செந்தாமரை மலரில் ஒளிர்கின்ற திருநாமம் அய்யா வழி பக்தர்களின் நெற்றி
புருவங்களின் மத்தியிலிருந்து ஜோடி வடிவில் திருநாமமாக இடப்படுகிறது.
பள்ளியறையை வணங்கிய பக்தர்கள் பதியில் உள்ள பள்ளியறையின் இடது பக்கத்தில்
நிற்கின்ற பணிவிடை பட பிள்ளைகளிடம் சுருளைக் கொடுத்து "அய்யாவுக்கு அன்பாக
தரப்படுகிறது'' என்று கூற வேண்டும்.
பின்னர்
பணிவிடைப் பிள்ளைகளால் பக்தர்களுக்கு திருநாமம் இடப்பட்டு, இனிமம்
வழங்கப்படுகிறது. திருநாமம் இடப்பயன்படுத்தும் திருமண பூமிக்கு அடியில்
உள்ள தூய வெள்ளை நிற திருமண்ணில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இதையே
அனைத்து அய்யா வைகுண்ட பதிகளிலும், தாங்கல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
முற்காலத்தில்
சில கோவில்களில் திருநீற்றை பூசுவது தீண்டாமையாக கருதப்பட்டது. இதை
மாற்றக் கருதிய அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு "தொட்டு திருநாமம்'' ஆதலால்
அய்யா வைகுண்டரின் பதிகளிலும், தாங்கல்களிலும் பணிவிடைப் பிள்ளை களால்
அன்பர்களுக்கு திருநாமம் இடப்படுகிறது.
அத்திருநாமம்
இடும்பொழுது பெருவிரலும் ஆட்காட்டி விரலும் இணைந்து இடப்படுகிறது. அதில்
பெருவிரல் "நான்'' என்பதையும் குறிக்கின்றது. இம்முறையே "தொட்டு
திருநாமம்'' என்று அழைக்கப்படுகிறது. திருநாமம் இடுவதால் பக்தர்களுக்கு பல
நன்மைகள் ஏற்படுகின்றது. திருநாமம் அணிந்த அன்பர்களின் வாழ்வில் மேன்மைகள்
உண்டாகும்.
நோயின்றி சுகத்துடன் வாழ முடிகின்றது.
தீராத நோய்கள், வலிகள் குணமாகின்றது. தீயசக்திகள் நம்மை விட்டு
அகலுகின்றது. கவலைகள் இன்றி இன்பத்துடன் வாழ வழிவகுக்கிறது. தேர்வில்
வெற்றி பெற முடிகிறது.
தீர்க்க முடியாத துன்பம்
தரும் பிரச்சினைகளும் தீர்க்கப்படுகிறது. திருநாமம் இடுவதால்
நேர்மையாகவும், உண்மையாகவும், வீரமாகவும், அன்பாகவும் வாழ முடிகின்றது.
இத்தகைய சிறப்புகளைத் தருகின்ற திருநாமத்தை தினமும் நம் நெற்றியில் தாங்கி
அய்யா வைகுண்டரின் திருவருளைப் பெறுக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக