வியாழன், 3 செப்டம்பர், 2020

ஏகம் படைத்துக் காக்கும் ஸ்ரீமன் நாராயணரின் வைகுண்டர் அவதாரம்

 ஸ்ரீமன் வைகுண்டர் (C.1833 –C.1851): உலகைப் படைத்துக் காக்கும் இறைவனான நாராயணர் தனது கிருஷ்ண அவதாரத்துக்கு அடுத்து கலியுகத்தில் எடுத்த அவதாரமே வைகுண்டர் அவதாரம். இது ஸ்ரீமன் நாராயணரின் 10-வது அவதாரம். இந்த அவதாரத்தில் நாராயணர் முப்பொருளும் (சிவன், விஷ்ணு, பிரம்மா) ஒருபொருளாய் அவதரித்தார். வைகுண்டர் “நாராயண பண்டாரம்” என்றும், “அய்யா” என்றும், “சிவநாராயணர்” என்றும் பெருமையோடு அழைக்கப்படுகிறார்.

இறைவன் இந்த மண்ணில் அவதரிக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அவனின் அவதாரத்தை அறிவதற்கு புண்ணிய இறைநூலை கொடுக்கிறான். ஸ்ரீமன் நாராயணர் எடுத்த வைகுண்ட அவதாரத்தை அறிவதற்கும், நல்வாழ்க்கை வாழ்ந்து கலியை கடர்வதற்க்கும் நமக்கு கிடைத்த புண்ணிய ஆகமம் அகிலத்திரட்டு. இப்புனித ஆகமமானது கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27-ஆம் தியதி (10th December 1841 CE) வெள்ளிக்கிழமை, ஆண்டவர் தனது சீடரான அரிகோபாலன் சீடரின் அகமிருந்து அருளி, சீடரால் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டது. இவ் அகிலத்திரட்டு அம்மானை என்பது

 “தர்ம யுகமாக்கி தாரணியை ஆளுதற்கு கர்ம கலியில் கடவுளார் வந்தக் கதை”

மேலும், இப்புனித ஆகமமானது உலகத்தோற்றத்தையும், இதுவரை நடந்த நிகழ்வுகளையும், நாராயணரின் அவதாரங்களையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும் வரிசையாக கூறுகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக