ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சாமித் தோப்பு அய்யா வைகுண்டர்

பொ ன்னுமாடன்.வெயிலாள் தம்பதியருக்கு சாத்தான் கோவில் விளை என்ற ஊரில் (கன்னியாகுமரி மாவட்டம்) 25-03-1809-இல் பிறந்தார் முடிசூடும் பெருமாள். “
தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவனுக்கு மஹா விஷ்ணுவின் பெயரை வைக்கக் கூடாது. உடனே பெயரை மாற்ற வேண்டும் “ என்று மேட்டுக்குடியினர் உத்தரவிட்டனர்.
      முத்துக்குட்டி என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார் முத்துக்குட்டி. பாடல்கள் புனைந்தார். அவரது ஆற்றலைக் கண்டு வியந்தவர்கள் ‘அய்யா’ என்று அவரைப் பணிவுடன் அழைக்கலாயினர். விவசாயத்தைத் தொழிலாகச் செய்துவந்தர் முத்துக்குட்டி.
      ஒருசமயம் மேட்டுக் குடியினர் சதியால் ஏழை உழவர்களின்  குடியிருப்பகள் கொளுத்தப்பட்டன. முத்துக்குட்டி அய்யா உறங்கிக் கொண்டிருந்தார்.. அவருடைய வீட்டுக்குள்  புகுந்து அவரைக் கொல்லக் கத்தியை ஓங்கினவனால் கையைக் கீழே இறக்கவோ அசைக்கவோ முடியவில்லை. அவனுடன் வந்த மற்ற அடியாட்கள்  கத்தியுடன் அவரை நெருங்க, அவர்கள் கண்கள் பார்வை  இழந்தனர் அவர்கள்  கூ
க்குரல் கேட்டு அய்யா எழுந்தார்
. ’அரஹர சிவ சிவ“. என அந்த முரடர்களை ஜெபிக்கச் சொன்னார். அதன் படியே அவர்கள் செய்ததும்  கை சரியானது.பார்வை மீண்டது. அய்யா பாதங்களில் வீழ்ந்து  மன்னிப்பு வேண்டினர். அய்யாவும் பெருந்தன்மையுடன்  மன்னித்து அனுப்பினார். கொலையாளிகளை அனுப்பிய மேட்டுக் குடியினரின் சினத்தை மேலும் தூண்டியது.
      அவரிடம் மன்னிப்பு கேட்பது போல் நடித்து,’மருந்துவாழ் மலை’ யில் நடைபெறவிருக்கும் விருந்துக்கு அழைத்தனர். நஞ்சு கலந்த உணவை இட்டனர் . விஷம் அவரை எதுவும் செய்யாததைக் கண்டு அவர்கள் பயந்தோடினர்.
      சிலகாலம் சென்றதும் அய்யாவுக்கு கடும் ஜுரம் கண்டது. ஔடதங்கள் பலன் அளிக்கவில்லை. அய்யாவுடைய அன்னையின் கனவில் செந்திலாண்டவர் தோன்றி செந்தூருக்கு அவரை அழைத்துவருமாறு  அருளினார்.  தொண்டர்கள் அய்யாவை கட்டிலோடு தூக்கிச் சென்றனர். திருச்செந்தூரை அடந்ததும் அய்யாவின் காய்ச்சல் குணமானது.
      திருச்செந்தூர் ஆலயம் கொடி மரத்தருகே பலமணி நேரம் நிஷ்டையில் அமர்ந்தார் அய்யா. கடலில் உள்ள ஈரமணலை வாரி தேகத்தில் பூசிக்கொண்டார். அங்கேயே தவமிருந்தார்.
      ஒருநாள் கடலுக்குள் சென்று மறைந்தே விட்டார். மூன்றாவது நாள் சூரியோதயத்தில் கடலிலிருந்து நடந்துவந்தார். “எங்கெ போயிருந்தீர்கள்?” என்று அன்பர்கள் வினவ “வைகுண்டம்” என்று பதிலளித்தார். அன்று முதல் அவரை மக்கள் ”அய்யா வைகுண்டர்”  என்று குறிப்பிட்டனர்.   யோகம் செய்து வந்த தோப்பில், ‘சாமியைத் தரிசித்த’ அய்யா அங்கு இருந்ததால் “சாமித் தோப்பு என அழைக்கப்பட்டது.
      தேடி வந்தவர்களின் நோய்களைத்தீர்த்தார் அய்யா. அதனால் மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வணங்கினர் .இவர் மீது பொறாமை கொண்ட மேட்டுக் குடியினர் , அன்று கன்னியாகுமரியை ஆண்ட திருவிதாங்கூர் மன்னரிடம் கோள்மூட்டி, ‘மன்னர் ஆட்சியை ஒழித்துக் கட்ட வைகுண்டர் ஏழை மக்களைத் தூண்டிவிடுகிறார் ’ என்று தூபமிட்டனர். மன்னரின் கட்டளைப் படி அவரைப் பிடித்துவர சாமித்தோப்பு சென்ற காவலர்கள் அவரைக் காணாது அவர் தங்கியிருந்த குடிலை அழித்தனர். தொண்டர்களை  இம்சித்தனார். தன்னால் மற்றவர்களுக்கு துன்பம் வரக்கூடாது என்று நல்லெண்ணம் கொண்டு  அய்யா அரசவைக்கு நேரில் சென்றார்.
      ராஜத் துரோக குற்றத்தை அவர்மீது சுமத்திய மன்னர், அவரை சிறையில் அடைக்க உத்திரவிட்டார். அவரை. சிறைவைத்த சேவகர்கள் நோய்வாய்ப் பட்டனர். அச்சேவகர்களின் வியாதியை அவர் குணப்படுத்தியதால் அவர்கள் அய்யாவை நேசித்தனர். சிறைக் காவலர்களை மாற்றிய அரசர் அய்யாவைச் சித்திர வதை சிய்ய ஆணை பிறப்பித்தார். துன்பத்தைச் சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டார் அய்யா.
      அய்ய சைகுண்டருக்கு பாலில் நஞைக் கலந்து கொடுக்குமாறுன் உத்திரவு பிறப்பித்தார் மன்னர். நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை. சிறையில் நிஷ்டையில் ஆழ்ந்தார் அய்யா.
      விறகுக் கட்டைகளை அடுக்கி, காய்ந்த மிளகாய்வற்றலைக் கொட்டி சிறை அறையைச் சுற்றி நெருப்பு வைக்க ஆணையிட்டார் அரசர். அய்யா ஒரு தும்மலோ, இருமலோகூட எழுப்பாதது கண்டு காவலர் அஞ்சினர்.
      காட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புலியைக் கூண்டில் அடைத்துப் பட்டினிபோடனர். ஜனங்கள் முன்னிலையில்  குண்டைத் திறக்கச் செய்து, அய்யாவைன் அதன் முன் நிறுத்த மன்னர் ஆணையிட்டார். சீறிவந்த புலி நாய் போல் அய்யா காலடியில் படுத்துக் கொண்டது. காவலர்கள் ஈட்ட்டியால் அதைக் குத்த, அது அவர்களைத் தாக்கியது.. ஆனால், மறவர்களை ஏதும் செய்யவில்லை. மனம் மாறிய மன்னர் அய்யாவை விடுதலை செய்தார்.
      மக்களைக் கூட்டி’மூன்று வேளை நீராடி, தனக்குத்தேவையான உணவைத் தானே தயாரித்து, கூடியிருந்து உண்ணவேண்டும்’  என்று போதித்தார் அய்யா. அதற்கு ‘ துவையல் பந்தி; என்று பெயரிடப்பட்டது. வாகைப் பதி, தாமரைப்பதி, முட்டப்பதி போன்ற இடங்களில் அவரே இந்தத் ’துவையல்பந்தியை’ நடத்தியும் காட்டினார்.
      கண்ணாடி முன் மலர்ந்த தாமரையை வைத்து பூ நடுவில் விளக்கேற்றி வழிபடச்சொல்வார் அய்யா. விபூதியை நாமம் போல் நெற்றியில் அணிந்து கொள்வார்.
      09-06-1851-இல் அம்பலப்பதி என்ற இடத்தில் மகாசமாதி அடைந்தார் அய்யா வைகுண்டர்.. பின்னர் ’சாமித்தோப்பில்’ அவர் உடல் சமாதியில் வைக்கப்பட்டது.. திருச்செந்தூர்- கன்னியாகுமரி சாலைக்கு அருகில் அந்த இடம் உள்ளது.
      “சத்துருவோடும் சாந்தமாக இரு; வரம்பு தப்பாதே, வழிதவறி நில்லாதே” என்பதே அய்யா வைகுண்டரின் முக்கிய அறவுரை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்து வாழ்மலையில் அவருடைய ஆசிரமம் இருக்கிறது. ஞாயிறு தோறும் அங்கே கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது.

      04-04-1822-அன்று அய்யா ’வைகுண்ட தரிசனம்’ செய்து திருச்செந்தூர் கடலிலிருந்து எழுந்து வந்ததை நினைவு கூறும் வகையில் அந்த நாளும், அய்யா பிறந்த நாளும் அகத்தீஸ்வரம் வட்டத்திலுள்ள சாமித்தோப்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அய்யாவைகுண்டர் காட்டிய பாதையில் “நிழல் தாங்கல்கள்” நோயாளிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் அடைக்கல இடமாக இருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக