கொல்லம் ஆண்டு 1008க்கு முன்பாக கலியுக கொடுமைகள் தாங்ககாத தேவர்களும்,
முனிவர்களும் பச்சிபறவை முதல் ஜீவன் தங்களைப்படைத்த பரம்பொருளை வேண்டி
கலிகொடுமையில் இருந்து விடுதலைபெற முறையிட்டார்கள். ஒவ்வொரு யுகத்திலும்
தர்மத்தை சீர்குலைத்துவந்த அசுரர்களை இறைவன் அவதாரம் எடுத்து வந்து அவர்களை
அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். ஆனால் இந்த கலியுகத்திலே கலியன் உருவம்
இல்லாதவனாக தோன்றினான். கலியன் ஒவ்வொருவருடைய எண்ண அலைகளை ஆட்கொண்டான்.
ஆதலால் இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து உயிர்களும், கலிமாய எண்ணத்தோடு
தோன்றிவிட்டன.
கலியை முன்நின்று வெல்ல மூவராலும் இயலாது என்ற நிலையை உணர்ந்த இறைவன் அனைத்து சக்திகளையும் தன்னகப்படுத்தி பிரிவில்லா ஒரு பொருளால் கலியை வெல்லலாம் தர்மத்தை நிலைநாட்டலாம் என்று முடிவுக்கு வந்தனர்.அதுமட்டுல்லாது அகில வேதசட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை தேவர்களை மீண்டும் தர்மயுக ராஜியத்தில் வாழவைக்க எண்ணினார்.அதன் காரணமாக தனக்காகும் பேர்களை அடையாளம் காணவும் அகில வேத சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர் களை காத்திடவும்.
உலகாளும் தேவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம் நாள் திருச்செந்தூர் வாரிக்குள் முப்பொருள் ஒன்றாகி (சிவன், பிரம்மா, விஷ்ணு) மூன்று நாட்கள் விஞ்சை பெற்று அம்மை சரஸ்வதி தாலாட்ட தேவர்கள் மலர்தூவ வாணவர்கள் வணங்கி நிற்க மகரத்தின் ஜோதி மகத்துவ நாதன் அய்யா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது.
அய்யா வைகுண்டரின் வருகையைக் கண்டு தெற்கு முகமாக வணங்கி நின்றார். கந்தபெருமாள், கந்தனுக்கு நல்உபதேசம் செய்த எம்பெருமால் தவம் இருக்க வேண்டிய இடத்தை கலைமுனி ஞானமுனி தேர்வுசெய்ய வாரிக்கரை வழியாக தருவை கரையில் உடலணிந்து இன்று தெச்சணாபதி சாமிதோப்பு என்று போற்றப்படும் (அன்று பூவண்டருக்கு சொந்தமான தோப்பாகும்) அந்த தெய்வீக பூமியிலே தவம் இருக்க அய்யா வருகிறார். வருகின்ற வழியிலே ஆங்காங்கே சில அற்புதங்களை நிகழ்த்திவருகிறார். தெட்சணம் வந்த அய்யா வைகுண்ட பரம்பொருள் ஆறு ஆண்டு தவக்கோலத்தில் அமர்ந்து இருக்கிறார். முதல் இரண்டு ஆண்டு யுகத்திற்காகவும் அடுத்த இரண்டாண்டு சாதிக்காகவும், நீசினால் பிரித்து வைக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்ப்பதற்காகவும், இறுதி இரண்டாண்டு பெண்களுக்காகவும் , பெண்ணடிமை விலகவேண்டும் பெண்கள் உயர்வாக வாழவேண்டும் என்பதற்காகவும் ஆறு ஆண்டு கடுந்தவம் புரிந்தார். அதுமட்டுமல்லாது தன்னை நாடிவந்த மக்களுக்கு தீராதநோய் நொம்பல சஞ்சல துன்பங்களை மாற்றி குஷ்டம் கொடிய கன்னபித்து ஆகிய கொடிய நோய்களை மண்நீரால் மாற்றிதரணி எங்கும் காணாத புதுமைகள் செய்தார். அய்யா செய்த அற்புதம் திருவிதாங்கூரை ஆண்ட சுவாதி திருநாள் மன்னன் செவிகளுக்கு எட்டியது அய்யாவை சிறைபிடிக்க காவலாளிகளை ஏவினான். தன்னை சிறைபிடிக்க வருவதை அறிந்த அய்யா வைகுண்டர்திருப்பாற்கடல் நோக்கி வருகிறார். கடல் விலக உள்ளே சென்ற அய்யா வைகுண்டர்ஆதிநாராயணரின் நல்உபதேசம் பெற்று வெளியே வருகிறார். தவக்கோலத்தில் இருக்கும் அய்யாவை கலியரச மன்னனுடைய படைகள் கள்ளனைப்போல் கயிற்றால் கட்டி இழுத்து மன்னனிடம் கொண்டு சேர்த்தார்கள். அய்யாவை பார்த்த கலியரச மன்னன் கைவிரல் மோதிரத்தை கைக்குள்ளே மறைத்து வைத்துகொண்டு ஏதடா உன் உற்ற வலுவாலே எந்தன் கைக்குள்ளே இருப்பது என்னவென்று ஓதடா என்று வினாவினான் ஒன்றுமே தெரியாதவன் போல் அய்யா மௌனமாக இருந்தார். இவணை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று எண்ணிய கலியநீச மன்னன் அய்யாவுக்கு பாலிலே ஐந்து வகை நஞ்சை கலந்து குடிக்கச்செய்தான். நஞ்சி கலந்த பாலை அய்யா நற்பால் என்று எண்ணிப் பருக நற்பாலாகவே இருந்தது, நெய்யூற்றி கட்டையடுக்கி தீயை அதில் பற்ற வைத்து நீந்திபோ என்று சொன்னான். குளியாத மேனியல்லவா குளித்துவருகிறேன் என்று அய்யா நீந்திவந்தார். வத்தல் புகைபோட்டு அந்த குகைக்குள்ளே புகையோடு புகையாக அய்யாவை வைத்தான். சுண்ணாம்பு சூழையிலே அய்யாவை நீத்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினான். நாற்றமிகு டானாவில் அய்யாவை வைத்தான். அத்தனை சோதனையிலும் சாதனை கண்ட அய்யா வைகுண்டரை புலிக்கு இறையாக்க வேண்டும் என்று கனவு கண்டான் பட்டினியோடு அடைக்கப்பட்ட புலி கூண்டிற்குள் அய்யாவை வைத்து வேடிக்கை பார்த்தான் அப்பொழுது ஜீவசெந்துக்கெல்லாம் ஜீவனாக விளங்கும் பவர் இவரல்லவா என்பதை உணர்ந்து கொண்டபுலி அவருடைய பாதத்தை தொட்டு வணங்கியது இதைப்பார்ததுக் கொண்டிருந்த கலியரச மன்னன் கடுங்கோபத்திற்கு ஆனாளன் ஈட்டியால் கடுவாயை குத்துங்கள் என்ற ஆணையிட்டான். கோபமுற்ற கடுவாய் ஈட்டியைக் கவ்வி இழுத்த வெளியே பாய்ச்ச வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த வேதியன் வயிற்றில் பாய்ந்து மாண்டு போனான் . ஆயிரம் பசுவை கொல்வதற்கு சமமானது ஒரு வேதியனைக் கொல்வது தான் செய்த தவறை எண்ணி வருந்தினான். பூவண்டரின் பரிந்துரையில் அய்யாவை விடுதலை செய்ய முடிவு செய்தான்.
சான்றோர் மக்களுக்காக மூன்றே முக்கால் மாதம் சிறை இருந்த அய்யாவைகுண்டரை சான்றோர்கள் தொட்டில்கட்டி அய்யாவை சுமந்து தெட்சணம் நோக்கி வந்தார்கள். சான்றோர் குலமக்கள் மனதை தூய்மை படுத்துவதற்கு துவயல் தவசு என்ற தவத்தை வாகைபதியில் மக்களை ஒன்று திரட்டி ஆரம்பித்தார்.முட்டப்பாதையில் தவத்தை நிறைவுசெய்து விடைகொடுத்து அனுப்பினான் ஐம்பதிகளை அய்யா இருந்த தரணிக்கு தந்தார்.
அன்று அயோத அமிர்த கங்கை கரையிலே ஏழு கன்னியரை அக்கனியால் ஆட்கொண்டு ஏழு மதலைகள் கொடுத்து அவர்களை இந்த நிலமைக்கு ஆளாக்கிய நாராயணம் அவர்களை ஏற்றுக்கொள்ளும் வரை தவம் இருக்க செல்கிறோம். என்று பிள்ளைகளை வளர்க்க நாராயணம் தேவேந்திரன் பசுக்களை வரவழைத்தார் பத்திரகாளி அன்னையிடம் ஏழு மதலைகளையும் ஒப்படைத்தார். ஏழு மதலைகளையும் பத்திரகாளி அன்னை வளர்த்து வந்தாள். வைகை அணை உடைந்து போக சோழமன்னன் இரண்டு மதலைகளை கொன்றுவிட்டான். இரண்டு குழந்தையை பாதுகாக்க தவறிய காளியை நாராயணம் சிறைவைத்தார். சப்தமாதர்களையும் தெய்வமாதர்களையும் தன்னுள் ஐக்கியப்படுத்தி கொள்ள இகனை மணம் புரிந்தார். நாராயணம் பெற்ற பிள்ளைகளை தான் நாம் எல்லாரும் நாராயணம் தான் இவ்வுலகிற்கு வைகுண்டமாக வந்திருக்கிறார். அய்யா இந்த உலகத்திற்கு தந்தபொக்கிசம் தான் அகிலத்திரட்டு அம்மானை. அகிலத்திரட்டு அம்மானை முக்காலத்தையும் உணர்த்துகிறது. அய்யா அருளிய அருள் மொழிகள்தான் அகிலத்தில் நடக்கிறது. கலியழிக்க வந்த தெய்வம்தான் அய்யா வைகுண்டர். அவர் அருளிய அருள் ஞான உபதேசங்களை கேட்டு அதன்வழி நடப்பவர்களுக்கு தர்மயுக வாழ்வு உண்டு இத்தணை சிறப்புகளை நமக்கு தந்த அய்யா வைகுண்டர் 1026ம் ஆண்டு வைகாசிமாதம் 21ம்தேதி பகல் 12.00 மணியளவில் கடிய விமானம் ஏறி வைகுண்ட லோகம் சென்றார்.
அய்யா வைகுண்டர் வைகுண்டலோகம் செல்லும்நேரம் மக்களிடம் சொன்ன சத்திய வாக்கு
மனதினில் உற்றுமாயன் மாதர்கள் மக்களோடும்
தனதுளம் மகிழ்ந்து கூடி தயவுடன் இருக்கும்போது
எனது உடல் காணாவண்ணம் இன்னமும் சிலநாள் பாரில்
தினம் உடல்வாழ நீங்கள் தேடுவீர் என்னை தாமே
தேடியே இருக்கும்போது தேவியர் மக்கள் காண
நாடிய சொருபம் கொண்டு நான்வந்து நடுக்கண்கேட்பேன்
பேடிகள் நினைத்திடாமல் பேசின நூல்போல் கண்டால்
வாடியே அலையா வண்ணம் வாழ்தர்மபுவியில் வாழ்வீர்
உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழும் என்றும்
பதறாமல் நீங்கள் பண்பாய் ஒருப்போல
சிதறாமல் நீங்கள் செய்ய அனுகூலமுமாய்
இருந்து மிக வாழும் என்று நாமம் ஈந்து
இத்தனை சிறப்புமிகு வாழ்வை நமக்கு தந்து
பெருமை சேர்த்த அய்யாவைகுண்டர்வைகுண்ட
லோகத்தில் தவமாக இருக்கிறார்
கலியை அழித்து தர்மயுகத்தை படைக்க
அய்யா வைகுண்டரின் வருகை
இன்றோ நாளையாகவோ இருக்கலாம்
அய்யாவின் சிறப்புகளை அறிய அகிலத்திரட்டை படியுங்கள் பலன்அடையுங்கள்.
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக