புதன், 26 ஆகஸ்ட், 2015

அய்யா உண்டு

அய்யா வழி மக்கள் தன் வாழ்வில் தினந்தோறும் பின்பற்ற வேண்டிய கடமைகள் சிலஇங்கே...........

  
  1. அதிகாலையில் துயிலெழுதல்.
  2. விழித்ததும் பல் தேய்த்து முகம் கழுவி,குளித்து விட்டு ,நெற்றியில் திருநாமம் அணிந்து 5 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து  பின் 1 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
  3.  சற்று நேரம் அகிலத்திரட்டு மற்றும் அருள்நூல் படித்து விட்டு பின்,பள்ளி,கல்லூரி பாடங்களை படிக்க வேண்டும்.
  4. தாய்,தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
  5. நம்மால் முடிந்த வீட்டு வேலைகளை செய்து பெற்றோருக்கு உதவ வேண்டும்.
  6.  நம்முடைய ஆடைகளை நாமே துவைத்து உடுத்துதல் வேண்டும்.
  7.  கடமை தவறாமையும் ,காலந்தவறாமையும் மிகவும் முக்கியமானவை ஆகும்.
  8. நாம் வசிக்கும் இடம்,படுக்கும் இடம்,படிக்கும் இடம் அனைத்தையும் சுத்தமாக வைக்க வேண்டும்.
  9. எல்லோரிடமும் அன்பாக நடந்திட வேண்டும்.
  10. ஒருபோதும் கோபங்கொள்ள கூடாது, கோள்வார்த்தைகள் பேசக்கூடாது,கேட்க கூடாது.
  11.  நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவிகள் செய்ய வேண்டும்.
  12. பதிகள் மற்றும்,தாங்கல்களில் கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.பிறருடைய நலனுக்காக அய்யாவிடம் வேண்டுதல் வேண்டும்.
  13. நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
  14. நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்,உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும்.
  15. அன்பு,தர்மம்,பொறுமை இவற்றைக் கடைபிடித்து வாழ்வின் வெற்றிப் படிகளை எட்டிப் பிடிக்க வேண்டும்.
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக