திங்கள், 24 நவம்பர், 2014

வைகுண்ட சுவாமி

வதார புருஷர்கள், காலத்தின் குழந்தைகள். இவர்கள் மக்களின் சமூக, சமய நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கும் மகாத்மாக்களாக மண்ணில் மலர்கிறார்கள்.  அவர்கள் தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கிறார்கள். குணமென்னும் குன்றில் வீற்றிருக்கிறார்கள். யான், எனது என்னும் செருக்கறுத்து வையத்துள் வாழ் வாங்கு வாழ்வதால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறார்கள். பகவான் வைகுண்டர், கி.பி., 1809ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரைக்குளம் என்னும் ஊரில் பொன்னு நாடர், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முத்துக்குட்டி என்பதாகும். தன் வீட்டிலேயே திருமால் கோயில் வைத்து வைணவராகத் தம் ஆன்மிக வாழ்வைத் தொடங்கிய அவர், 1833 மார்ச் முதல்நாள் வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் கடலுள் மூழ்கி ஞானம் பெற்று, மூன்று நாள் கழித்து (மாசி 20-ம்தேதி) வைகுண்டசுவாமியாக வெளிப்பட்டார். பின்னர் தீவிர சமய வாழ்வில் ஈடுபட்டார். சாதியில் பெயரால் ஒரு மத மக்கள் பிரியக்கூடாது என்றும்; ஒரு மதத்தின் உட்பிரிவுகளுக்குள் பகைமை கூடாது. இதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி, சாதி சமய ஒருமைப்பாட்டிற்கு வழி வகுத்தார் வைகுண்டர். அவர் வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்டவராயினும், சைவத்தையும் தழுவி, சிவ சிவ அரஹர என்ற வழி பாட்டுப் பாடலை இயற்றி மக்களிடையே பழக்கத்துக்குக் கொண்டு வந்தார்.
ஒரு முறை இவர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்டு 110 நாட்கள் சிறைவாசம் செய்து பல அற்புதங்கள் புரிந்து பின் விடுதலை பெற்றார். அவருக்கு ஏற்பட்ட சிறைச் சோதனைகள் பல.அதனால் அவர் புகழ் பெருகிவிட்டது. விடுதலைக்குப் பின் அவர் பணி தீவிரமடைந்து ஓர் இயக்கமாகவே உருவாகிவிட்டது. வைகுண்டரைப் பின்பற்றுவோர் அய்யா வழியினர் என்ற புதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். கல்வி வளம் பெறாத ஏழை எளிய மக்களிடையே ஆன்மிகப் பணிபுரிந்த வைகுண்ட சுவாமி தனக்குத் துணைப் பணியாளர்களாக ஐந்து சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பாண்டவர் எனப் பெயரிட்டு அழைத்தார். அவர்களில் தர்மசீடர் எனப் புகழ் பெற்ற சிவனாண்டி என்பவரும், அரிகோபாலன் சீடர் என்ற இயற்பெயர் உடைய சகாதேவன் சீடரும் வைகுண்டர் கொள்கைகளைப் பரப்பப் பெரிதும் உழைத்துள்ளனர். தர்மசீடரின் திருவுருவம் கோயிலிலேயே சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கவிஞராகத் திகழ்ந்தவர் அரிகோபாலன் சீடர். இத் தொண்டர்களின் துணையோடு வைகுண்டர் நாட்டுமக்கள் மனதில் சமய உணர்வை நிறைக்கவும், ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும் துவையல் பந்தி என்ற துறவுக் குழுவை அமைத்தார். அக்காலத்திலேயே சாதி பேதங்களை மறந்து 700 குடும்பங்கள் துவையல் பந்தியில் பங்கேற்றனர். முற்றிலும் சைவத் துறவு நிலையை மேற்கொண்ட இக் குடும்பங்கள் வைகுண்ட சுவாமியின் தலைமையில் கன்னியாகுமரிக்கு 2 கி.மீ. வடக்கே கடற்கரையில் அமைந்துள்ள வாகைப்பதி என்ற இடத்தில் தனிக்குடியிருப்பு அமைத்து துறவுப் பயிற்சி பெற்றன. இவர்களே பின்னாளில் வைகுண்டர் நெறி பெரு வளர்ச்சி பெறக் காரணமாயினர். ஏழை எளிய மக்களின் பக்தி வளர்ச்சியோடு கல்வி வளர்ச்சிக்கும் பணிபுரிய விரும்பிய வைகுண்டர் நிழல் தாங்கல் என்ற புதிய அமைப்பொன்றை உருவாக்கினார். நிழல் தாங்கல் என்பது மரநிழலில் அமைந்த வழிபாட்டு இடமாகவும், கல்வி நிலையாகமாவும் திகழ்ந்தது. மக்களுக்கு இதிகாச-புராணங்களும் சமய உண்மைகளும் கற்பிக்கப்பட்டன. இவ்வமைப்பின் மூலம் அய்யாவழி ஆல்போல் தழைத்துவிட்டது.
வைகுண்டர் ஒப்பற்ற தவஞானியாக விளங்கினார். சாமித்தோப்பில் ஆறு ஆண்டுகள் அருந்தவம் புரிந்தார். தவ ஆற்றலால் செய்த அற்புதங்கள் பல. மண்ணும் தண்ணீரும் கொடுத்தே மக்களின் நோய் நொடி தீர்த்தார். குறை களைந்து நிறைபுகழ் எய்தினார். இந்து சமய மக்களின் கட்டுக்கோப்புக் குலைந்துவிடாமல் இருப்பதற்காகவும் ஆன்மிக வளர்ச்சிக்காவும் சுவாமிகள் பல இடங்களில் பெரிய கோயில்களையும் அமைத்துக் கொடுத்துள்ளார். அக்கோயில்கள் பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இப்பதிகளும், தாங்கல்களும் 150 வருடங்களாக இந்து சமயத்தின் அரண்களாகவும், வைகுண்டர் நெறியின் கேந்திரங்களாகவும் விளங்கி வருகின்றன. இந்து சமயத்தின் ஒரு மறுமலர்ச்சி இயக்கமாக விளங்கும் வைகுண்டர் நெறியை பல லட்சம் மக்கள் பின்பற்றுகின்றனர். வைகுண்டர் 1851 ஜூன் 2ல் சமாதியானார். தம் இறுதியை இதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே சீடர்களுக்கு வெளிப்படுத்தினார். வைகுண்டரின் வரலாற்றுப் புராணமாக அவர் சீடர் அரிகோபாலன் படைத்துள்ள அகிலத் திரட்டு அம்மானை 1841ல் படைக்கப்பட்டது. அந்நூல் 1851 ஜூன் 2ம் தேதி வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளை யாவரும் வியக்கும்படி விளக்கிக் காட்டுகிறது. இந்நூல் மற்றொரு வகையிலும் தனிச்சிறப்பு உடையது. தமிழில் உள்ள அம்மானைகளில் பெரியது. சுவைகளில் தன்னிகரற்றது. வைகுண்டர் சமாதியடைந்த பின் அவர் பென்மேனிக் கூட்டைப் பொதிந்து மணிக்கோயில் செய்து நாராயணசுவாமி கோயிலாகப் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். கோயிலில், அவர் பயன்படுத்திய திரும்பிரம்பு, சுரைக்குடுக்கை, கடயம் என்ற கைக்காப்பு முதலியன புனிதமாகக் காக்கப்பட்டு வருகின்றன. சுவாமித் தோப்பில் உள்ள நாராயணசுவாமி கோயிலில்,வைணவக் கோயில் சம்பிரதாயங்கள் யாவும் வழுவாமல் பின்பற்றப்படுகின்றன. தமிழில் பெரிய அம்மானை இக்கோயில் தலபுராணமாக அமைந்திருப்பது போல தமிழகத்தில் பக்தர்களால் சுமக்கப்படும் வாகனங்களில் பெரியதான இந்திர விமான வாகனம் இங்குதான் உள்ளது. மாசி 20 ல் நடக்கும் வைகுண்டர் ஜெயந்தி விழாவும், ஆவணி, தை, வைகாசி மாதங்களில் நடைபெறும் பதினொரு நாள் திருவிழாக்களும் முக்கிய விழாக்களாகும். சுவாமித் தோப்பு அய்யா வழிபாடுசக்தி மிக்க வழிபாடாக விளங்குகிறது.

அகில வரிகள்...

நாலு மூணு கணக்கு நடுதீர்த்த ஞாயமதும்
மேலெதிரி இல்லாமல் வினையில்லாது ஆண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் யெடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமை தன்னை
காரணமாய் எழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக ஊழ்வினை நோய் தீருமென்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே.

- அகிலம் -

விளக்கஉரை :-

ஏழு யுகங்களாக இந்த உலகுக்கு இடையூறு செய்த பாதகர்களின் பாவக்கணக்கையெல்
லாம் தெளித்துப்பார்த்து,
அவர்களுக்கெல்லாம் அய்யா நடுத்தீர்ப்பு செய்த நியாயத்தையும்,
இனியுள்ள தர்மயுகத்தில் எதிரிகளே இல்லாவண்ணம் நல்லாட்சி புரியும் விபரங்களையும், முற்காலத்தில் வேத வியாசர் எழுதி வைத்த ஆகம விதிப்படியே அய்யா வைகுண்டப்பரம்பொருள் இந்த அவனியில் வந்து நடத்துகின்ற அற்புதமான வரலாறுகளையும், காரணக் காரியங்களோடு எழுதி அதை கதைபோல் படிப்போருக்கு, முப்பிறவி வினைகளால் உண்டான நோய்களெல்லாம் உடனே தீர்ந்து, மகத்துவமாய் வாழ்வார்கள் என்று அய்யா இந்த அறிய வரலாற்றை அருளுகிறார்.
- அய்யா உண்டு -

அய்யா வைகுண்ட பரம்பொருள் 6 வருடம் தவம் இருந்த புண்ணிய இடம் நம் வடக்கு வாசல்....


தலைமைப்பதியாக திகழும் சுவாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார். முற்காலத்தில் பகவான் வைகுண்ட அய்யா தவம் புரியத் தீர்மானித்தார்.

அதனால் சுவாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

அடுத்த இரண்டாண்டு தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார். மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.

இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன. தலைமைபதியாம் சுவாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார்.

அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர். வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தாண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப் பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.

"நான்'' என்றால் பகவானா கிய அய்யா வைகுண்டரை குறிக்கின்றது. நிலைகண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிகமகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.

பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது. அத்தகைய சிறப்புடைய வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் தவநிலையில் இருக்கிறார்.

வடக்கு வாசலை நம்பி வெற்றி பெற்றவர்கள் எத்தனையோ பேர், .. அதுபோல அய்யாவை நம்பி பிடியுங்கள் மக்களே " நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார். பக்தர்களின் வாழ்வில் மேன்மையும் புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்குவாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்குவாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்.

அய்யா தவம்

தலைமைப்பதியாக திகழும் சுவாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார். முற்காலத்தில் பகவான் வைகுண்ட அய்யா தவம் புரியத் தீர்மானித்தார்.

அதனால் சுவாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

அடுத்த இரண்டாண்டு தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார். மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.

இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன. தலைமைபதியாம் சுவாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார்.

அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர். வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தாண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப் பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.

"நான்'' என்றால் பகவானா கிய அய்யா வைகுண்டரை குறிக்கின்றது. நிலைகண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிகமகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.

பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது. அத்தகைய சிறப்புடைய வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் தவநிலையில் இருக்கிறார்.

வடக்கு வாசலை நம்பி வெற்றி பெற்றதில் இந்த இளையபெருமாளும் ஒருவன்தான்.. அதுபோல அய்யாவை நம்பி பிடியுங்கள் மக்களே " நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார். பக்தர்களின் வாழ்வில் மேன்மையும் புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்குவாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்குவாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்.

சதிர யுகம்:

நீடிய யுகத்தின் முடிவை தொடர்ந்து சதிர யுகம் என்ற இரண்டாம் யுகத்தை வகுத்தார் சிவபெருமான்.அந்த இரண்டாம் யுகமதில் குறோணியின் ஆறு துண்டுகளில் ஒரு துண்டை எடுத்து அதனை குண்டோமசாலி என்ற அசுரனாகவும் ,அத்துண்டுக்குரிய உதிரத்தை எல்லாம் அவனுக்கு துணையாக அசுர குலமாக பிறவி செய்தார் ஈசன்.அந்த குன்டோமசாலி என்ற அசுரன் குறோணியின் கெட்ட எண்ணங்களில் சிறிதும் மாறாதவனாக இருந்தான்.அவனுடைய உயரம் நானூறாயிரம் முழங்களாகவும் ,முந்நூறு கைகளையும்,முந்நூறு கால்களையும் கொண்டு யானையின் துதிக் கையை போன்ற தோலினை கொண்டவனாகவும் இருந்தான்.



இறை சிந்தனையே இல்லாத அவன் எந்நேரமும் அட்டை போலவே சுருண்டு கிடந்தான்.வயிறு பசிக்கும் போதெல்லாம் தன்னுடன் படைக்கப்பட்ட அசுரர்களையே அள்ளி உட்கொண்டான்.அப்படியே அவன் இனமும் அழிந்து போனது.நீண்ட நாளாக உறங்கிய அசுரன் குண்டோமசாலி திடீரென விழித்து பசியால் துடிக்க உன்ன உணவில்லாமல் பெரும் சத்தத்தை எழுப்பினான். அதைகேட்டு அதிர்ந்த திருமால் சிவனிடம் உரைத்து கேட்கையிலே சிவன் ,சதிர யுகத்தில் படைக்கப்பட்டுள்ள குண்டோமசாலியனை பற்றிக் கூறினார்.அவனை அழிக்கும் காலம் நெருங்கியது என்றெண்ணி மாயவர் அவனை அழிக்க திட்டமிடுகிறார்.



அதன்பின் மேலோக தேவர்களை எல்லாம் இரைகளாக்கி ,மறையதனை கயிறாக்கி ,வாயுவை தோணியாக்கி,வருணனை நிரப்பாக்கி கடலை ஓடையாக்கி அதில் மூவரும் ஏறி தோணியை தள்ளினார்கள்.பின்னர் மாயவர் தூண்டிலை போட அதில் உள்ள தேவர்களை இரை என்று எண்ணிய குண்டோமசாலி இரையை உண்பதாக எண்ணி தூண்டிலை கவ்வி தன் உயிரை இழந்தான்.இத்துடன் இறைவன் படைத்த இரண்டாவது யுகமான சதிர யுகம் முடிவுக்கு வந்தது.

அய்யா வைகுண்டா் அவதாரம்


அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.

"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது

வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்

இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்

பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"

அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.

பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.

மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்,

"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை

நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை

தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை

மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்"

வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில் பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது.

நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள். மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள் வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அய்யா மக்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அவற்றில் முக்கியமானதாக, அவர்நடக்கும் கலியுகத்தை அழித்து ரின்ப நிலையான தர்மயுகத்தை மலரச் செய்து சான்றோருக்கு நித்திய வாழ்வை அளிக்கப் போவதாக கூறினார். மறுமை தர்மமான அந்நிலையை அடைய "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட மக்கள் அவரால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதைப் பார்க்க முடிகிறது.

சான்றோராகிய மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு முக்கிய பங்கு ஆற்ற வேண்டியவர்களாக அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை தர்மயுக மக்களாக மாற்ற சில முறைகளை கடைபிடிக்க அய்யா வளியுறுத்தினார். இவ்வாய்மொழிகளில், மக்கள் தங்களை சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்துமளவு கலி தன்னால் அழிந்துகொண்டே வரும் என்பது முதன்மைபெற்றது. இங்குள்ளவை அனைத்தும் ஒன்றாதலால் எதற்கும் அச்சமில்லை என்னும் அத்துவித கோட்பாடடை ஒத்திருந்தது இது. மக்கள் கலியாகிய மாயை விட்டகலுமளவு வைகுண்டர் தர்ம ராஜாவாக இருந்து அவர்களை ஆளும் இத்தர்ம யுகத்தை உணரமுடியும் என்னும் அகிலக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது.

அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.

பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரானஅரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில்பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின் அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர் மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதி ரூபமாக பள்ளியறையில் பாவித்து சான்றோர் திருநாள்நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து. மேலும் சில வரிகளின் ஆதாரத்துடன், வைகுண்டர் மனித உரு எடுத்தார் எனவும், ஆனால் அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பது வேறு சில அமைப்புகளின் வாதம்.

அய்யாவழி வரலாறு

அய்யாவழி"
தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிரிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பச்சை பசேலாக காட்சி தரும் செழிப்பான பகுதியில் சாமிதோப்பு என்னும் அழகிய கிராமம். இந்திய அளவில் அவ்வளவாக பேசப்பாடாத இந்த ஊர் இந்துமதத்தின் வர்ணாஸ்ரம சாதிக்கொடுமைகளுக்கு எதிராக தனிக்களத்தை அமைத்த "அய்யாவழியின்" முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினர் கூடும் இந்த இடங்கள் கோவில் என அழைக்கப்படுவதில்லை; மாறாக 'பதி', 'நிழல்தாங்கல்' என அழைக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர்களால் கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் சாணார், பரவர், மூக்குவர், என 18 வகை சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் மனிதனை விட கேவலமாக நடத்தப்பட்டனர். பட்டன், தம்புரான், தம்பி, நம்பூதிரி, பிள்ளைமார், நாயர் (மேனன்), பிராமணர் என பல பல ஆதிக்கசாதியினர் திருவிதாங்கூர் மன்னனின் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைகளை மக்கள் மீது நடத்தினர். மன்னன் செல்லுகிற பகுதிகளில் ஆதிக்கசாதியினரை சார்ந்த பெண்கள் சிலரது வீடு 'அம்ம வீடு' என அறியப்பட்டது. இந்த 'அம்ம வீடு', 'உள்ளிருப்பு வீடு' களில் தான் மன்னன் ஓய்வெடுப்பது வழக்கம். கைமாறாக அந்த பகுதி நிலங்கள், வருவாய் துறை, நிர்வாகம் இவர்களது 'ஆதிக்கத்தில்' இருந்தது. மன்னனுக்கும் பார்ப்பனீயத்திற்குமான தொடர்பு இந்த உறவு முறைகளில் இருந்ததை பயன்படுத்தி ஆதிக்கசாதியினர் குறுநிலமன்னர்கள் போல தீர்ப்பு, தண்டனை வழங்குதல் என தொடர்ந்தனர்.

1809ல் பொன்னுநாடார், வெயியேலாள் தம்பதியினருக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அன்றைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட சாணார் சாதியை சார்ந்தவர்கள் அவர்கள். அந்த சிறுவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். "திருமுடியுடன் விஷ்ணு" என்னும் பொருள் படும் இந்த பெயரை கீழ்சாதி சாணார் குடும்பம் சூட்டியதும் பார்ப்பனீய ஆதிக்கசாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பெற்றோர் அந்த பெயரை முத்துகுட்டி என மாற்றினர். தாழ்த்தப்பட்ட குழந்தைக்கு பார்ப்பனீய தெய்வத்தின் பெயரை கூட சூட்ட அனுமதிக்காத இந்துத்துவ சாதிவெறியின் மத்தியில் பிறந்த இந்த குழந்தை தான் வளர்ந்து "அய்யா வைகுண்டர்" ஆகி, சாதி எதிர்ப்பை ஆயுதமாக எடுக்குமென்பது அன்றைய ஆதிக்கசாதியினருக்கு தெரியவில்லை. 17 வயதில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள புவியூர் என்னும் ஊரை சார்ந்த திருமாலம்மாள் என்பவரை மணந்தார் முத்துகுட்டி. இதுபற்றி திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணாமனவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது.

அய்யாவழியினரின் நூல் 'அகிலம்', 'அகிலத்திரட்டு அம்மானை' அல்லது 'அகிலதிரட்டு' என அழைக்கப்படுகிறது. அகிலத்தின் படி திருமலையம்மாளுக்கு முதல் திருமணத்தின் வழி ஒரு ஆண்குழந்தை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்துகுட்டி பனையேறுதல், விவசாய கூலி வேலை வழி தனது வருமானத்தை தேடிக்கொண்டார். சாதாரண மக்களில் ஒருவராக காணப்பட்ட இவர் உருவாக்கிய வழிமுறை 'அய்யாவழி' என அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிமதம் என்கிறார் இன்று அய்யாவழியின் தலைமை பதியை நிர்வகித்து வருகிற பாலபிரஜாதிபதி அடிகளார் (அய்யாவின் வாழ்க்கை பற்றி தனிப்பதிவில் பார்க்கலாம்).

அய்யாவழி

அய்யாவழி, (அய்யா+வழி --> தந்தையின் வழி, இறைவன் வழி) பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும்.

அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. அய்யாவழி மக்கள், 80 லட்சத்துக்கு மேல் இருப்பதாக கூறப்பட்டாலும்[1] மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிவரம் இல்லை.

அய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக[2] சமய[3] ஆய்வலர்களும் அய்யாவழியை தனி சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். அப்பகுதிகளில் அய்யாவழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்று. இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.

அய்யாவழியின் முதன்மை புனித நூலான அகிலத்திரட்டின் படி அய்யா வைகுண்டர் கலியை அழிக்க இறைவனால் எடுக்கப்பட்ட மனு அவதாரமாகும். இவ்வழிபாட்டின் புராணத்தின் சில பகுதிகளும் , சில சமயச் சடங்குகளும் இந்து சமயதுடன் ஒத்திருக்கின்ற போதிலும், பெரும்பாலும் வேறுபட்ட கருத்துக்களே அதிகமாக வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தீய சக்தி, தர்மக் கோட்பாடு போன்றவற்றில் அய்யாவழி இந்து சமயத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது.
அய்யாவழி சமயத்தின் தோற்றம் முதன்முதலாக நாட்டின் ஒரு அமைப்பு மக்களிடத்தும், அய்யா வைகுண்டர் முன்பு அவர்களின் சங்கமத்தாலும் உணரப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆரம்பம் முதலேயே அய்யாவழியின் வளர்ச்சி கிறிஸ்தவ போதகர்களுக்கு அவர்களது பணியில் ஒரு பெரிய தடைக்கல்லாகவே திகழ்ந்ததாக லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அய்யாவழியின் சமுதாய வரலாற்றை படிக்க லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. அய்யாவழியை பின்பற்றியவர்களில் பெரும்பாலும் நாடார் இனத்தவர்களாக இருந்த போதும் மற்ற சாதியினரும் கணிசமாக இச்சமயத்தை பின்பற்றியமைக்கு சான்றுகள் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி ஒரு சமயமாக அங்கீகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக்கொண்டு விட்டது. அவ்வமயம் அதன் இருப்பு திருநெல்வேலியின் (தற்போதைய தென் தமிழ் நாடு) தென்பகுதியிலும் திருவிதாங்கூரின்(தற்போதைய தெற்கு கெரளம்) தென்பகுதியிலும் கணிசமாக உணரப்பட்டது. ஆயிரத்து எண்ணூறுகளில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. குறிப்பாக அந்நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து, தொடர்ந்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுகளும் அய்யாவழி அசாதாரண வளர்ச்சியைக்கண்டது. அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்ற பிறகு அய்யாவழி, வைகுண்டரின் போதனைகள், மற்றும் அய்யாவழியின் புனித நூல்களின் அடிப்படையிலும் பரப்பப்பட்டது. அய்யாவழியின் போதனைகளை அய்யாவின் ஐந்து சீடர்கள் நாட்டின் பல பகுதிகளுகும் சென்று பரப்பினர். இது இவ்வாறிருக்க பால் பையன் சுவாமிதோப்பு பதியை நிர்வகிக்கத்தொடங்கினார். மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த அய்யாவழியினர் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொருபுறம் நாடு முழுவதுமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாதளவு கொடுங்கொன்மை இங்கு இருந்துவந்ததால் சமயக்கட்டமைப்பு என்னும் இயல்புக்கு அப்பால், அய்யாவழி அப்போதைய திருவிதாங்கூரின் சமுக-வரலாற்றில் தனிமனித உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, ஒரு சீர்திருத்த அமைப்பாகவும் இயங்க வேண்டிய கட்டயத்திலிருந்தது. தீண்டாமை என்னும் கொடுமைக்கப்பால், காணாமை, நெருங்காமை ஆகியனவும் சாதிக்கொடுமையின் மருவல்களாகி வேரூன்றி இருந்தது. அத்தகைய ஒரு சமுகச் சூழலில் சாதி வேற்றுமைக்கப்பாலான மக்கள்-கலப்பை செயல்படுத்தியது அய்யாவழியின் வரவால் தென்திருவிதாங்கூரில் உடனடியாக காணப்பட்ட நிலைமாற்றம் ஆகும்.

தற்போது, பையன் வாரிசுகளில் ஒருவரான பால பிரஜாபதி அடிகளார், அய்யாவழியின் சமயத்தலைவராக கருதப்படுகிறார். அய்யாவழியின் கடந்த இரு பத்தாண்டுகள் வளர்ச்சியில் இவருக்கு மகத்தான பங்கு உண்டு. தென்னிந்தியா முழுவதுமாக ஏறத்தாழ 1000 தங்கல்களுக்கு மேல் அடிக்கல் நாட்டிய பெருமை இவருக்குண்டு. அய்யாவழியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதார தினமான மாசி 20, குமரி மாவட்டத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு முதல் தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு்விடுமுறையை விடுமுறை அளித்து வருகின்றது

அய்யா உண்டு

ன்பர்களே இன்றும் அய்யா வழியை பற்றி சரியாக அறியாதவர்கள் கேட்கும் முதல் கேள்வி அய்யா வழி என்பது நாடார் மக்களின் வழியா? என்பதாகும் . என்னிடமும் பல நண்பர்கள் அய்யா வழியின் வரலாற்றை கேட்ட பின்பு இக்கேள்வியை கேட்டுள்ளனர்.
ஏன் இந்த கேள்வி வைகுண்டர் உலகில் சாணார் (நாடார்) குலத்தில் பிறந்தது அவர் தவறா? உலகில் ஜாதி முறையை வைத்தது மனிதன் செய்த தவறாகும்.உலகில் அதர்மம் அதிகமாகும் பொது இறைவன் அவதாரம் எடுக்கிறார் என்பது உலக மக்களின் நம்பிக்கை. அவ்வாறு அவதாரம் எடுக்கும் போது மனிதன் உருவாக்கிய ஏதேனும் ஒரு ஜாதிலேதான் பிறக்க முடியும்.
அந்தப்படியே அய்யா வைகுண்டரும் மிகவும் தாழ்ந்து கிடந்த சாணர் குலத்தில் பிறந்து அவர்களின் குறைதீர்த்தார். ஜாதி என்னும் கொடிய கலியில் சிக்கி பல்வேறு கொடுமைகளை அனுபவித்த மக்களை காக்க அதே தாழ்ந்த ஜாதியிலேயே இறைவன் வைகுண்டமாய் பிறந்தார். ஜாதியை அளிக்க பிறந்த வழி அய்யா வழியாகும்,அதனை ஜாதி வழி என்பது தவறான ஒரு கருத்து ஆகும். ஜாதிக்காக அய்யா வழி உருவாக்க பட்டிருந்தால் ஆரம்ப காலத்திலேயே பெரும் அழிவை கண்டிருக்க வேண்டும் .

"சாதி பதினெட்டும் தன்னால் கேடாகும் வரை
நீதி அழியாதே நீ சாபங்கூராதே"

"சாதி பதினெட்டும் தலையாட்டி பேய்களையும்
வாரிமலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு"

என்று விஞ்சையில் நாராயணர் கூறுகின்றார் இவ்வரியின் நோக்கம் ஜாதிகளை அளிப்பதாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இவ்வாறு கூறிய இறைவன் எப்படி ஜாதியை,ஜாதி வழியை தோற்றுவிப்பார்?
சத்திரியனாக வந்த ராமனையும்,இடையனாக வந்த கிருஷ்ணனையும்,பிராமணனாக வந்த வாமனனையும்,யூதராக வந்த இயேசுவையும் ஏற்று கொள்ளும் மனம் ஏன் சாணாராக வந்த வைகுண்டரை ஏற்க மறுக்கிறது?

அய்யாவழி சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.

அய்யா வழி தோன்றிய ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் நாடார்களே தாங்கல் வைத்து வணங்கினர். அனால் தற்போது அனைத்து ஜாதி மக்களும் அய்யாவை ஏற்று வணங்க தொடக்கிவிட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

அய்யா உண்டு

அய்யா வழி பழக்க வழக்கங்கள்

ய்யாவைகுண்டரை அன்புக்கொடி மக்கள் அய்யா என்றே அழைத்தனர். இன்றும் அவ்வாறே சொல்கின்றனர். தன்னை நாடிவந்த அன்புக்கொடி மக்களை அய்யாவைகுண்டரும் அய்யா என்றே அழைத்தார். எதிர்படுகின்ற மனிதனை அய்யாவைகுண்டரின் பிரதிபிம்பமாகவே (கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போல) அன்புக்கொடி மக்கள் கருதுகின்றனர். அதனால்தான் அய்யா என்று ஆச்சாரமாக (அய்யா வாங்க, அய்யா உட்காருங்க) ஒருவருக்கொருவர் பேசிக்களிக்கின்றனர்.

அன்புக்கொடிமக்கள் எச்செயலையும் அய்யா உண்டு என்று கூறி தொடங்குவதையும் அய்யா உண்டு என்றுகூறி நிறைவு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பதியின் முகப்பிலும் இல்லத்து முன் அறைகளிலும், புத்தகங்களின் முற்சொல்லிலும் அன்புக்கொடி மக்கள் அய்யாதுணை என்று பொறிப்பதைப் பார்க்க முடிகிறது.

தாரை நாமம்:

அய்யா வைகுண்டர் மரபின் சின்னம் என்று இதனைக் கூறலாம். ஞானியரின் யோகநிலையில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரைப்பூ மேல் (நெற்றிப்பொட்டு என்பர்) தீப ஒளி நிற்பதைப் போல (இறைவன்) வீற்றிருப்பான் என்பதன் அடையாளமே தாரைப்பூமேல் நாமம் என்ற சின்னமாகும்.

விளக்கு நேமித்தல்:

அன்புக்கொடி மக்கள் அதிகாலையிலும் அந்திவேளையிலும் திருவிளக்கேற்றி வைத்து உகப்பாட்டு என்ற வழிபாட்டு பாடல் படித்து இறைவணக்கம் செய்கின்றனர். இச்செயல் விளக்கு நேமித்தல் என்று சொல்லப்படுகிறது. கிருத்தவர்களின் ஜெபம் செய்தல், இசுலாமியரின் தொழுகை நடத்துதல், உயர் சாதியினரின் சாம்புராணி திரி கொளுத்தி வணங்குதல் போன்றவற்றுக்கு மாற்றாக விளக்கு நேமித்தல் உள்ளது.

திருநாமம்:

அன்புக்கொடி மக்கள் வெள்ளைநிற மண்ணை எண் ஒன்றின் வடிவில் நேராக நெற்றியில் அணிந்து கொள்வதை திருநாமம் பூசுதல் என்று சொல்லுகின்றனர். அன்புக்கொடி மக்களின் நெற்றியைத் தொட்டு பணிவிடைக்காரர்கள் திருநாமம் இடுகின்றனர். குறுக்காகப் பூசும் வீபூதிப் பூச்சு, சந்தணப்பொட்டு, குங்குமப்பொட்டு, வைணவர்களின் திருமண் அணிதல் போன்றவற்றுக்கு மாற்றாக இது உள்ளது.

பிச்சைப் பாங்கு:

அகிலத்திரட்டில் பிச்சை எடுத்தலைப் பற்றியும், பிச்சை கொடுத்தலைப் பற்றியும் அதிகமாகப் பேசப்பட்டுள்ளன. பெரும்பாலான அய்யாவழிப் பதிகள் பிச்சை எடுத்து ஈட்டிய பொருள் கொண்டே இயங்குகின்றன. பதியில் நேமித்த பொருட்களை (பூஜையில் வைத்த) பணிவிடை நிறைவுற்ற பின் தருமம் செய்வர். உதாரணத்துக்கு தலைக்கு ஒரு வாழைப்பழம் வீதம் வழங்குவதாகக் கொள்வோம். இவ்வாறு பதியில் ஒரு தனி மனிதன் பெறும் தலைவீதப் பாங்கு பிச்சைப்பங்கு என்று அழைக்கப்படுகிறது.

இனிமம்:

அன்புக்கொடி மக்களுக்கு பணிவிடைக்காரர்களால் வழங்கப்படும் இறைவனுக்கு நேமித்த பொருட்கள் (வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சங்கனி, தேங்காய், பூ இன்ன பிற) இனிமம் என்று சொல்லப்படுகிறது.

பணிவிடைக்காரர்:

அய்யாவழிப் பதியில் பூஜை செய்பவர்களை பணிவிடைக்காரர் என்றே அன்புக்கொடி மக்கள் அழைக்கின்றனர்.

வருங்காலம் அறிதல்:

அய்யாவழிச் சாமியார்கள் (ஆண், பெண் இருபாலாரும்) இறைவனை வணங்கி அருள்பெற்ற நிலையில் கூடியிருக்கும் அன்புக்கொடி மக்களின் கவலையைப் போக்குமுகமாக ஆறுதல் மொழி, வழிகாட்டல், எதிர்காலம் உரைத்தல் போன்றவற்றைச் சொல்வதுண்டு. இந்த நிகழ்வை அன்புக்கொடி மக்கள் கணக்கு கேட்டல் அல்லது கணக்கு பாடுதல் என்று குறிப்பிடுகின்றனர்.

திருஉளச்சீட்டு:

திருமணப் பொருத்தம் பார்க்க அன்புக்கொடி மக்கள் திருச்சரடு (தாலி) சேர்க்க திருமனசு இரங்கினால் இந்தச் சீட்டு வரவும் என்றும் திருச்சரடு சேர்க்க திருமன இரங்காவிடில் இந்த சீட்டு வரவும் என்றும் சீட்டுகள் எழுதி பணிவிடையில் வைக்கின்றனர். பணிவிடை நிறைவுக்குப் பின்னர் பணிவிடைக்காரர் எடுத்துக் கொடுக்கும் சீட்டை அய்யா வைகுண்டர் எடுத்துக் கொடுத்ததாகக் கருதி அதன்படிச் செயல்படும் நம்பிக்கை அன்புக்கொடி மக்களிடம் காணப்படுகிறது.

ஏட்டில் கயிறு போட்டு பார்த்தல்:

எதிர்கால நிகழ்வினை அறிய அகிலத்திரட்டு அம்மானை என்ற ஏட்டுப்பிரதியில் (புத்தகத்திலோ) நூல் கயிறு போட்டுப்பார்க்கும் நம்பிக்கை அன்புக்கொடி மக்களிடம் காணப்படுகிறது. கயிறு விழுந்த பக்கத்தில் உள்ள பாடல் வரிகளைக் கொண்டு எதிர்காலம் இப்படியிருக்கலாம் என்று தீர்மானிக்கின்றனர். அம்பலப்பதியில் பிரதி செவ்வாய் தோறும் ஏட்டில் கயிறு போட்டுப் பார்த்தல் நடைபெறுகிறது. முட்டப்பதியிலும் ஏட்டில் கயிறு போட்டுப்பார்க்கும் முறை உள்ளது.

குழந்தைவளர்ப்பு:

அன்புக்கொடி மக்கள் தலைமைப்பதி பள்ளியறை முன்னிலையில் தாங்கள் பெற்ற குழந்தையைக் கிடத்தி (ஆண்டவன் பாதத்தில் கிடத்துவதாகக் கருதி) கணவனும் மனைவியுமாக விரும்பிய பெயரை 5 முறை கூப்பிட்டு குழந்தைக்குப் பெயரிடும் வழக்கமும் அன்புக்கொடி மக்களிடையே உள்ளது.

அன்புக்கொடி மக்கள் பதியில் கிடைத்த உண்பானையே குழந்தைக்கு முதலில் ஊட்டுகின்றனர். சிலர் குழந்தைக்கு முதலில் அன்னம் ஊட்டுவதை பணிவிடைக்காரர் மூலம் செய்வர். குழந்தைகளுக்கு பிறந்தமுடி எடுக்கும் வைபவத்தையும் பதியில் வைத்தே நடத்தி தருமம் செய்கின்றனர். பெண்குழந்தைகளுக்கு பதியில் வைத்து காது குத்தி கம்மல் போடுகின்றனர்.

பூப்புனித நீராட்டு:

குமரிமாவட்ட மக்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு பூப்புனித நீராட்டு விழா எடுப்பதைச் சடங்கு என்று கூறுவர். அய்யாவழி மரபில் அவரின் 5 சீடர்களின் வாரிசுதாரர்கள் அல்லது பதி பணிவிடைக்காரர்களில் ஒருவர் அய்யா வைகுண்டருக்கு பணிவிடை வைத்து உகப்பாட்டு படித்து ஆதியாம் வைந்தராசர் எனத்தொடங்கும் விருத்தப்பாக்களை பாடி அன்புக்கொடி மக்களின் பெண்குழந்தைகளுக்கு பூப்புனித நீராட்டுவிழா வைபவத்தை நடத்தி வைப்பது வழக்கம்.

திருமணம்:

அன்புக்கொடி மக்கள் திருமணப் பொருத்தம் அறிய பதியில் ஏட்டில் நூல்வைத்துப் பார்த்தல், திருஉளச்சீட்டு எழுதி வைத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றுகின்றனர். திருமணத்தின்போது அய்யா வைகுண்டருக்குப் பணிவிடை வைக்கின்றனர். மவுனிக்கலியாண என்று தொடங்கும் திருமண வாழ்த்துப் பாடல் படிக்கின்றனர். மணமக்கள் மணமேடையில் தெற்குத்திசை நோக்கி அமர்கின்றனர்.

மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதை திருச்சரடு சேர்த்தல் என்று சொல்கின்றனர். தாலியில் உள்ள சுட்டியில் (லாக்கட்) தாமரை நாமம் பொறிக்கப்பட்டிருக்கும். மணமக்கள் மணமேடையை ஐந்துமுறை வலம் வருகின்றனர். அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற நிகழ்வுகள் கிடையாது.

அய்யா கால்நாட்டிக் கொடுத்த கடம்பன்குளம் நிழல்தாங்கல்

அய்யா வைகுண்ட சுவாமி சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் கிராமங்களில் இறைவனை வழிபடவும், ஏழை எளியோருக்கும், நடந்து செல்லும் வழிப்போக்கர்களுக்கும், தாகத்தால் தவித்து வரும் மக்களுக்கும், பசியோடு வரும் மக்களுக்கும் தண்ணீரும்,அன்னதர்மமும் செய்து தர்மம் செழிக்க நிழல்தாங்கல் என்ற பெயரில் வழிபாட்டு தலங்களை அமைக்க எண்ணினார்.அங்கு ஊரில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுவழிபாடு செய்து, விழாக்கள் நடத்த வேண்டும் என்றும் எண்ணினார்.

அதன் விளைவாக உதித்த முதல் தாங்கல் கடம்பன்குளம் தாங்கல் ஆகும்.அதன் படி தானே அத்தாங்கலுக்கு கால் நாட்டி கொடுக்கவேண்டும் என்று எண்ணி அய்யா கடம்பங்குளம் நோக்கி நடக்கலுற்றார். வரும் வழியான பாம்பன்குளத்தில் அய்யா அமர்திருக்கும்போது, அய்யா வந்ததை அறிந்த கடம்பன்குளத்தை சார்ந்த மாடக்கண் நாடார்,ஒருசிலருடன் சென்று அய்யாவை கடம்பன்குளதிற்கு அழைத்தார்.அதன்படி அங்கே சென்று மறுநாள் காலை 4 மணிக்கு குருத்தோலை நட்டு பணிவிடைகள் செய்ய வேண்டுமென்று அய்யாகூறி பணிவிடைகள் செய்ய அரும்பத்த பண்டாரம், அறிவுள்ள பண்டாரம், அஞ்சாதே பண்டாரம் மூன்று பேரையும் நியமித்தார்.மாடக்கண் நாடார் மீது அய்யாவின் பூரண அருள் இறங்கியது. தாங்கலை நிறுவி ,தாங்கலில் பனிவிடை முடிந்த பின் அய்யா கடன்பங்குளத்தை விட்டு சாமிதோப்புப் பதிக்குச் சென்றார்.

அதன்பின், மாடக்கண் நாடார் மகன் யாமக்கால நாடார் காக்கரை என்ற ஊருக்குப் தாங்கலுக்காக பிச்சைக்கு(தர்மம் வேண்டி) சென்றார். அந்த ஊர்ப் பண்ணையார் "இந்த ஊரில் கொஞ்ச காலம் மழை இல்லை,அதனால் பிச்சைப்போடுவதற்கு மக்களிடம் வசதியுமில்லை.உங்கள் ஊருக்கு வந்த அய்யா வைகுண்டசாமி என்பவர் குருத்தோலை நாட்டி திருவிழா நடத்தச் சொன்னாராமே. அப்படி உறுதியுள்ள சாமியாக இருந்தால், இந்த ஊரில் மழையை பெய்ய வைத்துவிட்டு நீர் பிச்சைக்கேளும் தருகிறேன்" என்றார். யாமக்கால நாடார் அவர்கள் அய்யாவை வேண்டி அங்கேயே நின்றார்கள்.

சிறிது நேரத்தில் மேகங்கள் கருத்தன. அந்த ஊரில் உள்ளவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். கண் இமைக்கும் நேரத்தில் மழை வேகமாகப் பெய்துவிட்டது. யாமக் கால நாடார் கேட்டப் பிச்சையை காக்கரைப் பண்ணையார் வழங்கினார். இதே அற்புதம் பண்டாரகுளம் ஊரிலும் நடைபெற்றது. அய்யா வந்த காலம் கடம்பன்குளம் ஊரில் 34 குடும்பங்கள் வசித்து வந்தனர். சாமிதோப்பு பதிக்கு அய்யாவை கடம்பங்குளத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சென்றிருந்தார்கள். அப்போது சாமிதோப்பில் அய்யாவுடைய திருநாளை எப்படிக் கொண்டாடுவது எத்தனை நாள் கொண்டாடுவது என்ற கேள்விகள் எழுந்து கொண்டிருந்தது. அப்போது, சாமி தோப்பு வந்திருந்த அன்பர்கள் அனைவரும் நம் அய்யாவுடைய திருநாளை பத்து நாட்கள் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
பத்து தினங்கள் திருவிழா நடத்த வேண்டும் என்றால் கொடி கம்பம் நட்டு கொடியேற்றத்துடன் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது வசதிபடைத்த ஒரு நபர் எத்தனை திருவிழா இங்கு அய்யா நடத்தினாலும் அத்தனை திருவிழாவிற்கும் கொடியேற்ற தங்கக்கயிறு நான் தருகிறேன் என்று அய்யாவிடம் சொன்னார்.ஆனால் அதை ஏற்காத அய்யா கடம்பன்குளத்தைச் சேர்ந்த என் மக்கள் நூல் கயிறு கொண்டு வந்து கொடியேற்றத்திருநாளை நடத்தித் தரவேண்டும் என்று உத்தரவிட்டார். கொடிமரவேலை மிக விரைவாக சிறப்பாக நடைபெற்றது. பத்து தினங்கள் திருவிழா நடத்தத் தீர்மானித்து அய்யா அப்போது சொன்னது போல் கடம்பன்குளம் அன்புக்கொடி மக்களை கொடிகயிறு கொண்டுவரச் சொல்லி சுவாமி தோப்பிலிருந்து அழைப்புச் சொல்லி விட்டார்கள். அன்று முதல் இன்றுவரை ஆண்டுக்கு மூன்று திருவிழாவான தை, வைகாசி, ஆவணி திருவிழாக்களுக்கு கொடிக்கயிறு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது, தாங்கலில் மாசித்திருவிழா, ஆனித் திருவிழா, கார்த்திகைத் திருவிழா மற்றும் மாதம் முதல் ஞாயிறு, பணிவிடை, அன்னதர்மம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அய்யாவுடைய தாங்கல் பெயருக்கு பக்கத்தில் உள்ள சொத்துக்களை அய்யாவுடைய அன்புக்கொடிமக்கள் நன்கொடையாக வாங்கிக்கொடுத்ததும் உண்டு. தாங்கலுடைய வரிக்காரர்கள் சார்பாக வாங்கப்பட்டதும் உண்டு. முதல் ஞாயிறு அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல அன்பர்கள் தாங்கலில் வந்து அய்யாவுக்கு பால் வைத்தும், சுருள் வைத்தும் வழிபட்டுச் செல்வார்கள். எத்தனையோ காலகட்டங்களில் பல வழிகளில் வறுமையும், சோதனையும் ஏற்பட்டகாலத்திலும் கூட அய்யா வழிபாட்டைத் தவிர அய்யா வந்தது முதல் பிறவழிபாடே இல்லாமல் கடம்பன்குளம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அது அய்யாவுடைய சிறப்பே ஆகும்.

அய்யா துணை

"சாதி பதினெட்டும் தன்னால் கேடாகும் வரை
நீதி அழியாதே நீ சாபங்கூராதே"
"சாதி பதினெட்டும் தலையாட்டி பேய்களையும்
வாரிமலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு"

என்று விஞ்சையில் நாராயணர் கூறுகின்றார் இவ்வரியின் நோக்கம் ஜாதிகளை அளிப்பதாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அய்யாவழி சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது.



அய்யா துணை
வெற்றி நடை போடுகிறது அய்யாவின்
வைகுண்ட அவதாரம்
மெகாதொடர் உங்கள்
VASANTH TVயில்
16-3-2013 முதல்
சனிக்கிழமை தோரும்
மாலை 5:30
மணிக்கு...
காணத்தவராதீர்கள்
இந்த வாரம்
நெஞ்சை உருகச் செய்யும்
கிருஷ்ண பரமாத்மாவின்
தீவிர பக்தனின் கதை....

கலி

குழப்பத்தில் முடிவெடுக்க வேண்டாம்
குழப்பத்திற்கு முடிவு கட்டுவோம்

கலியுகத்தில் கலி மாயையின் கொடுமைகள் அதிகரித்து வரம்புகளை கடந்து நின்ற போது சிவனும் பிரம்மாவும் மற்றுமுள்ள தேவர்களும் விஷ்ணுவை தேடுகிறார்கள். கலியின் மயக்கத்தால் அவர்கள் கண்களுக்கு விஷ்ணு ( நாராயணன் ) புலப்படவில்லை. நாராயணர் ஏழாம் பிறவி எடுப்பதற்காக பூமியில் ஒழிந்து கிடக்கிறார் என்று தேவர்கள் தெரியாததை தெரிந்தது போல் பொய் சொன்னார்கள்.
நாராயணனை திரும்ப அழைப்பதற்கு என்ன செய்யலாம் ? என்று சிவபெருமான் நினைத்த போது " இருள் கொண்ட காலமதால் ஏற்ற தர்மம் செல்லாது மருள் கொண்ட காலமதால் வம்புக்கு நேராகுமய்யா " எனவே சிவ பெருமானே நீவிர் பேய்கண அசுர மாலைகளை அணிந்து தாண்டவம் ஆடினால் மஹா விஷ்ணு வருவார் என்று நந்தீஸ்வரர் கூறினார் .அதன்படியே மகாவிஷ்ணு கைலாசம் வந்து சிவபெருமானை சேர்ந்தார் . கழுத்தில் சூடியிருந்த பேய்கண அசுர மாலைகளை வீசி எறியும் படி மஹா விஷ்ணு வேண்டினார். தீயில் போடப்பட்ட மாலைகள் பேய்களாக உருவெடுத்தன. பூமியில் கலியின் கொடுமையோடு பேயின் கொடுமைகளும் இணைந்து கொண்டன .

குழப்பமான சூழ்நிலையில் எந்தவித முடிவையும் எடுக்கக்கூடாது. அப்படிப்பட்ட நேரங்களில் முடிவுகளை தள்ளிபோடுவது சாலசிறந்தது. தவறான அவசர முடிவுகளை விட காலந்தாழ்ந்த நல்ல முடிவு நன்மை பயக்கும்.
தெரியாத விஷயத்தை தெரிந்தது போல் காட்டிக்கொள்ள கூடாது. ( எடுத்துக்காட்டாக மேலதிகாரிகளிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு பொய் சொன்னால் அது பின்னால் ஊழியர்களுக்கு தீய விளைவுகளையும் கெட்ட பெயரையும் களங்கத்தையும் , அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தும்)

காலம் கெட்டு கிடக்கிறது என்பதற்காக நாமும் சேர்ந்து கெட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது / கெட்ட எண்ணங்களில் திளைக்கக் கூடாது. நல்லதுக்கு காலமில்லை என்று அறிந்திருந்தாலும் நல்லது செய்வதிலிருந்து விலக கூடாது.

கலியின் மாயை நிறைந்த காலங்களில் மனதை ஒருமுக ப்படுத்தி தியானம் மேற்கொள்ளுவது நல்ல பலனளிக்கும். ( தவறுகளை நாம் எந்த மன நிலையில் , எந்த சூழ்நிலையில் யாருக்காக செய்தாலும் அதன் பலனாக வரும் தண்டனையை நாம் கட்டாயம் அனுபவித்தே ஆகவேண்டும்).

நமக்கு கீழான நிலையில் இருப்பவர்கள் சொல்வதை மட்டுமே மனதில் கொண்டு நாம் எந்த அவசர முடிவிற்கும் வரக்கூடாது. ( உதாரணமாக அலுவலகங்களில் மேலாளர் நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் கூலிகள் சொல்லும் கருத்துகளை ஆதாரமாக கொண்டு முக்கியமான தீர்வுகளை எட்டகூடாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் வேலை யை காப்பாற்றி கொள்வதற்காக கூட சில சமயங்களில் உண்மைக்கு புறம்பான விசயங்களை கூறலாம்).

அகிலதிரட்டை கற்றுக் கொள்வோம்.
அகிலக்கலி இருளை அகற்றுவோம்.
அய்யா வழியில் வாழுவோம் .

அய்யா உண்டு.

திரு ஏடு

அகிலத்திரட்டில் 16 வது நாள் திரு ஏடு வாசிப்பில் , பகவதி திருக்கல்யாணம் பாகத்தில் இதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது

அதன்படி ,

கழியன் யாராலும் வெல்லக் கூடாத வரம் பெற்று, அவன் தன் பெண்ணோடு (கலிச்சி ) உகத்திற்கு செல்லும்போது, ரோம ரிஷி என்பவன் , பரமேஸ்வரனாரிடம் கேட்டான்.
"ஈஸ்வரரே, இந்த கலியன் இதனை வரம் பெற்று செல்கிறானே , எப்போது இவன் முடிவாகுவான்" என்று ,

அதற்கு பரமேஸ்வரர் அளித்த பதிலை , மஹா விஷ்ணு, பகவதி திருக்கல்யாண பகுதியில், பகவதியை, அந்த அம்மையை சாந்தப் படுத்துவதற்கு சொல்லுவது போல அய்யா, நமக்குதெளிவாக தெரியப்படுத்துகிறார்.

இந்த பதிலானது கலி அழிவதற்கான இலக்காகவும் கூறப்படுகிறது .

:விளக்கம் : 1. கலியன் மாழ்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும் .
2. சிவ நினைவு இந்த தேசத்திலே செல்லாது .
3.கொலை , களவு , கோள்கள் மிகுந்திருக்கும்.
4. தலைஞான வேதத்தை மக்கள் கைவிடுவர்
5. நேர்மைக்கு காலம் நெகிழ்ந்துதான் இருக்கும் .
6. போருக்குத்தான் எல்லோரும் கருத்தாய் இருப்பார். அதாவது
நிதானம் இருக்காது.
7. கள்ளக்கணவருடைய கருத்து மாதருக்கு இருக்கும்.
8. கூடி உடன் பிறந்த சகோதரியை , பெண் என எண்ணி , நாணி
இறப்பார்கள்
9. கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு
கொள்ளும்.
10. மழை மறையும்; காற்றானது நோய் காற்றாக வீசும் .
11. கீழ் எண்ணம் கொண்டவர்கள் மேல் நோக்க எண்ணம்
கொண்டவர்களை வேலை கொள்வர்.
12. மாதர் கற்பு இருக்காது. (அதாவது அய்யா அகிலத்திரட்டிலே
சொல்லபடுகிற , கணவன் மொழிய களவு மொழி பேசாத
துணைவி நிலைமை.................)
13. மனு நீதம் குன்றும் .
14. ஞாயம் தப்பி நாட்டை அரசாள்வார்கள் .
15. பிராயம் வரும் முன்னே பெண்கள் தன் நிலை அழிவார்கள்.
அப்போது தெய்வ மடவார்கள் எல்லாம் தேசத்திலே வருவார்கள்.

இத்தனையிலும் அடங்காத வைகுண்டம்

இத்தனையிலும் அடங்காத வைகுண்டம்

நம் மனத்தகத்தே அடங்குவது எப்படி?
அய்யாவுக்கு ஆகும் பேர்கள் யார் யார்?

"புனஸ்காரம் இல்லை பூசை முறையும் இல்லை
கோவில்கள் வைத்து குரு பூசை செய்ய மாட்டார்கள்
ஆடு , கிடாய் , கோழி அறுத்து பலி செய்ய மாட்டார்கள் .
மாடு மண் உருவை வணங்கி திரிய மாட்டார்கள்.
என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும்
அன்போடு அன்னம் இட்டு ஆதரிப்பார்கள் .
இர ப்போர் முகம் பார்த்து ஈவார்கள்.
பரப்போரை கை சேர்த்து பரிவார்கள்..........அதுமட்டும் அல்ல
என்பேரால் முத்திரிகள் (அய்யாவின் நாமம்(புகழ்/அடையாளம் )இட்டோரே நன்றாகும்
நாம் வந்தோம் என்னும் நாமம் அது கேட்டவுடன்
தாம் வந்து வேடம் இட்ட சாதியது நன்றாகும்
அல்லாமல் கேளு அறிய முனியே நீ
எல்லா அமைப்பும் ஏலமே விட்ட குறை
எச்சாதிக் காச்சோ அச்சாதி நன்றாகும்

எவர்க்கும் மிக ஈந்து இருப்போர் நன்றாவார்
அவர்க்கு உதவி செய்யும் அவ்வினமும் நன்றாகும்

சினத்தை மறந்து சேடம் முழிக்கும் பேர் மனுக்கள்
நினைவுக்குள்ளே நிற்போம் நாம் மாமுனியே
..........................
............................................
அன்பாக வந்தவரை அலைச்சல் செய்து ஏற்பதுண்டு
வம்பான மாற்றானை வளர்த்தே அறுப்பதுண்டு

எட்டியும் எட்டாத ஏழைக் குணம்போலும்
கட்டியும் கட்டாத கடிய சொரூபமதும்
வேளைக்கு வேளை விதக்கோலமும் அணிந்து
நாளுக்கு நாளாய் நடக்கும் அதிசயமாய்

இரப்ப வடிவாய் இருந்து கலிதனையும்
பரப்பரமாய் நின்று பக்தி சோதித்தே நாம்
எங்கும் இருந்து எரிப்போம் கலிதனையும்

சங்கில் இரந்து தான் வளர்ப்பேன் அன்போரே
அகிலத்திரட்டு அம்மானை

அய்யா வழிமுறை !!!

அய்யாவழி முறையில் கண்ணாடி வைத்து இருபக்கமும் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருக்கப்படும். அய்யாவழியினர் அந்த கண்ணாடியை பார்த்து தான் வணக்கம் செலுத்துவர். “மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது” என்ற உயரிய கோட்பாட்டை கண்ணாடி முன் நின்று வணங்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே காண அய்யா வழிவகை செய்தார்

கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது.

அகிலம் இதைப்பற்றி கூறும் பொது அக்குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன் சம்பூரணதேவனின் ஆன்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால் அங்கு நடந்த எதையும் குழந்தையின் பெற்றோரோ, குடும்பத்தாரோ அறியவில்லை. பிறந்து சில நொடிகள் குழந்தை சலனமற்று இருந்ததை மட்டும் அவர்கள் அறிகிறார்கள். இச்செயல் குறோணியை அழிக்க இறைவன் எடுக்க இருக்கும் வைகுண்ட அவதாரத்துக்காக போடப்பட்ட திட்டத்தின் முதல் பகுதியாகும். ஆக சம்பூரணதேவனாகிய இக்குழந்தை இதுமுதல் முத்துக்குட்டி என்ற பெயரைத் தாங்கி வளர்ந்து வருகிறது.

முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக ஆகிலம் கூறுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தெவனை சந்தித்து அவருடன் இணைகிறார், அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள்.

பின்னர் முத்துக்குட்டி என்னும் இச் சம்பூரணத்தேவன் பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்று வருகிறார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயாரான வெயிலாள் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறுகிறார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.

மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக உலகில் அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தாய்ப் பாசம் காரணமாக அவரை வெயிலாள் தனது மகன் முத்துகுட்டி என்றே பார்க்கிறாள். அவளுக்கு தனது நிலையை வைகுண்டர் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்,

"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"

ஆனால் அதை ஏற்றுக் கோள்ளும் நிலையில் வெயிலாள் இல்லை. அதனால் தான் பிறந்த கடற் பதியின் மண்டபங்களையும் அதன் மெடைகளையும் அவரின் பிறப்பு மற்றும் வருகைக்கு சான்றாகக் கட்டுகிறார். ஆனால் தாய்ப் பாசம் தடுக்க, அவளால் வைகுண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வைகுண்டர், தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் கூறக்கூடாது என்று கூறுகிறார்.

இவ்வாறு கூறிய வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு:- வெயிலாள் இவ்விடத்திலேயே விழுந்து இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பிறகு அகிலத்திரட்டில் வேறெங்கும் வெயிலாள் பற்றிய எந்த செய்திகளும் இல்லாதது இக்கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. ஆனால், "வெயிலாளின் உயிர் இவ்விடத்திலேயே எடுக்கப்படுகிறதெனில், வைகுண்டர் அவளிடத்தில் 'தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் உரையாதே' எனக் கூறியது ஏன்?" என்பது எதிர் தரப்பு வாதம்.

1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது.

முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய ஐந்து யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார். ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும். மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடைவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், 'முன்னின்று கொல்ல மூவராலும் அரிது' என்கிறது. ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே மூன்றின் தொகுதியாக, பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.

இறைவன் நேரடியாக பிறக்க முடியாத காரனத்தினால் அவதாரம் மூன்று நிலையில் நடக்கிறது.

அவதாரத்தின் முதல் நிலை, இறந்து பிறக்கும் குழந்தை (தூல உடலின் பிறப்பு).
இரண்டாம் நிலை, தூல உடலில் செலுத்தப்படும் சம்போரணாதேவன், சுமக்கும் நாராயணரின் சூட்சும உடல்.
அவதாரத்தின் மூன்றாம் நிலை, 24 வருடங்களிக்கு அப்பால் சம்போரணதேவனுக்கு முக்தி அளிக்கப்பட்டு, அவ்வுடலில் ஏகம் உலகில் அவதரித்து வருவது.

இது முதல் சான்றோர் வழியில் வந்த மனித உடல், நாராயணரின் சூட்சும உடல், ஏகம் என்னும் காரண உடல், இவை மூன்றின் தொகுதி வைகுண்டர் என பிறக்கிறார். எனவே புதிதாக பிறந்த வைகுண்டக் குழந்தைக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது.

பின்னர் முருகனுக்கு சட்டம் வைத்த பின்னர் ஏகப்பரம்பொருள், நாராயணரை உட்படுத்தி, வைகுண்ட அவதாரம் கொண்டு கடலின் மேல் வந்து தருவையூர் என்னும் இடத்தில் மனித உடல் (பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியரின் மகன்னான முத்துக்குட்டியின் உடல்) எடுத்து பண்டார உருவாக தெட்சணம் நோக்கி நடந்தார்.

ஆக வைகுண்டர் என்பவர் சாதாரண மனிதர் மட்டும் அல்ல, நாராயணர் மட்டும் அல்ல, ஏகப்பரம்பொருள் மட்டும் அல்ல, ஆனால் மற்றொரு புறம், மனிதரும் தான், நாராயணரும் தான், ஏகப்பரம்பொருளும் தான். சரியாகச்சொன்னால் அவர் இம்மூன்றின் தொகுதியாவார். சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவார் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே.

தெட்சணம் எனப்படும் பூவண்டன் தொப்பை (தற்போதய சுவாமி தோப்பு) அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,

"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.

அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.

"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது
வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்
இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்
பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"

அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.

பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.

மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்,

"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்"

வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில் பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது.

நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள். மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள் வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அய்யா மக்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அவற்றில் முக்கியமானதாக, அவர் நடக்கும் கலியுகத்தை அழித்து பேரின்பநிலையான தர்மயுகத்தை மலரச்செய்து சான்றோருக்கு நித்திய வாழ்வை அளிக்கப் போவதாக கூறினார். மறுமை தர்மமான அந்நிலையை அடைய "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட மக்கள் அவரால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதைப் பார்க்க முடிகிறது.

சான்றோராகிய மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு முக்கிய பங்கு ஆற்ற வேண்டியவர்களாக அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை தர்மயுக மக்களாக மாற்ற சில முறைகளை கடைபிடிக்க அய்யா வளியுறுத்தினார். இவ்வாய்மொழிகளில், மக்கள் தங்களை சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்துமளவு கலி தன்னால் அழிந்துகொண்டே வரும் என்பது முதன்மைபெற்றது. இங்குள்ளவை அனைத்தும் ஒன்றாதலால் எதற்கும் அச்சமில்லை என்னும் அத்துவித கோட்பாடடை ஒத்திருந்தது இது. மக்கள் கலியாகிய மாயை விட்டகலுமளவு வைகுண்டர் தர்ம ராஜாவாக இருந்து அவர்களை ஆளும் இத்தர்ம யுகத்தை உணரமுடியும் என்னும் அகிலக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது.

அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம் மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல் படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார இகனைகளை நிறைவேற்றினார். மும்மையின் தொகுதியான வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் திருமணம் செய்தார். மேலும் திருநாள் இகனையையும் நடத்த உத்தரவிட்டார்.

பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின் அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர் மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதி ரூபமாக பள்ளியறையில் பாவித்து சான்றோர் திருநாள் நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து. மேலும் சில வரிகளின் ஆதாரத்துடன், வைகுண்டர் மனித உரு எடுத்தார் எனவும், ஆனால் அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பது வேறு சில அமைப்புகளின் வாதம்.

அய்யா வைகுண்டருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. முந்தின யுகத்தில் பாண்டவர்களாக இருந்த ஐந்து பேரையும் இக்கலி யுகத்தில் ஐந்து சீடர்களாக பிறவி செய்யப்பட்டதாக அகிலம் கூறுகிறது. அவர்கள்,

தர்ம சீடர்
வீமன் சீடர்
அர்ச்சுணன் சீடர்
சகாதேவன் சீடர்
நகுலன் சீடர்

அய்யா உண்டு

சொந்த பனையேறி பனையேறக் கண்டு வயிறு பசிக்கென்றாரே சிவனே அய்யா!
பாலில் சுண்ணம்ப் போட்டு குடியும் என்று சொல்ல பாலாய் இருந்ததையோ சிவனே அய்யா!
மாறி பார்த்தவனை தாலி அறுத்துகட்டு என்று வகை கூறி விட்டாரையா சிவனே அய்யா!
(சாட்டு நீட்டோலை)
இந்த சம்பவம் அய்யா தந்தை நாராயணரிடம் விஞ்சைப்பெற்று செந்தூர் கடல்தாண்டி வந்து மகனை காணவில்லை என்று அழுத அம்மைக்கு அடையாளம் சொல்லி,கங்கைக்கும்,முருகனுக்கும் சட்டமுரைத்து,தெச்சனாம் பூமியாம் சாமிதோப்பு நோக்கி கலைமுனி,ஞானமுனி என்ற இரு முனிவருடன் நடந்து வந்துக்கொண்டிருக்கும் சமயம் தேவர்களை எல்லாம் ஆகாயமாரக்கமாக மானிடர் கண்ணுக்கு வரச்சொல்லி தானும் பத்தன் தருவை என்ற ஊரில் தன் உருவை மாற்றி மனு அவதாரம் எடுத்து வரும் பொழுது ஓர் ஊரில் நடந்ந இந்த சம்பவம் அதாவது ஒரு பனை ஏறி அவன் வைத்திருந்த சொந்த பனையில் ஏறி பதநீர் இறக்கும் சமயம் அய்யா பரம்பொருள் அவனிடம் சென்று" எனக்கு வயிறு பசிக்குறது கொஞ்சம் பதநீர் கொடு" என்று அய்யா கேட்க அவன் பதநீர் இல்லை என்று சொல்ல மறுபடியும் பார் இருக்கும் சொல்ல அவன் மீண்டும் ஏறி பார்க்கும் சமயம் அவனுக்கு ஆச்சர்யம் அந்த பதநீர் கலசத்தில் பதநீர் அதிகமாக ரொம்பி இருக்கிறது.இதனால் இவனுக்கு புத்தி மாறி இந்த பண்டாரத்திற்க்கு எதற்க்கு அதிகமான பதநீரை கொடுக்க வேண்டும் என்று பத்தி தடுமாறி அந்த பதநீரில் சுண்ணாம்புவை அதிகமாக கலந்து அய்யாவிடம் கொடுக்கிறான் அந்த பனையேறி.அவன் கொடுத்த அந்த பதநீரை பாலாக நினைத்து அய்யா அருந்த அது அவர் தொண்டைக்குள் பாலாகவே மாறி இறங்கியது.இதை காட்சியை கண்ட பனையேறியால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.அய்யாவின் பாதத்தில் வீழ்ந்து" அய்யா தாங்கள் கடவுள் உருவமாகவே எனக்கு தோன்றுகிறது தாங்களுக்கு இந்த பதநீர் பாலாக மாறிய ஆச்சர்யம் என்ன என்பதை எனக்கு உரைக்க வேண்டும் என்று வேண்ட அய்யா அவனுக்கு நல்வழிகள் சொல்லி அவனுக்கு வாழ நல்வகையை கூறுகிறார் அதாவது" தாலி சரடாகிய உன் சுவாசத்தை உன் கட்டுபாட்டில் கட்டி வை உனக்கும் இந்த மாயசக்தி கிடைக்கப்பெற்று நீயும் முக்தி பெறுவாய்"(நம் சுவாசத்தை உள்ளடக்கி இறைவனை அடையும் முறை ஆண்மாவை கண்டுகொள்ளும் முறை)என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு கடந்நு செல்கிறார் நம் இறைவன்.இதில் ஒரு முக்கிய நகழ்வு கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த சம்பவத்தை தெரியாத சிலபேர் அய்யா அந்த பனையேறியை திட்டியதாகவும்,அவனுக்கு சாபம் விட்டு சென்றதாகவும் அதாவது தாலியை அறுத்து கட்டு என்ற வார்தையை மேலோட்டமாக தவறான அபசகுண வார்த்தையாக நினைக்குறார்கள் அவர்கள் ஒன்றை அறிந்துக் கொள்ள வேண்டும் அய்யா அனைவரையும் வாழவைக்க வந்தவர் அதுமட்டுமல்லாமல் அவர் விஞ்சை வாங்கும் சமயம் நாராயணம் வைகுண்டருக்கு உபதேசம் செய்த வார்த்தையை நினைவு கூற வேண்டும்"சாபத்தை கூறாதே தன்னளவு வந்தாலும்.சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும்,அன்டினபேரை அகற்ற நினையாதே,இச்சட்டம் தனிலே எள் அளவு தப்பினாலும் திச்சட்டம் காய்க்க தேதி வரும் என் மகனே இன்னும் எத்தனையோ பொறுமையை உபதேசித்தவர் இப்படி விஞ்சை பெற்று பொறுமையும்,அன்பையும்,கருணையும் உருவமாகக் கொண்டு வந்த நம் அய்யா யாருக்காவது சாபம் கொடுப்பாரா வாழவைக்க வந்தவர் அய்யா நம்மை அழிக்க வந்தவரல்ல நம் அய்யா அய்யாவை கலியன் செய்த பெரும் கொடுமையை கூட தாங்கிக்கொண்டு சான்றோருக்கு பொறுமை உணர்த்தியவர் நம் தந்தை வைகுண்டம் அதானால் அய்யாவின் சத்திய வார்த்தையை சரியாக புரிந்துக்கொண்டு அய்யாவின் அருளை பெற கேட்டுக்கொள்கிறேன்.அய்யா உண்டு —

அருள்நூல்

உங்களுக்காய் வேலை செய்ய உலகில் வந்தேன் கண்ணு மக்கா,இரு மனதாய் எண்ணாதே பின் எனக்கு உத்தரம் சொல்வாயே..!
(விளக்கம்)
என் மக்களே உங்களை கொடுமை படுத்திய இந்த கலியிடம் இருந்து உங்களை காப்பாற்ற அனைத்து சக்திகளையும் என்னுள் அடக்கி நானே உங்களுக்காக இந்த கலியில் அகப்பட்டு,அடிபட்டு சோதனைகளை அனுபவித்து,இந்ந கலி எண்ணத்தை கருவறுக்க நானே 6வருடம் தவசு பண்ணி இந்த யுகத்தையும் முடித்து உங்களையும் தூய்மை படுத்தி நீங்கள் என்னை வந்து அடைய சூட்சம புத்திகளையும் (இறைவழி அடையும் முறை)சொல்லி நல்ல மனுக்களை தேர்ந்தெடுத்து உங்களுக்கு என் ஆட்சியான தர்ம யுகத்தில் வாழவைக்கவே வந்தேன் இது உண்மை. இதை விடுத்து வந்திருப்பது (முப்போருள்) இறைவனான வைகுண்டம் என்று அறியாமல் நான் முனிவன் என்றோ,யோகி என்றோ,சித்தனென்றோ,சாதாரண மனிதன் என்றோ நினைத்து இருபுத்தியால்(சந்தேகபுத்தி) என்னை மறந்து யாரோ என்று நினைத்து உன் மனது படி அநியாய பாவங்களை செய்தால் இந்ந கலியுகத்தை அழித்து உன்னிடம் நடுதீர்ப்பு கேட்பேன் நீ சொல்ல முடியாமல் தவிப்பாய் உன்னை கடுநரகத்தில் தள்ளி கதவடைப்பேன்(அருள்நூல்)அய்யா வைகுண்டர்.

கலியை பற்றி அகிலத்திரட்டு அம்மானை

கலி என்றால் எலி அல்லவே கணையாழி வேண்டாமே
வலி மாய நினைவு மாய்மாலம் என்மகனே
ஆனதால் ஆயுதங்கள் அம்புதடி வேண்டாமே
மானமாக இருந்தால் மாளும் கலி தன்னாலே"

என்று கூறுகின்ற இப்பாடலில் கலி என்பது "வலி மாய நினைவு மாய்மாலம்"என்று வரையறை கூறுவதை பாருங்கள்.
அதாவது, வலிமை பொருந்திய மாயதன்மையுள்ளதும், நினைவுகளினால் உருவாகின்றதும் ஆகிய தீய சக்தி ஆகும்.இங்கு மாலம் என்னும் சொல் பேய் என்னும் பொருளைக் கொடுத்துத் தீய சக்தியைக் குறிப்பிட்டு நிற்கிறது.மாய்ந்து போகக் கூடிய வலிமை பொருந்திய இந்த தீய சக்தியை அத்வைத தத்துவம் மாயை என்கிறது.இந்த மாயை எப்படி உருவாகிறது?
நம் என்ன அலைகள், நினைவுகள் தான் இந்த மாய விளையாட்டுக்கு காரணம் ஆகும். அவை எங்கிருந்து தோன்றுகின்றன?என்னும் கேள்வியை எப்போதும் எழுப்பிக் கொண்டிருந்தால் மாயை தோன்றாது. எதை என்னுவோமோ அது ஆவோம். எனவே மாயை ஆய்வு இல்லாத நமது நினைவின் உள்ளிருந்து தோன்றுகிறது.
பேய் ஒன்று இருப்பதாக நினைத்தால் அவனை பொறுத்தவரை அவனுக்கு பேய் உண்டு. அது அவனது ஆய்வு இல்லாத நினைவினால் உண்டானது.நோவு உண்டு என நினைத்தால் அவனுக்கு நோவு உண்டு.அது அவன் நினைவினால் உண்டானது .
இதுபோல எதை மனதில் உருவாக்குகிறானோ அதுமயமாகின்றான் மனிதன்.நாம் காண்பது ,நினைப்பது எல்லாம் உண்மையில் இல்லாதது ஆகும்.அது மாயையின் மாய்மாலம் ஆகும்.
அப்படியானால் எது உண்மையான பொருள்?அதுவே பரம்பொருள்.அது,நினைவுக்கும்,வாக்குக்கும்,அறிவுக்கும் எட்டாத பொருள் ஆகும்.அதை மனிதன் எட்டும் போது பரம்பொருளில் ஐக்கியமாகின்றான்.

இதை அகிலம் பின்வருமாறு கூறுகின்றது..
"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொம்பலத் துன்பமில்லை
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவால் என்றார்"

இதன் பொருள் உலகில் வாழும் மக்களே ,பொய்,பிசாசு,பில்லிவினை,நோய்,நோவு,நொம்பலம்,தொய்வு,இறைகள்(இங்கு பரம்பொருளை குறிப்பிடவில்லை). இவுலகம், குற்றம் இவைகள் எல்லாம் மாயைகளாகும் .இவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட எண்ணங்களாகும்.
இறைவன் இல்லை என்ற வாக்கியத்தை கண்டு அதிர வேண்டாம்.இதன் அர்த்தம் மனிதனால் உருவகப்படுத்தப்பட்ட இறைவன் கூட மாயையே ஆகும்.இதையும் தாண்டி அடைவதே மாயை அற்ற பரம்பொருள்.

அய்யா உண்டு ..

திருநெல்வேலி மாவட்டத்தில்... தென்காசி சாரலில் ... குற்றால தூரலில்... மண்ணுலகையும், மக்களையும் காக்க மலை அடிவாரத்தில் அற்புதமாக வீற்றிருக்கும் பதிதான் நம் அருமையான துளசி தோப்பு பதி... இந்த பதியில் திருவிழாவின் பொழுது மலையின் மீது ஏற்ற படும் திருவிளக்கு அதனை காற்று மழையையும் தாண்டி சுடர் விட்டு எரியும் அழகு பார்ப்பவர் உடலை சிலிர்க்க வைக்கும்,...

வருடம் ஒருமுறை திருநாள் நடத்தி... மாதம் முதல் ஞாயிறு மற்றும் முதல் வெள்ளி கிழமை அய்யாவிற்கு சிறப்பு பணிவிடை, சிறப்பு அன்னதானம்... மற்றும் அய்யாவை நாடி வரும் மக்களுக்கு ஏட்டுப்பிரதியில் கயிறு போட்டுப்பார்க்கும் நம்பிக்கை அன்புக்கொடி மக்களிடம் காணப்படுகிறது. கயிறு விழுந்த பக்கத்தில் உள்ள அற்புத வரிகளைக் கொண்டு அய்யா நம் பிரச்சனை .. பிரச்சனைக்கான தீர்வு மற்றும் பல நிகழ்வுகளை சொல்லுகிறார்...

“பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்”

மற்றும் தீர்க்க முடியாத நோய்கள் , மருத்துவர்களால் கைவிடப்பட்டு இவன் இறந்து விடுவான் என்று சொன்னவனை கூட நம் துளசிதோப்பு அய்யா துளசியும் தண்ணீரும் கொடுத்து தீர்த்து வைக்கிறார்... அங்கு நோய்களால் கஷ்ட படும் மக்கள் அய்யாவின் பாதத்தில் தங்குவதற்கு சத்திரம் போன்றவை அமைத்து உள்ளது கோவில் நிர்வாகம்.. இந்த பதியில் வந்து என் கஷ்டம் தீரவில்லை என்று சொன்ன ஒருவரையும் கண்ணால் காண்பது அரிது.. அனைவரும் துளசி தோப்பு பதிக்கு வாருங்கள் நம் அய்யா வைகுண்டரின் அருள் பெறுவோம் அய்யா உண்டு ...

அய்யா வைகுண்டர்

என் பேரைச் சொல்லி எவரெவர் தான் வந்தாலும் அன்பாக ஆதரித்து அன்னமிட்ட பக்தருக்கு என்னென்ன அபாயம் இடுக்கமது வந்தாலும்! அந்நேரம் நாராயணன் ஆயனங்கே நான் வருவேன்!!!


கண்ட கோவில் தெய்வமாகுமா ?

கண்ட கோவில் தெய்வம் என்று கை எடுத்தால் பலனும் உண்டோ?

இவ்வாறு மக்களை அய்யா வைகுண்டர் வினவுகிறார். இது இறைவனின் வெறும் கேள்வி மட்டுமல்ல தன் பிள்ளைகளின் மேல் கொண்ட பரிதாபமும், கவலையும் கலந்த வெளிப்பாடாகும். சொல் கேளா பிள்ளைகளின் மேல் ஒரு தகப்பன் கொள்ளும் கரிசனம் என்றும் சொல்லலாம் . குழந்தையின் மனம் புண்படாமல் தகப்பன் கூறும் அறிவுரை என்று கூட எடுத்துகொள்ளலாம்.

ஒரு தெய்வ வழிபாடு தான் மேன்மை தரும். தெய்வம் ஒன்றுதான் ஆனாலும் வழிபடும் தெய்வங்களின் எண்ணிக்கை ( மனதில்) அதிகமாகும் போது நம்பிக்கையின் ஆழம் குறைந்துவிடுவது இயல்பு. இறை நம்பிக்கை தான் மனதையும், எண்ணங்களையும்,சொல்லையும் செயலையும், வாழ்க்கை முறையையும் பான் படுத்தி, பதபடுத்தி செம்மைப் படுத்தும். உதாரணமாக, அய்யா வழியின் தலைமைப் பதியாக விளங்கும் சாமிதோப்பிற்க்கு சென்று வந்தால் மன அமைதியும், நோயின்மையும், செல்வச்செழிப்பும் , பேரும் புகழும் இன்னும் சகல வசதி வாய்ப்புகளும் வந்தடையும் என்பது அய்யாவழி அன்புக்கொடி மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல அனுபவபூர்வமான உண்மையும் கூட. யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அதே பதியின் வடக்கு வாசலில் அழுக்கான கிழிந்த உடைகளோடு, தங்கும் வீடின்றி ஆண்டுகளாக வயிற்றுக்காக பிச்சை எடுப்பவர்களும் இருக்கின்றனர். சாமிதோப்பை தேடி வரும் அன்பர்களுக்கு கிடைக்கும் பாக்கியம் , சாமிதோப்பிலேயே தங்கி இருக்கும் பிச்சைகாரர்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?
நம்பிக்கையின் ஆழம் தான் காரணம்.

இனத்துக்கு இனம் இருப்பேன் நான் சுவாமியென்று
மனதில் யாரோவென்று வையாதே என் மகனே
- அய்யா நாராயணர் வைகுண்டருக்கு விஞ்சையாக இதனைச்சொல்கிறார்.

அய்யாவழியை பின்பற்றும் அன்புக்கொடி மக்கள் பிற மதத்தவர்களோடு பகைமை பாராட்டவேண்டாம் என்பதையே இந்த விஞ்சை வெளிப்படுத்துகிறது. அவர்கள் வணங்கும் கடவுளும் நான் தான் என்று அய்யா சொல்கிறார். ஒரு குடும்பத்தலைவன் தன்னை பெற்றவர்களுக்கு தாய் தந்தையர்க்கு மகனாகவும், துணைவியாருக்கு கணவனாகவும், தனது குழந்தைகளுக்கு தகப்பனாகவும், மருமக்களாக வந்தவர்களுக்கு மாமனாராகவும் பேரக்குழந்தைகளுக்கு தத்தாவாகவும் விளங்குவது எப்படி சாத்தியமோ அப்படியே ஈரேழு லோகமும் படைத்த ஆண்டவனுக்கு பல நாமங்களில் / தலங்களுக்கு தக்கவாறும் / மக்களினங்களுக்கும் அவர்கள் செய்யும் தொழிலுக்கும் ஏற்பவும் மாறுபட்டு நிற்பது சாத்தியம் என்பது மட்டுமல்லாமல் ஒரு அத்தியாவசிய தேவை என்றும் ஆகிறது . நாம் வணங்கும் இறைவன் நமக்கு சொர்கத்தை தருவதில்லை. ஆனால் நாம் வாழும் வாழ்க்கை நெறிகள் மற்றும் ஒழுக்கம் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.வெறும் மத மாற்றங்கள் மட்டும் எந்த பிரச்சினைகளுக்கும் விடிவாகாது, முடிவுமாகாது. அய்யா சொல்லும் விஞ்சையின் படி வாழும் வாழ்வே தர்மயுகதிற்கு நம்மை அழைத்து செல்லும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை .

அய்யாவைப்பற்றியும் அகிலத்திரட்டைப்பற்றியும் அய்யா வழியைப்பற்றியும்,மலர இருக்கும் தர்மயுகம் பற்றியும் அறியாத மக்களுக்கு எடுத்து சொல்லுவோம். மக்களின் வாழ்க்கை நெறியினை நேர் படுத்துவோம்.அய்யாவழி என்பது ஒரு மதம் அல்ல , வாழும் நெறி என்று அகில மக்கள் அனைவருக்கும் உணர்த்துவோம். தர்மயுகவாழ்விற்க்கு ஆயத்தமாவோம் .

அய்யா உண்டு

வடக்குவாசல்

தலைமைப்பதியாக திகழும் சுவாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார். முற்காலத்தில் பகவான் வைகுண்ட அய்யா தவம் புரியத் தீர்மானித்தார்.

அதனால் சுவாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

அடுத்த இரண்டாண்டு தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார். மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.

இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன. தலைமைபதியாம் சுவாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார்.

அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர். வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தாண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப் பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.

"நான்'' என்றால் பகவானா கிய அய்யா வைகுண்டரை குறிக்கின்றது. நிலைகண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிகமகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.

பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது. அத்தகைய சிறப்புடைய வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் தவநிலையில் இருக்கிறார்.

வடக்கு வாசலை நம்பி வெற்றி பெற்றதில் இந்த நானும் ஒருவன்தான்.. அதுபோல அய்யாவை நம்பி பிடியுங்கள் மக்களே " நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார். பக்தர்களின் வாழ்வில் மேன்மையும் புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்குவாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்குவாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்

அய்யா

பாட்டனும் பூட்டனும் நான் பரதேசி பிச்சைகாரனும் நான் , ஏழை கோல ஆண்டியும் நான் "

அய்யா வைகுண்டரே இவ்வளவு எளிமைமாய் இருந்தார்.
ஆனால் இன்று நாம்

"நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பாப்போம் என்று வான் (அய்யா ) பெரிது என்று அறியாமல் மாழ்வார்கள் வீண் வேதமுள்ளோர் "

"அய்யா "

அய்யா வழி ஒரு ஜாதி வழியா?

அன்பர்களே இன்றும் அய்யா வழியை பற்றி சரியாக அறியாதவர்கள் கேட்கும் முதல் கேள்வி அய்யா வழி என்பது நாடார் மக்களின் வழியா? என்பதாகும் .

ஏன் இந்த கேள்வி வைகுண்டர் உலகில் சாணார் (நாடார்) குலத்தில் பிறந்தது அவர் தவறா? உலகில் ஜாதி முறையை வைத்தது மனிதன் செய்த தவறாகும்.உலகில் அதர்மம் அதிகமாகும் பொது இறைவன் அவதாரம் எடுக்கிறார் என்பது உலக மக்களின் நம்பிக்கை. அவ்வாறு அவதாரம் எடுக்கும் போது மனிதன் உருவாக்கிய ஏதேனும் ஒரு ஜாதிலேதான் பிறக்க முடியும்.
அந்தப்படியே அய்யா வைகுண்டரும் மிகவும் தாழ்ந்து கிடந்த சாணர் குலத்தில் பிறந்து அவர்களின் குறைதீர்த்தார். ஜாதி என்னும் கொடிய கலியில் சிக்கி பல்வேறு கொடுமைகளை அனுபவித்த மக்களை காக்க அதே தாழ்ந்த ஜாதியிலேயே இறைவன் வைகுண்டமாய் பிறந்தார். ஜாதியை அளிக்க பிறந்த வழி அய்யா வழியாகும்,அதனை ஜாதி வழி என்பது தவறான ஒரு கருத்து ஆகும். ஜாதிக்காக அய்யா வழி உருவாக்க பட்டிருந்தால் ஆரம்ப காலத்திலேயே பெரும் அழிவை கண்டிருக்க வேண்டும் .

"சாதி பதினெட்டும் தன்னால் கேடாகும் வரை
நீதி அழியாதே நீ சாபங்கூராதே"

"சாதி பதினெட்டும் தலையாட்டி பேய்களையும்
வாரிமலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு"

என்று விஞ்சையில் நாராயணர் கூறுகின்றார் இவ்வரியின் நோக்கம் ஜாதிகளை அளிப்பதாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இவ்வாறு கூறிய இறைவன் எப்படி ஜாதியை,ஜாதி வழியை தோற்றுவிப்பார்?

அய்யாவழி சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.

அய்யா உண்டு .

அருள்நூல்

உங்களுக்காய் வேலை செய்ய உலகில் வந்தேன் கண்ணு மக்கா,இரு மனதாய் எண்ணாதே பின் எனக்கு உத்தரம் சொல்வாயே..!
(விளக்கம்)
என் மக்களே உங்களை கொடுமை படுத்திய இந்த கலியிடம் இருந்து உங்களை காப்பாற்ற அனைத்து சக்திகளையும் என்னுள் அடக்கி நானே உங்களுக்காக இந்த கலியில் அகப்பட்டு,அடிபட்டு சோதனைகளை அனுபவித்து,இந்ந கலி எண்ணத்தை கருவறுக்க நானே 6வருடம் தவசு பண்ணி இந்த யுகத்தையும் முடித்து உங்களையும் தூய்மை படுத்தி நீங்கள் என்னை வந்து அடைய சூட்சம புத்திகளையும் (இறைவழி அடையும் முறை)சொல்லி நல்ல மனுக்களை தேர்ந்தெடுத்து உங்களுக்கு என் ஆட்சியான தர்ம யுகத்தில் வாழவைக்கவே வந்தேன் இது உண்மை. இதை விடுத்து வந்திருப்பது (முப்போருள்) இறைவனான வைகுண்டம் என்று அறியாமல் நான் முனிவன் என்றோ,யோகி என்றோ,சித்தனென்றோ,சாதாரண மனிதன் என்றோ நினைத்து இருபுத்தியால்(சந்தேகபுத்தி) என்னை மறந்து யாரோ என்று நினைத்து உன் மனது படி அநியாய பாவங்களை செய்தால் இந்ந கலியுகத்தை அழித்து உன்னிடம் நடுதீர்ப்பு கேட்பேன் நீ சொல்ல முடியாமல் தவிப்பாய் உன்னை கடுநரகத்தில் தள்ளி கதவடைப்பேன்(அருள்நூல்)அய்யா வைகுண்டர்.

அய்யா வழிபாட்டில் தேங்காய் உடைக்காதது என்

அய்யா வைகுண்டர் பலியிடுதல் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்.உயிர்ப் பலிகளை தடுத்து நிறுத்தினார்.தேங்காய் உடைப்பது , எலுமிச்சைபழம் அறுப்பதை கூட அவர் உயிர் பலியாக கருதினார். தேங்காயை முழுமையாக கொடுப்பதன் மூலம் என் உடல் ,உயிர் முழுவதையும் சமர்ப்பித்து விட்டேன் என்ற தத்துவத்தை உணரச் செய்தார்.அதுபோல் கற்பூர ஆராதனைகளும் தேவை இல்லை என கூறினார் .படையல் போடும் பழக்கத்தை நீக்கினார்.

தலைபாகை கட்டுவது ஏன்?

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நீ யாருக்கும் அடிமை இல்லை, துண்டை இடுப்பில் கட்டாதே மகனே என கூறினார் அய்யா.

எனவே தான் அய்யாவழி பிள்ளைகள் கம்பீரமாக தலைபாகை கட்டுகிறார்கள்.

அய்யாவுக்கு சிலை இல்லாதது ஏன் ?

அய்யாவுக்கு சிலை இல்லாதது ஏன் ?

அய்யா வைகுண்டர் கடவுளின் அவதாரம். கடவுளை எப்படி படமாக வரைய முடியும்?
எப்படி சிலையாக உருவகபடுத்த முடியும்?

அய்யா வைகுண்டர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் அவரது உருவத்தை பல தடவை வரைய முயன்றனர் .
ஒவ்வொரு தடவையும் அவர் ஒவ்வொரு மாதிரியாக தோன்றினார்.
கடைசி வரை அவர் உருவத்தை வரைய முடியவில்லை. கலி யுகத்தில் அவர் நிகழ்த்தி காட்டிய மிகப்பெரிய அற்புதங்களில் இதுவும் ஒன்று.
மேலும்
அய்யாவழி தாங்கல்களில் கண்ணாடி வைத்து இருபக்கமும் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருக்கப்படும்.
அய்யாவழி அன்புக்கொடி மக்கள் அனைவரும் அந்த கண்ணாடியை பார்த்து தான் வேண்டுவர்.

இதன் மூலம் “ மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது ” என்ற உயரிய கோட்பாட்டை கண்ணாடி முன் நின்று வணங்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே காண அய்யா வழிவகை செய்தார்.

மக்களே நம் அய்யா சொல்வார்களே...

தினம் ஒரு நேரம் எந்தன் திருமொழி அதனை கேட்டல் பனிவெள்ளம் போலே பறந்திடும் நிசமே சொன்னோம் "

எனவே அய்யா சொன்னது போல தினமும் ஒரு முறையாவது அய்யாவுக்கு விளக்கு ஏற்றி, அய்யா சிவ சிவ சிவ சிவ அரகர அரகர என்ற மந்திரம் சொன்னாலே போதும் தீவினை எல்லாம் பறந்து போடும்.... அய்யா உண்டு

அய்யா உண்டு

பயந்திருந்து நீ பணிவிடைகள் செய்வாயானால் உயர்ந்த குடியாவாய் உயிர் பிழைப்பாய் நீ மகனே"
- அய்யா உண்டு -



அகில வரிகள்...

நாலு மூணு கணக்கு நடுதீர்த்த ஞாயமதும்
மேலெதிரி இல்லாமல் வினையில்லாது ஆண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் யெடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமை தன்னை
காரணமாய் எழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக ஊழ்வினை நோய் தீருமென்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே.

- அகிலம் -

விளக்கஉரை :-

ஏழு யுகங்களாக இந்த உலகுக்கு இடையூறு செய்த பாதகர்களின் பாவக்கணக்கையெல்லாம் தெளித்துப்பார்த்து,
அவர்களுக்கெல்லாம் அய்யா நடுத்தீர்ப்பு செய்த நியாயத்தையும்,
இனியுள்ள தர்மயுகத்தில் எதிரிகளே இல்லாவண்ணம் நல்லாட்சி புரியும் விபரங்களையும், முற்காலத்தில் வேத வியாசர் எழுதி வைத்த ஆகம விதிப்படியே அய்யா வைகுண்டப்பரம்பொருள் இந்த அவனியில் வந்து நடத்துகின்ற அற்புதமான வரலாறுகளையும், காரணக் காரியங்களோடு எழுதி அதை கதைபோல் படிப்போருக்கு, முப்பிறவி வினைகளால் உண்டான நோய்களெல்லாம் உடனே தீர்ந்து, மகத்துவமாய் வாழ்வார்கள் என்று அய்யா இந்த அறிய வரலாற்றை அருளுகிறார்.
- அய்யா உண்டு -

அய்யா வைகுண்டர்

"மாயநினைவு மனதில் நினையாதுங்கோ"
"வைகுண்டா என்று மனதில் நினைத்திடுங்கோ"
- அய்யா வைகுண்டர் -

அகிலத்திரட்டு உரை!!

பேயை எரித்து புதுமை மிகச் செய்ததுவும்

ஆயர் குலத்தை ஆளாக்கி கொண்டதுவும்

சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்

நீண்டபுகழ் தர்மம் நிறுத்தி அரசாண்டதுவும்

பத்தும் பெரிய பாலருக்காக வேண்டி

சத்தழியும் பாவி தடியிரும்பிலும் இருந்து

படுத்தின பாடெல்லாம் பாலருக்காகப் பொறுத்து

உடுத்ததுணி களைந்து ஒருதுகிலைத் தான்வருந்தி

தேவ ஸ்திரிகளையுஞ் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்

பாவக் கலியுகத்தில் பாராத்தியங்கள் பட்டு

நாலு பிறவி நானிலத்திலே பிறந்து

பாலு குடித்தாண்டி பருபதத்தின் மேல்தாண்டி

மனுக்கண் காணாமல் மறைந்தொரு மூன்றுநாளாய்

தானுந் தவமதுவாய் சாயூச்சியமே புரிந்து

நல்லோரை எழுப்பி நாலுவரமுங் கொடுத்து

பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து

வானம் இடியால் மலைகள் இளகிடவும்

கானமது நாடாய் கண்டதுஞ் சூரியனும்

தெற்கு வடக்காய்த் திசைமாறி நின்றிடவும்

ஒக்கவே நாதன் உரைக்கிறார் அன்போரே.

- அகிலம் –

விளக்கம் :-

சாமிதோப்பு வடக்கு வாசலில், அய்யா தவநிலையாக இருந்துகொண்டே
பேய்களை எரித்து. உலகில் பெரும் புரட்சி செய்ததையும், துவாபரயுகத்தில் யாதவகுலத்தோரை எல்லாம் ரட்சித்த விதத்தையும், இந்தக் கலியுகத்தில் சான்றோர்களை எல்லாம் தம்பால் அரவணைத்து பாதுகாத்துக் கொண்டு இருப்பதையும் , வானளாவிய தர்ம சிறப்புகளையெல்லாம் நிலைநிறுத்தி, இந்த நிலவுலகைப் பரிபாலனம் செய்வதையும், முதிர்ந்த நிலையுடைய உயர்வான தம் மக்களுக்காக வேண்டி, மடிந்து போவதையே தம் முடிவாக கொண்ட கலியரசனாகிய பாதகன் இட்ட மிக பெரிய இரும்பு சங்கிலிகளோடு சிறையில் இருந்து கொண்டே அந்த கலி படைகள் செய்த கோரமான கொடுமைகளை எல்லாம் தாங்கிய வண்ணம் இருந்ததையும், ஏகாபரனாகிய இறைவனின் இயல்பான சூக்கும வடிவத்தை விலக்கிவிட்டு நிலவுலக மனிதனை போன்றதொரு தோற்றத்தை வருவித்துக்கொண்டு துவாபரயுகத்தின் இறுதியில் அடுத்து வர இருக்கும் கலியுகத்தில் தேவலோகதாரையெல்லாம் பூவுலகில் பிறவி செய்யவும் அவர்கள் மூலமாக கலியுகத்தை தர்ம சாம்ராச்சியமாக மாற்றவும் எண்ணம்கொண்டு அயோக அமிர்தகங்கை அருகில் தேவலோகதாரை பூவுலகில் பிறப்பிக்க பயன்படுத்திய சப்தமாதர்களையும் கலியுகத்தில் பிறப்பித்து, பாருலக மக்கள் எல்லாம் பயன்பெறும் வகையில் அந்த சப்தமாதர்களை ஆட்கொண்டதையும், மீண்டும் இந்த பாவம் சூழ்ந்த கலியுகத்தில் பற்பல தொல்லைகளை அனுபவித்து இல்லறதோனாவும், பிரம்மசாரியாகவும், பெரும் தபோதனனாவும், துறவியாகவும் நான்கு நிலைபாடுவுடையவராக நானிலத்தில் காட்சியளித்துகொண்டே, ஆண், பெண், என்ற உணர்வுகளை தாண்டி, பிறவி நிலையை கடந்து, மனிதர்களால் உற்றுநோக்கியோ, உணர்ந்தோ கொள்ளமுடியதா நிலையில் மூன்று நாட்களாக அனைத்தும் தாமகிய தவமுமாகி, நல்லோர்களின் ஆன்மாவை விழித்தெழச் செய்து, அவர்களுக்கு அன்பு, பண்பு, ஈகை, தியாகம், ஆகிய நான்கு வரங்களையும் அருள் பாலித்து, பொல்லாத பாதகர்களையெல்லம் நரகத்தில் மூழ்கிடச்செய்வதும் , ஆகாயத்தில் இருந்து விழும் இடியால், மலைகள் இளகி போவதையும், சூரியன் தெற்கும் வடக்குமாக திசைமாறி உதிக்கப்போவதையும் இத்தகையது அத்தனையும் அய்யா இயல்பாக இதன் மூலம் சொல்லுகிறார் அன்பர்களே!!!!!

- அய்யா உண்டு -

சகாதேவ சீடரின் தன்னடக்கம் :-

அய்யா உரைக்க அன்போர்களே தங்கள்முன்னே
மெய்யாய் எழுதி விவரிப்பேன்நான் என்பதெல்லாம்
ஆனை நடைகண்டு அன்றில் நடையதொக்கும்
சேனை சரிவதென்ன சிற்றெறும்பு பக்தியென்ன
குயில் கூவகண்டு கூகைக் குரலாமோ
மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்
மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யானடியேன்
நாலுமூணு யுகம் நடுத்தீர்க்க வந்தபிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவேன் என்பதொக்கும்..


விளக்க உரை :-


அண்டசராசரங்களைப் படைத்து, அவை அனைத்துக்கும் பெற்றவனாய் இருந்துகொண்டிருக்கும் தந்தையாகிய தயாபரன், வல்லாத்தான் வைகுண்டப் பரம்பொருள் சொல்வதைக்கேட்டு, அதை அப்படியே அன்பர்களின் முன்னிலையில், அடியேன் எழுதி சமர்ப்பிப்பேன் என்பது யானையைப் போல் நடப்பதற்கு அன்றில் பறவை ஆசைப்படுவதற்கு ஒப்பானதாகும்.

எறும்புகளின் அணிவகுப்பு, போர்வீரர்களின் அணிவகுப்புக்கு இணையாக முடியுமா ?
குயில் கூவுகின்ற தென்று அதைப்போல் கூவை குரல் கொடுத்தால் அது சரியாக இருக்குமா ?
மயில் ஆடுவதைக் கண்டு வான்கோழி தன்னையும் மயில்போல் பாவித்துக்கொண்டு ஆடினால் நன்றாக இருக்குமா ?
தேனீக்கள் சேமித்து வைத்து இருக்கும் தேனைச் சுவைத்த கடந்தைகள், தாமும் அந்த ஈக்களை போல்தானே இருக்கிறோம், ஆகவே நாமும் அந்த ஈக்களைப்போல் தேனைச் சேமிக்கலாம் என்றெண்ணி கூடுகட்ட முனையும் கடந்தையின் கதைப்போல, இவ்வுலகைப்படைத்து அதில் ஏழு யுகங்களை நடத்தி அவ்யுகத்தில் இருந்தோருகேல்லாம் நியாயம் நடுகேட்டு, நடுதீர்ப்பு வழங்க வந்த லோகநாயகனாகிய அய்யாவின் ஒப்பரிய சரிதையை, எழுத்தென்றால் என்னவென்று அறியாத நான் எழுத முடியுமா !!!!

- அய்யா உண்டு -

அகிலதிரட்டு உரை:-

எம்பிரான் ஆன இறையோன் அருள்புரிய
தம்பிரான் சொல்ல தமியேன் எழுதுகிறேன்
எழுதுவேன் என்பதெல்லாம் ஈசன் அருள்செயலால்
பழுதொன்றும் வராமல் பரமேசுவரி காக்க
ஈசன் மகனே இயல்பாவாய் இக்கதைக்கு
தோசம் அகல குழாமல் வல்வினைகள்
காலைக் கிரகம் கர்மசஞ்சலம் ஆனதுவும்
வாலைக் குருவே வராமலே காரும்
காரும் அடியேன் கவ்வை வினைதீர
காரும் அடியேன் மனதில் குடிகொளவே
தர்மயுகமாக்கி தாரணியை ஆளுதற்கு
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகாது இருக்கும் தர்மஅன்பு உள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்
வகுத்த பரமனுக்கும் மாதா பிதாவுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே..


விளக்க உரை:-


கடவுள் அடியேனுக்கு அருளிய கிருபையினால்அந்தக் கடவுளே எளியோனாகிய என்னிடம் சொல்வதை உணர்ந்து இயன்ற மட்டும் எழுதுகிறேன். வறியவனாகிய நான், எழுதுவேன் என்பதெல்லாம், அதை அருளும் இறைவன் இந்தச்சிறியோன் மேல் கொண்டுள்ள நம்பிகையே ஆகும். என் எழுத்தில் பிழையேதும் ஏற்பட்டால் லோகமாதாவாக இருந்து கொண்டிருக்கும் தயாபரகியானாகிய அய்யாவே காத்தருள வேண்டும்.

ஆதிப்பரப்பிரம்மாகிய அய்யாவிலிருந்து வெளிப்படும் நாதமும், அழகும் இந்தச் சரிதைக்கு இயல்பாக அமைய வேண்டும். கேடுகள் விலகவும், கொடிய வஞ்சனைகள் அகலவும், கால மாறுதல்களை ஏற்படச் செய்யும் கோள்கள், முன்பிறவி பிறாப்தத்தால் விளைவிக்கும் துன்பங்கள் தொலையும், சர்வசக்தி வாய்ந்த ஜெகத் குருவாகிய அய்யாவே ரட்சித்து அருள வேண்டும்.

என் மனதினுள் துன்பம் என்பதே அணுகாத நிலையில் எம் அகலத்தில் எல்லாமுமாகிய அய்யா நீவிர் குடி கொள்ள வேண்டும். இந்த உலகத்தைத்
தர்மச்சீமையாக்கி, அந்தத் தர்ம ராச்சியத்தை அரசுபாலிப்பதற்காக, இந்தப் பாவக்கலியுகத்தில் ஆதிமூலப் பரம்பொருளாகிய இறைவன், அய்யா வைகுண்ட பரம்பொருளாக வருகை தந்திருக்கும் வான்புகழும் வரலாற்றை, அழிவில்லா நிலை பொருந்திய தர்மவான்களான அன்பர்களின் முன்நிலையில், தக்க நெறிமுறைகளோடு இந்த அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஆகமத்தை அய்யாவே அருளுகிறார்.

இந்த ஆகமத்தை அருளி, எனக்குக் குருவாக இருந்து எழுத வைக்கும் அய்யா வைகுண்டப் பரம்பொருளையும் இப்பேறு பெற என்னை இவ்வுலகில் ஈன்றெடுத்த தாயையும், தந்தையையும் பணிவோடு வணங்குகிறேன்.

- அய்யா உண்டு -

அகிலதிரட்டு உரை:-

யாருக்கெல்லாம் நாமம் கொடுக்கும் தகுதி உள்ளது????????
யாரெல்லாம் நாமமிட்டால் நொம்பலங்கள் தீரும்.... அய்யா சீசன்மாருக்கு இவ்வாறு சொல்லுகிறார்..
.........
எறும்பு முதல் எண்ணாயிரப்பட்ட மிருகப்பிறவி செய்து இருப்பதால், வாய்பேசாத மிருகத்தை தள்ளி எந்தெந்த சாதி வாய்பேசுமோ அதிலே ஐந்து ஆணானாலும் ஐந்து பெண்ணானாலும் அவரவர் தேவிமார் முகம் பார்த்து பேசினதே அல்லாது வேறு தேவிமார் முகம்பார்த்து பேசினதேயில்லை என்று ஆண்பிள்ளைகளும்; அவரவர் ஆம்படையானத்தள்ளி இன்னொரு முகம் பார்த்து பேசவில்லை என்று ஐந்து தேவிமார்களும் கொடி மரத்தில் ஐந்து நேரம் சத்தியம் செய்து நாமம் கொண்டு இடச்சொல்ல,............ இந்தப்படி தானம் பண்ணிச் சத்தியம் செய்து நாமம் கொண்டிட நொம்பலம் இதமாகிப்போகும். இதை சீசர் எல்லோரும் நகர் எல்லாம் இந்த ஒழுங்கைத் தெரியச் சொல்லவும். இன்னும் கணக்கு நிரம்பயிருக்கிறது! அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா..

எறும்பு முதல் யானை உள்ள எண்ணாயிரம் மிருகப்பிறவி செய்திருக்கிறேன், இவற்றில் வாய்பேசாத மிருகத்தை (நல்லது கெட்டது ஆராயதெரியாத, ஆறாம் அறிவு இல்லாத, சிந்தனை செய்யும் ஆற்றல் இல்லாதவைகளை தள்ளி) எந்தெந்த சாதி வாய் பேசுமோ - வாய் தானாக பேசாது, அதை மனம் இயக்கினால்தான் பேசும், மனம் தானாக இயங்காது அனுபவ அறிவும் சிந்தனை சக்தியும் வேண்டும், அப்படிப்பட்ட ஆறறிவுள்ள மனிதர்களில் யார் ஒருவர் அவரவர் தேவிமார் (மனைவிமார், அவரவரின் உடைமையைத்தவிர பிறரின் பொருட்களின் மீது ஆசை கொள்ளாதவர்கள்) முகம் - (ஆசை) பார்த்து பேசியது (இச்சைகொள்ளல்) அல்லாது வேறொருவரின் முகம் பார்த்து பேசாத ஆணும் பெண்ணுமே பிறருக்கு நாமம் இடும் தகுதி உள்ளவர்கள்... அய்யா வைகுண்டர்.
ஆக, அன்பு குடிகொண்ட அறிவு உள்ள கண்ணு மக்கா! புரிகிறதா? அய்யா யாருக்கெல்லாம் அந்த தகுதியை கொடுத்துள்ளார் என்று! "கண்டதெல்லாம் தெய்வம் என்று கைஎடுத்தால் பலனும் உண்டோ?" இது இங்கேயும் பொருந்தும்........... அய்யா உண்டு, ஆட்டுவானும் நீயே! இங்கே ஆடுவதும் நீயே! வைகுண்டா சரணம்.

கடம்பன் குளம் கொடிமர கயிறு

சாமிதோப்பு பதியில் 10 நாள் திருவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டது. அப்போது கொடிமர நூல் கயிறு எப்படி தயார்படுத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. உடனே அய்யா கடம்பன்குளத்தை சேர்ந்த என் மக்கள் நூல் கயிறு கொண்டு வந்து கொடியேற்றத்திருநாளை நடத்தித்தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
அய்யா அப்போது சொன்னது போல் அன்று முதல் இன்று வரை தை, வைகாசி, ஆவணி திருவிழாக்களுக்கு கடம்பன்குளத்தில் இருந்து கொடிக்கயிறு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது

அகிலம்

ஒரு புத்தியாய் உள் என்னை கொண்டோருக்கு புது புத்தி ஈந்து பூலோகம் ஆழ வைப்பேன்