அகிலத்திரட்டில் பிச்சை எடுத்தலைப் பற்றியும், பிச்சை கொடுத்தலைப்
பற்றியும் அதிகமாகப் பேசப்பட்டுள்ளன. பெரும்பாலான அய்யாவழிப் பதிகள் பிச்சை
எடுத்து ஈட்டிய பொருள் கொண்டே இயங்குகின்றன. பதியில் நேமித்த பொருட்களை
(பூஜையில் வைத்த) பணிவிடை நிறைவுற்ற பின் தருமம் செய்வர். உதாரணத்துக்கு
தலைக்கு ஒரு வாழைப்பழம் வீதம் வழங்குவதாகக் கொள்வோம். இவ்வாறு பதியில் ஒரு
தனி மனிதன் பெறும் தலைவீதப் பாங்கு பிச்சைப்பங்கு என்று அழைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக