விடுதலை செய்யப்பட்ட அய்யா வைகுண்டர் திருவனந்தபுரத்தில் இருந்து சாமித்தோப்பு நோக்கி திரும்பினார். தன்னை கொலை செய்ய நடந்த முயற்சிகளை எல்லாம் அவர் முறியடித்த தகவல் வேகமாக பல பகுதிகளுக்கும் பரவி இருந்ததால், அவர் சென்ற பகுதிகளில் எல்லாம் மக்கள் பெருமளவில் திரண்டிருந்து வாழ்த்தி வரவேற்றனர்.
மக்களின் பேராதரவுக்கு மத்தியில் சாமித்தோப்பு வந்து சேர்ந்தார் அய்யா. அய்யாவின் அற்புதங்களை கேள்விப்பட்ட மக்கள், முன்பைவிட அதிக அளவில் அவரை தரிசிக்க திரண்டு வந்தனர். தன்னை தேடி வந்த மக்கள் ஒவ்வொருவரிடமும் பேசினார் அய்யா. அப்போதுதான், அவர்கள் மனதில் மூடநம்பிக்கைகள் என்னும் அறியாமை அழுக்கு நிறைய படிந்திருப்பதைக் கண்டார். அவர்களை பக்குவப்படுத்துவது சுலபமல்ல என்பதையும் உணர்ந்தார். படிப்படியாக அவர்களை மனம் திருந்த வைக்க முடிவு செய்தார்.
மனதில் இருக்கும் அறியாமை அழுக்குகளை அகற்றி, தெய்வீக அனுபவம் பெற வைக்கும் “துவையல் தவம்” என்கிற தவத்தை மேற்கொள்ளுமாறு எல்லோரையும் கேட்டுக் கொண்டார். அய்யாவே அழைத்ததால் ஆர்வமுடன் தவம் செய்தனர் அவர் வழி மக்கள்.
சரி... அது என்ன துவையல் தவம்?
இந்த தவம் செய்பவர்களுக்கு மனத் தூய்மையுடன் உடல் தூய்மையும் அவசியம். அதனால், அந்த தவம் மேற்கொண்டவர்கள் தினமும் மூன்று வேளை கடலில் குளித்து புனிதம் பெற்றார்கள். உடல் தூய்மை பெற்றால் மாத்திரம் போதாது; உணவு கட்டுப்பாடும் அவசியம். பச்சரிசி, சிறுமணியை வேக வைத்து, அதையே உணவாக சாப்பிட வேண்டும்.
மேலும், அலைபாயும் மனதை நம் வசப்படுத்த - தெய்வீக அனுபவத்தை பெற... சில போதனை வகுப்புகளும் அதில் இடம்பெற்றன. காலையில் உகப்படிப்பு, மதியம் உச்சிப்படிப்பு, இரவில் உகப்படிப்பு மற்றும் உச்சிப்படிப்பு... என்கிற, பிரார்த்தனை பாடல்களை குருவாக இருந்து ஒருவர் சொல்ல... மற்றவர்கள் பின்சொல்லும் பிரார்த்தனை வகுப்புகள்தான் அவை.
இவ்வாறாக உடல் தூய்மையுடன், மன தூய்மையும் பெற்றவர்களை, நல்வழிப்படுத்த பல்வேறு அறிவுரைகளையும் அவர்களுக்கு வழங்கினார். வாழ்க்கை என்பது என்ன? இல்லறம் எப்படி போற்றப்பட வேண்டும்? என்பதில் தொடங்கி... ஆன்மிகம் என்பது என்ன? என்பது வரை போதித்தார் அய்யா.
இதோடு துவையல் தவம் நின்றுவிடவில்லை. அதில் ஈடுபட்டோரை கடற்கரையோரத்தில் தங்கச் செய்தார். கடும் வெயில், காற்று, மழை... என எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவத்தை அந்த தவத்தின் மூலம் அவர்களை பெறச் செய்தார்.
இப்படி பல்வேறுபட்ட பக்குவப்படுத்துதல்களால் துவையல் தவம் மேற்கொண்ட அனைவரும் புது மனிதராய் தங்களை உணர்ந்தனர்.
எந்தவிதமான விஷம எண்ணங்களும் இல்லாத... அடுத்தவனை அடக்கி ஆள வேண்டும் என்கிற வஞ்சகம் இல்லாத... எல்லோரும் ஒருவரே... எல்லோருக்கும் எல்லாவிதமான உரிமைகளும், சுதந்திரங்களும் உண்டு... - இந்த எண்ணங்கள் ஒருவருக்கு வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரால் மாத்திரமே இறைவனை அடைய முடியும். அதன்படி, இறைவனை அடைய ஒருவரை தயார்படுத்தும் தவமாக துவையல் தவம் அமைந்தது.
துவையல் தவத்தைத் தொடர்ந்து, பூவண்டர் தோப்பில் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு போதனைகள் செய்தார் அய்யா. அவரது சீடர்களாக சேர்ந்திருந்த இளைஞர்கள், அதற்கு பக்க பலமாக துணை நின்றனர்.
அய்யாவின் பெரும்பான்மையான போதனைகள், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த 18 ஜாதியினர் ஏற்றம் பெற வேண்டும் என்பதையே வலியுறுத்தியது. அத்துடன், உருவ வழிபாடு இல்லாத, கற்பூர தீப ஆராதனை இல்லாத, பூஜை வழிபாடுகள் இல்லாத வித்தியாசமான ஆன்மிகப் பாதையையும் காட்டினார். அந்த பாதையில்தான் தன் மக்கள் நடைபோட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
அய்யா ஏற்படுத்திய மாபெரும் புரட்சி போதனைகளால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
1. தோள் சீலை அணியக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்ட பெண்கள் தைரியமாக நெஞ்சம் நிமிர்ந்து தோள் சீலை அணிந்து வீதிகளில் உலா வந்தனர்.
2. ஆதிக்க ஜாதியினரைப் பார்த்த மாத்திரத்தில் இடுப்பிலோ, தலையிலோ கட்டியிருந்த துண்டை அவசரமாக கழற்றி, கை இடுக்கில் வைத்து குனிந்து நின்ற ஆண்கள், அதே துண்டை தலைப்பாகையாக துணிந்து கட்டினர். குனிந்து குனிந்து கோணலாகிப்போன அவர்களது முதுகுகள் நிமிர்ந்தன.
3. ஆதிக்க ஜாதியினருக்கு மரியாதை கொடுக்க, அணிந்திருந்த வேஷ்டியை கால் முட்டிக்கு மேலே தூக்கிக் கட்டிய ஆண்கள், கால்கள் முழுமையும் மறைக்க அதை அணிந்து வலம் வந்தனர்.
4. எல்லோரும் மனிதர்களே... என்று தத்துவத்தின் அடிப்படையில் பல இடங்களில் சமபந்தி விருந்துகள் நடத்தப்பட்டன (ஒருகட்டத்தில் இந்த விருந்துகளில் ஆதிக்க ஜாதியினரும் கலந்து கொண்டது, அய்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்).
5. கூரை வீடுகளில்தான் வசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டவர்களுக்காக சமதர்ம குடியிருப்புகளை உருவாக்கினார் அய்யா.
6. தன் போதனைகளையும், தத்துவ நெறிகளையும் பரப்ப அன்புக்கொடி என்ற இயக்கமும் அய்யாவால் ஆரம்பிக்கப்பட்டது. அய்யாவின் சீடர்களான மயிலாடி சிவனாண்டி, கைலாசபுரம் பண்டாரம், பிள்ளையார் குடியிருப்பு அர்ஜூனன், குளச்சல் சுப்பையா, தாமரைக்குளம் அரிகோபாலன் ஆகியோர், அந்த இயக்கத்தில் முக்கியப் பங்காற்றினார்கள்.
7. மக்கள் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், அவர்களது வீடுகளில் இருந்து பொருட்களை வாங்கி ஒன்றாக்கி, முத்திரி கிணற்று நீரால் அதை சமைத்து, எல்லோரையும் ஒன்றாக அமர வைத்து சாப்பிட வைத்தார். சாமித்தோப்பில் மட்டுமின்றி, பல்வேறு இடங்களுக்கும் தனது சீடர்களை அனுப்பி, அவ்வாறு சமபந்தி விருந்துகளை செய்ய வைத்தார்.
8. இறைவன் யார்? அவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக பல இடங்களில் நிழல்தாங்கல்கள் எனப்படும் அய்யா வழி கோவில்களை ஏற்படுத்தினார் அய்யா. இந்த நிழல்தாங்கல்கள் இரவில் கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களாகவும் இயங்கின.
9. தருமம் செய்வதும், அன்னதானம் வழங்குவதும் அவசியம் என்று அய்யாவால் அடிக்கடி வலியுறுத்தப்பட்டது. தரும சிந்தனை ஏற்பட்டால்தான் மனம் பக்குவப்படும் என்பது அய்யாவின் நம்பிக்கை.
இவ்வாறு, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு உன்னத தலைவனாக - நன்மை செய்யும் ஒரு போராளியாக - ஒடுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு பெற்றுத்தந்த புரட்சியாளராக திகழ்ந்த அய்யா வைகுண்டரால் நாஞ்சில் நாட்டில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். சுதந்திரத்தை பெற வன்முறை தீர்வு ஆகாது. அகிம்சை வழியில்தான் அதை பெற முடியும் என்பதை, இந்திய சுதந்திரத்திற்கு முன்பே நிரூபித்து காட்டியவர் அவர். ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக... திருவிதாங்கூர் சமஸ்தான அடக்குமுறைகளுக்கு எதிராக... ஆதிக்க ஜாதியினர் நிகழ்த்திய வன்கொடுமைகளுக்கு எதிராக போராடியதன் மூலம் தன்னை ஒரு போராளியாகவும் அவர் தன்னை காட்டிக் கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லாம் கிடைத்தபோது, தான் வந்த நோக்கம் நிறைவேறி விட்டது என்று எண்ணினாரோ என்னவோ, அவர் மீண்டும் திருமால் மலரடி செல்லும் நாளும் வந்தது.
கி.பி.1851 ஜூன் 2&ம் தேதி அவர் தனது இறை அவதாரத்தை நிறைவு செய்தார். அய்யா வைகுண்டர் குறிப்பிட்ட சமுதாய மக்களுக்காக அவதாரம் எடுக்கவில்லை. எல்லோருமே அவரை பொதுவாக வணங்க ஆரம்பித்தால்... அவரது வழிகாட்டல்களை பின்பற்ற ஆரம்பித்தால்... தருமநெறி எங்கும் பரவி அமைதியான புதிய சமுதாயம் படைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக