வியாழன், 26 ஏப்ரல், 2018

வைகை அணை உடைதல்

பாரியது பொழிந்து வைகையது உடைத்து
ஏரி வழிந்தது இராச்சியத்தைத் தானெடுக்க
வெள்ளம் பெருகி வெம்மருண்ட தம்மானை
வி=கலியுகத்தில் சோழ நாட்டில் மழை அதிகமாக பெய்த காரணத்தால் வைகை அணை நிரம்பி உடைந்து விட்டது
ஏரிகளெல்லாம் நிரம்பி தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது
வெள்ளப் பெருக்கினால் விவசாய நிலங்கள் மற்றுமுள்ள நிலங்களும் ஒன்று போல் காட்சி அளித்ததால் மக்கள் பயந்தனர் அம்மானை
==
உள்ளமகிழ்ச் சோழனுக்கு உடனே தானாளோடி
மனுநீதிக் காவலவா வைகை அடையா திருந்தால்
இனித் தேசந் தன்னை யாம் தேட ஞாயமில்லை
வி=மன்னரிடம் சொன்னால் உடனே தீர்ப்பு கிடைக்கும் என்ற சந்தோசத்தில் உடனடியாக மன்னரிடம் சென்றனர்
மக்களுடைய மனுநீதியை காக்கும் மன்னவரே வைகை உடைப்பை உடனே அடைக்க வேண்டும் அடைக்காமல் இருந்தால்
நம்நாடு எப்படி இருக்கிறது என்று தேடிப் பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் அழிந்து போகும் என்றனர்
==
ஊரை அரித்து உவரிதனில் கொண்டேகும்
பாரை மிக ஆளுப் பத்தியுள்ள சோழ மன்னா
என்று குடியானவர்கள் இராசனுக்கே உரைத்து
வி=வெள்ளப் பெருக்கால் ஊரையே இழுத்து கடலுக்குள் கொண்டு சேர்த்து விடும்
பரந்த தேசத்தை பெருமையோடு ஆண்டு கொண்டிருக்கும் சோழ மன்னா காப்பாற்றும்
சோழ நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த கிராம விவசாய மக்கள் எல்லாம் மன்னரிடம் கூறி அழுதனர்
==
அன்று தான் வைகை அணையடைக்க வேணுமென்று
எல்லா வகைச் சாதி இப்போ வரவழைத்து
வி=மக்கள் அழுததை பார்த்த மன்னன் வைகை அணையை உடனடியாக அடைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தான்
மன்னன் சோழ நாட்டில் வாழ்கின்ற எல்லா இனத்து மக்களையும் உடனடியாக வரும்படி வரவழைத்தான்
==
வல்லப் புகழ் மன்னன் வைகை அணையில் வந்து
வி=சீரும் சிறப்புமாக புகழோடு நாட்டை ஆண்டுக் கொண்டிருந்த சோழ மன்னனும் வைகை அணைக்கு வந்தான்
==

மண்ணோடு கல்லும் மரங்கள் மிக வைக்கோலும்
எண்ணக் எண்ணக் கூடாத ஏதுவகையான தெல்லாம்
கொண்டு வந்தே அணையில் கூறிட்டுத் தானடைக்க
வி=மண்ணையும்.கற்களையும்
மரம்.செடி கொடிகளையும் பெரியப் பெரிய வைக்கோல் போர்வைகளையும்
கண்ட கண்ட பொருட்களை எல்லாம் கையில் கிடைத்தது
பார்த்தது என எதுவாக இருந்தாலும் அவைகளை
எல்லாவற்றையும் கொண்டு வந்து அணையைப் பலப் பகுதிகளாக பங்கு வைத்து அடைக்கச் சொன்னான்
==
அன்றடை படாமல் அறிவழிந்து சோழ மன்னன்
அய்யோ பாழாக அவனிதான் போகுதன்று
வி=மக்கள் முயன்றும் முதல்நாள் அடைக்க முடியாமல் ஆகிவிட்டது எனவே மன்னன் சுயநினைவை இழந்து நின்றான்
அய்யோ நம்முடைய நாடு தண்ணீரில் போகுதே என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் ஆவேசப்பட்டு விட்டான்
==
மெய்யோடு மெய் குழறி வெம் மருண்டு நிற்கையிலே
கோழனென்ற மாநீசக் குலத்தில் உதித்த வந்த
ஈழனொரு பொல்லாதான் என் செல்வா னம்மானை
வி=உடல் நடுங்கி வாய்க்குழிறி வார்த்தைகளை பேச முடியாமல்
அதிர்ச்சியோடு மதியிழந்து நின்று கொண்டிருக்கும் போது
கோள் சொல்லக்கூடிய கொடியவன் ஒருவன் நீசக் குலத்தில் பிறந்து வந்த நல்லது கெட்டது பற்றி யோசனை இல்லாதவன்
ஈழ குலத்தைச் சேர்ந்த கலி பிடித்த நீசன் என்ன சொன்னான் தெரியுமா சொன்னதைக் கேள் அம்மானை
==
மன்னவனே இந்த வைகை மலையெடுத்து வத்தாலும்
இன்னமிது கேளா ஏலாது நம்மாலே
வி=சோழ நாட்டை ஆண்டு வரும் மன்னரே இந்த வைகை அணையை அடைக்க மலையை கொண்டு வைத்தால் கூட
வைத்த இடம் தெரியாது பொய்விடும் எனவே இந்த வெள்ளப் பெருக்கைத் தடுக்க மக்களால் இயலாத காரியம்
==
தெய்வக் குலச் சான்றோராய் சித்திர மாகாளி
கையதுக்குள் பிள்ளையெனக் கட்டாய் வளருகிறார்
வி=ஆனால் ஒரு வழி இருக்கிறது என்று சோல்லி தெய்வ குலத்து சான்றோராய் சிறப்பான பத்திரமாகாளியின்
கட்டுப்பாட்டுக்குள் வளர்ப்பு பிள்ளைகளாக பெருந்தன்மையுடன் பலம் உள்வர்களாய் வளர்ந்து வருகிறார்கள்

சோழன் சான்றோரை அழைத்தல்

அந்தச் சான்றோரை அழைத்திங்கே கொண்டு வந்து
இந்த அணையடைக்க ஏலும் என்றான் அம்மானை
வி=அந்த தெய்வக்குல சான்றோரை இங்கே அழைத்து வரும்படி செய்து அவர்கள் மூலமாக அடைக்கலாம் என்றான்
சான்றோரால் மட்டுமே இந்த அணையை அடைக்க முடியும் வேறு யாராலும் அடைக்க முடியாது என்றான் அம்மானை
==
அப்போது சோழன் அந்த நீசக் கலியதினால்
இப்போதே மயங்கி என் சொல்வான் மன்னனுமே
வி=நீசன் சொன்ன அறிவுரையைக் கேட்ட சோழன் அந்த நீசக்கலியன் சொன்ன வார்த்தைகளை நம்பி
அந்த இடத்திலே விடவு காலம் கிடைத்துவிட்டது என்று மனம் மயங்கி மன்னன் மந்திரியிடம் கூறுகின்றான்
==
மந்திரியே நம்முடைய வாய்த்த படைத்தலைவா
தந்திரியே நீங்கள்சென்று சான்றோரைத் தான்கூட்டி
வாருமென்று செல்லி மன்னவன் ஏவிடவே
வி=என்னுடைய அருமை மந்திரியே நம்முடைய சக்தி வாய்ந்த படைகளுக்கு எல்லாம் தளபதியே
தந்திரமாகப் போர் செய்யும் ஆற்றல் பெற்றவனே நீங்கள் பொய் பத்திரகாளி வளர்க்கும் சான்றோர்களை இங்கே வரும்படி
அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டு அவர்களை அனுப்பி வைத்தான்
==
சேருமென்று சொல்லிச் சேவுகர்கள் தான் விரைந்து
அழைத்து வந்தார் சான்றோரை அரசன் மிகக் கொண்டாடி
தழைத்த புகழ் சான்றோரை சந்தோசமாக இப்போ
வைகை தனையடைக்க வழிபாரும் என்றுரைத்தார்
வி=அழைத்து வந்து என்னிடம் சேருங்கள் என்று சொன்னவுடன் மந்திரி தன்னுடைய சேவகர்களுடன் வேகமாகச் சென்று
வரவழைத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள் சான்றோர்களை பார்த்த அரசன் மிகவும் சந்தோஷமாக வரவேற்று
நிலையான புகழின் உச்சியில் நிற்கின்ற சான்றோரே நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு இந்த
வைகை அணையை அடைக்க உங்களால் மட்டுமே முடியும் எனவே நல்ல வழியைக் கண்டுபிடித்து அணையை அடையுங்கள் என்றார்
==

செய்கை முடிச் சான்றோர் தேச மன்னரோடு உரைப்பார்
வி=செய்கின்ற செயலை வெற்றியோடு செய்து முடிக்கும் சான்றோர்கள் சோழ மன்னரிடம் கூறினார்கள்
==
நல்லதல்ல மன்னவனே நம்மோடு இது வுடைக்க
இல்லையிந்த வேலை இதற்கு முன்னே கேட்டிலையே
வி=மன்னவரே நீங்கள் எங்களைப் பார்த்து இவ்வாறு சொன்னது நல்ல விஷயம் அல்ல என்று கூறினார்கள்
நாங்கள் இதுபோன்ற வேலைகளை செய்ததே கிடையாது என்பதை நீங்கள் இதற்கு முன்னால் கேள்வி பட்டதில்லையா
==
வெட்டாப் படையை வெற்றிக் கொண்டோம் உம்மாலே
பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன்
வி=எவராலும் வெல்லமுடியாத வீரப்படைகளை எல்லாம் உம்முடைய ஆணைப்படி போரிட்டு வெற்றிப் பெற்றோம் அல்லவா
நடந்து முடிந்த பழைய சரித்திர கதைகளை எல்லாம் ஞாபகப்படுத்தி இது முடியாது என்று சொன்னார் சோழ மன்னரிடம்
==
மாயக் கலியாதலினால் மன்னவனும் கேளாமல்
ஞாயமொன்றும் போகாது நழிமொழிகள் பேசாதே
வி=மாயக்கலியின் ஆணவத் தன்மையினால் அதிகாரம் கொண்டு மன்னன் அதை மனதில் ஏற்றுக் கொள்ளாமல்
நீ இப்போது நியாயமான காரியங்களை பற்றி பேச வேண்டாம் நடந்து முடிந்த பெருமைகளைப் பற்றி பேசாதே என்றார்
==
குட்டையினால் மண்ணெடுத்துக் குளக்கரையைத் தானடைக்க
கெட்டியல்லால் வேறு கெறு விதங்கள் பேசாதே
வி=குட்டையில் மண்சுமந்து குளத்தை உடனடியாக அடைப்பதற்குரிய வழியைப் பாருங்கள் என்று சொல்லி
உங்கள் திறமையினால் அணையை அடைத்துக் காட்டுங்கள் வேறு உன் கௌரவங்களைப் பற்றி இங்கு பேசாதே என்றார்
==
என்றுரைக்கச் சான்றோர் இயம்பு வாரம்மானை
வி=மன்னரின் அதிகார கட்டளையைக் கேட்ட சான்றோர்கள் பதில் சொன்னார்கள் மன்னன் ஏற்கவில்லை அம்மானை
==

சான்றோர் அணையை அடைக்க மறுத்தல்

நன்று நன்று மன்னவரே நமக்கு வழக்கல்லவே
இவ்வேலை யொன்றும் எங்களோடு ஈயாமல்
எவ்வேலை சொல்வீரோ யாம் அதற்கு உள்ளாகுது என்றார்
வி=நிங்கள் சொல்வது மிகவும் நல்லதுதான் மன்னரே
ஆனால் எங்களுக்கு இந்த வேலை செம்து பழக்கம் இல்லை
இந்த வேலையைப் பற்றி எதுவும் தெரியாது எனவே நீங்கள் எங்களிடம் இதை ஓப்படைக்க வேண்டாம்
வேறு எதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் நாங்கள் அதை மறுக்காமல் செய்கிறோம் என்றனர்
==
கேட்டந்த மன்னன் கிறுக்க முடன் இறுக்கி
திட்டினான் சான்றோரைச் சினத்தான் காணம்மானை
வி=சான்றோர்களின் மறுப்பு பதிலைக் கேட்ட மன்னன் அதை புரிந்து கொள்ள முடியாமல் கோபம் கொண்டு
பல விதமான வசை மொழிகளைக் கூறி சான்றோர்கள் மீது வெறுப்படைந்தான் பிரச்சனையும் உருவானது அம்மானை
==
அப்போது சான்றோர் அதற்கிசையாமல் நின்றார்
இப்போது சோழன் ஏது சொல்வா னம்மானை
வி=மன்னன் தரக்குறைவாக பேசுவதை எல்லாம் கேட்ட சான்றோர் அந்த வேலைக்கு ஓத்துக் கொள்ளாமல் நின்றார்கள்
சான்றோர்களின் பிடிவாத தன்மையை பார்த்த சோழ மன்னன் இவ்வாறு கூறுகின்றான் அதை சொல்கிறேன் அம்மானை
==
நான் வேலைச் சொன்னால் நகட்டுவதோ உங்களுக்கு
தான்பாரும் என்று தன்தள கர்த்தருடன்
வேலை கொள்ளு மென்று விசைக் காட்டினான் கெடுவான்
வி=மன்னனாகிய எனக்கு மரியாதை தராமல் நான் சொல்லும் வேலையைச் செய்யாமல் மறுத்துச் சமாளிக்கிறீர்களா
உங்களை நான் என்னபாடு படுத்துகிறேன் பாருங்கள் என்று ஆவேசத்துடன் தன் படைத் தளபதியிடம்
இவர்களை வேலை செய்ய வையுங்கள் என்று அவசர ஆணை பிறப்பித்தான் கேடு கெட்ட மன்னன்
==

தூல மறியாமல் துள்ளியே சேவுகர்கள்
சூழ வளைந்து துய்யச் சான்றோர்களையும்
வேழும் பலதை விட்டுப் பிடித்திடவே
வி=சான்றோர்களின் பிறப்பின் உயர்வைப் பற்றி தெரியாமல் வேகமாக ஓடி வந்த சேவகர்களெல்லாம்
எங்கும் செல்ல முடியாதபடி சுற்றி வட்டமிட்டு கொண்டார்கள் எந்த தவறும் செய்யாத சான்றோர்களை
சான்றோர்களுடைய வீரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் யாணைகளைக் கொண்டு வந்து பிடிக்க நினைத்தான்
==
சான்றோர் அடுக்கல் சார வைக இல்லாமல்
மீண்டு அகலத் தோற்று வெளியிலே நின்றிடவே
வி=சான்றோர்களை பலவிதமாக பிடிக்க முயன்றும் முடியாமல் அவர்கள் தங்களுடைய ஆற்றலை இழந்தனர்
சான்றோர்களிடம் ஈடுகொடுக்க முடியாமல் செமல் இழந்து தோல்வி அடைந்தவர்களாய் வெறுமனே நின்றனர்
==
அப்போது சோழ அவன் ஆனை கொண்டுவந்து
இப்போது சான்றோரை ஏறிப் பிடித்தனராம்
வி=அதைப் பார்த்த சோழமன்னன் மிகவும் கோபங் கொண்டு யானைப் படைகளை அங்கே வரவழைத்து
யானைகளின் உதவியோடு சான்றோர்களை சுற்றி வளைத்து மிகவும் வேகத்துடன் கட்டுப் படுத்தினார்கள்
==
சான்றோர்கள் சோழனையும் தட்டப் படாதெனவே
நன்றியுடன் நின்றார் நாடியவன் பிடித்து
வி=நேர்மையான சான்றோர்கள் சோழ மன்னனை இதற்கு மேல் எதிர்த்து போராடக் கூடாது என்று
மரியாதையின் நிமித்தமாக நின்று கொண்டார்கள் மன்னர் படைகள் சான்றோரைப் பிடித்துக் கொண்டு வந்தனர்
==
குட்டை எடு என்றிடவே கூடாதென வுரைக்க
தட்டினான் வைகையிலே தலையைச் சான்றோர் தனக்கு
ஆனைதனை விட்டு அரசனந்தச் சோழ மன்னன்
வி=சான்றோர்களைப் பார்த்து மீண்டும் குட்டையில் மண் சுமக்கும்படி சொல்ல அவர்கள் முடியாது என்று மறுத்தனர்
சோழ மன்னன் கோபத்தால் கட்டளை இட்டான் வைகை ஆற்றங்கரையில் சான்றோரின் தலையை
யாணை மூலமாக கொண்டு விடும்படி கொடிய குணம் கொண்ட மன்னன் தன்னுடைய படைத் தளபதியிடம் கூறினான்
==

சான்றோர் இருவர் இறப்பு

சோனைத் தலைவர் சிறந்த சான்றோர்கள் தன்னில்
கொன்றான் ஓருவனையும் குளக்கரையி லம்மானை
வி=படைகளின் தளபதியானவன் சான்றோர்களில் சிறந்த வீரனாக இருந்தவனைத் திட்டமிட்டு வெறி தனத்தோடு
யானையின் உதவியோடு கொண்டு விட்டார்கள் வைகை ஆற்றங்கரையில் வைத்து நடந்தது அம்மானை
==
பின்னால் ஒருவனையும் பிடித்துக் கொண்டு வாருமென்றான்
குட்டை எடு என்று கூறினான் மாபாவி
வி=மறுபடியும் சான்றோர்களில் ஒருவரை அழைத்து வரும்படி சேவகர்களுக்கு மன்னன் கட்டளை இட்டான்
அழைத்து வந்த சான்றோரைப் பார்த்து இனியாவது குட்டையில் மண் சுமந்து போடு என்றான்
==
திட்டமுடன் நாடாண்ட தெய்வக் குலச் சான்றோர்
முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான்
வி=நேர்மையோடு சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நன்நெறியோடு நாட்டை ஆண்டு வந்த திருமாலுடைய பிள்ளைகள்
முதலில் இறந்து போன சான்றோர் குல மன்னனை விட நாங்கள் குறைந்தவர்கள் கிடையாது
==
இன்ன மிந்தக் குட்டை யாங்கள் தொடோம் என்றனராம்
வி=எங்கள் மன்னர் தகுதியை இழந்து இந்த குட்டையில் நாங்கள் மண் சுமக்க மாட்டோம் என்று உறுதியாக கூறினார்
==
பின்னுமந்தச் சோழன் பிடித்து ஒருவன் தனையும்
கொன்றான் காண் வைகை தனில் குஞ்சரத்தை விட்டியறி
வி=மிண்டும் கோபம் கொண்ட சோழ மன்னன் அவர்களின் ஒருவரை வெறித்தனமாக பிடித்துக் கொண்டு வந்து
கொண்று விட்டான் வைகை ஆற்றங்கரையில் வைத்து யானையை கால்களால் மிதிக்க வைத்து பழிவாங்கினான்
==
நன்றி மறந்து நாடாண்ட சோழ மன்னன்
கொன்றான் காண் இரண்டு தெய்வக் குலச் சான்றோரை
வி=தன்னுடைய தன்மானங்களை எல்லாம் இழந்து சான்றோர்களின் பெருந்தன்மையை மறந்து நாட்டை ஆண்டச் சொழன்
தன்னுடைய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக ஆணவம் கொண்டு இரண்டு சான்றோர்களை கொன்று விட்டான்
==

அப்போது வித்யாதர முனிவன் தானறிந்து
செப்போடு வொத்த திருமால் அருகேகி
மாயவரே உம்முடைய மதலை ஏழுபேரில்
காய மகித்தான் கரிகாலச் சோழனவன்
வி=கொடுரமாக நடத்தப்பட்ட துயரச் செய்தியை தேவர்களின் இனத்தைச் சார்ந்த வித்யாதர முனிவர் கேள்விப்பட்டு
வாக்கு மாறாத தன்மையோடு செப்பு தகட்டில் பதிக்கப்பட்ட முத்திரைப் போன்ற திருமாலிடம் சென்று
உலகத்தை பாதுகாத்து வரும் மாயப் பெருமாளே உம்முடைய பிள்ளைகள் ஏழுபேர் உண்டல்லவா அதில் இரூவருடைய
உடல்களை யாணை மூலம் காயப்படுத்திக் கொன்றுவிட்டான் சோழநாட்டு மன்னனாகிய கரிகாலன் என்றார்
==
வித்யாதர முனிவர் சொல்வதைக் கேட்ட திருமால் உடனடியாக வைகை கரைக்கு வந்தார்
வைகை கரையில் புட்டு விற்கும் பாட்டியிடம் புட்டு சாப்பிட்டு விட்டு
பாட்டியின் ஆள் போல் வேடம் கொண்டு
சோழ மன்னனின் வெறிச் செயலால் தன்னுடைய பிள்ளைகளைப் பழிவாங்கி விட்டானே என்று
தானே குட்டையில் மண் சுமந்து வைகையை அடைத்தார்
அவர்களிடம் அடிமைபோல் அடிகளையும் வாங்கிக் கொண்டார்
மனம் மிகவும் வேதனை அடைந்த திருமால் ஸ்ரீரங்கத்தில் மிகவும் கோபத்தோடு அமர்ந்தார்
நடந்து முடிந்த சம்பவங்களை எல்லாம் கேள்விப்பட்ட பத்திரகாளி என்னுடைய பிள்ளைகளை கொன்றக் காரணத்தினால்
சோழ நாட்டு மன்னனின் நாடு வறுமையால் வாடும்
பன்னிரெண்டு ஆண்டுகள் நாட்டில் மழைப் பெய்யாமல் மக்கள் கடுமையான முறையில் அவதிப் படுவார்கள்
என்று மிகுந்த வேதனையாடு மனம் குமுறி பத்திரகாளி சாபமிட்டாள்
பத்திரகாளி சாபத்தால்
சோழ நாட்டில் மழைப் பெய்யாமல் நின்றது பஞ்சத்தால் வறுமை அடைந்தது
தன்னுடைய நாட்டு மக்களுக்கு பசியை தீர்க்க முடியாமல் என்ன செய்யலாம் என்றி திகைத்து மணம் வாடினான்
மாண்டு போன இரண்டு சான்றோர்களின் எழ்மையான மணம் கொண்ட மனைவிமார்கள் மிகவும் வருத்தத்தோடு
திருமாலை நோக்கி சிறப்பு வாய்ந்த கடுமையான தவத்தை செய்ய சென்றார்கள்
அவர்கள் மேற்கொண்ட தவத்தின் அருமை பெருமைகளேப் பற்றி கூறுகிறேன் கேளுங்கள் 
தான் அணிந்திருந்த ஆடைகளை மாற்றாமல் கணவன் கட்டிய திருமாங்கல்யத்தைக் கழற்றாமல்
மரியாதை இல்லாமல் களங்கத்தை ஏற்படுத்திய ஈழ மன்னனின் உயிரை பழி வாங்கவு நினைத்தனர்
.

கைலையில் காளி திருமாலைச் சந்தித்துப் புலம்பல்

மாகாளி என்ற வட பத்திரகாளி
ஓகாளி என்ற உயர்ந்த பலகாரி
சென்றாள் கைலை சிவ அய்யா நாதனிடம்
வி=மகாப் பெரிய சக்திகளைக் கொண்ட மாகாளி என்கிற வடக்கே இமயமலை அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் வனப் பத்ரகாளி
ஓம் என்கிற மந்திர சக்தியை ஓங்காரமாகக் கொண்ட மிக உயர்ந்த நிலையில் சக்தியின் வடிவமாகிய ஓம் காளியானவள்
கைலாயத்தை நோக்கி மிகவும் ஆவேசமாக சிவலோகத்தில் அமர்ந்திருந்த ஆதி நாராயணரைத் தேடி வந்தாள்
==
நன்றான கன்னி நாராயணர் இடத்தில்
வந்து விழுந்து மண்ணில் அவள் புரண்டு
சந்துபயிர் மாயவரே தான்பிழைத்தேன் நான்உமக்கு
வி=தெய்வத் திருமகளாக வீற்றிருந்த மகாலெட்சுமியும் மகா விஷ்ணுவும் இருக்கின்ற தங்க மண்டபத்திற்கு வந்து
அவர்களுடைய திருவடிகளை வணங்கி திருப்பாதங்களில் விழுந்து தரையில் உருண்டு புரண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதாள்
சர்வ லோகத்திற்கும் அதிபதியாக விளங்கும் சர்வ வல்லவரே நான் உமக்குப் பிழை வரக்கூடிய அளவில் நடந்து விட்டேன்
==
உன்மக்கள் சான்றோர் உற்றமக்கள் ஏழுதிலே
நன்மையற்ற சோழன் நாடும் பழி இரண்டு ஏத்தான்
வி=உம்முடைய பிள்ளைகள் ஏழ்வரையும் என்னிடம் முழுமையான நம்பிக்கையோடு ஒப்படைத்து வளர்க்கத் தந்தீர்
அவர்களை நான் நன்றாக வளர்த்து வாழ்ந்து வரும் வேளையிலே இரக்கமற்ற கரிகாலசோழன் இருவரை கொண்டு விட்டான்
==
கண்டு அடியாள் கரிகாலச் சோழனுக்கு
மன்றுதனில் பன்னிரெண்டு ஆண்டுமழை பெய்யாமல்
சாபித்தேன் சோழன் ஊர் தட்டழியப் பட்டுழற
வி=என் பிள்ளைகளாகப் பாதுகாத்த நான் அச்செயலைக் கண்டு கதறியபடி காரணத்தைத் தாங்கமுடியாமல் கரிகாலசோழனுக்கு
நீ ஆண்டு கொண்டிருக்கும் உன்னுடைய சோழ நன் நாட்டில் இனி பன்னிரெண்டு ஆண்டுகள் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்படும் என்று
நான் வேதனைப் பொறுக்க முடியாமல் சாபம் கொடுத்து விட்டேன் சோழ நாடு தட்டுத் தடுமாறி அவஸ்தை அடைய வேண்டும்
==

பாவியவன் ஊரைப் பகல் நரி ஓட வைத்தேன்
அல்லாமல் சோழன் அக்கம் அறச் சாபமிட்டேன்
பொல்லாத சோழன் வழி பொடிப்படவே சாபமிட்டேன்
வி=படுபாவச் செயலை செய்தவன் நாட்டில் மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டு நாடு வனமாகி பகலில் நரி ஒடுகிற இடமாக மாற வேண்டும்
அதுமட்டும் அல்லாமல் கரிகால் சோழ மன்னனது குடும்பம் அடியோடு அழியும் படி அறம் அழியாத நான் சபித்து விட்டேன்
பொறுக்க முடியாத செயலை செய்த நீசனுடைய வம்சாவழி இனத்தவர்கள் ஒரு பொடி கூட இல்லாமல் ஆகும்படி சபித்தேன்
==
இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்து விட்டு
பத்திரரின் செய்தி சொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள்
வி=இவ்வளவு சாபங்களையும் கொடுத்து அவர்களை அடியோடு அழித்து அலைக்கிழியும் படி செய்து முடித்து விட்டு
உம்மூடைய பிள்ளைகளின் நிலைமையை சொல்ல வளர்ப்பு தாயாகிய நான் பாவத்திற்கு புண்ணியம் கொடுக்கும் உம்மிடம் வந்தேன் என்றாள்
==
அப்போது ஆதி அய்யா நாராயணரும்
செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார்
வி=பத்ரகாளியின் பரவச வார்த்தைகளைக் கேட்டு கொண்டிருந்த அண்ட சராசரத்தை ஆட்சி செய்யும் அய்யா வைகுண்ட நாராயணர்
செப்பு ஏட்டில் ஏழுதுவது போன்று சொன்ன சொல் மாறாத ஆதி பரமசிவனிடம் கூறுகின்றார் அதை கவனமாகக் கேளுங்கள்
==
கேட்கலையோ எந்தன் கிருபைச் சிவனாரே
ஏற்கலையோ இந்த ஏந்திழையாள் சொன்னது தான்
வி=பத்ரகாளி பேசிய வார்த்தைகள் எல்லாம் உங்களுக்கு கேட்டதா அவள் என்னிடம் புண்ணியம் கேட்கிறாள் சிவபெருமெனே
பத்ரகாளி சொல்வதைப் போல் அவளுக்கு கருணைக் காட்டி புண்ணியம் கொடுக்க இதை ஏற்று கொள்ளும்படி இருக்கிறதா
==

பிள்ளைக்கோர் தீங்கு பிழையாமல் எப்போதும்
வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேன் நான் என்றுச் சொல்லி
மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும்
திருட்டு மொழி பேசுஞ் செய்தியை நீர் கேட்டீரோ
வி=நான் அவளிடம் கொடுத்தப் பிள்ளைகளுக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் தவறுதல்கள் இன்றி இந்நாளும்
என்னுடைய பிள்ளைகளான வாரி வழங்கும் கொடையாளிகளை நல்லமுறையில் வளர்த்துத் தருவேன் என்று வாக்கு தந்து
கண்கள் மூலம் சாடைக் காட்டி பொறுப்புணர்வோடு என்னிடம் இருந்து என் பிள்ளைகளை வாங்கிச் சென்றாள் அன்று
இப்போது அவள் சொன்ன வார்த்தைகள் படி நடக்காமல் மன்னனுக்கு சாபமிட்டேன் என்று சமாளிப்பதை நீர் கேட்டீரா
==
நான் தனி அல்லவே நால் பேரு உண்டல்லவோ
தான் தனிமை ஆகிடினுந் தப்பிதமென்றே புகல்வார்
வானவருந் தானவரும் மறையவருஞ் சாட்சியதாய்
வி=குழந்தையை நான் அவளிடம் தனிப்பட்ட முறையில் கொடுக்க
வில்லை நான்கு பேர் முன்பாக அல்லவா நான் கொடுத்தேன்
நான் என் விருப்பத்திற்கு தனிப்பட்ட முறையில் கொடுத்திருந்தால் என் மேல் தப்பு என்று எல்லோரும் சொல்வார்கள்
முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தி நாற்கோடி முனிவர்களும் பிரம்ம ரிஷிகளும் சாட்சிகளாய் இருக்கும்படி அல்லவா கொடுத்தேன்
==
நானவளோடே வாக்கு நவின்றல்லோ தான் கொடுத்தேன்
மக்களுக்கோர் தீங்கு வந்ததே உண்டானால்
வி=நான் அவளிடம் குழந்தைகளைக் கொடுக்கும் போது சத்திய பிரமாணம் வாங்கிக் கொண்டு தானே அவளை நம்பி ஒப்படைத்தேன்
பிள்ளைகளை வளர்க்கும் போது கவனக்குறைவால் எதாவது அசம்பாவிதங்கள் நடந்து விட்டது என்றால் பழி வாங்குவேன்
==
மிக்கச்சிறை உனக்கு மேவுமென உரைத்து
ஈந்தேன் மதலை இவள் கையிலே ஈசுரரே
வி=நீ மீண்டும் வர முடியாதபடி மிகப்பெரிய கொடுமை விளைவிக்கக் கூடிய சிறைத் தண்டனை கிடைக்கும் என்று சொல்லிதானே
குழந்தைகளை அவளுடையக் கையில் அவசர அவசரமாக புத்திமதிகளைச் சொல்லி அவள் கையிவ் கொடுத்தேன் ஈஸ்வரரே
==

மாய்ந்தவுடன் ஆகிடினும் வந்துரைத்தாளோ சிவனே
சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள்
புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோம் என்று ஏகி வந்தாள்
வி=என் அன்பு மைத்துனராகிய சிவபெருமானே பத்ரகாளி குழந்தைகளுக்கு மரணம் ஏற்பட்ட உடனே வந்து சொன்னாளா பாருங்கள்
எதைப் பற்றியும் சிந்திக்காமல் மனதில் எந்த விதமான பதட்டமும் பயமும் இல்லாமல் இருந்துவிட்டு இவ்வளவு நாள்கள் கழித்து
அவளுடைய மனசாட்சி மனதை குத்திக்கொண்டே இருந்த படியால் என்னிடம் சொல்வதற்காக இங்கே வந்திருக்கின்றாள்
==
தன்மதலை என்றால் தலை வைத்திருப்பாளோ
என்மதலைக்கு இவள்தான் இடறி விழுவாளோ
வி=அவள் பெற்றெடுத்தப் பிள்ளையாக இருந்திருந்தால் மன்னன் தலையைக் கொய்யாமல் இவள் தலை சாய்ந்து படுத்திருப்பாளோ?
என்னுடைய பிள்ளைகள் என்பதால் தானே இவள் இவ்வளவு பொறுமையாகக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டாள்
==
ஒருவர் பிள்ளைக் கொருவர் உடைமை இடுவாரோ
கருதல் விருப்பங் காணுமோ மற்றோர்க்கு
வி=ஒருவருடைய பிள்ளைகளுக்காக இன்னொருவர் தன்னுடைய உரிமைகளை இழந்து உதவிச் செய்ய வருவார்களா
தான் பெற்ற பிள்ளையை தானே வளர்ப்பது போல் மற்றவர்கள் முழுப் பொறுப்போடு நடக்க மாட்டார்கள் என்பது புரிகிறது
==
பெற்ற கும்பியல்லோ பெருங்கனல்போல் மீறுவது
மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ
பாவியவன் கொன்று பன்னிரெண்டு ஆண்டுவரை
வி=குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயின் வயிறு அல்லவா வேதனை தாங்க முடியாமல் தீயைப் போல் பற்றி எரியும்
அடுத்தவருக்கு ஆக வேண்டியது என்ன அவர்களுக்கு மனவருந்தம் ஏற்பட்டு வயிறு குமுளி எரிந்திடீமோ
கொடும் பாவியாகிய சோழ மன்னன் என்னுடைய பிள்ளைகளை கொண்டு பன்னிரெண்டு ஆன பிறகும் கூட
==
ஆவி அறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே
தாய்தகப்பன் இல்லார்போல் தயங்கினது கணடோமே
வி=இவர்களது ஆன்மா எங்க இருக்கிறது என்று ஆருக்கிறது என்று அடியேனுக்கு தெரியவில்லை யாரும் ஒருவார்த்தைகூட சொல்லலவில்லை


திருமால் காளிக்குச் சிறைத் தண்டனைக் கொடுத்தல்

சேய வரனுக்கு ஏராத செய்த பழவினையோ
என்று ஆதிநாதன் ஏந்திழையைத் தான்பார்த்து
வி=படைத்த பரம சிவனுக்கே தெரியாமல் போகக்கூடிய அளவில் இது தான் முன் ஜென்மத்தில் செய்த கர்மவினைப் பயனா
இப்போது ஆதிநாராயணர் ஆத்திரம் அடைந்து பத்ரகாளியைப் பார்த்து மிகவும் பதட்டம் அடைந்தவராக அவளிடம்
==
சென்று ஆதிவேந்தர் செடத்தோடு உயிர் திரும்பி
எழுந்திருக்கும் மட்டும் இருநீ சிறைதனிலே
வி=பத்ரகாளியே மன்னர்களாக வாழ்ந்த என்னுடைய இரண்டு பிள்ளைகளும் மீண்டும் உயிரோடு திரும்பி வரும் வரை
அவர்கள் இந்த பூலோகத்தில் உயிரோடு பிறந்து எழும்பும் காலம் வரை நீ மீளாச் சிறையில் அடைப்பட்டு மீண்டு வரமுடியாதபடி
==
குளிர்ந்த திருமேனி கூறினார் அந்தரிக்கு
கேட்டு மாகாளி கிலேச மிகவடைந்து
வி=சிறைக்கைதி ஆகும் படி சாந்த குணமுள்ள திருமால் தன்னுடைய சாந்தத்தை இழந்து சாபமிட்டார் சமாதானம் இல்லாமல்
திருமாலின் கட்டளைகளை காதால் கேட்ட பத்ரகாளி மனதில் கிலிப் பிடித்தவளாக மிகவும் பயந்து வருத்தம் அடைந்தாள்
==
தீட்டுவடவா முகத்தில் செய்யவன்னி மண்டபத்தில்
இருந்தாள் சிறையாய் ஈசன் செயலெனவே
வி=மன்னிக்க முடியாத தவறில் மாட்டிய அவளுக்கு கைலாய மலையில் வடக்கு வாசலில் அமைந்துள்ள அக்னி சிறையில் அசைய முடியாதபடி அங்கலாய்த்தவளாக சிறையில் அடைப்பட்டு சிவபெருமானே காப்பாற்றும் என்று காத்திருந்தாள்
==
வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம்
நாச்சியார்க்கிச் சிறையால் நமக்கென்ன கேடோகாண்
வி=பத்ரகாளியை நினைத்து வருந்தாமல் இருந்த குட்டீச் சாத்தான் இனங்களும் ஏவலர்களாக இருந்த பேய் இனங்களும்
நம்முடைய தாயாக விளங்கக்கூடிய பத்ரகாளிக்கே சிறைவாசம் என்றால் நமக்கெல்லாம் என்ன கதியோ என்று பயந்தனர்
==
கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம்
வி=தலை விரிகோலம் பூண்டுள்ள பத்ரகாளியின் கோபத்தால் நாட்டிற்கும் நமக்கும் என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லையே
==

என்று சிலபேய்கள் எண்ணியெண்ணியேத் திரியும்
முந்த முறுக்குள்ள மூளிப் பேயேது சொல்லும்
வி=என்று எண்ணியபடி பீதியடைந்து சிலவகைப் பேய்கள் பயந்துக்கொண்டே நாட்களை கடத்திக் கொண்டே திரிந்தன
எவருக்கும் எதற்கும் அஞ்சாத தன்யையுள்ள பேயாகிய உடல் உறுப்புகள் முண்டம் போண்ற அமைப்புடைய பேய் சொன்னது
==
கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால்
மெய் வாய்த்து என்று விழியிட்டுக் கொண்டாடும்
வி=காளிச் சிறையில் இருக்கின்ற காரணத்தால் நமக்கு இனி கொண்டாட்டம் தான் தட்டிக் கேட்க ஆள் இல்லை என்று ஆர்ப்பரித்தது
நாம் இனி நம்முடைய மனம் போல் நினைந்த இடங்களுக்கு செல்லலாம் என்று விழிப்புணர்ச்சி அடைந்தது போல் விளையாடியது
==
இப்படியே பேய்கள் எண்ணஞ் சில திண்ணமுமாய்
அப்படியே காளி அவள் சிறையிலே இருக்க
வி=இது போன்று பேய் இனங்கள் பலவிதமான எண்ணங்களோடு அச்சம் ஒருபுறம் இருக்க அதிகாரம் இன்னொரு புறம் இருக்க
பத்ரகாளி ஆனவள் இவர்களது கூத்துகளை பார்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் சிறையில் இருக்கும் படி அமைந்தது
==

கலியை அழிக்க சிவனும் திருமாலும் ஆலோசனை

நல்ல தாராயணரும் நாடுஞ் சிவனாரே
வல்லப் பொருளே மறைக் காணாத ஒவியமே
வி=நன்மையான செயல்கள் மட்டுமே நடக்க வேண்டும் என்கிற நாராயணர் மைத்துனராகிய சிவபெருமானைப் பார்த்து
சகல வல்லமைகளும் பொருந்திய சிறப்புக்குரிய பரம்பொருளே எந்த வேத ஆகமங்களாலும் விவரிக்க முடியாத சித்திரமே
==
காளிச் சிறைதான் கவிழ்ந்திருக்க ஞாயம் வந்தால்
ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம் வாய்க்கும்
வி=சக்தியின் வடிவாகிய பத்ரமாகாளிக்கே மீளாச்சிறையில் அடைப்பட்டு இருக்கக் கூடிய நிலை வந்து விட்டது என்றால்
கடலால் சூழப்பட்ட இந்த பூலோகத்தில் வாழ்கின்ற மானிட மக்களுக்கு எப்படி நிம்மதியான வாழ்க்கை அமைய முடியும்
==
முதற்தான் கலியை முடிக்கப் பரகாளி
விதத்முள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்க
பார்த்து நாம் இங்கு இருக்கப் படுமோ காண் ஈசுரரே
வி=முதன் முதல் வேலையாக அநியாயக் கலியை அடியோடு அழிக்க அரும்பாடு பட வேண்டும் ஏனென்றால் பத்ரமாகாளி
வித்தியாசமான முறையில் மிகக் கொடுரமான சிறையில் அக்னியால் சுழப்பட்டு ஆக்ரோஷமாய் சிறையில் இருப்பது சரியல்ல
நாம் அனைவரும் பார்த்துக் கொண்டு அதற்கேற்ற பரிகாரம் எதுவும் தேடாமல் இருப்பது நல்லதல்ல ஈஸ்வர பெருமானே
==
சாற்று நீர் இன்னதென்று சத்தி கொண்ட ஈசுரரே
உடனே தான் ஈசர் உரைக்கிறார் அன்போரே
வி=என்ன செய்யலாம் என்கிற முடிவை நீர்தான் சொல்ல வேண்டும் பராசக்தியாகிய பார்வதியோடு இருக்கும் ஈஸ்வரரே என்றார்
மகாவிஷ்ணுவின் வார்த்தைகளை மறுக்காமல் மகாதேவன் மாற்றுக் கருத்து இல்லாதவராக கூறுகின்றார் அன்பர்களே
==
கடனோ காண் என்னோடு கலங்கு மொழி பேசுவது
நானோ தடுத்தேன் நாட்டுக் கலி தீட்டறுக்க
வி=திருமாலே தடக்கின்ற செயல்களுக்கு நான் ஏதாவது கடனாளி போல் கடமைப்பட்டு இருக்கின்றேனா நீங்கள் பேசுவதேப் பார்த்தால்
உலகத்தையை உலுக்கிக் கொண்டிருக்கின்ற கலி நீசனை உருகுலைய வைக்கக்கூடாது என்று நானா தடுத்துக் கொண்டிருக்கின்றேன்
==

கலியை கழிக்க சிவனும் திருமாலும் ஆலோசனை
தொடர்ச்சி.2
ஏனோ காண் மைத்துனரே என்னோடு பேசுவது
எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு
எப்போ தருவீரென்று எண்ணி மிக வாடுறோமே
வி=எதற்காக நீங்கள் என்னிடம் அனுமதி கேட்கின்றீர்கள்
மைத்துனரே என்னிடம் இதைப் பற்றி ஆலோசனை கேட்க வேண்டாம்
நீர் உம்முடைய சூடசும தந்திரத்தால் கலியை கருகவைத்து எங்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று நல்ல காலக் கட்டத்தை எதிர்பார்த்து
வழிமேல் விழி வைத்துவர்களாக உம்மை எதிர்நோக்கி அல்லவா நம்பிக்கையோடு மிகவும் நாட்டம் கொண்டவர்களாம் இருக்கிறோம்
==
தீட்டை மிகக் கழித்துச் சிவ ஞான முத்தி தந்து
கயிலை வீட்டை எப்போ நன்றாய் விளக்குவீர் என்றுமிக
வி=கலியனால் கைலாமத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை கரியமால் நாராயணரே கலியை அழித்து சிவலோகம் ஒளிமயமாக விளங்க
கைலாய மலையில் வாழும் எங்கள் அனைவரையும் எப்போது பரிசுத்தமடைய செய்வீர் என்று சொல்லும் பச்சைமால் நாராயணரே
==
தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும்
குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ
வி=உம்மை நோக்கி பரிதவித்தபடி நாங்களக் படும் பாடுகளை பற்றி நீர் அறியாமல் இருப்பது நியாயம் ஆகுமா
வேதனைகளை எல்லாம் வெளிக்குத் தெரியாமல் அடக்கிக் கொண்டு ஆனந்தமாய் இருப்பதுபோல் அவதிப்படுவதை நீர் பார்க்க வில்லையா
==
என்றே ஏகாபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள்
நன்று என்று ஆகட்டும் எனவே நாரணருங் கொண்டாடி
வி=பரமசிவன் தன்னுடைய மனதில் இருந்த சித்தனைகளை எல்லாம் மைத்துனரிடம் சொல்லி விட்டார் உடனே நாராயணப் பரம்பொருள்
சிவனை நல்லது தான் நீர் நினைக்கின்ற படியே ஆகக்கடவது என்று அரி அரி நாராயணரும் அகம் மகிழ்ந்தவராக கூறினார்
==

திருமாலின் அவதார உடலில் சம்பூரணச்தேவன் உயிர்

மூவர் நடுவருட முச்சடலக் கூடதையும்
வரவழைத்து வாருமென்று மறையோரைத் தான்ஏவி
வி=மும்மூர்த்திகளில் நடுமூர்த்தியாக இருக்கின்ற மகா விஷ்ணுவின் ஆறுயுகமாக எடுத்த உடலை கொடுத்து பிறவி செய்ய
உடனடியாக அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று ஏவல் செய்யும் தெய்வலோக முனிவர்களை அனுப்பி வைத்தார்
==
விரைவாக வாருமென்று விடைகொடுத்தார் எல்லோரும்
நடந்து மறையோர் நல்ல மலைபார்த்து
வி=முனிவர்களிடம் கால தாமதம் இல்லாமல் வேகமாக செயல்படும் படி அனுமதி கொடுத்து அனுப்பினார் முனிவர்கள்
எல்லோரும் திருமாலின் கட்டளையை நிறைவேற்ற மிகவும் நல்ல மலையாகிய மேரு மலையை நோக்கி நடந்தனர்
==
சடம் வீத்திருந்த தங்கமலை மீதில்வந்தார்
மலைமீதில் வந்து மலைப்புதுமை தான்பார்த்து
வி=வந்து கொண்டிருக்கும் வழியில் உள்ள கூடுவிட்டு கூடு பாய சடலம் எடுக்கும் பொண் மலையில் வந்து சேர்ந்தார்கள்
கைலாய மலையின் ஒரு பகுதியாக இருக்கின்ற பொன் மலைக்கு வந்து மலையில் இருக்கின்ற அதிசயங்களைப் பார்த்து
==
அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய
வடவாசல் நேரே வாழும் மலையிதுதான்
வி=பாற்கடலின் மேல் பள்ளிக் கொண்டிருக்கும் மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்து துவரயம் பதியில் இருந்த அவருடைய
வடக்கு வாசலாகிய சிவபெருமாள் வீற்றிருக்கும் கைலாய மலைக்கு நேரே எதிர்புறமாக உள்ள மலை இந்த பொன்மலை தான்
(இந்த சிறந்த விவரங்களை முடிபுகழ்ந்த அம்மாணையில் பார்க்கலாம்)
==
தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே
சங்க மகிழ் இம்மலையில் தடாக மிது நன்றெனவே
வி=தங்கத்தால் ஆன கிணறுகளும் வெள்ளியினால் ஆன கணறுகளும் செம்பினால் ஆன கிணறுகளும் அங்கே அழகாக காணப்பட்டது
தெய்வலோக சங்கத்தார் உடல் எடுத்து மகிழ்ச்சியோடு காணப் படும் இந்த மலையின் இயற்கை அழகும் மானசரோவர் நதியும் ஆகும்
==

கரை காணாத் தேவர் காட்சியிடு மிம்மலைதான்
விரைவான மாமுனிவர் வீற்றிருக்கும் இம்மலைதான்
வி=வர்ணித்துச் சொல்ல முடியாத அளவுக்குக் காணப்பட்டது தெய்வலோக முனிவர்கள் அந்த அழகிய மலைக்குள் சென்றார்கள்
தெய்வலோகத்தார் உடல் எடுப்பதற்காக தேவ முனிவர்கள் வீற்றிருப்பது இந்த மலையில் தான்(கூடு எடுத்தல்)
==
மரித்தோரைத் தானெழுப்பும் வாய்ந்த சிஞ்சீவி வளரும்
பதித்தான இம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது
வி=இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்பும் சிஞ்சீவி மூலிகை வளர்ந்து வரும் சஞ்சீவி மலை இங்கே உள்ளது
இதுபோன்ற பலவிதமான செயல்பாடுகளுடைய இந்த மலையில் பெருமைப் பற்றி விவரித்துச் சொல்லி விட முடியாது
(கைலாய மலையைப் பற்றி முடிபுகழ்ந்த அம்மானையில்)
==
என்று சொல்லித் தேவர் ஏற்ற மலைக்குள் ஏகி
நன்று நன்றென்று நாடியவர் பார்க்குகையில்
கண்டாரே காயாம்பூ கண்ணர் முக்கூடதையும்
வி=அத்தனை விதமாக வர்ண புரிகின்ற மலைக்குள் தான் வந்த காரணத்திற்காக உள்ளே சென்றனர்
திரும்புகின்ற திசை எல்லாம் கண் கொள்ளாக் காட்சியாகவே இருக்கிறது என்று கிருஷ்ணருடையக் கூட்டைத் தேடினார்கள்
முனிவர்கள் காயாம்பூ போன்ற நீல நிற உடலமைப்பை உடைய கிருஷ்ண பெருமாளின் அவதார உடலைக் கண்டனர்
==
கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்த ரதம் மீதேற்றி
நடந்தார் கைலை நாதர் திருக்கூட்டமதில்
வி=உடலை பார்த்த உடன் மிகவும் சந்தோசப்பட்டு மிகவும் புகழ் வாய்ந்த அபூர்வ சக்தி உள்ள பல்லக்கில் ஏற்றிக் கொண்டு
கால் நடையாக சுமந்துக் கொண்டு சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயத்தில் பரலோகச் சங்கத்தார் இருக்கும் இடத்திற்கு வந்தனர்

படந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும்
பார்த்துச் சடலமதைப் பதிந்த முகத் தோடணைத்து
தேற்றி உயிர்க் கொடுத்துச் செப்புவார் கூடுடனே
வி=கயிறு போன்ற பாம்பை கழுத்தில் அணிந்திருக்கும் சிவனும் அவதார உடலுக்குச் சொந்தக்காரராகிய அரி அரி நாராயணரும்
அதாசயமான அவதார உடலை அன்போடு அரவணைத்து பாசத்தோடு முகத்தோடு முகம் வைத்து முத்தம் கொடுத்து
உடலுக்கு புத்துணர்வு கொடுத்து உயிர் சக்தியும் கொடுத்து உடலோடு உரையாடுகின்றார் அதை கூறுகின்றேன் கேளுங்கள்
==
எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து
அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகி
வி=என் அன்புக்குரிய சடலமே நான் ஆறுயுகமாக எடுத்து பூலோக அவதார பிறவிக்கு என்னை ஆகம் வைத்து சுமந்து கொண்டு
மூன்று லோகங்களுக்கும் மேலோகம்.பூலோகம்.பாதள லோகம்.எல்லா இடத்திற்கும் மாறி மாறி சுமந்து கொண்டு திரிந்தாயே
==
பூமி கடலும் பொருப்புப் பூலோகமெல்லாம்
நேமித்தெனைச் சுமந்து நேட்டமுடன் திரிந்தாய்
வி=மண்ணுலகம்.கடல். உலகம்.
மலை உலகம் ஆகிய பூலோக இடங்கள் எல்லாவற்றிற்கும் சலிப்பில்லாமல் சென்றாயே
நேர்மையான நெடுமால் நாராயணரை சுமந்து கொண்டு நான் விரும்பியபடி எல்லாம் நீ அலைந்தாய்
==
நீசெய்த நன்றி நினைக்குரைக்கக் கூடாது
வி=நீ எனக்குச் செய்த நன்றிக் கடற்களை வார்த்தைகளால் உன்னிடம் கூறிவிட முடியாது அத்தனை உயர்வானது

திருமாலின் அவதார உடலுக்கு வரம் கொடுத்தல்

நான் உனக்குச் செய்யும் நன்றி மிகக்கேளு
வி=நன்றி மறவாத நான் உனக்கும் கடமைப்பட்டுள்ள காரணத்தால் நான் செய்யப் போகின்ற நன்றிக் கடனை கூறுகின்றேன் கவனமாகக் கேள்
==
இத்தனை நாளும் எனைச் சுமந்து பாடுபட்டாய்
புத்திரனாய் நீயெனக்குப் பெரியதெய்வ உயிரில்
பிறந்து புவிமீதில் பின்னுஞ் சில நாட்கழித்து
சிறந்த முகூர்த்தமதில் சேர்த்தே உனையெடுத்து
வி=என் அன்புக்குரிய அவதாரச் சடலமே ஆறுயுகமாக என்னை சுமந்துக் கொண்டு அலையோ அலை என்று அலைந்து திரிந்தாய்
ஆகையால் நீ எனக்கு மகனாக என்னுடைய சான்றோர்கள் இனத்தில் தெய்வலோக சம்பூரணத்தேவனுடைய உயிரோடு
பூலோகத்தில் மனித பிறவியாக பிறந்து பூலொக வாழ்க்கை வாழ்ந்து அதன் பிறகு சற்றி நாட்கள் கழிந்த பிறகு
மிகவும் சிறப்புடைய நல்லதொரு சுபமுகூர்த்த நாளில் நான் வந்து உன்னை என்னோடு சேர்த்து எடுத்துக் கொள்வேன்
==
உந்தனக்குப் புத்தி உபதேசங்கள் உரைத்து
வி=நீ பூலோகத்தில் எப்படி வாழவேண்டும் என்கிற புத்திமதியும் ஆலோசனைகளையும் கூறி அற்புதமாக நடத்துவேன்
==
எந்தன் துயரம்மாற்ற யுகச்சோதனைக்கு அனுப்பி
உந்தன் துயர்மாற்றி யுகத்துயரமும் மாற்றி
எந்தன் துயரம் மாற்றி ஈசர் துயர் மாற்றி
வி=எனக்கு ஏற்பட்ட எல்லா விதமான துயரச் சம்பவங்களையும்
மாற்றி அமைக்க உன்னை பூலோக சோதனைக்கு அனுப்பி
உன்னுடைய துயரமான சம்பவங்களையும் இந்த உலகத்திற்கு கலியனால் ஏற்பட்ட துயர சம்பவத்தையும் மாற்றி
என்னுடைய கவலைகளை எல்லாம் இல்லாமல் ஆக்கி கைலையில் இருக்கின்ற சிவனுடைய கவலைகளையும் மாற்றி
==
கலியை அறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து
சலிவில்லாத் தர்ம தங்க நவரத்தினபதி
வி=பூலோகத்தை ஆட்டிப் படைக்கின்ற கலியை அடியோடு அழித்து என்ன நடக்குமோ என்று கனவு காணும் பயங்கள் எல்லாம் தீர்த்து
எந்த விதமான சஞ்சலங்களும் இல்லாதபடி தர்மயுகமாக தங்கத்தால் அமைக்கப்பட்ட நவரெத்தின மாளிகை உனக்குத் தருவேன்
==

முத்து நவரத்தின முடியுனக்கு நானருளி
வி=முத்துக்களாலும் நவரெத்தின கற்களாலும் ஜொலிக்கின்ற என் திருமுடியை நான் உனக்கு அன்பளிப்பாகத் தருவேன்
(அவதார உடலுக்கு வரம் கொடுக்கிறார்)
==
எத்திசையும் மெய்க்க ஏற்றமனு அன்போர்கள்
வி=எல்லா திசையில் உள்ள நேர்மையாக வாழ்ந்த மக்கள் உன்னைச் சுற்றி மெய்மறந்த நிலையில் இருப்பார்கள்
==
கட்டியங் கூறிக் காச்சிட்டு உன்தனக்கு
வி=உன்னைத் தகப்பனாக ஏற்றுக் கொண்டு உன்னைப் போற்றி புகழ்ந்து பாடி காட்சியாக உன்முன் நிற்பார்கள்
==
எட்டுத்திசை போற்ற ஏற்றகுடை ஒன்று தந்து
அரசாண்டு நீயும் அழியாத் திருவுளம்போல்
வி=எட்டு திசையில் உள்ள நற்கதி அடைந்த மக்களும் உன்னை புகழ்ந்து பாட உனக்கு ஒரு குடையின் கீழ் ஆட்சிப் பொறுப்பை தந்து
வைகுண்ட நாராயணராக நீ அமர்ந்து ஆட்சி செய்வாய் மரணம் இல்லை என்னைப் போல் உங்களுக்கும் மரணம் கிடையாது
==
வீரசான்றோர் சூழ வீரக் கொடிநிறுத்தி
வி=மரணத்தை ஜெயித்த வெற்றி சான்றோர் மக்களோடு வெற்றி கொடி நாட்டி அன்பு கொடியை பறக்க விடுவேன்
==
செங்கோர்க்கு தர்மச் சிவசெங்கோலும் அருளி
எங்கோல் அரசும் என்நாமச் சக்கரத்தால்
வி=செங்கோல் ஆட்சி புரிவதற்காக தர்ம சித்தனையுள்ள சிவபெருமானுடைய செங்கோலையும் உனக்கு தந்து
நான் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த நாட்டையும் என் உரிமையையும் என்னுடைய திருநாமத்தையும் என் சங்கு சக்கரத்தால்
==
சீமை ஐம்பத்தாறும் உன்சொல் ஒன்றுக்குள் ஆக்கி
பூமுகச் சிங்காசனமும் பொன்முகச் சிங்காசனமும்
கோமுகச் சிங்காசனமும் குணமுகச் சிங்காசனமும்
வி=பூலோகத்திலுள்ள ஐம்பத்தாறு தேசத்தில் உள்ள அனைத்து மக்களையும் உன்னுடைய அரசாட்சிக்குள் ஆக்கி
தாமரைப்பூ அமைப்பில் உள்ள சிம்மாசனமும் தங்க திருமேனியான அமைப்பில் உள்ள சிம்மாசனமும்
பசுமாட்டின் உருவ அமைப்புக் கொண்ட சிம்மாசனமும் பல அவதார முகம் கொண்ட சிம்மாசனமும் உனக்குத் தருவேன்
==

மாமுகச் சிங்காசனமும் மயில்முகச் சிங்காசனமும்
அன்னமுகச் சிங்கா சனமீதோ டாகவேதான்
வி=மகா விஷ்ணுவாக ஐந்து தலை நாகத்தின் மேல் பள்ளி கொள்ளும் சிம்மாசனமும் மயில் முக அமைப்பைக் கொண்ட சிம்மாசனமும்
அன்னப் பறவையின் முக அமைப்பைக் கொண்ட சிம்மாசனமும் இதுபோன்ற உயர்வான சிம்மாசனத்தை உனக்கு தந்து
==
பொன்னம்பலம் போல் பெரிய சிங்காசனந்தான்
முப்பத்திரெண்டும் முழுதும் உனக்கு அருளி
வி=பொன்னுலகமாகிய கைலாய மலையில் இருப்பது போன்று மிகப்பெரிய தங்கத்தால் ஆன சிம்மாசன மணிமண்டபம் அமைத்து
மனதை மானத்தோடு கட்டிக் காக்கும் ஒழுக்க நெறிகளான முப்பத்தி இரண்டு அறங்களையும் முழுமையாக உனக்கு தந்து
==
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க உந்தனக்கு
தருவேன்நான் உன்னுடைய தாயார்பேர் ஆணையதாய்
வி=அழிவில்லாமல் இருப்பதற்காக செப்பேட்டில் பதிக்கப்பட்ட என்னுடைய பஞ்ச பாண்டவ சீசர்களை உனக்கு பணிவிடைச் செய்ய
என் அன்பு பரிசாக உனக்குத் தருவேன் இவை அனைத்தும் உண்மை உன் தாயாகிய லெட்சுமி மேல் ஆணையிட்டு கூறுகின்றேன்
==
என்றையா நாதன் எடுத்தவர்ககே உரைக்க
நன்றெனவே வானோர் நற்பூரணனைக் கொண்டாடி
வி=இவ்வாறு உறுதி மொழியாக சத்திய வாக்கு கொடுத்து தான் எடுத்த தன்னுடைய அவதார உடலுக்கு அருளுரைக் கூறினார்
நல்ல செய்திகளைக கேட்ட தேவ முனிவர்கள் எல்லோரும் நல்லது என்று சம்பூரணத்தேவனுடைய நல்ல காலத்தையும் நினைத்து
==
பேறுபெத்த சென்மம் பிராணன் இது நன்றெனவே
பூர்வத்திலுள்ள பூசாந்திரம் இவ்வளமை
வி=சம்பூரணத்தேவன் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காக பிறவியும் உயிரும் பெற்றுள்ளது மிகவும் நல்ல காரியமே ஆகும்
ஆதி காலத்தில் பூர்வீக வழக்கமாக இருந்த பூசாந்தி என்று சொல்லக் கூடிய யாகம் வளர்த்து செய்யும் புனித தன்மையின் பலனை இதுவாகும்

என்னதவம் செய்தாரோ இத்தேவன் தாய்தகப்பன்
பொன்னப்ப நாரணர்க்கு பிள்ளையென வந்துதிக்க
நாரணரைப் பெறவே நல்ல தசரதரும்
வி=சம்பூரணத்தேவன் இந்த சக்திகளை பெறுவதற்கு இவருடைய தாய் தகப்பன் எப்படிப்பட்ட உயர்ந்த தவத்தை செய்தார்களோ
தங்கத் திருமேனியை உடைய நாராயண பரம் பொருளுக்கு
பிள்ளையாக அவதரிக்க வேண்டுமானால் அது முன் ஜென்ம பலனே
கிரேதா யுகத்தில் நாராயணரை
(இராமர்) பிள்ளையாக பெறுவதற்கு அயோத்தி மாமன்னராகிய தசரதர் தவம் இருந்தார்
==
பூரணமாய் நின்று தவம் புகன்றிடவே கூடாது
பன்னீராயிரம் வருசம் பாரத் தவசு பண்ணி
வி=தன்னுடைய தவம் நிறைவேறுவதற்காக எடுத்துக் கொண்ட முழுமையான முயற்சியை புகழ்வதற்கு வார்த்தைகளே கிடையாது
அயோத்தியை ஆண்ட தசரத மன்னர் பன்னிரெண்டு ஆயிரம் ஆண்டுகள் வனத்தில் கடுமையான தவம் மேற்கொண்டார்
==
முன்னுறு வாரமதாய் உலகளந்தோர் வேசமதில்
எண்ணாயிரத்தில் எடுத்தார் ஒரு ராமர் உரு
வி=தசரதரின் தவத்தின் காரணமாக தான் விருப்பத்தொடு ஏற்று நடந்த விஷ்ணுவின் முன்னூறு வேடங்களில் ஒன்று ராமர்
இராமர் அவதாரம் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டதாகும் தன்னுடைய எண்ணாயிரம் வேடங்களில் ஒன்றாக இராமர் உருவம் கொண்டார்
==
கண்ணாளர் தன்தனக்கு கற்பகம் போலித்தேவன்
மதலையாகப் பிறந்து வையகத்தை ஆள்வானென்று
வி=திரேதா யுகத்தில் திருமால் கண்ணன் அவதாரம் எடுக்கும் போது சம்பூரணத்தேவன் அவருக்கு கிடைத்த கற்பக விருட்சம்
மறைந்து போகும் சம்பூரணத்தேவன் அபூர்வ குழந்தையாக பூலோகத்தில் பிறந்து அவதார உடலில் ஆட்சி செய்வான் என்ற விதிப்படி
==
கதலிவாய் நாதன் கற்பித்தார் இப்படியே
வி=பச்சை கற்பூரம் போல் இருக்கின்ற பச்சைமால் நாராயணர் விவரமாக நடக்கப் போவதைப் பற்றி கூறுனார்
==

ஆருபெற்ற பேறும் அல்ல இப்பேறு இப்பலந்தான்
பேறுபெற்றவர் இவர்தான் பிறந்த இனமதிலே
நாம்பிறந்தாலும் பெரிய நலங்கிட்டும் என்று சொல்லி
தாம்பிறப்போம் என்று சான்றோராய்த் தான்பிறந்தார்
வி=இதுவரை உள்ள எவருமே அடையாத மிக உயர்ந்த நிலை சம்பூரணத்தேவனுக்குக் கிடைத்துள்ளது
பதினான்கு உலகங்களிலும் மிகவும் பாக்கியம் பெற்றவர் இந்த சம்பூரணத்தேவன் தான் எனவே அவர் பிறக்கு இனத்தில்
தெய்வலோகத்தைச் சேர்ந்த வானவர்கள் நாம் எல்லோரும் போய் பிறந்தால் நமக்கு நல்லது நட்க்கும் என்று பேசிக் கொண்டு
நல்ல முடிவெடுத்து பூலோகப் பிறவி எடுப்போம் என்று சான்றோர் இனத்தில் மானிடப் பிறவி எடுத்தார்கள்
==<>==
திருமாலின் அவதார உடலுக்கு வரம் கொடுத்தல் பகுதி நிறைவுபெற்றது
=<>=
சம்பூரணத்தேவன் பூலோக பிறப்பு
தொடர்ச்சி.1
அவர்கள் பிறக்க ஆனதெய்வப் புரணனை
திவசமது பார்த்துச் செய்தார் பிறவியது
செய்யச் சிவமும் சிவவேதனும் மகிழ்ந்து
வி=தெய்வலோக முனிவர்கள் எல்லோரும் சான்றோர் இனத்தில் பிறந்த பிறகு தெய்வலோக சம்பூரணத்தேவனை
(முத்துகுட்டி சுவாமியாக)
நான் நட்சத்திரங்கள் எல்லாம் பார்த்து பிறப்பதற்கான நல்ல நேரத்தை கணக்கிட்டு நல்ல சுபலக்கனத்தில் பிறவி செய்ய வேண்டும் என்று சிவனும் பிரம்மாவும் மிகவும் சந்தோசத்தோடுக் காணப்பட்டனர்
==
வையம் அளந்த மாலும் பிறவி செய்தார்
கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்க
தர்மச் சம்பூரணனைத் தரணிப் பிறவி செய்தார்
வி=அவர்களோடு உலகத்தை அளந்த மாயப்பெருமாளும் சேர்ந்து சம்பூரணத் தேவனை பூலோகத்தில் பிறவி செய்தார்கள்
அறுயுகமாக அவதாரம் எடுத்த உடலுக்கு வீடு பேறு கொடுப்பதற்காக கலியுகத்தில் மனிதப்பிறவி எடுக்கச் செய்ய
தர்ம புண்ணியவானாகிய சம்பூரணத் தேவனுடைய உயிரை அவதார உடலில் சான்றோர் இனத்தில் பிறவி செய்தார்

அன்று பெண்களின் குணம்

தெய்வ நிலைமை செப்பிய பின் தேசமதில்
நெய் நீதப் பெண்கள் நிலைமை கேளம்மானை
கணவன் மொழியக் கலவு மொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவேனம்மானை
கற்கதவு போலே கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத்திறவு கோலம்மானை
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்
முன்பான சோதி முறை போல் உறவாடி
போற்றியே நித்தம் பூசித் தனுதினமும்
சாற்றிய சொல்லைத் தவறாமலே மொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டி
கரமானது தடவிக் கால்தடவி நின்றிடுவாள்
துயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒரு சாமம் மங்கை யெழுந்திருந்து
முகத்து நீரிட்டு தான் முகத்தோனையுந் தொழுது
வி=சோழ மன்னன் ஆண்ட தமிழ் நாட்டின்
நெய்போல் உருகி மணத்தோடு வாழ்ந்த பெண்களின் குணத்தைக் கூறுகின்றேன் அகிலத்திரட்டு அம்மானையில்
கணவன் சொல்கின்ற வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவித்து பின் வார்த்தைப் பேசாதவர்களாக இருந்தார்கள்
மனைவியின் குணநலன்களை பற்றித் தெளிவாகக் கூறுகிறேன்
கல்லால் ஆன கதவைப்போல பெண்கள் பத்தினியாக மணம் உருதியோடு இருந்தார்கள்
பழம் பெருமைவாய்ந்த அவர்களுடைய ஞான அறிவை கேளுங்கல்
பெண்கள் அன்பாக தன்மை பெற்று வளர்த்த தாயையும் தந்தையையும் தெய்வமாக மதித்து
முதலில் கடவுளுக்குச் செய்த பணிவிடைகள் போல் தன்னுடைய பெற்றோரிடமும் அன்பு காட்டினார்கள்
அவர்களை வணங்கி மதித்து தினமும் மரியாதையோடு அன்பு குறையாமல் வாழ்ந்தார்கள்
பெற்றோர்கள் சொன்னச் சொல்லை மீறாமல் எந்த தப்பும் செய்யாமல் அன்பு மொழி பேசுவான் மனைவி
தன்னுடைய கணவர் நிம்மதியாகத் தூங்குவதற்காக அன்பாக அரவணைத்து ஆராட்டுவாள்
கை,கால்களை தடவிக் கொடுத்து அமைதியான நிலையை உருவாக்கி தூங் வைத்திடுவாள்
தன்னுடைய கணவர் தூங்கிவிட்டார் என்று தெரிந்த பிறகுதான் அவள் தூங்கச் செல்வாள்
தூங்கிய பெண்கள் விடியற்காலையான அதிகாலையில் எழுந்திருந்து தன் கடமைகளைச் செய்வார்கள்
தலைக்குளித்து தன்னைப் பிறவி செய்த பிரம்ம தகப்பனை பணிவோடு வணங்கிய பின் மற்ற வேலைகளை செய்வார்கள்
==

அகத்துத் தெரு முத்த மலங்காரமாய்ப் பெருக்கி
பகுத்தாக நித்தம் பாரிப்பார் பெண்ணார்கள்
தவத்துக் கரிய தையல் நல்லார் தங்களுட
மனுநீதஞ் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்பு நிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்கு மந்த நாளையிலே
வழியான சாதி வளமை கேளம்மானை
வி=வீட்டை சுத்தம் செய்து விட்டு தெருவாசலுக்கு வந்து தெருவை சுத்தம் செய்து கோலம் போட்டுக்கொள்வால்
(அரிசி மாவு)
பக்குவமாக எல்லா வேலைகளையும் செய்து ஒற்றுமையாக இருப்பார்கள் பெண்களெல்லாம்
தியாக வாழ்க்கை நடத்தும் பெண்கள் ஒருவருக்கொருவர் அன்போடு இணை பிரியாமல் இருப்பார்கள்
மக்களுடைய ஒழுக்க செயல்கள் எத்தனை என்று பிரித்து சொல்ல முடியாது ஒழுங்கு முறையோடு இருந்தார்கள்
முழு மன நிறைவோடு இனிய வாழ்க்கை நடத்தும் பெண்கள் கற்பு நிலை தவறாமல்
கண்ணியத்துடன் காணப்பட்டனர்
சந்தோசமாக ஒவ்வொரு நாளையும் அனுசரித்து வந்த அந்த காலத்தில் அடக்கம் ஒடுக்கம் காணப்பட்டது
நேர்மையான வழியில் வாழ்ந்த மக்களுடைய இன ஒற்றுமையைக் கூறுகின்றேன் அகிலத்திரட்டு அம்மானையில்
==
சான்றோர் முதலாய்ச் சக்கிலியன் வரையும்
உண்டாண சாதி ஒக்கவொரு இனம் போல்
தங்கள் தங்கள் நிலைமை தப்பிமிகப் போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்தோங்கியே வாழ
செல்வம் பெருக சிவ நிலைமை மாறாமல்
அல்வல் தின்ஞ்செய்து அன்புற்றிருந்தனராம்
வி=சான்றோர் மக்கள் முதல் சக்கிலிய சாதி வரை உள்ள பதினெட்டு சாதி மக்களும் மன பக்குவத்தோடு காணப்பட்டனர்
பலசாதி மக்களை ஒரு சாதி மக்கள் போல் ஒற்றுமையாக ஒன்று சேர்த்து வேறுபாடு இல்லாமல் இருந்து
அவரவர்களுடைய கட்டுப்பாடுகளைத் தாண்டி எந்த தவறும் செய்யாமல் விட்டு கொடுக்கும் தன்மை இருந்தது
மாதம் மூன்று முறை மழை பெய்து மக்கள் வளமோடு வாழ்க்கை நடத்த உதவியது
பதினாறு செல்வங்களும் கிடைக்க எல்லாம் வல்ல சிவனுக்கு சிவத்தொண்டு மாறாமல் பணி செய்து வந்தார்கள்
அன்றாடப் பணிகளை செய்து முடித்துவிட்டு அன்போடு உதவி செய்து வாழ்ந்து வந்தார்கள்
==

தான் பெரிதென்று தப்பு மிகச் செய்யாமல்
வான் பெரிதென்று மகிழ்ந்திருந்தாரம்மானை
வி=தானே சிறந்தவன்,பெரியவன் என்று ஆணவம் கொண்டு அதிகாரம் செய்யாமல் இருந்தார்கள்
இறைவனே பெரியவன் என்று ஆனந்த மடைந்தார்கள் சொல்கிறேன் அகிலத்திரட்டு அம்மானையில்
==
ஒருவர்க் கொருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன் பேரில் கந்த்தா யிருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன்பேரி லல்லாது
வையம் லழக்கு வாராதே யிருந்தார்
ஆடிபணிய வென்று அலைச்சல் மிகச் செய்யாமல்
குடி பொருந்தி வாழ்ந்து குடியிருந்தாரம்மானை
வி=மக்கள் ஓருவருக்கொருவர் அடிமை போல் வேலை செய்யாமல் சுதந்திரமாக இருந்தார்கள்
கடமையாகக் கருதி கடவுளுக்குப் பயந்து உண்மையாய் இருந்தார்கள் பக்தி நெறி பரவி இருந்தது
தன்னைப் படைத்த பரமசிவனை நினைத்து அவர் லழங்கியதை நினைத்தார்களே தவிர பற்று குறையவில்லை
பூலோகம் சம்பந்தப்பட்ட எந்த வம்பு வழக்குகளிலும் ஈடுபடாமல் இருந்தார்கள் தன் மானம் காத்தார்கள்
மற்றவர்கள் தங்களுக்குப் பணிந்து நடக்க வேண்டுமென்று மன உளைச்சல்களை கொடுக்காமல் இருந்தார்கள்
குடும்பத்தோடு அன்போடு ஒற்றுமையாக எப்படி வாழ்ந்து வந்தார்கள் என்பதை அகிலத்திரட்டு அம்மானையில் கூறுகிறேன்
==
சேயினுட ஆட்டுச்செவி கேட்டிருப்பதல்லால்
பேயினுட ஆட்டோர் பூதரறிய திருந்தார்
இந்தப்படி மனுவோர் எல்லா மிருந்து வொரு
விந்துக் கொடி போல் வீற்றிருந்தாரம்மானை
வி=பிள்ளைகளுடைய கூத்து கும்மாளங்களைப் பற்றி காதுக்கு இனிய செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தார்களே தவிர
பேய் பிசாசுகளுடைய ஆட்டத்தைப் பற்றி பூதலத்து மக்கள் கேள்வி பட்டதே இல்லை மானமாய் வாழ்ந்தார்கள்
தர்ம நெறி தவறாத மக்களாக எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக அன்பு பொருந்தி இருந்தார்கள்
ஒரு தகப்பன் பிள்ளைகள் போல ஒரு கொடி போல் படர்ந்து வாழ்ந்தார்கள் அகிலத்திரட்டு அம்மானை

இப்படித் தெய்வ இராச்சிய நீதமும்
மற்படித் தேச மனுவுட நீதமும்
நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
கற்புடன் ஈசர் கண்டு மகிழ்ந்தனர்
வி=எல்லா விதத்திலும் நீதி நேர்மையாக மன்னன் நடத்திய தேசத்தின் நீதியும் காணப்பட்டது
மதிப்பும,மரியாதையுமாக ஒழுங்கு முறைப்படி வாழ்ந்த மக்களின் நீதியும் காணப்பட்டது
நற்பண்புகளோடு நாட்டுப் பற்று கொண்டு தெய்வீகமாக வாழ்ந்து வந்ததைக் காணலாம்
தான் கற்று கொடுத்த எல்லா ஒழுக்க நெறிகளையும் கடைபிடித்த மக்களை கண்டு பரமசிவன் மனம் மகிழ்ந்தார்
==
முத்தான சீமை மூன்று நீதத்தோடு
பத்தாசையாகப் பண்பாய்த் தழைத்திடவே
வி=முத்து போண்ற துய்மையான தெட்சணா பூமீயில் தெய்வநீதம்,தர்மநீதம்,
மனுநீதம் ஆகிய மூன்று நீதங்களோடு
இறைவனிடம் யாசிக்கும் பத்து ஆசைகளைக் கேட்டுப் பெற்று பண்புள்ளவர்களாய் தளைத்து வாழ்ந்தனர்
==
நாலான வேதம் நல்ல கலியுகமாய்
மேலாம் பரமாய் விளங்கி யிருந்திடவே
வி=நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வேத முறைப்படி நடந்து கலியுகத்தில் நல்ல முறையில் காணப்பட்டனர்
மேலோகத்திலுள்ள தேவர்களைப் போல குற்றமற்றவர்களாய் வாழும் முறை தெரிந்து வாழ்ந்தார்கள்
==
தேவருறையும் திருக்கயிலை தான் வளமை
பாவலர்கள் முன்னே பாடினாரம்மானை
வி=தேவர்கள் வாழுகின்ற திருக் கைலாயத்தின் பெருமைகளைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்காக
புலவர்கள் பலயுகமாக பாடி வைத்திருக்கின்றார்கள் அதை அகிலத்திரட்டு அம்மானையில் கூறுகின்றார்
==

அவதார பொன் கூட்டு சடலத்தின் விளக்கம்

சங்கு வண்ணர் நெமித்த சடலத்தின் பெருமை
உரைக்கின்றேன் அன்பர் உள்ளம் மகிழ்ந்தவர்க்கு
தரை ஈரேழும் அளந்த சுவாமி உரைக்கலுற்றார்
வி=சங்கு வண்ணப் பெருமாள் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று ஏற்படுத்திய பொன் கூட்டு சடலத்தின் அருமைப் பெருமைகளை
தெள்ளத் தெளிவாக சொல்கிறேன் என் அன்புக்கு உரியவர்களே மனதில் சந்தோசமாக இருக்கின்ற உங்களுக்கு அருள்கின்றேன்
ஈரேழு பதினான்கு உலகத்தையும் தன் காலால் அளந்த உலகளந்த பெருமாள் விவரம் கூறத் தொடங்கினார்
==
சீரான நல்ல தெக்ஷணா பூமியிலே
பாரான நல்ல பதி தாமரை ஊரில்
தவசிக் குகந்த தாமரை ஊர் நல்பதியில்
சிவ சிவா வளரும் தெக்ஷணாபுரி நாடு
வி=சீரும் சிறப்பும் பெற்று மிகவும் புகழோடு இருக்கின்ற தெற்கே கன்னியாகுமரியைச் சேர்ந்த தெட்சணத்து பூமியிலே
பார்ப்பதற்கு மிகவும் அழகான உயர்வான தன்மை உடைய தாமரை மலர் பூத்துக் குலுங்கும் தாமரைகுளம் ஊரில்
தவம் செய்வதற்கு ஏற்றபடி அமைந்துள்ள தாமரை தடாகத்தில் அமைந்துள்ள அந்த ஊர் சிறப்பு மிக்க நல்லதொரு இடம் ஆகும்
சிவ சிவா என்கிற மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கும் தெட்சணத்து நாட்டோடு சேர்ந்த இடமாகும்
==
பாண்டவரின் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு
ஆண்ட பரமேசுரரை அகம் வைத்துப் போர் விசயன்
வி=துவாபரயுகம் நடக்கும் போது பஞ்சபாண்டவர்களின் வில் வித்தையில் சிறந்த அர்ச்சுனன் சிவனுடைய அம்பைப்பெறுவதற்காக
பாருலகத்தை ஆண்டு கொண்டு இருந்த பரமசிவனை தன் மனதில் ஒரே நினைவாக நினைத்து மகா பாரத போருக்குத் தயாரான அர்ச்சுனன்
==
நின்று தவம் முடித்து நெடியோனை மாதுமையை
கண்டு பதம் வாங்கிக் கைகண்டது இவ்வூரு
வி=நின்ற நிலையில் செய்கின்ற மிக உயர்ந்த தவத்தை இந்த பூமியில் முடித்துவிட்டு மிக உயர்ந்த சிவனையும் பார்வதியையும்
கண்களால் கண்டு சிவனுடைய அம்பை பாசுபதமாக பெற்றுக் கொண்டது இந்த தாமரை தடாகத்தில் தான்
==


ஆதியரசன் முன்னாள் அதிகச் தவசிருந்து
பதியரசி ஆனப் பார்வதியை ஈன்றதுதான்
வி=ஆதி மலை அரசானாகிய பர்வத ராஜா ஆதிகாலத்தில் அருந்தவசு மேற்கொண்டு அதன் பயனாக
பார் உலகத்திற்கே அரசியாக விளங்கக் கூடிய பார்வதி தேவி ஆனவளை பெற்றெடுத்தது இந்த ஊர் தவத்தால் தான்
==
இவ்வூரு தெக்ஷணந்தான் ஏற்ற தாமரை ஊரு
செவ்வூரு நல்ல சிறந்த மணவைப் பதிதான்
வி=இந்த ஊர் பாரத நாட்டின் தென்கரை மாவட்டம் ஆகும் தவம் செய்வதற்கு ஏற்றபடி தாமரைமலர்கள் நிறைந்த ஊர் ஆகும்
செம்மையான முறையில் அமைந்த நல்லதொரு ஊர் ஆகும் சிறப்பு பெற்ற மணவைப் பதியும் இது ஆகும்
==
வானலோகம் வாழும் வாய்த்த தெய்வேந்திரனும்
தானவரைக் காணத் தவசிருந்த இவ்வூரு
வி=இந்திரலோகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற தேவர்களுக்கு எல்லாம் அதிபதியாக இருக்கின்ற தெய்வேந்திரனும்
சிவபெருமானைக் கண்டு தன் சாபத்தைத் தீர்த்துக் கொள்ள பூலோகம் வந்து தவம் இருந்தது இந்த ஊர் ஆகும்
==
பஞ்சவர்க்கு முன்னம் பகவான் உதவிசெய்ய
அஞ்சல் செய்து நாதன் அமர்ந்திருந்தது இவ்வுரு
சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்தது இவ்வுரு
வி=துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு கிருஷ்ணபகவான் மகாபாரத போருக்கு உதவி செய்வதற்காக ஆசைப்பட்டு
சிவபெருமானிடம் தகவல் சொல்லி விட்டு கிருஷ்ணர் தவநிலையில் இருந்து வெற்றி கண்டது இந்த ஊர் ஆகும்
சாம்பவ சிவனை வணங்கி
(சுசீந்திரம்)சிவனுக்கு உகந்த சான்றோர் குலமக்களாக வாழ்ந்தது இந்த ஊர் ஆகும்
==
தாம்பிரபரணி ஆவி தழைத்திருந்தது இவ்வூரு
பரராச முனிவன் பாரத் தவசு பண்ணி
விரமான வியாகரரை மிக ஈன்றது இவ்வூரு
வி=தெட்சணத்து பூமியில் ஒடுகின்ற தாமிரபரணி நதி நீரால் செழிப்பாகக் காணப்பட்டது இந்த ஊர் ஆகும்
பராச முனிவன் என்று சொல்லக் கூடியவர் கடினமான முறையில் இந்த பூமிக்கு வந்து தவம் இருந்தது இந்த ஊரு
சத்தியவதிக்கு மகனான விவரமான அறிவுள்ள பிள்ளையாக வியாசரைப் பெறுவதற்கு தவம் இருந்தது இந்த ஊர் ஆகும்
==

தவம் புரியவென்று தான் நினைத்த பேர்களெல்லாம்
பாவமற்ற தாமரையூர் பதியாகும் என்றுரைப்பார்
வி=தமிழ்நாடு அந்தகாலத்தில் மிகப்பெரிய நந்தவனமாக இருந்தக் காரணத்தால் தவம் செய்ய வேண்டும் என்று நினைத்த மேலோகத்தார் எல்லோரும்
தவத்திற்கு அமைதியைக் கொடுத்து தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கிய குற்றம் குறை இல்லாதது தாமரைகுளம் பதியாகும் என்று கூறினார்
==
தவசுக்கு உகர்ந்த சந்தமுள்ள பேரூரு
பவிசுக்கு உகர்ந்த பாலதிய தாமரையூர்
அவ்வூரு தன்னில் ஆதி அருளாலே
செவ்வு மகாவிஷ்ணு உருசெய்த சடமே பிறந்து
பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ் காட்டி
வி=மனதை ஒருநிலைப்படுத்தி தவம் செய்வதற்கு ஏற்றபடி மிகச் சிறப்பான அமைப்பைப் பெற்ற அமைதியான ஊர் இதுவாகும்
பெருமைப்படுவதற்கு உரிய விதத்தில் பாலோடு பழத்தோடு தவம் இருந்து உயர்வடைந்தது இந்த தாமரை ஊர் ஆகும்
இத்தகைய சிறப்பு பெற்ற தாமரைபூக்கள் புத்து குலுங்கிய சுவாமிதோப்பு ஊரில் ஆதி சிவனுடைய அருளால்
செம்மையும் நெர்மையும் பொருந்தி மகா விஷ்ணுவால் உருவாக்கப்பட்ட பொன்கூட்டு சடலம் பிறந்தது இந்த ஊர்
திருமாலின் அவதார சடலத்தில் சம்பூரணத் தேவனுடைய உயிர் பிறந்து முத்துக்குட்டி சுவாமி என்கிற பெயரில் பெருமையோடு வாழ்ந்து வந்தார்
==
மறந்திடா முன்னமைத்த மாத உறவாடி
பூலோக மனுக்கள் பிள்ளை போலே வளர்ந்து
மாலேக்கப் பூசை மனையில் மறவாமல்
வி=சம்பூரணத் தேவனாக இருக்கும் போது மறக்கமுடியாமல் இருந்த பரதேவதையை முன் ஜென்ம விதிப்படி அவளோடு உறவாடி
பூலோக மானிட மக்களைப் போல் எந்த பாகுபாடு இல்லாமல் மனிதப் பிள்ளையைப் போலவே வளர்ந்து வந்தார்
திருமால் ஏற்றுக்கொள்ளும் படியான வகையில் வீட்டில் பூஜை அறை அமைத்து நேரம் தவறாமல் பூஜை செய்து வந்தார்
==

விஷ்ணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டு
கட்டுத் தீர்க்காகக் கண் வளர்ந்தார் கலியில்
ஒருவருக்கோர் பொல்லாது உலகில் மிகச் செய்யாமல்
வி=மகாவிஷ்ணுவை போற்றித்தொழுது புகழ்பாடுவதற்காக தனிப்பட்ட முறையில் ஒரு மேடை போன்ற அமைப்பை அமைத்து
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தீர்க்கமான முறையில் விடாப்படியாக வழிபட்டு வந்தார் கலியன் வாழ்ந்த தேசத்தில்
எந்த விதமான பழிபாவங்களும் செய்யாமல் நேர்மையானவராக முத்துக்குட்டி சுவாமி என்பவராக வாழ்ந்து வந்தார்
==
குருவைக் குருகண்டு கொக்கரித்தே வளர்ந்தார்
எதிர்த்தோர் பெலமடக்கி எல்லோருக்கும் நல்லவராய்
வி=கடவுளைக் கண்ணால் கண்ட கடவுள் போல் நேர்மைக்காக கூக்குரலிட்டு ஞான அறிவோடு வளர்ந்து வந்தார்
நேர்மை நீதி இல்லாமல் செயல்படுபவர்களை எதிர்த்துப் போராடி வெற்றிக் கண்டவராக அனைவருக்கும் பிடித்தவராய் இருந்தார்
==
உருத்துக்கு அதியவராய் உலகில் மிக வளர்ந்தார்
எச்சாதி யார்க்கும் இவர் நல்லவர் எனவே
அச்சாதி எல்லாம் அகமகிழ்ந்து தான் வளர்ந்தார்
வி=நாட்டுப்பற்றுக் கொண்டவரைப் போல் உரிமையோடு அதிக முயற்சி எடுத்து மக்களுக்கு உதவி செய்து வளர்ந்து வந்தார்
எல்லா இனத்தைச் சார்ந்த பக்கத்து ஊர்மக்களுக்கும் இவர் மிகவும் நல்லவர் என்கிறப் பெயர் பெற்றார் ஆகவே
பிற இனத்தவருக்கு ஏற்றத்தாழ்வு பாராமல் அன்பு பாராட்டி மிகவும் சந்தோசமான மனநிலையில் வளர்ந்து வந்தார்
==
முன்னுதித்து உடன்பிறந்தோர் ஒருவர் முப்பு ஆடாமல்
பின்னுதித்துப் பெரியோராய்ப் பெருமையுடன் வளர்ந்தார்
வி=இவருக்கு முன்னால் தோன்றிய சான்றோர்களில் ஒருவர் கூட இந்த அளவுக்கு பெயர் வாங்கவில்லை என்பது உண்மை
கலியுகத்தின் கடைசி காலக்கட்டத்தில் பிறந்து பேரும் புகழும் பெற்று மதிப்புக்குரியவராய் வளர்ந்து வந்தார் முத்துக்குட்டி ஆவார்
==

தாய்தகப்பன் மாமன் சந்தமிந்தத் தம்பியென்று
ஞாயவான் என்றும் நாடி வளர்ந்தார்
ஊருக்குந் தலைவன் உடைய வழிக்குந் தலைவன்
வி=மிக உயர்ந்த நிலையில் இருந்த இந்த பிள்ளையை பெற்ற தாய்,தகப்பன்,மாமன் எல்லோரும் இரக்க மனம் கொண்ட பிள்ளை என்றனர்
தவறு எங்கெங்கு நடக்கிறதோ அதை தட்டிக் கேட்கும் நியாய குணம் உடைய பிள்ளை என்று சொல்லி வளர்த்தார்கள்
தான் பிறந்த ஊருக்கும் தலைமை பொறுப்போடு நடந்து வந்தார் தான் பிறந்த குடும்பத்திற்கும் தலைமை பொறுப்போடு நடந்தார்
==
ஆருக்கும் தலைவன் என்று அன்னைபிதா வளர்த்தார்
ஞாயம் இருப்பதனால் நாடாளுவான் என்று சொல்லி
தாய் தமர்களெல்லாம் தாங்கி மிக வளர்த்தார்
வி=எல்லோருக்கும் தலைவன் என்றுச் சொல்லக்கூடிய அளவில் அறிவுள்ள பிள்ளையை தாயும் தகப்பனும் செல்லமாக வளர்த்தனர்
இவனிடம் நீதியும், நியாயமும் நிறைந்து இருப்பதால் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்று நடத்துவான் என்று கூறினார்
தாய் தகப்பன் சொந்தப்ந்தங்கள் எல்லோரும் மிகவும் மரியாதைக் கொடுத்து வளர்த்து வந்தார்கள் அபூர்வ சக்தியும்
==
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரன் இவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத்திலும் பெரியோன்
மங்கையர்க்கு ஏற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும் பேர் கேட்க வைப்பான் இவன் கீர்த்தி நல்வளமை
வி=சாமர்த்தியமாக பேசும் திறன் பெற்ற இவன் எந்த செயலையும் தைரியமாக முன்னின்று நடத்தும் ஆற்றல் பெற்றவன்
வீண் வம்புக்கு வந்தவர்களை வாதாடி ஜெயிக்கும் ஆற்றலும் எதையும் தீர்மானிக்கும் சக்தியும் அதிகமாக இருந்தது
இளம் பெண்கள் விரும்பக் கூடிய அளவில் உடல் கட்டமைப்பும் இளம் பெண்களை வசப்படுத்தும் தன்மையும் கொண்டவன்
எங்கு சென்றாலும் இவன் யார்?
இவன் பெயர் என்ன? என்று கேட்க வைப்பான் அத்தனை நற்குணமாய் காணப்பட்டான்
==

பல்லாக்கும் ஏறிடுவான் பார் முழுவதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் வல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி
வி=இவன் மிக உயர்ந்த நிலையை அடைந்து பதவி பொறுப்பேற்று உலகம் முழுவதும் ஆட்சி செய்வான் என்று நினைத்தார்கள்
இவனுக்கு நிகர் யாருமே கிடையாது என்று சொல்லக்கூடிய அளவில் திறமைசாலியாகவும் மனப்பக்குவமாகவும் இருந்தான்
==
எவ்வோரும் கொண்டாடி அவர் வளரும் நாளையிலே
பத்துவயது பண்போடு இருபதிலே
வி=எல்லோராலும் பாராட்டப்பட்டு மதிப்பு மரியாதையோடு அனைவருக்கும் ஏற்றவனாக வளர்ந்து வரும் சமயத்தில்
பத்து வயது இருக்கும்போது இவனுடைய செயல்பாடுகள் எல்லாம் இருபது வயதுக்கு ஒப்பாக இருந்தது
==
பற்று நிகரரொவ்வா மன்னவர் போலே வளர்ந்தான்
எல்லாத் தொழிலும் இதமிதமாய்க் கற்றுமிகப்
வி=யாருக்கும் தலை வணங்கி நடக்காமல் தனக்கு நிகர் தானே என்று அரசனைப் போன்ற தன்மையொடு வளர்ந்தார்
சான்றோர் மக்களுடைய எல்லாத் தொழில்களையும் ஆர்வத்தோடு மிகவும் வேகமாய் சந்தோசமாக கற்றுக்கொள்வான்
==
பொல்லாதாரோடு பெரும்பகைப் போலே சீறி
நல்லாரை உள்ளில் நாளும் மறவாமல்
கல்லாரை எல்லாம் கண்டு கழித்தே இருந்தார்
வி=நீதி நேர்மை இல்லாமல் செயல்படுபவர்களோடு பகையாளிபோல் மிகவும் கோபம் கொண்டு வளர்ந்து வந்தார்
நல்லெண்ணம் கொண்டவர்களை உள்ளத்தில் அன்போடு ஏற்றுக்கொண்டு பிறர் செய்த நன்றியை மறவாமல்
படிப்பறிவு இல்லாத கீழ் ஜாதி மக்களையும் புறக்கணிக்காமல் எல்லோரிடமும் சரிசமமாக பண்போடு பழகி வந்தார்
==
ஈவதற்கும் தர்மமென எளியோரைக் கண் பார்த்து
ஆய்வதற்கும் நல்லான் என்றே மிக வளர்ந்தார்
வி=ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் அக்கறை காட்டி தர்ம சிந்தனை உள்ளவராக கருணைக் காட்டி வந்தார்
எந்த காரியத்தையும் ஓன்றுக்கு பல தடவை ஆராய்ச்சி செய்து நல்ல முடிவு எடுக்கிற நல்லவனாக வளர்ந்தார்
==

பதினேழு வயதில் பண்டமைத்த பெண்ணோடு
விதியான படியால் மெல்லியர் மேல் இச்சை கொண்டு
கூடிக் குணமாய்க் கொண்டவனையும் அகற்றி
தேடி இவரோடு செய்ய ரசமாய் இருந்தாள்
வி=பதினேழு வயது பருவ வயதை அடைந்து இளம் வாலிபனாக இருக்கும் போது முன் ஜென்மத்தில் அமைத்த பரதேவதையோடு சேர்ந்து வாழவேண்டும் என்பது விதியாக இருந்தபடியால்
பூலோகத்தில் பிறந்த பரதேவதை(திருமாலம்மை) மேல் ஆசைக் கொண்டு
இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி பாசத்தால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய சொந்த கணவனை மறந்து விட்டு
சுவாமியைத் தேடி அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற அளவில் அன்பாக இருந்தாள்
==
வானு பரமேசுரனார் மாயவனார் ஆணையிட்டு
நானும் நீயுமாக நலமாக வாழவென்று
வி=அவர்கள் இருவரும் மேலோகத்தில் இருக்கின்ற பரசிவனும் மாயப்பெருமாளும் செய்கின்ற செயல்தான் என்று உறுதியோடு
நீயும் நானும் ஒன்று சேர்ந்து சந்தோசமாக வாழ்வோம் என்று மனதில் ஒருவரும் முடிவெடுத்துக் கொண்டனர்
==
ஆணையிட்டு இருபேரும் அகமகிழ்ந்து அன்றுமுதல்
நாணமில்லாமல் நாயகன் போல் வாழ்ந்தார்
மங்கை காணாமல் மறுவூரு தங்கறியார்
வி=ஒருவரை ஒருவர் கைவிட மாட்டோம் என்று இறைவன் மேல் ஆணையிட்டு இருவரும் சந்தோசமாக அன்றுமுதல்
யாருக்கும் பயப்படாமல் வெட்கத்தை விட்டவர்களாக குடும்பமாகி குடும்பத் தலைவனைப் போல் வாழ்ந்து வந்தார் ஊரறியும் படியாக
சுவாமி தன் விருப்பத்திற்குரிய பெண்ணான திருமாலம்மையை பார்க்காமல் வெளி ஊரில் தங்கி இருக்க மாட்டார்
==
இத்தப் படியாய் இவர் வளரும் நாளையிலே
எந்தனருள் கண்டு இவர்க்கு இவளை அமைத்ததென்பார்
வி=இதுபோன்று இரண்டு பேரும் இணை பிரியாதவர்களாய் வாழ்ந்துக் கொண்டிருந்த சமயத்தில் மக்கள் எல்லோரும்
திருமாலாகிய என்னுடைய அருளால் இவர்களுடைய வாழ்க்கை இப்படி அமைந்து விட்டது என்று குறை கூறுவார்கள்
==

முன்னால் அமைத்த ஊழி விதியெனவே
சொன்னார் எவரும் அருளாலே
அன்றைக்கு அமைத்தது அவனை அவர்கல்லாது
வி=ஒரு தவறும் செய்யாத இவனுக்கு முன்பிறவியில் விதிக்கப்பட்ட கர்ம வினைப் பயனே என்று நொந்துக் கொண்டார்கள்
சொன்னவர்கள் எல்லோருமே கடவுள் அமைத்த விதிதான் எல்லாமே அவரால்தான் இப்படி நடக்கிறது என்று கூறினார்கள்
அன்றைக்கு எழுதிய எழுத்தை மாற்றி அமைக்க முடியாது அவனை அவருக்காகவே பிறவி செய்திருக்கிறார்
==
அன்றணைந்த தோசம் அகல மற்றோன் என்பதுதான்
என்று நருள்களெல்லாம் இயம்பி மிகவுரைத்தார்
மன்று ஈரேழும் அறிய மங்கையோடு வாழ்கையிலே
வி=அவர் அன்று எழுதின எழுத்துப்படி பாவ தோசத்தை தீர்க்க ஒருவன் மனைவி இன்னொருவருக்கு என்றாகி விட்டது என்றார்
இவ்வாறு நாட்டு மக்கள் எல்லோரும் அனுதாபம் கொண்டவர் களாக பரவலாகப் பேசிக் கொண்டார்கள் மிகவும் தல்லவராக இருந்தார்கள்
பதினான்கு உலகத்தில் உள்ளவர்களுக்கு அறியும்படியாக பரதேவதையோடு(திருமாலம்மை) வாழ்ந்து வரும் போது சோதனை ஏற்பட்டது
==
உற்ற வயது ஓர் இருப்பத்தி
இரண்டதிலே
சத்திராதி ஓர் நீசன் தானே பிழை ஏற்க
வி=முத்துக்குட்டி சுவாமிக்கு வயது இருபத்தி இரண்டு ஆகும் இந்த வயதுதான் சோதனையாக இருந்தது அவருக்கு
முத்துக்குட்டி சுவாமிக்கு பகைவனாக இருந்த ஒரு கலிநீசன் தானே விசம் கொடுத்து கொல்வதற்காக தீர்மானித்தான்
==
ஏக்கவே நீசன் அடறு செய்த எதுவினால்
ஆக்கம் அடக்கி அமர்ந்து பிணியெனவே
எல்லோரும் இல்லா விசையடக்கித் தானிருந்தார்
வி=முத்துக்குட்டி சுவாமிக்கு விசம் கொடுத்தான் கலிநீசன் விசமருந்து கொடுத்து தவறு செய்த காரணத்தால்
தன்னுடைய வீரமிக்க ஆற்றல்கள் எல்லாம் அடங்கி நொய்வாய்ப்பட்டு அமர்ந்த நிலையில் இருந்தார்
எல்லோராலும் கைவிடப்பட்டவராக உடலில் செயல்பாடுகள் எல்லாம்
குறைந்தது பெலனற்றவராக இருந்தார்
==

நொம்பலங்களென்று நொந்து மிக உழன்று
தம்பிலங்கள் அடக்கித் தருணம் புலம்பலுற்றார்
வி=உடலில் ஏற்பட்ட வலிகளை தாங்கிக் கொள்ள முடியாமல் வேதனையோடு சத்தமிட்டு புலம்பினார்
தன்னுடைய சக்தியினால் எவ்வளவு அடக்க முடியுமோ அவ்வளவு அடக்கியும் அடக்க முடியாமல் புலம்பித் தீர்த்தார்
==
கருவுற்ற தோசம் கழிந்து சிவஞான
திருவுளவாசம் சிவமயமாய்ப் பெறவே
மனதில் மிகவுற்ற மாயவரை நெஞ்சில் வைத்து
வி=எந்த காரணத்திற்காக பிறக்க வேண்டியது வந்ததோ அத்த பாவதோசங்கள் எல்லாம் தீர்த்து சிவஞான அறிவுள்ளவராக
இறைவனை நினைத்து மனதை ஒரு நிலைப்படுத்தி சிவஞான சக்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று
தன்னுடைய மனதில் இரவும் பகலும் இடைவிடாமல் ஆதி நாராயணரை நினைத்து பற்றுதலோடு இருந்தார்
==
தினமும் வருந்தித் தீனமெனவே இருந்தார்
அப்படி ஒர் வசம் அங்கமதில் ஊரெல்லாம்
வி=நித்தமும் நாராயணரை விடாப்படியாக நம்மிக்கையோடு அழைத்த வண்ணம் நோய்ப்பட்டவராகவே இருந்தார்
நோய்வாய்பட்டவராக ஒரு வருடம் நடமாட முடியாமல் உடல் முழுவதும் எரிச்சலும் அரிப்பும் கொண்டவராக இருந்தார்
==
முப்படியே ஞாயமதால் உலகில் கழிய விட்டு
இகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலை
வி=முன் ஜென்ம கர்மவினையால் ஏற்பட்ட பாவங்களை எல்லாம் பூமியிலே பிறந்து இத்தனை பாடுகளும் பட்டு முடித்து விட்டு
கடவுளே என்னைக் காப்பாற்றும் என்று அவருடைய நினைவாக இருந்துக் கொண்டிருக்கும் அந்த நாளிலே
==

வெயிலாள் அம்மை கண்டக் கணவு

மகாபரனார் செயலால் மாதாவின் கண்ணதிலே
சொர்ப்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே உத்தரவு
உர்ப்பனம் போல் கண்டு உற்றவர் மாதாவும்
வி=மகா விஷ்ணுவின் கருணைப் பார்வையால் முத்துக்குட்டியின் தாயார் வெயிலாள் அம்மையார் கனவில்
கனவு காண்பதுபோல் தரிசனமாக சுவாமி கண்கள் முன்னால் வந்து காட்சி அளித்து கட்டளை இட்டுச் சென்றார்
உண்மையாகவே நேரில் கண்டதைப் போல் கண்டு மிகவும் நம்பிக்கைக் கொண்டவராக தாய் வெயிலாள்
==
மகனே இன்று இரவில் மனஞ்சடைந்து நான் வாடி
அகம் வைத்த எண்ணம் அறிந்து சிவ நாரணரும்
வந்து சொன்ன உத்தரவை மகனே நீ கேளுமென்று
வி=என் என்பு மகனே
நான் இன்று இரவு தூங்கச் செல்லும் போது உன்னை நினைத்து மிகவும் மனவேதனையோடு படுத்தேன்
நான் என் மனதில் கொண்ட துயரத்தை அறிந்த சிவஞானம் பெற்ற நாராயணர் கனவில் காட்சி தந்தார்
மகாவிஷ்ணு என் கனவில் வந்து சொன்ன கட்டளையை நான் சொல்கிறேன் கேள் என்று கூறத் தொடங்கினாள்
==
விந்து வழிக் கிளையோர் மிகவாகக் கேட்டிருக்க
சொல்லுகிறார் அந்தச் சொற்பனத்தை அன்போரே
வி=சான்றோர் குல மக்களாகிய முத்துக்குட்டி சுவாமியின் உறவினர்களும் ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தனர்
அவர்கள் முன்னிலையில் வெயிலாள் கண்ட கனவை நேரடி காட்சி போல் கண்டதைக் கூறினாள் அன்பர்களே
==
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவார் அன்போரே
வி=நல்லெண்ணம் கொண்ட உறவினர்களே நல்லதொரு செய்தியை கேளுங்கள் என்று கூறத் தொடங்கினாள் அன்பர்களே
==
ஆயிரத் தெட்டு ஆண்டிது நாள் இவ்வருசம்
வி=தமிழ் வருடக் கணக்குப்படி ஆயிரத்து எட்டாம் ஆண்டு ஆகிய இந்த நல்லதொரு ஆண்டில் நடந்தது

மாசியென்ற மாதமிது வாய்ந்த தியதி பத்தொன்பது
இம்மாதம் இத்தியதி ஏற்ற திருச்செந்தூரில்
நம்மாணை கொடி ஏற்றி நல்ல திருநாள் நடக்கும்
அங்கு உன் மகனை அழைத்து வருவாயானால்
வி=தமிழ் மாத கணக்குப்படி மாசி என்கிற மாதத்தில் நல்லதொரு நாளாக கிடைத்த பத்தொன்பதாம் தியதி
இப்போது நடந்துக் கொண்டிருக்கும் மாசி மாதத்தில் பத்தொன்பதாம் தியதி உயர்வு பொருந்திய திருச்செந்தூரில்
எங்கள் மேல் ஆணையாகக் கூறுகின்றேன் திருச்செந்தூர்
கோவிலில் கொடி ஏற்றப்பட்டு நல்லபடி திருவிழா நடக்கும்
திருவிழா நடக்கும் போது நீ உன் மகனை திருச்செந்தூருக்கு கூட்டிக் கொண்டு நம்பிக்கையோடு வருகைத் தந்தால்
==
எங்குள்ளோரும் அறிய இப்பிணியும் தீர்த்து
நல்லபேறும் கொடுப்போம் நம்மாணை தப்பாது எனச்
வி=உலக மக்கள் அனைவரும் அறியும் படியாக உன் மகனுக்கு ஏற்பட்டுள்ள நோயைத் தீர்த்து விடுவோம் என்றும்
உன் மகனுக்கு உலகம் எங்கும் புகழடையும் நற்பேர் அருளுவோம் எங்கள் மேல் ஆணையாக கூறுகின்றேன் பொய்யாகாது என்றார்
==
சொல்லவே கண்டேன் சுவாமி கருமேனி நிரம்
நான்கண்ட சொப்பனந்தான் நழுவி மிகப்போகாது
வி=என்னிடம் சத்தியம் செய்து சத்திய வாக்காக சொல்வதைக் கண்டேன் சொன்ன நாராயணர் கருமை நிறத்துடன் காணப்பட்டார்
மேதுவாக நான் காணும் கனவுகள் பலிக்கும் எனவே இந்த கனவும் பலிக்காமல் போகாது என்று கூறினாள்
==
தெண்கண்டாப் போலே சிரித்து மனமகிழ்ந்து
இந்தக் கனாவதற்கு இங்கிருந்து அங்கே போய்
வந்து அல்லாதே பிணியும் மாறவகை இல்லையல்லோ
வி=இனிய சுவையை உடைய தேனை கண்டது போல் தன் மனகசப்பு மாறி உள்ளம் பூரித்தவளாக சந்தோசம் அடைந்து
நான் கண்ட இந்த சொப்பனத்தின்படி உடனடியாக நாம் எல்லோரும் இங்கிருந்து புறப்பட்டு அங்கே சென்று
இறைவனை வழிபட்டு வராமல் இவனுக்கு இந்த நோயானது தீர்வதற்கான வேறு வழி இல்லை அல்லவா என்றாள்
==


என்றுரைக்க எல்லொரும் இன்பமுடனே மகழ்ந்து
நன்று நன்று போவதற்கு நடைக் கோப்பு கூட்டு மென்றார்
வி=இவ்வாறு வெயிலாள் அம்மையார் திடமான முறையில் சொல்ல உறவினர்களுக்கு நல்ல செய்தியைக் கேட்டு சந்தோசத்துடன்
மிகவும் நல்லது நல்லபடியாகவே நடக்கட்டும் நாங்களும் வருகிறோம் நடந்து சொல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றார்
==
வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து
ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாம் சேகரித்து
வி=நடைபயணத்தின் போது சாப்பிடுவதற்கான உணவு வகைகளை பலவிதமான முறையில் கெட்டுப் போகாதபடி தயார் செய்தனர்
பழைய கருப்புக்கட்டி முதல் கட்டுச்சோறு வரை தேவைப்படுகின்ற பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றார்
==
தான தர்மம் செய்ய தனங்கள் மிக எடுத்து
தீனம் ஆனவரைத் திடமாகக் கூட்டி வந்து
ஆனை சேகரித்து அகல நல்லத் தொட்டில் வைத்து
நாளைக் கடத்தாமல் நடக்க வழி கொண்டனராம்
வி=ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வதற்குத் தேவையான பணத்தையும் பொருளையும் அதிகமாக எடுத்துக் கொண்டனர்
நோய் பிடித்த நடக்க முடியாமல் படுக்கையில் இருந்தவரை திடமனதோடு திருச்செந்தூருக்கு அழைத்து வருவதற்கு
உறவினர்களை ஏற்பாடு செய்து முத்துக்குட்டி சுவாமி படுக்க வைத்து தூக்கி வருவதற்கு நல்ல தொட்டில் உருவாக்கி
நாட்களை கடத்தாமல் கனவில் கண்ட அதேநான் போய் சேர்வதற்காக நடைப்பயணத்தை மேற்கொண்டார்கள்
==
மாதாவும் மகனும் வாய்த்த நருளுடனே
நிதாவின் பாதாரம் நெஞ்சில் மிக நிறுத்தி
இருந்த பதியும் விட்டு ஏற்ற ஒரு காதம் விட்டு
வி=தாய் வெயிலாள் அம்மையாரும் மகன் முத்துக்குட்டி சுவாமியும் முக்கியமான உறவினர்களோடு எல்லோருமாகச் சேர்ந்து
நீதிமானாகிய நாராயணருடைய பாதக் கமலங்களை மனதில் நினைத்து சிவ சிவா அரகரா என்ற கோஷத்தோடு
தன்னுடைய ஊரில் தன்னுடைய வீட்டுக்கு வெளியே கிளம்பி நடைபயணத்தால் பத்து மைல் தூரத்தைக் கடந்த போது
==