புதன், 10 செப்டம்பர், 2014

சாட்டு நீட்டோலை

சாட்டு நீட்டோலை தன்னை நாக்கு மூக்கொடியாமல்
தாக்கி எழுதச்சொன்னேன் சிவனே அய்யா
ஓதுமெழுத்துக்கும் முன்னூன்றுமெழுந் தாணிக்கும்
ஊமைமவுனம் சொன்னேன் சிவனே அய்யா
தெச்சணமெங்கும் போற்றநற் சடலங்கள் பார்த்து
தேடித்திரிந்தேன் அய்யோ சிவனே அய்யா
முப்பத்து முக்கோடி தேவரிஷியுடனே
முனியும்வந்த தெடுத்தாரே சிவனே அய்யா
மாமுனி தாயுடனே வழியே நளடந்துவர
மலர்மாரி பெய்ததுண்டோ சிவனே அய்யா
திருச்சம்பதியில் புக்குத் தீர்த்தக்கரையில் செல்ல
திரைவந்திழுத்துதையோ சிவனே அய்யா
அலைவாய்க் கரையிருந்து தலைமேலே கையைவைத்து
அம்மை அழுததை யென்னசொல்வேன் சிவனே அய்யா
கடலிலே போனமகன் இன்னும் வரக்க ணோமென்று
கதறியழுதாள் அம்மை சிவனே அய்யா
கடலும் முழங்கிட துறவர் வணங்கியென்னைக்
கூட்டியங்கே போனாரே சிவனே அய்யா
பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம்
பள்ளிகொள்ளுமிடம் சென்றேன் சிவனே அய்யா
இருந்தேன் முனிதெச்சணம் பள்ளிக்கொள்ளத் தந்த
வரிசையை யென்னசொல்வேன் சிவனே அய்யா
இருகையும் ஏந்திட சிவலிங்கம் தந்தனுப்பி
என்னையும் விடும்போது சிவனே அய்யா
கடலுக்குள்ளே கண்ட அதிசயமும் தவமும் வெள்ளை
காகமும் கண் டேனையா சிவனே அய்யா
கைகலங்கிரிவாசல் நிலையிங்கே என்று சொல்லிக்
காட்டியும் தந்தாயே சிவனே அய்யா
வைகுண்ட பதியிலே கைகண்ட வேதாவைப்போல
வாழவும் பாவித்தாயே சிவனே அய்யா
நந்தியுடமந்திரத்தை நருட்கள் அறியும்படி
ரகசியம் பற்றிவிட்டாய் சிவனே அய்யா
மெய்யை நிலைநிறுத்திப் பொய்யை அடியழிக்க
விடைதந்தனுப்பினாயே சிவனே அய்யா
உகத்தை முடிப்பதற்கு அகத்திலும் செவியிலும்
உபதேசம் வைத்தாயே சிவனே அய்யா
எத்தனையோ முனிவன்பெற்ற வரமும்கொண்டு
இங்கே நான்வரும்போது சிவனே அய்யா
தாய்கிழவிக்குக் கொஞ்சம்  அதிசயங்களைக் காட்டி
சத்தியமும் கொண்டேனையோ சிவனே அய்யா
உள்ளுக்குள் அருமைவைத்துப்பிறருக்கு கையெபொத்தி
உடமைந்த மாநகர் வந்தேன் சிவனே அய்யா
பேயன்போவதை அன்னாபாருங்கோ வென்றுசிலர்
பிதற்றியும் வைகின்றாரே சிவனே அய்யா
சிலமதலைகள் கூடியெனவைத தெருவிலே
சிமினை யேவிவிட்டேன் சிவனே அய்யா
கல்கொண்டு எறிந்துவந்த மொட்டையர் தெருவிலே
கருடனை யேவிட்டேன் சிவனே அய்யா
அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
காலதிலே மிகவும் தூசி யிருக்குதென்று
காலைநான் கழுவினேன் சிவனே அய்யா
தூளைக் கழுகுறாயே காலை வளைத்துந்தான்
தோள்மேலே போடென்றானே சிவனே அய்யா
இந்தப்படியேவாசை செவியிலும் நான்கேட்டு
இங்கேநான் வரும்போது சிவனே அய்யா
சொந்தப் பனையேறக் கண்டு பனைஏறி
வயிறுபசிக்கென்றாரே சிவனே அய்யா
பாலில் சுண்ணம்போட்டுக் குடியுமென்று சொல்ல
பாலா யிருந்ததய்யோ சிவனே அய்யா
மாறிப் பார்த்தவனைத் தாலியறுத்துக் கட்டென்று
வசைகூறி விட்டாரையோ சிவனே அய்யா
நலமுனி யிங்கிருந்து நருள்கள் அறியும்படி
நான்செய்த கோலம்சொல்வேன் சிவனே அய்யா
அடுத்தாரைக்  காப்பதற்காய் பூவண்டன்  தோப்பதிலே
அமர்ந்து யிருந்தேனய்யா சிவனே அய்யா
பொன்பழுப் பானதொரு தங்கத் திருமேனி
புண்ணா உளையதய்யா சிவனே அய்யா
மெல்லுட தாகியதோர் நல்லுடலில் அழுக்கு
மெத்தவும் பற்றலாச்சே சிவனே அய்யா
அடங்காத கலியைநான் அடக்க வந்ததினாலே
அழுக்குமே பற்றலாச்சே சிவனே அய்யா
வாடுதே யெந்தனுள்ளம்  மயங்குதே திருமேனி
வரவர வாடுதய்யா சிவனே அய்யா
குலைத்த தலையுடனே சலித்த முனிக்க
குறுக்கும் கடுக்குதய்யா சிவனே அய்யா
பொருதவில்லும் வைத்துநான் கூட்டுக்குள்ளிருந்த
புளுங்குதே மேனியெல்லாம் சிவனே அய்யா
அங்கமும் காந்துதே அனலாகி யெந்தன்மேனி
அய்யய்யோ யென்னசொல்வேன் சிவனே அய்யா
எங்கெங்கும் விசையாச்சே தவமுனி யான்யிருக்கும்
கோலம் கண்டாயோ சிவனே அய்யா
கொங்கையில் பால்கொண்டு காராவும் வந்துநின்று
குடிக்கவும் சொல்லுதே சிவனே அய்யா
மாதாவும் பால்தந்து அனேகநாள் ஆச்சுதே
வயிறும்  பசிக்குதையா சிவனே அய்யா
கப்பல் சிறிதெனவும் கடல்தான் பெரிதெனவும்
கவிழ்ந்து இருக்கலாச்சே சிவனே அய்யா
பாம்பும் படம்விரித்துப் படல்கொண்டு வீசுதையோ
பாதமும் காந்துதையோ சிவனே அய்யா
நீட்டி நொடிக்குமுன்னே கலியழித்து வாவென்று
நீயும்விடை தந்தாயோ சிவனே அய்யா
சிந்திக்கிடக்கும் மயிர்பந்து முடிந்துவிட்டால்
சீமைஅழிந்திடுமே சிவனே அய்யா
ஊமைபோலிருப்பதை வாயைத் திறந்துவிட்டால்
உலகம் அழிந்திடுமே சிவனே அய்யா
அதிசயங்கள் வளரும் அறியகிணற்றின்பாலை
எவரும் குடிக்கிறாரே சிவனே அய்யா
எவரெவர் நினைக்கின்ற நினைப்புக்குத் தக்கதகா இருந்து
விளையாடினேன் சிவனே அய்யா
மாபாவி யிறையறிந்து யாதோகோ ரியமென்று
பாலில்மோசம் செய்தானே சிவனே அய்யா
நஞ்சிட்டபாலைமக்கள் நற்பாலென்றெண்ணி யுண்ண
நற்பாலாயிருந்ததை சிவனே அய்யா
இப்படியிருக்கையில் சோதனைசெய்ய நீசன்
எனைவாவென்றழைத்தானே சிவனே அய்யா
கட்டிலையும் கொண்டுவந்த  தொட்டில் கட்டியென்னை
கனமுடன் கூட்டிப்போனார் சிவனே அய்யா
வழியும் விலகித்தந்து சிலதூரம் போகையில்
கடல்வளைத்து கொண்டதையோ சிவனே அய்யா
கரையில் திருநெல்வேலி அரகரா வென்றசத்தம்
கல்லும் உருகிடும் சிவனே அய்யா
அண்ணாவிதிருவம்பலம் அருள்கொண்டு கரைசேர்ந்தேன்
இலங்கைத் துவரயம் பதியில் திருவிளக்கு
எரியவும் கண்டேனையா சிவனே அய்யா
முட்டப்பதியும்நாடும் கிட்டக்கிளம்பும்வகை
முனியும்வந் தெடுத்தாரே சிவனே அய்யா
ஏழைமா முனியொரு கூரை நிழலில்புக
எல்லோரும் கைகொண்டாரே சிவனே அய்யா
பொத்திய கைகளை சற்றே திறந்துவிட்டால்
பூமி அழிந்திடுமே சிவனே அய்யா
கொல்லவே என்றனையும் கூட்டியே கொண்டுபோனா
கோலங்கள் பண்ணுதற்கோ சிவனே அய்யா
கூட்டியே கையைச்சேர்த்து கட்டிய கயிற்றைநான்
கொலுசென்று நினைத்தே னையோ சிவனே அய்யா
பகைவன் அடித்துவந்த அடியும் தங்கச்
சரப்பளியென்று எண்ணினேன் சிவனே அய்யா
கந்தனென்றியாமல் எந்தனைத் தொட்டடித்த
கையும் தானோகலையோ சிவனே அய்யா
வெள்ளத்தடியைக் கொண்டு கள்ளனைத்போலத்தள்ளி
விட்டென்ன அடித்தானே சிவனே அய்யா
எனை அவன் வைததெல்லாம் வாக்குவாம் தானென்று
நினைத்துக்கொண்டனையா சிவனே அய்யா
பச்சைநாவியைப் போட்டு பாலென்றுகொண்டுதரப்
பாலாயிருந்ததையோ சிவனே அய்யா
கொடும்பாவி யென்னையும் புழுகணி அறையிலே
கொண்டுபோய் அடைத்தானே சிவனே அய்யா
அடைத்த அரங்கதனை அலங்காரத் தேர்ந்தட்டேன்
றகத்தில் நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா
இட்டமாய்ப் பொட்டகத்தில் ஒட்டகையை நிறுத்தி
என்னையும் அடைத்தானே சிவனே அய்யா
வதைசெய்ய விட்டபுலி அதிசயப்பட்டு என்னை
நீற்றுக்கல் கொண்டுவந்த நீற்றிப்போட வேணுமென
நீசனும் செய்தானே சிவனே அய்யா
இந்த நினைப்புக்குப் பூச்சொரிகிறாதென்று
எண்ணி நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா
நெய்யுயூறிக்கட்டையெடுக்கித் தீயைவைத்துநீந்திக்கோ
என்றானோ சிவனே அய்யா
குளியாத மேனியில் குளிக்கநாள் ஆச்சுதென்று
குழிபோட்டு நின்றதையோ சிவனே அய்யா
இத்தணைக்கும் சகித்த எனைமா முனியை இருத்தினான்
சிலநாளாய் சிவனே அய்யா
அரங்கதணில் அடைத்து வத்தல்போடத் தீவைத்து
அசையாமல் இருந்தiணாய சிவனே அய்யா
போதித்தேன் கூரையிலே, கேலிகள் பண்ணாதே
போவென் றடித்தானே சிவனே அய்யா
ஏழைமாமுனியும் யுகமாயிருந்து
இருத்தினான் சிறைதிலே சிவனே அய்யா
வெகுநாள் இங்கிருந்து சடையுதே திருமேனி
விரித்தலையுடனே சிவனே அய்யா
கவிழ்ந்தெந்த நேரமும் இருந்தந்த மாமுனிக்கு
கழுத்தம் கடுக்கதையா சிவனே அய்யா
பிரமணைத்தேடியே முழுமனதோடியிருந்து
பிடரியும் நோகுதையா சிவனே அய்யா
தவமுனி பேயனைப்போல் சடையும் முனியுமாகி
தலைவிரித்திருந்ததேனையா சிவனே அய்யா
தவமுனி பேயனைப்போல் சடையும் முனியுமாகி
தலைவிரித்திருந்தேனையா சிவனே அய்யா
சன்னியாசி வேசம்போல பின்சடையோடிருந்து
சடையுதே திருமேனி சிவனே அய்யா
குடமனி தானும் சிவனே அய்யா
குடமுனி, தானும் உடுக்கத்துணியில்லாமல்
கூட்டி முடியலாச்சே சிவனே அய்யா
வேள்ளைப்பேன் களுக்கெல்லாம் முள்ளுமுளைத்தென்
மீதில் கிடக்கலாச்சே சிவனே அய்யா
தலையில் சிவமுறைந்து வடதிசை முகமாகத்
தவத்தில் இருக்கலாச்சே சிவனே அய்யா
அம்புவியில் விளையும் பண்டம் பாராமலே
அறைக்குள் ளிருக்கலானேன் சிவனே அய்யா
வருடியிருப்பதாலே மருந்துவாழ் மலையில
மருந்து வளரலாச்சே சிவனே அய்யா
கிழமுனி தானுமிப்போ முடிப்புப் பகர்ந்துக்
கிழித்து முடியலாச்சே சிவனே அய்யா
மெத்தவும் நாளாச்சே  பொத்தியே கையைச்சேர்த்து
விரித்த சடையனானேன் சிவனே அய்யா
ஆண்டாருடையபிள்ளை பசித்துமுகம் வாடுகின்ற
அம்முகம் பார்த்திரங்காய் சிவனே அய்யா
ஊமைபோலிருந்தேன் சிவனே அய்யா
திடமுடனே வெளியில் நடமாடும் காலதனைக்
சம்பளம் கூட்டினேனே சிவனே அய்யா
விரித்த தலையுடனே யெரித்த கண்ணோடிருந்து
வேகுதே மேனியெல்லாம் சிவனே அய்யா
அரணும் விடைதந்தாயே கலியன் குறும்படக்க
ஐயையோ யென்னசெய்வேன் சிவனே அய்யா
தெற்கும் வடக்கமாகச் சந்திரனும் சூரியனும்
திசைமாறி உதிக்கலாச்சே சிவனே அய்யா
காரணத்தி உதிக்கலாச்சே சிவனே அய்யா
காரணத்தி லேதிருப்பார் கடலிலே சொன்னதொரு
காரியமெங்கே விட்டாய் சிவனே அய்யா
வீதியிலும் பெரியசூரியன் கோட்டைக்குள் கண்ட
வெள்ளக் காகந்தா னெங்கே சிவனே அய்யா
அரகரா வென்றசொல்லை கரையேறா பாவிநீசன்
அறியவுமாட்டானைய்யா சிவனே அய்யா
சிவசிவா வென்றசொல் அவகட நீசருக்கு
தெரியவுமாட்டாதையா சிவனே அய்யா
சடைமுனி நானும் தவத்திலிருக்கிறதை
சண்டாளர் அறிவாரா சிவனே அய்யா
உமையும் சிவனும் திருச்சடையுந் தரத்தில
ஊமைபோல் இருப்பதேன் சிவனே அய்யா
தாடியை நான்வளர்த்து கோடிப்பே னையும்வைத்துச்
சடையுதே யெந்தன்மேனி சிவனே அய்யா
நற்பால் குடிக்கிறாரென றெல்லோரும் சொல்லுவார்
நான்கேட்ப தறிவாரா சிவனே அய்யா
எந்தெந்த நேரமும் இருந்திருந்த மாமுனிக்கு
இடுப்பும் கடுக்குதையா சிவனே அய்யா
அக்கினியால் நீயச்சொன்ன சக்கிலியான் தலையின்னும்
அற்றுவிழவில்லையே சிவனே அய்யா
என்னைப்பழித்தவன் தன்னடைய கூரையிலே
இன்னும் இருப்பானோ சிவனே அய்யா
கண்ணில் அடித்தானே அரனே குருவேயிந்த
கலியிலிருப்பானோ சிவனே அய்யா
கும்பிக்கிரைதேடிக் கொடுப்பார் முகம்பார்த்து
கூடித்திரிந்ததுண்டோ சிவனே அய்யா
பாலென்று குடித்ததில் நீரென்று சொல்லியதில்
பாசாணம் போடலாச்சே சிவனே அய்யா
பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னை
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா
என்மக்கள் சான்றோர்கள் இடுப்பிலெடுத்த குடம்
ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா
குலபாதகன் செய்த நியாயத்துக்கு கோபங்கள்
செய்ததுண்டோ சிவனே அய்யா
தேவர்கள் எல்லாரும் கயிலாசத்திலிருந்த
தேர்கொண்டு அழைக்கிறாரே சிவனே அய்யா
இதெல்லாம் வேண்டாமென்று எந்தன் மக்களுக்கா
இருந்தேன் சிறையதிலே சிவனே அய்யா
ஆனாலும் இன்னும்கொஞ்சம் சான்றோர்படும்துயரம்
ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா
நாட்டு முறையைப்போல காசியும் காணிக்கையும்
நான்வேண்டி தின்னதுண்டோ சிவனே அய்யா
திருமேனி திருக்கண்ணை சற்றே திறந்துவிட்டால்
சீமைஅழிந்து போமே சிவனே அய்யா
சூத்திரமாகவே மாலையில் நான் கண்ட சொற்பணம்
ஏதோசொல்லையா சிவனே அய்யா
ஆசுமதூரம் சித்திரம்ட விஸ்தாரம்மென்ற சொல்லை
அளிக்க விடைதந்தாயே சிவனே அய்யா
கிறேதா திறேதா துவாரம்பகையை அழக்க
விடைதந்தாயே சிவனே அய்யா
சரியைகிரியை யோகம்ஞானமென்ற சொல்
தாண்டிய கலியாச்சே சிவனே அய்யா
மனம் சித்தம் புத்தி அகங்காரம் நாலும் அடக்கி
மௌனத்திருந்திட்டேன் சிவனே அய்யா
அப்புபிரிதிதேய்வு வாய்வு ஆகாயமென்ற
அஞ்சுமஞ்சாச்சுதே சிவனே அய்யா
நாலுமெறும் பதினெட்டும் நடசாலைக்கும்
நற்காலம் போச்சுதையா சிவனே அய்யா
மூலகிணத்துக்கும் மேலகுளத்துக்கும்
மோட்டிலேணியானேன்சிவனே அய்யா
வாசிபாம்புக்கும் பஞ்சுபதிதனக்குமொரு
வாயமாயிருந்தானையா சிவனே அய்யா
அன்பத்தோரெட்டு முனியென்பற்றென் றேக்கவில்லை
அடுத்த பாட்டோதலுற்றேன் சிவனே அய்யா
சூரியன் திசைமாறி கலியுகம் முடியவோர்
சொர்ப்பனவித்தேசம் சொல்வேன் சிவனே அய்யா
கலியை அழிப்பதற்கு கண்ணில் வித்தேசம் கண்ட
காரணம்ட சொல்லறுற்றேன் சிவனே அய்யா
பெட்டகத்து விளக்கு தட்டுப்பட்டெண்ணெய்சிந்தி
போகவும் கண்டேனையா சிவனே அய்யா
பாம்பைக் கடிக்கவந்த கீரியை சீறிமாறி பாம்பெட்டி
கொத்தக்கண்டேன் சிவனே அய்யா
பூனைபோய் யானையுடன் போர்பொருதி முன்காலால்
பொத்தி யெடுக்கக்கண்டேன் சிவனே அய்யா
பச்சைப்பாம்பை கண்டவுடன் மயில்களெல்லாம்பதுங்கி
கிடக்கக் கண்டேன் சிவனே அய்யா
ஆலாகருடனையும் சிட்டிவோடிப் பறந்து அடித்து
எடுக்கக்கண்டேன் சிவனே அய்யா
ஆடுபோய் மாடுடனே அலறவேமாக்கு போட்டுஅது
போர் செய்யக்கண்டே;ன சிவனே அய்யா
பச்சப்பிள்ளையை வொக்கரையிலெடுக்க பாம்பா
நெளியக்கண்டேன் சிவனே அய்யா
கடலெல்லாம் குளமாக குளமெல்லாம் கடலாக
கண்ணுகுத் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
ஊசிமுனையதிலே கடலும் மலையுடனே ஊரும்
பதியுங்கண்டேன் சிவனே அய்யா
கோரைக்குருத்துக்குள்ளே தாரணிதன்னிலுள்ளகுடிகளும்
வாழக்கண்டேன் சிவனே அய்யா
திரைகடலில் சிறுமீன் பெரியமீனைப் பிடித்துத்தின்னவும்
கண்டேனையா சிவனே அய்யா
ஈரத்தின் மேல்கிடந்த ஆடையை அட்டைகண்டு
எடுத்துவிழங்கக்கண்டேன் சிவனே அய்யா
போர்வெள்ளைக்கொக்கு புழுத்திங்க போனையிடத்தில்புழு
வெட்டிக்கொத்தக் கண்டேன் சிவனே அய்யா
பூமாலையைக்கட்டி தோள்மாலையாக போட்டபூவும்தான்
வாடக்கண்டேன் சிவனே அய்யா
முடுக்கன்மார் பெற்றமக்கள் தூக்கம்வைத்த பாயதிலே
மூச்சோடி போகக்கண்டேன் சிவனே அய்யா
புலியை எலிபிடித்து கலியில் பொசிப்பதற்கு போதமும்
கண்டேனையா சிவனே அய்யா
முள்ளுமுனையதிலே  குளம்வெட்டி வயலும் பாய்ச்சி
முன்மடை பாயக்கண்டேன் சிவனே அய்யா
உப்புவிளைந்துவரும் நஞ்சை நிலங்களெல்லாம் உபரு
வழக்கண்டேன் சிவனே அய்யா
சட்டிக்காய்க்கு கொம்புமுளைத்து கோழியுடன்போர்
பொருதக்கண்டேனையா சிவனே அய்யா
நாடுதனிலே திரிந்து வாயல் காக்கும் நாயைநரிவந்து
கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா
சாவல்கோழியல்லாவ கூவுமென்றுசொல்வார்கள்பெட்டை
தானுமே கூவக்கண்டேன் சிவனே அய்யா
உண்டமயக்கத்திலே உறங்கப்போன உயிர்வோடிப்
போகக்கண்டேன் சிவனே அய்யா
மூட்டைக்கடித்தால் பாம்பு விசம்போல
மோசம் போகக்கண்டேன் சிவனே அய்யா
பெற்றதாய் பிள்ளையை முன்வைத்துப்படுக்கையில்
ஈனாபேச்சிவந்து தின்னக்கண்டேன் சிவனே அய்யா
கருங்கும்பலா யிந்த பயிர்களைத்தான் பெரிய
கடல் வந்தழிக்ககண்டேன் சிவனே அய்யா
பாகல்போடவே கரையாய் முளைத்துவர
பாகமும் கண்டேன் சிவனே அய்யா
பெருத்தஊரில் உள்ள குருத்தைக்கடிப்பதற்கு
பேய்வந்து சூழக்கண்டேன் சிவனே அய்யா
முனிபெற்ற பிள்ளையைச் சுண்டெலி தானும்கண்டு
முடுக்கிக் கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா
கிடைகலைந்து ஆடியில் கூடிய யெலிகளெல்லாம்
கிடைகலைந்து ஓடக்கண்டேன் சிவனே அய்யா
மாபாவி போடுகின்ற திருமுத்திரி அவர்க்கு
வாச்சியாய்த் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
கொடிமுடியிடிந்து விழும்போது கொம்மட்டிக்காய்
குறுக்கவே தங்கக்கண்டேன் சிவனே அய்யா
கடுகைத்துளைத்து அந்ததுளைக்குள்ளே நின்றதண்ணி
கடல்போல தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
கலியுகம் தன்னிலேதேடியே போட்டநகை
கழந்தோடிப் போக்கண்டேன் சிவனே அய்யா
ஒருமாதத்துக்குள் பிள்ளைதரித்துப் பிறந்து
உருமாலும் கட்டக்கண்டேன் சிவனே அய்யா
இரண்டுதலை மூன்று கண்ணுமாகப் பிள்ளை
தரித்துப் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா
கோழிக்குஞ்சுகளெல்லாம் கூட்டை விட்டெழும்புமுன்
கொம்பு முளைக்கண்டேன் சிவனே அய்யா
சடைநாய், முழுத்தேங்காயை, கவ்விக் கொண்டுபோய்
தகர்த்துமே தின்னக்கண்டேன் சிவனே அய்யா
நரியன்மார், கூடி யிரையெடுக்கப் போக
நண்டு விரட்டக்கண்டேன் சிவனே அய்யா
வீட்டெலி, கூடியே பூனைதனைபிடித்து
விருந்து அருந்தக்கண்டேன் சிவனே அய்யா
இப்படி நான்கண்ட சொர்ப்பண வித்தேசங்கள்
இந்த கலியழிக்க சிவனே அய்யா
ஆனாலும் இன்னுங்கொஞ்சம் சான்றோர்படும்துயரம்
ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா
அம்மை பிறந்ததும் உண்மைதான் எல்லார்க்கும்
அனுகூலக்காலம் ஆச்சே சிவனே அய்யா
வினையற்ற சண்டாளன் வகைகேடு செய்ததாலே
மேலெல்லாம் கூசுதையோ சிவனே அய்யா
தோசியெந்தன் மைந்தர்களை யேசினபடியாலே
தோலெழும் கூசுதையோ சிவனே அய்யா
கலியுகத்தில் நானும் வலியவர்களைப்போல
காசுக்கும் அலைந்ததுண்டோ சிவனே அய்யா
முக்காலும் காணிக்கைகள் வேண்டி மடப்பள்ளிகள்
முடிக்கவும் சொன்னதுண்டோ சிவனே அய்யா
உள்ளவனுக்கென்றென்றும் இல்லாதவனுக் கென்றென்று
ஓரங்கள் சொன்னதுண்டோ சிவனே அய்யா
வானமும் தலையாச்சே பூமிதான் காலாச்சே
வடிவும்தான் வெளியாச்சே சிவனே அய்யா
சந்திரன் வலதுகண் சூரியன் இடதுகண்
தானாகும் நாளாச்சே சிவனே அய்யா
சூத்திரம் இடம்வலம் கற்றவாறோமென்று
சொல்லுவதெப்படிகாண் சிவனே அய்யா
எவரெவர் இருந்துமணியம் பண்ணவேணு மானாலும்
எந்தன் முக்கால் அடிக்குள்தானே சிவனே அய்யா
எப்போது கூவுமென்றுஇருக்குதே யெந்தன் நெஞ்சு
இன்னும் விடியல்லையோ சிவனே அய்யா
நொடிக்குள் முடிந்துவிடும் விஞ்சைகள் இங்கிருந்த
நோகுதே திருமேனி சிவனேஅய்யா
வட்டக்கிலுகிலுப்பைத்தட்டி முடிந்துவிட்டால்
வையகமழிந்திடுமே சிவனே அய்யா
கைதட்டும் பொழுதோ கண்தட்டுநேரமா
கலியனிருப்பதெல்லாம் சிவனே அய்யா
காடுநாடாகு மென்று நாராயணன் சொன்னசொல்
காலமும் சரியாச்சே சிவனே அய்யா
நாராயணர் எங்கும் தாராளமானாரென்று
நகரெங்கும் பேராச்சே சிவனே அய்யா
கலியோ விளைந்துபோச்சு சிவனே அய்யா
கிரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா
மெத்தவும் யெந்தன் மக்கள் உற்றபித்தளைவிற்று
வீட்டையும் விற்கலாச்சே சிவனே அய்யா
மூணுநேரம் துவைத்து ஒருநேரம் அன்னமுண்ண
முனிமார்கள் பெற்றமக்கள் சிவனே அய்யா
கடம்பாக்கொடியைத் தின்று கடலிலே தண்ணீருண்ண
காண்பாரோ நீசரெல்லாம் சிவனே அய்யா
அண்ணர் க்களந்தபாலை இடித்தகரைகாவல்காரன்
அவிழ்த்துப் பார்க்கலாச்சே சிவனே அய்யா
கனமுடன்முத்தமிடக் கொடுத்தகன்னத்தை நீசன்
கவ்வயிழுத்தானையோ சிவனே அய்யா
காரம்பசுவதனைக் கங்கைகரையில் கொல்லக்
கண்ட கலியாச்சே சிவனே அய்யா
துரியோதனனும் பஞ்சவரும் சேர்ந்து
ஒருவயிற்றில் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா
பதினெண்சாதியும் ஏழைச்சான்றோரை
வசைபறந்து போகலாச்சே சிவனே அய்யா
சான்றோர் வயலிலிருக்க நீசன் வயலில்
தண்ணீர் பாயக்கண்டேன் சிவனே அய்யா
எதிர்வாய்க்கால் தண்ணீர் குறுக்கே விழுந்துபாய
என்னத்தைக் கொண்டடைப்பேன் சிவனே அய்யா
மக்களுக்காக இருந்தேன் சிறையதிலே
வைகுண்டம் தேடுதே சிவனே அய்யா
நாளும் குறுகலாச்சே நருளும் பெருகலாச்சே
நாமும் சடையலாச்சே சிவனே அய்யா
பத்திரமா காளியுடன் கன்னிமார் ஏழுபேரும்
பரல்யேழும் கேட்கிறாரே சிவனே அய்யா
கலியுகம் முடிந்துபோச்சு சக்கராயுதத்துக்கு
இரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா
கூடும் சடமும் கூட்டோடே கொஞ்சம்
கைலாசபுரமிருக்க சிவனே அய்யா
வீடும் பதியும் விளையாடும் விண்ணோர்
கண்டு மனம்மகிழ சிவனே அய்யா
ஆளும்படிதான் அய்யா வாங்கே
ஆனநஞ்சிப் பொய்கையிடை சிவனே அய்யா
சூதுபடியாய் விளையாடிச் சொல்லி முடித்தோம்
துரோபதைக் குன்றிமக்கள் ஏழுபேர்க்கும்
கொடியசாபம் நீங்கிவிடும் காசிக்கலயங்களும்
கல்லறையும் பொன்பணமும் குத்துபிடித்தவனைக்
குரங்கோட்டம் பார்த்துவிடுவேன்
ஒன்றுமூணு நாலுஏழு ஆடும்படி சொல்வேன்
மண்ணளந்த மாயனுட விவரமநாடுஅறியவும்
பித்தலாட்டப்பயல்களெல்லாம் பெருமை குலைந்து போகுதே
அல்லாவென்று நபியைத்தேடி அலைந்தபேர்கள் சடுதியில்
மூணுநாளை ஆட்டுக்குள்ளேமுன்னும்பின்னும் அடைக்குமே
காவல்காத்த மக்களெல்லாம் கைலயங்கிரி காணுங்கள்
விரைவாகு முடியும்சூடி வெள்ளியங்கிரி ஆளுவோம்.
சாட்டு நீட்டோலை முற்றிற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக