ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

நீண்ட ஆயுள் பெறுவது எப்படி ? மரணத்தை வெல்வது சாத்தியமா?

முடியும் ...... ஆனால் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
தவத்தால் மட்டுமே இது சாத்தியாமாகும்.

அய்யா வைகுண்டர் கலி அரசனின் சிறை கொடுமைகளை வென்று சாமிதோப்பு வந்த பின்னால் தனது தொண்டர்களை துவையல் தவசிற்க்கு அனுப்ப மனதில் நினைத்தார். உடனே அய்யாவின் தொண்டர்கள் தங்கள் , வீடு, ஆடு, மாடு , சொத்து எல்லாவற்றையும் விற்று விட்டு அய்யாவை நாடி சென்றனர். அவர்களை கண்டவுடன் அய்யா வாகை பதிக்கு சென்று தவத்தை தொடங்க உத்தரவிட்டார். அந்த துவையல் தவம் என்பது என்னவென்றால்மூன்று நேரம் கடலில் உடுத்த துணியோடு குளித்து துவைத்து ( மதியம், மாலை ) இறைவனை தொழுது , கடல் நீரை மட்டுமே குடித்து, கடல் நீரில் மதியம் ஒரு நேரம் மட்டும் அன்னம் சமைத்து அதனை கடல் மணல் பரப்பிலிட்டு உண்ண வேண்டும். காலையிலும் மாலையிலும் உகபடிப்பை ஓதவேண்டும். மதியம் உச்சி பாட வேண்டும். ( உச்சிப் படிப்பும் உகப் படிப்பும் அய்யா வைகுண்டர் அருளிய அருள் நூலில் உள்ளன). இந்த தவத்திற்கு வந்தவர்கள் யார் யார் தெரியுமா? குழந்தைகள், வயோதிகர்கள் , இளைஞர்கள் , மற்றும் கருவுற்ற பெண்கள் என எந்த வித பாகு பாடுமின்றி அனைத்து தரப்பினரும் தவத்தில் கலந்து கொண்டனர்.
ஆறு மாதங்கள் வாகை பதியில் தவம் இருந்த பின்னால் அன்புக்கொடி மக்களை , அய்யா வைகுண்டர் முட்டப்பதிக்கு சென்று தவம் இருக்க பணித்தார்.சொற்பனத்தின் மூலம் இந்த கட்டளை கொடுக்கப்பட்டது. துவையல் தவத்தோர் முட்டபதி சென்று உற்சாகத்துடன் தவத்தை மேற்கொண்டனர். உலகத்தோர் மட்டுமன்றி மேல் ஜாதியினர் என்று சொல்லப்பட்டவர்களும் அவர்களை கண்டு பொறமை கொள்ளும் அளவில் அவர்களின் வாழ்க்கை முறையும் , ஒழுக்கமும் , பக்தியும் , தவமும் சிறப்பாக அமைந்தது. கடல் நீரில் துவைக்கப்பட்ட உடைகள் பட்டு துணிகளை விட மின்னின.உடை, உடல், புத்தி மற்றும் மனம் அனைத்தும் துவைக்கபட்டன. சுத்தமாக்கப்பட்டன . எனவே தான் இது துவையல் தவசு என்ற பெயர் பெற்றது.

இங்கு நடந்த அதிசயம் என்னவென்றால், மூன்று மாத கர்ப்பிணியாக சென்று தவம் புரிந்தவர்கள் ஆறு மாதங்களுக்கு பின்னாலும் மூன்று மாத கர்ப்பிணியாகவே இருந்தனர்.காரணம் அங்கே காலங்கள் மாறும் போதும் வயோதிகம் ( Ageing Process ) என்ற இயற்கையான நிகழ்வு தாக்கவில்லை. இது தான் மரணத்தை எதிர்த்து நிற்கும் இரகசியமாகும். அய்யா நடத்திய துவையல் தவசில் இது இயற்கையாக அரங்கேறி இருக்கிறது.

அறிவியல் அறிஞர்கள் போராடி ஆயிரமாயிரம் நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடித்தாலும் வயோதிகத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் தவத்தால் இது சாத்தியம் என்பது அய்யா வைகுண்டரால் நிருபிக்கப்பட்டுள்ளது.

அகிலத்தில் எம தர்மனுக்கு எதிராக ( இறப்பிற்கு எதிராக ) எக்காள துர்க்கை தவம் இருப்பதாவும் சொல்கிறது.

திருமால் திருவனந்தபுரம் நோக்கி செல்லும்போது எக்காள துர்க்கையின் சாபத்தை நீக்கி விமோசனம் வழங்கும் போது 
" இப்போது பெண்கொடியே யான் சொல்ல கேட்டிடு நீ 
அந்தகனை கொள்ள அருந்தவசு பண்ணிடு நீ 
வந்த யுகம் மாறி வழிய பல தர்ம யுகம் 
உதிக்கும் பொழுதில் உன் தவசின் படியே 
சதிக்கு உகந்ததானால் சண்டன் அழிவாகுமென்றார்."

துர்க்கை என்பது சக்தியை குறிக்கிறது. சக்தியின் பலம் அதிகமாகும் போது தானாகவே நோய் எதிர்ப்பு தன்மை அதிகமாகும். இந்த அழிவின்மை கடும் தவம் செய்வோருக்கு மட்டுமே கிட்டும் என்பது வெள்ளிடை மலை.

" மானமுள்ள தொண்டருக்கு இறபிறப்பில்லா பேரென்று இயம்பு " என்று அகிலத்திரட்டு கூறுவதை ஒப்பு நோக்கவும்.

தவம் செய்வோம் அழிவில்லா வாழ்வு பெறுவோம் 

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக