சத்துருவோடுஞ் சாந்தமுடனே யிரு
புத்திரறோடும் பேசியிரு யென்மகனே
அன்போர்க்கும் யீந்திரு நீ ஆகாதபேர்க்கும் யீயு
சகலோர்க்கும் யீந்து தானிருநீ யென்மகனே
வலியோர்க்கும் யீந்து வழியேகுவோர்க்கும் மீயு
மெலியோர்க்கும் மீயு மேண்மையா யென்மகனேமெலியோர்க்கும் மீயு மேண்மையா யென்மகனேஆர்க்குமிக வீந்தால் அந்ததர்மமே கொதிக்கும்
போர்க்கு நினைத்தாரைப் பெலிகொடுக்குந்தர்மமது
தர்மந்தான் வாழ்வு சக்கரங்களல்லாது
திண்மையது கேடு செப்பங்கேளென்மகனே
சாதிபதினெட்டுந் தன்னால் கேடாகும் வரை
நீதியழியாதே நீசாபங் கூறாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக