புதன், 10 செப்டம்பர், 2014

அய்யாதுணை

கொல்லம் ஆண்டு 1008க்கு முன்பாக கலியுக கொடுமைகள் தாங்ககாத தேவர்களும், முனிவர்களும் பச்சிபறவை முதல் ஜீவன் தங்களைப்படைத்த பரம்பொருளை வேண்டி கலிகொடுமையில் இருந்து விடுதலைபெற முறையிட்டார்கள். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தை சீர்குலைத்துவந்த அசுரர்களை இறைவன் அவதாரம் எடுத்து வந்து அவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். ஆனால் இந்த கலியுகத்திலே கலியன் உருவம் இல்லாதவனாக தோன்றினான். கலியன் ஒவ்வொருவருடைய எண்ண அலைகளை ஆட்கொண்டான். ஆதலால் இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து உயிர்களும், கலிமாய எண்ணத்தோடு தோன்றிவிட்டன.
கலியை முன்நின்று வெல்ல மூவராலும் இயலாது என்ற நிலையை உணர்ந்த இறைவன் அனைத்து சக்திகளையும் தன்னகப்படுத்தி பிரிவில்லா ஒரு பொருளால் கலியை வெல்லலாம் தர்மத்தை நிலைநாட்டலாம் என்று முடிவுக்கு வந்தனர்.அதுமட்டுல்லாது அகில வேதசட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை தேவர்களை மீண்டும் தர்மயுக ராஜியத்தில் வாழவைக்க எண்ணினார்.அதன் காரணமாக தனக்காகும் பேர்களை அடையாளம் காணவும் அகில வேத சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர் களை காத்திடவும்.
உலகாளும் தேவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம் நாள் திருச்செந்தூர் வாரிக்குள் முப்பொருள் ஒன்றாகி (சிவன், பிரம்மா, விஷ்ணு) மூன்று நாட்கள்  விஞ்சை பெற்று அம்மை சரஸ்வதி தாலாட்ட தேவர்கள் மலர்தூவ வாணவர்கள் வணங்கி நிற்க மகரத்தின் ஜோதி மகத்துவ நாதன் அய்யா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது.
அய்யா வைகுண்டரின் வருகையைக் கண்டு தெற்கு முகமாக வணங்கி நின்றார். கந்தபெருமாள், கந்தனுக்கு நல்உபதேசம் செய்த எம்பெருமால் தவம் இருக்க வேண்டிய இடத்தை கலைமுனி ஞானமுனி தேர்வுசெய்ய வாரிக்கரை வழியாக தருவை கரையில் உடலணிந்து இன்று தெச்சணாபதி சாமிதோப்பு என்று போற்றப்படும் (அன்று பூவண்டருக்கு சொந்தமான தோப்பாகும்) அந்த தெய்வீக பூமியிலே தவம் இருக்க அய்யா வருகிறார். வருகின்ற வழியிலே ஆங்காங்கே சில அற்புதங்களை நிகழ்த்திவருகிறார். தெட்சணம் வந்த அய்யா வைகுண்ட பரம்பொருள் ஆறு ஆண்டு தவக்கோலத்தில் அமர்ந்து இருக்கிறார். முதல் இரண்டு ஆண்டு யுகத்திற்காகவும் அடுத்த இரண்டாண்டு சாதிக்காகவும், நீசினால் பிரித்து வைக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்ப்பதற்காகவும், இறுதி இரண்டாண்டு பெண்களுக்காகவும் , பெண்ணடிமை விலகவேண்டும் பெண்கள் உயர்வாக வாழவேண்டும் என்பதற்காகவும் ஆறு ஆண்டு கடுந்தவம் புரிந்தார். அதுமட்டுமல்லாது தன்னை நாடிவந்த மக்களுக்கு தீராதநோய் நொம்பல சஞ்சல துன்பங்களை மாற்றி குஷ்டம் கொடிய கன்னபித்து ஆகிய கொடிய நோய்களை மண்நீரால் மாற்றிதரணி எங்கும் காணாத புதுமைகள் செய்தார். அய்யா செய்த அற்புதம் திருவிதாங்கூரை ஆண்ட சுவாதி திருநாள் மன்னன் செவிகளுக்கு எட்டியது அய்யாவை சிறைபிடிக்க காவலாளிகளை ஏவினான். தன்னை சிறைபிடிக்க வருவதை அறிந்த அய்யா வைகுண்டர்திருப்பாற்கடல் நோக்கி வருகிறார். கடல் விலக உள்ளே சென்ற அய்யா வைகுண்டர்ஆதிநாராயணரின் நல்உபதேசம் பெற்று வெளியே வருகிறார். தவக்கோலத்தில் இருக்கும் அய்யாவை கலியரச மன்னனுடைய படைகள் கள்ளனைப்போல் கயிற்றால் கட்டி இழுத்து மன்னனிடம் கொண்டு சேர்த்தார்கள். அய்யாவை பார்த்த கலியரச மன்னன் கைவிரல் மோதிரத்தை கைக்குள்ளே மறைத்து வைத்துகொண்டு ஏதடா உன் உற்ற வலுவாலே எந்தன் கைக்குள்ளே இருப்பது என்னவென்று ஓதடா என்று வினாவினான் ஒன்றுமே தெரியாதவன் போல் அய்யா மௌனமாக இருந்தார். இவணை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று எண்ணிய கலியநீச மன்னன் அய்யாவுக்கு பாலிலே ஐந்து வகை நஞ்சை கலந்து குடிக்கச்செய்தான். நஞ்சி கலந்த பாலை அய்யா நற்பால் என்று எண்ணிப் பருக நற்பாலாகவே இருந்தது, நெய்யூற்றி கட்டையடுக்கி தீயை அதில் பற்ற வைத்து நீந்திபோ என்று சொன்னான். குளியாத மேனியல்லவா குளித்துவருகிறேன் என்று அய்யா நீந்திவந்தார். வத்தல் புகைபோட்டு அந்த குகைக்குள்ளே புகையோடு புகையாக அய்யாவை வைத்தான். சுண்ணாம்பு சூழையிலே அய்யாவை நீத்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினான். நாற்றமிகு டானாவில் அய்யாவை வைத்தான். அத்தனை சோதனையிலும் சாதனை கண்ட அய்யா வைகுண்டரை புலிக்கு இறையாக்க வேண்டும் என்று கனவு கண்டான் பட்டினியோடு அடைக்கப்பட்ட புலி கூண்டிற்குள் அய்யாவை வைத்து வேடிக்கை பார்த்தான் அப்பொழுது ஜீவசெந்துக்கெல்லாம் ஜீவனாக விளங்கும் பவர் இவரல்லவா என்பதை உணர்ந்து கொண்டபுலி அவருடைய பாதத்தை தொட்டு வணங்கியது இதைப்பார்ததுக் கொண்டிருந்த கலியரச மன்னன் கடுங்கோபத்திற்கு ஆனாளன் ஈட்டியால் கடுவாயை குத்துங்கள் என்ற ஆணையிட்டான். கோபமுற்ற கடுவாய் ஈட்டியைக் கவ்வி இழுத்த வெளியே பாய்ச்ச வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த வேதியன் வயிற்றில் பாய்ந்து மாண்டு போனான் . ஆயிரம் பசுவை கொல்வதற்கு சமமானது ஒரு வேதியனைக் கொல்வது தான் செய்த தவறை எண்ணி வருந்தினான். பூவண்டரின் பரிந்துரையில் அய்யாவை விடுதலை செய்ய முடிவு செய்தான்.
சான்றோர் மக்களுக்காக மூன்றே முக்கால் மாதம் சிறை இருந்த அய்யாவைகுண்டரை சான்றோர்கள் தொட்டில்கட்டி அய்யாவை சுமந்து தெட்சணம் நோக்கி வந்தார்கள். சான்றோர் குலமக்கள் மனதை தூய்மை படுத்துவதற்கு துவயல் தவசு என்ற தவத்தை வாகைபதியில் மக்களை ஒன்று திரட்டி ஆரம்பித்தார்.முட்டப்பாதையில் தவத்தை நிறைவுசெய்து விடைகொடுத்து அனுப்பினான் ஐம்பதிகளை அய்யா இருந்த தரணிக்கு தந்தார்.
அன்று அயோத அமிர்த கங்கை கரையிலே ஏழு கன்னியரை அக்கனியால் ஆட்கொண்டு ஏழு மதலைகள் கொடுத்து அவர்களை இந்த நிலமைக்கு ஆளாக்கிய நாராயணம் அவர்களை ஏற்றுக்கொள்ளும் வரை தவம் இருக்க செல்கிறோம். என்று பிள்ளைகளை வளர்க்க நாராயணம் தேவேந்திரன் பசுக்களை வரவழைத்தார் பத்திரகாளி அன்னையிடம் ஏழு மதலைகளையும் ஒப்படைத்தார். ஏழு மதலைகளையும் பத்திரகாளி அன்னை வளர்த்து வந்தாள். வைகை அணை உடைந்து போக சோழமன்னன் இரண்டு மதலைகளை கொன்றுவிட்டான். இரண்டு குழந்தையை பாதுகாக்க தவறிய காளியை நாராயணம் சிறைவைத்தார். சப்தமாதர்களையும் தெய்வமாதர்களையும் தன்னுள் ஐக்கியப்படுத்தி கொள்ள இகனை மணம் புரிந்தார். நாராயணம் பெற்ற பிள்ளைகளை தான் நாம் எல்லாரும் நாராயணம் தான் இவ்வுலகிற்கு வைகுண்டமாக வந்திருக்கிறார். அய்யா இந்த உலகத்திற்கு தந்தபொக்கிசம் தான் அகிலத்திரட்டு அம்மானை. அகிலத்திரட்டு அம்மானை முக்காலத்தையும் உணர்த்துகிறது. அய்யா அருளிய அருள் மொழிகள்தான் அகிலத்தில் நடக்கிறது. கலியழிக்க வந்த தெய்வம்தான் அய்யா வைகுண்டர். அவர் அருளிய அருள் ஞான உபதேசங்களை கேட்டு அதன்வழி நடப்பவர்களுக்கு தர்மயுக வாழ்வு உண்டு இத்தணை சிறப்புகளை நமக்கு தந்த அய்யா வைகுண்டர் 1026ம் ஆண்டு வைகாசிமாதம் 21ம்தேதி பகல் 12.00 மணியளவில் கடிய விமானம் ஏறி வைகுண்ட லோகம் சென்றார்.
அய்யா வைகுண்டர் வைகுண்டலோகம் செல்லும்நேரம் மக்களிடம் சொன்ன சத்திய வாக்கு
மனதினில் உற்றுமாயன் மாதர்கள் மக்களோடும்
தனதுளம் மகிழ்ந்து கூடி தயவுடன் இருக்கும்போது
எனது உடல் காணாவண்ணம் இன்னமும் சிலநாள் பாரில்
தினம் உடல்வாழ நீங்கள் தேடுவீர் என்னை தாமே
தேடியே இருக்கும்போது தேவியர் மக்கள் காண
நாடிய சொருபம் கொண்டு நான்வந்து நடுக்கண்கேட்பேன்
பேடிகள் நினைத்திடாமல் பேசின நூல்போல் கண்டால்
வாடியே அலையா வண்ணம் வாழ்தர்மபுவியில் வாழ்வீர்
உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழும் என்றும்
பதறாமல் நீங்கள் பண்பாய் ஒருப்போல
சிதறாமல் நீங்கள் செய்ய அனுகூலமுமாய்
இருந்து மிக வாழும் என்று நாமம் ஈந்து
இத்தனை சிறப்புமிகு வாழ்வை நமக்கு தந்து
பெருமை சேர்த்த அய்யாவைகுண்டர்வைகுண்ட
லோகத்தில் தவமாக இருக்கிறார்
கலியை அழித்து தர்மயுகத்தை படைக்க
அய்யா வைகுண்டரின் வருகை
இன்றோ நாளையாகவோ இருக்கலாம்
அய்யாவின் சிறப்புகளை அறிய அகிலத்திரட்டை படியுங்கள் பலன்அடையுங்கள்.
அய்யா உண்டு

சிவகாண்ட அதிகாரப்பத்திரம்

அய்யாபதியில் வடக்கே முகமாயிருக்க
சீசர்தெற்கே முகமாகநிற்க
அரிகோபலனும் கைகட்டி மனப்பயங்கரமாய் நிற்க
அரிகோபலனை அய்யா காதை முறுக்கி
உனக்கு இடடகணக்கைத் தந்தேன்
தந்த கணக்கை எல்லோருக்கும்
தெரியச் சொன்னாயா?
தெரியச்சொன்னதைச் சொல் என்று கேட்க
அரிகோபலன் சொல்லத் தெரியமால் நின்று
தியங்கண்டு மகிழ்ந்து மயிலாடி சீசர்
கிடுகிடென்று மனப்பயங்கரமாய் நிற்க
நீ சொல்சீசன்  எழுத்தெழுந்து அய்யா சொல்ல
அரிகோபலன் சொல்லத்தெரியாமலும்
சீசர்சொல்லத் தெரியமாலும் இருந்ததினாலே
அய்யாதிருவாய் மலர்ந்து அருளினது என்னவென்றால்
கன்னிமார் ஏழுபேர் உண்டுமே
ஏழுபேர்க்கும் ஏழுமதலைகள் உண்டுமே
ஏழுபேரில் வைகையில் இரண்டுபேர் இறந்துபோனதுண்டுமே
அதிலே ஐந்துபேர்க்கு ஐந்துதேவிமார் உண்டுமே
ஐந்துபேர் ஆண்பிள்ளையாளால் அவரவர் தேவிமார்க்கு
அம்மையிடத்தில் உத்தரவு தோணிற்று
பெண்பிள்ளை ஐந்துபேரானாலும்
தர்மக்கிணற்றில் தானம்பிண்ணித் தர்மக்கிணற்றை ஐந்துதரம்
சுற்றிச்சேவித்து நம்முடைய திருப்பதியை
ஐந்துதரம் சுற்றிச் சேவித்து
கொடிமரத்தை ஐந்துதரம் சுற்றி சேவித்து
நான் அம்பலத்தில் சுவாமி அரசடிமூட்டில்
வந்திருந்து சத்தியம் கொண்டோம்
அன்றுமுதலாய் அந்த ஒழுங்கின்படி
நடந்து வருகின்றார்களா?
அவரவர் தேவிமார் முகம்பார்த்து பேசினதே அல்லாது
வேறெதேவிமார் முகம்பார்த்து பேசினதேயில்லை என்றும்
ஆண்பிள்ளைகள் நீங்கள் ஐந்துபேரானாலும்
உங்கள் தேவிமார் ஐந்துபேரானாலும்
அவரவர் ஆம்படையானைத் தள்ளியின்னொரு முகம்பார்த்து
பேசவில்லை என்றும்
கொடிமரத்தில் ஐந்துநேரம் சத்தியம் செய்து
நாமம்கொண்டு இடச்சொல்ல
ஆமென்று ஏற்கமாட்டாமல் இருந்ததினாலே
எறும்புமுதல் எண்ணாயிரப்பட்ட
மிருகப்பிறவி செய்திருக்கிறதிலே
வாய்பேசாத மிருகத்தைத்தள்ளி
எந்தெந்தச் சாதிவாய்ப்பேசுமோ
அதிலே ஐந்து ஆணானாலும் ஐந்து பெண்ணானாலும்
இந்தப்படி தானம்பண்ணிச் சத்தியம்செய்து
நாமம்கொண்டிட நொம்பலம் இதமாகப்போக
சீசர்லோகம் தகர்லோகம் இந்த ஒழுங்கைத்
தெரியச்சொல்லவும் இன்னும் கணக்கை நிரம்பியிருக்குது
அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா

இரண்டாவது சட்டம்
என்பள்ளி பள்ளிகள் தோறும் இருக்கிறபள்ளி
கணக்கருக்கு அருளிச்செய்த விபரப்பத்திரம்
மூன்றாவது சட்டம்
என்பள்ளியிலே வந்துஇருக்கிற பலவூர் ஜனங்களுக்கு
அருளிச்செய்த விபரப்பத்திரம்
இந்த சிவகாண்டத்தின் பிரகாரம் அறிவாகவாசித்து
எல்லோருக்கும் அறியும்படியாக வாசிக்க
இன்பமாக கேட்டுக்கொள்ளுங்கள்
நான், தீர்ப்புக்கேட்கும் வேளையிலே
உத்தரம்சொல்லத் திறமையாயிருங்கள்
நாலாம்தீர்ப்புச் சொல்லிவருகிறார் நம்மளையா
ஆகையால் தருமத்தைச்செய்து தவத்தைப்பெருக்கி
உங்கள் சாராசரத்தைத் தேடுங்கள் என்மக்களே
இந்த சிவகாண்டப்பத்திரப் பிரகாரம்
எல்லோரும் போற்றுங்கள்
இதைக் கேட்கிறபோது வாயில் வெற்றிலை இல்லாமல்
இது சத்தியமென்று எண்ணிநடக்கிற பேர்களுக்கு
ஈசன்மலர்பாதம்கிட்டிக்கொள்ளும்
மேலும் ஆயிரத்தெட்டாமண்டு மாசியில்
ஆண்டிதெட்சணம் பள்ளிகொள்ள வந்திருந்து
பற்பலகாரணம் நடத்திச் சொல்லிவந்தும்
உலகம் அறியாமல் மயங்கிப்போச்சு
மேல்மாசி ஆறுஏழு அஞ்சில்
மாசியென்ற மாதத்தில் பதினைந்துக்குள்ளிருந்து
தர்மயுகம் உதிக்கும்
அதற்குமுன்னுள்ள காரணம் -
அழிவுகள் விவரம்
பெருங்காற்றினால் அழிவு
வெள்ளத்தால் அழிவு
பேய்மாறட்டத்தால் அழிவு
பெருஞ்சுரத்தால் அழிவு
சம்மாரியால் அழிவு
காளிவெள்ளத்தால் அழிவு
நஞ்சுதின்று கொலைப்பட்டழிவு
பெண்ணாலே ஆணழிவு
ஆணாலே பெண்அழிவு
பூமிதரும் ஓசையினால் ஒருபெருமூச்சு உண்டாகும்
இப்படி பற்பல தீர்ப்புக்கேட்க
நாராயணம்ட நாவில் வகுத்துக் சொன்னோம்
அருளாக ஏகம்அண்ட பரிபூரணமாய்
வரையாகி திரையாகி வான்புவி லோகமுமாய்
ஒளியாகி விழியாகி உயிருக்கிணையாகி
திருவுயிராய் ஒருவுயிராய் தேசத்தில் வேசமுமாய்
ஒன்றாகி இரண்டாகி உலகமெங்கும் நானாகி
ஒன்றுமிரண்டும் மூன்றும் நாலாய் அஞ்சாய்
உனைவகுத்தேன் அஞ்சி அடங்கி ஆதிபரன்
பங்காளன் அஞ்சிரெண்டு மூன்றானே னிந்த
ஆதிபரன் சித்து வித்தை மண்ணால்
உனைமனைந்து பலமாய் கையினால் உனைவகுத்தேன்
உந்தன் பலங்குலைக்க உலகில்பெண்ணை வகுத்துவிட்டேன்
உண்டாக்கிவைப்பதுநான் உலகில்அழிப்பதும் நான்மகனே
ஏகமதாய் நிறைந்தபரன் இருந்துலகை அளுகிறார்
கண்ணுமக் காள்என் சூத்திரத்தைக்
கண்டறிந்து பாருங்கப்பா
பதிமூன்றுக் குள்ளிருந்து பாடுகிறேன் சிவகாண்டம்
இரவுபகல் வேலைசெய்தாலும் யீசன்வேலை முடியாதப்பா
இருபத்தி மூன்றுதெய்வம் யீசனெங்கும் வடிவானேன்
இருமூன்று தனியுகங் ஈடளித்த மாயனப்பா
இருபத்தி நாலாயுகம் இருந்துபுத்தி சொல்லுகின்றேன்
இருபத்தி ஐந்தாயுகம் எழுந்திருந்து வந்தேனப்பா
ஐம்பதிக்குள் அதிசயம் தான் அறிந்திருங்கோகண்ணுமக்காள்
குடியிருந்து ஐந்துயுகம் கொள்ளிவைத்து போறேயனப்பா
ஒன்றிரண்டு ஐந்துக்குள்ளே உலகடக்கி அரசாள்வீர்
இன்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்
இருபத்திரண்டு காரணம்ஈசன்சொன்னேன் சிவகணக்கு
மூன்றுபத்து இரண்டறம்நான் வளர்த்தேன் கலியுகத்தில்
நாள்தோறும் மிரண்டுஅறம் நாதன்வேலை செய்தாலும்
அதற்கு தண்ணீர் ரதுதான்கொடுப்பா ரில்லையப்பா
அண்டத்திலோரம் தான்நாதன் சொல்லுகிறேன் தப்பாது
அண்டபகிரண்டம்வெல்லவொரு ஆயுதம்வந்திருக்குதப்பா
இட்டவாளுக்கிரையாக இருக்கிறார் சத்துருக்கள்
திருச்சம்பதி அழியுதடா திருமாலுஞ் சொல்லுகிறேன்
எட்டுத்திசை வட்டக்கோட்டை கட்டுமுட்டாயிருக்குதடா
மச்சமுனி நானுமப்பா மாயச்சொருபமறிவாயோ
ஊமையானேன் செவிடானேன்
பித்தனானேன் பேயனானேன்
என்பெருமையெங்கும் அறிவாரில்லை
மண்டலத்துப்பெண்மாய்கையாக மாலயனும் நானானேன்
கள்ளனானேன் வெள்ளனானேன் என்காரணத்தைஅறிவாரில்லை
ஆலிலை மேல்பள்ளிகொண்ட அருமைசற்றேசொல்வாரில்லை
வாரிதனை யடைத்தஅருமை சற்றுமில்லை யென்மகனே
அண்டமெலாம் பிண்டமதாய்
ஐந்தறைக்குள் அடக்கிவிட்டேன்
கடலை அடைத்ததினால் உங்கள் கண்மயங்கலாச்சுதப்பா
நான்எந்நாளும் பள்ளிகொண்டுஇருப்பதை நீயறியவில்லை
அமிர்தமது தான்கடைந்த அதிசயத்தைச் சொல்மகனே
ஆயர்பாடி ஊர்தனிலே ஆயருட பட்டணத்தில்
ஒருபதினென்னாணியித்து ஏற்றபெண்கள் தங்கள்முன்னே
மாப்பிள்ளையா நானிருந்த மாயச்சித்தை சொல்மகனே
எண்ணிடங்காபெண்களுக்கு இருக்கிறேன் மாப்பிள்ளையாய்
ஐந்துதலை நாகத்தின்மேல் ஐயாபள்ளி கொள்வதியல்லையா
பத்தவதாரம்பிறந்த பாதைகளைச் சொல்மகனே
என்னையறியாமல் ஏதும்வகை உலகிலில்லை
தன்னையறித்ததுண்டால் தலைவனைநீயறிவாய்மகனே
கண்ணால்மனக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான்
என்னை யறிந்தவர்க்கு ஈசன்வழி சொல்லுகிறேன்
உங்களுக்குமண்ணில் மூவாசையதுமாற்றானாய் இருக்குதடா
வட்டக்கோட்டைக்க காட்டுக்குள்ளே நட்டுவனார்கொட்டுகிறார்
சூத்திரக்கணக்கென்று சொல்லுகிறேன் கேள்மகனே
பஞ்சவர்ணக்கிளி கிளியொன்றிருந்தது
பறந்துபோகக் கண்டேனடா
ஏழுபெண்கள்கதையை எடுத்துச்சொல்ல நாளாச்சே
பாம்புச்செடிக்குள்ளிருந்த பாம்பு படம்விரித்து ஆடுதடா
ஈரேழுஉலகமுண்டு இதையெடுத்துச்சொல்வார் யார்மகனே
சாதியான கொடியபாம்பு சதிசெய்யும் பாம்பதுதான்
முப்பூவை தானெடுத்து
அதைமுத்திசெய்தால் சக்தியுண்டு
குருபுத்தி யார்க்கும் உள்ளதைநான்
சொல்வேன் கேள்மகனே
அப்பூவைத்தானெடுத்து அணிந்திடுங்கோ கண்ணுமக்காள்
மூன்றுநாமம் ஒன்றுபாம்பு
அதுமூன்றும் ஆடுதப்பா
கொத்தினால் திரும்பாதப்பா
அதுகுடிகெடுத்தப் பாம்புவிசம்
தலைமன்னர் மீதிருந்து பலசாஸ்திரங்கள் சொல்லுதப்பா
சங்குக்குள்ளிருந்து வந்தேன் வையகத்தில்
கும்பக்கோணப்பாதையாக குறிகள்சொல்லி வந்தேனப்பா
விள்ளுர் தனிலிருந்து விரைத்துவந்தேன் வையகத்தில்
ஏகன்போக னப்பாநான்
இருப்பதை அறிவாரில்லை
கருவூர்தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன்
பாலன் சிறுகுழந்தை வந்தபாதையறிவீர்மக்காள்
உங்களுக்கு வேலைசெய்ய நான்
உலகில்வந்தேன் கண்ணுமக்காள்
இருமனதா லெண்ணாதே பின்
எனக்குஉத்தரம் சொல்வாயn
மருந்துவாழ் மாமுனிவன் மாயசாலக் காரனும்நான்
நாடெல்லாம் பாடியாச்சே
நாதனென்ன செய்வேனப்பா
வேலை செய்தால் வினையில்லையே
அந்த விசமதுதான் அனுகாதப்பா
மந்திரத்தால் தந்திரத்தால் மாரணத்தால் தீர்ந்திடுமோ
எல்லோர்க்கும் கோடிப்பாம்பு இருக்குதப்பா சத்துருவாய்
நல்லோரைத் தீண்டாது நாதனிங்கேசொல்லுகிறேன்
முச்சந்திக்குள்ளிருந்துபாம்பு உச்சம்பெற்று வருகதப்பா
ஆவென்று அழுதாலும் அருந்தவப்பட்டாலும்
கூவென்று அழுதாலும் கொத்திவிடும் அப்பாம்பு
ஆணும்பெண்ணும் கூட்டியாட்டி
ஆக்கிவைக்க நான்வருவேன்
நாலுவகைக்கணக்கிலும் நான்தீர்ப்புச்செய்ததுண்டு
செம்பவளத்தேரறி
நான்தேசமெல்லாம்  பார்க்கவாறேன்
வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார்
ஆங்காரம்அடிபிடிகள் அதிகமச்பாதேசமெங்கும்
கொலைகளவு அதிகமப்பா குடிகேடுஆச்சுதப்பா
பெண்ணாலெஆண் அழிவு பெருகுமடாபூமியெங்கும்
ஆணும்பெண்ணும் அழிவாகும் அம்பலத்ரசர் முடிவாகுதடா
வறுமையதுதான் பெருத்து நீங்கள்வழிதப்பிப்போவீர்களே
பொய்புரட்டு அதிகமப்பா பொருத்தல்லைமிகலிநமக்கு
தானமானமில்லையப்பா சாதிவரம்பழியுதடா
சங்கக்கூட்டம் இல்லையாடா சரசக்கூட்டம் இக்கலியில்
கொம்பன்புழு வென்றறியாமல் குதிபோடுகிறார்கலியில்
மக்களுக்கு உத்தரவு மால்சொல்ல நீதிஉண்டே
அறிவுசொல்லி தெளிவுதர
நான்அம்பலத்தில் கணக்கர்வைத்தேன்
நான்வைத்த கணக்கரெல்லாம் நன்றுநடுக்கேட்கவில்லை
ஆடிநன்றாய் பாடிநன்றாய் கொடுக்கவில்லை என்மகனே
ஆதிபரன் சோதிநாதன் அதிகாரம்செய்யவாறேன்
புத்தியினால் கெட்டவரே பிழைக்கமதிதேடுங்கப்பா
அதிகாரசச்சட்டமது அவனியெங்கும் ஆகுதப்பா
பத்திரத்தைப்பாடிவந்தாலும் பாதையிலேபோகவிடான்
கொடியென்றநாகமது கொத்தும்வேளை அறிவீர்களோ
அடங்காத பாம்பதுதான் அதன்நஞ்சை அறிவீர்களோ
எண்ணடங்கா பாம்பதற்கு இருக்கிறார் இரையாக
இருபத்தைந்துபாம்பாக உங்களிடம்பார்க்கவருகிறாரே
சான்றோரிடமிருந்து பலசாத்திரங்கள் சொல்லித்தாறேன்
என்னாலேஆகுமட்டுமிதுவரைக்கும் புத்திசொன்னேன்
நானாண்டி ஆண்டிநடுக்காட்டு குருவாண்டி
கேளாண்டிகுலத்தாண்டி இந்தகுவலயத்தை அளந்தாண்டி
சித்தாண்டிசிவனாண்டி இந்ததேசமெங்கும் நானாண்டி
மாலாண்மாறாண்டி நான்மாலும்சிறு ஆண்டியடா
கந்தைத்துணிதோளிலிட்டு கந்தப்பனும் நான்வருவேன்
இன்னும்சிலகாண்டம் எடுத்தெழுதி சொல்கிறேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே கலியுகத்தில்வந்தேனடா
சாதியானலிங்கமொன்று சமுத்திரத்துள்ளிருக்குதடா
ஆதியானலிங்கமதை நீங்கள்தினம் போற்றிடுங்கோ
அதில், முத்தியுண்டு  சக்தியுண்டு முனிபரனும்பாடுகிறேன்
கோலநெடுமாலயனும் கோலம்கட்டி ஆடுகிறேன்
நித்தம்செத்த பாவியப்பா நாதனெடுத்து தாறேனப்பா
செத்துச்செத்துப் பிறப்பே னடா
என் சித்துவித்தை அறிய மாட்டேன்
அல்லும்பகலும் குறிகள்சொல்லி அவதிமெத்த ஆச்சுதடா
ஆடுதடா ஒருபம்பரம் தான்
அதையமர்த்த வல்லாருண்டோ
காணுங்குறிசொல்லுதற்கு கழுகுமலையாண்டிவந்தேனடா
இனிதேனமலர் மீதிருந்து பலசிறப்புச் செய்யவாறேனடா
உங்கள் குலதெய்வமென் றுஎனக்குக்கடன் செலுத்தயாருமில்லை
ஏவல்செய்யும் பிசாசாலே என்மக்காள்ஈடழிந்துபோனீர்களே
மகாலிங்கம் சொக்கலிங்கம் மாயமுத்து சோதிலிங்கம்
ஒருமுத்துலோகமுத்து இந்த உலகமெங்கும் பெருத்தமுத்து
ஏகமுத்து நாகமுத்து எங்கும்முழு முத்தானேன்
வையமெல்லார்முத்தாச்சு அதைவகையறிவாரில்லையப்பா
காடெங்கும்கனத்தமுத்து அதை கண்டெடுப்பார்யாருமில்லை
சத்துக்குள்ளமுத்தப்பா அதுவுங்கள் சகலவினைதீர்க்கும்முத்து
பக்தியுள்ளமுத்தப்பா அதுவுங்கள் பதியேறும் அந்தமுத்து
கண்டவர்எடுத்திடுங்கோ உங்கள் காரணத்தெய்மப்பா
ஆணாகிபெண்ணாகி உங்கள் அம்பலக்கூத்தாடியப்பா
கூத்தாடிச்சித்தனும்நான் கூன்கிழவன்பண்டாரம்
பண்டாரக்கிழவனடாநான் பதிவைத்து பிடித்திடுவேன்
இன்னுமென்னை அறியவில்லை சோபனமும் சொல்லவில்லை
மருந்துவாழ்மலையென்று மயங்குகிறாரென் மக்களெல்லாம்
மேலுங் கீழுந்தெரியாது
நான்மெய்யன்மகன் பொய்யனப்பா
கட்டுப்பாடுமொட்டாத நான் உன்குருவும் சொல்லுகிறேன்
கங்கையிலேதீர்த்தமாடி உங்கள்கேசவரை போற்றிடுங்கோ
காயக்காரன் மாயசித்தம் நானுங்கள்
கண்காணப் பெருவழியேன்
அவரவர்கள்செய்யுங்குற்றம் உங்களாண்டி அறிவேனடா
கடலதிலேதீர்த்தமாடி நீங்கள்கனத்தவம் செய்திடுங்கோ
உங்கள்கங்கையிலே எப்போதும்கேசவன் இருக்கின்றேன்
மயங்குகிறார் ஏழுபெண்ணும் இந்தவையகம் அறியவில்லை
நளாலுதிசைக்குள்ளாக நடுவேயென்று இருக்குதப்பா
அந்தமூலைப்பேருஞ்சொல்வான் அறிந்தோரறயிந்திடுங்கோ
தெட்சணாமூலையிலே பதிபோட்டிருக்குதடா
அதுகுட்டிபோட்டுஇருக்குதப்பா முக்கோடிதவஞ்செய்து
பார்தனிலே அக்குருவும் பதிபோட்டிருக்கின்றாரே
இரவுபகல்எப்போதும் அவர்க்குயிரைபோட்டாற்றுவதில்லை
அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவாரக்குருவும்
நஞ்சுதின்று நாளாச்சு நான்மறையப்போறெடனா
வஞ்சகமில்லை சொன்னோம் வழிபார்த்துப்பிடித்திடுங்கோ
வையத்தில்யாபேர்க்கு மொருவலுச்சக்கரம்வருகுதப்பா
கந்தன்திருவேலனே என்ன ஆண்எயென்றறியமாட்டான்
கண்டதுண்ட மாகவல்லோ கனத்தபூமி வெடிக்குதடா
கோலநடுமாலயனும்சாலங்கட்டி ஆடுகிறேன்
காளிவெள்ளம் வருகிறதுகப்பல்செய்து வைத்திருங்கோ
நாடெல்லாம் காடாகும் நல்அக்கினிவந் தாகுதடா
நாலுகாலு ஜீவஜெந்து நாட்டிலில்லை ஓட்டமடா
கங்கைபால் வற்றுமப்பாகிழவன்பண்டாரம் சொல்லுகின்றேன்
வெட்டவெளிதனில்மக்காள்வேலி பயிராகுதப்பா
ஊரோட்டம்தேரோட்டம் மக்காளொன்றுவட்டம் ஆகுதடா
மாரிவெள்ளம் அழிக்குதடா மாயாண்டி சொல்லுகிறேன்
கூத்தாடிக்கூத்தாடி நான்கொள்ளிவைத்துப் போவேனடா
கொள்ளிவைக்கும்குமரனடா கொப்பன்நந்தி யீசனடா
பள்ளிக்கணக்கனடா நான் பள்ளியிலே ஆடிவாறேன்
கங்கைநீர் ஆடிவாறேன்கிழவன் பண்டாரக்கூத்தாண்டி
வெள்ளானை மீதிருந்து விளையாடிப்பாடுகிறேன்
துரியோதனனுக்கு நாரதமுனி வாறேன்நான்
பாட்டனும் பூட்டனும்நான் பாரசித்த பிச்சைக்காரன்
நேரில் பிரியமும்நான் பேதைக்கோலம் மாறியும்நான்
அஞ்சாடு மேய்த்தடைத்த ஆனந்தக்கோன் வந்தேனடா
கூடாரத்துக் குள்ளிருந்து குலவிசை செய்திடுவேன்
நான்பாவி பொல்லாதவன் நாட்டில்ஒருவருக்கும் ஆகாது
கோட்டிகொண்ட பித்தனடா குடிகொடுக்ககுருவும்நான்
உன்கூட்டுக்குள்ளிருந்து குறிபலதும்சொல்வேன் நான்
தேராண்டியப்பா நான் தெருவீதி ஆடிவாறேன்
கைலாசம் தனிலிருந்துபல காரணங்கள் முடிக்கவந்தேன்
ஆணானேன் பெண்ணானேன் அடங்காத சொருவமானேன்
அஞ்சாடு மேய்ந்திருந்தஉங்களுக்கு ஆடபேறாய் நானிருந்தேன்
கஞ்சிவெள்ளம் கொடுக்கவுங்கள் கனவிலும் எண்ணமில்லை
ஒடுங்கிவிட்டேன் ஆடுமேய்த்து ஒருபலனும்கண்டதில்லை
இனிகடுவாய்க்கிரையாக காட்டிக்கொடுத்திடுவேன்
கும்பி கொதிக்குதடா எனக்கினி குடியிருக்கலாகாது
போவேன் கைலாசம் பின்அடி மாதத்திலே
முன்னாடி பின்னாடி முழுதெய்யாத ஆடியானேன்
கண்டபொருள் திரவியங்கள் காணாமல் போகுதடா
அஞ்சுவீடு அழியுதடா ஆண்டிநான் என்னசெய்வேன்
பஞ்சவர்ண மேடைகளும் பள்ளிவாசல் அழியுதடா
முன்னோலைவாசகத்தை முழித்திருந்து கேட்டிடுங்கோ
பின்னாலே கண்டதுதர்ன போகுதடா என்மகனே
சத்தியமாநடந்திடுங்கோ நான்சடையாண்டிசொல்கின்றேன்
மாசியென்ற மாதத்திலே உங்கள்மாமனுக்கு போதாது
நாட்டில்குறிகள்சொல்லி நான்பிழைக்கவந்த இடந்ததினிலே
வந்தஇடந்தனிலே ஒருவலுக்கடுவாய் வருகுதப்பா
கடுவாய்கண்டால்விடாது நான்காணாமல்மறையபோறேன்
ஏகமெங்கும்வெளியாச்சே நளானெங்கேஒளித்திடுவேன்
கடலதிலேபோகுமுன்னே எனைகடுவாய்ப்பிடித்துகொள்ளும்
வேதமுத்துஞானமுத்துஉங்களுக்கு வேண்டும் வேலைசெய்யுமுத்து
சப்பாணிக்கிழவனுக்கு தங்கயிடமல்லையப்பா
பார்தனிலேதான் அடங்கிமக்கள்மனதிலேயேயிருந்துவிட்டேன்
பண்டாரக்கிழவனுக்கு பயந்தெளிப்பார்யாருமில்லை
எங்கெங்கே போனாலுமெனக்கிரவுபகல்ஆகுதப்பா
என்மக்காள்சீசர்களே நானிதுவரை புத்திசொல்லிவந்தும்
அறிந்தோர் அறிந்திடுங்கோ அறிவுள்ளோர்கேட்டிடுங்கோ
தெரிந்தோர் தெரிந்திடுங்கோ உங்கள்சித்தம்பலதாண்வரை
தெளியார்க்குபதேசம் நீசெப்பிரு என்மகனே
இரப்போர்க்கு அன்னமது ஈந்திடுங்கோ கண்ணுமக்காள்
ஆடைகொடுத்திடுங்கோ அம்பலாசாரஞ் செய்திடுங்கள்
கொடுத்தால் அன்னம்குறையாமல் கொடுத்திடுங்கோ
கொடுத்தால்பதவியுண்டு குறைவில்லைஉங்களுக்கு
படித்தோர்கேட்டிடுங்கோ பலபாசைக்காரர்கள்
அடிப்பார்அடிக்கவந்தால் அடியைச்சகித்திடுங்கோ
வம்புவசைகள்சொல்லி வைதாலும் கேட்டிடுங்கோ
அவரவர்கள் தன்கணக்கு உங்கள் அரசனிடத்திலிருக்கிறது
என்பேரைச்சொல்லி எவரெவர்வந்தாலும்
அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தருக்கு
என்னஎன்ன அபாயம்இடுக்கமதுவந்தாலும்
அன்னேரம்நாராயணன் ஆயனங்கேநான்வருவேன்
அதிகாரபத்திரத்தில் அரவர்க்கு தீர்ப்புண்டு
சத்தியத்தீர்ப்புகேட்க மத்திபத்தைச் செய்யாதே
மத்திபத்தைச்செய்தாயானால் மனநாகந்தீண்டிவிடும்
தீர்ப்புக்கேட்கநாளாச்சு தெரிந்தோர் தெரிந்திடுங்கோ
தம்பிகணக்கனையும் தான்கூட்டி வாறேனப்பா
நெடுநாமம் அழியுதடா நேர்வழி தோணுதடா
தரணியது அழிந்தாலும் சத்தியம் அழியாதப்பா
சிவகாண்டதீர்பெழுதி தெரிவித்தேன் என்மகனே
வீட்டுக்கொரு கணக்கன் யிருக்கிறான் வையகத்தில்
உன்நாவில் நானிருந்து நடுதீர்ப்பு செய்யுகிறேன்
பலசொருபம் பாடிவைத்த பத்திரத்தை பார்த்திடுங்கோ கண்ணுமக்கா
யின்னும் ஒருகாண்டம் எழுத்தெழுதி பாடுகிறேன்
அயோத்திப ட்டணந்தான் அழியுதப்பா என்மகனே
அச்சுத்தேரி ஒடியுமுன்னே ஆண்டிவேலை செய்திடுங்கோ
பஞ்சவர்கள்  அஞ்சுபேர்தான் பதியதுதான் அழியுதப்பா
குருநாடு அழியுதப்பா கோபாலகுருசாமி சொல்லுகிறேன்
மந்திரமும் நானானேன்  மருந்துமூலி நானானேன்
சந்திரனும நானானேன் சூரியனும் நானானேன்
சேரசியங்கள் சூத்திரங்கள் பலசாஸ்திரங்கள் நானானேன்
எண்ணடங்கா சோதிபரன் மண்ணடங்கியிருக்கிறேன்
வேதாந்தம் சித்தாந்தம் விளம்பிவைத்தேன் வையகத்தில்
கொத்தை குறையாதே குறைமரக்கால் வையாதே
துலங்குதப்பா மேல்பதிதான் துணையாகும் உங்களுக்கு
உபதேசம் சொல்லும் கூலிஉடன் கையில்கொடுத்திடுங்கோ
பத்திரத்துக்கெழுத்து கூலிபலயிடம் வாங்கி கொடுத்திடுங்கோ
பள்ளிகண்கரெல்லாம் பதிவு குறையாமல் கொடுத்திடுங்கோ
கற்ப மூலி உங்களுக்கு கர்மவீனை தீற்குமுலி
காணுதப்பா அப்பதிக்குள் ஒருகனத்தமுத்துயிருக்குதடா
யின்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்
பாவனாசம் மானதிலே பள்ளிகொண்டார் தர்மலிங்கம்
பார்த்து உங்கள் சாஸ்திரத்தை படித்து அங்குயிருக்கிறார்
கடலதிலே தீர்த்தம் செய்து உங்கள் கர்மவீனை தீர்த்திடுங்கோ
கடலுக்குள் ஒருபாப்பான் பலகர்மங்கள் நடத்துகிறான்
வய்யகத்தில் வைகை வாசல்காவலாளி ஒன்பது பேர்
ஒன்பதுபோர் அங்கிருந்து பலஉபகாரஞ் செய்கிறார்
கயிலைமலை தன்னை கண்டு கனத்தவஞ் செய்தமக்கள்
கயிலைமலையானதிலே ஒருதவசியிருந்து வாடுகிறார்
அந்த தவத்தினுட அதிசயத்தை உங்களப்பன் சொல்லுகிறேன்
ஓடிஓடி பார்த்தாலும் ஒருவருக்கு தெரியாது
காயம்பு மேனியனார் கண்ணில் அதுகாணும்
தூங்காமல் தூங்குகிறார் அதன்சூத்திரத்தை அறிவாரில்லை
அடங்காத தவசுதான் அதின்நஞ்சயிறிவீர்களா
வயிற்றுக்கிரைதேடி வாறார்காண் அக்குருவும்
எண்ணடங்கா சொருபத்தலே அதில்என்சொருபம் அங்கு உண்டு
பிடித்த பிடிவிடாது பேயாண்டி சொல்லுகிறேன்
எங்கே எங்கே என்றுசொல்லி எட்டுதிசை பார்க்குதடா
பிழைப்பதற்கு வழிபார்த்து பிலத்தவஞ் செய்திடுங்கு
நான்மறைக்ககூடாது ஞானமுத்து சொல்லுகிறேன்
எங்கே எங்கே ஒளித்தாலும் யிரவுபகல் ஒன்றார்க்கும்
அன்பர்களே என்மக்களே அறிந்தோர் அறிந்திடுங்கோ
நஞ்சு எச்சி தின்றவர்கள் ஞானக்காளிக்கிரையாவார்
மேலும் எய்யாத சமயமதுள் இருக்குதுடா ஆளிப்புழு
வையகத்தில் பொய்களவு வாதுசூது பிறர்மோகம்
செய்யாத தீவினைகள் செய்தபேர் உண்டுமானால்
அகிலகிடங்கில்வாழும் ஆழிப்புழுக் கிரையாவீர்
முன்கணக்கும் பின்கணக்கும் முதற்கணக்கும் நான் கொடுத்து
கணக்கையெறிந்துவிட்டேன் கனகயிடம் தூத்திவிட்டேன்
வாழும்பள்ளிமேலவாசல் ஒன்றை அடைத்துவிட்டான்
பட்டந்தனைபறித்து அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்
ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம் காண்
மேளதாளம் குரவை தொனி வேண்டாம்காண் யீசனுக்கு
ஓரு அன்புமலரெடுத்து அனுதினமும பூஜைசெவ்வாய்
நடுதீர்ப்பு நான்கேள்க்க நாளதுக்கு வருகுதப்பா
பள்ளிக்கணக்கரெல்லாம் பாடஞ்சொல்ல வேணுமடா
நாட்டு கணக்கெடுத்து நாம் தீர்ப்பு நடத்தயிலே
என்மக்கா சீசர்களே எடுத்தெழுதி சொல்வீர்களே
அம்பலத்து கணக்கர்களே நீங்கள் அறியவில்லை என்பீர்களே
காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசு எண்ணுகிறான்
பண்டம் பறிபோகுதடா அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே ஆண்டிபுத்திசாலிவந்தேன்
வழிதப்பி எல்லோரும் மயங்குகிறார் கேள்மகனே
ஆண்டிக்கு கோபமானால் அழிந்துவிடும் முப்புரம்போல்
அடங்காதகோபமாச்சே ஆண்டியென்ன செய்வேனடா
மக்களுக்கு வேலைசெய்ய மனமில்லைஎந்தனுக்கு
இன்னும்ஒருகாரணம் எடுத்தெழுதிசொல்லுகிறேன்
அவரவர்க்குத்தனித்தனியே ஆண்டிபுத்திசொல்லிவந்தேன்
நந்திசொன்ன உபதேசம்மக்கள் நாள்தோறும்கேட்டிருந்தும்
நீலனுக்கு மூக்கனுக்கு சொன்னநெட்டூரம்போலாச்சே
முன்னும்பின்னும் சொல்லியிருந்தும் முழுமோசம் ஆகிபோச்சு
புத்திகெட்டபிள்ளைகளே நீங்கள் சக்திகெட்டுபோனீர்களே
ஒருகாதில்தான்கேட்டு ஒருகாதில் விட்டீர்களோ
இனிநம்மா லேயாகாது நமக்குஇவ்விடஞ்செல்லாது
வல்லாண்மைசெல்லாது வலுவழக்கு ஆகுதிங்கே
பொல்லாப்புக்கட்ட வேண்டாம் போறென்கைலாசம்
நாதனுமேகேட்டதற்கு நன்மையொருவாpல்லை
நாதனுமே கேட்டதற்கு நன்மையொருவாpல்லை
கண்டகோவில்தெய்வமென்று கையெடுத்தால் பலமுண்டோ
கடுவாய்பிடித்ததுண்டால் காணாமல் மறைந்துவிடுவேன்
பாம்புகடித்ததுண்டால் பதைத்துநீங்கள்பட்டிடுவீர்
இனவாதை பிடித்ததுண்டால் இருப்பீர்களோ இவ்வுலகில்
ஞானக்கழுகுபிடித்ததுண்டால் இந்தநாட்டில் இருப்பீரோ
அண்டபகி ரண்டம்வெல்ல ஆயுதம் பிடித்ததுண்டால்
துண்டுதுண்டாய்போய்விடுவீர் துணையுண்டோ உங்களுக்கு
குலத்தைக்கெடுக்கின்ற கோடாரிக்கம்பதுபோல்
உங்களுடையபாவம் உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா
கோபமது உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா
கொலைகளவு உங்களுக்கு கொல்லும் ஆயுதமாயிருக்குதடா
வாதுசூது பிறர்மோகம் வளருதப்பா ஒருகழுகாய்
ஆசையது உங்களுக்கு என்மக்கா தோசமாயிருக்குதடா
எல்லோர்க்குங்கோபமாச்சுஇடையிலோட்டம் ஆச்சுதடா
பிரமன்பகைத்துண்டால் நீங்கள்பேசாமல்போய்வீடுவீர்
விஷ்ணுபகைத்ததுண்டால்வெறியாட்டம் கொண்டிடுவீர்
உத்திரம் பகைத்ததுண்டால் உயிர்பிழைக்கமாட்டீரப்பா
காலனும் வந்துவிட்டால் உங்களைக்
கைபிடியாய் கொண்டுபோவான்
இத்தனைபேர் சோ;ந்திருக்க ஈசென்ன செய்வேனப்பா
அவரவர்க்கு இட்டகுறை ஆதிமுனி என்னசெய்வேன்
நடுத்தீர்ப்புக் கேட்குதற்கு நாளடுத்து வருகுதப்பா
நடுத்தீர்ப்புக்கேட்டவுடன் நாடாள நான்வருவேன்
சீசன்மார்தன்னிடத்தில் மக்கள்தெளிவாக கேட்டிடுங்கோ
சொல்லுங்கப்பா அன்பருக்குத் துணையாயிருந்திடுங்கோ
உன்னோடு என்னாளும் உயிர்க்குயிராயிருப்பேனப்பா
ஊட்டுகிறேன் ஓட்டுகிறேன் நான்உயிர்க்குயிராயிருக்கிறேன்
வம்புவசைபேசாதே என்வாளுக்கிரையாகதே
ஏசாதேபேசாதே யென்கணக்கர்சீசர்களே
சிரிப்பாரோடேயிருப்பேன் நகைப்பேன்நாக்கறுப்பேன்
முன்னாலேஒடுக்கிவந்த ஒருவரையும் விட்டதில்லை
எதிர்த்தவனை வைத்தேனோ உங்கள்யிருகாதுங்கேட்கலையோ
கள்ளனிடம் நானிருப்பேன் பின்காட்டிக்கொடுத்திடுவேன்
பிடித்தவனோடே யிருப்பேன் அவரைபிள்ளை போலாக்கிடுவேன்
குடியிருந்துகொலைகள் செய்வேன்பின்
கொலைக்கழுவில் போட்டிடுவேன்
கண்டதுண்டமாய் அழியுதப்பா கைலாசம்புரண்டுபோச்சே
பரமனென்னைக்கண்டதுண்டு தனித்து நானிங்குவந்தேன்
பரிசித்துராஜன் கண்டதுண்டு பயந்திடுங்கே ஓடிவந்தேன்
மார்க்கண்டேன் வந்ததுண்டு மறைந்திங்கே வந்ததுண்டு
வையகத்தில் எமனும் மாயனும் கண்டதுண்டு
ஈசனுடனேவார்த்தை சொல்லாதே நீபடுகுழியில் விழாதே
ஆண்டிபேர் சொன்னதுண்டால் ஆசாரஞ் செய்திடுங்கோ
கொட்டிமுழக்கிடுவேன் குடிகரை யேறுமட்டும்
பொய்க்காற்று அடிக்குதப்பா பெருவெள்ளமதாய்க்போகுதடா
கொம்புசத்தம்கேட்குதப்பா வம்புகலி யழியுதடா
இன்னும்செப்படிவித்தையொன்று செய்கின்றேன் கேள்மகனே
வையகத்தில் ஒருசாPரம்
வகைவகையாய் நாடாள்வார் தேசமெங்கும்
நம்முடைய சித்துவித்தை காணக்கான மூன்றானேன்
மாயவன்பொல்லாதான் குடிகொண்டால் உள்ளறிவான்
மாசியென்றும் வாசியென்றும் மாமுனிப்பற்று சொல்லுகின்றேன்
ஒன்றுக்கொன்று பகையாச்சே உங்களுண்மைபகையானால்
விள்ளுரென்றும் ஒருவனுண்டு பலவேடிக்கைக்காறனடா
நாட்டுமுடியிறக்கி வைகுண்டராசர் ஆளவருகிறார்
நம்பிப் பிடித்திடுங்கோ அய்யா சிவசிவா அரகரா
சிவகாண்ட அதிகாரப்பத்திரம் முற்றிற்று
அய்யாதுணை
கல்யாணவாழ்த்து
மவுனி  கலியாண மணவோலை வாழ்த்தலுக்கு
சிவனே குருவான திருமேனி முன்னடவா
அய்யாவும் நாரணரும் அம்மை உமையவளும்
தெய்வார் தமக்கிரங்கி திருமுகூர்த்தம் செய்யவென்று
அண்டரோடு தேவர் அறியவே ஓலையிட்டு
கொண்டாடியின்பம் குளிர்ந்தநதி பாலதுபோல்
சீரானமக்களென்றும் தெய்வச்சான்றோர்களுக்கு
நாராயணர் தாமும் நல்லமுகூர்த்தமிட்டு
கன்னிக்கலியாணம் கைப்பிடிக்க வேணுமென்று
மன்னனுக்க யேற்றுமதி மந்திரியும் தானறிய
இவனிவளாமென்று யினங்குறித்துப் பெண்பேசி
அவனியறிய அலங்கார மிட்டனரே
கட்டுடைய பந்தலுக்குக் காலொன்பது நாட்டி
பட்டுமேற் கட்டியெனப் பந்தலிலே தான்வகுத்து
சில்விளக்கேற்றிச் சிறந்தபரி பூரணமாய்
நற்சுதி கண்பாட நடசாலை யும் வருத்தி
சங்கீதம் பாட சகலகலையுந் தொனிக்க
மக்கள் ஓசையேழு வாhத்தியமும் தான்முழங்கக்
கிம்புருடாதி முதல் கின்னாpவா சித்துநிற்க
தம்பூரு வீணைசுரமண்டலம் முழங்கக்
கொலுகொலு வெனத்தெய்வார் குரவைமுழங்கிநிற்க
மலமலென ஆவுநெய்யில் வாடாவிளக்கொpய
அiகு கொலுவிரிக்க ஆலத்தியேந்திநிற்க
ஒழுகு காளாஞ்சி ஒருமித்து வந்துநிற்க
சத்திமுனி பத்திரத்தாள் சாயூச்சமாயிருக்க
இத்தனைப் பண்பும் யிதமுடனே தெய்வார்கள்
பந்தலுக்குள் ளேபரிந்து யிருந்துயெல்லாரும்
கந்தனுக்கு நற்சரடு கற்பிக்க வேணுமென்று
தாயாருடன் பிறந்த தன்மா மனைவருத்தி
காயாம்பூ மேனியனார் கட்டிலொன்று தான்கொடுக்க
அதிலே யிருமெனவும்ட அருகில வாpருக்க
சதிரான வார்த்தையொன்ற தான்செவியி லுமூகி
கோப்புக் குண்டான குருமுறையைத் தான்கொடுத்து
மாப்பிள்ளையும் பெண்ணையும் வருவித்துப் பந்தலிலே
பரம ரகசியமாய் பலகைதணி லேயிருத்தி
அரகரா வென்று அம்மையுமையை தானிணைந்து
சிவசிவா வென்று திருச்சரடு சோ;த்தனரே
தவசி முனியுடனே தானெழுந்து வந்துநின்று
சீதனங்களான சிலவாpசை தான்கொடுத்து
மாதவனை நினைந்து வாழ்த்தினார் பாலர்தனை
சொந்தமாய் உங்களுக்குத் துவரையம் பதியெனவும்
தந்தோ மிலங்கைத் தளவாடம் உள்ளதெல்லாம்
பிள்ளகளே யிந்த  பெரும்புவியை ஆள்வதற்கும்
வெள்ளானை மீதேற விடைதந்தோம் உங்களுக்குத்
ஆனாலும் மக்காள்நீர் ஆளுவீர் ராச்சியத்தை
வானோர் அறியவும்பால் வாழ்த்தினோம நீர்வாழ
வாசவனும் தேவர்மறையவரும் தாம்வாழ
பேசரிய தெய்வர்கள் பெற்றமக்கள் தாம்வாழ
கன்னிமார் பெண்கள்பெற்ற கைச்சான்றோர் தாம்வாழ்
அன்னைபத்திரத்தாள் அமுதருந்தி தான்வாழ
மேலோக நீதிவிளங்கி மனுவாழ
லோகமுள்ளவும் பொய்யருகி மெய்வாழ
நல்லோரும் நவில்வோரும் தான்வாழ
எல்லாரும் வாழயிருந்து நீடுழிவாழ்க
அருள்நூல் நிறைந்தது


திங்கள் பதம்

அஞ்சுதலைபோல்முகமும் ஆயிரங்கைகாலமாகப்
பிஞ்சுமலைபோல்கூட்டி பிறப்பித்துநானுமிங்கே
செப்பரியதோப்பதிலே சீதைவென்றுநிற்பிச்சியிருக்க
எப்பநான்புறப்படுவேன்யென்னுடையபத்தன்மாரே
செப்பறியதிருமாலும் அங்கிருக்க
தென்பரியதோப்பதிலே செப்பமுடன்வைகுண்டம்
ஆனைப்படிதிட்டிச்சிருந்த அறிவுள்ளபண்டாரம்
பத்தன்மாரேவெகுநாளாய் வேலைசெய்யும்பிள்ளைகளே
முன்னிருந்தயுகமதிலே தன்னியத்தால்பால்தந்தேன்
என்னையறியாதபேர்கள் இருப்பாரேகலியுகத்தில்
வங்காள அரண்மனையார் வாறாரேகலியழிக்க
என்மகளே திருநெல்வேலி எல்லாரும் ஒருமுகமாய்
சொல்லரியபுத்தினைத் தெரியும்படி சொல்லிவிடு
வெகுநாள் கலியழிக்கவிரும்புகிறேன் கருவூலமே
சொற்பெரிய தோப்பதிலே சீதையுங்கள்  அம்மையவள்
மற்பெரிய ராசனிடம் மற்பிடித்து நிற்கிறாளே
மகிழ்ந்திருந்து விளையாட வாறீரோ யென்மக்களே
திரும்பிநீங்கள் வரவேண்டாம் தெய்வசுனை அங்குவுண்டு
செங்கமாரி நோயுமில்லை தீனமில்லை பத்தன்மாரே
கவிழ்ந்திருந்து பதியரசன் கட்டிலின் மேலிருக்க
பாற்கடலில் பள்ளிகொண்டு பகுத்துவிடைவாங்கி
பஞ்சவேர உங்களுக்குப் பழிபாவம் செய்யவில்லை
திரும்பிநீங்கள் சிரித்தாக்கால் தீனமுண்டு உங்களுக்கு
கடலதிலே கெரடிமரமும் கல்லறையும் பொன்கணமும்
பொக்கணமும் புலித்தோலும் வாழைக்காய் கேட்கவில்லை
கற்பனையாய் பெற்றிருந்தபடியாலே வீற்றிருந்தேன்
சொற்பெரிய கற்பனையாய் பத்திரத்தாள்பெற்றபிள்ளை
கைலாச பணிவிடையுண்டு கலியுகத்தில் வேலையில்லை
நிறைவேலை செய்தாலும் நீதங்கேட்க மனிதரில்லை
கடலதிலே ஒருகிழவி அவதாரக்கிழவி தானும்
அமைத்துவந்தார் உங்களுக்காய் அம்மையென்ற லட்சுமியைக்
கண்டுதணிந்தவர்க்குக் கைலாசம் இங்கேயுண்டு
மாப்புக்கேட்க மக்களுண்டு மகாதேவன் அருளாலே
ஆயிரத்தெட்டு மாசியிலே அதிகப்பேறு பெற்றுவந்தேன்
என்னாலேஒருஞாயம் எண்ணாமல்செய்யவில்லை
எண்ணாமல்மாப்பு செய்து இரணியணைச் சங்கரித்தேன்
பின்குடுமி முடிந்தவர்கள் பூமியில்இருக்கமாட்டார்
அய்யோ பிள்ளைகளே அறிவுள்ள என்மகனே
சொல்லரிய வெயலதிலே சுடுமணலில் தானிருத்தி
சொல்லரிய கல்லேற்றி வேறுபொடியில தள்ளிவைத்தான்
இந்த அநியாயம் கேட்க ஈசுரனார் விடையும்பெற்று
பள்ளியிலேசென்றிருந்து பாடிவரும் பிள்ளைகளே
அன்றுசிரிப்பீர்களோ அதிகத்தலம் காட்டித்தாறேன்
நட்சத்திரமுதிரும் நல்வானமிடிந்துவிழும்
என்னயைறியாதபேர்கள் எரிந்துசரிந்துபோவார்
பத்தினிதான் பெற்றபிள்ளை படும்பாடு கேட்கவில்லை
கற்பித்துபெற்ற கந்தன்படும்பாடு அறியவில்லை
சொற்பெரிய திருமாலைச் சோதனைக்கு அனுப்பிவைத்தேன்
கந்தனைஅடித்தவரைப் புழுங்கிடங்கில் தள்ளிடுவேன்
ஊருணி கிடங்கெல்லாம் ஊற்றுமிகப் பெருகுதடா
சிறீலங்கை மாறியது செந்நெல் விளையுதடா
தீமெழுகநாளேச்சு சொல்லித்தாரேன் தெரியும்படி
ஆண்டிபெற்ற பிள்ளைகள்தான் அரசாட்சி ஆகுதடா
பசுவின்பால் குடித்ததுவும் பத்தினிவயிற்றில் பிறந்ததும்
பன்றிவயிறு தானொரிந்து பன்றிநெய்யாய்ப் போகுதடா
சொற்பெரிய கவுந்தலத்தில் சிலவாழ்வு யிடிந்துவிழும்
நீபெரிது நான்பொதுவடிவெடுப்பேன் பழிக்குலத்தில்
பலவேசம்போட்டதுண்டால் பத்தன்மார் அறியமாட்டான்
எடுத்தான் ஒருகோலம் இறங்கிவந்தேன் கைலாசம்
முப்புரக்கோட்டையிலே மூன்றுவேசம் போட்டுவந்தேன்
அப்பாவியென்னை யுந்தான் அறியாமல் அடித்தானே
இந்தக்கலியுகமதிலே இருக்கவொட்டான் என்னையுந்தான்
இத்தனைக்கு கலிமுறுகி அநியாயம் அதிகமாச்சே
பலவிதமாய்க்பக்தன்மாரேபாடி ஆடிபரத்திவிடவந்தேனடா
சொற்பெரியபத்திரத்தாள் கற்பனையாய் வளா;த்தபிள்ளை
இதுவரைநான்பொறுத்தேன் இனிபொறுக்கமாட்டேனடா
உங்கள்வருத்தம்கண்டு ஒருமருந்துகொண்டுவந்தேன்
தெய்வீரேஉங்களுக்காய் சிறுபிள்ளையாய் நானிருந்தேன்
அப்பனொருபண்டாரம் அதிகசுகம் கொண்டுவந்தார்
ஏடுயெறிந்துவிட்டேன் கையெழுந்திருந்து போவென்
கல்மடமும்திருப்பதியும் கடலதிலேஅங்கிருக்க
எப்படியும்நானிருப்பேன் யென்னுடையதம்பிமாரே
ஒருசாமநேரத்திலே ஊழியென்றகாற்றுவரும்
மற்புடையபிள்ளைகளே வருவேன் நான்எழுப்புதற்கு
என்னை அறியாதவன் உன்னால் தவம்வேணுமென்பான்
எப்படியும்கும்பிடுவான் புளுக்குழியில்தள்ளிடுவேன்
கோத்திரத்தில் உள்ளவர்க்கு கூடுமட்டும்புத்திசொன்னேன்
கேளாதபேர்களுக்கு நானென்செய்வேன்ப்பா
மஞ்சள்நீர் பாலாறாய் வருகுதப்பா என்மகனே
கஞ்சனையறுத்தமுனி கடல்நீர்குடித்துவிட்டேன்
அப்படியே குடித்தவர்க்கு ஆண்டிவந்துகுடியிருப்பேன்
தெத்தெடுத்த பிள்ளையில்லைதிட்டிக்காமல் பெற்றபிள்ளை
அப்போநீயரசாள அதிகபிள்ளை யீன்றெத்தேன்
விருதுக்கோடி பெற்றபிள்ளைவிருப்பமுள்ளபிள்ளைதான்
என்னுடைய மந்திரியெல்லோருமொரு முகமாய்
அலைவாய் கடலதிலே வருவதற் காயழைக்கிறாரே
ஆடுகிடாக் கோழிபன்றி அறுத்துபலி கேட்கவில்லை
பொங்கரிசி கோழிமுட்டை பொறித்தகறிகேட்கவில்லை
உருகச்சுட்ட பணியாரம் அவலருண்டை கேட்கவில்லை
கருகச்சுட்டமுருக்குகளும் கடையல்பால் கேட்கவில்லை
உருக்கெடுத்த மடப்பதியில் திரிக்கொழுத்திவைக்கவில்லை
ஒருகாசும்கேட்கவில்லை உமையவளே அறிவாயோ
என்னையொன்றுசொல்லதே இறையவனும் அறியலையோ
வெகுநாளாய்வந்திருந்து வேண்டும்புத்தி சொன்னேன்நான்
ஒன்றும் அறியாமல் விழுகிறானே தீயதிலே
சொல்லிவிட்டேன் கேட்கவில்லை என்னுடைய நம்பிமாரே
அறட்டி மடக்கிக்கொண்டு முடுக்கிகொண்டிருக்கிறானே
தவமிருக்கும் இடமதிலே வலமிடமா றாட்டம்வைத்தான்
பொய்ரதத்தை ஓட்டிவைத்தான் பூலோகம் தான்நடுங்க
பஞ்சவரே வெகுநாளாய் வருத்திநான் தீர்த்துவிட்டேன்
குட்டம்குறைநோவு கொடியதீனம் தீர்த்துவிட்டேன்
கண்குருடு கால்நொண்டி கர்மமுதல் தீர்த்துவிட்டேன்
தெச்சணா பூமியிலே தென்குமரி நன்னாட்டில்
வெகுநாளாய் வந்திருந்து மக்களுக்கு புத்திசொன்னேன்ங்
எத்தனையோ வெகுநாளா யியருந்துபுத்தி சொன்னேன்
அப்பனில்லா பிள்ளையது அதிகபிள்ளை யானதுதான்
செப்பரிய தாய்க்கிழவி சேர்ந்தாளே யெடுப்பதற்கு
இடுக்கமில்லை யினிமேலும் வெண்ணெயுண்டு நீளுதடா
தெப்பக்குள மிங்கமுண்டு திருமால் கற்பிச்சியிருக்கு
பிராமண வேசம்பாட பத்தன்மாரே நீங்களுண்டு
பொன்னாலே பூனூலும் தங்கத்தாலே சாலுவையும்
கடுக்கண்திருக் காணியில்லை கலியுகத்தில் வேலையில்லை
பொன்னரும்பு வேலைசெய்யப் பூமியில்தட்டானுமில்லை
பொன்னரிய கன்னபெற்ற பிள்ளைகள் வந்ததுண்டால்
குறுணிப்பொன்னிடுவதற்கு கொடுத்துவைத்திருக்குதப்பா
பட்டமர சாளக்கோடிமக்க ளுண்டு பாவனையாய்நான்  கொடுப்பேன்
எல்லார்க்கு மொருப்போல ஈசன்நான் யிருக்கிறேன்
சொற்பெரிய ராச்சியத்தில் சீமைகாட்டி ஆளலாமே
குதிரைகட்ட லாயமுண்டு கோடிச்சீமைகட்டலாமே
அதிகமுள்ள ராச்சியத்தில் அமுதேற்றுத்கொள்ளலாமே
கண்ணாடி பார்த்தப்பட்டு கடியதுகியில் ஆடையுண்டு
குளிர்கால ஓட்டமுண்டு கொடிவிருதுக் கட்டமுண்டு
தாசியாட்டமுண்டு சான்றோர்பார்க்கத் தம்பிரான்கற்பித்தேன்
ஆனைமேல் ஏறிநீங்கள் அற்றகுற்றம் பார்ப்பதுண்டு
சீதனம் விட்டுத்தாறேன் தெய்வேந்திரன் அங்குண்டு
கலியுகத்தில் வேலையில்லை கண்மணியே உங்களுக்கு
ஆலங்காய்நெல்லிவிளையும் அரிசிசிறு தானியமுண்டு
அமுததேற்றங்கொள்ளாலேமே ஆசாரம் அங்கேயுண்
கோவங்காய் பாகற்காய் கொழுந்துவரை அங்கேயுண்டு
சத்தியவாக்காய்ச்சொல்லுகிறேன் தம்பிரான்கற்பனையாய்
தலைவாசலானதிலே தலைதூக்கி மயிர்பிடித்து
கற்புடையராசன்வந்து கண்ணாடி வைத்துபப் பார்த்தான்
என்பேரில் குற்றமில்லை இழுத்துப்புதைக்க பிள்ளையில்லை
அப்படியேபிள்ளகைளே அணைத்தார்பால்கோட்டையிலே
இரண்டாம்முடிதரிக்க நீராவிக்கரைகளுண்டு
சங்குசக்கரமுண்டு தம்பிமாரே உங்களக்குக்
கன்னியிலேவந்திருந்து மேல்நோக்க நாமந்தருவேன்
சித்திரத்தாலதிகமுள்ள தோழருமங்கேவுண்டு
பஞ்சவரே உங்களுக்கு வஞ்சகமாய் சொல்லவில்லை
மாயவலைக்குள்ளிருந்து நடுஞாயம்தீர்த்துவாறேன்
திட்டித்தநாள்முதலாய்ச் சிலகாலம் தவசிபண்ணி
பால்காவடிவேண்டாமென்று பண்டார மிங்குவந்தேன்
ஒன்றுநான்கேட்கவில்லை உனக்குத்தெரியும்தாயே
சின்னம்சிறு மதலையாகத் தோப்பதிலே தவசிருந்தேன்
பிச்சிப்பூ அச்சுமாலை பொரியவல் கேட்கவில்லை
நல்லெண்ணெய் பிண்ணாக்கு ராசாவும் கேட்கவில்லை
தெய்வகன்னி பெற்றபிள்ளை செடிதோறும் அலைகிறாரே
பேய் எச்சி தின்றுஅவர் பேய்போல் அலைகிறாரே
நானானேன் தானானேன் தந்தேநன்னம் தந்தேநன்னம்
நாகம்போலே உள்ளபேயை நல்லதீயாலெரித்தேன்
மந்திரம் மாற்றிவைத்தேன் மாறானதைச் சாபமிட்டேன்
கருத்துள்ள ஈசுவரியேக் கண்டுகொண்டு பார்க்கவேணும்
கழுத்திலே கல்லேற்றிக் கைதாப்பாள் போடுகிறானே
பழிக்கோ நாங்கள் பெற்றபிள்ளை படும்பாடுகேட்கலையோ
கம்புவெட்டி அடிக்கிறானே கல்லேற்றி அடிக்கிறானே
அரியரசன் தவசுபண்ணி தெய்வகன்னி பெற்றமக்கள்
பொறுத்திருங் கோமக்காள் பூலோகம் ஆள்வீர்களே
குடுக்கவட்டைச் சிரட்டைகொண்டு வந்துயிருந்தேனடா
சூதாடிப்படைபொருது திறம்பார்க்க வரவில்லையப்பா
அரியரசன் தவசுபண்ணி அவர்பெற்ற பிள்ளையுண்டு
பொன்னரசி ராச்சியத்தில் அரசாளப் பிள்ளையுண்டு
மன்மதன்சீமையிலே வாள்வீச்சுக் காரருண்டு
கூலிக்காரர் மக்களில்லை கோடிவரிசை பெற்றமக்கள்
வற்றிய குளத்துக்குள்ளே முத்துக்
கெண்டைப் பிடிக்க பிள்ளையில்லை
அம்மா அம்மா தாய்க்கிழவி அதிமுள்ள பிள்ளையுண்டு
நாட்டுச்சீமையிலே வகையெடுக்கப் பிள்ளையில்லை
என்னுடைய தம்பிமாரே இலங்காபுரி ஆள்வாயோ
ஊசிமுனையதிலே உங்களுக்காய்த் தவமிருந்தேன்
காசியிலே ராசர்மகன் வாழும்தேசம் தாறேன்நான்
நட்டமா நான்இட்டவேலி நாள்தோறும் வாழ்ந்திருக்கும்
பால்வருணன் என்மகன்தான் பஞ்சவரும் என்மகன்தான்
நான்பெற்ற என்மகன்தான் ராச்சியத்தை ஆள்வானே
வாசமுடையபெருஞ்சுனையில் தெய்வஉயிர்மீன்பிடிக்கவந்தேன்
ஊற்றால்தான் போட்டதுண்டால் உயிர்த்தேர்ந்து மீன்பிடிப்பேன்
பழிபாவம் செய்திடுவேன் பார்த்திருங்கோ கொஞ்சநேரத்திலே
செடிகலைத்துவேட்டையாடி தெளிந்தமுயல்பிடிக்கவந்தேன்
அதிகமுள்ள வெடிகள்கொண்டு அமைத்துவைத்து கட்டிடுவேன்
இளங்கொடிகால் வைத்து எடுத்துக்காட்டவந்தேனப்பா
என்னுடைய பிள்ளைகளே இரக்கமுண்டு பத்தனமாரே
கடுவாய்ப்புலிகள்சிங்கம் கடக்கநின்று சிரிக்குதப்பா
ஒளித்திருந்தேன் வெகுநாளாய் ஓடிவந்தேன் எடுப்பதற்கு
நான்பெற்ற பிள்ளைகள்தான் ஆலிலைபோல் வாடுதப்பா
பொல்லாதபாவிகள்தான் துயரப்படுத்துகிறார்
கண்மணியே ராசாவே கலியழிக்க வாருமப்பா
வலிமையில்லை பெலனுமில்லை வரிசையுள்ள பிள்ளைகட்கு
அய்யோ தாயாரே ஔவையாரே கிழவியம்மா
கஞ்சனை அறுப்பதற்கு கனவரிசை கொண்டுவந்தேன்
முத்தலத்தோர்கூடிருந்து தெப்பகுளம்காட்டுவேன்நான்
பொன்மலை ஆளலாமே முத்துப்பதித்த
வைகுண்டம் அங்கேயுண்டு
ஊசிகள்தான் போட்டப்பவளக் கோட்டை அங்கேயுண்டு
எப்படியும்கற்பனையால்; இங்கேவந் தெடுக்கலாம்
உருள்வண்டி போட்டதரும் வெண்சாமரை வீசலாமே
முத்துப்பதித்தத்தோரும் பவளத்தால்சாவடியும் மண்டபமும்
கல்பதித்தவிளக்குகளும் கண்ணடங்கா செல்வமுண்டு
நடனமாடும் சாலையெலாம் நல்லதெய்வார் கூட்டமப்பா
தஙகக்குதிரையுண்டுதர்மராசர் அரசாட்சிக்கொடிகள்கட்டி
பால்கொடுத்து தாராட்டி பஞ்சணைமேல் கிடத்திடுவான்
பஞ்சணைமெத்தையில் படுத்துறங்கும் நாளாச்சு
காலுக்கு வீரகண்டை கைரண்டுக்கும் தங்கமுண்டு
குகையாள பிறந்தவளே யென்குழந்தாய் எழுந்திருடா
அதிகமுள்ள நீசனும்தர்ன மற்பிடித்து அடிக்கிறானே
படையெடுக்க வாமகனே மானமறுக்கம் பொறுக்கலையோ
மண்டைமயிர் பறியசுமந்து ஒருகாசு கொண்டுவந்தான்
வாடாப்பயலேயென்று ஒருகாசும் பறித்துக்கொண்டான்
இந்தராசன் சீமையாள வந்துபிறந்தீர்களா
கூட்டோடேதாயெழுப்பி கோகுலமே தாயாரே
வேலாயுதம்எடுத்து வேடமகன் அளுகிறான்
கலியுகத்தை முடிப்பதற்குக் காரணமாய்தவசியிருந்தேன்
கண்ணிரெண்டும் இரத்தமாகக் காச்சல்வந்து பிடிக்குதப்பா
கட்டுவேன் நான்சுருட்டி காட்டித்தாறேன் கண்மணியே
தாரபடி பால்கொடுக்கத் தாயாரும் வாறேன் நான்
பாருலகில் திருச்சம்பதி பண்டாரம் அங்கிருந்து
சோதிடங்கள் சொல்வதற்கு தொடர்ந்துவந்தேன் கண்மணியே
ஊமைபோல் தானிருந்து உருண்டோடிப் போறானே
வெகுநாளாப் பஞ்சவர்தான் ஆவலாதி வைக்கிறாரே
கயிலைக்கு வடபுறத்தில் கனத்ததிட்டுப் பாறையிலே
ஓமக்குழி வளருதப்பா உங்களுக்காய்த் தவசிருந்தேன்
தீயராயப் போகவேண்டாம் தீயதிலே யிறங்கவேண்டாம்
கூட்டோடே கைலாசம் உங்களுக்கு காத்துவைத்தேன்
நின்றால் குடித்தால் தூக்கம்வைக்க நீதியில்லை
தென்னமரம்புன்னைநிழல் தெளிந்திருக்க நீதியில்லை
கண்மணிராசாவே காருமிந்த பிள்ளைகளை
அதிகமுள்ள தெய்வகன்னிமக்களை ஆராய்ந்தெடுநீ
தென்னம்காவுள் சிலஓலை அறியச்சொன்னாள்
தும்படுத்து ஆயாமல்சுமந்து கொண்டுபோகச்சொன்னான்
அத்தனைக்கும் போட்டவனை அடித்தானே ஆனைகாலோடே
ஐவராசன் சீமைதன்னை தாருமென்று அவன்கேட்டான்
கொஞ்சநாள்கூலிக்காக காருமென்று நான்கொடுத்தேன்
நான்கொடுத்து நாட்டையவன் நாள்தோறும் அண்டிருந்தான்
சுருக்கிளனீர் வெட்டச்சொன்னான் கண்மணியேசுமக்கச்சொன்னான்
கொண்டங்கே போட்டாலும்ட கூடதிலே அடைக்கச்சொன்னேன்
அழுதுமுறையிட்டேன் ஆனாலும் கேட்கவில்லை
பாக்குவெற்றிலை கொண்டுவா பயலே உன்னைவிடுவேன்
தம்பிபடும் பாட்டைத் தாயாரே பார்க்கலையோ
கம்புகொண்டுதானளந்து கண்மணியேவெட்டச் சொன்னேன்
பறிக்கநான் வந்தேனடா பத்தினியும் கூடவந்தாள்
உடலழிந்து விழுகுதடா ஊட்டோடே வேகுதடா
கூட்டோடே வேகுதடா குருநிதி ஆற்றலாலே
பொறுதியென்ற தீயாலே பூலோகம் அழக்கிறேனடா
பதினெட்டு துர்க்கையாலே பாரழகு லோகமெல்லாம்
வடகடலும் அழக்கிறதே வானம் இடியுதடா
பூமிவெடிக்கிறதே மலைகள் இளகுதடா
சுழல்காற்றுவருகதப்பா தேசம்விட்டு ஜனம்ஓடுதடா
மண்ணறைக் குள்ளிருக்கும் மாயாண்டி வெளிவருவேன்
அப்புவியை அரசாளவரும் போது சம்பூர்ணத்
தேவரைத்தானெழுப்ப அய்யாவும்
உம்பர்தனைவதைத்த வையகத்தில் வரும்போது
அன்பான மக்கள் தனை
அருள்புரிந்து அய்யாவும்
மாரிபொழயவைத்து மக்கள் பஞ்சம்தீர்த்து
ஆழிபெருகி அவனியெங்கும் அய்யாவும்
தரணியில்வந்து  தயவுசெய்து என்னசொல்வார்
வள்ளியாற்றுக்கு மேற்கு வாரியால் தானழியும்
கோட்டாறு அங்கே கொள்ளையினாலழீப்போம்
சுசீந்திரம்ட ஆறுடைந்து சுத்தகதி ஆகுதங்கே
ஆறுடைத்துத்தேரும் அன்புடனே தெற்குதர
தாமரைகுளம்பதியும் தண்ணீராய் போகுமங்கே
கழிக்கரையைத் தானழித்துக் கடற்கரையில்முழித்து
கன்னபெற்ற பிள்ளையுழும் கருத்தாகவேகூடி
கூடிஅய்யா குரபரா றாயணமுனியும்
தெற்குவடக்காய் திருப்பதியும் தோணுமென்றார்
ஈரேழுகாதம் இருக்கதுகாண் துவாரகையும்
வடக்குவாசல் துலங்குதுகாண் அம்பலமும் அம்பலத்தில்
நாரணரும் அரசிருக்க வாறோங்காண் வாறோமென்று
வாக்குரைத்தார் மக்களுக்கு அய்யா.

சாட்டு நீட்டோலை

சாட்டு நீட்டோலை தன்னை நாக்கு மூக்கொடியாமல்
தாக்கி எழுதச்சொன்னேன் சிவனே அய்யா
ஓதுமெழுத்துக்கும் முன்னூன்றுமெழுந் தாணிக்கும்
ஊமைமவுனம் சொன்னேன் சிவனே அய்யா
தெச்சணமெங்கும் போற்றநற் சடலங்கள் பார்த்து
தேடித்திரிந்தேன் அய்யோ சிவனே அய்யா
முப்பத்து முக்கோடி தேவரிஷியுடனே
முனியும்வந்த தெடுத்தாரே சிவனே அய்யா
மாமுனி தாயுடனே வழியே நளடந்துவர
மலர்மாரி பெய்ததுண்டோ சிவனே அய்யா
திருச்சம்பதியில் புக்குத் தீர்த்தக்கரையில் செல்ல
திரைவந்திழுத்துதையோ சிவனே அய்யா
அலைவாய்க் கரையிருந்து தலைமேலே கையைவைத்து
அம்மை அழுததை யென்னசொல்வேன் சிவனே அய்யா
கடலிலே போனமகன் இன்னும் வரக்க ணோமென்று
கதறியழுதாள் அம்மை சிவனே அய்யா
கடலும் முழங்கிட துறவர் வணங்கியென்னைக்
கூட்டியங்கே போனாரே சிவனே அய்யா
பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம்
பள்ளிகொள்ளுமிடம் சென்றேன் சிவனே அய்யா
இருந்தேன் முனிதெச்சணம் பள்ளிக்கொள்ளத் தந்த
வரிசையை யென்னசொல்வேன் சிவனே அய்யா
இருகையும் ஏந்திட சிவலிங்கம் தந்தனுப்பி
என்னையும் விடும்போது சிவனே அய்யா
கடலுக்குள்ளே கண்ட அதிசயமும் தவமும் வெள்ளை
காகமும் கண் டேனையா சிவனே அய்யா
கைகலங்கிரிவாசல் நிலையிங்கே என்று சொல்லிக்
காட்டியும் தந்தாயே சிவனே அய்யா
வைகுண்ட பதியிலே கைகண்ட வேதாவைப்போல
வாழவும் பாவித்தாயே சிவனே அய்யா
நந்தியுடமந்திரத்தை நருட்கள் அறியும்படி
ரகசியம் பற்றிவிட்டாய் சிவனே அய்யா
மெய்யை நிலைநிறுத்திப் பொய்யை அடியழிக்க
விடைதந்தனுப்பினாயே சிவனே அய்யா
உகத்தை முடிப்பதற்கு அகத்திலும் செவியிலும்
உபதேசம் வைத்தாயே சிவனே அய்யா
எத்தனையோ முனிவன்பெற்ற வரமும்கொண்டு
இங்கே நான்வரும்போது சிவனே அய்யா
தாய்கிழவிக்குக் கொஞ்சம்  அதிசயங்களைக் காட்டி
சத்தியமும் கொண்டேனையோ சிவனே அய்யா
உள்ளுக்குள் அருமைவைத்துப்பிறருக்கு கையெபொத்தி
உடமைந்த மாநகர் வந்தேன் சிவனே அய்யா
பேயன்போவதை அன்னாபாருங்கோ வென்றுசிலர்
பிதற்றியும் வைகின்றாரே சிவனே அய்யா
சிலமதலைகள் கூடியெனவைத தெருவிலே
சிமினை யேவிவிட்டேன் சிவனே அய்யா
கல்கொண்டு எறிந்துவந்த மொட்டையர் தெருவிலே
கருடனை யேவிட்டேன் சிவனே அய்யா
அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
காலதிலே மிகவும் தூசி யிருக்குதென்று
காலைநான் கழுவினேன் சிவனே அய்யா
தூளைக் கழுகுறாயே காலை வளைத்துந்தான்
தோள்மேலே போடென்றானே சிவனே அய்யா
இந்தப்படியேவாசை செவியிலும் நான்கேட்டு
இங்கேநான் வரும்போது சிவனே அய்யா
சொந்தப் பனையேறக் கண்டு பனைஏறி
வயிறுபசிக்கென்றாரே சிவனே அய்யா
பாலில் சுண்ணம்போட்டுக் குடியுமென்று சொல்ல
பாலா யிருந்ததய்யோ சிவனே அய்யா
மாறிப் பார்த்தவனைத் தாலியறுத்துக் கட்டென்று
வசைகூறி விட்டாரையோ சிவனே அய்யா
நலமுனி யிங்கிருந்து நருள்கள் அறியும்படி
நான்செய்த கோலம்சொல்வேன் சிவனே அய்யா
அடுத்தாரைக்  காப்பதற்காய் பூவண்டன்  தோப்பதிலே
அமர்ந்து யிருந்தேனய்யா சிவனே அய்யா
பொன்பழுப் பானதொரு தங்கத் திருமேனி
புண்ணா உளையதய்யா சிவனே அய்யா
மெல்லுட தாகியதோர் நல்லுடலில் அழுக்கு
மெத்தவும் பற்றலாச்சே சிவனே அய்யா
அடங்காத கலியைநான் அடக்க வந்ததினாலே
அழுக்குமே பற்றலாச்சே சிவனே அய்யா
வாடுதே யெந்தனுள்ளம்  மயங்குதே திருமேனி
வரவர வாடுதய்யா சிவனே அய்யா
குலைத்த தலையுடனே சலித்த முனிக்க
குறுக்கும் கடுக்குதய்யா சிவனே அய்யா
பொருதவில்லும் வைத்துநான் கூட்டுக்குள்ளிருந்த
புளுங்குதே மேனியெல்லாம் சிவனே அய்யா
அங்கமும் காந்துதே அனலாகி யெந்தன்மேனி
அய்யய்யோ யென்னசொல்வேன் சிவனே அய்யா
எங்கெங்கும் விசையாச்சே தவமுனி யான்யிருக்கும்
கோலம் கண்டாயோ சிவனே அய்யா
கொங்கையில் பால்கொண்டு காராவும் வந்துநின்று
குடிக்கவும் சொல்லுதே சிவனே அய்யா
மாதாவும் பால்தந்து அனேகநாள் ஆச்சுதே
வயிறும்  பசிக்குதையா சிவனே அய்யா
கப்பல் சிறிதெனவும் கடல்தான் பெரிதெனவும்
கவிழ்ந்து இருக்கலாச்சே சிவனே அய்யா
பாம்பும் படம்விரித்துப் படல்கொண்டு வீசுதையோ
பாதமும் காந்துதையோ சிவனே அய்யா
நீட்டி நொடிக்குமுன்னே கலியழித்து வாவென்று
நீயும்விடை தந்தாயோ சிவனே அய்யா
சிந்திக்கிடக்கும் மயிர்பந்து முடிந்துவிட்டால்
சீமைஅழிந்திடுமே சிவனே அய்யா
ஊமைபோலிருப்பதை வாயைத் திறந்துவிட்டால்
உலகம் அழிந்திடுமே சிவனே அய்யா
அதிசயங்கள் வளரும் அறியகிணற்றின்பாலை
எவரும் குடிக்கிறாரே சிவனே அய்யா
எவரெவர் நினைக்கின்ற நினைப்புக்குத் தக்கதகா இருந்து
விளையாடினேன் சிவனே அய்யா
மாபாவி யிறையறிந்து யாதோகோ ரியமென்று
பாலில்மோசம் செய்தானே சிவனே அய்யா
நஞ்சிட்டபாலைமக்கள் நற்பாலென்றெண்ணி யுண்ண
நற்பாலாயிருந்ததை சிவனே அய்யா
இப்படியிருக்கையில் சோதனைசெய்ய நீசன்
எனைவாவென்றழைத்தானே சிவனே அய்யா
கட்டிலையும் கொண்டுவந்த  தொட்டில் கட்டியென்னை
கனமுடன் கூட்டிப்போனார் சிவனே அய்யா
வழியும் விலகித்தந்து சிலதூரம் போகையில்
கடல்வளைத்து கொண்டதையோ சிவனே அய்யா
கரையில் திருநெல்வேலி அரகரா வென்றசத்தம்
கல்லும் உருகிடும் சிவனே அய்யா
அண்ணாவிதிருவம்பலம் அருள்கொண்டு கரைசேர்ந்தேன்
இலங்கைத் துவரயம் பதியில் திருவிளக்கு
எரியவும் கண்டேனையா சிவனே அய்யா
முட்டப்பதியும்நாடும் கிட்டக்கிளம்பும்வகை
முனியும்வந் தெடுத்தாரே சிவனே அய்யா
ஏழைமா முனியொரு கூரை நிழலில்புக
எல்லோரும் கைகொண்டாரே சிவனே அய்யா
பொத்திய கைகளை சற்றே திறந்துவிட்டால்
பூமி அழிந்திடுமே சிவனே அய்யா
கொல்லவே என்றனையும் கூட்டியே கொண்டுபோனா
கோலங்கள் பண்ணுதற்கோ சிவனே அய்யா
கூட்டியே கையைச்சேர்த்து கட்டிய கயிற்றைநான்
கொலுசென்று நினைத்தே னையோ சிவனே அய்யா
பகைவன் அடித்துவந்த அடியும் தங்கச்
சரப்பளியென்று எண்ணினேன் சிவனே அய்யா
கந்தனென்றியாமல் எந்தனைத் தொட்டடித்த
கையும் தானோகலையோ சிவனே அய்யா
வெள்ளத்தடியைக் கொண்டு கள்ளனைத்போலத்தள்ளி
விட்டென்ன அடித்தானே சிவனே அய்யா
எனை அவன் வைததெல்லாம் வாக்குவாம் தானென்று
நினைத்துக்கொண்டனையா சிவனே அய்யா
பச்சைநாவியைப் போட்டு பாலென்றுகொண்டுதரப்
பாலாயிருந்ததையோ சிவனே அய்யா
கொடும்பாவி யென்னையும் புழுகணி அறையிலே
கொண்டுபோய் அடைத்தானே சிவனே அய்யா
அடைத்த அரங்கதனை அலங்காரத் தேர்ந்தட்டேன்
றகத்தில் நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா
இட்டமாய்ப் பொட்டகத்தில் ஒட்டகையை நிறுத்தி
என்னையும் அடைத்தானே சிவனே அய்யா
வதைசெய்ய விட்டபுலி அதிசயப்பட்டு என்னை
நீற்றுக்கல் கொண்டுவந்த நீற்றிப்போட வேணுமென
நீசனும் செய்தானே சிவனே அய்யா
இந்த நினைப்புக்குப் பூச்சொரிகிறாதென்று
எண்ணி நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா
நெய்யுயூறிக்கட்டையெடுக்கித் தீயைவைத்துநீந்திக்கோ
என்றானோ சிவனே அய்யா
குளியாத மேனியில் குளிக்கநாள் ஆச்சுதென்று
குழிபோட்டு நின்றதையோ சிவனே அய்யா
இத்தணைக்கும் சகித்த எனைமா முனியை இருத்தினான்
சிலநாளாய் சிவனே அய்யா
அரங்கதணில் அடைத்து வத்தல்போடத் தீவைத்து
அசையாமல் இருந்தiணாய சிவனே அய்யா
போதித்தேன் கூரையிலே, கேலிகள் பண்ணாதே
போவென் றடித்தானே சிவனே அய்யா
ஏழைமாமுனியும் யுகமாயிருந்து
இருத்தினான் சிறைதிலே சிவனே அய்யா
வெகுநாள் இங்கிருந்து சடையுதே திருமேனி
விரித்தலையுடனே சிவனே அய்யா
கவிழ்ந்தெந்த நேரமும் இருந்தந்த மாமுனிக்கு
கழுத்தம் கடுக்கதையா சிவனே அய்யா
பிரமணைத்தேடியே முழுமனதோடியிருந்து
பிடரியும் நோகுதையா சிவனே அய்யா
தவமுனி பேயனைப்போல் சடையும் முனியுமாகி
தலைவிரித்திருந்ததேனையா சிவனே அய்யா
தவமுனி பேயனைப்போல் சடையும் முனியுமாகி
தலைவிரித்திருந்தேனையா சிவனே அய்யா
சன்னியாசி வேசம்போல பின்சடையோடிருந்து
சடையுதே திருமேனி சிவனே அய்யா
குடமனி தானும் சிவனே அய்யா
குடமுனி, தானும் உடுக்கத்துணியில்லாமல்
கூட்டி முடியலாச்சே சிவனே அய்யா
வேள்ளைப்பேன் களுக்கெல்லாம் முள்ளுமுளைத்தென்
மீதில் கிடக்கலாச்சே சிவனே அய்யா
தலையில் சிவமுறைந்து வடதிசை முகமாகத்
தவத்தில் இருக்கலாச்சே சிவனே அய்யா
அம்புவியில் விளையும் பண்டம் பாராமலே
அறைக்குள் ளிருக்கலானேன் சிவனே அய்யா
வருடியிருப்பதாலே மருந்துவாழ் மலையில
மருந்து வளரலாச்சே சிவனே அய்யா
கிழமுனி தானுமிப்போ முடிப்புப் பகர்ந்துக்
கிழித்து முடியலாச்சே சிவனே அய்யா
மெத்தவும் நாளாச்சே  பொத்தியே கையைச்சேர்த்து
விரித்த சடையனானேன் சிவனே அய்யா
ஆண்டாருடையபிள்ளை பசித்துமுகம் வாடுகின்ற
அம்முகம் பார்த்திரங்காய் சிவனே அய்யா
ஊமைபோலிருந்தேன் சிவனே அய்யா
திடமுடனே வெளியில் நடமாடும் காலதனைக்
சம்பளம் கூட்டினேனே சிவனே அய்யா
விரித்த தலையுடனே யெரித்த கண்ணோடிருந்து
வேகுதே மேனியெல்லாம் சிவனே அய்யா
அரணும் விடைதந்தாயே கலியன் குறும்படக்க
ஐயையோ யென்னசெய்வேன் சிவனே அய்யா
தெற்கும் வடக்கமாகச் சந்திரனும் சூரியனும்
திசைமாறி உதிக்கலாச்சே சிவனே அய்யா
காரணத்தி உதிக்கலாச்சே சிவனே அய்யா
காரணத்தி லேதிருப்பார் கடலிலே சொன்னதொரு
காரியமெங்கே விட்டாய் சிவனே அய்யா
வீதியிலும் பெரியசூரியன் கோட்டைக்குள் கண்ட
வெள்ளக் காகந்தா னெங்கே சிவனே அய்யா
அரகரா வென்றசொல்லை கரையேறா பாவிநீசன்
அறியவுமாட்டானைய்யா சிவனே அய்யா
சிவசிவா வென்றசொல் அவகட நீசருக்கு
தெரியவுமாட்டாதையா சிவனே அய்யா
சடைமுனி நானும் தவத்திலிருக்கிறதை
சண்டாளர் அறிவாரா சிவனே அய்யா
உமையும் சிவனும் திருச்சடையுந் தரத்தில
ஊமைபோல் இருப்பதேன் சிவனே அய்யா
தாடியை நான்வளர்த்து கோடிப்பே னையும்வைத்துச்
சடையுதே யெந்தன்மேனி சிவனே அய்யா
நற்பால் குடிக்கிறாரென றெல்லோரும் சொல்லுவார்
நான்கேட்ப தறிவாரா சிவனே அய்யா
எந்தெந்த நேரமும் இருந்திருந்த மாமுனிக்கு
இடுப்பும் கடுக்குதையா சிவனே அய்யா
அக்கினியால் நீயச்சொன்ன சக்கிலியான் தலையின்னும்
அற்றுவிழவில்லையே சிவனே அய்யா
என்னைப்பழித்தவன் தன்னடைய கூரையிலே
இன்னும் இருப்பானோ சிவனே அய்யா
கண்ணில் அடித்தானே அரனே குருவேயிந்த
கலியிலிருப்பானோ சிவனே அய்யா
கும்பிக்கிரைதேடிக் கொடுப்பார் முகம்பார்த்து
கூடித்திரிந்ததுண்டோ சிவனே அய்யா
பாலென்று குடித்ததில் நீரென்று சொல்லியதில்
பாசாணம் போடலாச்சே சிவனே அய்யா
பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னை
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா
என்மக்கள் சான்றோர்கள் இடுப்பிலெடுத்த குடம்
ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா
குலபாதகன் செய்த நியாயத்துக்கு கோபங்கள்
செய்ததுண்டோ சிவனே அய்யா
தேவர்கள் எல்லாரும் கயிலாசத்திலிருந்த
தேர்கொண்டு அழைக்கிறாரே சிவனே அய்யா
இதெல்லாம் வேண்டாமென்று எந்தன் மக்களுக்கா
இருந்தேன் சிறையதிலே சிவனே அய்யா
ஆனாலும் இன்னும்கொஞ்சம் சான்றோர்படும்துயரம்
ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா
நாட்டு முறையைப்போல காசியும் காணிக்கையும்
நான்வேண்டி தின்னதுண்டோ சிவனே அய்யா
திருமேனி திருக்கண்ணை சற்றே திறந்துவிட்டால்
சீமைஅழிந்து போமே சிவனே அய்யா
சூத்திரமாகவே மாலையில் நான் கண்ட சொற்பணம்
ஏதோசொல்லையா சிவனே அய்யா
ஆசுமதூரம் சித்திரம்ட விஸ்தாரம்மென்ற சொல்லை
அளிக்க விடைதந்தாயே சிவனே அய்யா
கிறேதா திறேதா துவாரம்பகையை அழக்க
விடைதந்தாயே சிவனே அய்யா
சரியைகிரியை யோகம்ஞானமென்ற சொல்
தாண்டிய கலியாச்சே சிவனே அய்யா
மனம் சித்தம் புத்தி அகங்காரம் நாலும் அடக்கி
மௌனத்திருந்திட்டேன் சிவனே அய்யா
அப்புபிரிதிதேய்வு வாய்வு ஆகாயமென்ற
அஞ்சுமஞ்சாச்சுதே சிவனே அய்யா
நாலுமெறும் பதினெட்டும் நடசாலைக்கும்
நற்காலம் போச்சுதையா சிவனே அய்யா
மூலகிணத்துக்கும் மேலகுளத்துக்கும்
மோட்டிலேணியானேன்சிவனே அய்யா
வாசிபாம்புக்கும் பஞ்சுபதிதனக்குமொரு
வாயமாயிருந்தானையா சிவனே அய்யா
அன்பத்தோரெட்டு முனியென்பற்றென் றேக்கவில்லை
அடுத்த பாட்டோதலுற்றேன் சிவனே அய்யா
சூரியன் திசைமாறி கலியுகம் முடியவோர்
சொர்ப்பனவித்தேசம் சொல்வேன் சிவனே அய்யா
கலியை அழிப்பதற்கு கண்ணில் வித்தேசம் கண்ட
காரணம்ட சொல்லறுற்றேன் சிவனே அய்யா
பெட்டகத்து விளக்கு தட்டுப்பட்டெண்ணெய்சிந்தி
போகவும் கண்டேனையா சிவனே அய்யா
பாம்பைக் கடிக்கவந்த கீரியை சீறிமாறி பாம்பெட்டி
கொத்தக்கண்டேன் சிவனே அய்யா
பூனைபோய் யானையுடன் போர்பொருதி முன்காலால்
பொத்தி யெடுக்கக்கண்டேன் சிவனே அய்யா
பச்சைப்பாம்பை கண்டவுடன் மயில்களெல்லாம்பதுங்கி
கிடக்கக் கண்டேன் சிவனே அய்யா
ஆலாகருடனையும் சிட்டிவோடிப் பறந்து அடித்து
எடுக்கக்கண்டேன் சிவனே அய்யா
ஆடுபோய் மாடுடனே அலறவேமாக்கு போட்டுஅது
போர் செய்யக்கண்டே;ன சிவனே அய்யா
பச்சப்பிள்ளையை வொக்கரையிலெடுக்க பாம்பா
நெளியக்கண்டேன் சிவனே அய்யா
கடலெல்லாம் குளமாக குளமெல்லாம் கடலாக
கண்ணுகுத் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
ஊசிமுனையதிலே கடலும் மலையுடனே ஊரும்
பதியுங்கண்டேன் சிவனே அய்யா
கோரைக்குருத்துக்குள்ளே தாரணிதன்னிலுள்ளகுடிகளும்
வாழக்கண்டேன் சிவனே அய்யா
திரைகடலில் சிறுமீன் பெரியமீனைப் பிடித்துத்தின்னவும்
கண்டேனையா சிவனே அய்யா
ஈரத்தின் மேல்கிடந்த ஆடையை அட்டைகண்டு
எடுத்துவிழங்கக்கண்டேன் சிவனே அய்யா
போர்வெள்ளைக்கொக்கு புழுத்திங்க போனையிடத்தில்புழு
வெட்டிக்கொத்தக் கண்டேன் சிவனே அய்யா
பூமாலையைக்கட்டி தோள்மாலையாக போட்டபூவும்தான்
வாடக்கண்டேன் சிவனே அய்யா
முடுக்கன்மார் பெற்றமக்கள் தூக்கம்வைத்த பாயதிலே
மூச்சோடி போகக்கண்டேன் சிவனே அய்யா
புலியை எலிபிடித்து கலியில் பொசிப்பதற்கு போதமும்
கண்டேனையா சிவனே அய்யா
முள்ளுமுனையதிலே  குளம்வெட்டி வயலும் பாய்ச்சி
முன்மடை பாயக்கண்டேன் சிவனே அய்யா
உப்புவிளைந்துவரும் நஞ்சை நிலங்களெல்லாம் உபரு
வழக்கண்டேன் சிவனே அய்யா
சட்டிக்காய்க்கு கொம்புமுளைத்து கோழியுடன்போர்
பொருதக்கண்டேனையா சிவனே அய்யா
நாடுதனிலே திரிந்து வாயல் காக்கும் நாயைநரிவந்து
கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா
சாவல்கோழியல்லாவ கூவுமென்றுசொல்வார்கள்பெட்டை
தானுமே கூவக்கண்டேன் சிவனே அய்யா
உண்டமயக்கத்திலே உறங்கப்போன உயிர்வோடிப்
போகக்கண்டேன் சிவனே அய்யா
மூட்டைக்கடித்தால் பாம்பு விசம்போல
மோசம் போகக்கண்டேன் சிவனே அய்யா
பெற்றதாய் பிள்ளையை முன்வைத்துப்படுக்கையில்
ஈனாபேச்சிவந்து தின்னக்கண்டேன் சிவனே அய்யா
கருங்கும்பலா யிந்த பயிர்களைத்தான் பெரிய
கடல் வந்தழிக்ககண்டேன் சிவனே அய்யா
பாகல்போடவே கரையாய் முளைத்துவர
பாகமும் கண்டேன் சிவனே அய்யா
பெருத்தஊரில் உள்ள குருத்தைக்கடிப்பதற்கு
பேய்வந்து சூழக்கண்டேன் சிவனே அய்யா
முனிபெற்ற பிள்ளையைச் சுண்டெலி தானும்கண்டு
முடுக்கிக் கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா
கிடைகலைந்து ஆடியில் கூடிய யெலிகளெல்லாம்
கிடைகலைந்து ஓடக்கண்டேன் சிவனே அய்யா
மாபாவி போடுகின்ற திருமுத்திரி அவர்க்கு
வாச்சியாய்த் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
கொடிமுடியிடிந்து விழும்போது கொம்மட்டிக்காய்
குறுக்கவே தங்கக்கண்டேன் சிவனே அய்யா
கடுகைத்துளைத்து அந்ததுளைக்குள்ளே நின்றதண்ணி
கடல்போல தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
கலியுகம் தன்னிலேதேடியே போட்டநகை
கழந்தோடிப் போக்கண்டேன் சிவனே அய்யா
ஒருமாதத்துக்குள் பிள்ளைதரித்துப் பிறந்து
உருமாலும் கட்டக்கண்டேன் சிவனே அய்யா
இரண்டுதலை மூன்று கண்ணுமாகப் பிள்ளை
தரித்துப் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா
கோழிக்குஞ்சுகளெல்லாம் கூட்டை விட்டெழும்புமுன்
கொம்பு முளைக்கண்டேன் சிவனே அய்யா
சடைநாய், முழுத்தேங்காயை, கவ்விக் கொண்டுபோய்
தகர்த்துமே தின்னக்கண்டேன் சிவனே அய்யா
நரியன்மார், கூடி யிரையெடுக்கப் போக
நண்டு விரட்டக்கண்டேன் சிவனே அய்யா
வீட்டெலி, கூடியே பூனைதனைபிடித்து
விருந்து அருந்தக்கண்டேன் சிவனே அய்யா
இப்படி நான்கண்ட சொர்ப்பண வித்தேசங்கள்
இந்த கலியழிக்க சிவனே அய்யா
ஆனாலும் இன்னுங்கொஞ்சம் சான்றோர்படும்துயரம்
ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா
அம்மை பிறந்ததும் உண்மைதான் எல்லார்க்கும்
அனுகூலக்காலம் ஆச்சே சிவனே அய்யா
வினையற்ற சண்டாளன் வகைகேடு செய்ததாலே
மேலெல்லாம் கூசுதையோ சிவனே அய்யா
தோசியெந்தன் மைந்தர்களை யேசினபடியாலே
தோலெழும் கூசுதையோ சிவனே அய்யா
கலியுகத்தில் நானும் வலியவர்களைப்போல
காசுக்கும் அலைந்ததுண்டோ சிவனே அய்யா
முக்காலும் காணிக்கைகள் வேண்டி மடப்பள்ளிகள்
முடிக்கவும் சொன்னதுண்டோ சிவனே அய்யா
உள்ளவனுக்கென்றென்றும் இல்லாதவனுக் கென்றென்று
ஓரங்கள் சொன்னதுண்டோ சிவனே அய்யா
வானமும் தலையாச்சே பூமிதான் காலாச்சே
வடிவும்தான் வெளியாச்சே சிவனே அய்யா
சந்திரன் வலதுகண் சூரியன் இடதுகண்
தானாகும் நாளாச்சே சிவனே அய்யா
சூத்திரம் இடம்வலம் கற்றவாறோமென்று
சொல்லுவதெப்படிகாண் சிவனே அய்யா
எவரெவர் இருந்துமணியம் பண்ணவேணு மானாலும்
எந்தன் முக்கால் அடிக்குள்தானே சிவனே அய்யா
எப்போது கூவுமென்றுஇருக்குதே யெந்தன் நெஞ்சு
இன்னும் விடியல்லையோ சிவனே அய்யா
நொடிக்குள் முடிந்துவிடும் விஞ்சைகள் இங்கிருந்த
நோகுதே திருமேனி சிவனேஅய்யா
வட்டக்கிலுகிலுப்பைத்தட்டி முடிந்துவிட்டால்
வையகமழிந்திடுமே சிவனே அய்யா
கைதட்டும் பொழுதோ கண்தட்டுநேரமா
கலியனிருப்பதெல்லாம் சிவனே அய்யா
காடுநாடாகு மென்று நாராயணன் சொன்னசொல்
காலமும் சரியாச்சே சிவனே அய்யா
நாராயணர் எங்கும் தாராளமானாரென்று
நகரெங்கும் பேராச்சே சிவனே அய்யா
கலியோ விளைந்துபோச்சு சிவனே அய்யா
கிரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா
மெத்தவும் யெந்தன் மக்கள் உற்றபித்தளைவிற்று
வீட்டையும் விற்கலாச்சே சிவனே அய்யா
மூணுநேரம் துவைத்து ஒருநேரம் அன்னமுண்ண
முனிமார்கள் பெற்றமக்கள் சிவனே அய்யா
கடம்பாக்கொடியைத் தின்று கடலிலே தண்ணீருண்ண
காண்பாரோ நீசரெல்லாம் சிவனே அய்யா
அண்ணர் க்களந்தபாலை இடித்தகரைகாவல்காரன்
அவிழ்த்துப் பார்க்கலாச்சே சிவனே அய்யா
கனமுடன்முத்தமிடக் கொடுத்தகன்னத்தை நீசன்
கவ்வயிழுத்தானையோ சிவனே அய்யா
காரம்பசுவதனைக் கங்கைகரையில் கொல்லக்
கண்ட கலியாச்சே சிவனே அய்யா
துரியோதனனும் பஞ்சவரும் சேர்ந்து
ஒருவயிற்றில் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா
பதினெண்சாதியும் ஏழைச்சான்றோரை
வசைபறந்து போகலாச்சே சிவனே அய்யா
சான்றோர் வயலிலிருக்க நீசன் வயலில்
தண்ணீர் பாயக்கண்டேன் சிவனே அய்யா
எதிர்வாய்க்கால் தண்ணீர் குறுக்கே விழுந்துபாய
என்னத்தைக் கொண்டடைப்பேன் சிவனே அய்யா
மக்களுக்காக இருந்தேன் சிறையதிலே
வைகுண்டம் தேடுதே சிவனே அய்யா
நாளும் குறுகலாச்சே நருளும் பெருகலாச்சே
நாமும் சடையலாச்சே சிவனே அய்யா
பத்திரமா காளியுடன் கன்னிமார் ஏழுபேரும்
பரல்யேழும் கேட்கிறாரே சிவனே அய்யா
கலியுகம் முடிந்துபோச்சு சக்கராயுதத்துக்கு
இரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா
கூடும் சடமும் கூட்டோடே கொஞ்சம்
கைலாசபுரமிருக்க சிவனே அய்யா
வீடும் பதியும் விளையாடும் விண்ணோர்
கண்டு மனம்மகிழ சிவனே அய்யா
ஆளும்படிதான் அய்யா வாங்கே
ஆனநஞ்சிப் பொய்கையிடை சிவனே அய்யா
சூதுபடியாய் விளையாடிச் சொல்லி முடித்தோம்
துரோபதைக் குன்றிமக்கள் ஏழுபேர்க்கும்
கொடியசாபம் நீங்கிவிடும் காசிக்கலயங்களும்
கல்லறையும் பொன்பணமும் குத்துபிடித்தவனைக்
குரங்கோட்டம் பார்த்துவிடுவேன்
ஒன்றுமூணு நாலுஏழு ஆடும்படி சொல்வேன்
மண்ணளந்த மாயனுட விவரமநாடுஅறியவும்
பித்தலாட்டப்பயல்களெல்லாம் பெருமை குலைந்து போகுதே
அல்லாவென்று நபியைத்தேடி அலைந்தபேர்கள் சடுதியில்
மூணுநாளை ஆட்டுக்குள்ளேமுன்னும்பின்னும் அடைக்குமே
காவல்காத்த மக்களெல்லாம் கைலயங்கிரி காணுங்கள்
விரைவாகு முடியும்சூடி வெள்ளியங்கிரி ஆளுவோம்.
சாட்டு நீட்டோலை முற்றிற்று

தானநிறைவு வாசகம்

கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக நாராயணன்
தெச்சணத்தில் வந்திருந்து பிச்சைகொடுத்த பக்தன்
சித்தூவர் குடும்பத்தை வைத்தரசாளுவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவ அரகர அரகரா
பிரமனை அடுத்ததுக்காக பு+வண்டன்மாவர் காவிக்கொள்ள
பூச்சலங்கை கொடுப்பதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவ அரகர அரகரா
ஆண்டியும் ஆண்டிச்சியுங்கூடி அழித்துவரும்போது
அன்புள்ள பக்தரை ஆல்போல் தழைக்க வைப்பதும்
எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா

வாழப்படிப்பு

சாஸ்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய
சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
பத்திரத்தாள் பெற்றமக்கள் நம்முடைய
பைந்தொடிமார் கன்னிமக்கள்
கோத்திரத்தோடே நன்றாய் தழைத்துவாழ
விழிமடைவார் படைத்தலைவர் நம்முடைய
வெற்றிச் சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
கடலதிலே தவசிருந்தேன் நம்முடைய
கண்ணுச்சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
வில்லு கொண்டே எய்துவிட்டேன் நம்முடைய
விசயன் சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
பாh;த்துவிட்டேன் இரண்டுகண்ணுங்கொண்டு நம்முடைய
பத்தினி மக்கள் நன்றாய் தழைத்துவாழ
மலைக்கன்னிமார் தங்காவில் பெற்ற நம்முடைய
மக்கள் வலியசீமை கட்டி அரசாளவாழ
தர்மருட குலத்தி லுள்ள நம்முடைய
தெய்வச்சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
கோத்தி ரத்து சான்றோர்கள் நம்முடைய
குடும்பத்தார்கள் நன்றாய் தழைத்துவாழ
கோட்டைத்தளம் மதிலிடித்து வாழநம்முடைய மக்கள்
கோடிச் சீமைக்கட்டி அரசாள வாழ
ஆல்போல தழைத்து வாழ நம்முடைய
ஐவர் மக்கள் சீமைகட்டி அரசாள வாழ
பயலுடைய தரமறுத்துப் பண்டாரஞ் சீமையான
மக்கள் நன்றாய் தழைத்துவாழ,

உகப்படிப்பு

அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சிவசிவா குருவுக்கும் குருபண்டாரத்திக்கும்
சிவசிவா முறையாம் முறையோம் முறையோம்
சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்
சிவசிவா முறையோம் முறையோம் முறையோம்
சிவசிவா அய்யா நாராயணர்க்கும்
நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும்
சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம்
சிவசிவா அய்யா நாராயணசுவாமி
செயம் செயம் செயம்
சிவசிவா அரகரா செயம் செயம் செயம்
தேசமயம் யேகம் திட்டித்த இந்திர நாராயணர்
நிச்சயித்தபடி யல்லாது மனிதன்
நிச்சயித்த படியிலலை அய்யாவே
இங்கும் யெங்கும் யெவ்வுயிர்க்கும் யெங்கள்
அய்யா சிவசிவா அரகர அரகரா
அய்யா நாராயணர்க்கும் அம்மை உமையாளுக்கும்
தெய்வோர் இடுவது முறையோம் முறையோம் முறையோம்
மோட்சஉயிர்க்கும் நரகஉயிர்க்கும்
தீ நரகப்பாவி உயிர்க்கும்
ராச உயிர்க்கும் பள்ளிவாசல் உயிர்க்கும்
வைகுண்ட பதவி உயிர்க்கும்
எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
முன்னுள்ள ராமர் உயிர்க்கும்
மோகவடி வானஉயிர்க்கும்
முகச்சையுள்ள ராமர் உயிர்க்கும்
இப்போ வந்த நாராயணர்
எங்கும் நிறைந்தவர் ஏகமயமானவன்
நமக்கு உதவிசெய்ய வந்த
நாராயணர் இவர்தான்
எவ்வுயிவர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
கறடு முறடு தட்டுவது எங்கள் அய்யா
கன்னியா குமரி க்கு வடக்கே
பதயேறுவதும் யெங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
நாடாள்வார் அப்பதியில் கூட்டுவதும் எங்கள் அய்யா
நல்லதொரு சிங்காசனம் இருந்து
அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
வானம் உள்ள தேவரெல்லாம்
பூமியுள்ள  நாள்வரைக்கும்
மற்றமுள்ள தேசமெல்லாம் எங்கள் அய்யா
வைகுண்டராசராக அரசாள வருவதும்
எங்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா
நாகவடமதிலே எங்கள் அய்யா
வைகுண்டராசர்  வந்து நாலுவிதமாய்
வடிவுகொள்வதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
மாயன் திருப்பதிக்குள் யிருந்து புக்கு
எங்கள் அய்யா வைகுண்டராசர்  யெழுந்தருளி
தெருச்சுற்றி தேசத்தில் பவனிவருவது
யெங்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா
கொந்தளத்துடன் வந்து எங்கள் அய்யா
கூண்டபெரும்  படையுடனே
கூடவரும்  காளாஞ்சியோடே கோட்டைசுற்றி
விளையாடி வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
இருபத்தி நாலிலொன்று ஏற்பதும் எங்கள் அய்யா
வைகுண்டராசர்  வந்து ஈரேழு உலகமெல்லாம்
ஒருகுடைக்குள் அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
கொந்தளப்ப ராசாவும் கோனாண்டி ராசனுட
கோட்டையெல்லாம் எங்கள் அய்யா அழித்து
வைகுண்டராசர்  வந்து தர்மபதியுதித்து
தர்மயுகம் அரசாள வருவது எங்கள அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
வாடாத பூவதுவாம் எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்துதிருப்பதிக்குள் புகுவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
முடிசூடும்  பெருமாளாக எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து மறுமன்னர் யெதிரில்லாமல்
அரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சரணம்சரணமென்று தாழ்ந்துநடந்த அன்பருக்கு
வைகுண்டபதிதனிலே வைகுண்ட ராசராக
அரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
முடுக்கண் தலையறுத்த மேகவர்ணப் பட்டும்சூடி
வைகுண்டப் பதிதனிலே வைகுண்டராசராக
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
தீத்தறுத்த மாயவனார் எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து நடுத்தீர்த்து
அரசாள்வதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
மாயன்திருப் பதிதனிலே எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து மேகம் சூழ்ந்த
வையகமெல்லாம் ஒருகுடைக்குள்
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
படிஉடன் நடைதனிலே பாரப் பதிதனிலே
வைகுண்ட பதிதனிலே வைகுண்டராக
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாலுயுகம் கொண்டு எங்கள் அய்யா
வைகுண்டராசருக்கு நாற்சொரூபம் கொண்டு
தர்மபதியுதித்து அரசாள வருவது
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
குணமான ரிஷிமார் வந்து பணிவிடை செய்து
வைகுண்டராசராக ஏற்பது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
சாதிக்கு சிறையிருப்பது எங்கள் அய்யா
தங்கத் திருமுடி சூடுவது எங்கள் அய்யா
அட்டி சரப்பளி அணிவது எங்கள்அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
சத்திமுனி  என்தகப்பன் சத்திகன்னி என்தாயார்
தள்ளிவைத்துத் தவத்தை அளித்தவன்
தரத்தை அறுப்பதுவும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கண்ணு மயிலாளைக் கண்டவர்
கயிலாசம் ஆளவருகிறாவர் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
சிங்கமுகம் தொரிந்தெடுத்துத் சோர்த்துப்
படையறுக்க வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
செந்தாமரை முகத்தாளுடனே
தெருக்கள் தெருக்கள் தோறும்
சிங்காசனம் முடித்து வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கம்புத் தடியதைக் கையில் கொடுத்து
கருடனை விடுவது எங்கள் அய்யா
வம்புகலியதை மதத்தை யொடுக்கி
வாகன மிடுவது எங்கள் அய்யா
கும்பக் குடமதில் பால்கொண்டு வந்து
குடிக்கச் சொல்வது எங்கள் அய்யா
செம்பொற் கவரிவீச அமைக்க
சீமைஅரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆரசடலம் எடுப்பது எங்கள் அய்யா
அவனிப்பகைவர் தரம் அறுப்பதும் எங்கள் அய்யா
பாரகலி முடிப்பதுவும் எங்கள் அய்யா
பஞ்சவர்ணத்தேர் அலங்காரிப்பதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
உத்தாரமும் துகிலும் உகந்து எனைநகைத்த
சந்திராதியைக்குத்தி தர்மபதி அரசாள
வெற்றிக்கொடியும் கட்டி வீரப்பதியிலேறி
மற்றும் விடைகள் பெற்று வருகிறார் எங்கள் அய்யா’
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாட்டை நொடித்த கலீனீசன் முடியை
இறக்கி நாராயணர் பதியாள்வார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கல்லைப்பிளந்த கணபதி நாராயணம்
செப்பைத்திறந்து திருமுடிசூடி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அக்கனியால் அழிப்பேனென்று சொல்வது மெய்தானப்பா
அனல்வந்து அஞ்சாறு நாளையில் அரசாள்வது மெய்தானப்பா
ஆபரணமலை அணிவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆடிக்கள் ஆடி ஐமூன்று நாழிகைக்குள்
அறிந்தவர் அறிந்திடுங்கோ அயல்ஓடிப்போகுமுன்னே
தெரிந்தவர்  தெரிந்திடுங்கோ எங்கள் அய்யா
திரைகடல் ஓடுமுன்னே அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
பணிந்தவர் பணிந்திடுங்கோ  பாலன் பதியேறுமுன்னே
துணை மலையொன்று நம்பினபேர் க்கு
தொட்டு நாமம்சுற்றி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
தொழுத மதலையைக் கண்டு
தொழுது பணிந்து நடந்தவா;க்கு
நாடு நமக்கென்றுயெடுத்துக்கொடுத்து ஆளவருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கும்பிட்டு  தவம் செய்வதற்குக்
கோட்டைதலம் காட்டிக்கொடுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அருள்கொண்டு முடிசூடியிருள் கொண்டு
படையறுக்க வருகிறார் எங்கள்
அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆயிரனாட்டுக் கொடுமுடியையும் உடைத்து
துவரையம்பதி உதித்து
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
வர்ணமுனி  மாலைசூடி மாயக்கலியறுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாட்டுமுடியிறக்கி நாராயணர் பதியாள வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அய்யா நாராயணர்க்கும்  அம்மை உமையாளருக்கும்
தெய்வாரிடுவது  முறையோம் முறையோம் முறையோம்
கவுந்தலம், வெந்தலம், சிலப்புவான், தானமறச்சானை எடுத்துதான்
சமஸ்தானத்தை சுத்தி பண்ணுங்கோ
இத்தியூர் சமனமா இச்சமயம் விடுங்கோகாட்டில்கலிவீசாமல்
திருக்கடச் சடலம் சகலவுடாத் தச்சன் உச்சில்லாக்கொட்டை
கக்குறு கறுத்தான்தடங்குலுக்கி படைவார் மறுவுறிதியான
சமனம்மன் அல்லிப்புலிமன் அகில்பாறையான்
சிலுப்பு வானெடுத்து சிலம்வுவானத்து தணலத்து
சங்குரண்டடிமை தேசவாதிக்குக் கலகம் வந்திருக்குது
மறுயுகத்தார் இதை மாயமொன்று சிரிக்கிறார்  அரி
அவர் சற்றுமயலமடைந்தார் இன்று பாஷையால்
அரசு வேண்டாமா சித்திரவாதத் தூதர்கள்
தீயினால் எரிந்து போவார்கள்.

அய்யாதுணை

உச்சிப்படிப்பு


சிவசிவா அரிகுரு சிவசிவா
சிவசிவா ஆதிகுரு சிவசிவா
மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்
அல்லா இல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா மண்டலம்
அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்
நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம்
பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம்
திருநாவுக்கும் சடைகுரு  சிவசிவா சிவமண்டலம்
செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்
சன்னியாசிகுரு சிவசிவா சிவமண்டலம்
மகாகுரு சிவசிவா சிவமண்டலம்
அரி சங்கராகுரு சிவசிவா சிவமண்டலம்
மகாகுரு சிவசிவா சிவகுருமண்டலம்
மண்டலம் குருமண்டலம் மாயன் குருமண்டலம்
குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருமண்டலம்
சங்கம்நிதி குண்டலம் தரணிகுருகுண்டலம்
தரணியது குண்டலம் தரணிபுகழ் குண்டலம்
சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய் நின்றவர் சிவசிவா
ஏககுருவாகப் படைத்தது நிறைந்தவர் சிவசிவா
படைத்து நிறைந்தவர் பாலன்வடிவு கொண்டவர்
பங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர்
அளந்தவர் திருமால் ஆதிகுரு சன்னியாசி
சிவசிவா சன்னியாசி செந்தில்வேல் வடிவுமவர்
செந்தில்வேல் சன்னியாசி செந்தி வேலவர்
வடிவும் புகழ்படைத்தவர் மாயநிற மானவரவர் சிவசிவா
கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர்
நிறைந்து நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர்
எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர்
மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சன்னியாசி
சிவசிவா தந்தேனன்னாய்
தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய்
சிவசிவா த..ம்…அ…சி அரி  நன்றாகக் குருவே துணை
சிவசிவா தெந்திநன்னாய் தென்னானாய் தெந்தி நன்னாய் தென்னானாய்!
சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய தன்னானாய்
சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோ
சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்
சிவசிவா தந்தேநன்னம் தந்தேநன்னம் தந்தேநன்னம் தந்தேநன்னம்
மகாலிங்கம்          அரிலிங்கம்
சிவலிங்கம்           லிங்காலிங்கம்
குருலிங்கம்           சொக்கலிங்கம்
திருலிங்கம்           சுகலிங்கம்
ஏக்காலிங்கம்    ஆதிலிங்கம்
ஏகலிங்கம்            அருள்லிங்கம்
அடங்காலிங்கம்