ஞாயிறு, 28 டிசம்பர், 2014

அய்யா.

காவி உடைதரித்து
கழுத்தில் ருத்திராச்சமிட்டு
சுரைகூடு பிரம்பும்
சங்கும் கையில்கொண்டு
தலைப்பாகை அணிந்து
நேர்நாமம் நெற்றியில் இட்டு
கலி அழிக்க வந்த
வைகுண்டர்தான் நம் அய்யா.

அய்யா உண்டு

அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே! மெய்யாயெழுதி விதிப்பேன் நான் என்பதெல்லாம்! ஆனை நடை கண்டு, அன்றில் நடையதொக்கும்! சேனை சரிவதென்ன, சிற்றெரும்பு பற்றி என்ன ! குயில் கூவக் கண்டு, கூகைக் குரலாமோ! மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்! ( இன்றைய தினங்களில் வான்கோழிதான் ஆடிக்கொண்டிருக்கிறது ) மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து! கடந்தை தாடேற்றுங் கதை போலே யானடியேன்! ( இன்றைய நாடகளில் தேனீக்கள் தேடி வைத்த ரசத்தை கடந்தை வண்டுகள், அருந்திக் கொண்டிருக்கின்றன )நாலு மூணு கணக்கு நடுத்தீர்க்க வந்த பிரான்! மேலோன் திருக்கதையை எழுதுவேன் எனபதொக்கும்!!! எம்பிரானான இறையோனருள் புரிய! தம்பிரான் கதையை தமியேன் எழுதுகிறேன்! எழுதுகிறேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்! பழுதொன்றும் வாராமல் பரமேசொரி காக்க! ( இன்று அதற்கு பழுது வந்துவிட்டது ) ஈசன் மகனே இயல்வாய் இக்கதைக்கு! தோசமகலச் சூழாமல் வல்வினைகள்! காலைக் கிரகங் கர்ம சஞ்சலமானதுவும்! வாலைக் குருவே வாராமலே காரும்! '' அய்யா சொல்ல, ஆகமத்தை எழுதிய, அரி கோபால சீசரின் ( சகாதேவ சீசர் ) வார்த்தைகள். எவ்வளவு அடக்கமாக இருந்திருக்கிறார் அந்த சீசர்!'' மேலே பார்ப்போம், '' தோத்திரமென்று சுவாமிதனைத் தொழுது! ராத்திரித் தூக்கம் நான் வைத்திருக்கையிலே! ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்! கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்! தெய்தி இருபத்தேழில்,சிறந்த வெள்ளி நாளையிலே! நாதன் என்னருகில் நலமாக வந்திருந்து! சீதமுடன் எழுப்பி சொன்னாரே காரணத்தை! காப்பிலொரு சீர் கனி வாய் மிகத்திறந்து! தார்ப் பிரியமாகச் சாற்றினார் எம்பெருமாள்! ''மகனே இவ்வாய் மொழியை வகுக்குங் காண்டமதுக்கு! உகமோரறிய உறைநீ முதல் காப்பாய்! அதின்மேல் நடப்புன் னுள்ளே யகமிருந்து! சரிசமனாய் நான் வகுப்பேன் தானெழுது காண்டமதை! நானுரைக்க நீயெழுதி நாட பதினாலறிய! யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள் முன்னே! வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு! பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா! ('' இந்த அம்மானையை எழுதிய, தன்னுடைய சீசரான, அரிகோபாலருக்கு, எவ்வளவு சிறப்புக் கொடுக்கிறார், பாருங்கள்! அந்த மகாபரன்!'' ) இதோ மகாபரன் சொன்ன வரிகள், ''பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரியாய்ப் பறைந்தோர்! களித்தோர் வறுமை கண்டு கடுநரகம் புக்கிடுவார்!! '' அய்யா மக்களே, அகிலத்தைக் கைவிடாதீர்கள். அய்யா சொன்ன வார்த்தைகளை மறக்காதீர்கள். இவை அனைத்தும் இறைவனால் நமக்குச் சொல்லப் பட்டவை என்று நம்புங்கள். இன்று அய்யா வழியில் உண்மையான அகிலத்தை படித்துணராத மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது என்னுடைய மாறாத விருப்பம். செய்வீர்களா, அய்யாக்களே!! '' தினமொரு நேரமெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்! பனிவெள்ளம் போலப் பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்! கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்! துணிவுடன் கேட்டோர் உற்றார் தொலைத்தனர் பிறவி தானே!!! அகிலம்! அய்யா உண்டு!!!
'' அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே! மெய்யாயெழுதி விதிப்பேன் நான் என்பதெல்லாம்! ஆனை நடை கண்டு, அன்றில் நடையதொக்கும்! சேனை சரிவதென்ன, சிற்றெரும்பு பற்றி என்ன ! குயில் கூவக் கண்டு, கூகைக் குரலாமோ! மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்! ( இன்றைய தினங்களில் வான்கோழிதான் ஆடிக்கொண்டிருக்கிறது ) மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து! கடந்தை தாடேற்றுங் கதை போலே யானடியேன்! ( இன்றைய நாடகளில் தேனீக்கள் தேடி வைத்த ரசத்தை கடந்தை வண்டுகள், அருந்திக் கொண்டிருக்கின்றன )நாலு மூணு கணக்கு நடுத்தீர்க்க வந்த பிரான்! மேலோன் திருக்கதையை எழுதுவேன் எனபதொக்கும்!!! எம்பிரானான இறையோனருள் புரிய! தம்பிரான் கதையை தமியேன் எழுதுகிறேன்! எழுதுகிறேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்! பழுதொன்றும் வாராமல் பரமேசொரி காக்க! ( இன்று அதற்கு பழுது வந்துவிட்டது ) ஈசன் மகனே இயல்வாய் இக்கதைக்கு! தோசமகலச் சூழாமல் வல்வினைகள்! காலைக் கிரகங் கர்ம சஞ்சலமானதுவும்! வாலைக் குருவே வாராமலே காரும்! '' அய்யா சொல்ல, ஆகமத்தை எழுதிய, அரி கோபால சீசரின் ( சகாதேவ சீசர் ) வார்த்தைகள். எவ்வளவு அடக்கமாக இருந்திருக்கிறார் அந்த சீசர்!'' மேலே பார்ப்போம், '' தோத்திரமென்று சுவாமிதனைத் தொழுது! ராத்திரித் தூக்கம் நான் வைத்திருக்கையிலே! ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்! கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்! தெய்தி இருபத்தேழில்,சிறந்த வெள்ளி நாளையிலே! நாதன் என்னருகில் நலமாக வந்திருந்து! சீதமுடன் எழுப்பி சொன்னாரே காரணத்தை! காப்பிலொரு சீர் கனி வாய் மிகத்திறந்து! தார்ப் பிரியமாகச் சாற்றினார் எம்பெருமாள்! ''மகனே இவ்வாய் மொழியை வகுக்குங் காண்டமதுக்கு! உகமோரறிய உறைநீ முதல் காப்பாய்! அதின்மேல் நடப்புன் னுள்ளே யகமிருந்து! சரிசமனாய் நான் வகுப்பேன் தானெழுது காண்டமதை! நானுரைக்க நீயெழுதி நாட பதினாலறிய! யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள் முன்னே! வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு! பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா! ('' இந்த அம்மானையை எழுதிய, தன்னுடைய சீசரான, அரிகோபாலருக்கு, எவ்வளவு சிறப்புக் கொடுக்கிறார், பாருங்கள்! அந்த மகாபரன்!'' ) இதோ மகாபரன் சொன்ன வரிகள், ''பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரியாய்ப் பறைந்தோர்! களித்தோர் வறுமை கண்டு கடுநரகம் புக்கிடுவார்!! '' அய்யா மக்களே, அகிலத்தைக் கைவிடாதீர்கள். அய்யா சொன்ன வார்த்தைகளை மறக்காதீர்கள். இவை அனைத்தும் இறைவனால் நமக்குச் சொல்லப் பட்டவை என்று நம்புங்கள். இன்று அய்யா வழியில் உண்மையான அகிலத்தை படித்துணராத மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது என்னுடைய மாறாத விருப்பம். செய்வீர்களா, அய்யாக்களே!! '' தினமொரு நேரமெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்! பனிவெள்ளம் போலப் பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்! கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்! துணிவுடன் கேட்டோர் உற்றார் தொலைத்தனர் பிறவி தானே!!! அகிலம்! அய்யா உண்டு!!!

அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது. அய்யாவழி புராணத்தின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானை விளங்குகிறது. அகிலம் கூறும் ஒருமைக் கோட்பாட்டின் அடிப்படையாக விளங்கும் ஏகம், வைகுண்டராக அவதரிப்பதால் அவரை மையமாகக் கொண்ட ஓரிறைக் கோட்பாட்டை அய்யாவழி வலியுறுத்துகிறது.
அய்யாவழி புராண வரலற்றின்படி அய்யா வைகுண்டரின் தூல உடலையும், சூட்சும உடலையும் தாங்கி சம்பூரணத்தேவன் என்னும் தெய்வ லோகவாசி தாமரைகுளம் என்னும் ஊரில் பிறக்கிறார். வைகுண்ட அவதாரம் வரை அவதாரச்சடலத்தை சுமக்கும் பொறுப்பு சம்பூரணதேவனுக்கு கொடுக்கப்படுகிறது. இவர் 'முடிசூடும் பெருமாள்' என்று வரலாற்றில் அறியப்படுகிறார்
தூல மற்றும் சூட்சும உடல்களின் பிறப்பு[தொகு]
முக்கியக் கட்டுரை: சம்பூரணதேவன்
கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது.
அகிலம் இதைப்பற்றி கூறும் பொது அக்குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன் சம்பூரணதேவனின் ஆன்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால் அங்கு நடந்த எதையும் குழந்தையின் பெற்றோரோ, குடும்பத்தாரோ அறியவில்லை. பிறந்து சில நொடிகள் குழந்தை சலனமற்று இருந்ததை மட்டும் அவர்கள் அறிகிறார்கள். இச்செயல் குறோணியை அழிக்க இறைவன் எடுக்க இருக்கும் வைகுண்ட அவதாரத்துக்காக போடப்பட்ட திட்டத்தின் முதல் பகுதியாகும். ஆக சம்பூரணதேவனாகிய இக்குழந்தை இதுமுதல் முத்துக்குட்டி என்ற பெயரைத் தாங்கி வளர்ந்து வருகிறது.
முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக ஆகிலம் கூறுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தெவனை சந்தித்து அவருடன் இணைகிறார், அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள்.
பின்னர் முத்துக்குட்டி என்னும் இச் சம்பூரணத்தேவன் பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.
மாற்றியமைப்பு[தொகு]
இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்று வருகிறார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயாரான வெயிலாள் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறுகிறார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.
மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக உலகில் அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தாய்ப் பாசம் காரணமாக அவரை வெயிலாள் தனது மகன் முத்துகுட்டி என்றே பார்க்கிறாள். அவளுக்கு தனது நிலையை வைகுண்டர் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்,
"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"
ஆனால் அதை ஏற்றுக் கோள்ளும் நிலையில் வெயிலாள் இல்லை. அதனால் தான் பிறந்த கடற் பதியின் மண்டபங்களையும் அதன் மெடைகளையும் அவரின் பிறப்பு மற்றும் வருகைக்கு சான்றாகக் கட்டுகிறார். ஆனால் தாய்ப் பாசம் தடுக்க, அவளால் வைகுண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வைகுண்டர், தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் கூறக்கூடாது என்று கூறுகிறார்.
இவ்வாறு கூறிய வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்டசாமி அவதார வரலாற்றுச் சுருக்கம்

உலகில் தர்மம் குன்றி அதர்மம் மிஞ்சி நிற்கும் காலங்களில் எல்லாம், நிகழுகின்ற அதர்மத்தை அழிக்க இறைவன் மனித உருவில் தோன்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டி இருக்கிறார். அப்படி கலியுகத்தில் அவதரித்தவரே அய்யா வைகுண்டசாமி.
நிகழும் கலியுகத்திற்கு முன்புள்ள யுகங்களில் அதர்மம் புரிந்த அரக்கர்களுக்கு உடல் இருந்தது. எனவே இறைவனும் தாம் பிறப்பதற்கு தகுதியான தாயின் மணிவயிற்றில் ஜெனித்துப் பிறந்து அவ்யுக அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார். இத்தகு செயல்பாடுகளை மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் காக்கும் கடவுள் என்றும் போற்றப்படுகிறது. மகாவிஷ்ணு அவதரித்து செய்துள்ளார்.
ஆனால் கலியுகத்தில் அதர்மத்தின் மொத்த உருவமாக திகழும் கலிக்கு உடல் இல்லை. மாயையாகிய அக்கலி மனிதர்களின் மனங்களில் புகுந்து தீய எண்ணங்களை தூண்டிக்கொண்டிருப்பதால், மதவெறி, சாதிவெறி, பொருள் ஆசை, பெண்ணாசை போன்ற அவலங்களில் உலகம் சிக்கித் தவிக்கிறது.இந்நிலைகளால் பாமர மக்கள் பரிதவித்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளம் புழுங்கினர். ஆன்மீக புலமை உள்ளோர் அதற்கோர் விடிவு வேண்டி ஆண்டவனை நோக்கி முறையிட்டார்கள். விடிவு, யுகாயுகங்கள் தோறும் அவதாரம் புரிந்து அதர்மத்தை அழித்த விஷ்ணு மட்டும், மீண்டும் அவதாரம் எடுத்து கலியை அழிக்க முடியாது. நிகழுகின்ற கலியுகம் உருவமற்ற கலி என்னும் மாயையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அது ஆயுதத்தால் சாகாது. என உணர்ந்த இறைவன் அன்பை படையாகவும், தர்மத்தை ஆயுதமாகவும், பொறுமையையை கேடையமாகவும், புவனமெங்கும் விதைத்து அதன்மூலமே வம்பானகலியை வதைக்க வேண்டும் என வரையறுத்த இறைவன் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக திரண்டு கலியுக பரிபாலனம் செய்யவேண்டும் என திட்டமிட்டார் அதன்படியே கொல்லம் ஆண்டு 1008 மாசி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு சரியான 4.3.1833 ல் திருச்செந்தூர் கடலுக்குள் வைகுண்டப் பரமபொருள் உதித்து வந்தார். அனேக நாமங்களோடு அதுநாள் மட்டும் இயங்கிய இறைவன், ஏகப்பரம் பொருளாக, திருப்பாற்கடலுக்குள் உதித்து இவ்வுலகிற்கு எழுந்தருளும் தருணத்தில் தெச்சணா பூமியின் புருவ மத்தியாக விளங்கும் சாமிதோப்பில் பேறுகள் பல பெற்ற புண்ணியவதி அன்னை வெயிலாலின் மணி வயிற்றில் பிறந்த முடிசூடும் பெருமாள் அன்பு சொரூபியாக வாழ்ந்து, 22 வயதில் நோய்வாய்ப்பட்டு, 24-வது வயதில் இறைவனின் நியம்படி , திருச்செந்தூர் கடலில் தீர்த்த மாடச்சென்று அக்கடலிலேயே சங்கமித்தார்.சமுத்திரத்தில் சங்கமித்த அந்த சமதர்ம நாயகனின் உடல்தோற்றம் போல் உருவெடுத்து பூவுலகிற்கு செல்வதே, இவ்யுகத்தை பரிபாலனம் செய்ய ஏற்றதாக இருக்கும் என எண்ணிய இறைவன் தம் அரூப உடலுக்கு முடிசூடும் பெருமாளின் உடல் ரூபம் ஏற்பட எண்ணினார். 

இதுவே உபாயமாய உடல் எனப்படுகிறது.அவ்வுடலோடு மானிடர்களுக்கு காட்சி அளித்த அந்த மாயாதி, சூட்சன், வைகுண்டர் என்ற பெயரேடு தாம் காட்டும் உடலுக்கு உரியவன் வாழந்த சாமிதோப்பை நோக்கி வந்தார். "சாமி தோப்பு" ஆண்டாண்டு காலமாக ஆன்மீக வளம் பொருந்திய அற்புதமான பூமி. அதுவே பூமி பந்தின் திலர்தம் என போற்றப்படும் தெச்சணத்தின் தென்பகுதி ஆகும். அங்கே தம்மை ஒரு தபோதனைபோல் காட்டிக்கொண்டு நோயினால் வருந்துவோர்க்கும், வறுமையால் வாடுவோர்க்கும், தீண்டாமை என்னும் இனவெறியால் பாதிக்கப்பட்டோருக்கும், அவர் அவர் தம் குறை அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை அருள் பாலித்தார். வைகுண்டசாமியின் அருள் பிரதாபங்கள் அவனி எங்கும் பரவிற்று. சாதி, சமய, பேதங்களை கடந்து சாரைசாரையாக சாமிதோப்பை நோக்கி, ஜனவெள்ளம் வந்து தேங்கின. வைகுண்டசாமியை அய்யா என்று அன்பு செலுத்தி பக்தி பரவசத்தோடு மக்கள் பணிவிடை புரிந்தனர். வைகுண்டசாமியோ தம்மை நாடிவரும் பக்தர்களை, அன்புக்கொடி மக்களே என அரவணைத்தார். சர்வேஸ்வரனாக இருந்தும் சாதாரண மனிதனைப்போல் மக்களோடு மக்களாக ஒன்றி உறவாடினார். மக்களும் அவரை விண்ணகத்து அரசன் என நினைக்கவில்லை. நினைக்க முடியவில்லை மண்ணகத்தில் வாழ்ந்த முடிசூடும் பெருமாளாகவே கருதினர். அதையே இறைவனும் இக்கலி முடிக்க இதமாக எடுத்துக் கொண்டார். 

"தர்மம் வைகுண்டம், தான் பிறந்தேன் இப்போது" "தீமை என்ற சொல், இனிமேல் இருக்காது இப்புவியில்" என்று தன் நிலை விளக்கத்தை மறைமுகமாக மக்களுக்கு புகட்டிய வைகுண்டசாமி, காணிக்கை, கைகூலி, காவடிகள், தூக்காதீங்கோ, ஞாயமுறைதப்பி நன்றி மறவாதீங்கோ, மாய நினைவு மனதில் நினையாதீங்கோ, தீபாதாரனை காட்டாதீங்கோ, திருநாளை பாராதிருங்கோ, நிலையழியாதிருங்கோ, நீதியாய் நின்றிடுங்கோ, கருதி இருங்கோ, கருத்து அயர்ந்து போகாதீங்கோ, நல்லோரே ஆக வென்றால், ஞாயம் அதிலே நில்லுங்கோ, தர்மயுகத்திற்கு தானேற்ற வஸ்து எல்லாம் நீங்கள் இனி திட்டித்து வைத்திடவும் வேண்டுமல்லோ எனவே வைகுண்டா என்று மனதில் நினைத்திருங்கோ என்பன போன்ற எண்ணரிய உபதேசங்களை கூறி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். ஒடுக்கப்பட்ட ஆடவர்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக் கூடாது. அங்க வஸ்திரம் அணியக் கூடாது என்று அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் இறைவழிபாடு செய்யவேண்டும் என்றும், பெண்கள் தோள் சீலை அச்சம் அன்றி அணிய வேண்டும் என்றும், மனோத்ததுவ ரீதயாக புத்தி போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார். தீண்டாமை என்னும் தீயசக்தியை வேரோடு பிடுங்கும் விதத்தில் திருமண்ணை எடுத்த தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். உங்களுக்கு தெரிந்த பாசையில் இறைவனை போற்றி நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளயும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகபடுத்தி வழிபடச் செய்தார். எளியோர், வரியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி அன்னம் கொடுத்து சமபந்தி போஜனம் நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில், எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் செய்தார். கூட்டு வழிபாட்டு மூலமே கலி என்கிற அரக்கனை வேட்டையாட முடியும் என்று "தர்மம் பெரிது தாங்கி இருங்கோ மக்காள், தாழக்கிடப்பாறை தற்காப்பதே தர்மம்" என்று தர்ம நெறிகளை போதித்தார். "மானமாக வாழ்ந்தால் மாலும் கலி தன்னாலே" என்று கூறி மக்களுக்கு தன்மான உணர்வுகளை ஊட்டினார். "தர்மம் கொடுக்கிற பேர்கள் உண்டு, வாங்குகிற பேர்கள்" என்ற காலத்தை நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்தினால் அதுவே தர்மயுகம் ஆகும். தர்ம யுகத்தை நீங்கள் எல்லோரும் அடைய வேண்டுமானால் இறைவன் படைத்த எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி அரவணைத்து வாழவேண்டும். ஆடு, கிடாய், கோழி போன்றவற்றை பலிஇட்டு இறைவனை வணங்கும் மூடநம்பிக்கைகளை முற்றிலும் நீங்கள் துறக்கவேண்டும் என்று இறைவழி பாட்டிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். வைகுண்டசாமியின் உபதேசங்களாலும், அருள் பாலிப்புகளாலும், வழிபாட்டு, வழிகாட்டல்களாலும் பல சாதி மக்களும் பயன் அடைந்தனர் . தீண்டாமை என்னும் தீய சக்தியின் கொடுமையினால் உலகில் வேண்டா வெறுப்பாக வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் வைகுண்டசாமியை தன்னை பெற்றவராகவே நினைத்து போற்றி புகழ்ந்து பக்தி செலுத்தினர். இந்நிலை கலி வயப்பட்டோரின் கண்களை உறுத்தியது. சாமித்தோப்பில் சமதர்ம சாம்ராஜ்யம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கறதே என்று மனம் தவித்த அக்கொடியவர்கள், திருவாங்கூர் மன்னனிடம் புகார் செய்தார்கள். கலி ஆதிக்கத்தால் கருத்திழந்த மன்னவனும் வைகுண்டசாமியை சிறை பிடித்து வர தம் படைகளை அனுப்பினார். படைகள் சாமித்தோப்பை நாடி விரைந்தன. வைகுண்டசாமியை கைது செய்தார்கள். கயிற்றினால் வரிந்து கட்டி சாலையில் இழுத்துச்சென்றார்கள். சாராயத்தில் விஷத்தைக் கலந்து விருந்தென கொடுத்தார்கள். சுண்ணாம்பு காள வாயில் வைத்து நீற்றினார்கள். டன் கணக்கில் விறகுகளை அடுக்கி கொளுத்தி நெருப்பாக்கி அந்த நெருப்பிலே நடந்துவர செய்தார்கள்.

வைகுண்டசாமியோ விஷத்திற்கே விஷமானார். நெருப்பின் கொடிய நாக்குகள் அந்த நெடியேனை தீண்டவில்லை. இது கண்டு மிரண்ட மன்னன் இறுதியாக காட்டு புலியை பிடித்து வந்து மூன்று நாள் பட்டினிபோட்டு புலியை அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் புலிக்கு இறையாக்க வைகுண்டசாமியை தள்ளினான். பசித்த புலியோ அந்த பரம்பொருளின் பாதார விந்தங்களை வணங்கி நின்றது.
இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்த மன்னனும், மன்னனின் படைகளும் இவர் மனிதனே அல்ல, இவரே இந்த கலியுகத்தை முடிக்கும் பூரண இறை அவதாரம் என உணர்ந்தனர்.

சோதனைகளை எல்லாம் வென்று மீண்டும் சாமி தோப்பிற்கு வந்த வைகுண்ட பரம்பொருள். தம் மக்களை தவவலிமை மிக்கவர்களாக்க எண்ணி ஏழு நூறு குடும்பத்தார்களை துவையல் தவசு செய்யச் செய்தார். அவர்களின் மூலம் ஊர், ஊராக தம் வழிபாட்டு ஆலயங்களை ஏற்படச்செய்தார். சைவம், வைணவம் என பிரிந்து கிடந்த ஆன்மீக உலகத்தில் அய்யா சிவ சிவா அராகரா என்ற அகண்ட நாம மந்திரத்தை உச்சரித்து வழிபடும் முறையை உருவாக்கிக் கொடுத்தார். அன்புக்கொடி மக்களின் வழிபாட்டுமுறை சைவ, சித்தாந்திகளையும், அன்புக்கொடி மக்கள் நெற்றியில் இட்டு கொள்ளும் ஒன்றை திருநாமம் வைணவர்களையும் கவர்ந்து ஈர்த்தது. எனவே இன்று அய்யா வைகுண்டசாமி வழிபாட்டு ஆலயங்கள் இந்தியா முழுவதும் வேராயிரம் பெற்ற விழுதுகளாய் படர்ந்து ஆறாயிரத்திற்கு மேல் தோன்றி உள்ளது.

அகிலத்திரட்டு தரும் அறிவுரை

நாளும் பல ஊழியங்கள் நமக்கு மிகச் செய்திடுங்கோ!
பொருள்:
மனித வாழ்க்கையில் விடியும் ஒவ்வொரு நாளும் இறைவன் ஏற்றுக்கொள்ளத்தக்கதான பொதுச் சேவைகளை முடிந்தமட்டும் செய்துகொண்டே இருங்கள். 

ஏவல் கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வேன்!
பொருள்:
உங்களுடைய சேவையை இறைவன் தனக்குச் செய்த சேவையாக ஏற்று அந்தந்த சேவைகளுக்கு ஏற்ப நமக்கு நற்கதியை அருள்வேன்.

சுமந்த பொற்பதத்தின் சுகம் பெற்று நீ வாழ்வாய்!
பொருள்:
நீ உன் மனதில் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாயோ அதற்கேற்பவே உனக்கு பலன் அருளப்படுகிறது. 

விளக்கின் ஒளி போல் வீரத்தனமாய் இருங்கோ!
பொருள்:
விளக்கு ஏழை, பணக்காரன், வலியோர், எளியோர், படித்தோர், படியாதோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பேதம் பார்க்காமல் தனக்கே உரிய வெளிச்சத்தை கொடுப்பதைப் போல், நீங்களும் பாகுபாடற்ற நிலையில் பயப்படாமல் உங்களால் முடிந்த நற்செயல்களை செய்து கொண்டே இருங்கள். 

தாழக்கிடப்பாறை தற்காப்பதே தர்மம்!
பொருள்:
வாழ்க்கையை வாழ முடியாமல் வதங்குகின்ற ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு உதவியைச் செய்து அவர்களின் வாழ்நாளுக்கு வழி செய்வது, தர்மத்தில் எல்லாம் தலையாய தர்மமாகும்

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

முக்கோடி தர்மம் உகந்தழித்த அன்போரை தக்கோடி நரகமதில் தள்ளவென்றால் உன் மனந்தான்

உயர்ந்தவர்களாக வாழ்ந்தவர்களும் சில வேளைகளில் நான் என்ற 
ஆணவத்தில் அழிந்து போகிறார்கள். நல்லவர்கள் என்றும் நல்லவர்களாக
இருப்பதில்லை. அதுபோலவே தீயவர்களும் என்றும் தீயவர்களாகவே இருப்பதில்லை.
நல்லதும் தீயதும் தான் இந்த உலக வாழ்வு. ஒருவன் எவ்வளவு புண்ணிய 
செயல்களை செய்தாலும் மனம் தூய்மையாக இல்லாவிட்டால் அவற்றால் எந்த 
பயனும் இல்லை. எனவே எல்லாரையும் விட இறைவன் மிக பெரியவன் என்று 
யார் நினைத்து செயல் புரிகிறார்களோ அவர்களே உயர்ந்தவர்கள்.

நானல்லால் நடப்பதுவும் வேறில்லை

உலகில் எத்னை கோடி அவதாரங்கள் நடந்தாலும் அத்தனையும் பரம்பொருள் ஒன்றிலிருந்து வந்த வெளிப்பாடுகளே தவிர அவை வேறு வேறானவைகள் அல்ல. இயற்கை என்ற இறை ஆற்றலே அனைத்தையும் இயக்குகின்றன. இயற்கையின் இயக்கத்திற்கு வேறாக மண்ணில் வேறு எந்த இயக்கமும் நிலை பெற்றிருப்பதில்லை. 

மெய்யரோடு அன்பு மேவியிரு என்மகனே மெய்யர் நன் மக்கள் சான்றோர்...

நமக்கு நாமே உண்மையாக இருப்பதே அழகு. உண்மையில் நிலையாய் இருப்பதே உறுதி. உண்மை நிலையானது. அழியாதது. உண்மையை அறிவது ஞானம். உண்மையை நம்புவது பக்தி. உண்மையாக நடப்பதே மதம் (தர்மம்). முள் நிறைந்த செடியில்தான் ரோஜா மலர்கிறது. அதே போலத்தான் துன்பங்கள், சூழ்ச்சிகள் நிறைந்த இந்த உலகில் அனைவரிடமும் அன்பு பாராட்டி மெய்பொருளாம் ஞானத்தை அடையவேண்டும்.

7. கலி யுகம்

இந்த யுகத்தில் குரோணியின் எஞ்சிய கடைசி துண்டு தானே கலியாணக பிறவி எடுக்கிறது தீய குணம் உள்ள கலியன் ஈசரிடம் பல வரங்களைப் பெற்றுக் கொண்டு பூலோகபூலோகம் வருகின்ற வழியில் நாராயணர் அவனை வழியில் குருக்குட்டு அவன் பெற்ற வரங்களில் பாதியை பலமற்றதாக ஆக்குகிறார். மேலும் "ஆயுதங்களின்றி இருக்கின்ற பண்டரங்களைத் துன்புறுத்தவோ தொல்லை கொடுக்கவோ செய்தால் நான் என் படைத்தளங்களையும் சுற்றத்தாரையும் இழந்து நரகில் சென்றடைவேன் என்று கலியனிடம் சத்துயம் செய்ய வைக்கிறார் நாராயணர். பிறகு அய்யா வைகுண்டர் சான்றோர்கள் குலத்தில் பிறவி செய்து கலியனை வெற்றி கொள்கிறார்.

6. துவாபர யுகம்

இந்த யுகத்தில் குரோணியின் எஞ்சிய இரண்டு துண்டுகளில் ஒரு துண்டு நூறாக பிரிக்கப்பட்டு கௌரவர்கள் பிறக்கின்றனர். நாராயணர் கண்ணனாக பிறக்கிறார். திரேதா யுகதில் கும்ப கரன்னக பிறந்த உயிர் இந்த யுகத்தில் கஞ்சனாக பிறக்கிறது. கண்ணன் முதலில் கொடுமை பொருந்திய கஞ்சனை அழிக்கிறார். பிறகு பஞ்ச பாண்டவர்கள் உதவியோடு கௌரவர்களை அழிக்கிறார். பிறகு எழு தேவ கன்னியர்கள் மூலம் சான்றோரை தமது மகவாக பிறவி செய்கிறார். காளி தேவி சான்றோர்கள் உதவியுடன் தக்கனை அளிக்கிறாள். இதோடு இந்த யுகம் முடியுகிறது.

5. திரேதா யுகம்

இந்த யுகத்தில் குரோனியின் எஞ்சிய மூன்று துண்டுகளில் ஓன்று தீய குணம் உள்ள இராவணனாக பிரக்கிறது. நாராயணர் இராமராக அவதாரம் எடுத்து அவனை அழிக்கிறார். இந்த யுகம் முடிகிறது.

4. கிரேதா யுகம்

இந்த யுகத்தில் குரோணியின் எஞ்சிய நான்கு துண்டுகளில் ஒரு துண்டை இரண்டாக பிளந்து சூரபத்மன் சிங்க முக சூரன் என்னும் இரண்டு அரக்கர்களாக படைக்கபடுகிரர்கள். மீண்டும். நாராயணன் ஆறுமுகனாக வேடங்கள் கொண்டு இருவரையும் அழிக்கிறார். சூரபத்மனின் உயிர் இதே யுகத்திலில் மீண்டும் இரணியனாகப் பிறக்கிறது. நாராயணர் இரணியனுக்கு மகனாக பிரகலாதன் என்னும் பெயருடன் பிறக்கிறார். இரணியன் கட்டுக்கு மீறிய அட்டுளியத்தை ஒழிக்க நாராயணர் நரசிம்ம மாகவும் அவதாரம் எடுத்து இரணியனை அழிக்கிறார. இந்த யுகம் முடிகிறது.

3. நெடிய யுகம்

இந்த யுகத்தில் குரோணியின் ஐந்து துண்டுகளில் ஒரு துண்டு இரண்டு உயிர்களாக பிறவி எடுக்கிறது. அவ்வுயிர்கள் தில்லை மல்லலான் மல்லோசி வாகனன் என்னும் பெயர் பெறுகிறான். அவ்வாறு தோன்றிய இரு அரக்கர்களும் கொடுமை செய்ததால் நாராயணரால் கொல்லபடுகிறார்கள். இந்த யுகம் முடியுருகிறது.

2. சதுர யுகம்

குரோணியின் ஆறு துண்டுகளில் ஒரு துண்டு குண்டோமசலியன் என்னும் பெயருடன் பிறக்கிறது. இவனும் கொடுமை செய்கிறான். எனவே நாராயணர் குண்டோமசலியனை கொள்ள அவனை அவனுக்கு எதிரியாக தோன்றி அவனை அழிக்கிறார். இந்த யுகம் முடியுருகிறது.

1. நீடிய யுகம்

நீடிய யுகத்தில் குரோணி என்னும் அரக்கன் பிறக்கின்றான். அவனுடைய கொடுமையினால் நாராயணர் வரம் பெற்று குரோணியை ஆறு துண்களாக வெட்டி அழிக்கிறார். இந்த யுகம் முடியுருகிறது.

அகிலத்திரட்டு அம்மானை நூலில் யுகம் எட்டு வகைகளாக பிரிக்கபடுகிறது

1. நீடிய யுகம் 

2. சதுர யுகம் 

3. நெடிய யுகம்

 4. கிரேதா யுகம் 

5. திரேதா யுகம் 

6. துவாபர யுகம்

 7. கலி யுகம் 

8. தரும யுகம்.

அகிலத்திரட்டு அம்மானையை பற்றி

நாராயணர் இலட்சுமி தேவியிடம் வைகுண்டலோகத்தில் (அகிலத்தில் வைத்து இக்கதையைச் சொல்லுவதலும், நாராயணர் வைகுண்டலோகத்தில் (அகிலத்தில்) இருந்து கொண்டே எல்லா யுகங்களின் நிகழ்ச்சிகளையும் நடத்துவதாலும் அம்மானையாக இக்கதையை பாடியிருப்பதாலும் இந்நூலுக்கு அகிலத்திரட்டு அம்மனை என்னும் பெயர் இடப்பட்டுள்ளது

வியாழன், 27 நவம்பர், 2014

திருநாமத்தின் மகிமைகள்

செந்தாமரை மலரில் ஒளிர்கின்ற திருநாமம் அய்யா வழி பக்தர்களின் நெற்றி புருவங்களின் மத்தியிலிருந்து ஜோடி வடிவில் திருநாமமாக இடப்படுகிறது. பள்ளியறையை வணங்கிய பக்தர்கள் பதியில் உள்ள பள்ளியறையின் இடது பக்கத்தில் நிற்கின்ற பணிவிடை பட பிள்ளைகளிடம் சுருளைக் கொடுத்து "அய்யாவுக்கு அன்பாக தரப்படுகிறது'' என்று கூற வேண்டும்.
 
பின்னர் பணிவிடைப் பிள்ளைகளால் பக்தர்களுக்கு திருநாமம் இடப்பட்டு, இனிமம் வழங்கப்படுகிறது. திருநாமம் இடப்பயன்படுத்தும் திருமண பூமிக்கு அடியில் உள்ள தூய வெள்ளை நிற திருமண்ணில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இதையே அனைத்து அய்யா வைகுண்ட பதிகளிலும், தாங்கல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
முற்காலத்தில் சில கோவில்களில் திருநீற்றை பூசுவது தீண்டாமையாக கருதப்பட்டது. இதை மாற்றக் கருதிய அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு "தொட்டு திருநாமம்'' ஆதலால் அய்யா வைகுண்டரின் பதிகளிலும், தாங்கல்களிலும் பணிவிடைப் பிள்ளை களால் அன்பர்களுக்கு திருநாமம் இடப்படுகிறது.
 
அத்திருநாமம் இடும்பொழுது பெருவிரலும் ஆட்காட்டி விரலும் இணைந்து இடப்படுகிறது. அதில் பெருவிரல் "நான்'' என்பதையும் குறிக்கின்றது. இம்முறையே "தொட்டு திருநாமம்'' என்று அழைக்கப்படுகிறது. திருநாமம் இடுவதால் பக்தர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது. திருநாமம் அணிந்த அன்பர்களின் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
 
நோயின்றி சுகத்துடன் வாழ முடிகின்றது. தீராத நோய்கள், வலிகள் குணமாகின்றது. தீயசக்திகள் நம்மை விட்டு அகலுகின்றது. கவலைகள் இன்றி இன்பத்துடன் வாழ வழிவகுக்கிறது. தேர்வில் வெற்றி பெற முடிகிறது.
 
தீர்க்க முடியாத துன்பம் தரும் பிரச்சினைகளும் தீர்க்கப்படுகிறது. திருநாமம் இடுவதால் நேர்மையாகவும், உண்மையாகவும், வீரமாகவும், அன்பாகவும் வாழ முடிகின்றது. இத்தகைய சிறப்புகளைத் தருகின்ற திருநாமத்தை தினமும் நம் நெற்றியில் தாங்கி அய்யா வைகுண்டரின் திருவருளைப் பெறுக!

புதன், 26 நவம்பர், 2014

முத்திரி கிணறு :

நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலையில், சுசீந்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஈத்தங்காடு என்னும் ஊர். இங்கிருந்து 3 கி.மீ. பயணித்தால் சாமித்தோப்பை அடையலாம். இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்புகள் நிறைந்த இந்த அழகிய கிராமம், இந்தியா முழுக்கப் பரவி வியாபித்துள்ள சுவாமி அய்யா வைகுண்டரின் தருமபதிகளுக்கு எல்லாம் தலைமைப்பதியாகத் திகழ்கிறது.
முத்திரி கிணறு :
அய்யா வைகுண்டரின் தருமபதிக்குள் நுழைவதற்கு முன்பாக, அய்யா உருவாக்கிய முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றை வலம் வந்து வழிபட்ட பிறகே தருமபதிக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். எந்தவித வேறுபாடும் இன்றி எல்லா மக்களும் பயன்படுத்துவதற்காக அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய பொதுக்கிணறுதான் இந்த முத்திரிக் கிணறு.
முத்திரி என்றால், ‘உத்தரவாதம் தருதல்’ அல்லது ‘நியமித்தல்’ என்று பொருள். அய்யா வைகுண்டரின் தருமபதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் முத்திரிக் கிணறு இருக்கும்.
தர்மபதி:
முத்திரிக் கிணற்றில் புனித நீராடிவிட்டு, அய்யா வைகுண்டரின் தருமபதியை நோக்கிச்சில அடிகள் எடுத்து வைத்ததும், தகதகக்கும் பொன்வாசல் பளிச்சிடும். உள்ளே நுழைந்த உடன் அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்குவாசலை “சிவசிவ சிவசிவா அரகர அரகரா” என்று உச்சரித்து 5 முறை சுற்றி அய்யாவிடம் மாப்பு கேட்டு, ஏழு நிலை ராஜகோபுரம் தாண்டி, தருமபதியின் கிழக்குப் பார்த்த முகப்பு வாசலை அடைய வேண்டும்.. முகப்பு வாசலில் இருந்தே அய்யா வைகுண்டரைத் தரிசிக்கலாம்.
கொடிமரத்தைக் கடந்து தியான மண்டபத்தை அடைந்ததும், அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம்.
பொதுவாக, கோயில்களில் தெய்வங்களை அழகுத் திருமேனிகளில் பார்த்துப் பழக்கப் பட்டிருப்போம். ஆனால், இங்கே அய்யா வைகுண்டரின் திருமேனி முற்றிலும் வித்தியாசமானது. ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாக பாவித்து, அவர் பயன் படுத்திய பொருட்களை மாத்திரமே வைத்து வழிபடுகிறார்கள்.
நிலைக் கண்ணாடி:
நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடி இருக்கிறது. ‘நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’ என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு. அதனாலேயே இப்படியரு வழிபாட்டு முறை! நிலைக் கண்ணாடி முன்பு தீபத்தை ஏற்றிவைத்து, இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்தவரும் அவரே! ‘கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்’ என்பதும் அய்யா வைகுண்டரின் வாக்கு.
உருவ வழிபாடு வேண்டாம் என்பது அய்யா வைகுண்டரின் விருப்பம் என்பதால், அதன்படியே சாமித்தோப்பு உள்ளிட்ட அய்யா வைகுண்டரின் எல்லாத் தருமபதிகளிலும் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது.
அய்யா வைகுண்டரின் பள்ளியறையை வலம் வரும் வழியில் அய்யா வைகுண்டர் மானிட அவதாரத்தில் பயன்படுத்திய கட்டில் வைக்கப்பட்டுள்ள அறையைக் காணலாம்.
பள்ளியறை தரிசனம் முடித்ததும், மறுபடியும் தியான மண்டபம் வழியாக வந்து, தருமபதியின் உள் பிராகாரத்தை வலம் வரலாம். அவ்வாறு வலம் வருகையில், கேரள கட்டடக்கலை முறையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கருவறையின் பொன் விமானத்தைத் தரிசிக்கலாம்.
தருமபதி மட்டுமல்ல, இங்கே பின்பற்றப் படும் அத்தனை வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை.
தீப ஆராதனை கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். தேங்காயை இங்கே உடைப்பது உயிர்ப் பலி கொடுப்பதற்குச் சமம் என்பதால், அப்படிச் செய்வதில்லை. கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி ஆகியவற்றுக்கும் இங்கே இடமில்லை.
அப்படியென்றால், தருமபதிக்கு வரும்போது என்னதான் கொண்டு வரவேண்டும் என்கிறீர்களா?
வெற்றிலை- பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் போதும். இவை, அவற்றைக் கொண்டு வருவோருக்குத் திரும்பத் தரப்படமாட்டாது. மாறாக, இப்படி எல்லா பக்தர்களும் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களும் வழிபாட்டுக்குப் பிறகு, பிரசாதமாக அனைவருக்கும் சரிசமமாகத் தரப்படும்.
‘காணிக்கை வேண்டா(து)ங்கோ…’
என்று அய்யா வைகுண்டரே சொல்லியிருப்பதால், தருமபதிகளில் உண்டியல்கள் கிடையாது. இங்கே பிரதானமாக வலியுறுத்தப்படுவது… ‘உங்களால் முடிந்த தருமத்தைச் செய்யுங்கள்’ என்பதுதான்.
‘தருமம் செய்து தழைத்திருங்கோ…’ 
என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு என்பதால், இங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தருமத்தைச் செய்கிறார்கள். அதாவது, தருமபதிகளில் நடைபெறும் அன்னதானத்துக்குத் தேவையான, தங்களால் முடிந்த நிதி உதவியை மனமுவந்து தரும் பக்தர்கள் இங்கு நிறையப் பேர்.
அய்யா வைகுண்டரைத் தேடி வந்து வழிபட்டால், நாம் நினைத்ததைச் சத்தியமாய் நிறைவேற்றித் தருவார் நம் அய்யா. அனைவரும் சாமித்தோப்பு சென்று அய்யா வைகுண்டரின் திருப்பாதம் பணிந்து வணங்கி, அவர் அருள்பெற்று வருவோம்!
அய்யா உண்டு

அய்யாவின் சிறைவாசமும் அற்புதங்களும்

அய்யாவின் போதனைகள் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் ஈர்த்தன. நாளுக்கு நாள்
அய்யாவை நாடிவருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது.
வைதீக இந்து சமயத்தில் பெருகியிருந்த மூடத்தனத்தில் இருந்து மக்களை மீட்க
வேண்டும் என்பதே அய்யாவின் நோக்கமாக இருந்தது. பேய்களுக்குப் பயந்தும்,
மந்திரவாதிகளுக்கு அஞ்சியும் இருந்த மக்களை அய்யா அழைத்தார். வைகுண்டர்
பிறந்ததால் பேய்கள் அழிந்துவிட்டன என்றும் மந்திரவாதிகளின் சக்தி ஒழிந்து
விட்டது என்றும் கூறினார். யாருக்கும் எந்த நிலைக்கும் அஞ்சாமல் இருக்க
வேண்டும். அடிமைத்தனம் வேண்டவே வேண்டாம். தன்மானம் காப்பதே தர்மம்
என்றெல்லாம் மொழிந்தார்..
தன்னைக் காண வந்தோரின் நோய்களை திருமண்ணும் நீரும் கொடுத்துக்
குணப்படுத்தினார். ஆடம்பரத் திருவிழாக்கள் வேண்டாம், அமைதியாக இறைவனை
வணங்கினாலே போதும் என்றுரைத்தார். கிராமத் தெய்வங்களை வணங்குதல்
வேண்டாம். திருமால் மட்டுமே தெய்வம் அவனையே வணங்குங்கள் என்று

அறிவுறுத்தினார்.
அய்யாவின் போதனைகள் மேல்தட்டு மக்களான வைதீக இந்துக்களின் கோபத்தைத்
தூண்டிவிட்டது.. மேலும் கிறித்தவ மதமாற்றமும் நின்றுபோனதால்,
கிறித்தவர்களும் அய்யாவின் மேல் கோபத்தில் இருந்தனர். தன்னை இறைவனின்
அவதாரம் என்று சொல்லி மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக மன்னனிடம்
புகார் அளிக்கப் பட்டது. அய்யாவைப் பற்றிக் கேள்விப் பட்ட மன்னன்
சுவாதித் திருநாள் சுசீந்திரம் வந்து தங்கினான். தன் மந்திரியிடம்
அய்யாவைப் பற்றி விசாரித்தான். மந்திரியும், "நமக்கு வரி செலுத்தி
அடிமைத்தனம் செய்யும் சாணார் குலத்தில் வைகுண்டராய்த் தோன்றியதாய்
சொல்லிக் கொள்கின்றான். மெய்க்கொண்ட பூமியெல்லாம் வேறொருவர் ஆளாமல் தாமே
முடிசூடி ஆள்வோம் என்றும் சொல்லிக் கொள்கின்றான்" என்றுரைத்தான். ஒரு
ஜோசியனை வரவழைத்து தன்னிலும் பெரியவன் யாரெனக் கேட்டான் மன்னன் .
ஜோசியனும் "மண்ணுலகையெல்லாம் ஒரு குடையில் ஆள மகாவிட்ணு மானுடனாய்த்
தோன்றுவார். அவர் தோன்றும் காலமும் இதுவே" என்றான். "அவர் பிறக்கும்
குலம் யாது?" என மன்னன் வினவ "அது பெரிய வம்சாவழி கொண்ட குலமாக
இருக்கும்" என்று ஜோசியன் உரைத்துச் சென்றுவிட்டான்.
இதனால் மகாவிட்ணு போற்றுதற்குரிய நம்பூதிரி குலத்தில் பிறப்பார் என்றும்
சாணார் குலத்தில் மகாவிட்ணு அவதரிப்பது நடக்க இயலாத ஒன்று என்றும் முடிவு
செய்த மன்னன் வைகுண்டரை கைது செய்து அழைத்துவரக் கட்டளையிட்டான்.
அய்யாவைக் கைது செய்ய படைகள் புறப்பட்டன.. மக்கள் வெகுண்டெழுந்தனர்.
எல்லாம் இறைவனின் சித்தம் என்பதை உணர்ந்த அய்யா பொறுமை காக்கும்படி தம்
மக்களுக்கு அறிவுறுத்தினார். "பொறுத்திருங்கள். உங்களை பூலோகம்
ஆளவைப்பேன். நன்மையைச் சொல்லி, நல்லவழி நடந்து சிரிக்கப் போவது எந்த சாதி
என்று பார்த்து விடலாம்" என்றுரைத்தார்.
படை வீரர்கள் வந்து அய்யாவைக் கட்டிலில் இருந்து கீழே தள்ளி,
துப்பாக்கியால் அடித்துக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றனர்.
வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் அய்யாவின் புன்னகை கண்டு அமைதியானது.
"சாணார் குலத்தில் சாமி அவதரிப்பானோ?" என்ற கேலியை உதாசீனம் செய்த அய்யா
இறைவனின் கட்டளைப் படி அமைதியாக சென்றார்.
தளபதி கௌடன் என்பவன் அய்யாவை மிகவும் கேலி செய்தான். அடித்தான். "அவன்
அடித்த அடியையெல்லாம் ஆபரணமாக அகத்தில் அணிந்து கொண்டேன்" என்று
அகிலத்திரட்டில் பாடுகின்றார் அய்யா.
கலிநீசன் என்று அய்யாவால் அழைக்கப் பட்ட திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன்
சுவாதித் திருநாளின் முன்னிலையில் அய்யா குற்றவாளியாக நிறுத்தப் பட்டார்.
அய்யா தனது சக்தியை எல்லாம் மறைத்து சாதாரண மனிதனாக அவன் முன்னால்
நின்றார். இவனை சோதனை செய்வோம் என்று எண்ணிய மன்னன் தன் கையில் இருப்பது
என்ன என்று கேட்க "இறைவனின் எண்ணம் எதுவோ அது இருக்கும்" என்று
பதிலுரைத்தார் அய்யா. இதனால் அவர் கள்ளசாமி என்று முடிவு செய்த மன்னன்
ஆத்திரமுற்றான். அய்யாவை சரடன் என்னும் கொடிய தளபதியிடம் அழைத்துச்
செல்லக் கட்டளையிட்டான்.
சரடனும் அய்யாவை நிந்தித்து, ஓர் பாத்திரத்தில் சாராயத்தை ஊற்றி அதில்
ஐந்து வித விடங்களைக் கலந்து பால் என்று சொல்லி அய்யாவுக்கு அளித்தான்.
அறியாதவரா அய்யா? ஆயினும் இறைவனின் திருவுளப்படி எல்லாம் நடைபெற வேண்டும்
என்று சொல்லி அதைக் குடித்தார். ஆயினும் எதுவும் ஆகவில்லை. எனவே திகைத்த
சரடன் அய்யாவை சிறைக்குள் தள்ளக் கட்டளையிட்டான்.
கடுஞ்சிறைக்குள் அய்யா தள்ளப்பட்டார். கடுவாய் ஒன்றைப் பட்டினி போட்டு
அதையும் அய்யா இருந்த சிறையறையில் தள்ளினார்கள்..
கொடிய பசியோடு வந்த கடுவாயோ அய்யாவின் அருகில் சாந்தமாய் அமர்ந்தது..
இதைக் கண்ட நம்பூதிரி ஒருவன் சேவகனின் ஈட்டியை வாங்கி கடுவாயைக் குத்தி
அதை வெறியேற்றினான். வெறிகொண்ட கடுவாய் அந்த ஈட்டியைத் தன் வாயால்
கவ்விக் கொண்டது. நம்பூதிரி அதை பலங்கொண்டு இழுக்கத் தனது பிடியை
விட்டது. இதனால் தடுமாறி கீழே விழுந்த நம்பூதிரியின் மார்பில் அந்த ஈட்டி
இறங்கியது. இதனால் மரணமடைந்தான்.
இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. நம்பூதிரி ஒருவன் இதைப் போன்ற கொடியமரணம்
எய்துவது மன்னனுக்கு உகந்ததல்ல என்று அவையோர் மன்னனுக்கு உரைத்தனர்.
இதனால் மன்னன் பயந்து போனான். "நீர் பிறந்த சாணார் குலத்துக்காக மட்டும்
வேண்டுமானால் போராடிக் கொள்ளலாம். அவர்களுக்குரிய உரிமையை மட்டும்
தருகின்றேன். மீதமுள்ள சாதியரோடு நீர் பேசக்கூடாது" என்று ஓர் ஓலையில்
எழுதி அய்யாவுக்கு அனுப்பினான். அய்யாவோ "சான்றோர் குலத்தில் பிறந்ததால்
அவர்களுக்காக மட்டும் பிறந்தவனல்ல.. மானுடர் அனைவருக்காகவும் பிறந்தேன்.
அனைவருக்காகவும் சேதிகள் உரைப்பேன்" என்று பதிலுரைத்தார்.
இதனால் மன்னன் அய்யாவை விடுதலை செய்யத் திட்டமிட்டு அவரை விடுதலை செய்ய
உத்தரவிட்டான். "நீ நினைத்தபடி அல்ல... எம் அதிகாரத் தந்தை இறைவன்
கட்டளைப் படியே சிறைக்கு வந்தோம்.. நீ குறித்த நாளில் அல்ல... இறைவன்
சொல்லும் நாளிலேயே வெளியே வருவோம்" என்றுரைத்து வெளியேறாமல் சிறைக்குள்

இருந்தார்.
மாசி மாதத்தில் இறைவன் குறித்த திருநாளில் அய்யா சிறையில் இருந்து
வெளியேறினார். அவரை சான்றோர்கள் வாகனத்தில் அமர்த்தி சாமித் தோப்புக்கு
அழைத்து வந்தனர். இந்நிகழ்வை இன்று அய்யா வழி மக்கள் கொண்டாடி
வருகின்றனர்.
சிறைவாசம் செய்து மீண்ட அய்யா செய்த சில அற்புதங்களைப் பற்றி

தவமும் போதனைகளும்

ய்யாவின் தவமும் போதனைகளும்
முத்துக்குட்டி கடலுற்சென்று வைகுண்டம் கண்டு மீண்டு வைகுண்டப்
பண்டாரமாய் தென்னகம் நோக்கி நடக்கலானார். தன் தாய்க்கு மட்டுமே
வைகுண்டத்தின் காட்சியைக் காண்பித்து அதை யாருக்கும் உரைக்க வேண்டாம்
என்று கூறிவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
தனது பிறப்பிடத்திற்கு அவர் சென்ற போது அவரை எதிர்த்தவர்கள் பலர்.
ஆயினும் பூவண்டர் எனும் இடையர் தனது தென்னந்தோப்பை அய்யாவுக்குக்
கொடுத்தார். அய்யாவும் அத்தென்னந்தோப்பை மகிழ்வுடன் ஏற்றார். அனைத்தையும்
துறந்து வைகுண்டப் பண்டாரம் அத்தோப்பில் தனது தவவாழ்க்கையை ஆரம்பித்தார்.
அதிகாரத்தந்தை அவதார மகனுக்கு இட்ட கட்டளையே இந்த தவ வாழ்க்கை என்று கூறி
ஆறு ஆண்டுகள் தவம் செய்தார்.
முதல் இரு ஆண்டுகள் கலியுகம் அழிந்து தரும யுகம் தோன்றுவதற்காகவும்,
இரண்டாம் இரு ஆண்டுகள் சாதிக்கொடுமைகள் நீங்கவும், மூன்றாம் இரு ஆண்டுகள்
பெண்ண்டிமை தீர்வதற்கும், நல்ல வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும்
என்றுரைத்தார். இதனை அவரே
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"
என்று பாடுகின்றார்.
அய்யாவின் முதல் இருஆண்டுகள்  தவ வாழ்க்கை ஆறு அடி ஆழமுள்ள பள்ளத்தில்
நிகழ்ந்தது. இரண்டாம் இரு ஆண்டுகள் தவவாழ்க்கையை வீராசனம் இட்டுத்
தரைமேல் நிகழ்த்தினார். மூன்றாம் இருஆண்டுகள் தவமோ கடுமையான மௌனதவம்.
இதனை ஓர் பீடத்தை அமைத்து அதன் மேல் அமர்ந்து நிகழ்த்தினார்.
அய்யா தனது தவ வாழ்க்கையின்போது பச்சரிப் பாலை மட்டுமே அருந்தினார்.
வைகுண்டர் உரைத்த ஆறு ஆண்டுகள் தவவாழ்க்கை முடிவுற்றது.. அய்யா தவமிருந்த
காலத்தில் அவரைத்தேடி பதினெட்டு சாதி மக்களும் வந்து கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட அய்யா இவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று
எண்ணங்கொண்டார்.
அந்த சமயத்தில் பொதுக்கிணற்றில் வருணாசிரமத்தைச் சாராத இந்த பதினெட்டு
சாதியினருக்கும் தண்ணீரெடுக்க அனுமதியில்லை.. எனவே தனது பூவண்டன்
தோப்பில் ஓர் கிணற்றை ஏற்படுத்தினார். அது முந்திரி கிணறு என்றழைக்கப்
பட்டது. அந்த கிணற்றை பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு
பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்.
தன்மானம் மட்டுமே கலியை அழிக்கவல்ல ஆயுதம் என்று அய்யா போதித்தார்.
"தன்மானத்தைத் தாங்கியிரு என் மகனே" என்று பாடினார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப் பட்டிருந்த
காலம் அது. தாழ்த்தப் பட்டோர் சிறு தெய்வ வழிபாடுகளில்
ஈடுபட்டிருந்தார்கள். இதை அய்யா எதிர்த்தார். திருமால் ஒருவனே தெய்வம்,
அவனை விடுத்து வேறு பேய் பிசாசுகளை வணங்க வேண்டாம் என்று
அறிவுறுத்தினார். ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவோர் மேலாடை
கழற்றி, இடுப்பில் துண்டு கட்டி வழிபாடு நிக்ழ்த்தினர். ஆனால் அய்யா தனது
பதிக்கு வரும் அன்பர்களை மேலாடை அணிந்து வரச்செய்தார். தலைக்குத் பாகைக்
கட்டி தன்மானத்தோடு வா என்றுரைத்தார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் போன்று
தாழ்த்தப்பட்டோரும் திருவிழாக்களைக் கொண்டாடி வந்தனர். வழிபாட்டின்
பேரில் பணத்தை விரயம் செய்யாதீங்கோ என்றுரைத்த அய்யா கடவுளின் பெயரால்
பணத்தைக் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்றுரைத்தார்.
உருவ வழிபாட்டை அய்யா மிகக்கடுமையாக எதிர்த்தார். இறைவன் அன்பு வடிவானவன்
என்றும் அவன் அனைவருள்ளும் இருக்கின்றான் என்றும் உரைத்த அய்யா தனது
பதியின் பள்ளியறையில் ஓர் கண்ணாடியை மட்டும் நிறுவினார். உன்னிலே
இறைவனைக் காண் என்பது அதன் மறை பொருள்.
நியாயம் தவறாமல் நேர்மையோடு யாருக்கும் அஞ்சாத வாழ்க்கை வாழ்வதே
இறைவனுக்குப் பிரியமானது என்றுரைத்த அய்யா அதன்படி வாழும்படி தன்
மக்களுக்குப் போதித்தார்.
அய்யா தனது வழியை அன்பு வழி என்று அழைத்தார். தன் மக்களை அன்புக்கொடி
மக்கள் என்றழைத்தார். இது போன்று புதுமையான கருத்துக்களை அய்யா
மொழிந்ததால் நாள்தோறும் அவரைக்காண வரும் பக்தர்களின் கூட்டம்
அதிகரித்தது. அதே சமயத்தில் வைதீக மதத்தின் ஆடம்பர வழிபாட்டு முறைகளுக்கு
அய்யாவின் உரைகள் ஓர் சம்மட்டியாக விழுந்தது.
தன்னைத் திருமாலின் அவதார மகன் என்றுரைத்தது ஆதிக்க சாதியினருக்குப்
பிடிக்கவில்லை. மகாவிட்ணுவின் அவதாரம் என்று கூறி மக்களைத்
திசைதிருப்புகின்றார் என்ற குற்றச்சாட்டு அய்யாவின் மேல் சுமத்தப்
பட்டது.
மேலும் கிறித்தவர்களாக மதம் மாறத்துவங்கிய காலக்கட்டத்தில் மதமாற்றத்தைத்
தடுத்து நிறுத்தியதும் அய்யாவின் செயல்தான். ஆனாலும் தனது போதனைகளில். இதனால்
கிறித்தவப் பாதிரிமார்கள் ஆத்திரம் அடைந்தனர். அய்யாவைப் பற்றிய
அவதூறுகளைப் பரப்பத் துவங்கினார்.. ஆனாலும் அய்யா எதைப் பற்றியும் கவலை
கொள்ளவில்லை. தனது பணியை செவ்வனே செய்தார்.
தாழ்த்தப்பட்ட பதினெட்டு சாதியினருக்குள்ளும் ஏற்றதாழ்வுகள் இருந்தன.
இதனை முதலில் களைய வேண்டும் என்று எண்ணிய அய்யா சமபந்தி போஜனத்தை
ஆரம்பித்து வைத்தார். முதலில் மறுத்த பலரும், அய்யாவின் அருளுரைகள்
கேட்டுத் திருந்தி ஒற்றுமையாக உணவருந்தினர்.
அச்சமயத்தில் ஏற்கெனவே உரைத்தது போல் தாழ்த்தப்பட்ட சாதியின் பெண்கள்
மேலாடை அணிய அனுமதியில்லை.. இதனை எதிர்க்க அய்யா நிகழ்த்திய தோள்சீலைப்
போராட்டத்தைப் பற்றி அடுத்த மடலில் காண்போம்.

அய்யாவின் முற்பிறப்பும் அவதார நோக்கமும்

கடலுள் மறைந்த அய்யா மூன்றாவது நாள் திரும்பி வந்தார். புத்தம் புது
உடலோடு.. தன்னை அணைக்க வந்த அன்னையைத் தடுத்து "நான் உன் மகன் அல்லேன்.
கலியுகத்தை அழித்துத் தருமயுகத்தை நிலைநாட்ட வந்த நாராயணன்" என்றுரைத்த
போது அதனை அன்னையார் நம்பவில்லை... எனவே தனது முற்பிறவியைப் பற்றிய
உண்மையை அய்யா அவர்கள் தன் தாயாருக்கு இயம்ப வேண்டியதாயிற்று.
அமரர்களின் கர்வத்தை அடக்கும் பொருட்டு சிவபெருமான் குரோணி என்னும்
அசுரனைப் படைத்தார். இவ்வசுரன் அனைத்துலகத்தையும் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றான். வைகுண்டத்தை வெற்றி கொள்ள
குரோணி சென்றபோது கோபங்கொண்ட திருமால் குரோணியைக் கொன்றார். அவனது உடலை
ஆறு துண்டுகளாக வெட்டினார். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தின் சிறப்பை
உணர்த்துவதற்காக குரோணியின் உடல் ஒவ்வொரு அசுரனாகப் பிறந்தது.
சதிர்யுகம், நெடியுகம், கிருதயுகம், திரேதாயுகம், துவாபாரயுகம் என்னும்
ஐந்து யுகங்களிலும் அசுரனாகப் பிறந்தான். திருமால் பல்வேறு அவதாரங்களை
எடுத்து குரோணியை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டினார்.
ஆறாவது யுகமான கலியுகத்தில், குரோணி மாயையாக உடலற்றுப் பிறந்தான்.
அதன்படி மக்களின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தி அதன் மூலம்
அதர்மத்தை வளர்த்த கலிநீசன்தான் குரோணியின் ஆறாவது துண்டு.
கலிநீசனின் செய்கைகளைக் கண்காணிக்க சம்பூரண தேவன் என்பவனைத் திருமால்
பூலோகத்துக்குச் செல்லக் கட்டளையிட்டார். சம்பூரண தேவனுக்கு எமலோகத்தைச்
சேர்ந்த பரதேவதையின் மேல் காதல் இருந்தது. அவளுக்கு ஏற்கெனவே மணமாகி
இருகுழந்தைகள் இருந்தன. ஆனாலும் அவளும் சம்பூரண தேவன் மீது காதல்
வயப்பட்டாள்.
எனவே சம்பூரணதேவன் திருமாலிடம் தன் காதலியும் தன்னோடு பூலோகம் வரவேண்டும்
என்று வரம் வேண்டினான். அமரனாகப் பிறந்த சம்பூரணதேவனுக்கு அவள்
பொருத்தமற்றவள் என்றும், மாற்றான் மனைவி என்றும் திருமால்
அறிவுறுத்தினார். ஆனால் சம்பூரண தேவன் திருமாலிடம் மிக உருக்கமாக
வேண்டிக் கொண்டான். எனவே அவனைத் தவம் செய்ய பணித்தார். "உன் தவத்தின்
வலிமை கண்டு உனக்கு வரம் தருவேன்" என்றுரைத்தார்.
எனவே சம்பூரண தேவனும், பரதேவதையும் தவம் புரிந்தார்கள். அவர்களது தவம்
பூரணம் அடையும் வேளையில் சிவபெருமானும், திருமாலும் அவர்களுக்கு வரம்
வழங்க வந்தனர். அவர்களை வரவேற்க அமரர் குல அதிபதியான இந்திரனும் வந்தான்.
இந்திரனைக் கண்டதும் இந்திரபதவியின் மேல் மோகம் கொண்டான் சம்பூரண தேவன்.
தன் காதலியுடன் பூலோகம் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்த தவம்
தேவேந்திர பதவி வேண்டும் என்ற பேராசையில் முடிந்தது.
இதனைக் கேட்ட திருமால் கோபம் கொண்டார். அவர்கள் இருவரையும் பூமியில்
பிறக்க ஆணையிட்டார்.
பரதேவதை ஏற்கெனவே தனது கணவன் மற்றும், குழந்தைகளுக்குத் துரோகம்
இழைத்ததால், கலியுகத்தில் அந்தக் கணவனோடு சேரவேண்டும் என்றும்,
குறிப்பிட்ட காலத்தில் தன் கணவனை இழப்பாள் என்றும் சாபமிட்டார். ஆயினும்
சம்பூரணதேவன் உனக்காகப் பிறப்பான். உன்னை மணப்பான். என்றும் கூறினார்.
சம்பூரண தேவனுக்கும் அவன் பேராசைப் பட்டதால் அதற்குத் தண்டனை நிச்சயம்
உண்டு என்றும் பூலோகத்தில் பிறந்து 22 வயது வரை சாதாரண மானுட வாழ்க்கை
வாழ வேண்டும் என்ரும், கணவனை இழந்த பரதேவதையை மணக்க வேண்டும் என்றும்
கூறினார். அச்சமயத்தில் தீராத நோய்க்கு ஆளாகி மரணத்தில் விளிம்பில்
நிற்கும்போது தானே சம்பூரண தேவனின் உடலில் இறங்கி அவனை மீட்டுக்
கொள்வதாகவும், அவ்வுடல் மூலம் தர்மத்தை நிலைநாட்டப் போவதாகவும் கூறினார்.
அய்யா அவர்கள் தானே அந்த சம்பூரண தேவன் என்றும், கடலில் தன்னை திருமாலின்
தூதர்கள் வைகுண்டம் அழைத்துப் போனார்கள் என்றும் அங்கே திருமால் தனக்கு
கலியை அழிக்கும் வழியைப் போதித்தார் என்றும் உரைத்தார். அங்கிருந்து
திருமால் தன்னை அவரது மகன் என்று உரைத்தமை பற்றிக் கூறிய அய்யா அவர்கள்
அவர் எப்போதும் தம்மோடு இருப்பதாகவும் கூறித் தன்னை வைகுண்டர் என்று
பூலோகத்திற்குத் திருப்பி அனுப்பியதாகவும் அய்யா தெரிவித்தார்.
தன் அன்னையாருக்குக் கடலில் வைகுண்டத்தின் காட்சியைக் காணச்செய்து இதை
யாருக்கும் உரைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதே சமயத்தில் அய்யா இன்னொரு உண்மையையும் எடுத்துரைத்தார். பொன்னுமாடன்
நாடாருக்கும், வெயிலாள் அம்மாளுக்கும் பிறந்த குழந்தை பிறந்த சிறு
நேரத்திலே இறந்து விட்டதாகவும் அச்சமயத்தில்தான் சம்பூரணதேவன் அவ்வுடலுள்
செலுத்தப் பட்டதாகவும் கூறினார். இதனைத் தாயாரும் ஒப்புக் கொண்டார்.
பிறந்த குழந்தை சிறிது நேரம் சலனமில்லாமல் கிடந்ததையும், பின்னர்
அழுததையும் அன்னை நினைவு கூர்ந்தார்.
அய்யா வைகுண்டர் திருமாலிடம் கலிநீசன் வாங்கி வந்த வரத்தைப் பற்றி
உரைத்தார். அதன்படி கலியை அழிக்கவும் ஆட்டுவிக்கவும் பண்டார வடிவங்கொண்டு
திருமாலே வைகுண்டராக அவதரித்தார். பண்டார உருக்கொண்டு அன்னைக்கு
உபதேசித்துப் பின்னர் தென் திசை நோக்கி நடக்கலானார்.
தென் திசை நோக்கி நடந்த அய்யா என்ன செய்தார்? என்னவெல்லாம் போதித்தார்?
அடுத்த மடலில் காணலாம்.

அய்யா வைகுண்டரின் தத்துவங்களையும், போதனைகளையும் தினந்தோறும் நினைவு கூறுகின்றன.

தங்களைத் தாங்களே வணங்கிக் கொள்ளும் ஒரு சம்பிரதாயம் கன்னியாகுமரியில் ஒரு சாராரிடம் உள்ளது. தன்னைத்தானே எப்படி வணங்கிக் கொள்வது? கருவறைக்குள் நிலைக்கண்ணாடியை வைத்து அதில் தெரியும் தங்கள் உருவத்தையே வணங்குகிறார்கள். அவர்கள் - அய்யா வழியினர்.
கன்னியாகுமரி சாஸ்தான் கோவில்விளையில் வாழ்ந்து, சரித்திரமாய் மறைந்த அய்யா வைகுண்டர் கட்டமைத்த தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுவோரே அய்யாவழி மக்கள். மாபெரும் சமூக சீர்திருத்தவாதியாக அடையாளம் காட்டப்படும் வைகுண்டர், திருமாலின் அவதாரமாக கருதி வணங்கப்படுகிறார்.
மஹாவிஷ்ணு தசாவதாரம் எடுத்தவர். அதோடு, கலி மாயையில் சிக்கி வேதனைக்குள்ளாகும் மாந்தர்களை காக்க நாராயணன் எடுத்த மற்றொரு அவதாரமே வைகுண்டவதாரம் என்று அய்யாவழி மக்கள் நம்புகிறார்கள்.
1809-ல் குமரி மாவட்டத்தின் சாஸ்தான் கோவில்விளை என்று அழைக்கப்படும் சாமித்தோப்பில் பொன்னுமாடன்-வெயிலாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் வைகுண்டர். மகனுக்கு ‘முடிசூடும் பெருமாள்’ என பெயரிட்டனர் பெற்றோர்.
மாடன், சூடன் என்று மட்டுமே பெயரிட உரிமைபெற்ற ஒரு சாதியில் பிறந்தவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயரிட்டதை மேல்சாதியினர் அங்கீகரிக்க மறுத்தனர். கொடுமைகளையும், மிரட்டலையும் சகிக்காத பொன்னுமாடன் ‘முடிசூடும் பெருமாள்’ என்ற பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார்.
முத்துக்குட்டி, இளவயதிலேயே சமூக ஆர்வம் மிக்கவராக இருந்தார். மேல் சாதியினரின் கொடுமைகளுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பினார். ஆண்டாண்டு காலமாக அடங்கி ஒடுங்கி கிடந்த மக்களுக்கு உணர்வூட்டும் விதமாக போதனைகள் செய்தார். தலையிலே முண்டாசு கட்டி, நெற்றியில் நாமம் இட்டு, முட்டுக்கு கீழே முழு வேட்டி கட்டி வழிபடும் உரிமையை பெற்று தந்தார். இதனால் முத்துக்குட்டி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அனைத்தையும் தன் உறுதியால் விரட்டினார். இந்த நிலையில் தன்னைவிட வயது முதிர்ந்த, ஒரு பெண் குழந்தைக்கு தாயான திருமால் வடிவு என்ற பெண்ணை மணம் புரிந்தார் முத்துக்குட்டி. இந்த இல்லற வாழ்வில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
முத்துக்குட்டியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ராஜவம்சம், அவரை மருந்துவாழ்மலைக்கு விருந்துக்கு அழைத்து விஷம் கொடுத்தது. சிறிது சிறிதாக உயிர் எடுக்கும் அந்த விஷத்தால் கடும் காய்ச்சலுக்கு உள்ளானார் முத்துக்குட்டி. பல்வேறு மருத்துவங்களாலும் குணம் தெரியவில்லை. இதனால் துடித்துப்போன தாயார் வெயிலாளும், மனைவி திருமால்வடிவும், நாராயணனின் அருள்வேண்டி உருகி நின்றனர்.
ஒருநாள் இரவில் ஒளிவடிவாய் தோன்றிய நாராயணன், ‘திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் மாசித் திருவிழாவுக்கு உன் பிள்ளையை அழைத்து வா’ என்று ஆணையிட்டார். உடல்நிலை மிகவும் தொய்வடைந்த நிலையில் பெண்கள் இருவரும் தொட்டில் கட்டி முத்துக்குட்டியை தோளில் சுமந்து சென்றனர். கூடங்குளம் அருகில் நவலாடி என்ற இடத்தில் உணவருந்துவதற்காக தோள்சுமையை இறக்கியபோது முடங்கிக் கிடந்த முத்துக்குட்டி எழுந்தார், நடந்தார். நேராக திருச்செந்தூர் கடற்கரைக்குச் சென்றார். தாய்க்கும் மனைவிக்கும் இந்த அற்புதம் மயக்கத்தையே கொடுத்தது.
விறுவிறுவென்று கடலுக்குள் இறங்கிய முத்துக்குட்டியை சிறிது நேரத்தில் காணவில்லை. இறக்கும் நிலையில் கொண்டு வரப்பட்ட ஒருவர் கடலுக்குள் நடந்து சென்று மறைந்தது அங்கே கூடியிருந்த மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. முத்துக்குட்டி கடலுக்குள் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணினார்கள். ஆயினும் வெயிலாள் மட்டும் கரையில் மகனின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார்.
கடலுக்குள் சென்ற முத்துக்குட்டியை, நாராயணரின் தூதுவர்கள் லெட்சுமி கோயில் கொண்டிருந்த மகர மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு திருமால் மூன்று நாட்கள் கலிகாலம் பற்றி போதித்து வைகுண்டர் என்று நாமகரணம் சூட்டி, பூவுலகை ரட்சிக்க தன் பிரதிநிதியாய் வெளியில் அனுப்பிவைத்தார். கடலுக்குள் இருந்து ஒளியாய் வெளிவந்த மகனை கட்டி அணைத்து முத்தமிட்டார் வெயிலாள்.
ஆனால், ‘அம்மா. நான் வைகுண்டராக வந்திருக்கிறேன். இனி நான் இந்த பூவுலகிற்கே சொந்தம்’ என்று தன் நிலையை விளக்கினார், மகன். இதைக்கேட்ட மக்களும் வெயிலாளைப் போலவே திகைத்து நின்றனர்.
பின்னர் சாமித்தோப்பு வந்த வைகுண்டர், மக்களுக்கு ஆன்மிக போதனைகளை செய்யத் தொடங்கினார். Ôஇந்த உலகத்தில் சாதியின் பெயரால் மோதல்கள் உருவாகிவிட்டன. மதத்தின் பெயரால் சண்டைகள் பெருகிவிட்டன. இருப்பவன், இல்லாதவன் என்று ஏகப்பட்ட பிரச்னைகள்- மனிதர்கள் திசைமாறி சென்று கொண்டிருக்கிறார்கள்.
இவை எல்லாம் கலியின் அடையாளங்கள். இவற்றை ஒழிக்கவே நான் அவதாரம் எடுத்திருக்கிறேன்’ என்று மக்களுக்கு போதிக்கத் தொடங்கினார். மனிதருக்குள் எந்த பேதமுமின்றி அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை பெற்று தந்தார். சாதிக்கொடுமைக்கு எதிரான அவரது பிரசாரம், திருவிதாங்கூர் அரசுக்குக் கோபமூட்டியது. அவருக்கு தண்டனை அளிக்க திட்டமிடப்பட்டது. புலிக்கூண்டிற்குள் தூக்கி வீசப்பட்டார் வைகுண்டர். பல நாட்களாகப் பசியும் பட்டினியுமாகக் கிடந்த புலி, வைகுண்டரை பார்த்ததும் அமைதி யாய் அவர் காலடியில் வந்து படுத்தது. ராஜ கொடுமைகளைத் தன் சக்தியால் முறியடித்த வைகுண்டர், பின்னர் குமரிக்கு வந்து பதிகள் அமைத்து மக்களுக்கு போதனைகள் செய்தார்.
அவர் அருளிய ‘அகிலதிரட்டு அம்மானை’ இன்று அவர் வழிவந்த மக்களுக்கு புனித நூலாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கு மேலானோர் இன்று அய்யாவழியை பின்பற்றி வருகின்றனர். அய்யாவழி வழிபாட்டு தலங்கள் ‘பதிகள்’ என்று அழைக் கப்படுகின்றன. அய்யா வைகுண்டரின் பாதம் பட்ட சாமித்தோப்பு தலைமைபதி, சின்னமுட்டம். முட்டபதி, சொத்தவிளை அம்பலபதி, நாராயணன்விளை. பூப்பதி, தென்தாமரைகுளம்பதி, கோவளம், துவாரகாபதி ஆக விளங்குகின்றன. இது தவிர தமிழகம் முழுமைக்கும் ஏழாயிரத்துக்கும் அதிகமான தாங்கல்கள் உள்ளன. இந்த தாங்கல்கள் அய்யாவின் தத்துவங்களை விளக்கும் கல்விக்கூடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை, எளிமையை வலியுறுத்துகிறது அய்யாவழி வழிபாட்டு முறை. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது தொழ வேண்டும் என்பது நியதி.
காலை உகப்பெருக்கு, மதியம் உச்சிப்படிப்பு, இரவு உகப்பெருக்கு ஆகியவை கடைபிடிக்கப்படவேண்டிய முக்கிய நடை முறைகள். ‘பிச்சையெடுத்து மிச்சமில்லாமல் அறப்பணியாற்று’ என்று அய்யா வைகுண்டரின் தத்துவத்துக்கு ஏற்ப எல்லா பதிகளிலும் 5 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. அய்யாவழி மக்கள் நாமம் இடப் பயன்படுத்தும் திருநீறு பூமிக்கு அடியில் உள்ள தூய வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக் கப்படுகிறது. புருவ மத்தியில் இருந்து தீபவடிவில் நெற்றியில் மேல்நோக்கி இந்நாமம் இடப்படுகிறது.
அய்யாவழி மக்களின் தலைமைபதியாகிய சாமித்தோப்பு பதியில் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மாசி 20-ம் நாள் அய்யா வைகுண்டரின் அவதாரத்திருநாள்; சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பதியில் உள்ள முத்திரிபதம் என்னும் தீர்த்த கிணறு, சிறப்பு பெற்றதாகும். ஆராதனை, அபிஷேகம் இல்லாத அய்யா வழிபாட்டு முறைக்கு இத்தீர்த்த பதத்தை தெளிப்பதன் மூலம் அனைத்து சிறப்பும் நிறைவு பெற்றுவிடுவதாக நம்பப்படுகிறது.
இந்த தீர்த்தம் அருமருந்து என்றும் போற்றப்படுகிறது. முண்டாசு கட்டி தீப நாமமிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பதிகளுக்கு வந்து வழிபடுகின்றனர். மேலும் சாமித்தோப்பு தலைமைபதியின் கருவறைக்குள் ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது. அதன்மேல் அகிலத்திரட்டு மூலச்சுவடி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டில் மாற்றப்படும். ஏனென்றால் பழைய கட்டில் முற்றிலும் கிழிந்திருக்கும். இக்கட்டிலில் அய்யா வைகுண்டர் வந்து உறங்குவதாக அய்யா வழி மக்கள் நம்புகிறார்கள்.
குமரி கடலோரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல கிராமங்கள், அய்யா வைகுண்டரின் தத்துவங்களையும், போதனைகளையும் தினந்தோறும் நினைவு கூறுகின்றன.
பிரதி எடுக்க
எழுத்தின் அளவு

அய்யாஉண்

அய்யா உண்டு தாழ கிடப்பாரை தற்காப்பதே தர்மம் அன்பு கொடி மக்களுக்கு வணக்கம், மகாவிஷ்ணுவின் அவதாரமான வைகுண்ட அவதாரத்தின் நோக்கம் பற்றிய அகிலதிரட்டின் உண்மையான கருத்துகளை அய்யாவின் சான்றோர் மக்களுக்கு தெரிவிப்பர்தே இந்த பகுதியின் நோக்கமாகும். 1.,அனைத்து அய்யாவழி குடும்பக்களுக்கும் அகிலதிரட்டினை சேர்ப்பது, 2.,அனைத்து தாங்கல்களிலும் பிரதி ஞாயிற்று கிழமைகளில் மகாவிஷ்ணுவின் அவதார செய்தி கூட்டங்களை நடத்துவது, 3.,அகிலதிரட்டு தர்மபள்ளிளை அனைத்து தாங்கல்களிலும் நிறுவுவது, 4.,அய்யாவழி குடும்பங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுவது, அய்யாவழி அன்புகொடி மக்கள் அனைவரும் ஒன்றினைவோம் முன்னேற்றம் காண்போம். அய்யாஉண்டு

அய்யாவழி ஆகமமான அகிலதிரட்டு அம்மானையில் காலத்தால் முற்பட்டது தமிழ் என்பதை காணலாம்:

அலகைதுளைத்து தீ நரகத்திலே ஆனியரைந்து அவனிதனில் குலையக் குலைத்துத் தீ நரகில் கொண்டெ போடச்சொல்வேனே.

மாய தோற்றத்தில் மயக்க முற செய்து குடும்பத்தை குலைந்து, செயலிழக்க வைத்து அவனி வாழ்வு முடியும் போது பொல்லாத நரக குழியில் போய் விழவைபேன்.


உலகில் மனுக்கள் தமிழாலே உவமை உரைத்து விட்டாற்போல் கலகமுடனே என்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை

முற்காலத்தில் மக்கள் உதாரணத்திர்கு தமிழ் மொழியில் இருந்துதான் சிறப்பான உதாரணம் கொடுத்திருக்கின்றார்கள், அப்படிப் பட்ட தமிழ் மொழி இன்று ஆங்கில மோகத்தால் அடிமை பட்டுகிடக்கின்றது. இப்படிப் பட்ட எம் தாய் மொழியான தமிழை புறக்கணிப்போரை,


வாயுவே பூப்போல் மலர் எடுத்து வீசி நிற்கும் ஆயும் கலை தமிழும் அறிவும் ஒன்று போல் பரவும்.

தென்றல் வீசுகின்றபோது மலர் எடுத்து மேனியை தடவுவது போல் இருக்குமாம். இது ஒரு இனிமையான சூழல் இது போன்றதே தமிழும், அறிவும், கலையும் ஒன்றை ஒன்று சார்ந்து என்றும் நிலைத்து நிற்கும்.


மேகம் குடை நிழற்ற மேலவர்கள் போற்றி நிற்க யோக முனிமார் ஓதித் தமிழ் கூற.

முற்காலத்தில் தவமுனிமார்கள் எல்லாம் தமிழில் மந்திரங்கள் ஓதி இறைவனை துதிக்கும் போது, கார் மேகங்கள் திரண்டு வந்து குடை பிடிக்குமாம். வானலோகத்தார்கள் எல்லாம் வந்து கண்டு போற்றி நிற்ப்பார்களாம். அத்தகைய இனிமையும், பழமையும் கொண்டது தமிழ் மொழியாம்.


ஆராய்ந்து பாட அடியோன் சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் என் நாவினில்.

முற்காலத்தில் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பு இறைவனை நினைத்து தொடங்க வேண்டும், என்பதை உலகிற்கு உணர்த்தியது தமிழ் மொழியே.

அய்யாவழி ஆகமமான அகிலதிரட்டு அம்மானையில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பது:

7. கல்விக்கு உகந்த கருணாகரர் ஆனவரே செல்விக்கு உகந்த சென்மமது கொண்டவரோ.

எங்களுக்கு அருள்தரும் கருணாகர்ர் ஆனவரே அய்யா நாங்கள் கல்வி செல்வம் பெற வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்துவந்த அய்யா வைகுண்டர் நீர்தான் அய்யா.


கல்லாதர் தமக்குக் கசப்பு இனிமேல் கண்டாயோ கல்லாதர் கருவறுத்து சுவாமி அதிகபதி வலம் வருவோம்

கல்லாத காரணத்தல் இந்தமக்கள் அடிமைகளாக நட்த்தப்பட்டனர். இனிமேல் கல்லாதவர்களே இல்லை எண்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அதிகபதி எனும் பரம்பொருள்ளிடம் வேண்டுவோம்.


பெற்றோர்கள் கண்டு கொள்வார் பேச அரிய என்மகனே கற்றோர்கள் கண்டு கொள்வார் கண்ணே திருமகனே

லட்ச்சக்கணக்கான மக்கள் மத்தியிலும் தன்பிள்ளையை பெற்றவர்கள் கண்டு கொள்வார்கள் அது போல் கற்றவர்கள் எத்தஸ்கைய சூள்நிலை களையும் எதிர் கொண்டு சமாளித்துக் கொள்வார்கள்.


கல்லாத புல்லர் கருவொளிந்து நல்லோராய் கடக்கக் கருதாதே கற்றோரை கைவிடாதே

கீழ்மக்கள், மேல் மக்கள் என்ற பேதமையை கல்விதான் மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது, எனவே கற்றவர்கள் அனைவரும் அரவனைத்து உலகில் கல்லாதவர்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்திடவேணும்

சற்றோலே வாழ்வு சகடனுக்கே வருகில் கற்றோரே ஆகிடினும் கண்டு அறிவேன் போ நீ என்பான்

சகடயோகம் ஒருவருக்கு வரும் போது என்ன நிலையில் இருப்பாரோ அத்தகைய நிலைப் பாட்டை கற்றவர்கள் அடைவார்கள். எனவே கல்விதான் அனைத்தையும் உருவாக்கும் சக்தி ஆகும்.


மலையாய் வளர்ந்து வைகுந்தர் வருகையிலே அலைபோல் இளகி அவனிதனில் பாய என்று.

இப்படிப்பட்ட இறுக்கமான சூழ் நிலையில் இருந்து விடுபட வைகுண்டர் இந்த பூமியில் அவதரிப்பார். அதன்ப்பின்னர் இறுக்கமான நிலை மாறி கல்வி கடல் அலைபோல் பூமியில் பெருகி ஓடும்.


கல்வி இளகாமல் கல்போல் இருந்ததனால் பல்லுயிர்கள் வாழும் பாரில் ஒருபங்காக

முற்காலத்தில் கல்வி என்பது குருகுலங்களில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது, குருகுலம் மன்னர்களை சார்ந்தே இருந்தது, எனவே கல்வி எல்லோரும் கற்க்க முடியாத இறுக்கமான சூழ் நிலை உலகில் உருவாகி இருந்தது.



வடக்குவாசல்

தலைமைப்பதியாக திகழும் சுவாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார். முற்காலத்தில் பகவான் வைகுண்ட அய்யா தவம் புரியத் தீர்மானித்தார்.

அதனால் சுவாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

அடுத்த இரண்டாண்டு தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார். மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.

இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன. தலைமைபதியாம் சுவாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார்.

அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர். வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தாண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப் பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.

"நான்'' என்றால் பகவானா கிய அய்யா வைகுண்டரை குறிக்கின்றது. நிலைகண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிகமகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.

பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது. அத்தகைய சிறப்புடைய வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் தவநிலையில் இருக்கிறார்.

வடக்கு வாசலை நம்பி வெற்றி பெற்றதில் இந்த நானும் ஒருவன்தான்.. அதுபோல அய்யாவை நம்பி பிடியுங்கள் மக்களே " நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார். பக்தர்களின் வாழ்வில் மேன்மையும் புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்குவாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்குவாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்

அன்பில் நிறைந்த அய்யா அங்கே அற்புதம் நிகழ்த்துவதில் ஆயிரம் கோடி அற்புதங்களை சொல்லலாம் அய்யா அங்கே இருப்பது உண்மை உலகில் மனுவாய் வந்த இறைவன் இங்கே இருந்து அருள் உரைக்கிறார் உண்மை. .....

அய்யா வைகுண்டர்.

உங்களுக்காய் வேலை செய்ய உலகில் வந்தேன் கண்ணு மக்கா,இரு மனதாய் எண்ணாதே பின் எனக்கு உத்தரம் சொல்வாயே..!
(விளக்கம்)
என் மக்களே உங்களை கொடுமை படுத்திய இந்த கலியிடம் இருந்து உங்களை காப்பாற்ற அனைத்து சக்திகளையும் என்னுள் அடக்கி நானே உங்களுக்காக இந்த கலியில் அகப்பட்டு,அடிபட
்டு சோதனைகளை அனுபவித்து,இந்ந கலி எண்ணத்தை கருவறுக்க நானே 6வருடம் தவசு பண்ணி இந்த யுகத்தையும் முடித்து உங்களையும் தூய்மை படுத்தி நீங்கள் என்னை வந்து அடைய சூட்சம புத்திகளையும் (இறைவழி அடையும் முறை)சொல்லி நல்ல மனுக்களை தேர்ந்தெடுத்து உங்களுக்கு என் ஆட்சியான தர்ம யுகத்தில் வாழவைக்கவே வந்தேன் இது உண்மை. இதை விடுத்து வந்திருப்பது (முப்போருள்) இறைவனான வைகுண்டம் என்று அறியாமல் நான் முனிவன் என்றோ,யோகி என்றோ,சித்தனென்றோ,சாதாரண மனிதன் என்றோ நினைத்து இருபுத்தியால்(சந்தேகபுத்தி) என்னை மறந்து யாரோ என்று நினைத்து உன் மனது படி அநியாய பாவங்களை செய்தால் இந்ந கலியுகத்தை அழித்து உன்னிடம் நடுதீர்ப்பு கேட்பேன் நீ சொல்ல முடியாமல் தவிப்பாய் உன்னை கடுநரகத்தில் தள்ளி கதவடைப்பேன்(அருள்நூல்)அய்யா வைகுண்டர்.

அகில வரிகள்...

நாலு மூணு கணக்கு நடுதீர்த்த ஞாயமதும்
மேலெதிரி இல்லாமல் வினையில்லாது ஆண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் யெடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமை தன்னை
காரணமாய் எழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக ஊழ்வினை நோய் தீருமென்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே.

- அகிலம் -

விளக்கஉரை :-

ஏழு யுகங்களாக இந்த உலகுக்கு இடையூறு செய்த பாதகர்களின் பாவக்கணக்கையெல்
லாம் தெளித்துப்பார்த்து,
அவர்களுக்கெல்லாம் அய்யா நடுத்தீர்ப்பு செய்த நியாயத்தையும்,
இனியுள்ள தர்மயுகத்தில் எதிரிகளே இல்லாவண்ணம் நல்லாட்சி புரியும் விபரங்களையும், முற்காலத்தில் வேத வியாசர் எழுதி வைத்த ஆகம விதிப்படியே அய்யா வைகுண்டப்பரம்பொருள் இந்த அவனியில் வந்து நடத்துகின்ற அற்புதமான வரலாறுகளையும், காரணக் காரியங்களோடு எழுதி அதை கதைபோல் படிப்போருக்கு, முப்பிறவி வினைகளால் உண்டான நோய்களெல்லாம் உடனே தீர்ந்து, மகத்துவமாய் வாழ்வார்கள் என்று அய்யா இந்த அறிய வரலாற்றை அருளுகிறார்.
- அய்யா உண்டு -

அகிலத்திரட்டு உரை!!

பேயை எரித்து புதுமை மிகச் செய்ததுவும்

ஆயர் குலத்தை ஆளாக்கி கொண்டதுவும்

சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்

நீண்டபுகழ் தர்மம் நிறுத்தி அரசாண்டதுவும்

பத்தும் பெரிய பாலருக்காக வேண்டி

சத்தழியும் பாவி தடியிரும்பிலும்
இருந்து

படுத்தின பாடெல்லாம் பாலருக்காகப் பொறுத்து

உடுத்ததுணி களைந்து ஒருதுகிலைத் தான்வருந்தி

தேவ ஸ்திரிகளையுஞ் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்

பாவக் கலியுகத்தில் பாராத்தியங்கள் பட்டு

நாலு பிறவி நானிலத்திலே பிறந்து

பாலு குடித்தாண்டி பருபதத்தின் மேல்தாண்டி

மனுக்கண் காணாமல் மறைந்தொரு மூன்றுநாளாய்

தானுந் தவமதுவாய் சாயூச்சியமே புரிந்து

நல்லோரை எழுப்பி நாலுவரமுங் கொடுத்து

பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து

வானம் இடியால் மலைகள் இளகிடவும்

கானமது நாடாய் கண்டதுஞ் சூரியனும்

தெற்கு வடக்காய்த் திசைமாறி நின்றிடவும்

ஒக்கவே நாதன் உரைக்கிறார் அன்போரே.

- அகிலம் –

விளக்கம் :-

சாமிதோப்பு வடக்கு வாசலில், அய்யா தவநிலையாக இருந்துகொண்டே
பேய்களை எரித்து. உலகில் பெரும் புரட்சி செய்ததையும், துவாபரயுகத்தில் யாதவகுலத்தோரை எல்லாம் ரட்சித்த விதத்தையும், இந்தக் கலியுகத்தில் சான்றோர்களை எல்லாம் தம்பால் அரவணைத்து பாதுகாத்துக் கொண்டு இருப்பதையும் , வானளாவிய தர்ம சிறப்புகளையெல்லாம் நிலைநிறுத்தி, இந்த நிலவுலகைப் பரிபாலனம் செய்வதையும், முதிர்ந்த நிலையுடைய உயர்வான தம் மக்களுக்காக வேண்டி, மடிந்து போவதையே தம் முடிவாக கொண்ட கலியரசனாகிய பாதகன் இட்ட மிக பெரிய இரும்பு சங்கிலிகளோடு சிறையில் இருந்து கொண்டே அந்த கலி படைகள் செய்த கோரமான கொடுமைகளை எல்லாம் தாங்கிய வண்ணம் இருந்ததையும், ஏகாபரனாகிய இறைவனின் இயல்பான சூக்கும வடிவத்தை விலக்கிவிட்டு நிலவுலக மனிதனை போன்றதொரு தோற்றத்தை வருவித்துக்கொண்டு துவாபரயுகத்தின் இறுதியில் அடுத்து வர இருக்கும் கலியுகத்தில் தேவலோகதாரையெல்லாம் பூவுலகில் பிறவி செய்யவும் அவர்கள் மூலமாக கலியுகத்தை தர்ம சாம்ராச்சியமாக மாற்றவும் எண்ணம்கொண்டு அயோக அமிர்தகங்கை அருகில் தேவலோகதாரை பூவுலகில் பிறப்பிக்க பயன்படுத்திய சப்தமாதர்களையும் கலியுகத்தில் பிறப்பித்து, பாருலக மக்கள் எல்லாம் பயன்பெறும் வகையில் அந்த சப்தமாதர்களை ஆட்கொண்டதையும், மீண்டும் இந்த பாவம் சூழ்ந்த கலியுகத்தில் பற்பல தொல்லைகளை அனுபவித்து இல்லறதோனாவும், பிரம்மசாரியாகவும், பெரும் தபோதனனாவும், துறவியாகவும் நான்கு நிலைபாடுவுடையவராக நானிலத்தில் காட்சியளித்துகொண்டே, ஆண், பெண், என்ற உணர்வுகளை தாண்டி, பிறவி நிலையை கடந்து, மனிதர்களால் உற்றுநோக்கியோ, உணர்ந்தோ கொள்ளமுடியதா நிலையில் மூன்று நாட்களாக அனைத்தும் தாமகிய தவமுமாகி, நல்லோர்களின் ஆன்மாவை விழித்தெழச் செய்து, அவர்களுக்கு அன்பு, பண்பு, ஈகை, தியாகம், ஆகிய நான்கு வரங்களையும் அருள் பாலித்து, பொல்லாத பாதகர்களையெல்லம் நரகத்தில் மூழ்கிடச்செய்வதும் , ஆகாயத்தில் இருந்து விழும் இடியால், மலைகள் இளகி போவதையும், சூரியன் தெற்கும் வடக்குமாக திசைமாறி உதிக்கப்போவதையும் இத்தகையது அத்தனையும் அய்யா இயல்பாக இதன் மூலம் சொல்லுகிறார் அன்பர்களே!!!!!

- அய்யா உண்டு -

சகாதேவ சீடரின் தன்னடக்கம்

அகிலதிரட்டு உரை:-


அய்யா உரைக்க அன்போர்களே தங்கள்முன்னே
மெய்யாய் எழுதி விவரிப்பேன்நான்
என்பதெல்லாம்
ஆனை நடைகண்டு அன்றில் நடையதொக்கும்
சேனை சரிவதென்ன சிற்றெறும்பு பக்தியென்ன
குயில் கூவகண்டு கூகைக் குரலாமோ
மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்
மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யானடியேன்
நாலுமூணு யுகம் நடுத்தீர்க்க வந்தபிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவேன் என்பதொக்கும்..


விளக்க உரை :-


அண்டசராசரங்களைப் படைத்து, அவை அனைத்துக்கும் பெற்றவனாய் இருந்துகொண்டிருக்கும் தந்தையாகிய தயாபரன், வல்லாத்தான் வைகுண்டப் பரம்பொருள் சொல்வதைக்கேட்டு, அதை அப்படியே அன்பர்களின் முன்னிலையில், அடியேன் எழுதி சமர்ப்பிப்பேன் என்பது யானையைப் போல் நடப்பதற்கு அன்றில் பறவை ஆசைப்படுவதற்கு ஒப்பானதாகும்.

எறும்புகளின் அணிவகுப்பு, போர்வீரர்களின் அணிவகுப்புக்கு இணையாக முடியுமா ?
குயில் கூவுகின்ற தென்று அதைப்போல் கூவை குரல் கொடுத்தால் அது சரியாக இருக்குமா ?
மயில் ஆடுவதைக் கண்டு வான்கோழி தன்னையும் மயில்போல் பாவித்துக்கொண்டு ஆடினால் நன்றாக இருக்குமா ?
தேனீக்கள் சேமித்து வைத்து இருக்கும் தேனைச் சுவைத்த கடந்தைகள், தாமும் அந்த ஈக்களை போல்தானே இருக்கிறோம், ஆகவே நாமும் அந்த ஈக்களைப்போல் தேனைச் சேமிக்கலாம் என்றெண்ணி கூடுகட்ட முனையும் கடந்தையின் கதைப்போல, இவ்வுலகைப்படைத்து அதில் ஏழு யுகங்களை நடத்தி அவ்யுகத்தில் இருந்தோருகேல்லாம் நியாயம் நடுகேட்டு, நடுதீர்ப்பு வழங்க வந்த லோகநாயகனாகிய அய்யாவின் ஒப்பரிய சரிதையை, எழுத்தென்றால் என்னவென்று அறியாத நான் எழுத முடியுமா !!!!

- அய்யா உண்டு -

அகிலதிரட்டு உரை:-

எம்பிரான் ஆன இறையோன் அருள்புரிய
தம்பிரான் சொல்ல தமியேன் எழுதுகிறேன்
எழுதுவேன் என்பதெல்லாம் ஈசன் அருள்செயலால்
பழுதொன்றும் வராமல் பரமேசுவரி காக்க
ஈசன் மகனே இயல்பாவாய் இக்கதைக்கு
தோசம் அகல குழாமல் வல்வினைகள்
காலைக் கிரகம் கர்மசஞ்சலம் ஆனதுவும்
வாலைக் குருவே வராமலே காரும்
காரும் அடியேன் கவ்வை வினைதீர
காரும் அடியேன் மனதில் குடிகொளவே
தர்மயுகமாக்கி தாரணியை ஆளுதற்கு
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகாது இருக்கும் தர்மஅன்பு உள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்
வகுத்த பரமனுக்கும் மாதா பிதாவுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே..


விளக்க உரை:-


கடவுள் அடியேனுக்கு அருளிய கிருபையினால்அந்
தக் கடவுளே எளியோனாகிய என்னிடம் சொல்வதை உணர்ந்து இயன்ற மட்டும் எழுதுகிறேன். வறியவனாகிய நான், எழுதுவேன் என்பதெல்லாம், அதை அருளும் இறைவன் இந்தச்சிறியோன் மேல் கொண்டுள்ள நம்பிகையே ஆகும். என் எழுத்தில் பிழையேதும் ஏற்பட்டால் லோகமாதாவாக இருந்து கொண்டிருக்கும் தயாபரகியானாகிய அய்யாவே காத்தருள வேண்டும்.

ஆதிப்பரப்பிரம்மாகிய அய்யாவிலிருந்து வெளிப்படும் நாதமும், அழகும் இந்தச் சரிதைக்கு இயல்பாக அமைய வேண்டும். கேடுகள் விலகவும், கொடிய வஞ்சனைகள் அகலவும், கால மாறுதல்களை ஏற்படச் செய்யும் கோள்கள், முன்பிறவி பிறாப்தத்தால் விளைவிக்கும் துன்பங்கள் தொலையும், சர்வசக்தி வாய்ந்த ஜெகத் குருவாகிய அய்யாவே ரட்சித்து அருள வேண்டும்.

என் மனதினுள் துன்பம் என்பதே அணுகாத நிலையில் எம் அகலத்தில் எல்லாமுமாகிய அய்யா நீவிர் குடி கொள்ள வேண்டும். இந்த உலகத்தைத்
தர்மச்சீமையாக்கி, அந்தத் தர்ம ராச்சியத்தை அரசுபாலிப்பதற்காக, இந்தப் பாவக்கலியுகத்தில் ஆதிமூலப் பரம்பொருளாகிய இறைவன், அய்யா வைகுண்ட பரம்பொருளாக வருகை தந்திருக்கும் வான்புகழும் வரலாற்றை, அழிவில்லா நிலை பொருந்திய தர்மவான்களான அன்பர்களின் முன்நிலையில், தக்க நெறிமுறைகளோடு இந்த அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஆகமத்தை அய்யாவே அருளுகிறார்.

இந்த ஆகமத்தை அருளி, எனக்குக் குருவாக இருந்து எழுத வைக்கும் அய்யா வைகுண்டப் பரம்பொருளையும் இப்பேறு பெற என்னை இவ்வுலகில் ஈன்றெடுத்த தாயையும், தந்தையையும் பணிவோடு வணங்குகிறேன்.

- அய்யா உண்டு -

அய்யாசிவசிவசிவஅரகராஅரகராஅரகரா

யாருக்கெல்லாம் நாமம் கொடுக்கும் தகுதி உள்ளது????????
யாரெல்லாம் நாமமிட்டால் நொம்பலங்கள் தீரும்.... அய்யா சீசன்மாருக்கு இவ்வாறு சொல்லுகிறார்..
.........
எறும்பு முதல் எண்ணாயிரப்பட்ட மிருகப்பிறவி செய்து இருப்பதால், வாய்பேசாத மிருகத்தை தள்ளி எந்தெந்த சாதி வாய்பேசுமோ அதிலே ஐந்து ஆணானாலும் ஐந்து பெண்ணானாலும் அவரவர் தேவிமார் முகம் பார்த்து பேசினதே அல்லாது வேறு தேவிமார் முகம்பார்த்து பேசினதேயில்லை என்று ஆண்பிள்ளைகளும்;
அவரவர் ஆம்படையானத்தள்ளி இன்னொரு முகம் பார்த்து பேசவில்லை என்று ஐந்து தேவிமார்களும் கொடி மரத்தில் ஐந்து நேரம் சத்தியம் செய்து நாமம் கொண்டு இடச்சொல்ல,............ இந்தப்படி தானம் பண்ணிச் சத்தியம் செய்து நாமம் கொண்டிட நொம்பலம் இதமாகிப்போகும். இதை சீசர் எல்லோரும் நகர் எல்லாம் இந்த ஒழுங்கைத் தெரியச் சொல்லவும். இன்னும் கணக்கு நிரம்பயிருக்கிறது! அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா..

எறும்பு முதல் யானை உள்ள எண்ணாயிரம் மிருகப்பிறவி செய்திருக்கிறேன், இவற்றில் வாய்பேசாத மிருகத்தை (நல்லது கெட்டது ஆராயதெரியாத, ஆறாம் அறிவு இல்லாத, சிந்தனை செய்யும் ஆற்றல் இல்லாதவைகளை தள்ளி) எந்தெந்த சாதி வாய் பேசுமோ - வாய் தானாக பேசாது, அதை மனம் இயக்கினால்தான் பேசும், மனம் தானாக இயங்காது அனுபவ அறிவும் சிந்தனை சக்தியும் வேண்டும், அப்படிப்பட்ட ஆறறிவுள்ள மனிதர்களில் யார் ஒருவர் அவரவர் தேவிமார் (மனைவிமார், அவரவரின் உடைமையைத்தவிர பிறரின் பொருட்களின் மீது ஆசை கொள்ளாதவர்கள்) முகம் - (ஆசை) பார்த்து பேசியது (இச்சைகொள்ளல்) அல்லாது வேறொருவரின் முகம் பார்த்து பேசாத ஆணும் பெண்ணுமே பிறருக்கு நாமம் இடும் தகுதி உள்ளவர்கள்... அய்யா வைகுண்டர்.
ஆக, அன்பு குடிகொண்ட அறிவு உள்ள கண்ணு மக்கா! புரிகிறதா? அய்யா யாருக்கெல்லாம் அந்த தகுதியை கொடுத்துள்ளார் என்று! "கண்டதெல்லாம் தெய்வம் என்று கைஎடுத்தால் பலனும் உண்டோ?" இது இங்கேயும் பொருந்தும்........... அய்யா உண்டு, ஆட்டுவானும் நீயே! இங்கே ஆடுவதும் நீயே! வைகுண்டா சரணம்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

அகிலத்திரட்டு அம்மானை அருளியது யார்?

காவிஷ்ணு தன் ஒவ்வொரு அவதாரத்தையும் மகாலெட்சுமியிடம் சொல்வதுதான் அகிலத்திரட்டு அம்மானை.அகிலத்திரட்டு அம்மானை நூலை மகாவிஷ்ணு அருளி அரிகோபாலன் சீடர் (சகாதேவன் சீடர்) மூலமாக வெளிப்படுத்தியத்தை கொட்டங்காட்டில் பாதுகாக்கப்பட்ட ஆதி ஏட்டின்பிரதியில்
“ ராத்திரி தூக்கம் நான் உறங்கும் வேளையிலே
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் என்னை எழுப்பி செப்பினார் அம்மானை
காப்பில் ஒரு சீரும் கனிவாய் மிக திறந்து
தாப்பிரியமாக சாற்றினார் எம்பெருமாள்”
இங்கே எம்பெருமாள் என்பது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது.அதன்படி நாதன் என்பது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது.மகாவிஷ்ணு அரிகோபாலன் அருகில் இரவில் வந்து அவரை எழுப்பி அகிலத்திரட்டு அம்மானை முதல் வரியை எடுத்துரைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
“மகனே எந்தன் வாய்மொழியை வகுக்க காண்டமதுக்கு
உகமோர் அறிய உரை ஊனு முதல் காப்பாக
அதில் மேல் நடப்பு உன் அகமே நானிருந்து
சரி சமனாய் வகுப்பேன் நாதனும் தானே எழுது காண்டம்” என்றார்.
நான் சொல்லுகிற காண்டத்திற்கு உலக மக்கள் அறியும்படி முதல் காப்பு நீ சொல்.அதன்பின்பு உன் உள்ளத்திலே உன் உள்ளத்திலே இருந்து நான் சொல்லுவேன் நாதனாகிய மகாவிஷ்ணு எழுதும் காண்டம் என்றார். அதாவது மகாவிஷ்ணுவாகிய நான் உன் மூலமாக நான் எழுதுகிறேன் என்று பொருள்.
“நான் உரைக்க நீ எழுதி நாடு பதினால் அறியும்”
மகாவிஷ்ணுவாகிய நான் உன் உள்ளத்தில் இருந்து சொல்ல சொல்ல நீ எழுது,அதை நாடு பதினாலும் (எல்லா லோகாத்தார்களும்) அறிந்து கொள்வார்கள்.
“பாரேழும் அளந்த பச்சமால் மாயவரும்
முன்னர் கயிலையிலே முதல்நூல் முறைப்படியே
இன்னாள் என்னிடத்தில் எடுத்து உரைத்ததையும்
அய்யா சொன்னதையும் அடியேன் எழுதுகிறேன்”
ஈரேழு பதினாலு உலகத்தையும் அளந்த பச்சைமால் நாராயணர் முன்பு கயிலையங்கிரியில் எழுதி வைத்ததையும் இப்போது என்னிடத்தில் சொன்னதையும் (அய்யா மகாவிஷ்ணு) அடியேன் (அரிகோபாலன்) எழுதுகிறேன் பொருளாகும்.
பக்கம் 359ல்,
“ஒப்பார் ஒருதர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாதன் எழுதி வைத்த அகிலத் திரட்டம்மானை இதே”
உலகில் மனிதர்கள் தன்னுடைய விருப்பத்திற்கு அகிலத்திரட்டு அம்மானையையை எழுதக்கூடாது.அப்பா நாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டு அம்மானை இது என்று மகாவிஷ்ணுவே குறிப்பிட்டு உள்ளார்.
எனவே அகிலத்திரட்டு அம்மானையை அருளியது மகாவிஷ்ணு என்றும் அவர் அருளால் அரிகோபாலன் (சகாதேவன் சீடர்) எழுதினார் என்று குறிப்பிடுவது சிறப்பாகும்.
நிகழ்காலத்தில் முத்துக்குட்டி தான் வைகுண்டர் என உலக பதிவுகள் இருப்பதால் முத்துகுட்டி ஞான நிலை அடைந்து அகிலத்திரட்டை எழுதினார் என்ற ஒரு கருத்து இருப்பதால்,வைகுண்டர் எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்று குறிப்பிடாமல் மகாவிஷ்ணு எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்று குறிப்பிட்டால் மகாவிஷ்ணுவின் பக்தர்களும் இந்நூலை அறிந்து கொள்ள ஒரு ஒரு வாய்ப்பாக

அய்யாவழிக்காரர்கள் என்றால் யார்?

அய்யா என்றால் தந்தை என்று பொருள்.தந்தை என்றால் அனைத்து உயிர்க்கும் தந்தை.”தேசமயம் ஏகம் திருஷ்டித்த மகாபர இந்திர நாராயணர் அய்யா”.உலகத்தை படைத்தவனை வணங்குவது தான் அய்யாவழி,வழிபாடு.அய்யா என்றால் மகாவிஷ்ணு நாராயணரை குறிக்கும்.நாராயணரின் அவதார பாதையை வைத்து புனிதநூல் அகிலத்திரட்டு அம்மானை உள்ளது. அய்யாவழிக்காரர்கள் என்றால் நாராயணரை தெய்வமாக வணங்கி அவர் காட்டிய அறவழியில் வாழ்பவர்கள் என்று பொருள்

ய்யாவுக்கு கலிநீசன் செய்த சோதனைகள்

ரி சாமி என்கிறானே நாமும் ஒரு சோதனை செய்து பார்ப்போம் என என்னிய மன்னன் தனது கை விரலில் இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் கழற்றி தன் கையில் வைத்து கொண்டான் பின் வைகுண்டரை நோக்கி நீ உண்மையான சாமி என்றால் என் கையில் இருப்பதை கூறடா என்றான் எல்லாம் அறிந்த வைகுண்டர் "' தாழ்ந்துயிரு என் மகனே சட்டைக்குள்ளே நான் பதுங்கி ''' என்ற தனது தந்தையாகிய நாராயனரின் உபதேசத்துக்கு ஏற்ப தன் சக்திகளை வெளிக்காட்டாமல் இருந்தார் மேலும் இப்போது இவனிடம் இதை உரைத்தால் நம்மை அறிந்து அவர்களுடன் நம்மையும் சேர்க்க பார்பான் ஆகவே நாம் நினைத்த காரியம் நிரைவேறாமல் போகும் என்று எண்ணி அமைதியாக இருந்தார் பின் மன்னனை நோக்கி இறைவனின் என்னப்படி எது இருக்குமோ அது இருக்கும் என்று உரைத்தார் கோபங்கொன்ட மன்னன் இவனா சாமி இவன் கள்ளசாமி இவனை கொடுமையான சரடனின் அழைத்து செல்லுங்கள் என உத்தரவிட்டான் பின்னர் வைகுண்டரை கொடிய சரடன் முன் கொண்டு நிறுத்தப்பட்டார் கொடிய சரடன தன்னிடமிருந்த சாராயத்தில் ஐந்து கொடிய விஷங்களை கலந்து நல்ல பால் எனக் கூறி வைகுண்டரை குடிக்க சொன்னான் தொடரும் அய்யா உண்டு