்து அறிந்த உத்தமரோ 
தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ
வங்கம் நிசம் கண்ட மங்காத சான்றவரோ
சிங்கமுகத் தண்டிகையும் சிலம்பு புனைந்த இரத்தினமும்
சிங்கக் கொடி விருதும் சங்கு இரட்டை பெற்றவரோ
முத்துச் சிலாப முதலாளி ஆனவரோ
---------
உரை
---------
வைகுண்டத்தின் கண்களோ, சகல வரமும் பெற்ற மாதவம் ஆனவரா; தாம் படித்த வித்தையின் உண்மைக் கருத்தை அறிந்த உத்தமரோ; தங்கத்தினால் ஆன முடி பெற்றவரோ; திருமாலின் சங்குக்கும் திருமுடிக்கும் வாரிசான மன்னவரோ; மெய்க் கருத்தின் உண்மையைக் கண்டு அழியாத சான்றோரோ, சிங்கமுகச் சிவிகையும், இரத்தினத்தால் புனையப்பட்ட சிலம்புகளும், சிங்கக்கொடி விருதும், இரட்டைச்சங்கு பெற்றவரா; முத்துச் சிலாப முதலாளி ஆனவரோ;
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*அந்தணனையும் அவன் மனைவியையும் பனைமரங்களாக ஆக்குதல்*****
அப்போது நல்ல ஆதிசிவம் உரைப்பார்
எப்போதும் பாலருக்கு இவர் உண்ணும் அமிழ்தம் எல்லாம் 
கொடுக்கும் படியாய்க் குருக்க வையும் என்றுரைத்தார்
அடுக்க நின்ற தேவர் அது கேட்டுச் சீக்கிரமாய்
மறையோனையும் மாதுவையும் வந்து எடுத்துச் சாபமிட
---------
உரை
---------
உடனே ஆதி சிவம், "திருமாலே, எப்பொழுதும் இந்தப் பிள்ளைகள் உண்ணும் அளவு அமிழ்தம் முழுவதும் கொடுக்கும்படியாக இவர்களைப் பனை மரங்களாய் உருவாக்கும்" என்றார். இதைக் கேட்ட திருமால், அவர்கள் பக்கம் வந்து கைகளைத் தூக்கி, "பனை மரங்களாக மாறுங்கள்" என்று சபித்தார்.
அந்தணன், ஈசரைப் பார்த்து "இறையவரே, இப்போது திருமால் இட்ட சாபமானது எப்போது முடிவடையும்" என்று கேட்டான்.
---------------------
அய்யா உண்டு 



அந்தணனையும் அவன் மனைவியையும் பனைமரங்களாக ஆக்குதல்*****
வானோர்கள் பார்த்து வாய்த்த அமிழ்தம் காணாமல்
ஏனோ இது மாயம் என எண்ணி மிகப்பார்ப்பளவில் 
கொண்டாடி நின்ற கூர் மறையவன்தனையும்
பொண்டாட்டியான பெண்ணதையும் வானோர்கள்
பிடித்து இழுத்துப் பின்னும் முன்னும் தள்ளிமிக
அடித்துச் சிவன் முன்னே அச்சுதரும் பார்த்திருக்க
கொண்டு வந்துவிட்டுக் கூறுவார் வானோர்கள்
பண்டுமுதல் இன்றுவரை பாய்ந்த அமிழ்தம் எல்லாம்
தின்று கொண்டு தேகம் திமிர்த்து மிகப்பாளை வைத்து
வண்டு உறுக்கி மிக்க வலுப் பேசினான் எனவே
சொல்லிடவே வானோர் திருமால் அதுகேட்டு
நல்லதுதான் என்று நாடிச் சிவனோடு உரைக்க
---------
உரை
---------
இதை அறியாத வானோர்கள் அங்கு உருவாகும் அமிர்தத்தைக் காணாமல் "இஃது என்ன மாயமோ?" என்று எண்ணி, அதிசயித்தனர்.
அதன் காரணத்தை ஆராய்ந்து பார்த்தனர்.
அப்பொழுது, அமிழ்தத்தை அருந்தி மகிழ்ச்சியுடன் கூத்தாடிக் கொண்டிருந்த அந்தணனையும், அவன் மனைவியையும் கண்டனர்.
உடனே, அவர்களைப் பிடித்து இழுத்து, பின்பகுதியிலிருந்து தள்ளியும், முன்பகுதியில் நின்று இழுத்தும், அவர்கள் வரமறுத்தபோது, அடி கொடுத்தும் கூட்டிக் கொண்டு வந்தனர். இவற்றையெல்லாம் அச்சுதர் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அவர்களைச் சிவன் முன்பாக நிறுத்தி, வானோர்கள் ஈசரைப் பார்த்து, "ஈசரே, இவர்கள் இருவரும் அமிழ்தம் தோன்றியதிலிருந்து இன்றுவரை பாய்ந்த அமிழ்தம் முழுவதையும், தாமே உண்டு தேகம் முழுவதும் பருத்துக் கொழுப்பு உருவாகி, எங்களிடம் கடுமையான மொழிகள் பேசினர். எனவே இவர்களை இழுத்து வந்தோம்" என்றனர். இதைக் கேட்ட திருமால் "நல்லதுதான்" என்று கூறிச் சிவனிடம் "இவர்களை என்ன செய்வது?" என்று ஆலோசனை கேட்டார்.
---------------------
அய்யா உண்டு 



அமிழ்தம் கொணர வானோரை அனுப்புதல்*****
ஆருரூபம் இல்லா ஆகாசம் மேல்வழியே
சீருரூபமான சிவகயிலை ஆனதிலே 
பாயும் அளவில் பல சாத்திரங்கள் கற்ற
வீயும் மறை வேதியனும் விழிநுதலாள் தேவியுமாய்
அமுதமதை எல்லாம் அள்ளித் தலைமேலும்
குமுதமுடன் குடித்துக் கொழுத்து மிகப்பாளை வைத்து
தேகமது நிமிர்ந்து தேவியும் மன்னவனும்
ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில்
---------
உரை
---------
எந்த உருவமும் இல்லாத ஆகாசத்தின் மேல் பகுதியில், சிறப்பான அமைப்பையுடைய சிவகயிலையிலிருந்து அமிழ்தம் பாய்கின்ற பொழுது, பலசாத்திரங்களும் உயர்வான வேதங்களும் கற்ற அந்தணனும், அவன் மனைவியும் அமிழ்தம் முழுவதையும் விரும்பிக் குடித்து எஞ்சியதைத் தலைமேல் போட்டு, உடம்பில் கொழுப்பு உருவாகி, நிமிர்ந்து அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்து ஆரவாரம் செய்து கொண்டு நின்றனர்.
---------------------
அய்யா உண்டு 




அமிழ்தம் கொணர வானோரை அனுப்புதல்*****
வாசமுள்ள பிள்ளைகள்தாம் வளரத் திருஅமிழ்தம்
சேனை மிகஊட்டுதற்கும் செல்வம் உண்டாவதற்கும் 
வானத்து அமிழ்தம் வருத்தி மிகஈயவென்று
கயிலைதனில் இருக்கும் கண்ணான பேர்களுக்கு
அகிலமதில் பாயும் ஆகாய ஊறலதை
வருத்திக் கொடுக்க என்று மாயவரும் ஈசுரரும்
பொருத்தமுள வானோரைப் போய் வேண்டி வாரும் என்றார்
அப்படியே வானோர் ஆகாயம் மீது ஏகிச்
செப்பமுடன் அமிழ்தம் சென்று அவர்கள் பார்க்கையிலே
---------
உரை
---------
மனம் பொருந்திய பிள்ளைகள் நன்றாக வளரவும், சேனையாக ஊட்டுவதற்கும், செல்வம் உண்டாவதற்கும், வானத்தில் உருவாகும் அமிழ்தத்தினை வருத்திப் பிள்ளைகளுக்குக் கொடுக்க ஈசரும் மாயவரும் எண்ணினர்.
எனவே, கயிலையில் வாழும் உயர்வான தேவர்களுக்கு உண்பதற்காக வைகுண்டத்தில் பாயும் ஆகாய அமுதத்தை இங்கே வருத்தி இப்பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று திருமாலும், ஈசுரரும், அதைக் கொண்டு வரப் பொருத்தமுள்ள வானோர்களைப் பார்த்து, "அமிழ்தத்தை எடுத்து வாருங்கள்" என்று கூறி அனுப்பினர். அக்கட்டளைப்படி வானோர்கள் ஆகாயம் மீது சென்று அமிழ்தத்தை தேடினர்.
---------------------
அய்யா உண்டு 




அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*காளியிடம் திருமால் சில வாக்குறுதிகள் பெறுதல்*****
பாலரையும்தாம் எடுத்துப் பரமசிவனார் அருளால்
கோலமுள்ள மாயன் கொடுத்தார் ஒருவார்த்தை சொல்லி 
சீலமுள்ள காளி என் சித்திரப் பாலருக்கு
பாலருக்குப் பங்கமது பற்றாமல் காத்திடு நீ
மதலைதமக்கு ஒருதீங்கு வத்ததே உண்டானால்
குதலையே உன்றனக்குக் கொடுஞ் சிறைதான் சிக்குமென்று
சொல்லியே காளி கையில் சிறுவரையும் தாம்கொடுத்து
---------
உரை
---------
திருமால் பாலர்களைத் தமது கைகளில் தூக்கி, "ஒழுக்கமுள்ள மாகாளியே, என் அழகு பொருந்திய பாலர்களுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாமல் காத்து வர வேண்டும். அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், உனக்குக் கொடுமை பொருந்திய சிறைத் தண்டனைதான் கிடைக்கும்" என்று எச்சரித்தார்.
பிறகு, சிவனின் அருளினால் அழகு பொருந்திய திருமால், காளியின் கையில் பாலர்களைக் கொடுத்தார்.
---------------------
அய்யா உண்டு
---------------------



காளியிடம் திருமால் சில வாக்குறுதிகள் பெறுதல்*****
உயிர்சேதம் வராமல் ஒன்று போல் என்மகவை
நெய்ச்சீதம் போலே நீ வளர்த்துத் தா எனவே 
அல்லாமல் என்மகவை ஆரொருவர் ஆனாலும்
கொல்லாமல் காக்கக் கூடுமோ உன்னாலே
அன்பான காளி அதற்கு ஏது சொல்லலுற்றாள்
என் பாலகர்தமையும் ஈடுசெய்ய இங்கு ஒருவர்
உண்டோகாண் இந்த உலகில் எனக்கு எதிரி
என்றேதான் காளி இப்படியே சொல்லிய பின்
---------
உரை
---------
2. இந்தக் குழந்தைகளை உயிர்ச் சேதம் வராமல் பாதுகாத்து எல்லாப் பாலரிடமும் சம அன்பு வைத்து, நல்ல சுத்தமான சந்தன மரம் போன்று என் குழந்தைகளை நீ வளர்த்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.
3. அது மட்டுமல்லாமல் என் குழந்தைகளில் ஒருவர்கூட கொல்லப் படாமல் பாதுகாக்க வேண்டும். இஃது உன்னால் முடியுமா?" என்று கேட்டார்.
அன்பு உள்ளத்துடன் இருந்த காளி, "நான் வளர்க்கும் என் பாலர்களைக் கொல்லுவதற்கு இவ்வுலகில் ஒருவர் இருக்கின்றாரா? அத்தகைய எதிரி ஒருவர் எனக்கு உள்ளாரோ? காட்டுவீராக" என்று கூறினாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------




காளியிடம் திருமால் சில வாக்குறுதிகள் பெறுதல்*****
ஞாலமுள்ள காளி நாயகியைத் தான் அழைத்து
பாலரையும் காளி பண்பாக வாங்குகையில் 
ஆலமிழ்தம் உண்ட அச்சுதரும் ஏதுரைப்பார்
அடவு பதினெட்டும் அலங்கார வர்மமதும்
கடகரியின் தொழிலும் கந்துகத்தின் தொழிலும்
மாவேறும் தொழிலும் வாள் வீசும் தொழிலும்
பாவேறும் பாட்டும் பழமறை நூலானதுவும்
அடவு மேலான அதிக பல வித்தைகளும்
திடமும் மிகவருத்திச் சேனாபதியாக்கி
எல்லா விதத்தொழிலும் இசைவான ராகமதும்
நல்லா வருத்தி நாட்டமுடனே கொடுத்து
---------
உரை
---------
பிறகு, திருமால் அத்தேசத்திலுள்ள காளிதேவியை அருகே அழைத்துப் பாலர்களை அவளிடம் கொடுத்தார். காளிதேவி பாலர்களைக் கை நீட்டி வாங்கும்போது கடல் நீரில் உருவான அமுதத்தை உண்ட திருமால் காளியைப் பார்த்து, "காளியே,
1.என் பாலர்களுக்கு அடவுகள் பதினெட்டும், வர்மத்தின் வரிசைகளையும், பலமான யானை ஏற்றமும், குதிரை ஏற்றமும், மிருக வேட்டையும், வாள் வீச்சும், பாட்டு இயற்றுதலும், பழமையான வேத நூல்களும், அடவுக்கு மேலாக இன்னும் பல வித்தைகளும் கற்பித்துக் கொடுத்து, மிகுந்த தைரியத்தை உருவாக்கி, சேனாபதியாக்கி, எல்லா விதமான வித்தைகளும் பொருத்தமான இராக வகைகளும், அன்புடனும் விருப்பத்துடனும் நன்றாகப் புரியும்படி கற்பித்துக் கொடுக்க வேண்டும். ........
---------------------
அய்யா உண்டு
---------------------




அந்தணனையும் அவன் மனைவியையும் பனைமரங்களாக ஆக்குதல்*****
வளர்ந்து அந்த அமிழ்தமெல்லாம் மக்கள் ஏழுபேர்களுக்கும்
பழம் அந்த அமிர்தக் காயோடு பலவகையும் தாமாண்டு 
அமுதமதைக் கொஞ்சம் ஆக்கிரமம்தான் அடக்கிக்
குமுதமுடன் நீங்கள் குடித்திருங்கோ என்று சொல்லி
உங்களுக்குப் பால் அமிழ்தம் ஊறும் அல்லால் இத்தாலம்
எங்களுக்கும் இத்தாலம் இசையாது கண்டீரே
பாலருக்கு இந்த வரம் பரமயுகத்தோர் கொடுத்து
---------
உரை
---------
பிறகு எல்லா யுகத்துக்கும் நாயகனான திருமால் பிள்ளைகளைப் பார்த்து "பிள்ளைகளே, இதோ வளர்ந்துள்ள பனை மரத்தின் எல்லா அமிழ்தத்தையும், பனம்பழங்களையும் உண்டு, அதன் காய் ஓலை போன்றவற்றையும் பல வகைகளில் பயன்படுத்துங்கள். ஆனால், பனை அமிழ்தத்தின் அதிக சக்தியைச் (சுண்ணாம்பினால்) அடக்கி ஒற்றுமையுடன் சேர்த்து நீங்கள் குடித்து வாழ்ந்து வாருங்கள். உங்களுக்கு மட்டுமே இந்தப் பனை மரங்களின் பால் அமிழ்தம் ஊறுமே அல்லாது எங்களுக்குக்கூட இப்பனை மரங்கள் பால் அமிழ்தம் தரச் சம்மதிக்காது, அறிவீராக" என்று பாலர்களுக்கு வரமளித்தார்.
---------------------
அய்யா உண்டு 



அந்தணனையும் அவன் மனைவியையும் பனைமரங்களாக ஆக்குதல்*****
நீசக் குலம் அறுத்து நெடிய திருமாலும்
மாசில்லாத் தர்ம வையகத்தை ஆளுதற்கு 
அன்பு சேகரிக்க அங்கு வருவார் கண்டீர்
வம்பு மாளும்போது மாறும் உங்கள் சாபம் என்றார்
உடனே மறையோனும் ஓவியமும் உள்ளதென்று
தடம் மேலே நின்று தாலம் எனவே வளர்ந்தார்
இறையவரைப் பார்த்து ஏதுரைப்பான் மாமறையோன்
இப்போது இட்ட இச்சாபம் ஆனதுதான்
எப்போது நீங்கும் என்றே கேட்டான் மாமறையோன்
---------
உரை
---------
ஈசர், "அந்தணனே, நீசர்களின் குலத்தை அழித்து உயர்வு பொருந்திய திருமால் மாசு இல்லாத தருமபுவி ஆள வருவார். அப்படித் தருமயுகத்தை ஆளும் முன்பு அவரையே நினைவில் கொள்ளும் அன்பர்களை உருவாக்க அங்கு வருவார். அறிவீர்களாக அச்சமயம், வம்புகள் அழியும்; உங்களுடைய சாபமும் தீரும்." என்று பதிலுரைத்தார்.
இதை அறிந்த அந்தணனும் அவன் மனைவியும் இது சிறப்புதான் என்று கூறிப் பூமியின் மேல் பனைமரமாக முளைத்து வளர்ந்து நின்றனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------