வெள்ளி, 9 ஜனவரி, 2015

ப்ளாக்கிற்கு பெயர் வைப்பது எப்படி?

ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது முடிந்தவரை சிறியதாகவும், நினைவில் நிற்கும்படியும் வையுங்கள். மேலும் நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ? அது தொடர்பான பெயராக இருக்கட்டும். தமிழ் ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது அந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது  எழுத்துக்களில் குழப்பம் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு "தினச்செய்தி" என்று பெயர் வைத்தால் அதனை ஆங்கிலத்தில்"thinachcheithi", "dinaseithi", "dhinachcheithi", "thinaseithi" இப்படி பல குழப்பங்கள் வாசகர்களுக்கு வரலாம். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது. பல வாசகர்கள் உங்கள் தளத்தை புக்மார்க் செய்திருக்கலாம். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள் புக்மார்க் மூலம் வருவதில்லை. வேறொரு கணினிகளை பயன்படுத்தினால் நேரடியாக உங்கள் தள முகவரியைக் கொடுத்து வருவார்கள். அது போன்ற சமயங்களில் குழப்பம் ஏற்படும்.

உங்கள் ப்ளாக் முகவரியுடன் blogspot என்ற sub-domain-ம் சேர்ந்து வரும் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு பதிலாக .com, .net, .org போன்ற Custom domain-ல் மாறும் எண்ணம் இருந்தால் முதலில் அந்த பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று பாருங்கள் (அவ்வாறு பார்க்க http://www.godaddy.com/என்ற முகவரிக்கு சென்று பார்க்கவும்). ஏனெனில் நீங்கள் ஒரு பெயரில் ப்ளாக்கை நடத்தி வந்தது Custom Domain-கு மாறும் போது வேறொரு பெயரை பயன்படுத்தினால் சில வாசகர்களை இழக்க நேரிடும்.

ஆங்கிலத் தளங்களை தொடங்குவதாக இருந்தால் உங்கள் ப்ளாக் பெயரில் Keywords எனப்படும் குறிச்சொற்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் ப்ளாக் தொழில்நுட்பம் பற்றியது என்றால் ப்ளாக்கின் பெயரில் "tech", "technology", "techno", "web" போன்ற வார்த்தைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலே  சொன்னது சின்ன விஷயம் தான். மேலே சொன்னவைகள் போன்று பெயர் வைக்கவில்லை என்றாலும் உங்கள் ப்ளாக் பிரபலமானால் உங்கள் பெயரும் பிரபலமாகும். "ஆப்பிள்", "கூகிள்", "பேஸ்புக்" போன்றவைகள் முதலில் வந்த போது யாரும் இவ்வளவு பிரபலமாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் பெயர் வைப்பது என்பது சின்ன விஷயம் தான். 

சரி, இனி ப்ளாக் ஒன்றை தொடங்கிவிடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக