ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

கலியன் கேட்ட வரங்கள்

மாயவனாரின் திருமுடி, சக்கரம் மற்றும் இரதம்.
சிவனுடைய வெண்ணீறு
அந்தணரின் பிறப்பு
சக்திக்குரிய வலக்கூறு
சிவனின் மூல மந்திரம்
சக்தி மூல மந்திரம்
தவத்துக்குரிய மூல மந்திரம்
பிரம்ம தேவரின் மூல மந்திரம்
நாராயணரின் மூல மந்திரம்
இலட்சுமியின் மூல மந்திரம்
தெய்வ சக்திகளின் மூல மந்திரம்
காலனின் மூல மந்திரம்
காமாட்சி மூல மந்திரம்
கன்னி சரஸ்வதி மூல மந்திரம்
காளி தன் மூல மந்திரம்
கணபதியின் மூல மந்திரம்
சுப்பிரமணியரின் மூல மந்திரம்
கிங்கிலியர் தன் மூல மந்திரம்
ஆயிரத்து எட்டு அண்டத்துக்குரிய மூல மந்திரம்
கூடு விட்டு கூடு பாயிம் வித்தை
நாட்டை அழித்து நகரில் கொள்ளை அடித்தல்
உலகம் அனைத்தையும் தூங்க வைக்கும் தந்திரம்
அயர்த்தி மோகினியின் கரு (உற்பத்தி விதி)
ஆவடக்கு மோகினி உருவாக்கும் வித்தை
அழைக்க வெகு மோகினியை கட்டுப்படுத்தும் இரகசியம்
ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் தந்திரம்
கோள்களின் செயல்பாடுகளை பயன்படுத்தி குடிகெடுக்கும் தந்திரம்
உலகம் அனைத்தும் இயங்காவண்ணம் ஏகம் தனை ஸ்தம்பிக்கச்செய்யும் வலிமை
மந்திர வித்தைகள் மற்றும் அதன் கரு
பூசை விதிமுறைகள்
புவனச்சக்கரத்தின் இயக்க கட்டுப்பாடு
தீட்சை விதிமுறைகள் மற்றும் சிவ விதி
நீர் மற்றும் கனல் ஆகியவற்றின் மேல் மிதக்கும் வித்தைகள்
கலையை ஆட்சி செய்யும் வித்தை
மிருகங்களை கட்டுப்படுத்தி வேலை வாங்கும் வித்தை
வாதைகளை கட்டுப்படுத்தும் திறமை
அட்ட-கர்மங்களிடத்தும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை
மொட்டைக் குறளியை ஏவல் செய்யப் பணிக்கும் உரிமை
மந்திரஜாலம், இந்திரஜாலம் மற்றும் மாய்மாலத் தந்திரம்
தனக்கு இடையூறு செய்யும் கோள்களை அறிய உதவும் குளிகை
வரும் நோய்களை தீர்க்க வைத்திய சாஸ்திரம்
தந்திரத்துக்கான சாஸ்திர வகைகள்
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் வடிவம்
தனது முற்பிறப்பை அறியும் அறிவு
தேவர்களின் பிறப்பு இரகசியம்
பறக்கும் குளிகை
சிவனை அழைக்கும் குளிகை
அனைத்தையும் கண்காணாமல் மறைக்கும் குளிகை
திருமாலை அழைக்கும் குளிகை
மாயாஜாலம் செய்யும் குளிகை
சக்தியை வரவளைக்கும் குளிகை
வேதங்களை வரவளைக்கும் குளிகை
காளிதனை வேலைவாங்கும் குளிகை
கூளிப்பேய் கணங்களை அழைத்து ஏவல் செய்யப் பணிக்கும் குளிகை
தேவரையும் வானவரையும் வரவழைக்கும் குளிகை
மூவரையும் அழைத்து வேடிக்கை காட்டும் குளிகை
தனக்கு பழி செய்தவரை வெல்லும் குளிகை
தலைவிதி முதலியவற்றை அறியப் பயன்படும் குளிகை

அய்யாவின் ஐம்பதிகள் (ஐந்து பதிகள்) எவை??? சரியான பதில் அளித்தவர்:

1 - சுவாமிதோப்பு பதி - தலைமை பதி 
2 - முட்டப்பதி - அய்யா விஞ்சை பெற்ற பதி.
3 - அம்பல பதி (பள்ளத்து பதி) - தொண்ணூற்று ஆறு தத்துவங்களை கொண்ட பதி. 
4 - பூப்பதி - பூமடந்தை மணந்த பதி.
5 - தென்தாமரைகுளம் பதி - ஏடு பாதுகாக்கப்படும் பதி.

வியாழன், 16 ஏப்ரல், 2015

தின வழிபாடு

அய்யா நாங்கள் அறிந்தறியாமல் செய்வதெல்லாம்
அய்யா பொறுத்துக்கணும்
அய்யா பொறுத்து 
அய்யா மாப்பு தந்து
யாதொரு நோய் நொம்பலம் இல்லாமல்
யாதொரு சஞ்சலம் இல்லாமல்
அன்னமும் வஸ்திரமும் தந்து
அய்யா காத்து இரட்சிக்கணும்
அய்யா நாங்கள் ஓன்று சொல்ல ஓன்று கேட்கணும்
ஓன்று சொல்ல ஓன்று கேட்டு ஓன்று சொல்ல ஓன்று கேட்டு
ஒன்றுக்கு ஓன்று ஒரு நிரப்பாய் இருக்கணும்.
அய்யா நல்ல புத்தி தரணும்
அய்யா பொறுமை தரணும்
தேசம் மயம் ஏகம் சிருஷ்டித்த மகாபர இந்திர நாராயணர்
அய்யா நிச்சயித்த படியல்லாமல் மனுஷன் நிச்சயித்தபடி இல்லை
அய்யா உண்டு

அய்யா தந்த அகண்ட நாமம்

கலியின் கொடுமையால் வலியவன் தனது அற்ப சந்தோசதிற்காக எளியவனை கொடுமை செய்து ஆட்டிப் படைக்க மனிதன் தனக்குள் பிரித்துக் கொண்டது தான் சாதிகளாகும். செய்யும் தொழிலின் அடிப்படையில் தோன்றிய இந்த பிரிவினைகள் பின்னாளில் மனித இனத்தில் நிரந்தரமாக பிரிவினையை மட்டுமன்றி பேதங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தின.
சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை ,உயிரினங்கள் அனைத்தும் ஒரே பரம்பொருளின் பல்வேறு வகையான வெளிப்பாடுகளே என்பதை உலகிற்கு எடுத்துகூறவே அய்யா வைகுண்டர் தொட்டு நாமம் சாற்றும் வழக்கத்தை அய்யா வழி பதிகளிலும் தாங்கல்களிலும் புகுத்தினார்.
உயிரினங்கள் கொண்டுள்ள உடலின் ( மண்ணில் தோன்றி மண்ணில் மறையும்) நிலையின்மையை உணர்த்தும் வண்ணம் மண்ணைப்பயன் படுத்தினார்.
உள்ளத்தின் தூய்மையை குறிப்பதற்காக வெள்ளை நிற மண்ணை நாமமாக பயன் படுத்தினார்.
ஊனக்கண்களுக்கு எட்டாத இறைவனை அறிவதற்காக ஞானக்கண்ணாக ஜோதி வடிவத்தில் நாமத்தை கொடுத்தார்.
கையில் நான்கு விரல்களுக்கும் ஈடு கொடுக்கும் வலிமை மிக்க ஐந்தாவது விரலான கட்டை விரலால் நாமத்தை இடும் படி வைத்தார்.
தாழ்ந்த சாதிகாரர்களாக கருதப்படும் மனிதர்களைத்தொட்டாலோ , நெருங்கினாலோ அது தீட்டு என்றும், தோஷம் என்றும்,பாவம் என்றும் மேல் சாதிக்காரர்களால் கருதப்பட்ட காலம் அது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் அடிமையாக எண்ணி சாதிக்கொடுமை பேயாக தலைவிரித்து ஆடிய நேரம் அது. இன்றும் பல கோவில்களில் பூஜை செய்வோர்கள் திருநீறையும்,தீர்த்தத்தையும்,முத்திரியையும் பக்தர்களின் கைகளில் படாமல் போடும் வழக்கம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் வைகுண்ட பரம் பொருளோ தாழ்ந்தவரை தற்காக்கவந்தார். நீசர்களிடம் சிக்கிக் கொண்டு படாத பாடுகளை அனுபவித்த சான்றோர்களை விடுவித்து நற்கதி அளிக்க வந்தார்.
பாலோடு நீரை தொடர்ந்து சேர்த்துகொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் பாலானது நீராகிவிடும். அதுபோலவே நீரோடு பாலை சேர்த்துகொண்டிருந்தால் நீரும் ஒரு கட்டத்தில் பாலாக மாறிவிடும். இதே தத்துவம் தான் இங்கே பயன்படுத்தபடுகிறது. பௌதிகத்திலும் உயிரியலிலும், சவ்வூடு பரவல் என்று ஒரு நிகழ்வைப்பற்றி யாவரும் படித்திருப்பீர்கள். இரு வேறுபட்ட அடர்த்தி கொண்ட ஒரே திரவப்பொருள் ஒரு சவ்வினால் பிரிக்கப்படும் போது ஏற்படும் மாற்றம் தான் அது. இரண்டு புறமும் உள்ள திரவமானது அதன் அடர்த்தி சமமாகும் வரை சவ்வின் வாயிலாக ஊடுருவிக்கொண்டே இருக்கும். காற்றும் , நீரும் அடர்த்தி அல்லது அழுத்தம் அதிகமான இடத்திலிருந்து அடர்த்தி அல்லது அழுத்தம் குறைந்த இடத்திற்கு செல்வது போலத்தான் என்றும் குறையாதஇறைவனின் அருள் தவ வலிமையும் மனவலிமையும் குறைந்த மக்களிடம் சென்று சேருகிறது.
தாழ்ந்தவன் தொட்டால் தீட்டு வரும் என்ற நிலைமையானது மாறி, எல்லாம் வல்ல ஏகபரம்பொருளாம் வல்லாத்தான் வைகுண்டர் தொட்டு நாமம் சாற்றும் போது இவருடைய தவ வல்லமை அவர்களுக்குள் ( மனிதர்களுக்குள் )சென்று மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த தொட்டு நாமம் சாற்றுதல் இன்றும் பதிகளிலும், தாங்கல்களிலும் அய்யாவின் மேல் நம்பிக்கை கொண்ட மனிதர்களுக்கு ஒரு மன வலிமையைத் தருகிறது. புத்துணர்ச்சியை தருகிறது. புத்துயிரளித்து மனிதனை மாமனிதனாக்குகிறது என்பதில் ஐயமில்லை. இங்கே சாற்றப்படும் நாமம் அய்யா தந்தது எனவே அது பெரிய நாமம் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
தமிழில் நாமம் என்ற சொல் பெயர் என்ற பொருள் பெறும். அய்யாவின் பிள்ளைகளாகிய நாம் அய்யாவின் நாமம் சூடி பெயரோடும் புகழோடும் வாழ்ந்து காட்டுவோம்.
வாழ்க அய்யா நாமம்
வளர்க அய்யா தந்த நாமம்
அய்யா உண்டு.

வீரத்தோடும் மானத்தோடும் உயிர்வாழ்வோம்

குட்டைஎடு என்றிடவே கூடாதென வுரைக்க
தட்டினான் வைகையிலே தலையற்று வீழ்ந்ததுவே
ஆனைதனை விட்டு அரசனந்த சோழனமன்னன் 
சேனைத்தலைவர் சிறந்த சான்றோர்கள் தம்மில்
கொன்றான் ஒருவனையும் குளக்கரையில் அம்மானை
பின்னால் ஒருவனையும் பிடித்து கொண்டு வாருமென்றான்
குட்டை எடு என்று கூறினான் மாபாவி
திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சன்றோர்
முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான்
இன்னமிந்த குட்டை யாங்கள் தொடோம் என்றனராம்
பின்னுமந்த சோழன் பிடித்து ஒருவன் தனையும்
கொன்றான் காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி "
- அகிலத்திரட்டு அம்மானை
கலிநீசன் கொடுமையால் வைகை ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காது பெருக்கெடுத்து ஓடுகிறது .சோழமன்னன் பலவிதங்களில் முயன்று பார்த்தான். மக்களை அழிவினின்று காப்பாற்ற முடியவில்லை . கவலை தான் மிஞ்சியது. அப்போது மந்திரிமார்களில் ஒருவன் அந்த சோழ மன்னனுக்கு ஒரு புத்திமதி சொன்னான். " மன்னா இந்த வைகை யார் வந்து தடுத்து நிறுத்தினாலும் அது நிற்காது. சான்றோர் கள் வந்து இந்த பிரம்பு கூடையில் மண்ணெடுத்து வைத்தால் மட்டுமே இந்த அடங்கா வெள்ளம் கட்டுப்படும் என்று சூதான்யமாக சொன்னான். மன்னனும் உடனே கலியின் தாக்கத்தால் யோசித்து கூடப்பார்க்காமல் உடனே அந்த சான்றோர்களை கொண்டு வாருங்கள் என்றான். சேவகர்கள் உடனே சென்று சான்றோர்களை இழுத்து கொண்டு வந்தார்கள். " கூடையிலே மண்ணெடுத்து வைகை ஆற்றை அடையுங்கள் என்று ஆணையிட்டான். உடனே மானமுள்ள சான்றோர்கள் " மன்னா எங்களுக்கு எந்த வேலை சொன்னாலும் செய்கிறோம் ஆனால் நாங்கள் கூடையில் மண்ணெடுத்து சுமக்கமாட்டோம்' என்று பணிவாக மறுத்துப் பேசினர். மன்னனுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. நான் சொல்வதை நீங்கள் மறுத்து பேசுவதா? என்று கூறி தனது சேவகர்களிடம் " உடனே இவனை இந்த வைகை கரையில் அவன் கழுத்தளவிற்க்கு குழி தோண்டி அவனை அதில் புதைத்து பட்டது யானையை விட்டு தலையை இதறி விடுங்கள் என்று ஆணையிட்டான்.
ஒருவன் இறந்தபின்னால் சான்றோர்களில் மற்றவரை கூடை எடு என்று உத்தரவிட்டான்.
உத்தரவிற்கு சான்றோர்கள் அடிபணியவில்லை. மாறாக முன்னிறந்த எங்கள் சகோதரனை விட நாங்கள் மோசம்மில்லை என்று இறுமாப்போடு ( வீரத்தோடு)கூறினார். முதல்வனைப்போலே இரண்டாவதும் ஒருவனை தலையை இடறும் படி மன்னன் உத்தரவிட்டான். நாராயணனுக்கும் சப்தகன்னியர்க்கும் பிறந்த ஏழு சான்றோர்களில் இருவரை சோழ மன்னன் கொன்றுவிட்டான். இப்போது நாராயணர் தான் பெற்ற பிள்ளைகளைக்காக்க சொக்கராக சமைந்தார். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படியும் பட்டார் மண்ணேழும் அளந்த மாயன். ஐவரைஅழிவினின்றும் காத்துக்கொண்டார்.
உயிர் போகும் என்றறிந்தும் இந்த காரியத்தை செய்ய மாட்டேன் என்று உறுதியாக இருந்ததும் , உடன் பிறந்த சகோதரர்கள் உயிர் கண்ணெதிரே பறிக்க பட்டதை கண்ட பின்னரும் உறுதிபட நின்ற வீரம் தான் ( மானம் தான் ) அந்த ஆண்டவனையும் கீழிறங்கி வந்து மண்கூடையை தூக்கி தலையில் சேறு வழிய மண் சுமக்க வைத்தது.
"மானமாக வாழ்ந்திருந்தால் மாழும் கலி தன்னாலே "
என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்வதும் இதனை த்தான்.

வீரத்தோடும் மானத்தோடும் உயிர்வாழ்வோம் பூமியில்.
மானத்தோடு வாழ்வோரே வைகுண்டம் காண்பர்.
அய்யா உண்டு

பெற்றதைக்கொண்டு பெருமையுடன் வாழ்வோம்.

ஆதியை தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதையாலே சீவனுக்கு இடறும் பெற்று
வாரிய மூணு கோடி வரமது தோற்றுபின்னும் 
மூரியன் மூணுலோகம் முழுதுமே அடக்கி ஆண்டான்.
-அகிலத்திரட்டு அம்மானை
இராவணன்சிவபெருமானை வேண்டி கடும் கடும்தவமிருந்து கயிலாயதிற்கேசென்று நாலரை கோடி வரங்களை பெற்றான் .
கயிலாயம் செல்லும் வழியில் மகாலக்ஷ்மியை சபலத்தோடு பார்த்ததினால் உயிரழிவிற்கான சாபமும் பெற்றான்.
அளவிற்கு அதிகமான வரங்களை பெற்றதினாலும், சலப எண்ணம் கொண்டதினாலும், மறதியை (Memory Loss) காரணமாக்கி மகாவிஷ்ணு இராவணன் பெற்ற 3 கோடி வரங்களை செயலிழக்க செய்தார். வெறும் ஒன்றரை கோடி வரங்களோடு பூலோகம் வந்தான்.
தனது மூர்க்க அரக்க குணத்தால் மூன்று லோகங்களையும் அடக்கி ஆண்டான்.
இராவணன் தன்னைக்கொல்ல இராமபாணங்களோடே
சிராமராய் மாயன் தானும் தசரதன் தனக்கு தோன்ற
விராகன மாது சீதை வில்லோடு உதிக்கத்தேவர்
மராமரக்குலங்களாக வந்தனர் புவியின் மீதே.
-அகிலத்திரட்டு அம்மானை
இராவணனின் அநீத அரக்க ராஜ்ஜியம் இப்படியாக ஒரு அகால முடிவுக்கு வந்தது.
எல்லாம் வல்ல இறைவனே விதி என்னும் முடிச்சை போட்டு விளையாட்டை தொடங்கி பின்னால் அதனை அரவமில்லாமல் அவிழ்த்தும் விடுகிறான்.
விதியைஅறியாத மக்கள் அழுது, புலம்பி, ஆர்ப்பரித்து,குதித்து, கொண்டாடி,கொந்தளித்து மாள்கிறார்கள். சிலருடைய வாழ்வும்,அழிவும் மனித இனத்திற்கு பாடம் புகட்டுவதாகவே இருக்கிறது.
எவ்வளவு பெற்றோம் என்பதல்ல முக்கியம். பெற்றதை வைத்துகொண்டு எப்படி பேரோடும் புகழோடும் வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்.
அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா அரகரா அரகரா
அய்யா உண்டு.

நமது வாழ்க்கையை யார் தீர்மானிப்பது ? கடவுளா ? சூழ்நிலையா ? இல்லை நாம் தானா ?

விலங்குகளைப்போல் கடவுள் மனிதனையும் படைத்து சக்தியும், புத்தியும் , ஞானமும் கொடுத்து அவற்றை பயன்படுத்தி பிழைத்துக்கொள்ளும்படி விட்டு விடுகிறார். நாம் அறிவையும் முன்னோரின் அனுபவத்தையும் முறையாக பயன்படுத்தாமல் நம் வாழ்வை நாமே சீரழி த்துக் கொள்கிறோம். பொறாமையும் வஞ்சகமும் கொண்ட நமது சூழ்நிலை நம்மை வாழ விடாமல் பின்னோக்கி இழுத்து தான் மகிழ்ந்து கொள்கிறது .
நமது வாழ்க்கை ஒரு மேடையில் நடக்கும் நிழற்கூத்து தான்.
நமது வேஷத்தையும் நடிப்பின் திறமையையும் நாம் தீர்மானிக்கிறோம் . பின்னால் திரையாக இருப்பது இந்த சமூகம்.ஒளியாக இருப்பது இறை அருள்.
இங்கே ஒளி (இறை அருள்)சரியாய் இல்லாதபோது நம் வாழ்வு இருட்டாகி போகிறது.
நாம் ஒழுங்காக ஆடவில்லை என்றாலும் ( மதி ) அது தோல்வியான வாழ்க்கை யாகிவிடும்.
திரை (சமூகம் ) நல்லதாகவும் ஒழுங்கானதாகவும் இல்லாவிட்டாலும் நமது முயற்சி தோற்று போகும்.
ஒளியின் அலை வரிசைக்கேற்பவும், திரையின் அசைவுக்கேற்பவும் நாம் ஆடும் போதுதான் கூத்து சிறப்பாகிறது. வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. இந்த குழப்பத்தில் ஜாதகம், வாஸ்து, பெயர் ராசி, எண் ஜோதிடம் , ராசிக்கல் , பில்லி சூன்யம் , நோய் பங்கு பெறுவது தவிர்க்க முடியாதது.
இவைகளை எல்லாம் வெல்லும் ஒரே சக்தி அந்த இறைவன் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மனம் ஏற்று கொள்ள மறுக்கும். காரணம் கலியுகம் மற்றும் கலியினால் ஏற்பட்ட மாயையின் தாக்கம்.
நான் நீயே அல்லாமல் நடப்பு வேறு இல்லையே - என்று அகிலத்திரட்டு அம்மானை.யில் அய்யா நாராயணர் வைகுண்டருக்கு வழங்கும் விஞ்சை பகுதி யில் சொல்லி இருக்கிறார் . இதன் உட்பொருளாவது விதியும் மதியும் இணைந்து தான் மனித வாழ்வை தீர்மானிக்கின்றன. மதியை நெறிபடுத்த நல்ல நூல்கள் துணை வேண்டும். ஒரு புத்தியாகி உள்ளன்பு கொள்ளும் போது நாம் புது புத்தி பெற்று பூலோகம் ஆள்வோம் என்பதில் ஐயமில்லை.
அகிலதிரட்டை அன்றாடம் வாசிப்போம் .விஞ்சை கற்போம். விதியை வசப்படுத்துவோம். கலியை வெல்வோம். சமதர்ம சமுதாயம் காண்போம் .
அய்யா உண்டு.

தெய்வச்சான்றோர்களும் பனைமரமும்

திருமாலின் சூழ்ச்சியால் சான்றோர்களை பெற்றெடுத்தவுடன் சப்தகன்னிமார்கள் நாணம் கொண்டு மழலை களை போட்டுவிட்டு காட்டில் தவம் செய்ய சென்றதால் நாராயணன் தேவசங்கங்களை எல்லாம் கூட்டி அழைத்து , சிவன், பிரம்மா முதலாக அனைத்து தெய்வங்களும் பிறந்த குழந்தைகளுக்கு ஆளுக்கொரு நாமமிட்டு வாழ்த்தினர் . சரசுவதி தாயார் தாலாட்டு பாடினார் . பின்னர் குழந்தைகளுக்கு சேனை கொடுக்க வேண்டும் என்றெண்ணி வானலோகத்தின் அமிர்தத்தை கொன்டு வாருங்கள் என்று இரு தேவர்களை அனுப்புகிறார் இறைவன்.அவர்கள் இருபேரும் அந்த வானலோகத்தின் அமி்ர்தத்தை தேடி வைகுண்டம் வருகிறார்கள்.ஆனால் அங்கு அமிர்தத்தை காணாமல் இது என்ன மாயம் என்று வியத்து திகைத்து நின்றார்கள். மீண்டும் அங்கும்,இங்கும் தொடர்ந்து தேடுகிறார்கள் .அப்போதும் அவர்களால் அமிர்தத்தை காணமுடியவில்லை. ஆனால் அங்கு இரு அந்தணர்கள் ( ஆணும் பெண்ணும்) அமிர்தத்தை குடித்து கொழுத்தத்தோடு நில்லாமல் மீதமுள்ள அமிர்தத்தை மேனியெங்கும் அள்ளி பூசி சந்தோசமாய் கூத்தாடிகொண்டிருப்பதால் உடல் முழவதும் தேவாமிர்தம் ஓட்டி இருப்பதை பார்த்தார்கள். உடனே அவர்களை தட தடவென அவர்கள் இருவரையும் இழுத்து அவர்களை அடித்து சிவபெருமான் முன்பாக நிறுத்துகிறார்கள் . உடனே சிவபெருமான் திருமாலை நோக்கி "திருமாலே இந்த அந்தணர்கள் திருடி குடித்த அமிர்தம் அத்தனையும் நம் சான்றோர்களுக்கு கொடுக்கும் படி இவர்களை பூமியில் படையும்"என்றார் .உடனே அருகிலிருந்த தேவாதி தேவர்கள் கோபம் கொண்டு அந்தணர்கள் இருவரையும் கற்பக விருட்சமாக மாறும்படி சபித்தார்கள். உடனே அந்தணர்கள் சிவபெருமானை தொழுது எங்கள் சாபம் தீருவது எப்போது என்று வினவினர் . அதற்கு சிவபெருமான் "திருமால் வைகுண்டரை அவனியிலே அவதரித்து நீச குலமறுத்து , மாசு கலி அழித்து, உலகை தர்ம யுகமாக்கி ஒரு குடைக்குள் ஆள அன்பு சேகரிக்க வருவார். கலி அழிந்து தர்ம யுகம்உதிக்கும் சமயம் உங்கள் சாபம் தீரும் என்றார்.
"அமிர்தமத்தை நீங்கள் ஆக்கிரகந்தானடக்கி
குமிர்தமுடன் நீங்கள் குடித்திருங்கோ என்று சொல்லி
உங்களுக்கு பாலமிர்தம் ஊருமஅல்லால் இத்தாலம்
எங்களுக்கும் இத்தாலம் இசையாது கண்டீரே "
- அகிலத்திரட்டு அம்மானை
மனித இனம் சாதி, மதம், என பிரிவினையினால் சிதைந்து எளியவனை வலியவன் கொடுமை செய்ததன் விளைவாக இறைவன் படைத்த உலகின் வளங்களையும், செல்வங்களையும், சிறப்புகளையும் எளியோர் அனுபவிக்க முடியவில்லை. இறைவன் அருளிய வேதங்களும் எளியோர்களை சென்றடையவில்லை. சாதி என்னும் அணையிட்டு கலி நீசம் கொண்டவர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. மறையும் மறையின் பொருளும் எளியோர்களுக்கு மறுக்கப்பட்டன, மறைக்க பட்டன. ( இரு அந்தணர்கள் ( ஆணும் பெண்ணும்) அமிர்தத்தை குடித்து கொழுத்தத்தோடு நில்லாமல் மீதமுள்ள அமிர்தத்தை மேனியெங்கும் அள்ளி பூசி சந்தோசமாய் கூத்தாடிகொண்டிருந்தனர் என்பது இதனையே சுட்டி காட்டுகிறது ).
கற்பக மரமாக மாறும் படி தேவர்கள் இட்ட சாபம் என்பது. சமுதாய புரட்சியின் மற்றும் சுழற்சியின் காரணாமாக வேதங்களையும், நீதிகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் நன்கு கற்றிருந்தாலும்அவர்கள் அதனை தாழ்ந்த சாதியினருக்கு ஓதுவதன் மூலம் தான் தங்களின் வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை குறிக்கிறது. அவர்களின் வளர்ச்சி இறைவனால் சூசகமாக தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியவும்.
"அமிர்தமத்தை நீங்கள் ஆக்கிரகந்தானடக்கி
குமிர்தமுடன் நீங்கள் குடித்திருங்கோ "
இவ்வாறாக வாழ்வில் விதியின் விளையாட்டால் பின்தள்ளப்பட்டவர்கள் கூறும் ஞானத்தை அப்படியே ஏற்றுகொள்ளக் கூடாது. மனக்கசப்பினால் அவர்கள் கூறும் அறிவுரை சில சமயங்களில் கேடும் விளைவிக்கும் . எனவே அந்த யோசனைகளை அப்படியே ஏற்றுகொள்ளாமல் மறுபரிசீலனை செய்து , அதன் வேகத்தை மட்டுப்படுத்தி சரியாக பயன் படுத்தவேண்டும்.
மானிடர்கள் எல்லோரும் இறைவனின் பிள்ளைகளே. கலியின் மயக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு அகிலம் என்னும் பதம் விட்டால் நாம் அனைவரும் அய்யாவிற்கு நல்ல பிள்ளைகளாகவும், செல்லபிள்ளை களாகவும், சுத்தமான பிள்ளை களாகவும் இருப்போம் என்பதில் ஐயமில்லை.
அகிலத்திரட்டை படிப்போம். அய்யாவின் வழியில் செல்லுவோம். அகில கலியை வெல்லுவோம் . தர்ம யுகம் காண்போம்.
அய்யா உண்டு.

சக்கராயுதம் பணம் ஆனது எப்படி?

அப்போது நீசன் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்படியே தாருமென்று ஈந்தானே சக்கரத்தை
சக்கரத்தை வேண்டி சங்குசரத்தாமன்
மிக்க பணமாக்கி மிகுத்த சக்கராயுதத்தை
சபிக்கவே மாயன் சக்கராயுதம் கேட்கும்
நீசனிடத்தில் என்னை பணமாக்கி
ஈயுகிறீரே சுவாமி சாபமிட்டு இப்போது
இப்போதிடும் சாபம் எப்போது தீருமென்று
அப்போது சக்கரமும் ஆண்டியடி போற்றிடவே
கலி மாறும் பொது கதறும் உன் சாபம் என்றார்
வலி யான சக்கரமும் வாய்த்த பணமாகியதே
- அகிலத்திரட்டு அம்மானை
மனிதனுக்கு பணத்தின் மேல் உள்ள ஆசை கலியுகம் முடியும் வரை தீராது. மனிதன் பசி தீர்ந்தாலும் ஆசைகள் தீராது. ஆசை பட்ட பொருள்களை அடைவதற்கும், அனுபவிப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது என்பதே காரணம்.
உழைப்பால் தேடும் செல்வம் தனது பேராசைகளை சந்திக்க போதாது என்ற நிலையில் திருடுகிறான், கொள்ளை யடிக்கிறான். ஏமாற்றுகிறான். வட்டிக்கு கடன் கொடுக்கிறான். கொள்கைகளையும் , இலட்சியங்களையும், நெறியையும் , கற்பையும் கூட விற்கிறான். மொத்தத்தில் கலி மாய்கையினால் மானம்கெட்டு வாழ்கிறான்.
மனிதன் மனிதன் தனது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டால் இந்த பிரச்சினைகள் வராது . கலியுகம் அழிந்து தர்மயுகம் தோன்றும் போது தான் அந்த நிலை உருவாகும்.
சக்கராயுதம் பணம் ஆனது எப்படி என்று தெரியுமா?
மனிதன் விலங்குகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தனது இனத்துடன் ஓன்று சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டான். இயற்கையின் சீற்றங்களுக்கும் பயந்து சமுதாய ஒற்றுமையை வளர்த்துகொண்டான். உழைப்பால் விளைவித்த பொருள்களை பண்டமாற்று முறையில் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மாற்றி கொண்டனர். அரிசிக்கு மிளகையும், மீனுக்கு புளியையும் , உப்புக்கு எண்ணையையும் என ஒரு பொருளுக்கு விலை மதிப்பீடு சரியாக கொடுக்காமல் பரிமாறிகொன்டனர் . நெடுந்தூர பயணங்களுக்கும் , கடல் கடந்த வியாபரதிற்க்கும் இது சரிபட்டு வரவில்லை. மனிதன் யோசித்தான். பொருள்களுக்கு விலையை நிர்ணயித்தான். பொருளுக்கு மாற்றாக பணத்தை கையாளத் தொடங்கினான். இது மனிதனுக்கு மிக எளிதாக பட்டது. பணம் தங்கமாகவும், வெள்ளியாகவும் புழக்கத்தில் விடப்பட்டன. பின்னால் அது பித்தளையாகவும்,செப்பாகவும், அலுமினியமாகவும், இரும்பாகவும் மாறியது . காலப்போக்கில் மனிதன் இந்த காசுகளையும் கையாளுவது சிரமம் என உணர்ந்தான். பணத்தை காகிதங்களாக்கினான்.கலி முற்றும் காலத்தில் திருடர்களுக்கு பயந்து இந்த காகிதங்களும் மாறி காசோலை மற்றும் வரைவு வோலைகளாக வணிக வங்கிகளால் அறிமுகபடுத்தபட்டன. நவீன யுகத்தில் கம்புயூட்டர் வளர்ச்சியின் காரணமாக வெறும் PIN நம்பர் களாக மாறி விட்டன. இந்த கலியுகத்தில் பணத்தை கண்ணில் பார்க்காமலே நம்மால் வாங்கவும் முடியும் பிறருக்கு கொடுக்கவும் முடியும்.
சக்கராயுதம் பணம் ஆனது என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்வது இந்த கலி கால வளர்ச்சியைத்தான். கலியுகம் முடியும் போது பணம் தனது மதிப்பை இழந்து போகும்.
அப்படிப்பட்ட பணத்தின் மேல் ஆசை வேண்டாம். பண ஆசை நம்மை கலியுகத்தில் இருந்து தர்மயுகதிற்க்கு போகவிடாது. குறைந்தபட்ச தேவைகளை சமாளிக்க தேவையான பணத்தை சம்பாதிப்பது போதுமானதாகும். அதற்க்கு அதிகமாக வரும் பணத்தை இறப்போர் முகம் பார்த்து தர்மமாக கொடுப்பது கலியை வென்று நம்மை தர்மயுகதிற்க்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.
கலியன் தான் திருமாலின் சக்கரத்தின் மேல் ஆசை கொண்டான்.
அய்யாவின் அன்புக்கொடி மக்களாகிய நாம் சக்கராயுதத்தின் மேல் ஆசை கொள்ள வேண்டாம்.
இறைவனின் ஆயுதத்தை உபயோகிக்கும் வல்லமை நமக்கு இல்லை என்பதை உணர்வோமாக.
பிறவி பெருங்கடலை நீந்தும் போது பணம் / செல்வம் நமது வேகத்தை தடை செய்யும் ஒரு தடங்கல்லாக தான் இருக்கிறது. பணத்தின் மேல் பற்று இல்லாத ஞானிகள் எளிதாக பிறவி பெருங்கடலை கடப்பதன் இரகசியத்தை அறிந்து கொள்வீராக.
பணம் பொய்யான இவ்வுலக வாழ்க்கையை கொடுக்கும்.
மெய்யான தர்மயுக வாழ்வை கெடுக்கும் .
"ஏழ்மையாய் இரு என்னுடைய கண்மணியே " என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்வதை அறிந்து அய்யா வழியில் நடப்போம் .
அய்யா உண்டு

உலகம் தோன்றியது எப்படி? அகிலத்திரட்டு என்ன சொல்கிறது?

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தால் உலகத்தை பிரம்மன் படைத்ததாக இந்து மதம் கூறுகிறது. பிரம்மன் தான் படைப்புக்கு அதிபதி என்றும் கூறுகிறது. அந்த பிரம்மன் மஹா விஷ்ணுவின் உந்தித் தாமரையில் இருந்து உதித்தார் என்றும் இந்து சமயம் சொல்கிறது.
ஆதியில் வார்த்தை இருந்தது .அது தேவனாய் இருந்தது. தேவன் வார்த்தையாய் இருந்தார் என்று கிறிஸ்தவர்களின் பைபிள் சொல்கிறது. ஏழு நாள்களில் இறைவன் உலகத்தை படைத்தார் என்றும் பைபிள் சொல்கிறது. உலகின் பெரும்பான்மையான மக்களால் போற்றி படிக்கப்படும் பைபிள் கூட Genesis என்ற பகுதியில் இந்த உண்மையை சரியாக வெளிப்படுத்தவில்லை.
ஏகம் ஒரு பரமானது. இம்ம் என்றொரு வாயுவில் சக்தி விளைந்தது. சக்தியிலிருந்து சிவம் வந்தது. சிவத்திலிருந்து மீண்டும் சக்தி வந்தது. சக்தியில் இருந்து நாதமும் , நாதத்திலிருந்து விஷ்ணு பிறந்தது. பின் ருத்திரர், மயேசுரர் தோன்றினர். பின்னால் உலகம், அண்டபிண்டங்களும் தோற்றுவிக்கப்பட்டன என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்கிறது.
அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்பு கீழ் கண்டவாறு தொகுக்கப்பட்டுள்ளது.
The first step in the emergence of life may have been chemical reactions that produced many of the simpler organic compounds, including nucleobases and amino acids, that are the building blocks of life. An experiment in 1953 by Stanley Miller and Harold Urey showed that such molecules could form in an atmosphere of water, methane, ammonia and hydrogen with the aid of sparks to mimic the effect of lightning.Although the atmospheric composition was probably different from the composition used by Miller and Urey, later experiments with more realistic compositions also managed to synthesize organic molecules.Recent computer simulations have even shown that extraterrestrial organic molecules could have formed in the protoplanetary disk before the formation of the Earth.The next stage of complexity could have been reached from at least three possible starting points: self-replication, an organism's ability to produce offspring that are very similar to itself; metabolism, its ability to feed and repair itself; and external cell membranes, which allow food to enter and waste products to leave, but exclude unwanted substances.
வாயுவிலிருந்து தான் உயிர் வந்தது என்பதை அறிவியல் நோக்கில் சொல்லி இருக்கிறார்கள் .
கீழ்காணும் உலக தோற்றம் பற்றிய உண்மையும் அறிவியல் அறிஞர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்
கோடி கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நெபுலா என்றொரு நெருப்புகோளம் சுழன்று கொண்டிருந்தது. காலப் போக்கில் அதிலிருந்து பிரிந்து வந்த சிறிய நெருப்பு கோளங்களில் ஓன்று தான் இன்று நாம் காணும் சூரியனும் அதன் துணை கோள்களுமாகும்.அந்த துணை கோள்களில் ஒன்றான பூமியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தன்னாலே தான் முளைத்த சற்கணையின் தண் வாங்கி
பின்னாலே ஓர் கணையை பீறி - பின்னால்
பீறும் கணையதனால் பெரும்புவி எல்லாம் தோன்றி
சீரும் கலியதனாற்சென்றுதோ
- அகிலத்திரட்டு அம்மானை
தன்னாலே தான் முளைத்த சற்கணை - நெபுலா
பின்னாலே ஓர் கணையை பீறி - சூரிய மண்டலம்
பீறும் கணையதனால் பெரும்புவி - பூமி
இவ்வாறாக தோன்றிய பூமியின் சீரும் சிறப்பும் நீசக்கலியினால் குன்றிவிட்டது.
இதுவரை உலகில் தோன்றிய எந்த வேதமும், இந்த உண்மையை சொல்லவே இல்லை. அகிலத்திரட்டு தெள்ளத்தெளிவாக பாமரனும் அறியும் விதத்தில் சொல்லி இருக்கிறது. அகிலத்திரட்டு தான் உலக பொது வேதமாகும். அகிலத்திரட்டு அம்மானையை தினந்தோறும் படிப்போம். அறியாமையை அகற்றுவோம். ஞானம் பெறுவோம். அகிலத்தில் மறைந்து கிடக்கும் அளப்பரிய விஞ்ஞானத்தை உலகறிய சொல்லுவோம்.
அய்யா உண்டு.

அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா

அய்யா வைகுண்டர் அருளிய அருள் நூலில் யுகபடிப்பு பகுதியில் முதல் வரியாக இருப்பது தான் இந்த அதிசய மந்திரம். துவையல் தவசு மேற்கொண்ட அய்யாவழி அன்பர்கள் அய்யா வைகுண்டரின் அறிவுரையின் படி அந்தி நேரங்களில் ஓதியது இந்த உகபடிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது .
அய்யா வைகுண்டரின் வாழ்வினைப்பற்றி எடுத்து சொல்வது இந்த கலியுகத்தின் தர்மமாகும். கலியை நெருங்கவிடாமல் நம்மை காக்கும் தர்மமாகும்.
அரகரா என்பது அய்யா நாராயணருக்கு அபயமிடும் மந்திரமாகும். சிவ சிவா என்பது சிவபெருமானை துதிக்கும் மந்திரமாகும் .
எனவே இந்த அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா என்னும் மந்திரம் நாராயணரையும் சிவபெருமானையும் இணைக்கும் மந்திரமாகும்.
அரியும் சிவனும் ஒன்றே என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் எளிய மந்திரமாகும்.
ஒருவர் சொல்ல அதனை கேட்டு அனைவரும் தொடர்ந்து சொல்ல இறைவழிபாட்டில் ஒற்றுமையை வளர்க்கும் உன்னத மந்திரம் இது.
மந்திரங்களில் இரகசியங்கள் இல்லாமல் பக்தர்கள் எல்லோரும் வெளிப்படையாக மனம் திறந்து வாய் விட்டு இறைவனை அழைக்கும் அன்பான மழலை சொல்லாகும் இந்த மந்திரம்.
இறைவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையே பூசாரி என்ற தரகரை ( தடைகல்லை உடைத்து ) நீக்கி மனிதனும் இறைவனும் தடையின்றி இணைய ச்செய்யும் அதிசய மந்திரம்.
பதிகளையும் , தாங்கல்களையும் பக்தியோடு அன்புக்கொடி மக்கள் வலம் வரும்போது மனதை ஒருநிலைபடுத்தி, சமநிலை படுத்தி, பண்படுத்தி, பதப்படுத்தும் தெய்வீக மந்திரம் ஆகும்.
அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா
என்றே அனுதினமும் பாடுவோம்.
அன்பால் ஓன்று கூடுவோம்.
அன்பால் இறைவனை தேடுவோம்.
அய்யா வழியில் செல்லுவோம்.
அய்யா உண்டு

வைகுண்ட உணவு வகைகள்

தாவர உணவு வகைகளில் இலை, தண்டு, பூ, காய், கனிகள் , பருப்பு வகைகள் மட்டுமே வைகுண்ட உணவாகும். தாவரங்களின் வேர்கள், கிழங்குகள், மற்றும் மண்ணிற்கு அடியில் வளரும் பகுதிகள் இவ்வகைகளில் சேராது. காளான்கள் வைகுண்ட உணவாகாது.
எந்த மிருகத்தின் உடலும், உடலின் பகுதிகளும், இரத்தமும், சதையும், எலும்பும், தோலும் வைகுண்ட உணவாகாது. வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடு போன்ற விலங்குகளை துன்புறுத்தாமல் பெறும் பால் வைகுண்ட உணவாகும். நாம் அவற்றிக்கு உணவை கொடுத்து அவைகளிடமிருந்து நமது உணவை எடுத்துக்கொள்வதால் இது ஒரு கைமாறு என எடுத்துக்கொள்ளப்படும்.
தேனீக்களையும், அவற்றின் கூட்டுப்புழுக்களையும் வதைக்காமல் பெறப்படும் தேன் மருந்தாக பயன் படுத்தும் போது அதனை வைகுண்ட உணவு எனக்கொள்ளலாம்.
அய்யா வழி அன்பர்களில் சிலர் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகள் தவிர மற்ற நாட்களில் அசைவ உணவு வகைகளை உட்கொள்ளலாம் என கூறுவது சரியாகாது.ஏனென்றால்
"கொல் என்ற வார்த்தை கூறாதே என் மகனே"
என்று சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை.
கொல் என்ற வார்த்தையை கூட சொல்லக்கூடாது என்று சொல்லும் அகிலம் உயிரனங்களை கொன்று தின்பதை எப்படி ஏற்று கொள்ளும்? நிச்சயமாக அகிலதிரட்டும், அய்யா வழியும், அய்யா வைகுண்டரும் ஏற்பதில்லை.
வைகுண்டர் தமக்கு ஏவலாக கொண்ட 5 வீரர்களை கூட ( பஞ்ச தேவர்கள் ) அசைவ உணவு பழக்கத்திலிருந்து வைகுண்ட உணவு பழக்கத்திற்கு மாற்றிய பின்னரே ஏற்றுகொண்டார்.
அய்யா அமைத்த பதிகளிலும் நிழல் தாங்கல்களிலும் அய்யாவிற்கு நியமிக்கும் பால் அன்னம், தவனப்பால், உண்பான் , பனை பொருள்கள்,அனைத்தும் வைகுண்ட உணவிற்கான மிகச்சரியான உதாரணங்கள்.
முழுவதுமாக தங்களை அய்யா வழிக்கு அர்பணிக்கும் அன்புக்கொடி மக்கள் பதனிட்ட விலங்குகளின் தோல் பொருள்களை ( பெல்ட், கைப்பைகள், காலணிகள் போன்றவை) பயன்படுத்தாமல் தவிர்க்கலாம்.
முக்கியமாக பட்டு (Silk) வஸ்திரங்களை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் ஆயிரக்கணக்கான பட்டு புழுக்களை கொன்றுதான் பட்டு நூல் தயாரிக்க படுகிறது . விவசாயம் பார்க்கும் அன்பர்களும் பட்டு பூச்சி வளர்த்து அழிக்கும் இந்த தொழிலை தவிர்ப்பது நலமாயிருக்கும்.
வைகுண்ட வழியில் வாழ்ந்து
வைகுண்ட உணவை உண்டு
வாழுவோம் பல நூறாண்டு.
அய்யா உண்டு.

இறைவன் இரக்கமுள்ளவரா? நீதியுள்ளவரா?

மான்களையும் முயல்களையும் படைத்த இறைவன் தான் சிங்கம்,புலிகளையும் படைத்தார். தவளையை படைத்த இறைவன் பாம்புகளையும் படைத்து கீரி ,மயில், பருந்து, மற்றும் கழுகுகளையும் படைத்தார். எலியை படைத்து , பூனையையும் நாயையும் படைத்தார். மீனை படைத்ததுடன் கொக்கு மற்றும் நாரையையும் படைத்தது இறைவன் தானே?
உண்ண முடியாத அளவு செல்வம் படைத்த செல்வந்தரையும், கஷ்டப்பட்டு உழைத்து வயிற்றை மட்டும் சமாதானபடுத்தும் அன்றாடங்காய்ச்சியையும் வயிற்றுக்கு உணவு தேடி பிச்சை எடுக்கும் பிச்சைக் காரனையும் ஒரே இறைவன் தானே படைத்தார். அழகான உருவங்களையும் அருவருக்கத்தக்க உருவங்களையும் படைத்தவன் நாம் எந்நாளும் வணங்கும் இந்த இறைவன் தானே?
ஏன் இந்த ஏற்றத் தாழ்வுகள் ? ஏன் இத்தனை துயரங்கள்?
தனது படைப்புகள் கஷ்டபடுவதை பார்த்து ரசிக்கும் கல்நெஞ்சம் கொண்டவனா இறைவன்?
அவரது கட்டுபாட்டில் இருக்கும் பஞ்ச பூதங்களையும் ஏவி விட்டு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும் இந்த இறைவன் தானே? சுனாமி, புயல், பூகம்பம், வெள்ளம் வறட்சி, எரிமலை குழம்புகள் என்று தான் படைத்த உயிரினங்களை கொள்வதற்கு வித வித மான, வித்தியாசமான வழி முறைகளை கையாண்டு அதனை வேடிக்கை பார்ப்பவன் தானே இந்த இறைவன்.
ஊனமுற்றோர்களையும், மன வளர்ச்சி குன்றியவர்களையும் ,நோயாளிகளையும் படைத்தது விதி என்னும் பழி சொல்லி தான் தப்பித்து கொள்ளும் பயந்தான்கொள்ளியா இறைவன்?
ஆசைகளை கொடுத்து அது நிறைவேறாமல் தான் பெற்ற மக்களையே துடிக்க வைத்து துன்பங்களை கொடுக்கும் மோசக்கார அப்பன் தானே இந்த இறைவன்?
எல்லாம் வல்லவனாக இருந்தும் எதனையும் தேவையான நேரத்தில் செய்யாத உதவாக்கறையா இறைவன்? இல்லை சோம்பேறியா இறைவன்?
தன்னை வணங்குவோர்களை காப்பாற்றுவேன் என்று தற்பெருமைக்கு ஆசைபடும் இறைவன் அதனை கூட பல சமயங்களில் ஒழுங்காக செய்வதில்லையே?
இப்படிப்பட்ட இறைவனை வணங்குதல் அவசியமா?
வணங்குவதன் பலன் என்ன? பயன் தான் என்ன?
இறைவன் இந்த உலகத்தை பொருத்தவரையில் ஒரு பாசமுள்ள தாயாகவோ இல்லை தந்தையாகவோ நடந்து கொள்வதில்லை. மாறாக ஒரு நல்ல விவசாயியாகவே நடந்து கொள்கிறார். கடமையை செய் பலனை எதிர் பாராதே என்று கீதையில் சொன்ன இறைவன் தனது கடமைகளை மட்டும் செய்துகொண்டிருக்கிறார். அவரது கடமை நமக்கு நன்மை பயக்கும் போது அவரை தாயாகவும் தந்தையாகவும் பார்க்கிறோம். அவரது கடமை நம்மை தண்டிக்கும் விதமாய் இருந்தால் நாம் அவரை வி(ரோ)தியாக பார்க்கிறோம்.
படைப்பதும், காப்பதும்,அழிப்பதும் ஒரே இறைவன் என்பதை நாம் உணரவேண்டும். எனவே தான் பல சமயங்களில் நமது வேண்டுதல்கள் நிறைவேறாமல் போகிறது. காரணம் இறைவனில்லை. இறைவனை நோக்கிய நமது அணுகுமுறை தவறானது அவ்வளவு தான்.
நாம் கேட்பதை மட்டும் கொடுப்பது இறைவனின் தொழில் இல்லை. அவன் நாம் கேட்டதையும் கொடுப்பான். கேட்காததையும் கொடுப்பான். ஏனென்றால் மனம் இறைவனிடம் நன்மையை மட்டுமே கேட்கும் சுபாவம் உடையது. ஆனால் இறைவன் நன்மை ,தீமை இரண்டின் உறைவிடமாய் இருக்கிறான். கஷ்டங்கள் வந்தால், புலம்புவதும் , இறைவனை விடாப் பிடியாக வேண்டுவதும் அவை தீர்ந்தபின் இறைவனை மறந்து விடுவதும் மனதின் இயல்புதான்.
உலகத்தை சம நிலையில் இயக்குவதற்காக முப்பொருளும் ஒருபொருளாய் இருக்கும் இறைவன் நடத்தும் மேற்கண்ட திருவிளையாடல்கள் நம் மனதை பண் படுத்துவதற்காகவே யன்றி புண் படுத்துவதற்கு அல்ல. விதி என்னும் வலையில் சிக்கி விடுபட முடியாமல் தவிக்கும் நமக்கு பல நேரங்களில் இறைவனின் வார்த்தைகள் (வேதங்கள் ) வழிகாட்டி, வலி நீக்கி , வலையினின்றும் விடுபட வைக்கின்றன.
இந்த கஷ்டங்களை கண்டு நாம் மனம் தளரக்கூடாது என்பதற்காக த்தான் இறைவன் அவ்வப்போது மனித அவதாரமெடுத்து நம்மை விட அதிகமான கஷ்டங்களை நம் கண்முன்னே அனுபவிக்கிறான். அன்பாலும் பொறுமையாலும் அத்தனை சோதனை களையும், வேதனைகளையும்,வென்றும் காட்டுகிறான்.
வைகுண்டரே இந்த பூலோகத்தில் சான்றோரை காப்பதற்காக மனிதனாய் அவதரித்ததால் அவருக்கு கலி அரசனால் ஏற்பட்ட சோதனைகள் ஏராளம். துன்பங்களை கண்டு துவண்டு விடாத மனம் தான் பக்தியின் விளைவாக இருக்க வேண்டும்.எது நடந்தாலும் பொறுமையுடன் தாங்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். எத்தனை வேதங்களை படித்தாலும் மன உறுதி இல்லாதவர்கள் இறைவனை உணரவே முடியாது.
பொறுதி மகனே பெரியோர் ஆகுவது
உறுதி மகனே உலகமதை ஆளுவது
- அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்தை படிப்போம் .மன உறுதியை வளர்ப்போம். இறைவனை இறைவனாக பார்ப்போம்.இன்ப துன்பத்தை சமமாக ஏற்போம்.
அய்யா உண்டு

கண்ட கோவில் தெய்வமாகுமா ?

கண்ட கோவில் தெய்வம் என்று கை எடுத்தால் பலனும் உண்டோ?
இவ்வாறு மக்களை அய்யா வைகுண்டர் வினவுகிறார். இது இறைவனின் வெறும் கேள்வி மட்டுமல்ல தன் பிள்ளைகளின் மேல் கொண்ட பரிதாபமும், கவலையும் கலந்த வெளிப்பாடாகும். சொல் கேளா பிள்ளைகளின் மேல் ஒரு தகப்பன் கொள்ளும் கரிசனம் என்றும் சொல்லலாம் . குழந்தையின் மனம் புண்படாமல் தகப்பன் கூறும் அறிவுரை என்று கூட எடுத்துகொள்ளலாம்.
ஒரு தெய்வ வழிபாடு தான் மேன்மை தரும். தெய்வம் ஒன்றுதான் ஆனாலும் வழிபடும் தெய்வங்களின் எண்ணிக்கை ( மனதில்) அதிகமாகும் போது நம்பிக்கையின் ஆழம் குறைந்துவிடுவது இயல்பு. இறை நம்பிக்கை தான் மனதையும், எண்ணங்களையும்,சொல்லையும் செயலையும், வாழ்க்கை முறையையும் பான் படுத்தி, பதபடுத்தி செம்மைப் படுத்தும். உதாரணமாக, அய்யா வழியின் தலைமைப் பதியாக விளங்கும் சாமிதோப்பிற்க்கு சென்று வந்தால் மன அமைதியும், நோயின்மையும், செல்வச்செழிப்பும் , பேரும் புகழும் இன்னும் சகல வசதி வாய்ப்புகளும் வந்தடையும் என்பது அய்யாவழி அன்புக்கொடி மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல அனுபவபூர்வமான உண்மையும் கூட. யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அதே பதியின் வடக்கு வாசலில் அழுக்கான கிழிந்த உடைகளோடு, தங்கும் வீடின்றி ஆண்டுகளாக வயிற்றுக்காக பிச்சை எடுப்பவர்களும் இருக்கின்றனர். சாமிதோப்பை தேடி வரும் அன்பர்களுக்கு கிடைக்கும் பாக்கியம் , சாமிதோப்பிலேயே தங்கி இருக்கும் பிச்சைகாரர்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?
நம்பிக்கையின் ஆழம் தான் காரணம்.
இனத்துக்கு இனம் இருப்பேன் நான் சுவாமியென்று
மனதில் யாரோவென்று வையாதே என் மகனே
- அய்யா நாராயணர் வைகுண்டருக்கு விஞ்சையாக இதனைச்சொல்கிறார்.
அய்யாவழியை பின்பற்றும் அன்புக்கொடி மக்கள் பிற மதத்தவர்களோடு பகைமை பாராட்டவேண்டாம் என்பதையே இந்த விஞ்சை வெளிப்படுத்துகிறது. அவர்கள் வணங்கும் கடவுளும் நான் தான் என்று அய்யா சொல்கிறார். ஒரு குடும்பத்தலைவன் தன்னை பெற்றவர்களுக்கு தாய் தந்தையர்க்கு மகனாகவும், துணைவியாருக்கு கணவனாகவும், தனது குழந்தைகளுக்கு தகப்பனாகவும், மருமக்களாக வந்தவர்களுக்கு மாமனாராகவும் பேரக்குழந்தைகளுக்கு தத்தாவாகவும் விளங்குவது எப்படி சாத்தியமோ அப்படியே ஈரேழு லோகமும் படைத்த ஆண்டவனுக்கு பல நாமங்களில் / தலங்களுக்கு தக்கவாறும் / மக்களினங்களுக்கும் அவர்கள் செய்யும் தொழிலுக்கும் ஏற்பவும் மாறுபட்டு நிற்பது சாத்தியம் என்பது மட்டுமல்லாமல் ஒரு அத்தியாவசிய தேவை என்றும் ஆகிறது . நாம் வணங்கும் இறைவன் நமக்கு சொர்கத்தை தருவதில்லை. ஆனால் நாம் வாழும் வாழ்க்கை நெறிகள் மற்றும் ஒழுக்கம் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.வெறும் மத மாற்றங்கள் மட்டும் எந்த பிரச்சினைகளுக்கும் விடிவாகாது, முடிவுமாகாது. அய்யா சொல்லும் விஞ்சையின் படி வாழும் வாழ்வே தர்மயுகதிற்கு நம்மை அழைத்து செல்லும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை .
அய்யாவைப்பற்றியும் அகிலத்திரட்டைப்பற்றியும் அய்யா வழியைப்பற்றியும்,மலர இருக்கும் தர்மயுகம் பற்றியும் அறியாத மக்களுக்கு எடுத்து சொல்லுவோம். மக்களின் வாழ்க்கை நெறியினை நேர் படுத்துவோம்.அய்யாவழி என்பது ஒரு மதம் அல்ல , வாழும் நெறி என்று அகில மக்கள் அனைவருக்கும் உணர்த்துவோம். தர்மயுகவாழ்விற்க்கு ஆயத்தமாவோம் .
அய்யா உண்டு

அய்யா வழி

முன்னின்று கொல்ல மூவராலும் அரிது
பின்னின்று அவனவனால் பேசாது மாள வைப்பேன்.
என்று சொல்லும் இறைவன் போரிட்டு கலியை அழிக்கவில்லை நம்மையும் போரிட்டு கலியழிக்க புத்தி சொல்லவில்லை. அவர் நம்மோடு இருந்து கொண்டு, புத்தி மதிகளையும், விஞ்சைகளையும் சொல்லி கொடுப்பதன் மூலம் அஹிம்சா வழியில் அன்பு வழியில் அடங்கா கலியை அழிக்க உதவுகிறார்.
தர்ம யுகமாக்கித் தாரணியை யாளுதற்குக்
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகா திருக்கும் தர்மஅன் புள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்
அகிலத்திரட்டின் மூலமாக நம்மிடம் இறைவன் தினமும் பேசுகிறார். தினம் ஒரு மணி நேரமாவது அகிலதிரட்டை படித்தால் / கேட்டால் ஊழ் வினைகளும் தீரும். செய்த பாவங்களும் கரைந்து போகும்.நமக்கு இனிவரும் காலங்களில் பாவங்கள் / தவறுகள் / குற்றங்கள் செய்ய நினையாத மன நிலை வளரும். தர்ம வழியில் வாழும் உறுதி கிடைக்கும்.
"எல்லாஞ் சான்றோர் கையாலே
எள்ளும் நீரும் கலிக்கிறைத்து
பொல்லாக் கலியை நரகமதில்
புக்க அடித்துப் பேயோடு
கொல்ல விடைகள் கொடுப்பேனான்
கூண்ட சான்றோர் கையதிலே"
சப்தகன்னியரின் பிள்ளைகளாக வளர்ந்து வாழ்ந்து வரும் திருமால் பெற்ற சான்றோரை நீசமுற்ற கலியிடமிருந்து காக்கவே அய்யா நாராயணர் தனக்கு தானே மகனாக ( வைகுண்டராக முப்பொருளும் ஒரு பொருளாக ) அவதரித்தார். கலியை நரகத்திற்கு அனுப்பி கண்ணு மக்களாகிய சான்றோரை தர்மயுகதிற்க்கு அழைக்கவே இந்த வைகுண்ட அவதாரம்.
வல்லோர் புகழுந் தேவர்களே
மனமே சடைக்க வேண்டாமே
வேண்டா மெனவே தேவருக்கு
விடைகள் கொடுத்து வைகுண்டரும்
கூண்டாங் கடலின் கரைதாண்டி
குதித்தே கரையி லோடிவந்து
தாண்டாய் முன்னே பெற்றதொரு
தாய்க்கோர் சடல வுருக்காட்டி
ஆண்டா ராணை யொருவருக்கும்
அகலா தெனவே யாணைகொண்டார்"
திருச்செந்தூர் கடலில் மகரத்துள் விஞ்சை பெற்ற அய்யா வைகுண்டர் அரூபியாகவே வெளியில் வந்தார். கடலுக்குள் போன மகன் ( முத்துக்குட்டி) இன்னும் வர காணோம் என்று கதறி அழுது கொண்டிருந்த அன்னை வெயிலாள் காணும்படியாக சடல வுருவை காட்டினார்.
தெச்சணத்துக் கேகவென்று திருச்சம் பதியிருந்து
உச்சமது கொண்டு உகச்சாப முங்கூறி
நடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக்
கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம்
சங்கீதங் கூறித் தாமே யவர்வரவே
மங்கள நாதன் மனுச்சொரூப மேயெடுத்து
நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார்
திருசெந்தூர் கடலில் இருந்து அரூபியாகவே வந்த இறைவன் தெட்சணம் செல்லும் முன் தருவை இடத்தில் மனு சொரூபம் எடுத்து மனிதர்கள் காணும் படியாக தோன்றினார். தான் பெற்ற விஞ்சைகளின் படி தனது பிள்ளைகளான சான்றோர்களுக்கு வாழ்ந்து கலியை அழிக்கும் யுக்தியை காட்டுவதற்காக மனித ரூபம் கொண்டார்.
வைகுண்ட அவதாரத்தின் பொது பல இகனைகளுக்காக பல்வேறு உருவங்களை அய்யா வைகுண்டர் தரித்திருந்தாலும் உருவமின்மை தான் இறைவனின் உண்மையான நிலை. அதன் மூலம் தான் அவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்பதை நாம் அறிய வேண்டும்.
இறைவன் வரைமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், கற்பனைக்கும் எட்டாதவன், அடங்காதவன்.
வார்த்தைகளால் எழுதப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை என்னும் வேதத்தை மனப்பாடம் செய்த ஒரு பக்தனுக்கு அதனை மனதிற்குள் ஓயாமல் ஓதும் போது எழுத்து வடிவங்கள் தேவை இல்லை ஒலி
வடிவமும் தேவை இல்லை. ஆனால் அப்படி ஓதும் போது எல்லையில்லா இன்பம் நமக்குள் பெருகுவதை உண்மையாகவே உணரலாம்.அது போல உருவமிலா இறைவனை உள்ளத்துள் உணரும் உண்மையான பக்தனுக்கு இறைவனின் உருவம் தேவை இல்லை. அந்த பக்திக்கு தடையின்றி இறைவனின் அருள் கிடைக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அய்யா வைகுண்டர் வாழ்ந்து காட்டிய வழியில் வாழ்வது தான் கலியை அழிக்கும் ஒரே வழி அதுவே உண்மையான அய்யா வழி.
அய்யா உண்டு

உருவமிலா இறைவனை உணருங்கள்.

அய்யா வைகுண்டருக்கு கேரளாவில் சில இடங்களில் உருவம் வைத்து வழிபடுவதாக செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. சிலர் அய்யா வைகுண்டரை ஒரு புரட்சியாளர் என்றும் சித்தரிக்கின்றனர். முப்பொருளும் ஒருபொருளாய் அவதரித்த அய்யா வைகுண்டர் கலியுக தெய்வம் கர்த்தாதி கர்த்தனாவார். அவரை அற்புதங்கள் செய்த சாதாரண மனிதன் என்றும் அவருக்கு உருவம் கொடுத்து வழிபட செய்வோரும் நிச்சயமாக தெய்வ நிந்தனைக்கு உள்ளாவார்கள்.அய்யா வழியானது உருவ வழி பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. காரணம் அய்யாவழி ஒரு மதம் அல்ல. மனித குலத்தின் அறிவை பாழ் படுத்தும் கலி என்னும் மாயையை அறுத்து மக்களை இறைவனின் வழியில் இணையசெய்யும் வாழ்க்கை நெறி முறையாகும்.
உருவங்களையும் சிலைகளையும் வைத்து தான் அய்யாவை வழிபட வேண்டும் என்று ஆசை படுவோர்களும், அப்படித்தான் வழிபட முடியும் என்று நம்புவோர்களும் அய்யாவழியை விட்டு தாங்களாக விலகிக்கொள்ள வேண்டுகிறோம். அவர்கள் அடிமட்டத்தில் இருந்து கொண்டு வெறும் பக்தி செலுத்துவோராக இருந்தாலும், தலைமை பதியை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்களாக இருந்தாலும் ஒரே நியதிதான். இல்லையெனில் இப்படிப்பட்ட சுயநல கிருமிகள், நம்பிக்கை துரோகிகள் விரைவில் அய்யாவழியை விட்டு அய்யா வைகுண்டரால் தூக்கி எறியப்படுவார்கள் .
இவர்கள் சொன்னார்கள் என்பதற்காக அய்யா வைகுண்டர் காட்டிய அன்பு வழியை மறந்து இந்த கயவர்கள் பின்னால் அன்புக்கொடி மக்கள் யாரும் செல்ல வேண்டாம். இவர்கள் படைத்தவனை மறந்து தங்கள் சுய லாபத்திற்காக வழி முறைகளையும் அய்யாவின் கொள்கைகளையும் தங்கள் விருப்பம் போல் மாற்றினால் விரைவில் தனிமை படுத்த படுவார்கள் என்பது நிச்சயம்.
" போய்யரோடு அன்பு பொருந்தி இருக்காதே"
"நல்லவர் நல்லாவார் நானுரைக்க கேள் அம்மானை "
- அகிலத்திரட்டு அம்மானை
வைகுண்டரின் (பொய்யான) உருவங்களை நிராகரியுங்கள்.
"ஒண்ணு சொல்ல ஒண்ணு கேட்டு உண்மையை காப்போம்"
அய்யா உண்டு..

அய்யா வைகுண்டரும் அகிலத்திரட்டு அம்மானையும்

"அந்நீதத்தாலே லோகம் அவனி ஈரேழும் வாடி
குன்னியே கலியில் மூழ்கி குறுகியே அலைதல் கண்டு
கன்னிகள் மதலையான கற்பக குலங்கள் தன்னில்
மன்னிக மனுப்போல் தோன்றி வளர்ந்து பின்னுதித்தார் தாமே.
"என்றிந்த விவரமெல்லாம் எழுதியே உலகில் விட்டு
நன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதிர் உதிக்கும் வேளை
பண்டிந்த மூலம் தன்னில் பஞ்சமி நேரம் தன்னில்
குண்டத்தின் அரசு கோமான் குவலயமதிலே வந்தார்"
-அகிலத்திரட்டு அம்மானை
அய்யா வைகுண்டர் 1008 ஆம் ஆண்டு மாசி மாதம் 20-ம் நாள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சூரியன் உதிக்கும் சமயத்தில் பஞ்சமி திதியில் மூலம் நட்சத்திரத்தில் முப்பொருளும் ஒருபொருளாகி மனுவாக உதித்தார்.
அய்யா வைகுண்டரின் அவதார வருகை கொல்லம் 998 - ல் திருவாசகம் மூலம் அறிவிக்கப்பட்டது.
"திரு மொழி வாசகம் தன்னை தேசத்தில் வருமுன்னாக
வருவது திடனாமென்று வழுத்தினோம் தொளாயிரத்து தொன்னுற்றெட்டில்
ஒரு திருக்கூட்டமாக ஒராயிரத் தெட்டாமாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தினோமே "
-அகிலத்திரட்டு அம்மானை
கொல்லம் ஆண்டு 1016- ல் 2 மாதம் 7-ம் தேதியன்று வெள்ளிகிழமை அரி கோபாலன் சீடர் நாராயண சிந்தையுடன் துயின்ற நேரத்தில் அய்யா நாராயணர் அவரை துயில் எழுப்பி அய்யா வைகுண்ட அவதாரத்தின் காரணங்களையும் , ஏழு யுக நடப்புகளையும் விவரித்தார். பின்னர் "ஏர் " என்னும் அகிலத்திரட்டின் காப்பின் முதல் சீரை அடி எடுத்து கொடுத்தார். அதன் பின்னால் அனைத்தும் அவர் மனதில் இருந்து எழுதுவதற்கு துணை புரிந்தார்.சீடர் அரி கோபாலன் கை வண்ணத்தில் அகிலம் அகிலத்திரட்டு அம்மானை 5- வது வேதமாக உருவானது.
"வகுத்த பிரம்மனுக்கும் மாதா பிதா வதுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே
தோத்திரம் என்று சொல்லி சுவாமிதன்னை நான் தொழுது
ராத்திரி தூக்கம் நான் வைத்திருக்கையிலே
ஆண்டான ஆண்டு ஆயிரத்து பதினாறில்
காண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தேதி இருபத்தேழில் சிறந்த வெள்ளி நாளையிலே
சுருதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் எழுப்பி செப்பினார் காரணத்தை
காப்பில் ஒரு சீர் கனிவாய் மிகத் திறந்து
தார்பரியமகச் சாற்றினார் எம்பெருமாள்
மகனே இவ்வாய்மொழியை வகுக்கும் காண்டமதுக்கு
யுகமோரறிய ஊனு நீ முதற் க்காப்பாய்
அதின் மேல் நடப்பு உன் உள்ளே அகமிருந்து
சரி சமனாய் தான் வகுப்பேன் தான் எழுது காண்டமதை
நானுரைக்க நீ எழுதி நாடு பதினாலறிய
யா னுரைக்க நீ எழுதி அன்போ ர்கள் தங்கள் முன்னே
வாசிக்க கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா "
காப்பு:
"ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசு பண்ணி
காரணம் போல் செய்த கதை கட்டுரைக்க பூரனமாய்
ஆராய்ந்து பாட அடியேன் சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்."
- அகிலத்திரட்டு அம்மானை
அய்யா வைகுண்டர் கொல்லம் ஆண்டு 1026 -ம் ஆண்டு வைகாசி மாதம் 21 -ம் நாள் திங்கள் கிழமை மதியம் 12 மணியளவில், பூச நட்சத்திரத்தில் தனது மனித அவதாரத்தை துறந்து வைகுண்டம் ஏகினார்.
"பதறாமல் நீங்கள் பண்பாயொருப்போலே
சிதறாமல் நீங்கள் செய்ய அனுகூலமாய்
இருந்து மிக வாழும் என்று நாமம் கொடுத்து
திருந்து புகழ் மாயன் சிறந்த வோராயிரத்து
ஒரிருபத்தாறாம் ஓங்குமிடபமதில்
சீரியல்பான தேதி இருபத்தொன்றில்
பூருவ பட்சம் பூச நட்சத்திரத்தில்
வாறுடைய சோமவாரம் போழுதூர்ந்து
பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில்
மெய்கொண்ட சான்றோர் மேலாசை உள்ளிறுத்தி
கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ
வைகுண்டமேக வழிகொண்டார் அம்மானை "
- அகிலத்திரட்டு அம்மானை
அய்யா உண்டு

வைகுண்ட அவதாரம்

பல கோடி ஆண்டுகளாக மனிதர்கள் வாழும் இந்த பூலோகத்தின் வரலாறை அகிலத்திரட்டு அம்மானை 7 யுகங்களாக பிரித்து ஒவ்வொரு யுகங்களிலும் தோன்றிய அரக்கர்களையும், அவர்களால் உயிரினங்களுக்கு ஏற்பட்ட கேடுகளையும் அவற்றை அவ்வப்போது அவதரித்த இறைவன் சீர் செய்து தர்மத்தை நிலை நாட்டியதையும் தெளிவாக கூறியுள்ளது. அகிலம் சொல்லும் ஏழு யுகங்களும் அந்ததந்த யுகங்களில் தோன்றிய அரக்கர்களின் பெயர்களும் கீழே சொல்லப்பட்டுள்ளன.
நீடிய யுகம்
அரக்கன் :குறோணி
இறை அவதாரம்: நாராயண மூர்த்தி
ஆயுதம் : இறைவேகம்
சதுர யுகம்
அரக்கன் :குண்டோமசாலி
இறை அவதாரம்: மாயன்
ஆயுதம் : தூண்டில்
நெடிய யுகம்
அரக்கன் :தில்லை மல்லாலன், மல்லோசிவாகனன்
இறை அவதாரம்: திருமால்
ஆயுதம்: கணை / அம்பு
கிரேதா யுகம்
அரக்கன் :சிங்கமுகாசுரன் , சூரபற்பன்
இறை அவதாரம்: ஆறுமுகன்
ஆயுதம்: சக்தி வேல்
அரக்கன் :இரணியன்
இறை அவதாரம்: நரசிம்மம்
ஆயுதம் : விரல் நகம்
திரேதா யுகம்
அரக்கன் : இராவணன்
இறை அவதாரம்: இராமபிரான்
ஆயுதம் : இராமபாணம் (அம்பு)
துவாபரயுகம்
அரக்கன் :துரியோதனன்
இறை அவதாரம்: ஸ்ரீ கிருஷ்ணன்
கருவி : பீமன்
ஆயுதம் : தண்டாயுதம்
கலியுகம்
அரக்கன் :கலி (மாயை)
இறை அவதாரம்: வைகுண்டர்
ஆயுதம் : அன்பு, தர்மம், பொறுமை
முதல் ஐந்து யுகங்களில் இறைவன் தானே நேரடியாக அரக்கர்களை துவம்சம் செய்கிறார். வித விதமான ஆயுதங்கள் பயன்படுத்த படுகின்றன.ஆறாவது யுகமான துவாபர யுகத்தில் தனது தொண்டர்கள் மூலமாக தனது நேரடி பார்வையில் துரியோதனனை அழிக்கிறார். சத்த பலம் கொண்டவர்களையும் பீமன் மூலம் வதைக்கிறார்.
ஏழாவது யுகமான கலியுகத்தை அழித்து தர்மயுகத்தை தோற்றுவிக்க , மண்ணில் பிறந்த மிகவும் சக்திவாய்ந்த இறைவனின் அவதாரமாக , முப்பொருளும்( பிரம்மா, விஷ்ணு, சிவன் ) ஒருபொருளாய் இணைந்து , அய்யா வைகுண்டர் அவதரித்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. இந்த யுகத்தில் இறைவன் கலியை அழிப்பதற்கு புத்திமதிகளை தந்து விட்டு சென்றிருக்கிறார். கலியை அழிக்கும் பொறுப்பை சான்றோர்களின் வசம் விட்டு விடுகிறார்.
"மானமாக வாழ்ந்திருந்தால் மாளும் கலி தன்னாலே "
கலியை வெல்வதற்கு ஆயுதம் தேவையில்லை. அய்யா வைகுண்டர் எந்த ஆயுதமும் கையில் எடுக்கவில்லை. மாறாக அன்பு சேகரிக்க வந்தார் என்று அகிலம் சொல்கிறது.
அன்பென்னும் ஆயுதம் காயங்களை காயப்படுத்தாது. உள்ளங்களையும் காயப்படுத்தாது. அது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இதனை கொண்டு எதனையும் வெல்லலாம்.
கலியை வெல்வதற்கு பணம் தேவையில்லை. எனவே தான் அய்யா பண்டாரமாக அவதரித்தார். அரசனை வெல்வதற்கும் ஆண்டிகோலமே பூண்டார். படை எடுத்து வெல்லவில்லை. பண்பாலும்,பணிவாலும், துணிவாலும்,பொறுமையாலும் வென்றார்.
கலி என்பது நீசமடைந்த மாயை . உறவாடி கெடுக்கும். அறிவின் எதிரி. இது உடலால் வேறுபடுவதில்லை. உள்ளத்தால், எண்ணத்தால் வேறுபடுகிறது. எனவே தான் அய்யா நமக்கு ஞானபொக்கிஷமான அகிலத்திரட்டை கொடுத்துள்ளார். நமது உள்ளங்களை தூய்மைபடுத்தி ,சீர் படுத்தி, பதபடுத்தி, எங்கும் நிறைந்த இறைவனை உள்ளத்தில் நிரந்தரமாக நிலை படுத்தினால் மாயை நீங்கும். இருள் அகலும். தர்மம் பிறக்கும்.
அகிலத்திரட்டு நம் கையில் கிடைத்துள்ள மாபெரும் சக்தியாகும். ஆண்ட பகிரண்டம் வெல்ல அய்யாவால் கொடுக்கப்பட்ட ஆயுதமாகும். சரியாக அறிந்து, புரிந்து பயன்படுத்துவோர் கலியை வெல்வதும், தர்மயுகம் காண்பதும் நிச்சயம்.
அய்யா உண்டு

அய்யா உண்டு

இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி கடற்கரையில் நின்று கொண்டு கடலை நோக்கினால் ஒருகடல் தான் தெரியும். அது இந்தியபெருங்கடல்,வங்காள விரிகுடா, அரபிக்கடல் என மூன்று கடல்களின் சங்கமம் என்றும் சொல்கிறார்கள். ஒரு கடல், ஓரே நிறம், ஒரே சுவை ஆனால் மூன்று பெயர்கள் . பிரித்து கொண்டது மனிதன் தான். தனது வசதிக்காக த்தான் அவ்வாறு செய்துள்ளான். ஆனால் கடல் ஒன்றே. மனிதன் அதற்க்கு பெயர் சூட்டுமுன்னும் , பெயர் சூட்டிய பின்னும் கடலின் நிலையில், தன்மையில் மாற்றங்கள் இல்லை. மனிதன் ஒன்றை மூன்றாக பிரித்து பார்க்கிறான். அவை மூன்றும் ஒன்றாக இணைவதாகநினைத்து மகிழ்வதும் அவனே.
இறைவனையும் அவ்வாறே இறைவனின் மூன்று நிரந்தர தொழில்களை ( படைத்தல், காத்தல், அழித்தல் ) ஆதாரமாக கொண்டு மூன்று மூர்த்திகளாக ( பிரம்மா, விஷ்ணு, சிவன்) பிரித்தான். இது மனிதனின் சுபாவத்தை காட்டுகிறது.வர்ணாசிரம தர்மங்களையும், செய்யும் தொழிலுக்கேற்ப சாதிகளையும், பிரித்த மனிதன், சாதிகளுக்கேற்ப இறைவனையும் பங்கு வைத்து கொண்டான். வேதம் கற்றவன் அதனை கல்லாதவனை கீழானவனாக பார்த்தான். கீழாக்கி வைத்தான். அவனுக்கும் வேதங்களை கற்றுகொடுத்து மேலானவனாவனாக மாற்ற முயற்சி செய்யவில்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரிவினை ஏற்பட்டது. தாழ்ந்தவன் ஒருகட்டத்தில் இறைவனை ஆலயத்திற்குள் சென்று வணங்கும் உரிமையும் மறுக்கப்பட்டு தன விருப்பம்போல் வரையறைகள் ஏதும் இல்லாமல் இறைவனை தானே படைத்து தானே வணங்கி தன்னை சமாதான படுத்தி, சந்தோசப்படுத்திகொண்டான் .
பணத்தை நேர்வழியிலும் குறுக்கு வழியிலும் சம்பாதித்து செல்வந்தர் ஆனவர்கள், வறியவர்களையும் எளியவர்களையும் கருணையின்றி நடத்தினர். பணம் பணக்காரர்களை நோக்கியே பயணித்தது. ஏழைகள் பணத்தை தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கிறார்கள் . இலக்கும் விரைந்து ஓடிகொண்டிருப்பதால் பயணம் முடிவின்றி தொடர்கிறது. பணக்காரன் ஏழையை இன்னும் ஏழையாக்கி பணத்தை பாவமாக்கி மூட்டையாக கட்டிகொண்டிருக்கிறான்.பணம் தான் வாழ்க்கை என்று சிலர் அவசர முடிவுக்கு வந்து வழி தவறி தவறான வழிகளில் பணம் ஈட்ட முற்பட்டதால் தர்மம் நிலை தவறுகிறது. அதர்மம் தலை தூக்குகிறது.
நேர்மையானவர்களின் தாழ்வுநிலை அவர்களுக்கு இறைவன் தந்த சோதனைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. காலப்போக்கில் பணத்தாலும், இனத்தாலும் ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் யாரென்றால் சான்றோர்கள் தான். பிழைக்க தெரியாதவர்கள் என்று சிலர் அவர்களுக்கு பட்டமும் கட்டினர். நேர்மையானவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் , தவறான வழியில் முன்னேறு வோர்க்கு கிடைக்கும் மரியாதைகள், சுகங்கள்,வசதிகள் சாதாரண மனிதனின் மனதை மாற்றி,வாழ்க்கைபாதையை திசை திருப்புகின்றன. நீதி நூல்களும், வேதங்களும் , புராண இதிகாசங்களும், நநூல்களும், சாத்திர , சம்பிரதாயங்களும் சொல்லும் வாழு நெறியை மீறி அன்பு, தர்மம், நீதி, நேர்மை, ஒழுக்கம், உழைப்பு, இவை எதுவும் இன்றி வாழமுடியும் என்று நம்பும் மனிதன் தான் வாழ பிறரை கெடுக்க நினைக்கிறான். மனிதனின் தோல்விக்கு காரணங்களாக பல கற்பனையான விஷயங்கள் கற்பிக்க படுகின்றன. அவற்றிலிருந்து விடுபட பரிகாரங்கள் என்ற பெயரில் பல்வேறு மூட நம்பிக்கைகள் விதைக்கப்படுகின்றன. இறை நம்பிக்கையை இழந்து மனிதன் உண்மை பொய் எது என்றறியாமல் திக்கு திசை தெரியாது திரிகின்றான். மனக்கட்டுப்பாடு இழந்த மனிதன் காட்டு மிருகங்களிலும் கேடாக வாழ்கிறான். கலியுகம் இவ்வாறே தொடங்கி தொடர்கிறது.
இப்படியாக வளர்ந்த கலியினை அழிக்க , மனிதனை மீண்டும் மனிதனாக்க, இறைவன் அவதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காரணம் தான் பெற்ற பிள்ளைகள், ஞானக்கண் கட்டுண்டு, தட்டுண்டு தடுமாறி , தடமாறி கலியில் ( மாயைகையான நினைவுகளில் ) உழல்வதை இறைவனால் பொறுத்துக்கொண்டு சகித்து கொண்டு இருக்க முடியவில்லை.
கலியை அழிக்க அய்யா நாராயணர் வைகுண்டராக அவதரிக்கின்றார். கலியின் பிறப்பிற்கு காரணமாகிய இறைபாகுபட்டினை களைய நினைத்த அய்யா முப்பொருளும் ஒருபொருளாக அவதரிக்கின்றார்.
உலகில் சமநிலையை கொண்டு வர நினைக்கும் அய்யா உயர்ந்த நிலையில் இருப்போரை கீழிறங்கி வரசொல்லவில்லை. மாறாக தாழ்ந்தவரை உயர்நிலைக்கு கொண்டு வர அறிவுறுத்துகிறார். கலி மாய நினைவுகள் நீங்குவதற்காக அகிலத்திரட்டு அம்மானை என்னும் புதிய வேதத்தை தந்து அதில் விஞ்சை என்னும் வாழும் வழியை உலகில் வாழும் மனிதர்க்கு அருளுகிறார்.
நாரணர் வைகுண்ட மாகி நாட்டினில் வந்த அன்றே
காரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சு
பூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள்
சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே
அய்யா உண்டு

முப்பொருளும் ஒரு பொருளே

அகிலத்திரட்டின் கீழ் கண்ட பகுதிகளில் அய்யா வைகுண்டர் முப்பொருளும் ஒரு பொருளாய் வந்தார் என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சிவன் திருமால் ஐக்கியம்
அப்போது ஈசுரரும் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போது மைத்துனரே யானென்ன சொல்வதுதான்
நீர்நினைத்த துபோலே நிச்சயித்துக் கொள்ளுமென்றார்
பாரனைத்துங் காக்கும் பரமே சுரருரைத்தார்
அப்போது பாரளந்த அய்யாநா ராயணரும்
முப்பொருளு மொன்றாய் ஒத்திருந் தேதுசொல்வார்
திரு நடன உலா
தாணுமால் வேதன் தற்பொருளாய் முப்பொருளும்
ஆணுவமா யொன்றி லடங்குதோ - அஞ்செழுத்தும்
ஆனா அரியெழுத்தும் ஆங்கார மூன்றெழுத்தும்
ஓநமோ வென்றதுக்குள் ளொடுங்குதோ
வைகுண்டர் பிறப்பு
மாதே வுனக்கு வளர்பிறவி பத்தெனவும்
சீதே வுனக்குச் சிறந்தபேறு பத்ததிலே
பலம்பேறு பேறாய் பார்மகிழ வோர்பாலன்
சிலம்பே றுடையவனாய் சிவனுக் குகந்தவனாய்
எகாபர முமகிழ யானும் நீயுமாக
மகாகுரு வதாக மகிழ்ந்து மகிமையுடன்
தன்மச் சிறப்பதிகத் தலைவன் தனைப்பெறவே
உண்மையாய் நானுனக்கு உபதேச மாயுரைத்தேன்

நாரணர் வைகுண்டருக்கு விஞ்சை அருளல்
எண்ணிறந்த கோடி இயல்பாவஞ் செய்தோர்க்கும்
நண்ணியே மோட்சம் நவிலவென்றா லுன்மனந்தான்
முக்கோடி தர்மம் உவந்தளித்த அன்போரைத்
தக்கோடி நரகமதில் தள்ளவென்றா லுன்மனந்தான்
உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகனே
எனக்கேற்க நின்றவரை இரட்சிப்பது முன்மனந்தான்
சிவனும்நீ நாதனும்நீ திருமாலும் நீமகனே
தவமும் வேதனும்நீ சங்கமுத லெங்கும்நீயே
வைகுண்டர் தெட்சணத்தில் எழுந்தருளல்
என்றிந்த விவர மெல்லாம் எழுதியே உலகில் விட்டு
நன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதி ருதிக்கும் வேளை
பண்டிந்த மூலந் தன்னில் பஞ்சமி நேரந் தன்னே
குண்டத்தின் அரசு கோமான குவலய மதிலே வந்தார்
நாதன் குருநாதன் நாரா யணநாதன்
மாதவனுந் தெச்சணத்தில் மாமருந்து மாவடியில்
மணவைப் பதிமுகத்தில் மாதுகன்னிப் பார்வையிலும்
இணையானப் பஞ்சவரில் ஏற்ற அரிச்சுனனும்
மணமான நாதன் மகாபரனைத் தானாடி
வணங்குந் தவத்தால் வந்ததா மரைப்பதியில்
தெச்சணா மூலை தென்வாரி யற்றமதில்
மிச்சமுள்ள தேவர் முழங்கிக் குரவையிடத்
தேவர் திசையெட்டும் செயசெய எனநெருங்க
மூவ ரதிசயமாய் மோடுவழி தாள்திறந்து
ஆரபா ரத்துடனே அவர்கள்வந்து பார்த்துநிற்க
வீரநா ராயணரும் வித்தாரத் தெச்சணத்தில்
பள்ளிகொண்டா ரென்று நாமம் பரந்திடவே
துள்ளியே சொரூபம் சுற்றினா ரம்மானை
வைகுண்ட மென்று மனுவோ ரறிந்திடவே
மெய்கொண்ட நாதன் மேவிநின்றார் தெச்சணத்தில்
வேதவியாசர் முக்காலம் உரைத்தல்
ஆகாத்த பேரை எல்லாம் நரகமதில்
வாகாகத் தள்ளி வாசல்தனைப் பூட்டிச்
சித்தத்துக் கேற்ற செடத்தோரைத் தானெழுப்பிப்
பத்தரைமாத் துற்றப் பைம்பொன்னிறப் பொற்பதியில்
சாகா வரங்கள் சனங்களுக் கேகொடுத்து
வாகாக நல்ல வரிசை மிகக்கொடுத்து
ஆண்பெண் ணுடனே அதிகவாழ் வுங்கொடுத்துக்
காணக் காணக்காட்சிக் கனமாய் மிகக்கொடுத்துச்
செல்ல வைகுண்டர் சீமையைம்பத் தாறதையும்
அல்ல லகற்றி அரசாள்வா ரீசுரரே
மும்மூர்த்தி யெல்லாம் ஒருமூர்த்தி யாயிருக்கும்
எம்மூர்த்தி யெல்லாம் இயல்மூர்த்தி போலிருக்கும்
வைகுண்டப் பெம்மான் வாய்த்தசெந் தூர்க்கடலில்
மைகொண்ட நாதன் வந்து பிறப்பதுதான்
வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்தபுவி தெச்சணமே
வைகுண்டர் தவம் செய்தல்
இத்தவ மதிலீ தெல்லாம் இயல்புடன் வசமே யாகக்
குற்றமே செய்வோ னீசக் கொடுகலி வழிகள் சாகக்
கர்த்தனார் கர்த்த னாகக் கலியுகத் தீர்வை யாக
உற்றவை குண்ட சுவாமி ஒருகுடைக் கரசும் பெற்றார்
நாரா யணரே நல்லவை குண்டமெனச்
சீராக தெச்சணத்தில் சிறந்ததவஞ் செய்யலுற்றார்
கலி நீசன் சோதனை
உடனே சறடன் உபாயமதைப் பார்ப்போமென்று
தடதடென எழுந்து சாராய மானதிலே
அஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவி
நஞ்சில்லை யென்று நல்லபா லென்றீந்தான்
பாலென்ற போது பச்சைநா தன்மகிழ்ந்து
காலனைக்கா லாலுதைத்தக் கடவுளார் தாமகிழ்ந்து
வேண்டி யகமேற்றார் வேதநா ராயணரும்
கடுவாய் வைகுண்டரை வணங்கிப்பணிதல்
சாமியென்ற சாணானைச் சோதிக்க வேணுமென்று
ஆமியமாய்க் கடுவாய் அதோகொண்டு வாறாரெனப்
பார்க்க வருஞ்சனங்கள் பலசாதி யுங்கோடி
போர்க்குத் திரள்போல் போற வகைபோலே
எண்ணிறந்த நருட்கள் இதிற்கூடி வந்தனரே
மண்ணளந்த நாதன் மனமகிழ்ந் தேயிருந்து
சாமி யருகில் சூழ்ந்திருந்த சான்றோர்கள்
நாமினித்தான் செய்வதென்ன நாதனே யென்றுசொல்லி
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
நாட்டுக் கரிவிரிதி நாளன் நாரா யணனும்நான்
பட்சி பறவை பலசீவ செந்துக்களை
நிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும்நான்
மண்ணே ழளந்த மாயப் பெருமாள்நான்
விண்ணே ழளந்த விஷ்ணு திருவுளம்நான்
ஏகம் படைத்தவன்நான் எங்கும் நிறைந்தவன்நான்
நாதக் கடல்துயின்ற நாகமணி நானல்லவோ
ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன் றானதினால்
சீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ
இந்நீச னெல்லாம் என்னையறி யாதிருந்தால்
மின்னிலத்தில் நான்படைத்த மிருக மறியாதோ
என்றே யடக்கி ஏகந் தனைநினைத்து
ஒன்றுக்கு மஞ்சாதே உற்றமக்கள் சான்றோரே
பதறாதே யென்றனுடப் பாலகரே யென்றுசொல்லி
இதறாதே மாயவனார் இருந்தார்கா ணம்மானை
பகவதி அம்மை காண்டம் படித்தல்
என்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு
மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்ப மாயழுதாள்
புலம்பிடத் திருமால் மாதைப் பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணே
சலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு
பலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய
நலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே
நானென்ற ஈச னானால் நானிலம் பிறவார் கள்ளக்
கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலே
தானென்று உலகில் தோன்றி சடாட்சர ஆட்டு மாடி
நானென்று வேடம் பூணும் நாரணன் நீதா னென்றாள்
நாரணன்நீ நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணே
காரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதி
நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு
வாரணக் குயில்போல் வன்ன மயிலென வுரைத்தா ரையா
உரைத்திடு மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்று
வரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச் சொல்வாள்
நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச னென்று
துரைத்தன மாகச் சொல்லச் சுணையுண்டோ வுனக்கு என்றாள்
சாதிக்குச் சாதி நீயும் சமைந்துநல் வேடம் பூண்டு
தாதிக்குக் கணவன் போலும் சடமெடுத் துடல்கள் போட்டு
வாதிக்குப் பிறப்பாய்ப் பின்னும் வழியுன்றன் குலமே கந்தன்
சாதிக்குச் சரியே வுன்றன் தன்குல மறிவே ளானும்
அறிவே ளானென்ற பெண்ணே ஆதியு மெனதுள் கண்டாய்
தறுமொழி சொல்ல வேண்டாம் தாணுமா லயனும் நானே
உறுமொழி யொருசொற் குள்ளே உகமதை யாள நானும்
மறுமொழி யில்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே

சிவபெருமான் ரோமரிஷிக்கு சொன்னது
நாடுகுற்றங் கேட்டு நல்லோரைத் தேர்ந்தெடுத்துக்
கேடுகலி நீசருட கிளைவழிக ளுமறுத்துத்
தெய்வ சான்றோர்களுக்குச் செங்கோல் மிகக்கொடுத்து
மெய்வரம்பாய்த் தர்ம மேன்மைமுடி யுந்தரித்துத்
தரும புவியாளத் தாட்டீக வைகுண்டரும்
பொறுமைக்குல மானதிலே பிறக்கிறா ரானதினால்
நாங்க ளெல்லோரும் நமனுவர்க் குள்ளாவோம்
தாங்கி யொருபொருள்போல் தாமிருப்போ மப்பொழுது
ஒருபொருளாய் வந்து உருவெடுப்ப தானதினால்
திருமடந்தை யாவரையும் செய்யுமன்னர் தாமவராம்

அய்யா உண்டு

தர்மயுகம் எங்கே? யாருக்கு ? எப்போது?

அகிலத்திரட்டில் காணும் கீழ் கூறப்பட்ட வரிகள் சப்த கன்னியருக்கு பிறந்த ஏழு சான்றோர்களுக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும்தர்மயுகம் நிச்சயம் உண்டு என்பதை உறுதி செய்கின்றன. நாம் செய்யும் கர்மங்கள் / செயல்களைப்பொறுத்து தர்மயுகதிற்க்கு நாம் தேர்வு செய்யப்படும் காலங்கள் மாறுகின்றன. பிறவிகளின் எண்ணிக்கையும் மாறலாம்.அகிலத்தை கற்று ,தர்மங்கள் செய்து அய்யா கூறிய வழியில் நடந்தால் தர்மயுகம் நமக்கு வெகு சமீபத்தில் இருக்கிறது என்பதை நாமே உறுதி செய்து கொள்ளலாம்.
1.தேவலோகத்தார் மனுப்பிறப்பு
மக்களே நீங்கள் வையகத்தி லேபிறந்தால்
வக்கலிய னேதுவினால் மாயமுங்க ளைச்சூழ்ந்து
என்பேரு மீசர் ஏற்றஉமை யாள்பேரும்
தன்பேருஞ் சொல்லாதே என்று தடுத்தடிப்பான்
ஆனதால் சாவுவரும் ஆனாலு முங்களுயிர்
மானமது மாறாமல் மாறியவ் வினத்திலுறும்
இப்படியே வுங்களைநான் இரட்சித்துக் காக்குமட்டும்
எப்படியு முங்களுயிர் இதில்விட் டகலாதென்றார்
நல்லதுகா ணென்று நாட்டமுற்றுத் தேவரெல்லாம்
வல்ல வகையான வாய்த்தசா ணாரினத்தில்
தேவ ருயிர்பார்த்துச் சென்றுதித்தார் தேவரெல்லாம்
2.எமலோகத்தார் மனுப்பிறப்பு
இன்ன முன்வழிகள் என்மகவா யங்கிருக்க
வன்னமுட னவ்வழிதான் வாய்த்தசா ணாரினத்தில்
போய்ப்பிறந்து நன்றாய்ப் புவிமீதி லேவளர்ந்து
மேற்பிறவி வந்திடினும் மேவுவ தவ்வழியில்
இப்படியே பிறந்து என்று மிடறுசெய்து
எப்படியு மென்குடும்பத் தாலே யிருளகன்று
3.சொர்க்கலோகத்தார் மனுப்பிறப்பு
இன்னம் பிறவி இனத்திலுயி ரென்மகவாய்
வன்னமுள்ள சான்றோர் வழியி லிருப்பதினால்
காலக் கலிதான் கட்டழித் தென்மகவு
மேலுக மாள விடைநிச்சித் திருப்பதினால்
நீங்களும்போ யங்கே நிங்ஙளுட தன்வழியில்
மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய்
வாழுகின்ற நாளையிலே வருவே னானுங்களிடம்
நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ
ஏவல்கண் டுங்களைநாம் இரட்சித்து ஆண்டுகொள்வோம்
4.பிரமலோகத்தார் மனுப்பிறப்பு
நடக்கக் கருமமிது நாரணரே பொய்யாது
முன்னமே யெங்கள் முறைவழியி லோருயிரை
வன்னமுள்ளச் சாணாராய் வகுத்தீரே யும்மகவாய்
...............................
ஆனதால் நீங்கள் அவனியி லென்மகவாய்
ஈனமில்லா துங்கள் இனத்தில் பிறந்திருங்கோ
வாழுங்கோ கலியன் மாய்கையால் சாவுவந்தால்
பாழுபோ காதேவுயிர் பதியுமுங்கள் தம்வழியில்
நான்வந் துங்களையும் நாட்ட முடனெடுத்து
மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன்
என்று பிரம இராச்சியத் தோர்களையும்
அன்று பிறவி அமைத்து அனுப்பினர்காண்

5.வைகுண்டலோகத்தார் மனுப்பிறப்பு
என்மக்க ளேழும் இயல்கலியில் பட்டுழன்று
வன்மக் கலியதனால் மாறிமிகச் செய்ததெல்லாம்
நான்பொறுத் துங்களுக்காய் நானே தவசுபண்ணி
வான்சிவனுக் கேற்க வாய்த்த தவமிருந்து
மக்களேழு பேர்கள் வம்மிசங்க ளுள்ளதெல்லாம்
ஒக்கவொன்று போலே உகந்தெடுத் துண்மையுடன்
நாடாள வைப்பேன் நல்லமக்க ளேழ்வரையும்
தாடாண்மை யான சத்தியுமை தன்னாணை
நீங்களென்ன குற்றம் நிலையில்லாச் செய்தாலும்
தாங்கிப் பொறுப்பேன் தருவே னானல்லபுத்தி
உங்கள்கர்ம மெல்லாம் ஒக்கத் தொலைப்பதற்கு
மங்களமாய்ச் சிவனை வருந்தித் தவசுபண்ணி
நானுங்க ளாலே நல்ல தவசிருந்து
மானுபங்கள் கெட்ட மாகலிய னுகத்தில்
தாயும் தகப்பனையும் தான்பழித்த துற்கலியில்
பேயுங் கலிநீசப் பிறப்பைச் சோதித்தறுத்து
தாடாண்மை தர்மம் தழைக்கவைத் துங்களையும்
நாடாள வைப்பேன் நம்மாணை தப்பாது
என்றுரைக்க அய்யா எல்லோருஞ் சம்மதித்து
நன்மையுள்ள தர்மியெல்லாம் நல்லசான் றோர்குலத்தில்
மேன்மையோ ரெல்லாம் மேதினியி லேபிறந்தார்
6.சிவலோகத்தார் மனுப்பிறப்பு
நல்லதுதா னெனவே நாட்டமுற் றெம்பெருமாள்
வல்லமக்க ளான வாய்த்தசா ணார்குலத்தில்
ஏழு மக்களிலும் ஏற்றவா னோர்வழியில்
மாளுவந்தா லுமதிலே மாறாப் பிறக்கவென்றும்
நாரா யணர்புவியில் நல்லமக்க ளேழ்வரையும்
சீராக வந்தேற்றுச் செய்தவினை யும்நீக்கி
ஊழூழி காலம் உயிரழியா வண்ணமும்தான்
ஆழிக்கரை யான்மகவு அரசாள்வா ரென்றுசொல்லி
சொல்லிப் பிறவி செய்தார்காண் சாணாராய்
நல்லதென்று வானோர் நாடி யகமகிழ்ந்து
சாணா ராய்வந்து தானுதித்தார் வையகத்தில்
வாணா ளறிந்து வானோர் மிகப்பிறந்தார்
7.பரலோகத்தார் மனுப்பிறப்பு
எல்லோரு மென்மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ
வல்லோரே யுங்களைநாம் வந்தெடுப்போ மஞ்சாதே
என்மக்க ளேழும் ஈன்றவழிச் சான்றோரை
பொன்மக்க ளான பூமக்கள் தங்களுக்கு
என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத்
தன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன்
இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப்
பிறப்பிறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன்
ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி
மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை
என்றாணை யாதி நாரா யணர்கூற
நன்றாக மாமுனிவர் நல்லதென்று சம்மதித்து
அய்யா வுமது அருளின் படியாலே
மெய்யா வுமது விந்து வழிக்குலத்தில்
படையுமையா சாணாராய்ப் பரமனே யென்றுநின்றார்

அய்யா சான்றோர்க்கு இரங்கல்
.......................................
.....................................
ஆணை மகனே அசையாதே கண்மணியே
சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத்
தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய்
வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம்
அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க்
குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே

அகிலத்தின் வழியில் செல்லுவோம்.
தர்மயுகம் நிச்சயம் காண்போம்
அய்யா உண்டு.