|
அகிலத்திரட்டு அம்மானை
ஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்து வேதியரும் நன்றாய் விளம்புவா ரம்மானை சூரபற்ப னென்ற சூரக்குலங் களைத்துணித்து வீரம் பறைந்ததினால் மேலுமந்த அவ்வுகத்தில் இரணியனாய்த் தோன்றி நின்றஇ ராச்சதனைக் கொன்னு கிரேதா குவலயமும் நானழித்து முன்னு கரந்திருந்த ஆறு முகவேசம் செந்தூரு வாரி திரைமடக்கில் வாழ்ந்திரென்று வந்தோங் காணய்யா மலர்ப்பாதந் தெண்டனிட என்றேதா னாதி ஈசுரரோ டேதுரைப்பார் அன்றேதா னீசர் அருளுவா ராயருக்கு திரேதா யுகம் - இராவணன் பாடு முன்னே குறோணி முடிந்ததுண் டாறதிலே இன்னமூணு துண்டம் இருக்குதுகாண் மாயவரே என்றீசர் சொல்ல எல்லோருந் தான்கூடி அன்றிருந்த துண்டம் அதிலேயொரு துண்டமதை உருவாய்ப் படைத்து உயிர்க்கொடுக்கு மவ்வளவில் அருகே யிருந்த அச்சுதரு மேதுரைப்பார் முன்னே இவனும் முற்பிறப் பானதிலே என்னோடே பேசி எதிர்த்தான் காணீசுரரே 20 ஆனதா லிப்பிறப்பு அரக்க னிவன்றனக்கு ஈனமில்லாச் சிரசு ஈரஞ் சாய்ப்படையும் பத்துச் சிரசும் பத்துரண்டு கண்காதும் தத்துவங் களோடே தான்படையு மென்றுரைத்தார் மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து வாய்சிரசு பத்தாய் வகுத்தார்கா ணம்மானை கூடப் பிறக்கக் குண்டிலிட்ட ரத்தமதை வாட அரக்கர் குலமாய்ப் பிறவிசெய்தார் அப்போ படைக்கும் அவ்வளவில் மாயவனார் மெய்ப்பான மேனிதனில் வியர்வை தனையுருட்டி விபீஷண னென்று மெய்யுருவந் தானாக்கிக் கவுசலமா யரக்கன் தம்பியெனக் கருத்தாய்க் கூடி யிருந்து அரக்கன் குறியறிந்து வேடிக்கை யாக வீற்றிரென்று தானுரைத்தார் இராவணன் வரம் வேண்டல் பத்துத் தலையான பாவி அரக்கனவன் மற்று நிகரொவ்வா வாய்த்தபர மேசுரரை வணங்கி வரம்வேண்ட மனதிற் பிரியமுற்று இணங்கியே ஈசர்பதம் இறைஞ்சிநின்றா னம்மானை தவத்தருமை கண்டு தலைபத் தரக்கனுக்குச் சிவத்தலைவ ரானோர் செப்புவா ரம்மானை 40 காதுரண்டு பத்து கண்ணிருப துள்ளோனே ஏது வரம்வேணும் இப்போது சொல்லுமென்றார் அப்போது ஈசுரரை அரக்க னவன்வணங்கி இப்போது ஈசுரரே யான்கேட்கு மவ்வரங்கள் தருவோ மெனவே தந்தி முகன்பேரில் உருவா யெனக்கு உறுதிசெப்பு மென்றுரைத்தான் அப்படியே ஈசர் ஆணையிட்டுத் தான்கொடுக்க சொற்படிகேட் டேயரக்கன் சொல்லுவா னப்போது மூன்றுலோ கத்திலுள்ள முனிவர்தே வாதிகளும் வேண்டும்பல ஆயுதமும் விதம்விதமா யம்புகளும் வீரியமாய் நானிருக்கும் விண்தோயுங் கோட்டைசுற்றிச் சூரியனுஞ் சந்திரனும் சுற்றியது போய்விடவும் சிவனா ரொருகோடி செய்ய வரந்தரவும் புவனம் படைக்கும் பிரம்மா வொருகோடி உமையா ளொருகோடி உற்ற வரந்தரவும் இமையோ ரரைக்கோடி இப்படியே உள்ளவரம் மூணரைக் கோடி உள்ளவர மத்தனையும் கொடுக்கு மளவில் குன்றெடுத்தோன் தன்தேவி 60 அலைமேல் துயிலும் அச்சுதனார் தன்தேவி சிலைவே லெடுத்துச் செயிக்கவல்லான் தன்தேவி அலங்கா ரமாகி அன்னைப் பொழுததிலே கலங்கா தான்தேவி கயிலைஉமை யாளருகே மணிமேடை தன்னில் மகிழ்ந்திருக்கு மவ்வளவில் கெணியா மலேயரக்கன் கெடுவ தறியாமல் அம்மை தனைக்கண்டு அயர்ந்து முகஞ்சோர்ந்து கர்ம விதியால் கைமறந்து நின்றனனே நின்ற உணர்வை நெடிய சிவமறிந்து அன்றந்த அரக்கனுக்கு ஆதிவரங் கொடுத்து கேட்ட வரங்கள் கெட்டியாய்த் தான்கொடுத்து நாட்ட முடன்சீதை நகையா லழிவையென்று இரக்கமில் லான்கேட்ட ஏற்றவரங்க ளெல்லாம் அரக்க னவன்றனக்கு ஆதிமிகக் கொடுத்தார் ஆதிகொடுத்த அவ்வரங்க ளத்தனையும் நீதியில் லான்வேண்டி நெடியோன் தனைவணங்கிக் கொண்டுபோ கும்போது குன்றெடுத்த மாயவனார் கண்டு மறித்துக் கௌசலமிட் டேமாயன் அரைக்கோடி வரமாய் ஆக்கிவிட்டார் மாயவரும் சரக்கோடி மூணும் தான்தோற்றுப் போயினனே 80 ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி சீரிய சீதை யாலே சீவனுக் கிடறும் பெற்று வாரிய மூணு கோடி வரமது தோற்றுப் பின்னும் மூரியன் மூணு லோகம் முழுதுமே யடக்கி யாண்டான் இராவணன் கொடுமை முக்கோடி வரத்தை உச்சிக்கொண்டார் மாயவரும் அக்கரைக் கோடி அரக்கன்வரம் கொண்டேகித் தேவரையும் மூவரையும் தேவேந் திரன்வரையும் நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை வாசு அரக்கன் மணிமேடை தூராட்டால் வீசுவேன் வாளாலே வெட்டுவேன் பாருவென்பான் வருண னவன்மேடை வந்துத்தொளி யாதிருந்தால் மரணம்வரும் வரையும் வலுவிலங்கில் வைப்பேனென்பான் சந்திரருஞ் சூரியரும் சாய்ந்துமிகப் போகாட்டால் சந்து சந்தாகச் சரத்தாலறுப் பேனென்பான் தெய்வ மடவார்கள் திருக்கவரி வீசாட்டால் கைவரைந்து கட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான் நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும் பாலு குடஞ்சுமந்து பணிந்துமுன்னே நில்லாட்டால் அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்தரைத்து நெற்றிதனில் பொட்டிடுவேன் நிச்சயமென் பானரக்கன் 100 வானவர்க ளெல்லாம் மலரெடுத்து என்காலில் தானமது பண்ணித் தாழ்ந்துநில்லா தேயிருந்தால் சாகும் வரைக்கும் தடியிரும்பி லிட்டவரை வேகும் படிக்கு வேள்வியதி லிட்டிடுவேன் மாமறலி மூவர் வந்தென்சொல் கேளாட்டால் காமனையும் ஈசன் கண்ணா லெரித்ததுபோல் என்னுடைய கண்ணால் இயமனையுங் காலனையும் துன்னுடைய வல்லத் தூதனையும் நானெரிப்பேன் இவ்வுகத்தி லுள்ள இராசாதி ராசரெல்லாம் முவ்வுகமுங் கப்பமிங்கே முன்னாடி தாராட்டால் நெருப்பெடுத் திட்டிடுவேன் நேரேகொண்டு வாராட்டால் எரிப்பே னொருஅம்பால் இராசாதி ராசரையும் இப்படியே பாவி இந்திரலோ கம்வரையும் அப்படியே அரக்கன் அடக்கியர சாண்டிருந்தான் தேவர்கள் முறையம் அப்படியே அரக்கன் ஆண்டிருக்கு மந்நாளில் முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே தேவாதி தேவர் தினமேவல் செய்திடவே மூவாதி மூவர் ஊழியங்கள் செய்திடவே முறுக்கம தால்பாவி ஊழியங்கள் கொண்டதினால் பொறுக்க முகியாமல் பூலோகத் தார்களெல்லாம் 120 தெய்வ ஸ்திரீயும் தேவாதி தேவர்களும் அய்யா திருமாலுக்(கு) அபயம் முறையமென அபயமிடு மொலியை அச்சுதருந் தானமர்த்திக் கபயமிடும் வேதன் கயிலையது தானேகி ஆதி பரமன் அடியைமிகப் போற்றி சோதித் திருமால் சொல்லுவா ரம்மானை பத்துத் தலையுடைய பாவி யரக்கனுக்கு மற்றும் பலகோடி வரங்கள்மிக ஈந்ததினால் தேவரையும் மூவரையும் தேவேந்தி ரன்வரையும் நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட ஈனமாய்க் கேட்டு இருக்க முடியுதில்லை பள்ளி யுறக்கம் பரிவாய் வருகுதில்லை தள்ளினால் தேவரையும் தற்காப்பா ராருமில்லை என்ன வசமாய் எடுப்போஞ் சொரூபமது தன்னிகரில் லாதவனே சாற்றுவீ ரென்றனராம் மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து தூயவரு மங்கே சொல்லுவா ரம்மானை பாவி யரக்கனுக்குப் பண்டுநா மீந்தவரம் தாவிப் பறிக்கத் தானாகா தென்னாலே 140 இராமாவதாரம் என்றரனார் சொல்ல எம்பெருமா ளச்சுதரும் அன்றெம் பெருமாள் ஆலோ சனையாகி என்னை மகவாய் எடுக்கத் தசரதரும் முன்னே வரங்கேட்டு உலகி லவரிருக்க அன்னுகத்தி லுள்ள அரசன் தினகரனும் பொன்னு திருவைப் பிள்ளையென வந்தெடுக்க நெட்டையா யரசர் நெடுநாள் தவசிருக்க சட்டமதைப் பார்த்துத் தானனுப்பு மீசுரரே பின்னும் பெருமாள் பெரியோனைப் பார்த்துரைப்பார் முன்னு முறையாய் முறைப்படியே தேவரையும் வானரமாய்ப் பூமியிலே வந்து பிறந்திருக்கத் தானவரே யிப்போ தான்படைக்க வேணுமென்றார் ஏவலா யென்றனுக்கு இப்பிறப் பானதிலே காவலா யென்றனுக்குக் கைக்குள்ளே நிற்பதற்குப் பள்ளிகொண்டு நானிருந்த பாம்புரா சன்தனையும் வெள்ளிமணி மெத்தையையும் வீற்றிருக்கு மாசனமும் இம்மூணு வேரும் என்னோ டுடன்பிறக்கச் சம்மூலப் பொருளே தான்படையு மென்றுரைத்தார் மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து தூயவரு மந்தப் படியே தெளிந்திருக்கப் 160 படைக்கும் பொழுதில் பரதேவ ரெல்லோரும் அடைக்கலமே மாயன் அடியெனத் தெண்டனிட்டார் தெண்டனிட்டுத் தேவரெல்லாம் செப்புவா ரம்மானை மண்டல மெங்கும் மயமாய் நிறைந்தோனே எங்களை லோகமதில் இப்போ படைப்பீரால் மங்களமா யுள்ள வலுவும் பெலமதுவும் ஆயனுக்கு நாங்கள் அடிபணிந் தேவல்செய்ய நேயனே நீரும் நெறியாய்ப் படையுமென்றார் ஈசர் மகிழ்ந்து இப்படியே தான்படைக்க வாசத் தசரதரும் வந்து தினகரரும் மகவாசை யுற்று மகாபரனைத் தானோக்கி அகப்பாச மற்று அதிகத் தவமிருந்து நாத னறிந்து நன்மறையைத் தான்பார்த்து பாத னரக்கன் பத்துச் சிரத்தானைத் தேவர் துயரமறத் திருமால் தசரதற்கு மூவ ருடன்கூடி உலகமதி லேபிறக்க அரக்கர் குலமறவே அம்மைசீதா லட்சுமியை இரக்கம்போ லுள்ள ஏற்ற தினகரற்கு மகவாய்ப் பிறக்க மறைதான் விதித்தபடி செகமீதில் ஞான சிருஷ்டி சிவமயமாய் 180 இப்படியே வேதத்(து) எழுத்தின் படியாலே அப்படியே ஈசர் அமைக்கத் துணிந்தனராம் உடனே தசரதற்கு உற்றதிரு மாலைத் திடமாய்ப் பிறவி செய்ய எனத்துணிந்தார் அப்போது ராமர் அய்யா திருமாலை இப்போ துபடைக்க ஈசுரனார் சம்மதிக்கப் படைக்கும் பொழுது பரமசிவ னாரை நடக்குந் திருமால் நாதனைப்பார்த் தேதுரைப்பார் அவ்வுலகி லென்னை அதிகத் தசரதற்கு இவ்வுலகு விட்டங்(கு) என்னைப் பிறவிசெய்ய வந்த விபரம் வகைவகையா யீசுரரே என்றனக்குத் தானமைத்து என்னை யனுப்புமென்றார் மாய னிதுகேட்க மறையோ னகமகிழ்ந்து தூயவரு மங்கே சொல்லுகிறா ரம்மானை பரலோ கமென்ற பைம்பொன் கயிலையதில் சாலோ கந்தன்னில் தானிருந்த மாமுனிவர் துசுவீசு மாமுனியும் சுகசீல மாமுனியும் விசுவாச மாயிருந்து விசாரம திட்டனராம் வாருந் துசுவீசு மாமுனியே நீர்கேளும் நீரும் நாமுங்கூடி நீணிலத்தில் போயிருந்து 200 நானுமொரு பெண்மதலை நல்ல மகவாகத் தானுமோ ராண்மதலை தலைவன் தனைவாங்கிச் சம்மந் தமாகித் தானிருந்து நாடாண்டு உம்மந் தமான உதவிபெற வேணுமென்று இருபேரு மிருந்து எனைநினைந்து மாமுனிவர் உருவேற்றி வேள்வி ஓம மதுவளர்க்க இந்தப் படியே இவர்களிரு மாமுனியும் எந்தன் தனைநோக்கி இருந்தார் தவசுகண்டீர் குறு முனி சாபம் அல்லாமற் பின்னும் அரக்கன்ரா வணன்தனக்குக் கொல்லாமற் கொல்லவொரு குறுமுனிவன் சாபமுண்டு அரக்கன் வரம்வேண்டி அவன்போகு மவ்வளவில் இரக்கமாய் மாமுனியும் இருந்தான் தவசதிலே தவசுநிலை பாராமல் தலைபத் தரக்கனுந்தான் பவிசு மதமாய்ப் படுவ தறியாமல் முனியையவன் காலால் ஒத்தினான் மாபாவி அநியாயப் பாவி அரக்க னவன்றனக்குக் கூறினான் மாமுனியும் கொள்ளைகொண்டச் சாபமது தூறின சாபத் துல்லியத்தை நீர்கேளும் மாலை மிகப்போற்றி வாய்த்ததவம் நிற்கையிலே காலெடுத்து ஒத்தினையே கள்ளாவுன் றனக்கு 220 இந்தத் தவசுதனில் ஈசுரரைத் தானினைந்து உந்தன் தனையறுக்க ஒருராம பாணமது வந்து பிறந்திடவும் மாய னதைத்தானெடுத்து உந்தனுட மார்பில் ஊடுரு வவிடவும் துசுவீசு மாமுனிவன் தசரதராய்ப் பூமிதனில் பிறந்து இருந்திடவும் பின்னுஞ் சுகசீல மாமுனியும் தினகரராய் வந்து பிறந்திடவும் ஓமுனிக்கு லட்சமியும் வில்லோ டுதித்திடவும் இராமபா ணத்தோடே இராமர் தசரதற்கு முராகமத் தின்படியே உலகி லுதித்திடவும் பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும் நாணங்கெட் டரக்காவுன் நல்லதலைப் பத்திழந்து சேனைத் தளமிழந்து சிரசிழந்து வாழ்விழந்து வானரங்கள் வந்துன் வையகத்தைச் சுட்டழித்து உன்சடல மெல்லாம் உழுத்துப் புழுப்புழுத்துத் தன்சடலப் பட்டுச் சண்டாளா நீ மடிவாய் வேண்டுவேன் தவசு விமலன் தனைநோக்கி ஆண்டுபன்னி ரண்டாய் அவன்றவசு நின்றனனே நின்ற தவத்தின் நிலைமையறிந் துமையாள் அன்றைக்கு வந்து அருளினா ளாயிழையும் 240 உரைத்த மொழிகேட்டு உற்ற முனிதனக்குத் துரைத்தனமா யித்தனையும் சொல்லி விடைகொடுத்தேன் இப்படியே மாமுனிக்கு ஈந்திருக்கு மிவ்வரங்கள் அப்படியே துசுவீசு மாமுனியுஞ் சுகசீல மாமுனியும் நம்மை வருந்திநிஷ்டை செய்யுகிறார் ஓமுனிக்கு நல்ல ஒழுங்குசெய்ய வேணுமல்லோ அல்லாமல் தேவாதி அபயம் பொறுக்கரிது எல்லா மிதுகண்டு இப்பிறவி செய்யுமென்றார் நல்லதுகா ணென்று நல்லதிரு லட்சுமியை வல்லமுள்ள பெட்டகத்தில் வைத்தார்கா ணீசுரரும் இராமபா ணமதையும் நன்றாய்ப் பிறவிசெய்ய சீராமஸ்ரீ யம்பகனும் சிவனு மகமகிழ்ந்து என்ன விதமாய் இதுபிறவி செய்வோமென்று பொன்னம் பலத்தோர் புத்திநொந்து தாமிருந்தார் ஈசுரரு மப்போ இரத்தின கிரிதனிலே வீசு பரனும் வேள்வி யதுவளர்க்க வேள்வி வளர்த்து விமல னுருவேற்றத் தாழ்வில்லா ஆயன் தற்சொரூபந் தானாகித் திருக்கணைக் காலில் செய்ய நரம்புருவி கருக்கணமாய் ராம பாணக் கணையெனவே 260 உறுதிகொண்டு வேள்விதனில் விட்டெறிந்தா ரம்மானை பிறிதிகொண்டு லட்சுமியும் பிலத்த திருக்கரத்தில் தூண்டு விரலில் துய்ய நரம்புருவி வேண்டும் பெரிய வீரவில் லீதெனவே ஆராரு மிந்தவில்லை அம்பேற்றக் கூடாமல் சீரா மரேற்ற சிந்தித்தா ளம்மானை உடனேயது வில்லாய் ஓம மதில்பிறக்கத் திடமாக ராமர் திருக்கணைக்கா லுள்நரம்பு பாணமதாய் வேள்விதனில் பரிவாயப் பிறந்திடவே தாணரும் வானோரும் சங்கத்தோ ருங்காண எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே வல்லோர்க ளான வாய்த்ததே வாதியெல்லாம் சங்கடங்கள் தீர்ந்ததென்று சந்தோசங் கொண்டாட அங்கணங்க ளான அலகைமிகக் கூத்தாட இராமபா ணத்தாலே இராவண சூரனையும் ஸ்ரீராமர் சென்று தென்னிலங்கை தன்னிலுள்ள அரக்கர்குல மறுப்பார் அச்சுதனா ரென்றுசொல்லி இரக்கமுள்ள தேவரெல்லாம் இரங்கிமிகக் கொண்டாட வில்லோ டுடன்பிறந்த வீரலட்சு மியெனவே வல்லோர்க ளாராலும் வந்திந்த வில்லதையும் 280 வளைத்தோர்க்கு நல்ல மாலைசூட்ட லாமெனவே தழைத்த சுகசீல தாட்டீக மாமுனியைத் தினகரராய்ப் பூமிதனில் செய்துவைத்து லட்சமியை மனோகரமாய்ப் பூமியிலே வைத்தபெட்ட கத்தோடே வில்லோ டேபிறக்க விமல னருளினராம் நல்ல துசுவீசு மாமுனியை நாடதிலே தசரதராய்த் தோன்றவைத்துத் தேசாதி ராசனுக்கு விசமாலை ராமருமாய் வீரக் கணையோடே கூடப் பிறக்கக் குன்றெடுத்தார் தான்துயிலும் நீட அரவணையை நீதலட்சு மணராக்கித் தலையணை மெத்தையையும் சத்துரு பரதனுமாய் நிலைவரமாய் ஈசன் நெறியாய்ப் பிறவிசெய்யத் தேவரையும் வானரமாய்ச் சிவனார் பிறவிசெய்ய மூவரை யும்பிறவி உள்ளதெல்லாஞ் செய்திடவே கொடுமுடியாய்ப் பிறந்த கோளிலங்கைப் பாவிகளை முடியடிவே ரில்லாமல் முழுது மறுப்பதற்கு வேண்டும் பிறவியெல்லாம் விமல னருளிமிகத் தாண்டவ சங்காரம் தானிதென்றா ரம்மானை இராவணன் தன்னைக் கொல்ல இராம பாணங்க ளோடே சிராம ராய்மாயன் தானும் தசரதன் தனக்குத் தோன்ற 300 விராகன மாது சீதை வில்லுட னுதிக்கத் தேவர் மராம ரக்குலங் களாகி வந்தனர் புவியின் மீதே சிராமருந்தான் ராவணனைச் செயிக்க ஒருவிதமாய் இராமபா ணத்தோடே நாட்டில் பிறந்தனராம் தென்னிலங்கை தான்முடிய சீதை சிறையிருக்கப் பொன்னரிய வில்லோ(டு) உடன்பிறந்தாள் பொன்மாது தேவரெல்லாம் வானரமாய்த் தென்னிலங்கை சுட்டழிக்கப் பூவர் சுகுமுனிவர் போர்விசுவ கன்மனெனும் வானரத்துக் கேற்ற மந்திரி தானாகித் தானவரையு மனுப்பித் தரணிதனி லெம்பெருமாள் லட்சும ணரெனவே ஏற்றசத்து ருபரதன் கட்சியுடன் மாயன் கணையோ டுடன்பிறந்தார் இப்படியே ராவணற்கு எல்லோ ரும்பகையாய் முப்படியே உள்ள முறைநூற் படியாலே வந்து பிறந்தார்காண் மாயவரு மம்மானை இப்படியே ராமர் ஏற்ற தசரதற்கு அப்படியே பிறந்து அங்கிருந்தா ரம்மானை சீதா கல்யாணம் சீதை வளர திருவில்லுந் தான்வளர கோதைக் குழல்சீதைக் கோமான் மிகவளர சிராமர் பிறப்போர் சிறப்பாய் வளர்ந்திடவே 320 இராமர் குலங்கள் இரகசிய மாய்வளர அரக்கன் கொடுமை அண்டமள வேவளர சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே மாதை மணமிடவே மாதா மனதிலுற்றுத் தன்புரு சனோடே தையல்நின் றேதுசொல்வாள் அம்பும்வில் லும்வளர ஆயிழையுந் தான்வளர்ந்து பக்குவங்க ளாச்சே பைங்கிளிக்கு மாலையிட ஒக்குவ தென்ன உரைப்பீரென் னுத்தமரே என்று மடமாது ஏற்ற தினகரரை நின்று வணங்கி நேரிழையுஞ் சொல்கையிலே வில்லை வளைத்தல்லவோ மெல்லிமணஞ் சூடுவது வல்ல கலைக்கோட்டு மாமுனியைத் தான்வருத்தி இன்னபடி யீதென்று எடுத்துரைக்க மாமுனியும் அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும் பூரா சமான புவியைம்பத் தாறிலுள்ள இராசாதி ராசரெல்லாம் இப்போ வரவழைத்து வில்லை வளைத்தவர்க்கு மெல்லிமணஞ் சூட்டுமென்று சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியைக் கண்டுநின்று மாமுனியும் கண்ணனார்க் கேதுரைப்பான் பண்டு உனக்குப் பரம சிவனாரும் 340 வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்குச் செல்லந்த மன்னன் தினகரானர் தன்மகட்கு இன்று கலியாணம் இப்போது அங்குசென்றால் பண்டு அமைத்த பலனுனக்குக் கிட்டுமிப்போ என்று கலைக்கோட்டு மாமுனியுந் தானேகி சென்றான் தினகரரின் செல்வி மணந்தனிலே அன்றைம் பத்தாறு அரசருக்கு மாளனுப்பி தேசாதி தேசர் திசைவென்ற மன்னரெல்லாம் மேசாதி யானோரும் மேவுந்தெய் வேந்திரனும் இராவண சூரன் இராமர்முத லானவரும் இராமர்குல ராசாதி நல்லமன்னர் வந்தனராம் வில்லை வளைத்து வில்லில் நாண்பூட்டாமல் முல்லைமன்ன ரெல்லாம் முகம்வாடிப் போயிருந்தார் இராம ரெடுத்து இராம சரமேற்றி சிராமர் மணஞ்செய்தார் சீதைத் திருமாதை மணம் முகித்துவானோர் மங்களகீ தத்தோடே துணைவர் தலைவரொடு சென்றா ரயோத்தியிலே அயோத்தியா புரியில் ஆனதம்பி மாரோடும் கையேற்று வந்த கன்னி திருவோடும் ஸ்ரீராமர் வனவாசம் வாழ்ந்திருக்கும் நாளில் மாதா கைகேசியம்மை 360 தாழ்ந்தமொழி சொன்னதினால் தம்பி பரதனையும் நாடாள வைத்து நல்லஸ்ரீ ராமருந்தான் கூடவொரு தம்பியோடும் குழல்சீதை மாதோடும் நாடி நடந்தார் நல்லவன வாசமதில் வாடிவந்து கானகத்தில் வாழ்ந்திருக்கும் நாளையிலே லட்சுமண ருமங்கே ஏற்றகனி தான்பறிக்கக் கட்சியுடன் நடந்து காட்டில் மிகப்போகச் சூர்ப்பநகை தன்மகனும் துய்ய தவசுநிற்க ஆர்ப்பரவா யீசர் ஆகாசத் தேவழியே வாளை அயச்சார் வாய்த்தபர மேசுரரும் தாழ வரும்போது தாமனந்த லட்சுமணர் கண்டந்த வாளைக் கைநீட்டித் தான்பிடித்துத் துண்டம் விழஆலைத் துஞ்சிவிழ வெட்டினர்காண் பட்டந்த ஆலும் படபடெனச் சாய்ந்திடவே வெட்டந்து வீழ்ந்தான் மீண்டுதிரம் பாய்ந்ததுவே அரக்கன்தாய் கண்டு அலறி வெகுண்டெழுந்து இரக்கமில்லாச் சூர்ப்பநகை இலட்சுமண ரைத்தேடி தேடி ஸ்ரீராமர் சீர்பாதங் கண்டணுகி நாடியெனைத் தாவுமென்று நாணமில்லா தேயுரைத்தாள் என்பாரி யிங்கே இருக்கவே வேறொருவர் 380 தன்பாரி தன்னைத் தான்விரும்பேன் போடியென்றார் போடிநீ யென்ற புத்திதனைக் கேட்டரக்கி தேடியே லட்சுமணரைச் சேரவுற வாடிநின்றாள் உறவாடி நின்ற ஒயிலை யவரறிந்து பறபோடி யென்று பம்பத்தன மூக்கரிந்தார் மூக்கு முலையும் முகமும் வடிவிழந்து நாக்குரைக்க வாடி நாணங்கெட்டத் தீயரக்கி தன்னுடனே கூடித் தமய னெனப்பிறந்த மன்னன்ரா வணன்தமக்கு வகையா யுரைக்கலுற்றாள் காட்டி லொருபெண் கமலத் திருமகள்போல் நாட்டிலொவ்வாக் கன்னி நான்கண்ட தில்லையண்ணே உன்றனக்கு ஆகுமென்று உற்றவளை நான்பிடித்தேன் என்றனுட மூக்கரிந்தோர் இருவருண் டல்லாது மற்றொருவ ரங்கே வாழ்ந்திருக்கக் கண்டதில்லை கற்றொ ருவர் காணாது கையிலம்பு காணாது மருவனைய அண்ணேவுன் வாய்த்த விரலதிலே ஒருயிறைக்கே வுண்டு உற்றஅவர் தன்னுயரம் என்றந்த அரக்கி ஈனம்பல துரைக்க அன்றந்த ராவணனும் ஆகாசத் தேரேறிப் பிச்சைக் கெனவே புறப்பட்டான் காடதிலே 400 அச்சமில்லா லட்சுமணர் ஆனஸ்ரீ ராமருமாய் மானின் பிறகே மனம்வைத்து நின்றிடவே வானின் செயலால் வானவர்கள் பார்த்திருக்க நாரா யணர்தேவி நல்லதிரு லெட்சுமியை ஏராத பாவி இலச்சைகெட்டத் தீயரக்கன் தேரிலே அம்மைதனைத் திருடிக்கொண் டேகினனாம் பாரிலே வுள்ள பட்சி பறவைகளும் கண்டு பதறிக் கதறிமிக அழவே அண்டர் முனிதேவர் எல்லோருந் தாமழவே மான்வேட்டையாடி மாரீசனை யறுத்துத் தான்வேட் டையாடும் தகையாலே தம்பியுடன் வந்தார்காண் லட்சுமியும் வாழ்ந்திருக்கு மண்டபத்தில் பந்தார் குழலனைய பாவையரைக் காணாமல் கலங்கி மிகவாடி கண்ணீர் மிகச்சொரிய மலங்கியே லட்சுமணர் மண்ணிற் புரண்டழுதார் என்னே மணியே எனைப்பெற்ற மாதாவே பொன்னே யமுதே பெற்றவளே யென்றழுதார் இராமர் முகம்வாடி நாயகியைத் தான்தேடி ஸ்ரீரா மர்கலங்கி சினேக முடனழுதார் மனுவாய்ப் பிறக்க மனுவுடம்பு கொண்டதினால் 420 தனுவா னதையடக்கித் தானே புலம்பலுற்றார் அன்ன மயிலோடும் அன்றில் குயிலோடும் புன்னை மலரோடும் புலம்பி மிகவழுதார் வன்னமுள்ள யானை வாய்த்தசிங் கத்தோடும் பெண்ணமுதைக் கண்டீரோ என்று புலம்பலுற்றார் இப்படியே ராமர் இளைய பெருமாளும் அப்படியே சொல்லி அழுதழுது தான்வாடிச் சோலை மரத்தின்கீழ்ச் சோர்ந்து முகம்வாடி மாலவருந் தம்பி மடிமேல் துயின்றிருக்க அஞ்சனை யாள்பெற்ற அனுமனதில் வந்தடைய சஞ்சல மேதென்று சாரதியுங் தெண்டனிட மின்செறியு மாயன் விழித்தவனைத் தானோக்கிக் கவசகுண்ட லமணிந்த கார்குத்தா யாரெனவே உபசரித்துச் சொன்ன உச்சிதத்தைத் தானறிந்து அய்யரே யென்னை ஆட்கொண்ட நாயகமே மெய்யரே நீங்கள் மெலிந்திருப்ப தேதெனவே கேட்க அனுமன் கிருபைகூர்ந் தெம்பெருமாள் சேர்க்கையுடன் சொன்னார் சீதையுட தன்வளமை ஏற்கை யாகக்கேட்டு இயலுனுமன் ஏதுசொல்வான் நல்லது அடியேன் கேட்டேன் நானினி வுரைக்கும் வாறு 440 சொல்லவுங் கேட்பீ ரெந்தன் திருவடை யாளஞ் சொன்னீர் வல்லவர் தகப்ப னானீர் வரந்தர வேணு மிப்போ புல்லர்வா ழிலங்கை சுட்டு அம்மையைக் கூட்டி வாறேன் என்தாய் மொழிந்த இயலடையா ளத்தாலே முன்தானே பெற்ற முதல்வர்தா னென்றனக்கு அய்யா தானாகும் அடைக்கலமே யாமடியார் பொய்யாம லென்றன் பேரனுமன் கண்டீரே இலங்கை தனைச்சுட்டு அம்மையைக் கூட்டிவர மலங்காதே போவென்று வாக்கருள வேணுமையா சுக்ரீவன் சாம்புவனும் சுத்தமுள்ள வீரர்களும் ஒக்கவொரு முகமாய் உடையோன் பதமடைய கெருடன் மிகமறித்துக் கேலியிட்ட ஞாயமதும் திருடன் கொடிய தீபாவி ராவணனும் அம்மை தனைக்கொண்டு அவன்கோட்டை யானதிலே செம்மையில்லாப் பாவி சிறையில்வைத்த ஞாயமதும் எல்லா மறிந்து எம்பெருமாள் கோபமுற்று வெல்லத் துணிந்தார் மிகுபடைகள் தான்திரட்டி எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களையும் முழுதும் வருத்தி ஒப்பமிட் டெம்பெருமாள் விசுவகம் மாளனையும் விரைவா யருகழைத்து 460 வசுவாசு மைந்தன் வாய்த்த அனுமனையும் அனுமன் தனையேவி ஆன மலையெடுத்துத் துனும னுடனே தோயக் கடலதுக்குள் கோட்டைய திட்டுக் குக்குளித் தங்கேகி ஓட்டனாய் விட்டார் உற்ற அனுமனையும் அனுமன் தூது பூட்டமுடன் வாயு புத்திரனுந் தான்மகிழ்ந்து நாட்ட முடனிலங்கை நாடாளும் பாதகனைக் கண்டு முடுகிக் கருத்தழியத் தான்பேசி கொண்டு இலங்கை குப்பையிடத் தீக்கொளுத்தி மால்கொடுத்த வாளி மாதுகையி லேகொடுத்து வால்கொண்டு வீசி வனங்காவு தானழித்துக் கேதார மாமலையும் கீர்த்தியுட னேகுதித்துப் பாதார மென்று பணிந்தானே ராமரையும் இராவணன் பாடு அரக்க னவன்பேசும் அநியாயந் தான்கேட்டு இரக்கமுள்ள எம்பெருமாள் எழுந்தார் படைக்கெனவே படைக்கு இவர்நடக்க பார்த்துவி பீஷணனும் அடைக்கல மென்று அவர்பாதஞ் சேர்ந்தான்காண் சேர்ந்த வுடனே திருமால் மனமகிழ்ந்து ஓர்ந்த படையோடே உடன்யுத்தஞ் செய்திடவே அரக்கன் படையும் அச்சுதனார் தன்படையும் 480 இரக்க மில்லாமல் இருபேருஞ் சண்டையிட்டார் படைபொருது வெல்லாமல் பத்துத்தலை யுள்ளோனும் கடகரியுந் தோற்றுக் கையிழந்தா னம்மானை பத்துத் தலையும் பார்மீதி லற்றுவிழ மற்று நிகரொவ்வா மாயத் திருநெடுமால் அரக்க னுயிரு அங்குமிங்கும் நிற்கையிலே இரக்கமுடன் நின்றங்(கு) ஏதுரைப்பா ரம்மானை கேளாய்நீ ராவணா கிரேதா யுகந்தனிலே பாழாய் இரணியனாய்ப் பாரில் பிறந்திருந்தாய் உன்னிடுக்கங் கண்டு உன்புதல்வ னானாகி தன்னடுக்கல் வந்துவுன்னைச் சங்காரஞ் செய்தேனான் மகனாய்ப் பிறந்து வதைத்தேனான் பாரறிய பகை நானென்று பண்பு மிகக்கூற அப்போது நீயும் அன்றுரைத்த வார்த்தையினால் இப்போது உன்குலங்கள் எல்லாங் கருவறுத்து நாணமில்லா துன்னிலங்கை நகரிதீ யாலழித்துப் பாணமொன்றா லுன்னைப் படஎய்தேன் கண்டாயே அல்லாம லுன்றனக்கு அங்கமொரு நூறு எல்லாரும் வெல்லா ஈசன் கயிலையதும் எடுத்த பெலமுமுண்டே ஈரஞ்சு சென்னியுண்டே 500 கடுத்த பெலமுள்ள காலாட்டுகள் பொரவுண்டே இந்திரனை வென்ற ஏற்ற புதல்வருண்டே சந்திரனுஞ் சூரியனும் தன்னிடத்தி லுண்டல்லவோ மூணுலோ கத்தாரும் உன்னிடத்தி லுண்டல்லவோ ஆணுவங்கள் பேசினையே அம்பொன்றில் மாண்டாயே கோலுபோ லேயுயர்ந்த கொடும்பாவி நீகேளு நாலு முழமல்லவோ நல்லதலை ஒன்றல்லவோ என்கை வாளி எடுத்துவிடத் தாங்காமல் உன்கை காலுமற்று உயிரழிந்து மாண்டாயே பத்து மலைபோலே பருந்தலைகள் பெற்றதெல்லாம் இத்தலத்தில் கண்டிலனே என்கையால் மாண்டாயே மாண்டாய்நீ யென்று வசைகூறக் கேட்டரக்கன் ஏண்டா மழுப்புகிறாய் இராமனோ கொல்லுவது தம்பி யெனப்பிறந்து சத்துருப்போல் தான்சமைந்து என்பெலங்க ளெல்லாம் எடுத்துரைத்தா னுன்றனுக்கு ஆனதா லென்னுயிரு அடையாளம் பார்த்துலக்காய் ஊனமுற எய்தாய் உயிரழிந்தே னல்லாது நீயோடா என்பெலங்கள் நிலைபார்த்துக் கொல்லுவது பேயா நீபோடா புலம்பாதே யென்னிடத்தில் அப்போது மாயன் அதிகசீற் றத்துடனே 520 ஒப்பொன் றில்லாதார் உரைப்பார்கா ணம்மானை உன்னுட தம்பி யாலே உயிர்நிலை யறிந்து யானும் என்னுட சரத்தால் கொன்றேன் என்றியம்பிய அரக்கா வுன்னைப் பின்னுகப் பிறப்பு தன்னில் பிறப்புநூ றோடுங் கூடி அன்னுகந் தன்னில் தோன்ற அருளுவே னுன்னை நானே என்னொரு தம்பி யாலே என்னையுங் கொன்றா யென்று தன்னொரு மதத்தால் நீயும் சாற்றிய அரக்கா வுன்னைப் பின்னொரு யுகத்தில் நூறு பிறப்புடன் பிறவி செய்து இன்னொரு ஆளின் கையால் இறந்திடச் செய்வே னுன்னை என்னுடைய தம்பி யாலேதா னென்னுயிரை உன்னுடைய அம்பால் உயிரழிந்தே னல்லாது என்னைநீ கொல்ல ஏலாது என்றுரைத்தாய் உன்னை நானிப்போ ஒருபிறவி செய்யுகிறேன் என்றுசொல்லி மாயன் எண்ணவொண்ணாக் கோபமுடன் அன்று கயிலை அரனிடத்தில் சென்றிருந்து முன்னேயுள்ள துண்டம் ஓரிரண்டு உள்ளதிலே ஒன்னேயொரு துண்டம் ஒருநூறு பங்குவைத்துத் துவாபர யுகம்வகுத்துத் துரியோதன னெனவே கிரேதா யுகமழித்துக் கீழுலகில் தோணவைத்தார் துவாபர யுகம் பாவி பிறக்க பச்சைமால் தான்கூடத் 540 தாவிப் பிறந்த தம்பியர் மூவரையும் விபீஷணனும் நல்ல வெற்றிச்சாம் புவனையும் அபூருவமாய்க் குந்தியர்க்கு ஐவரையும் பிறவிசெய்தார் ஐவரையும் பூமி அதிலே பிறவிசெய்து மொய்குழ லான மெல்லி திரௌபதியாய் அம்மை திருக்குழலில் அமர்ந்திருந்த பொற்சடையை நம்மை விபீஷணற்கு நல்மக ளாக்கிவைத்து அரக்கர் குலமறுக்க அம்மை யெழுந்தருளி இரக்கர் புரமேகி இருக்குமந்த நாளையிலே தோழியாய் முன்னிருந்த துய்யத் திரிசடையை நாழிகை தன்னில் நாதன் பிறவிசெய்தார் பின்னுமந்த மாயன் பெரியோ னடிவணங்கி நின்னுகரங் குவித்து நெடியோ னுரைத்தனராம் எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களுடன் முழுது மிலங்கை முடித்துநான் நிற்கையிலே என்படைக ளான எழுபதுவெள் ளமதிலும் உன்படைக ளெல்லாம் உயிரழிந் தாரெனவே ஆராய்ந்து என்படையை அளவிட்டு நிற்கையிலே தோராத மன்னன் துடியானச் சேவகன்தான் ஒருவன் தனைக்காணேன் உடனே மறலிதனை 560 வருக அழைத்து வகையே தெனக்கேட்க நானில்லை யென்றே நமன்தான் மிகவுரைக்க ஏனில்லை யென்று இறுக்கிநான் கேட்கையிலே அய்யாவே வும்முடைய ஆளான வீரனைத்தான் கையால முள்ள கும்பகர்ண னொருசமரில் பிடித்து நசுக்கிப் பிசைந்து திலதமிட்டான் அடுத்துநின்று பார்த்து அரக்க னவனுயிரைக் கொண்டேகி நானும் கொடுநரகில் வைத்திருக்கேன் என்றே தான்மறலி இத்தனையுஞ் சொன்னான்காண் ஆனதால் கும்ப கர்ண னவன்தனையும் ஈனமில்லாக் கஞ்சன் எனப்படையு மிவ்வுகத்தில் என்றே தான்மாயன் இதுவுரைக்க ஈசுரரும் அன்றே தான்கும்பனையும் அப்படியே தான்படைத்தார் படைத்த சடமதுக்குப் பரம னுயிர்கொடுக்கச் சடத்தை மிகயெழுப்பித் தானனுப்ப ஈசுரரும் துவாபர யுகமெனவே தொன்முறையைத் தான்பார்த்துத் தவறாத வண்ணம் தான்படைத்தா ரெல்லோரும் அப்படியே ஈசர் அன்று படைத்தபடி இப்படியே வந்து இவர்கள் பிறந்தனராம் முன்னுள்ள பீடத்து உதிரமெல்லாந் தானெழுந்து 580 அன்றுள்ள பாவி அவன்கூடத் தானிருக்க அரக்க னிராவணனும் அதிகத்துரி யோதனனாய் மூர்க்கன் பிறப்போர் ஒருநூறு பேரோடு வந்து பிறந்தான்காண் வையகத்தி லம்மானை சந்துபயில் மாயன் தன்னோ டுடன்பிறந்த தம்பி பரதன் சத்ருக்கன் லட்சுமணன் நம்பி விபீஷணனும் நல்லதொரு சாம்புவனும் ஐவரும் பூமிதனில் அப்போது தோன்றினராம் தெய்வத் திரிசடையும் தேவி துரோபதையாய் மெய்வரம்பா யுள்ள மேன்மை யதின்படியே ஐவருட தேவியென்று ஆயிழையுந் தோன்றினளாம் கும்பகர்ண னென்ற கொடும்பாவி கஞ்சனுமாய் வம்பகனாய் வந்து மதுரை தனில்பிறந்தான் இப்படியே ஐபேரும் ஏற்றரிய நூற்றுவரும் அப்படியே பங்கு வகைபாதி யாய்ப்பிறந்தார் இராச்சியத்தி லுள்ள இறைதான முள்ளதெல்லாம் தராச்சியமாய்ப் பாதியெனத் தங்கள்சில நாடாண்டார் கஞ்ச னவன்பிறந்து கடிய கொடியவனாய் வஞ்சனையும் பெற்ற மாதா பிதாக்களையும் சிறையதிலே வைத்துத் தேசமதைத் தானாண்டு 600 இறைமிகுதி வேண்டி இராச்சியத்தை யாண்டனனே ஆனதா லவனுடைய அம்புவியி லுள்ளோர்கள் ஈனதுன்ப மாகி இருந்தார் பயமடைந்து தேவரையும் வானவரைத் தேவேந்தி ரன்வரையும் மூவரையுஞ் சற்றும் முனியாமல் மாபாவி தெய்வ மடவாரைத் திருக்கவரி வீசிடவே வைவ னவன்பிடித்து வாவெனவே ஆள்விடுவான் வருணனொடு வாயுவையும் வலுவிலங்கில் தான்போட்டு அருணன் முதலாய் அந்தி வரும்வரையும் வேலை யவன்கொண்டு விடுவா னவன்தொழிலாய் மாலை நினையான் மறையைமிக நினையான் ஆலயங்கள் கோயில் அழிந்த மடங்கள்வையான் சாலயங்கள் செய்யான் தர்மசிந்த னைகள்செய்யான் அந்தணர்க்கு மீயான் அன்னதா னங்களிடான் பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்தமக் களியான் ஆவு தனையடைத்து அதுக்கிரைகள் போடாமல் கோவுகளைக் கொல்வான் கொடும்பாவி நெட்டூரன் கண்ட வழக்குரையான் கைக்கூலி கேட்டடிப்பான் சண்டனைக்கண் டாருவென்பான் தன்னைப்பா வித்திருப்பான் எம்மைப் படைக்க ஏலுமோ மற்றொருவர் 620 நம்மைப் படைத்ததுவும் நான்தா னெனவுரைப்பான் இப்படியே கஞ்சன் எதிரியில்லை யென்றுசொல்லி அப்படியே மீறி ஆண்டான்கா ணம்புவியை மேலோகந் தன்னில் மிகுத்ததெய்வக் கன்னியரில் வாலோக மான வாய்த்தகன்னி தேவகியும் உரோகணியா ளென்னும் நுதல்மடவா ரண்டுபேரும் புரோகணிய மான பொய்கைநீர் தானாடி அக்காளுந் தங்கையுமாய் அவர்கள்ரண்டு மாமயிலும் மிக்கான பட்டுடுத்து மேவிவழி தான்வரவே மாயன் சிறுமதலை வடிவெடுத்துத் தானழவே ஆயனுட கோலம் அறியாமல் மங்கையர்கள் தெய்வகியும் பார்த்துச் சொல்லுவாள் தங்கையிடம் நெய்நிதியக் கன்னி நெடியவிழி ரோகணியே இன்னா அழுது இதில்கிடக்கும் ஆண்மதலை பொன்னான பூமியிலும் பெண்ணே நான்கண்டதில்லை காலில்சிவ சக்கரமும் கையில்மால் சக்கரமும் மேலில்சத்தி சக்கரமும் விழிசரசு சக்கரமும் வாயு பகவான் வடிவுமிகப் போலே ஆயும் பலகல்வி ஆராய்ந்த அச்சுதர்போல் கண்கொள்ளாக் காட்சி கைமதலை தன்னழகு 640 விண்கொள்ளாக் காட்சி மெல்லியரே யிம்மதலை இம்மதலை தன்னை எடுத்துநாம் தாலாட்டி பொன்மதலை தன்னைப் போட்டுவைத்துப் போவோம்நாம் என்றுசொல்லி மாதர் இருபேருஞ் சம்மதித்து வண்டுசுற்று மெல்லி வந்தெடுத்தா ரம்மானை மதலை தனையெடுத்து மார்போடு தானணைத்து குதலை மொழியமர்த்திக் கோதைரண்டு மாமயிலும் கயிலை யதுக்கேகி கறைக்கண்டர் பாதமதில் மயிலனைய மாமயிலார் வந்தார்கா ணம்மானை வந்த மாடவர்கள் மார்பி லமுதிளகி அந்தப் பரமே சுரனா ரவரறிந்து கன்னியரே உங்கள் கற்பு அகன்றதென்ன மின்னித் தனங்கள் மெல்லியுட லானதென்ன பச்ச நிறமேனி பால்வீச்சு வீசுதென்ன அச்சமில்லாக் கொங்கை அயர்ந்துஉடல் வாடினதேன் ஏதெனவே சொல்லுமென்று ஈசுரனார் தான்கேட்க சூதகமாய் நின்ற தோகைபோல் வாடிநின்றார் வாடியே மடவார் தாமும் மார்பதில் துகிலை மூடி கோடியே அயர்ந்து ஏங்கிக் குருவதைப் பாரா வண்ணம் நாடியே தாழ்ந்து பெண்கள் 660 நாணியே நின்ற தன்மை தேடியே மாயன் செய்தச் செயலென அறிந்தா ரீசர் அறிந்தார் மாயன் சேயாகி அழுதே இரங்குங் குரலதினால் செறிந்தார் குழலார் இவர்கள் சென்று சேர்த்தே யெடுத்து அணைத்ததுவும் பறிந்தே யிவர்கள் நாணினதும் பால்தான் தனத்தில் பாய்ந்ததுவும் அறிந்தே கன்னி யிருவரையும் அழித்தே பிறவி செய்தனராம் பிறவி யதுதான் செய்யவென்று பெரியோ னுரைக்கப் பெண்ணார்கள் அறவி யழுது முகம்வாடி அரனா ரடியை மிகப்போற்றித் திறவி முதலே திரவியமே சிவமே உமது செயலைவிட்டு இறவி யானா லெங்களுக்கு இனிமேல் பிறவி வேண்டாமே வேண்டா மெனவே மெல்லியர்கள் விமல னடியை மிகப்போற்றி மாண்டா ரெலும்பை மார்பணியும் மறையோன் பின்னு மகிழ்ந்துரைப்பார் தூண்டாச் சுடரோன் திருமாலைச் சேயென் றெடுத்தச் செய்கையினால் ஆண்டா ருமக்கு மகனாகி அதின்மேல் பதவி உங்களுக்கே மெல்லியரே உங்களுட மெய்வரம்பு தப்பினதால் செல்ல ஏதுவாச்சு சீமையிலே யம்மானை என்றே அரனார் இருகன்னி யோடுரைக்க அன்றே மடவார் ஆதிதனை நோக்கி ஆதியே நாதி ஆனந்த மெய்ப்பொருளே சோதியே நாதி சொரூபத் திருவிளக்கே அல்லாய்ப் பகலாய் ஆரிருளாய் நிற்போனே 680 வல்லாய்ப் புவியை வார்த்தையொன் றாற்படைத்த ஆதிப் பொருளே அனாதித் திருவுளமே சோதிப் பொருளே சொல்லொணா தோவியமே எட்டாப் பொருளே எளியோர்க் கெளியோனே முட்டாத செல்வ முதலே முழுமணியே கண்ணுள் மணியே கருத்தினுள் ளானவனே பெண்ணு மாணாகிப் பிறப்பில்லா நின்றோனே இறப்புப் பிறப்பில்லாத எளியோர்க் கெளியோனே பிறப்பு இறப்பில்லாத பேசமுடி யாதவனே கருவிதொண்ணூற் றாறும் காவலைந்து பேருடனே உருவு பிடித்து உயிர்ப்பிறவி செய்வோனே மூவரு முன்றன் முடிகாண மாட்டாமல் தேவருந் தேடித் திரிந்தலைய வைத்தோனே மவ்வவ் வாகி வருந்தியவ்வும் ஒவ்வாகி செவ்வவ் வாய்நின்ற சிவனே சிவமணியே மாய னெடுத்த மகவான கோலமதை நேய மறியாமல் நெறிதவறிப் போனதினால் பின்னேநீ ரெங்களையும் பிறவிசெய்ய வேண்டாங்காண் எந்நேரங் கயிலை இப்பூமி யானதிலே தெய்வப் பசுப்போல் தேவரீ ரெங்களையும் 700 மெய்யறிவு கூடி மிகப்புடையு மேலோனே அல்லாதே போனால் அடியார்க ளெங்களையும் இல்லாதே செய்யும் இனிப்பிறவி வேண்டாங்காண் அம்மை உமையாள் அருகே மிகஇருந்து உம்மையும் போற்றி உம்மூழி யங்கள்செய்து பூவுலகில் நாங்கள் பெண்ணாய்ப் பிறந்ததுண்டால் பாவிகட்கு வேலைப் பண்ணி முடியாதே பூவு முடித்துப் பூமேடை யும்பெருக்கி நாவுலகு மெய்க்க நல்லகவி தான்பாடி தம்புரு வீணை சப்தக் குழலுடனே இன்புருக ராகம் இசைந்தமுறை தானிகழ்த்தி நரசென்மம் வாழும் நசுரக் குலங்களிலே அரசேநீ ரெங்களையும் அழுந்தப் படையாதேயும் இப்படியே கன்னி இரங்கி யழுதிடவே அப்படியே கன்னி அவர்களுக் காதியுந்தான் சொல்லுவார் வேதச் சுடரோ னதிசயித்து நல்லதுகாண் பெண்ணே நம்மைரண்டுஞ் சொல்லாதே மாயன் துவாபர வையகத்தில் போய்ப்பிறக்க வாயமிட்டா ருங்களையும் மாதா வெனவாக்க நாமென்ன செய்வோம் நவ்விமால் செய்ததற்குப் 720 போமென் னஈசர் பிறவிசெய்தா ரம்மானை வாயு மகாதேவன் வடிவென்ற இச்சையினால் ஆசையா லுங்களுக்கு அவனே புருஷனென்றார் சங்கு சரங்கொண்ட தம்பியென்ற இச்சையினால் அங்குப் பகவதியும் அச்சுதரு முங்களுக்கு மதலையென வந்துதிப்பார் வையமது கொண்டாட குதலை மொழியாரே கொம்பே றிடையாரே விலங்குச் சிறையும் மிகுசிறையு முங்களுக்கு மலங்குவது மெத்த மாய்ச்சலுண் டாகியபின் ஸ்ரீகிருஷ்ண னாகத் திருமா லுதித்தபின்பு குறுக்கிட்ட தோசம் கொடுமை மிகத்தீர்ந்து பின்னே பதவிப் பேறுண்டு முங்களுக்கு மின்னே ரொளியை விமலன் பிறவிசெய்தார் பிறவியரன் செய்யப் பிறந்தார்கள் பூமியிலே திறவியது விட்டுத் தேவகியும் ரோகணியும் மதுரைதனில் வந்து மாபாவிக் கஞ்சனுக்கு இருதையல் மாமயிலார் ஏற்ற பிறப்பெனவே கூடப் பிறந்தால் கொடியதோ சமெனவே தேட வொருராசன் சிறுவி யெனப்பிறந்தார் பிறந்தே தான்கஞ்சனுக்குப் பிறப்பெனவே பேசும்வளம் 740 சிறந்தே யிவர்கள் திருத்தமாய் வாழுகையில் இப்படியே கஞ்சன் இவர்களிரு தங்கையையும் அப்படியே கூட்டி அவன்வேட்டை யாடிவர மாமுனிவன் தனக்கு வாய்த்திருந்த மாம்பழத்தைத் தாமுனிந்து கஞ்சன் தானக்கனி பறித்துத் தங்கையர்க்குத் தானீந்தான் சயோகமுனி யறிந்து மங்கையர்க்கு வந்த மகனா லழிவையென்று மாயனுட ஏவலினால் மாமுனியு மப்போது பாயமுள்ள கஞ்சனுக்குப் படுசாப மிட்டனனே சாபமது கஞ்சன் தானறியா வண்ணமுந்தான் பாவமிக தான்வருத்தி மிகுத்தகே டுள்ளகஞ்சன் சோதிரியங் கேட்கத் தொடர்ந்தான்கா ணம்மானை அப்போது சோதிரிஷி அந்தமுனி சாபமதால் எப்போது ஆகிடினும் இடுக்கம்வரு மென்றுரைத்தான் சோதிரியங் கேட்டுத் துக்கமுற்றுக் கஞ்சனுந்தான் வேதி யனையனுப்பி மிகுத்தகே டுள்ளகஞ்சன் கலியாணஞ் செய்யக் கருத்தல்ல வென்றுசொல்லி வலியான கஞ்சன் வைத்திருந்தா னம்மானை அந்தநல்ல செய்தி அறிந்தந்த நாரதரும் 760 வந்துகஞ் சன்தனக்கு வளப்பமெல்லாஞ் சொல்லலுற்றார் கேளாய் நீகஞ்சா கீர்த்தியுள்ள சாஸ்திரங்கள் வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில் தர்மந் தலைகெடுங்காண் சாஸ்திரத்துக் கேராது வற்மம் வந்துசிக்கும் மாரியது பெய்யாது கோத்திரத்துக் கேராது குடும்பந் தழையாது சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம் மானம் வரம்புகெட்டு மனுநீதி தானழிந்து ஊனமடா அக்குடும்பம் உலகத்துக் கேராது கோட்டை யழியும் குளங்கரைகள் தானிடியும் நாட்டை முடிக்குமடா நல்லகன்னி காவல்வைத்தால் பொன்னான சீதை பிலத்தகற் பானதிலே கண்ணான இலங்கை கரிந்ததுவுங் கண்டிலையோ இப்படியே வேதம் இயம்பி யிருப்பதினால் அப்படியே பெண்ணார் அவர்கள்ரண்டு பேரையுந்தான் காவலிட்டு வைத்தால் கற்பதினா லுன்றனக்குப் பாவம்வந்து சுற்றும் பலிக்குமடா வேதமது ஆனதால் பெண்கள் அவர்கள்ரண்டு பேரையுந்தாம் மானமுள்ள மன்னனுக்கு மணஞ்செய்து தான்கொடுத்துக் கெற்பமது உண்டாகிக் கீழே பிறக்கையிலே 780 அப்போநீ கொன்றாலும் ஆனாலும் பாரமில்லை என்றுஅந்த நாரதரும் இத்தனையும் தான்கூற நன்று மொழியெனவே நவ்வியே கஞ்சனுந்தான் எனக்குப் படிப்புரைத்த ஏற்றவசு தேவன் தனக்கு இவர்களையும் தான்சூட்ட வேணுமென்று வேணுமென்று சீட்டோ விரும்பிவசு தேவனுந்தான் வாணுவங்க ளோடே வந்தான் மதுரையிலே தேவகியை ரோகணியைச் சிறப்பா யலங்கரித்து வைபோக முள்ளவசு தேவனையு மொப்பிவித்துச் சங்கீதத் தோடே தையல்ரண்டு பெண்களையும் மங்களத் தோடே வசுதேவன் தாலிவைத்துக் கட்டிக் கைபிடித்துக் கனசீ தனத்தோடே கொட்டித் திமிர்த்தூதும் குழலோடே வீற்றிருந்தான் வாழ்ந்திருந்து பெண்கள் வயிறு வளருகையில் ஆய்ந்தறிந்து கஞ்சன் அருவிலங்கில் வைத்தனனே தெய்வகியாளு மழுது சிந்தைமுகம் வாடிருப்பாள் மெய்யன் வசுதேவன் மிகக்கலங்கி தானிருப்பான் மங்கைநல்லாள் ரோகணியும் வாடி யழுதிருப்பாள் சங்கையுள்ள தேவர்களும் தையல்தெய்வக் கன்னியரும் 800 எல்லோருங் கஞ்சனுட இடுக்கமது தன்னாலே அல்லோரு மெத்த அறமெலிந்தா ரம்மானை இப்படியே செய்யும் இடுக்கமதுக் காற்றாமல் அப்படியே மாயனுக்கு அபயம் அமரரிட தேவர் முறையம் நிலந்தேவி ஆகாய நீர்தேவி யார்கூடி தலந்தேவி மன்னன் தனக்கே யபயமிட தேவாதி தேவர் தேவிமுறை யாற்றாமல் மூவாதி முத்தன் முழித்தார்காண் பள்ளியது கண்டுதே வாதிகளும் கன்னி புவிமகளும் விண்டுரைக்கக் கூடாத விமல னடிபோற்றி ஆதியே நாதி அய்யாநா ராயணரே சோதியே வேதச் சுடரே சுடரொளியே பத்தர்க்கு நித்தா பரனேற்றார்க் கேற்றோனே மூவர்க்கு மாதி முழுமணியாய் நின்றோனே தேவர்க்கும் நல்ல சிநேகமாய் நின்றோனே கிட்டவரார்க் கெட்டாத கிருஷ்ணாவுன் நற்பதத்தைக் கட்டவரு மட்டான கருணா கரக்கடலே உச்சிச் சுழியே உம்மென் றெழுத்தோனே அச்சிச் சுழியே அம்மென் றெழுத்தோனே அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஆதிஅ வென்றெழுத்தும் 820 நெஞ்செழுத்து மெட்டெழுத்தும் நீயாகி நின்றோனே எண்ணொருபத் தெண்ணிரண்டும் இவ்வே நடுவாக ஒண்ணெழுத்தாய் நின்ற உடைய பெருமாளே தண்டரளத் தூணாகித் தருவைந்து பேராகி மண்டலத்துள் ளூறலுமாய் மயமுமாய் நின்றோனே போக்கு வரத்துப் புகுந்துரண்டு கால்வீட்டில் நாக்குரண் டுபேசி நடுநின்ற நாரணரே அல்லாய்ப் பகலாய் ஆணாகிப் பெண்ணாகி எல்லார்க்குஞ் சீவன் ஈயுகின்ற பெம்மானே பட்சிப் பறவை பலசீவ செந்துமுதல் இச்சையுடன் செய்நடப்பு இயல்கணக்குச் சேர்ப்போனே ஒருபிறப்பி லும்மை உட்கொள்ளாப் பேர்களையும் கருவினமா யேழு பிறப்பிலுங் கைகேட்போனே ஆறு பிறப்பில் அரியேவுன்னைப் போற்றாமல் தூறு மிகப்பேசித் தொழாதபே ரானாலும் ஏழாம் பிறப்பிலும்மை எள்ளளவுதா னினைத்தால் வாழலா மென்றவர்க்கு வைகுண்ட மீந்தோனே இப்படியே ஏழு பிறப்பதிலும் உம்மையுந்தான் அப்படியே ஓரணுவும் அவர்நினையா தேயிருந்தால் குட்டங் குறைநோய் கொடியகன்னப் புற்றுடனே 840 கட்டம் வந்து சாக கழுத்திற்கண்ட மாலையுடன் தீராக் கருவங்கும் தீன்செல்லா வாய்வுகளும் காதா னதுகேளார் கண்ணே குருடாகும் புத்தியற்று வித்தையற்றுப் பேருறுப்பு மில்லாமல் முத்திகெட்ட புத்தி முழுக்கிரிகை தான்பிடித்துப் பிள்ளையற்று வாழ்வுமற்றுப் பெண்சாதி தானுமற்றுத் தள்ளையற்று வீடுமற்று சப்பாணி போலாகி மாநிலத்தோ ரெல்லாம் மாபாவி யென்றுசொல்லி வானிழுத்து மாண்டு மறலியுயிர் கொள்கையிலே நாய்நரிகள் சென்று நாதியற்றான் தன்னுடலைத் தேயமது காணத் திசைநாலும் பிச்செறிந்து காக்கை விடக்கைக் கண்டவிடங் கொண்டுதின்னப் போக்கடித்துப் பின்னும் பொல்லாதான் தன்னுயிரை மறலி கொடுவரச்சே வலியதண் டாலடித்துக் குறளி மிகக்காட்டிக் கொடும்பாவி தன்னுயிரை நரகக் குழிதனிலே நல்மறலி தள்ளிடவே இரைநமக் கென்று எட்டிப் புழுப்பிடித்து அச்சுத ரைநினையான் அய்யாவைத் தானினையான் கச்சி மனதுடைய காமாட்சியை நினையான் வள்ளிக்குந் தேவ மாலவருக் காகாமல் 860 கொள்ளிக்குப் பிள்ளையில்லாக் கொடும்பாவி யென்றுசொல்லி எவ்வியே அட்டை எழுவாய் முதலைகளும் கவ்வியே சென்று கடித்துப் புழுப்பொசிக்கும் என்றுநீ ரேழு இராச்சியமுந் தானறிய அன்று பறைசாற்றி அருளிவைத்த அச்சுதரே வானமது பூமியிலே மடமடென வீழாமல் தானவனே உன்விரலால் தாங்கிவைத்த பெம்மானே வாரி வரம்பைவிட்டு வையகத்திற் செல்லாமல் காரியமாய்ப் பள்ளி கடலில் துயின்றோனே மானம் வரம்பு மகிமைகெட்டுப் போகாமல் ஊன மில்லாதே உறும்பொருளாய் நின்றோனே சீவனுள்ள செந்துகட்குத் தினந்தோறு மேபொசிப்புத் தாவமுட னீயுகின்ற தர்மத் திறவோனே வலியோ ரெளியோர்க்கும் மண்ணூருஞ் செந்துகட்கும் கலிதீர ஞாயம் கண்டுரைக்கும் பெம்மானே சிவசெந்துக் கெல்லாம் சீவனுமாய் நின்றோனே பாவமும் புண்ணியமாய்ப் பாராகி நின்றோனே கண்ணாகி மூக்குக் கருணா கரராகி மண்ணாகி வேத மறையாகி நின்றோனே சாத்திரமும் நீயாய் சந்திரனும் நீயாகிச் 880 சூத்திரமும் நீயாய் சுழியாகி நின்றோனே நட்சேத்தி ரமாகி நாட்கிரகம் நீயாகி இச்சேத்தி ரமாய் இருக்குகின்ற பெம்மானே மெய்யனுக்கு மெய்யாய் மேவி யிருப்போனே பொய்யனுக்குப் பொய்யாய்ப் பொருந்தி யிருப்போனே இமசூட் சமாகி ஏகம் நிறைந்தோனே நமசூட் சமான நாரா யணப்பொருளே கல்வித் தமிழாய் கனகப் பொருளாகிச் செல்வித் திதுவாய்ச் செவ்வாகி நின்றோனே அண்ட பிண்டமாகி அநேகமாய் நின்றோனே கண்ட இடமும் கண்ணுக்குள் ளானோனே ஈசர் கொடுத்த ஏதுவர மானாலும் வேசமிட்டு வெல்ல மிகுபொருளாய் நின்றோனே நடக்க இருக்க நடத்துவதும் நீயல்லவோ திடக்க மயக்கம் செய்வதும் நீயல்லவோ ஆரு மொருவர் அளவிடக் கூடாமல் மேரு போலாகி விண்வளர்ந்து நிற்போனே எண்ணத் தொலையாத ஏது சொரூபமதும் கண்ணிமைக்கு முன்னே கனகோடி செய்வோனே மூவரா லுன்சொரூபம் உள்ளறியக் கூடாது 900 தேவரா லுந்தெரியாத் திருவுருவங் கொள்வோனே ஆயனே யெங்கள் ஆதிநா ராயணரே மாயனே கஞ்சன் வலிமைதனை மாற்றுமையா பாவமாய்க் கஞ்சன் பலநாளா யெங்களையும் ஏவல்தான் கொண்ட இடுக்கமதை மாற்றுமையா ஊழியங்கள் செய்து உடலெல்லாம் நோகுதையா ஆழி யடைத்த அச்சுதரே யென்றுரைத்தார் வாண னென்றகஞ்சன் மாபாவி யேதுவினால் நாணமது கெட்டு நாடுவிட்டுப் போறோங்காண் நரபால னென்ற நன்றிகெட்ட கஞ்சனினால் வரம்பா னதுகுளறி மானிபங்கள் கெட்டோமே இத்தனையுங் காத்து இரட்சிக்க வேணுமையா முத்தியுள்ள தேவர் முறையம் அபயமிட பூமா தேவி புலம்பி முறையமிட நாமாது லட்சுமியும் நன்றா யபயமிட நாரா யணர்பதத்தை நாயகியுந் தெண்டனிட்டுச் சீரான லட்சுமியும் செப்பினள்கா ணம்மானை என்னைப்போல் பெண்ணல்லவோ இவள்தா னிடுமுறையம் வன்னமுள்ள மாலே மனதிரங்கிக் காருமையா உடனேதா னாதி ஓலமிட்டுத் தேவருக்கும் 920 திடமான பூமா தேவிக்குஞ் சொல்லலுற்றார் தேவர் வேண்டுதலுக்கு இரங்கல் வந்து பிறப்போங்காண் மாபாரத முடிக்க நந்தி குலம்வளர நாம்பிறப்போங் கண்டீரே சாரமில்லாக் கஞ்சன் தனைவதைத்துப் பூமியுட பாரமது தீர்ப்போம் பாரத முடித்துவைப்போம் துவாபர யுகத்தில் துரியோ தனன்முதலாய்த் தவறாத வம்பன் சராசந் தன்வரையும் அவ்வுகத் திலுள்ள அநியாயமு மடக்கிச் செவ்வுகத்த மன்னவர்க்குச் சிநேகமது செய்வதற்கும் உங்களுக்கும் நல்ல உதவிமிகச் செய்வதற்கும் அங்குவந்து தோன்றி ஆய ருடன்வளர்வோன் போங்களென்று பூமா தேவியையுந் தேவரையும் சங்குவண்ண மாலோன் தானே விடைகொடுத்தார் கண்ணன் அவதாரம் விடைவேண்டித் தேவர் மேதினியில் தாம்போகப் படைவீர ரான பச்சைமால் தானெழுந்து ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து சோதி மணிநாதன் சொல்லுவா ரம்மானை வாணநர பாலனென்ற மாபாவிக் கஞ்சனினால் நாணமது கெட்டோமென நாடிமிகத் தேவரெல்லாம் பூமா தேவிமுதல் பொறுக்கமிகக் கூடாமல் 940 ஆமா அரியே ஆதி முறையமென்றார் முறையம் பொறுக்காமல் முடுகியிங்கே வந்தேனென்று மறைவேத மாமணியும் மகிழ்ந்துரைத்தா ரம்மானை அதுகேட்டு ஈசர் அச்சுதருக் கேதுரைப்பார் இதுநானுங் கேட்டு இருக்குதுகா ணிம்முறையம் ஆனதால் கஞ்சன் அவனைமுதல் கொல்வதற்கு ஏனமது பாருமென்று எடுத்துரைத்தா ரீசுரரும் பாருமென்று ஈசர் பச்சைமா லோடுரைக்க ஆருமிக வொவ்வாத அச்சுதரு மேதுரைப்பார் மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி பாருபா ரதமுதலாய்ப் பாரதப்போர் தான்வரையும் நாரா யணராய் நாட்டில் மிகப்பிறந்து வீரான பார்த்தன் மிகுதேரை ஓட்டுவித்துச் சத்தபல முள்ள சராசந் தன்வரையும் மற்றவ னோராறு வலியபலக் காரரையும் கொல்லவகை கூறி குருநிலையைத் தான்பார்த்து வெல்லப்பிறப் பாரெனவே வியாசர் மொழிந்தபடி அல்லாமற் பின்னும் ஆனதெய்வ ரோகணியும் நல்ல மகவான நாரா யணர்நமக்கு மகவா யுதிப்பாரென மகாபரனார் சொன்னபடி 960 தவமா யிருந்து தவிக்கிறாள் தேவகியும் இப்படியே யுள்ள எழுத்தின் படியாலே அப்படியே யென்னை அனுப்புமென்றா ரம்மானை முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப் போகாமல் தன்னை மதலை யெனஎடுக்கத் தவமா யிருந்த தெய்வகிக்குச் சொன்ன மொழியுந் தவறாமல் துயர மறவே தேவருக்கும் என்னைப் பிறவி செய்தனுப்பும் இறவா திருக்கும் பெம்மானே முன்னே வியாசர் மொழிந்தமொழி மாறாமல் என்னையந்தப் பூமியிலே இப்போ பிறவிசெய்யும் செந்தமிழ்சேர் மாயன் சிவனாரை யும்பணிந்து எந்தனக்கு ஏற்ற ஈரஞ்சாயிர மடவை கன்னியரா யென்றனக்கு கவரியிட நீர்படையும் பன்னீர்க் குணம்போல் பைம்பொன் னிறத்தவராய் ஆயர் குலத்தில் அநேக மடவாரை பாயமுற வாடிருக்கப் படைப்பீர்கா ணீசுரரே உருப்பிணியாய் இலட்சுமியை உலகிற்பிறவி செய்யும் கரும்பினிய தெய்வக் கயிலாச மாமணியே சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும் மெத்தவரம் பெற்ற மிகுவசுரர் தங்களையும் எல்லோரையு மிப்பிறவி இதிலே வதைத்திடவே 980 அல்லோரை யும்பிறவி ஆக்கிவைய்யு மென்றுரைத்தார் என்றனக்கு நல்ல ஏற்ற கிளைபோலே விந்து வழிக்குலம்போல் மிகுவாய்ப் படையுமென்றார் இப்படியே மாயன் இசையஅந்த ஈசுரரும் அப்படியே பிறவி அமைக்கத் துணிந்தனராம் துணிந்தாரே மாயன் தொகுத்ததெல்லா மாராய்ந்து வணிந்தார மார்பன் வகைப்படியே செய்யலுற்றார் தெய்வகியாள் வயிற்றில் திருமால் பிறந்திடவே ஐவர்க் குறுதியிட அச்சுதருந் தோன்றுவாராம் கலக்கமுடன் விலங்கில் கவிழ்ந்திருந்த மாதுவுட மலக்கமது தீர மலரோன் பிறக்கலுற்றார் ஐவர்க் குபகாரம் அன்பாகச் செய்திடவும் தெய்வகிக்கும் ரோகணிக்கும் சிவகெதிக ளீவதற்கும் கஞ்சனுட வலுமை கட்டழித்துக் கொல்வதற்கும் விஞ்சவரம் பெற்று வீறுசெய்யும் பேர்களையும் சத்த பெலமுள்ள தத்துவங்க ளுள்ளோரைத் தத்தியுள்ள விமனையும் தன்னா ளாக்கிவிட்டுக் கொல்வதற்கும் தேவருட கூர்முறையந் தீர்ப்பதற்கும் வெல்வதற்கும் பூமியுட விதனமதை மாற்றுதற்கும் முன்னே வியாசர் மொழிந்த முறைப்படியே 1000 தன்னிக ரில்லாத தையல்தெய்வ கிவயிற்றில் பிறக்கிறா ரென்று பெரியோர்கள் கொண்டாட இறக்கிறார் பொல்லாதார் என்றுமிகக் கொண்டாட முன்பெற்ற பிள்ளை முழுதுமவன் கொன்றதினால் வன்பற்ற மாது மங்கையந்தத் தெய்வகியும் மெத்த மயங்கி முன்னம்விதி தன்னைநொந்து கர்த்தன் செயலோ கரியமால் தன்செயலோ என்றுஅந்தக் கன்னி இருபேருந் தான்புலம்பி விண்டு சொல்லாத விதன மிகவடைந்து அழுது கரைந்து அவளிருக்கும் வேளையிலே பழுதில்லா தாயன் பாவை வயிற்றிலுற்றார் பகவதியு மங்கே பாவையசோ தைவயிற்றில் சுகபதியு மங்கே தோன்றினள்கா ணம்மானை மாயனந்தத் தெய்வகியாள் வயிற்றிலுற்ற தவ்வளவில் தேசமெல்லாம் நன்றாய்ச் செழித்ததுகா ணம்மானை கெற்பமுற்ற தெய்வகியாள் கெஞ்சுகவா யஞ்சுகமும் நற்பதமாய்த் தேகம் நாட்டமுடன் கோட்டியுமாய் பத்துமாதந் திகைந்து பாலன் பிறந்திடவே சுற்றுமதிற் காவல்வைத்த துடியோர் வலுவிழந்து வசுதேவன் காலிலிட்ட வாய்த்த விலங்குமற்று 1020 விசுவாச மாதருட விலங்கது தானுமற்றுத் தாள்திறந்து நேரம் தான்விடியு முன்னாகக் கண்டாளே தெய்வகியும் கனத்த மதலைதனை கொண்டாடித் தானெடுத்துக் கூறுவா ளம்மானை கண்ணணோ சீவகனோ கரியமுகில் மாயவனோ வண்ணனோ தெய்வேந்திரனோ மறையவனோ தூயவனோ அய்யோமுன் பெற்ற அதிக மதலையெல்லாம் மெய்யோதா னிம்மதலைக்(கு) ஒவ்வாது மேதினியே என்று பிரியமுற்று ஏற்ற மதலைதனை அன்று கொடுத்து அனுப்பினா ளயோதையிடம் கொண்டு வசுதேவன் அயோதைக் குடிலேகிக் கண்டு அயோதை கன்னியங்கே பெற்றிருந்த பெண்மதலை தன்னைப் பூராயமா யெடுத்து ஆண்மதலை தன்னை அயோதை யிடமிருத்தி வந்து வசுதேவன் மங்கைகை யில்கொடுத்துப் புந்திமிக நொந்து போயிருந்தா னம்மானை அந்த யிராவிடிந்து அலைகதிரோன் தோன்றினபின் கந்த மனசுள்ள கஞ்ச னவன்தனக்கு ஒற்றாளாய்த் தூதன் ஒருவன் மிகஓடி பெற்றா ளுன்தங்கை பிள்ளை யெனவுரைத்தான் 1040 கேட்டானே கஞ்சன் கெருவிதமாய்த் தானெழுந்து பூட்டான நெஞ்சன் பிள்ளைதனை வந்தெடுத்துத் தூக்கி நிலத்தில் துண்ணெனவே தானடிக்க ஆக்கிரமத் தாலே அவன்தூக்க ஏலாமல் சோர்வுறவே கஞ்சன் துடியிழந்து நிற்கையிலே பாரளந்தோன் தங்கை பகவதியு மேதுசொல்வாள் என்னை யெடுத்து ஈடுசெய்யா தேகெடுவாய் உன்னை வதைக்க உற்றயெங்க ளச்சுதரும் ஆயர்பா டிதன்னில் அண்ணர் வளருகிறார் போய்ப்பா ரெனவே போனாள் பகவதியும் கேட்டந்தக் கஞ்சன் கிலேச மிகவாகி வீட்டுக்குள் போயிருந்து விசாரமுற்றா னம்மானை அய்யோ முனிதான் சபித்தபடி ஆயர் பதியில் போகறியேன் மெய்யோ தளரு துடல்மெலியு மெல்லி மொழிந்த விசளமதால் கையோ சலித்துக் காலயர்ந்து கால விதியாற் கருத்தயர்ந்து பையோ ராளைத் தானழைத்துப் பார்க்க விடுத்தான் கஞ்சனுமே கஞ்சன் பாடு அய்யோ மறையோன் அன்று சபிபத்தபடி சையோ இடையர் தம்பதியில் போகறியேன் தங்கை வயிற்றில் செனித்தபிள்ளை யானதுண்டால் பங்கம்வரு மென்றனக்குப் பதறுதடா என்னுடம்பு 1060 என்று மனங்கருகி இயலழிந்த கஞ்சனுந்தான் அன்றுஒரு தூதனையும் அனுப்பினன்கா ணம்மானை வாராய்நீ தூதா மற்றோ ரறியாமல் பாராய்நீ தூதா அயோதைப் பதியேகி என்றுஅந்தத் தூதனையும் ஏகவிட்டான் கஞ்சனுமே நன்றுநன்று என்று நடந்தானே தூதனுந்தான் தூதன் மிகநடந்து தோகைஅயோ தைமனையில் புகுந்தந்தப் பிள்ளை பொன்தொட்டிலி லேகிடக்கக் கண்டுஅந்தத் தூதன் கஞ்சனுக்கு நஞ்செனவே விண்டு பறையாமல் விரைவாகப் போயினனே போயந்தத் தூதன் பொறையுள்ள கஞ்சனுக்கு வாயயர்ந்து சிந்தை மறுகியே சொல்லலுற்றான் காமனோ சீவகனோ கண்ணனோ சந்திரனோ மாமதனோ சூரியனோ மறையவனோ இறையவனோ நாமத் திறவானோ நாரா யணன்தானோ சோமத் திருவுளமோ தெய்வேந் திரன்தானோ ஈசனோ வாசவனோ இந்திரனோ சந்திரனோ மாயனோ வுன்னை வதைக்கவந்த மாற்றானோ ஆரோ எனக்கு அளவிடவுங் கூடுதில்லை பேரோ அயோதைப் புதல்வனெனக் காணுதில்லை 1080 தெய்வகியாள் தேகத் திருச்சுவடு தோணுகொஞ்சம் மெய்யதிப னான விட்டிணுபோல் முச்சுவடு என்றந்தக் கஞ்சனுக்கு இத்தூதன் சொல்லிடவே அன்றவன் கேட்டு அயர்ந்திருந்தா னம்மானை என்செய்வோ மென்று இருக்குமந்த நாளையிலே முன்செறியும் பூத மூரிதனை யேவியவன் கொல்லவென்று விட்டான் குழந்தைதனை யம்மானை வல்ல பெலமுள்ள மாபூதம் பட்டபின்பு பின்னுமே தானும் பிலஅரக்கரை யேவிக் கொன்றுவா வென்றான் குழந்தைதனை யம்மானை கொல்லவந்த பேரையெல்லாம் கொன்றதுகா ணக்குழந்தை வெல்லவிட்டப் பேரிழந்து மெலிந்திருந்தான் கஞ்சனுமே ஆயர் குடியில் அரியோன் மிகவளர்ந்து மாயன் விளையாடி மடந்தையோடுங் கூடி வென்றுபால் வெண்ணெய் மிகப்பொசித்துக் காடதிலே கன்றாவு மேய்த்துக் காளியன் தனைவதைத்துக் கஞ்சனுட ஏவலினால் காட்டில்வந்த சூரரையும் துஞ்சிவிடக் கொன்று தொலைத்தனர்கா ணம்மானை ஆயருக்கு வந்த ஆபத்து அத்தனையும் போயகற்றி நந்தன் பிள்ளையெனவே வளர்ந்தார் 1100 மதுரைதனில் வாழும் மாபாவிக் கஞ்சனுக்கு இறுதிவரும் போது ஏதுசெய்தான் கஞ்சனுமே நந்திடையன் பாலன் நல்லஸ்ரீ கிட்டிணனை இந்திடத்தில் கொண்டுவர ஏவிவிட்டான் ஓராளை கஞ்சனுட ஆளும் கண்ணர்ஸ்ரீ கிட்டிணரை அஞ்சலென்று கண்டு அழைத்தாருமைக் கஞ்சனென்றான் அந்தவிச ளமறிந்து அரியோ னகமகிழ்ந்து வந்த விசளம் வாச்சுதென் றெம்பெருமாள் கூடச் சிலபேரைக் குக்குளிக்கத் தான்கூட்டி ஈடவி யென்ற எக்காள சத்தமுடன் குஞ்சரமும் பரியும் குரவைத் தொனியுடனே கஞ்ச னரசாளும் கனமதுரை சென்றனரே நாட்டமுட னயோதை நல்லமகன் வந்தானென்று கேட்ட விசளம் கெட்டியெனக் கஞ்சனுந்தான் இங்கேநான் சென்று ஏற்றவனைக் கொல்லவென்று சங்கையற்றக் கோடி தத்திப் படையுடனே கொல்லவிட்டக் கஞ்சன் குதிரைத் தளம்படையும் எல்லாந் திருமால் இறக்கவைத்தா ரம்மானை கஞ்சன் படைகள் கட்டழிந்து போனவுடன் வஞ்சகனும் வந்து மாயனு டனெதிர்த்தான் 1120 மாயனுட போரும் வஞ்சகக்கஞ் சன்போரும் தேசமெல்லா மதிரச் சென்றெதிர்த்தா ரம்மானை மாயனுக்குக் கஞ்சன் மாட்டாமல் கீழ்விழவே வாயமிட்டுக் கஞ்சன் மார்பிலே தானிருந்து கஞ்சன் குடலைக் கண்ணியறத் தான்பிடுங்கி வெஞ்சினத்தால் மாயன் விட்டெறிந்தார் திக்கதிலே கஞ்சனையுங் கொன்று கர்மமது செய்தவரும் தஞ்சமிட்டத் தேவருட தன்னிடுக்கமு மாற்றி மாதாபிதா வுடைய வன்சிறையுந் தான்மாற்றி சீதான உக்கிர சேனனையு மாளவைத்து அவரவர்க்கு நல்ல ஆனபுத்தி சொல்லிமிக எவரெவர்க்கும் நல்லாய் இருமென்று சொல்லியவர் திரும்பிவரும் வேளையிலே தீரன்சரா சந்தனவன் எந்தன் மருமகனை இவனோதான் கொன்றதென்று வந்தனனே மாயனுடன் வாதாடி யுத்தமிட அப்போது மாயன் ஆராய்ந்து தான்பார்த்து இப்போ திவனை ஈடுசெய்யக் கூடாது சத்தபெல மல்லோ சராசந்த வேந்தனுக்குக் கொற்றவ வீமனல்லோ கொல்லவகை யுண்டுமென்று இதுவேளை தப்பவென்று எம்பெருமாள் தானடந்து 1140 செதுவோடு கூடிச் செகலதுக்குள் ளேகினரே கடலதுக்குள் வந்து கனத்தமதி லிட்டவரும் திடமுடனே மாயன் துவரம் பதியிருந்தார் பூதனைச் சகட னோடு பின்னுள்ள அரக்கர் தம்மைச் சூதனை யெல்லாங் கொன்று சுத்தமாய் மதுரை புக்கி நீதமே யில்லாக் கஞ்சன் நெஞ்சையும் பிளந்து கொன்று கூதவன் துவா ரகையில் குணமுட னிருந்தா ரன்றே 1147 |
செவ்வாய், 7 அக்டோபர், 2014
அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்திரட்டு அம்மானை
|
அகிலத்திரட்டு அம்மானை
கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்
வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும் இம்முதலா யுள்ள ஏற்ற அரக்கரையும் அம்முதலா யுள்ளவரை அரியோ னறுத்தனராம் சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும் வித்தகனார் கொல்ல மேல்நினைத்தா ரம்மானை கஞ்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு அஞ்ச லருளி ஆழிக்குள் வீற்றிருந்தார்
ருக்மணி கல்யாணம்
வாரிக்குள் கோட்டை வளைந்துமணி மேடைவைத்து
வீரக் குருநாதன் வீற்றிருந்தா ரம்மானை மாயன் துவாரகா பதிவாழ்ந்து தானிருக்க நாயனுக்கு வந்த நல்ல உருப்பிணியை விதியை யறியாமல் மேலுமொரு ராசனுக்குத் திருமாங் கலியம் சேர்க்கத் துணிந்தனராம் அப்போது நாரதரும் அரியோ னடிபணிந்து இப்போது வுன்றனக்கு இசைந்த உருப்பிணியைப் பாணிக் கிரணம் பண்ணப் பறையடித்தார் நானிதையுங் கேட்டுநாடியுரைத்தே னென்றார் அம்முனிவன் சொல்ல அரியோன் மிகக்கேட்டு இம்முனிந்து போக இசைந்தார்கா ணம்மானை 20
மோகத்திரு மாலை முக்கோடி பொன்னதுக்கு
வேகத்தா லுண்டுபண்ணி விரைவாய்க் கொடுநடந்தார் முழுத்திரு மாலைதன்னை மொய்குழலாள் கன்னியுடக் கழுத்திலே யிட்டுக் காமக்கண் ணீட்டிடவே மாயனுக்கும் மோகம் மாதுக்கும் மும்மோகம் தேயமெங்கும் மோகம் சென்றதுகா ணம்மானை முன்னாலே கேட்டு முகூர்த்தமிட்ட பேர்களையும் அந்நாளே கொன்று அவன்படையுந் தானறுத்து உருப்பிணிக்குத் தேவரெல்லாம் ஓலமிட மாலையிட்டு விருப்புகழ்ந்த மாயன் விமான மதிலேறி மனோன்மணியை யுங்கூட்டி மாயன் படையுடனே வினோகர மால்தானும் விரைவாய் நடைநடந்து வடவெல்லாந் தீர்த்து வைகுண்டப் பெம்மானும் கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர் இப்படியே முன்னம் இசைந்திருந்த பெண்ணையெல்லாம் அப்படியே மாலையிட்டு அமர்ந்திருந்தா ரம்மானை
ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணெய்
அருந்தி முறைமா தரையணைந்து தீயன் கொடிய கஞ்சனையும் திருக்கி யறுத்து அசுரரையும் உபாய முடனே கொலையடக்கி உருப்பிணி முதலாய்ப் பெண்களையும் தேயம் புகழ மணமுகித்துத் துவரம் பதியிலி ருந்தளரே 40
உருப்பிணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும்
திருப்பொருத்தம் பூட்டிச் செகலதுக்குள் வீற்றிருந்தார்
பாண்டவர் வரலாறு
கஞ்ச னிடுக்கம் கழித்தந்தக் காரணரும்
பஞ்சவர்க்கு நன்மைசெய்யப் பார்த்தனர்கா ணம்மானை பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும் சிறந்தபுக ழைபேரும் தேசமதி லேவாழ்ந்து அவரவர்க்குத் தக்க ஆர்க்கமுள்ள வித்தைகற்று எவரெவரு மெய்க்க இவர்வளர்ந்தா ரம்மானை வளர்ந்து நிமிர்ந்து வரும்வேளை யானதிலே இழந்துருகி வாடும் இசைகெட்ட மாபாவி துடியாய் மனுவழக்குச் சொல்லித்துரி யோதனனும் முடிய வினைசூடி உலகாண்டா னம்மானை பாவி யிருந்து பாராண்டச் சீமையிலே கோவுகட்கு நீர் குடிக்கக் கிடையாது தன்ம ரவ்வீமன் சகாதே வன்விசயன் நன்மை பரிநகுலன் நாடான நாடதுதான் குருநா டெனவே கூறுவா ரந்நகரு திருநாடு தன்னுடைய சிறப்புக்கே ளம்மானை துரியா தனாதி செலுத்துமஸ்தி னாபுரத்தில் பரியொட் டகமும் பலிமிருக மானதுவும் 60
பசியால் தகையால் பட்சி பறவைகளும்
விசியாய்க் குருநகரில் மேவித்தகை யாறிவரும் அத்தினா புரத்தில் அரதேசி யாவரெல்லாம் பத்தியா யுள்ள பஞ்சவர்க ளாண்டிருக்கும் குருநாடு தன்னில் குழாங்கொண் டிருந்தனராம் திருநாட்டுக் கொவ்வும் சிறந்த குருநாடு ஒருநாடு மந்தக் குருநாட்டுக் கொவ்வாது பருநாடு பத்தியுள்ள பஞ்சவர்கள் தந்நாடு தேவரும் வானவரும் தெய்வத் திருமாலும் மூவரும் நன்றாய் உகந்த குருநாடு ஆளியொடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும் வேளிசமா யுள்ள வெகுவைந் தலையரவும் வெள்ளானை வெள்ளை மிகுசாரை யானதுவும் துள்ளாடி நித்தம் துலங்கிவரும் நன்னாடு அந்நாடு நாடு அரன்நாட்டுக் கீடாகும் பொன்னாடு நாடு புத்தியுள்ளோர் தந்நாடு அரனருளைப் பெற்றிருக்கும் ஐவருட நன்னாடு இரவலர்க்கு ஈயும் ஏற்றதர்மர் தன்னாடு மாயனருள் பெற்ற மன்னவர்கள் தந்நாடு தாய்நாடு ஆனத் தமிழ்க்குரு நன்னாட்டில் 80
மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் பேர்பாதி
பொய்யில்லாத் தர்மருக்குப் பேர்பாதி யாகவேதான் ஆண்டார் சிலநாள் ஆளுக்கோர் பங்காகத் தாண்டவ ராயர் தண்மையா லம்மானை
பாண்டவர் வனவாசம்
இப்படியே ஆண்டு இருக்குமந்த நாளையிலே
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே வணங்கா முடியுடைய மன்னன்துரி யோதனனும் இணங்காமல் பிணங்கி ஏதுசெய்தா னம்மானை தலைவீதம் பங்கு தான்வையா வண்ணமுந்ததான் நிலைபகிர்ந்து விட்டோமே நினைவுசற்று மில்லாமல் இனியவன் பூமிதனை யாம்பறித்து ஐவரையும் தனியே வனத்தில் தானனுப்பி இராச்சயத்தை அடக்கி யரசாள அவன்நினைத்து மாபாபி உடக்கிச் சூதுபொருத்தி ஒட்டிவைத்தான் ஐவரையும் பாவிதுரி யோதனனும் பஞ்சவரைத் தான்விரட்டி சோவிதமாய் நாட்டைச் சுற்றியர சாண்டிருந்தான் வனவாசந் தன்னில் வந்திருந் தைபேரும் இனமா னதுபோல் இருந்தார் குகையதிலே அப்போது வேத வியாச ரவறிந்து செப்போடு வொத்தத் திருமா லருகேகி 100
மாயவரே பஞ்சவர்க்கு வாரமதாய்த் தானிருந்து
தீயதுரி யோதனனைச் செயிக்கவந்த பெம்மானே பஞ்சவரை மாபாவி பழுதுசூ தாடிவென்று வஞ்சக மாய்ப்பாவி வனத்தில் துரத்திவிட்டான் ஐபேரும் பத்தினியும் அன்னை பிதாவுடனே பைப்போ லலறிப் பசித்திருந்து வாடுகிறார் அன்றுமகா மேர்வில் அடியே னுரைத்தபடி இன்றுபா ரதமுடிக்க எழுந்தருளும் நாளாச்சு என்று முனிதான் எடுத்துரைக்க மாயவரும் அன்று திருமால் ஐவ ரிடம்நடந்தார் வேத வியாகரரும் வேயூதும் வாயானும் சீதக்குணத் தர்மர்முன்னே சென்றனர்கா ணம்மானை நாரா யணர்வரவே நல்லதர் மாதிகளும் பாரா னதையளந்தோன் பதம்பூண்டா ரம்மானை கால்பிடித்துத் தர்மர் கண்ணர் பதந்தொழவே மால்பிடித்துத் தர்மரையும் மார்போ டுறவணைத்துப் பதறாதே பாண்டவரே பத்தியுள்ள பஞ்சவரே கதறாதே ஐவரையும் காத்தருள்வோ மென்றுரைத்தார் அப்போது தர்மம் அச்சுதரை யும்போற்றி இப்பெழுது எங்களுக்கு ஏற்ற பசிதீர 120
சூரிய பாண்டம் தனையழைத்துச் சுத்தமனே
ஆரிய மான அன்ன மருளுமென்றார் அப்போது மாயவனார் ஆதிதனை நினைத்து மெய்ப்பான பாண்டம் மிகவருத்தி ஓரரியும் கையா லெடுத்துக் கனத்ததர்மர் கைக்கொடுத்து ஐயா யிரங்கோடி ஆட்கள்மிக வந்தாலும் என்பே ரரிதான் எனைநினைந்து பாண்டமதில் அன்பரே நீரை அதுநிறைய விட்டவுடன் என்பே ரரியை எடுத்ததி லிட்டதுண்டால் அன்பாக எல்லோர்க்கும் அமுதாய் வளருமென்றார் இத்தனையுஞ் சொல்லி ஈந்தாரே யன்பருக்கு சித்திரம்போல் வேண்டித் தெளிந்திருந்தா ரம்மானை மாயனுஞ் சொல்லி மண்டபத்தில் போயின்பின் தூயவியா கரரும் சொல்லுவார் தர்மருடன் பஞ்சவரே உங்களுக்குப் பச்சைமா லின்றுமுதல் தஞ்சமென்று சொல்லித் தான்போனார் மாமுனியும் மாமுனியும் போக வனத்திலந்த ஐபேரும் ஓமுனியே தஞ்சமென்று உகந்திருந்தா ரம்மானை பாவிதுரி யோதனனும் பஞ்சவரைக் கொல்லவென்று ஆவி யவன்செய்த அநியாய மத்தனையும் 140
ஒக்க வொருமிக்க உரைக்கக்கே ளொண்ணுதலே
சிக்கெனவே நஞ்சைத் தீபாவி யிட்டனனே நஞ்சைக் கலந்து நல்லதயி ரென்றீந்தான் அஞ்சலென்று மாயன் அதுகாத்தா ரம்மானை பாதாளம் வெட்டிப் பார்வீ மனையோட்டி நீதாள மான நெடியோ னதுகாத்தார் கன்னிதனிற் பாவி கழுநாட்டி ஐவரையும் கொன்றுவிட வைத்ததையும் குன்றெடுத்தார் காத்தனரே அரவதையும் விட்டு அருள்வீம னைவதைத்தான் விரைவுடனே மாயன் விசந்தீர்த்துக் காத்தனரே தண்ணீரில் நஞ்சைவிட்டுச் சதித்தானே ஐவரையும் மண்ணீரேழு மளந்த மாயனது காத்தார் பூதத்தை யேவிப் புல்லிசெய்தான் மாபாவி நீதத் திருமால் நிலைநிறுத்தி யாண்டனரே இப்படியே பாவி இடறுசெய்த தோசமெல்லாம் அப்படியே மாயன்காத்து ஆண்டனரே ஐவரையும் பாவியவன் செய்ததெல்லாம் பலியாம லைபேர்க்கும் சோவிதமாய் மாயன் துணைசெய்தா ரம்மானை
துரியோதனன் பாடு
பின்னுமந்தப் பஞ்சவர்க்குப் பெரும்பாவி சொன்னபடி
பன்னிரண் டாண்டு பரிவாய்க் கழிந்தபின்பு 160
மாயன் தூதுபோனார் வஞ்சமில்லாப் பஞ்சவர்க்குத்
தீயதுரி யோதனனும் திருமாலைப் பாராமல் தாள்போல் புத்தி தானுரைத்துப் பஞ்சவர்க்கு வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே எள்போ லிடங்கள் ஈயேனென வுரைத்தான் மாயனையும் பாவி வாபோ வெனப்பேசி ஈயேனெனச் சொன்ன இயல்புகேட் டெம்பெருமாள் கன்னன் பிலமும் கடியவிது ரன்பிலமும் மன்னன் சிறுபீஷ்மர் வாழுந்துரோ ணர்பிலமும் தென்னன் துரியோ தனன்பிலமுந் தானழித்து வன்ன விசயனுக்கு வாளி பலகொடுத்து வீமனுக்கு நல்ல விசைதண்டா யுதங்கொடுத்துத் தாமன்சகா தேவனுக்குச் சத்திசூலங் கொடுத்து நகுலனுக்கு ஆயுதமும் நல்லபரி கொடுத்துப் புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து மங்கை துரோபதைக்கு வாய்த்தக் கனல்கொடுத்துச் செங்கையிலே பாரதத்தைச் சேவித்தார் மாயவரும் மாயருட கையில் வளர்ந்த திருமுடியில் ஓசையிட வொன்று ஒத்துதே பாரதப்போர் ஐபேருட படையும் அரவக்கொடி யோன்படையும் 180
கைப்போரு விற்போரும் கணைப்போரும் வாள்போரும்
அம்புப்போ ருங்கரியின் அச்சுப்போரும் பொருது கன்னன் சகுனி கனத்தவலுச் சல்லியனும் மன்னன் சிறுபீஷ்மர் வாய்த்த துரோணர்முதல் சராசந் தன்வரையும் சத்தியக் கீசகனும் பூராச வீமன் பெலியிட்டா னம்மானை இத்தனைப்பேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும் அத்தனைபே ரையும் அறுத்தா னருச்சுனனும் துரியோ தனன்படைகள் சேர மடிந்தபின்பு விரிமாறு தூவி வெளியில்வந்தான் மாபாவி தம்பி படைகள் தலைவர் புதல்வர்முதல் வம்பி லிறந்தாச்சே வாழ்வெதே னென்றுசொல்லி எல்லா ரிறந்திடிலும் எண்ணமில்லை யென்றிடலாம் வெல்லாரும் வெல்லா விசகர்ணன் மாண்டதினால் இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்றெனவே விருப்பமுள்ள கர்ணனைத்தான் வெற்றிகொண்ட அர்ச்சுனனை இன்றுகொல்ல வென்று எழுந்தான் படைக்கெனவே அன்றுமால் தானறிந்து அருச்சுனனைத் தானழைத்து இத்தனை நாளும் என்னபோர் செய்தாய்நீ அத்தினா இன்றுன்மேல் அரவக் கொடியோனும் 200
வாறான் படைக்கெனவே வாள்வீமனை யழைத்து
உன்றனக்கு நல்ல உறுவேட்டை யின்றடவா என்றனக்கு இன்றுமுதல் இளைப்பாற லாமடவா வண்ண மகள்தனக்கு மயிர்முடித்த லின்றடவா எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவு மின்றடவா என்றந்த வீமனுக்கு இசைந்தபோர்க் கோலமிட்டு வண்டுசுற்று மார்பனுக்கு வரிசைமிகக் கொடுத்து வீமனுட தண்டதுக்கு விசைமால் விசைகொடுத்துப் போமெனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து விசையன் பரிநகுலன் வெற்றிச்சகா தேவனையும் இசையொத்த தர்மரையும் இன்றகல நில்லமென்று வீமனை யுங்கூட்டி வெளியிலரி வந்திடவே காமக் கனல்மீறிக் கரியோ னெழுந்ததுபோல் வந்தானே பாவி வணங்கா முடியோனும் சந்தான மான தமிழ்வீமன் தான்மாறி எதிர்த்தா ரிருவர் எனக்கெனக் கென்றேதான் செதுத்தான் வலுமை செய்வதுகே ளம்மானை மண்விண் ணதிரும் வானமது தானதிரும் திண்திண் ணெனப்பூமி தொந்தொ மெனக்குலுங்கும் மலைக ளசைந்து மடமடென ஓசையிடும் 220
கலைகள் கரிகள் கதறி மிகஓடும்
அலைகள் சுவறி அங்குமிங் கோடிடவே இலைக ளுதிர்ந்து இடிந்துவிழு மாமரங்கள் தூளெழும்பிச் சூரியனைத் தோன்றாம லேமறைக்கும் வேöழுழும்பிக் காட்டில் விழுந்தலறி ஓடிடவே தவமுனிவர் நெட்டை தானெகிழ்ந்து தட்டழிந்து திசைமாறித் திக்கில் திரிந்தலைந்து போயினரே வேதா சிவனும் வெம்மருண்டு தாம்பதற நாதாந்த மோதும் நன்மறையோர் தாம்பதற துரியோ தனன்போரும் செயவீமன் றன்போரும் எரியோ டெரிதான் எதிர்த்துப் பொருதாப்போல் ஒண்ணுக்கு வொண்ணு ஒல்கிப்புறஞ் சாயாமல் மண்ணும்விண் ணுமதிர மண்டி யுத்தமிட்டார் துரியோ தனனடிக்கத் துடிவீமன் சாயாமல் மரியாதை வீமன் மாறிய வனடிக்க அடிக்க அவன்பிடிப்பான் அப்படியே சண்டையிட்டுச் சாயா விதத்தைத் தானறிந் திருபேரும் வாயால் சபதம் வகுத்தே பொருவோமென்று கட்டான கள்ளன் கசடன் வெகுகெடும்பன் துட்டாள னான துரியோதன னுரைப்பான் 240
இத்தனை நேரம் இருபேருஞ் சண்டையிட்டுப்
புத்தியில்லா வண்ணம் பொருதோமே வம்பாலே உன்பெலமு முன்னுடைய உயிர்ப்பெலமும் நீயுரைத்தால் என்பெலமு முன்னோடே இயம்புகிறே னென்றுரைத்தான் அப்போது வீமன் அவனிலைக ளத்தனையும் தப்பாமல் தானுரைத்தான் சகலோ ரறிந்திடவே கேட்டுத்துரி யோதனனும் கேளுநீ யென்பெலங்கள் தீட்டுகிறே னென்னிடது செய்யபுற மென்றுரைத்தான் கள்ளக் கௌசலமாய்க் கபடுரைத்த ஞாயமெல்லாம் எவ்வளவு போலே இசையாத வீமனுக்கு மெய்யுரைத்தா னென்று மேலான போர்வீமன் கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே அடிக்கவே வீமன் அசையாமல் மற்றோனும் திடத்த முடனே சென்றவ் வீமன்பேரில் மாறி யவனிடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன் தேறியே மாயவரைச் சிந்தை தனில்நினைக்கத் திலர்தமுள்ள மாயன் செயவீ மனைநோக்கி வலது துடைதனிலே மாயன் கண்காட்டிடவே அடித்தானே வீமன் அதுதான் குறியெனவே துடித்தான் கிடாய்போல் துரியோதனன் விழுந்து 260
மூடற்ற மாமரம்போல் முறிந்துகீழ் தான்விழுந்தான்
கூடற்ற உயிர்போல் குலைகுலைந்து வீழ்ந்தனனே அப்போது மாயன் அரவக்கொடி யோனிடத்தில் தப்பாமல் வார்த்தையொன்று தான்கேட்கப் போயினரே முன்னே பிறப்பில் முடியிலங்கை யாண்டிருந்தாய் தென்ன னிராவணனாய்ச் சிரசுபத்தாய்த் தானிருந்தாய் அப்போது நீதான் அநியாயஞ் செய்ததினால் செப்போடு வொத்த ஸ்ரீராமனாய் நான்தோன்றி பத்துச் சிரசறுத்துப் பார்மீதிலே கிடத்தி உற்று வொருவசனம் உரைத்தேனா னுன்னிடத்தில் தம்பியா லென்னை சரமறுத்தா யல்லாது எம்பிரா ணன்வதைக்க ஏலாது என்றனையே தம்பியொரு நூறோடே தான்படைத் துன்னையுந்தான் கொம்பிலொரு ஆளைவிட்டுக் கொன்றேனே உன்னையென்றார் என்றுரைக்கப் பாவி இகழ்த்துவா னப்போது தண்டுகொண் டேயடித்த தமிழ்வீ மனல்லாது இன்றுன்னா லேலாது இடையாபோ வென்றனனே அப்போது மாலும் அதிகக்போ பம்வெகுண்டு துப்புரைகள் கெட்ட தீயனுக்கங் கேதுரைப்பார் உன்னையின்ன மிந்த உலகி லொருபிறவி 280
சின்னவன்ன மாகச் சிரசொன்றாய்த் தான்படைத்து
அறிவுபுத்தி யோடும் ஆணுவங்கள் தன்னோடும் செறியுங் கலையோடும் சிறப்போடுந் தான்படைத்து என்பேரி லன்பு இருக்கவெகு சாஸ்திரமும் தன்போத மறியத் தான்படைப்பேன் கண்டாயே முன்னே வுனக்கு உற்றபிறப் பாறதிலும் என்னை நினைப்பு எள்ளளவும் நம்பவில்லை ஏழாம் பிறப்பதிலும் என்னைநினை யாதிருந்தால் பாழாவாய் மேலும் பகையில்லை யென்றனக்கு என்று திருமால் இயம்பித்துரி யோதனனை அன்றவனைக் கொன்று ஐவரையுந் தான்வருத்திக் கர்மச் சடங்கு கழிக்க விடைகொடுத்தார் தர்மமுள்ள கர்ணனுக்கு சாஸ்திரத்தி லுள்ளமுறை எல்லாச் சடங்கும் இவருக்கும் நூற்றுவர்க்கும் உல்லாச முள்ளதர்மர் ஒக்கமுறை செய்தனராம்
கர்ணனுக்கு முத்தியருளல்
முறைசெய்து கர்ணனுக்கு முத்திமோக்ஷங் கொடுக்க
மறைதேர்ந்த மாயன் வந்தா ரவனருகே அப்போது வேத வியாசரவ ரங்குவந்து செப்போடு வொத்த திருமாலோ டேதுரைப்பார் பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட 300
ஆவிக்கு மோக்ஷம் அருளுவதோ மாயவரே
என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று மாமுனியே நானுரைக்கக் கேட்டருள்வாய் பண்டு இலங்கைப் பாரழிக்கவே நினைந்து தொண்டுபண்ணி நின்ற துய்யவா னரங்களிலே வல்லபெல முள்ள வாலியிவன் முற்பிறப்பில் நல்லவனாய் முன்னே நாட்டி லிருக்கையிலே இராவணனோ டேகூடி இராமசரத் தாலிறந்தான் சிராமனாய் நானிருந்து செயித்த விதமறிந்து வந்து பணிந்தானே வாலியவ னென்காலில் நன்றியுள்ள மாலே நானுமுன் னேவலனாய் முன்னேநீ ரமிழ்தம் உவரிதனிற் கடைய என்னை யொருபுறமாய் ஏவல்கொண்ட மாயவரே பத்துத் தலையுள்ள பாவியந்த ராவணனைக் கொத்திச் சிரசறுத்துக் கொல்லேனோ நானடியேன் என்றந்த வாலி இறைஞ்சிநின்றா னென்னையுமே அன்றுவா லிதனக்கு அருளினது நீர்கேளும் எனக்கேவ லாக இப்பிறவி நீபிறந்து தனக்கேராப் பாவிதனைச் சங்காத்தங் கொண்டதினால் இனிமே லவனோடிருந்து என்சொல் கேட்கவைத்துக் 320
கனியான மோஷக் கயிலாச மேதருவேன்
என்றவனை யழித்து இப்பிறவி ஐவருடன் முந்தி உதித்து முதற்பிறவி செய்தவனை அரவக் கொடியோன் இடத்தி லனுப்பிவைத்து இரவலர்க்கு மீந்து என்புத்தி யுள்ளிருத்தி அன்னை பிதாசொல் அசராம லைபேர்க்கு ஒன்னே வொருகணைமேல் விடேனென்ற உத்தமன்காண் ஆனதால் முன்னே அருளிவைத்த சொற்படிக்கு மானமாய் மோக்ஷம் வகுத்தே னிவனுக்கென்றார் நல்லதுதா னென்று நன்முனிவன் தான்மகிழ்ந்தான் எல்லைவைத்தா பாரதப்போர் இன்று முடிந்ததென்று கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி ஐபேரும் பத்தினியும் அச்சுதரை யும்போற்றி மெய்போக மான வியாசரை யுங்குவித்து ஆண்டார்கள் சீமை அச்சுதனா ருண்டெனவே பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே வைகுண்ட மேக மனதிலுற்று எம்பெருமாள் பொய்கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பேறி ஆங்கார மோகத்(து) அம்புக் கணுவாலே 340
ஓங்கார மாமுனிவன் விடையேற்றுத் தான்மெலிந்து
பஞ்சவர்க்கு உள்ள பாரப் பெலங்களையும் துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கு மேல்நடப் புள்ள விசளமெல்லாந் தானுரைத்து நூல்நடந்து வாருமென்று மோக்ஷத் திறவோனும் சீரங்க மாபதியில் செல்கின்ற அப்பொழுது சாரங்கர் செய்த தன்மைகே ளம்மானை
சப்தகன்னியரும் சான்றோர் பிறப்பும்
அரிகோண மாமலையில் அயோகவமிர்த கங்கை
பரிகோண மாமலையின் பகுத்துரைக்கக் கூடாது தேன்கமுகு மாங்கமுகு தென்னங் கமுகுகளும் வான்கமுகு வாழை வழுவிலா நற்கமுகும் சோலை மரமும் சுபசோப னமரமும் ஆல மரமும் அகில்தேக்கு மாமரமும் புன்னை மரமும் புஷ்ப மலர்க்காவும் தென்னை மரமும் செஞ்சந் தனமரமும் மாவு பலமரமும் வாய்த்த பலாமரமும் தாவு மரத்தின் தண்மைசொல்லக் கூடாது சோலையிலே வீற்றிருக்கும் சீர்பறவை யின்பெருமை தூல மின்னதென்று சொல்லத் துலையாது பார்வதியும் ஈஸ்வரனும் பாவித் திருப்பதுபோல் 360
தேர்பதியும் மேடைகளும் சிங்கா சனங்காணும்
அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல் நிலையில் முனிவோர் நிற்பதெண்ணக் கூடாது கயிலை யீதென்று கண்ணான மாமுனிவர் ஒயிலாகக் கூடி உவந்திருப்ப தவ்வனத்தில் வைகுண்டங் காண வந்ததர்மி யெல்லோரும் மெய்குண்டங் கண்டோ மெனஇருப்பா ரவ்வனத்தில் அப்படியே நல்ல அயோக அமிர்தவனம் இப்படியே நன்றாய் இயல்பா யிருப்பதுதான் புட்டாபுரங் கிழக்கு பூங்காவு நேர்மேற்கு வட்டமுள்ள ஸ்ரீரங்கம் வடக்கு வனந்தெற்காகத் தெற்கே திரிகோணம் செங்காவு நேர்வடக்கு மிக்கவகை மேற்கு மிகுத்தவனம் நேர்கிழக்கு இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமிர்தவனம் அவ்வனத்தி லுள்ள அமிர்தகங்கை யானதிலே குளித்து விளையாடிக் கூபந் தனிலிறங்கி களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார் மரகத வல்லி வள்ளி சலிகையெனும் 380
சரகதக் கன்னி சரிதை அரிமடவும்
எழு மடவும் எண்ணெண்ணு மிப்படியே நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென ஏலறிந்து கன்னி இவரல்ல ஈசரென்று சாய்ந்து விலகித் தையல்நல்லார் போகுகையில் ஆய்ந்து தெளிந்த அச்சுதரு முன்னேகி பலநாளு மீசுரர்க்குப் பாவையரே நீங்களுந்தான் செலந்திரட்டி மேன்முடியில் செய்தீ ரனுஷ்டானம் இனியெனக்கு நீங்கள் எல்லோரு மிக்கவந்து கனிநீர்தனையு மெந்தலையில் கவிழுமென்றா ரெம்பெருமாள் அப்போது கன்னி எல்லோரு மேதுரைப்பார் எப்போதுந் தானாய் இருப்பவர்க்கே யல்லாது மாயவர்க்கு மற்றுமுள்ள மயேசு ரர்தன்றனக்கும் வாயமுள்ள வானவர்கோன் மறைமுனிவர் தன்றனக்கும் எருதேறி நித்தம் இறவா திருக்குகின்ற ஒருவனுக்கே யல்லால் ஊழியங்கள் வேறில்லையே கேட்டுஸ்ரீ கிருஷ்ணரும் கிளிமொழியோ டேதுரைப்பார் ஒட்டி லிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும் ஆண்டிக்கே யல்லாது அரவணையி லேதுயிலும் 400
காண்டீபனுக் கேவல் கருதோ மெனவுரைத்தீர்
தோகையரே கங்கையினிச் சுருட்டுவ தைப்பார்ப்போம் ஆகட்டு மென்று அச்சுதருங் கோபமுற்று மேலோக மாயிருக்கும் வேதயேழு வுகத்தில் சாலோக மான சத்திபர லோகமதில் ஆருரூ மில்லாத ஆகாச சத்தியொன்றும் சீருரூப மான சிவலோக மானதிலே மெய்கொண்ட வானோர் வித்தொன்று ஆனதுவும் வைகுண்ட லோகமதில் வாய்த்ததர்மி யானதிலே தன்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின் சென்மித் தெடுத்தார் சிவயிருஷி யொன்றதிலே தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்தில் வாழுவரில் சகோதரரா யொன்று தானெடுத்தா ரம்மானை சொர்க்கலோ கமதிலே ஸ்ரீராமர் தன்றனக்கு பக்குவங்க ளாகப் பணிவிடைகள் செய்வோரில் நல்லகுல மான நயனவித் தொன்றெடுத்து வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகமதில் புத்தியுள்ள நாதன் பின்யுகத்தை யாளுதற்கு சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தா ரம்மானை இப்படியே மேலோகம் ஏழு லோகமதிலும் 420
அப்படியே நல்ல ஆர்க்கமுள்ள வித்தேழு
எடுத்துத் திருமால் இருதயத்தி லேயடக்கிக் கொடுத்துநின்ற தாதாவைக் குவித்துப் பதம்போற்றிக் கன்னியுட கற்பதுக்குக் கருத்தேது செய்வோமென்று உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தனரே பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம்வே றில்லையென்று தீத்தழலாய்ப் போகத் திருவுருவங் கொண்டனரே பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றி குரமாய் வருணன் குளிரத் தொளிந்திடவே காமத் தழலாய்க் கருமேனி யானதிலே வேமக் கனல்போல் விழிகொழுந் திட்டெரிய சாந்தணியுங் கன்னி தையல்தெய்வ மாமணிகள் கூந்தல் விரித்துக் கூபந் தனிலிறங்கி அரிஓம் எனவே ஆடிக் கரையேறி தரிதோம் மெனவே சலக்கரையை விட்டவர்கள் உயர வரவே உள்ளுதறத் துள்ளல்கொண்டு அயரக் கரங்கால் அங்கமெல்லாந் தொங்கலிட கிடுகிடெனத் தேகம் கிளிமொழிவாய் கொட்டிடவே திடுதிடென அக்கனியைத் திரைபோல் வளையலுற்றார் கன்னி யேழுபேரும் கனலை மிகஆவ
உன்னித் திருமால் ஓங்கார மோகமதால்
மங்கை யேழுபேர்க்கும் வயிற்றிலுற்ற தம்மானை சங்குவண்ண மாலோன் தற்சொரூபங் கொண்டனரே உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளை தடமேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார் வெருவிப் பயந்து விழிமடவா ரெல்லோரும் கருவிதொண்ணூற் றாறும் கலங்கியே தானோடி துகிலை யெடுத்துடுத்துச் சுருட்டினார் கங்கைதனை கையில் சலந்தான் கட்டித் திரளாமல் கலங்கி யழுது கண்ணீர் மிகச்சொரிந்து மலங்கி யழுது மண்ணிலவர் புரண்டு அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே மெய்யோடே குத்தி விழுந்தழுதா ரம்மானை
கனலைத் துணையா மென்றாவிக் கற்பை இழந்தோங் கன்னியரே
புனலைத் திரட்டப் பெலமின்றி புத்தி யழிந்தோம் பூவையரே அனலைத் தரித்த அரன்முன்னே அங்கே சென்றால் பங்கம்வரும் இனத்தைப் பிரிந்த மானதுபோல் இருப்போம் வனத்தி லென்றனரே
அம்மைமார் தவம்
கன்னியர்கள் மேனி கனிந்து மினுமினுத்து
மின்னித் தனங்கள் மிகுபால் சுரந்திடவே கற்புக் குழறி கயிலையுக மானதற்கு 460
அற்புத வேள்கங்கை அவர்நினை வில்லாமல்
எல்லோரு மிக்க ஈசுரரைத் தானினைத்து வல்லோனே யென்று வரம்பெறவே நின்றனராம் நின்றார் தவத்தின் நிலைமைகே ளம்மானை இன்றெங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர் வந்தெங்கள் தம்மை மாலையிட வேணுமென்று பந்துத் தனமின்னார் பாவையேழு பேரும் ஈசுரரே தஞ்சமென இருந்தார் தவசதிலே மாசொன்று மில்லா மாத ரேழுபேரும் தெற்கு முகமாய்த் தேவி யேழுபேரும் மிக்கத் தவசு மிகப்புரிந்தா ரம்மானை கற்பழித் தெங்கள்கையில் கன்னிதிர ளாமல்வைத்தோர் பொற்பாத முண்டெனவே பூவை தவசுநின்றார் பாலிளகி நல்லமிர்தம் பாலாறா யோடிடவே காலிளகா வண்ணம் கடுந்தவசு செய்தனரே பிள்ளை யேழுபேரும் பெற்றுப் பெருகிடவும் கள்ளஞ்செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும் மக்களையு மெங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து ஒக்க வொருமித்து உலகாள வைத்திடவும் நின்றார் தவசு நேரிழைமா ரெல்லோரும் 480
நன்றான மாமடவார் நாடித் தவசிருக்க
பிறந்த பிள்ளைதன்னுடைய புதுமைகே ளன்போரே அறந்தழைக்கும் நாரா யணர்மக வாகியதோர் சான்றோர் பிறந்ததுவும் தரணியர சாண்டதுவும் வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும் அய்யா உரைக்க அடியே னதையெழுதி மெய்யான போத மேலோர்கள் முன்பதிலே அன்பான இந்த அகிலத்திரட் டம்மானை தன்போத மாயிருந்து தாழ்மையுடன் கேட்டவர்க்குக் கன்மமுதல் சஞ்சலங்கள் கழியுமென் றெம்பெருமாள் உண்மையுள்ள லட்சுமிக்கு உபதேசமா யுரைத்தார் இப்படியே பிள்ளைதனை ஈன்றபின்பு கன்னியர்கள் அப்படியே சென்று அவர்போய்த் தவசிருக்க
திருமால் அமுதளித்தல்
பிள்ளை களைப்போட்டுப் புண்ணியனார் போகாமல்
வள்ளலந்த மாலும் மதலை தனையெடுத்து ஆரிடத்தி லிம்மதலை அடைக்கலமாய் வைப்போமென்று விசாரித்து நன்றாய் விசாரமுற்றா ரம்மானை தெய்வேந்திரன் பசுக்கள் திரைமேயக் கண்டவரும் கையதிலே சீங்குழலைக் கனிவாயில் வைத்திருத்தி நிரைவா வெனவே நியமித்தங் கூதிடவே 500
அரை நொடியிலாவு அங்கொன்று மில்லாமல்
அங்குவந்து மாயனிடம் அழைத்ததென்னக் கேட்டிடுமாம் சங்குதனில் பாலுமிழ்ந்து தாருமென்றா ரெம்பெருமாள் பாலுமிழ்ந் தாவு பலநாளும் பாலருக்கு நாலொருநாள் மட்டும் நடந்துவரும் வேளையிலே கன்றுக்குப் பாலு காணாமல் மேய்ப்போர்கள் ஏதென்றெனப் பார்த்து இயலறிந்து வானவர்கோன் தானறியச் சொல்லிச் சண்டையிட வந்தனனே வந்தவனுக் கெதிரே மாமுனிவன் சூலமதை இந்தாப்பா ரென்று எறிந்தா ரவன்பயந்து ஆரோ வெனப்பயந்து அயிராவதத் தோனும் போரொல்கிப் போனான் பொன்னுலோ கந்தனிலே நல்லதென மாமுனியும் நளின முடன்மகிழ்ந்து செல்லமக வான சிறுவர் தமைவளர்க்க
காளி வரவு
மாகாளி யென்ற வடபத்தி ரகாளி
ஓகாளி யென்ற உயர்ந்த பெலக்காரி பெண்ணல்லப் போர்க்குப் புருடர்மிகப் போராது விண்ணவரும் மண்ணவரும் விறுமாவும் போராது அப்படியே துஷ்ட ஆங்கார மாகாளி இப்படியே நன்றாய் இவளிருக்கும் நாளையிலே 520
ஆணொருவர் தன்னால் அழியா வரங்கள்பெற்ற
தாணொருவன் தனையும் சத்தி உமைதனையும் கெணியா வரங்கள்பெற்றுக் கீழுமே லுமடக்கித் துணிவாகத் தேவர்களைத் தூளிபட ஏவல்கொண்டு தேட்ட முடனேழு செகல்கடந் தப்புறத்தில் கோட்டை யதிட்டுக் குறும்புசெய் தாண்டனனே தேவர்கள் சென்று சிவனார்க் கபயமிட மூவரு மொத்திருந்து மழுதும் விசாரமிட்டார் ஆணாலே தக்கனையும் அழிக்கவகை யில்லையிங்கே பூணாரம் பூண்ட புட்டா புரக்காளி காளி படையும் கமண்டலத்தில் சென்றதுண்டால் தூளிபடத் தக்கன் சிரசறுப்பா ளென்றுமிக மாலுரைக்க ஈசுரரும் மறையோருஞ் சம்மதித்து வேலுகந்த காளிதனை விளித்தார்கா ணம்மானை உடனறிந்து மாகாளி உடையோன் பதம்பணிந்து வடவாக் கினிமுகத்தாள் வருத்தினதே னென்னையென்றாள் தக்கன் தலையறுத்துச் சங்காரஞ் செய்திடவே மிக்கநீ போவெனவே விடைகொடுத்தா ரீசுரரும் விடைவேண்டி காளி விமல னடிபோற்றிப் படைக்காரி பின்னுமொன்று பரமனோ டேகேட்டாள் 540
என்னோ டுதவி இயல்படையாய்த் தான்வரவே
வன்னப் புதல்வர் வகிருமென்றாள் மாகாளி அப்போது ஈசுரரும் ஆங்காரியை நோக்கி கற்போடு வொத்த கன்னியே வுன்றனக்கு பெண்ணா ணுமில்லாப் பெரிய பெலக்காரி கண்ணான காளி காரிகையே நீகேளு தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு விடையா யொருவசனம் விரிக்கக்கே ளொண்ணுதலே படைக்காகப் பாலர் பச்சைமால் தாவெனவே தவசு மிகப்புரிந்தால் சங்குசரத் தாமன் விபுசு தனிற்பிறந்த வீரரேழு பேர்களையும் உன்னை யழைத்து உன்கையி லேதருவார் முன்னே தவசு மிகப்புரியப் போவெனவே அரனார் விடையும் அருளி மிகக்கொடுக்கப் பரமான தேவி பச்சைமால் தன்றனைத்தான் நினைத்துத் தவசு நெடுநாளாய் நின்றிடவே அனைத்துயி ருங்காக்கும் அச்சுதருந் தானறிந்து மக்களேழு பேர்களையும் மாகாளி கைக்கொடுக்கக் கொக்கரித்துக் காளி கொண்டாடித் தான்மகிழ்ந்து 560
வாங்கு மளவில் மாமுனியைத் தானோக்கி
தாங்கிநின்று பாதத்(து) அடிதாழ்ந்து ஏதுசொல்வாள் வேத முனியே வித்தைக் கருத்தோனே மாதவங்கள் கற்ற மாமுனியே யிம்மதலை ஆனோர்க்கு நாமம் அருளிநீர் தாருமென்றாள் வானோர்கள் போற்றும் மாமுனியுந் தான்மகிழ்ந்து
சான்றோர்க்கு நாமம் அருளல்
உள்ளதுதா னென்று உடனே மனமகிழ்ந்து
வள்ளல்சிவ னாரறிந்து மறைவேதனை யழைத்து முப்பத்து முக்கோடி முனிவரவர் தங்களையும் நாற்பத்து நாற்கோடி நல்ல ரிஷிகளையும் தேவர் முதலாய்த் தேவேந் திரன்வரையும் மூவ ரறுவர் உள்ளோரையு மழைத்து கிணநாதர் வேதா கிம்புருடரை யும்வருத்தி குணமான தந்தி குமரனை யும்வருத்தி சத்தி உமையும் சரசுவதி பார்பதியும் எத்திசையும் வானோர் எல்லோரை யும்வருத்தி சங்கமது கூடி சாஸ்திரங்கள் தானோதி மங்கள வாத்தியங்கள் மடமடென நின்றதிர இப்படியே சங்கம் எல்லோருந் தான்கூடி அப்படியே தானிருக்க அருளுவா ரச்சுதரும் 580
பிறந்தபிள்ளை யேழதுக்கும் பேரிட வேணுமென்று
அறந்தழைக்கு மீசர்முன் அவர்வைத்தா ரம்மானை அப்போது ஈசுரரும் அன்பா யகமகிழ்ந்து இப்போது மாயவரே எல்லோருக் கும்போதுவாய் நீர்தானே நாமம் இட்ட லதுபோதும் பார்தா னளந்த பாலவண்ணா வென்றுரைத்தார் கார்வண்ணருங் கேட்டுக் கறைக்கண்ட ரோடுரைப்பார் தார்வண்ணரே முதற்பேர் தானுரைக்க வேணுமென்றார் நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும் வல்லவனே உன்னாத விந்தில்வந்து தோன்றினதால் தோணாப் பொருளைத் தொடர்ந்துகண்ட மன்னவர்க்கு சாணா ரெனநாமம் சாற்றினா ரீசுரரும் முதற்பேர்தா னீசர் மொழிந்தபின்பு வேதாவும் மதமான விந்து மாயமுனி சேயதற்கு சான்றோ ரெனநாமம் சாற்றினார் வேதாவும் ஆண்டா ரிதுவுரைக்க அச்சுதரும் பின்சொல்லுவார் நாடாள்வா ரென்று நாமமிட்டார் பாலருக்கு தாடாண்மை யுள்ள சத்தியங் கேதுரைப்பாள் அண்ணர் விநோதமதில் அவதரித்த பிள்ளைகட்கு வண்ணமுள்ள பேரு வாழ்த்தி விடைகொடுப்பாள் 600 எங்கும் புகழ்பெற்று இராஜபட்டந் தான்சூடும் சங்குமன்ன ரென்று தானுரைத்தாள் சத்தியுமே பேறுபெற்ற பாலரென்று பிரிய முடன்மகிழ்ந்து பாருபதி நாமம் பகருவா ளம்மானை சென்றஇடம் வென்று சீமைகட்டித் தானாண்டு மண்டலங்கள் தோறும் வரிசைபெற்று வாழ்ந்திருக்கும் பொற்பமுடி மன்னரென்று பேரிட்டாள் பார்பதியும் கற்பகத்துக் கொத்த கன்னி சரசுவதியும் வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரை யுரைத்தாள் பிள்ளையார் தானும் பிரியமுடன் மகிழ்ந்து நன்றான வீர நகுலவேந் தரெனவே அன்றானை முகத்தோன் அருளினர்கா ணம்மானை சண்முகனுந் தான்மகிழ்ந்து தவலோக மன்னரென்று விண்ணுகமு மெய்க்க விளம்பினர்கா ணம்மானை வானோர்கள் வேத மாமுனிவர் தாமகிழ்ந்து தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்குத் தர்மகுல வேந்தரென்று சாற்றினா ரம்மானை கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க தெய்வகுல மன்னரென்று திருநாம மிட்டனரே 620
வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்குச்
சூரியகுல வேந்தரென்று சொன்னார்கா ணம்மானை வாசவனுந் தான்மகிழ்ந்து மாயனுட பாலருக்கு வீசவிசைய வேந்தரென்று நாம மிட்டார் இப்படியே நாமம் இவர்மொழிந்த தின்பிறகு கற்புடைய சன்னாசி கருத்தாக வேயுரைப்பார் நாட்டுக் குடைய நாதனுட கண்மணிக்குக் காட்டுரா சனெனவே கருத்தாக நாமமிட்டார் இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமமிட்டு அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பணிந்து சத்தி யுமையும் சரசுவதி பார்பதியும் எத்திசையு மெய்க்க எடுத்துநீ ராட்டுவாராம் அமுதமது சேனையிட்டு எல்லோரும் தாமகிழ்ந்து குமுதமொழி மாதர் குரவையிட்டுத் தாமகிழ்ந்து அண்டர் முனிவோர் எல்லோரும் பார்த்திருக்க தண்டாமரை மாது தாலாட்ட வுத்தரித்தாள்
சரஸ்வதி தாலாட்டு
வைகுண்ட கண்ணோ வரம்பெற்ற மாதவமோ
கைகண்ட வித்தை கருத்தறிந்த உத்தமரோ தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ வங்கம்நிசங் கண்ட மங்காத சான்றவரோ 640
சிங்கமுகத் தண்டிகையும் சிலம்புனைந்த ரத்தினமும்
சங்கக் கொடிவிருது சங்குரட்டை பெற்றவரோ முத்துச் சிலாப முதலாளி யானவரோ கொத்துமுங்கை யாபரணம் கொடிவிருது பெற்றவரோ மூலப்பொருள் கண்ட முதற்சாதி யானவரோ தாலம்பா லுண்டு தானிருந்த மன்னவரோ நடைக்கா வணங்களிட்டு நல்லதீ வட்டியுடன் படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ வெள்ளானை மேலே வீதிவலஞ் சுற்றிவந்து துள்ளாடி சிங்கா சனம்வீற் றிருப்பவரோ பூதமது பந்தம் பிடித்துமுன்னே தான்வரவே நாதமிரட் டையூதி நாடாளு மன்னவரோ எக்கா ளமூதி இடமடம் மானமுடன் மிக்கான சீமையெங்கும் மேவிவரு மன்னவரோ வாரணங்கள் கட்டி வையகத்தைத் தானாண்டு தோரணங்கள் நாட்டிவைத்த தெய்வத்திருச் சான்றவரோ கர்மம தில்லாமல் களிகூர்ந் திருப்பவரோ தர்மமுடி பெற்றவரோ சாஸ்திரத்துக் குற்றவரோ உடற்கூறு சத்தி உயிரோ டுதித்துவந்த சடக்கூறு மூலச் சட்டமது கொண்டவரோ 660
கல்விக் குகந்த கருணாகர ரானவரோ
செல்விக் குகந்த சென்மமது கொண்டவரோ தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிக ளாவதற்கும் மூவர்க்கு முதவிசெய்து உதித்துவந்த கற்பகமோ சென்ற இடமெல்லாம் சிறப்புவெகு மானமுடன் மண்டலங்கள் மேய்க்க வாழுகின்ற சான்றவரோ சாணா ருக்குள்ளே சர்வது மேயடக்கிக் கோணாத மாயன் குருக்கொடுத் தீன்றகண்ணோ அறிவுஞா னத்தோடும் ஆதிப் பிறவியோடும் செறியுங் கலையோடும் செடமெடுத்த சான்றவரோ துட்டரென்ற பேரைச் சூரசங் காரமிட்டுக் கொட்டமிட்டுக் கோட்டை கொடிவிருது பெற்றகண்ணோ ஆண்டிருக்கு மன்னவரோ அச்சுதரின் பாலகரோ தாண்டி வரம்பெற்றுத் தரணியர சாண்டவரோ பாண்டவரோ ஆண்டவரோ பாலவண்ணர் பெற்றெடுத்த சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ
தங்கமணியோ நவமணியோ சலத்தில்விளைந்த தரளமுதோ
சிங்கக்கொடிகள் பெற்றவரோ சீமையடக்கி யாண்டவரோ துங்கவரிசை பெற்றவரோ திருமால்விந்தி லுதித்தவரோ சங்கமகிழ வந்தவரோ சான்றோர்வளர ராராரோ 680
கற்பகத்தரு
சந்தோ சமாகச் சரசுவதி தாலாட்டி
வெந்தோச மெல்லாம் விலகவே நீராட்டி வைகுண்ட மூர்த்தி மாமுனிதன் கைக்கொடுக்க மைகொண்ட வேதன் மதலை தனைவாங்கி ஈசர் முதலாய் எல்லோருங் கூடிருந்து வாசமுள்ள பிள்ளைகள்தாம் வளரத் திருவமிர்தம் சேனைமிக வூட்டுதற்கும் செல்வ முண்டாவதற்கும் வானத் தமிர்தம் வருத்திமிக ஈயவென்று கயிலை தனிலிருக்கும் கண்ணான பேர்களுக்கு அகிலமதிற் பாயும் ஆகாய வூறலதை வருத்திக் கொடுக்கவென்று மாயவரு மீசுரரும் பொருத்தமுள்ள வானோரைப் போய்வேண்டி வாருமென்றார் அப்படியே வானோர் ஆகாய மீதேகி செப்பமுட னமிர்தம் சென்றவர்கள் பார்க்கையிலே ஆருரூப மில்லா ஆகாச மேல்வழியே சீருரூப மான சிவகயிலை யானதிலே பாயு மளவில் பலசாஸ்தி ரங்கள்கற்ற வீயுமறை வேதியனும் விழிநுதலாள் கன்னியரும் அமுதமதை யெல்லாம் அள்ளித் தலைமேலும் குமுதமுடன் குடித்துக் கொழுத்துமிகப் பாளைவைத்துத் 700
தேகமது நிமிர்ந்து தேவியு மன்னவனும்
ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில் வானோர்கள் பார்த்து வாய்த்தமிர்தங் காணாமல் ஏனோயிது மாயமென்று எண்ணிமிகப் பார்ப்பளவில் கொண்டாடி நின்ற கூர்மறையவன் தனையும் பெண்டாட்டி யான பெண்ணதையும் வானோர்கள் பிடித்து இழுத்துப் பின்னுமுன்னுந் தள்ளிமிக அடித்துச் சிவன்முன்னே அச்சுதரும் பார்த்திருக்க கொண்டுவந்து விட்டுக் கூறுவார் வானோர்கள் பண்டுமுத லின்றுவரை பாய்ந்த அமிர்தமெல்லாம் உண்டுகொண்டு தேகம் உரத்துமிகப் பாளைவைத்து வண்டுறுக்கி மிக்க வலுப்பேசி னானெனவே சொல்லிடவே வானோர் திருமா லதுகேட்டு நல்லதுதா னென்று நாடிச்சிவ னோடுரைக்க அப்போது நல்ல ஆதி சிவமுரைப்பார் எப்போதும் பாலர் இவருண் ணமிர்தமெல்லாம் கொடுக்கும் படியாய்க் குருக்கவையு மென்றுரைத்தார் அடுக்கநின்ற தேவர் அதுகேட்டுச் சீக்கிரமாய் மறையோனையும் மாதுவையும் வந்தெடுத்துச் சாபமிட இறையவரைப் பார்த்து ஏதுரைப் பான்மறையோன் 720
இப்போது இட்ட இச்சாப மானதுதான்
எப்போது நீங்கும் என்றேகேட் டான்மறையோன் நீசக் குலமறுத்து நெடிய திருமாலும் மாசில்லாத் தர்ம வையகத்தை யாளுதற்கு அன்பு சேகரிக்க அங்குவரு வார்கண்டீர் வம்பு மாறும்போது மாறுமுங்கள் சாபமென்றார் உடனே மறையோனும் ஓவியமு ள்ளதென்று தடமேலே நின்று தால மெனவளர்ந்தார் வளர்ந்த அமிர்தமதை மக்களேழு பேர்களுக்கும் பழமமிர்தக் காயோடு பலவகையுந் தானாண்டு அமிர்தமதை நீங்கள் ஆக்கிரகந் தானடக்கிக் குமிர்தமுட னீங்கள் குடித்திருங்கோ வென்றுசொல்லி உங்களுக்குப் பாலமிர்தம் ஊறுமல்லா லித்தாலம் எங்களுக்கு மித்தாலம் இசையாது கண்டீரோ பாலருக்கு இந்தவரம் பரமயுகத் தோர்கொடுத்து ஞாலமுள்ள காளி நாயகியைத் தானழைத்து
பத்திரத்தாள் பெற்றமக்கள்
பாலரையுங் காளி பண்பாக வாங்குகையில்
ஆலமுத முண்ட அச்சுதரு மேதுரைப்பார் அடவு பதினெட்டும் அலங்கார வர்மமதும் கடகரியின் தொழிலும் கந்துகத் தின்தொழிலும் 740
மாவேறுந் தொழிலும் வாள்வீசுந் தொழிலும்
பாவேறு பாட்டும் பழமறைநூ லானதுவும் அடவு மேலான அதிகப்பல வித்தைகளும் திடமு மிகவருத்தி சேனா பதியாக்கி எல்லா விதத்தொழிலும் இசைவான ராகமதும் நல்லா வருத்தி நாட்டமுட னேகொடுத்து உயிர்ச்சேதம் வராமல் ஒன்றுபோ லென்மகவை நெய்ச்சீதம் போலே நீவளர்த்துத் தாவெனவே அல்லாம லென்மகவை ஆரொருவ ரானாலும் கொல்லாமல் காக்கக் கூடுமோ வுன்னாலே அன்பான காளி அதற்கேது சொல்லலுற்றாள் என்பாலகர் தனையும் ஈடுசெய்ய யிங்கொருவர் உண்டோகா ணிந்த உலகி லெனக்கெதிரி என்றேதான் காளி இப்படியே சொல்லியபின் பாலரையுந் தானெடுத்துப் பரமசிவ னாரருளால் கோலமுள்ள மாயன் கொடுத்தாரொரு வார்த்தைசொல்லி சீலமுள்ள காளியென் சித்திரப் பாலருக்கு பாலருக்குப் பங்கமது பற்றாமல் காத்திடுநீ மதலைதனக் கோர்தீங்கு வந்ததே யுண்டானால் குதலையரே வுன்றனக்குக் கொடுஞ்சிறைதான் சிக்குமென்று 760
சொல்லியே காளிகையில் சிறுவரையுந் தான்கொடுத்து
வல்ல பெலமுள்ள மாடுதனி லேறியையும் வேதாவும் நல்லநெற்றி விழியுடை யாள்தனையும் மாதாவு மான வாய்த்தசர சோதியையும் தேவர்முதல் வானவரை சிட்டர்முனி வோர்களையும் மூவர்களை யுங்கயிலை ஊரேபோ மென்றனுப்பி காளிதனைப் பிள்ளைகளைக் கருத்தாய்வள நீயென்று ஆழி யடைத்த அச்சுதருந் தான்நடந்து சீரங்க மாபதியில் சென்றிருந்தா ரம்மானை சாரங்கர் சீரங்கம் தான்வந்தா ரென்றுசொல்லி சீரங்க மெல்லாம் செழித்து மிகவாழ்ந்து பாரெங்கு மெச்சிப் பரந்துகா ணம்மானை அப்படியே அச்சுதரும் அப்பதியி லங்கிருக்க எப்படியும் சீரங்கம் இனிதழைக்கு மென்றுமிக மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் தேவருங் கொண்டாடி சிந்தைமகிழ்ந் தேயிருந்தார் சீரங்க மான திருப்பதியின் வளமை சாரங்க ராயர் தாமுரைத்தா ரம்மானை மாரியது மூன்று வருசிக்கத் தான்பொழிந்து ஏரி பெருகி ஏற்றசெந்நெல் தான்விளைந்து 780
படியொன்று கோட்டையொன்றாய்ப் பழுத்துவருஞ் செந்நெலது
கரும்பு முத்தீனும் கசுவுங் கரைபுரளும் அரும்பு வனமும் அகில்தேக்கு மாமரமும் கோவுஞ் ஸ்ரீரங்கரெனக் கூப்பிடுங்கா ணச்சுதரை மாவுஞ் ஸ்ரீரங்கரென வந்தழைக்கு மச்சுதரை மயில்குயில் மான்கலையும் வாய்த்தஅணில் பட்சிகளும் ஒயிலாக அச்சுதரை உள்ளாக்கி யாடிவரும் அவ்வூரி லுள்ள அந்தணர்க ளெல்லோரும் கவ்வைவே றில்லாமல் கரியமால் தன்றனக்கு பூசை முறைவைத்துப் பிராமணர்கள் செய்துவர ஆசையுட னச்சுதரும் அங்கே யினிதிருந்தார்
சான்றோர் பெருமை
சீரங்க மாபதியில் சிறந்திருக்கு மப்போது
சாரங்கர் பெற்ற சான்றோர் களின்பெருமை சொல்லுகிறா ரெங்கள் திருமால்கா ணம்மானை நல்லதுகா ணென்று நாடித் திருகேட்க அன்பான சான்றோர்க்கு ஆனமா காளியம்மை தன்பாலர் போலே தான்வளர்ந்து வித்தைகளும் வருத்திக் கொடுத்து மன்னர்மன்னர் தானாக்கி கருத்திலுறக் காளி கண்ணான மக்களுக்கு வேண்டும் பணிகளெல்லாம் விதவிதமாய்த் தானெடுத்துப் 800
பூண்டந்த மக்களையும் பூத்தான மாய்வளர்த்தாள்
மிக்கநல்ல பிள்ளை வீரரென ஆகுகையில் தக்கனென்ற சூரன் தன்பேரில் மாகாளி படைக்கு யெழுந்தருளிப் பாலரையுந் தான்கூட்டி நடைக்கு அதிகமுள்ள நாயகியும் பாலருக்குப் போர்க் கோலமிட்டுப் புட்டாபுரங் கடந்து ஆர்க்க முள்ளகாளி அலகைப் படையுடனே சான்றோரை விட்டுத் தக்கனையுந் தான்வதைத்து மூன்றோரை நெஞ்சில்வைத்து ஓங்கார மாகாளி தக்கனையுங் கொன்று சான்றோ ரவர்தமக்கு மிக்க வரிசை மிகக்கொடுத்து மாகாளி புட்டா புரத்தில் பேய்க்கணங்கள் சூழ்ந்துநிற்க கட்டாத காளி கமலத்தில் வீற்றிருந்தாள்
சான்றோர் திருமணம்
அப்போது நல்ல ஆர்க்கமுள்ள பாலருக்கு
இப்போது மாலையிட ஏழுபேர்க்கும் வேணுமென்று பார்த்து விசாரித்துப் பத்திர மாகாளி நாற்றிசையும் பார்த்து நாரத மாமுனியை அழைத்துநல்ல மாகாளி அந்தமுனி யோடுரைப்பாள் விழைத்துநல்ல புத்தி விபரமிட்டுச் சொல்லுகின்ற மாமுனியே யென்றன் மக்களேழு பேர்களுக்கும் 820
நீமுயன்று பெண்ணேழு நிச்சயிக்க வேணுமென்றாள்
நல்லதுதா னென்று நாரத மாமுனிவன் வல்லவகை யாலுன் மக்களுக்குப் பெண்ணேழு பார்த்துவரு வேனென்று பகர்ந்துமுனி போயினனே சாற்று மொழியிசையத் தானுரைக்கு மாமுனிவன் நீதமுள்ள நல்ல நிருபதி ராசனுந்தான் பெற்ற மதலைதனைப் பெண்கேட்கப் போயினனே மாமுனிவன் கேட்க மன்ன னதிசயித்துத் தாமுனிந் தேது தானுரைப்பா னம்மானை நல்ல முனியே நானுரைக்க நீர்கேளும் செல்ல மகவு தேவிக்கு மென்றனக்கும் இல்லாம லனேகநாள் இருந்தோந் தவசாக நல்லான ஈசர் நாட்டமுட னிரங்கி ஆண்பிள்ளை யுன்றனக்கு ஆகமத்தி லில்லையென்று பெண்பிள்ளை யேழு பிறக்குமென்று சொன்னார்காண் அப்போது ஈசுரரை அடியேன் மிகப்பார்த்து இப்போது என்றனக்கு இரணமுடி வாகுகையில் கொள்ளிவைக்கப் பிள்ளை ஒன்று கொடுவுமென்றேன் தெள்ளிமை யாயீசர் சொன்ன மொழிகேளும் தெய்வச் சான்றோராய்த் திருவான மாகாளி 840
கையதுக்குள் வாழ்ந்துன் கன்னியேழு பேர்களையும்
மாலையிட் டுன்றனக்கு வருமாபத் தையெல்லாம் மேலவராய்க் காத்து மேதினியோர் தாமறிய உன்றனக்கு நல்ல உதவிமிகச் செய்வதற்கும் வந்தங் கிருப்பாரென வகுத்தாரே ஈசுரரும் ஆனதால் பெண்ணேழும் அவர்க்கேதா னல்லாது மான முனியே மற்றெவர்க்கு மாகாதே என்று நிருபதனும் ஏற்றமுனி யோடுரைக்க நன்று நன்றென்று நாரதருஞ் சம்மதித்து மன்னவனே கேளு மாகாளி தன்னிடத்தில் சொன்னபிள்ளை யேழும் சிறந்திருக்கி றாரெனவே அந்தமன்ன ரான ஆண்பிள்ளைக ளானோர்க்கு இந்த முகூர்த்தம் யான்கேட்க வந்தேனென்று சொல்லமுனி மன்னவனும் சோபித மாய்மகிழ்ந்து நல்ல முகூர்த்தம் நாளிட்டா னம்மானை நாளிட்டு நாரதரும் நல்லமா காளியுட தாளிணையைப் போற்றித் தானுரைத்தா ரம்மானை மாகாளி யுன்றனுட மக்களேழு பேர்களுக்கும் வாகான மன்னன் வாய்த்த நிருபனுட மக்களேழு பெண்களையும் மாலைமணஞ் சூட்டுதற்கு 860
மிக்கநா ளிட்டு மேவிவந்தேன் மெல்லியரே
என்றுமுனி சொல்ல ஏற்றமா காளிசொல்வாள் நன்றுநல்ல மாமுனியே நான்வளர்த்த கண்மணிகள் தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள் மெய்வரம் புள்ள மெல்லியரைச் சொல்லுமென்றாள் பியற்றிவந்த பெண்ணதுக்குப் பிறவியென்ன மாமுனியே உய்த்துவந்த பெண்ணேழின் உற்பவஞ்சொல் மாமுனியே அப்போது பெண்ணார்கள் ஆதிப் பிறவியெல்லாம் செப்புகிறோ மென்று சிவகாளிதனைத் தெண்டனிட்டு கேளாய் நீயென்று கிருபையுட னேதுரைப்பான் நாளான நாளதிலே நல்லதெய்வ லோகமதில் தெய்வேந் திரனார்க்குச் சொல்லேவல் செய்திருந்த நெய்நெடியக் கன்னி நேரிழைமா ரேழ்பேரும் வேலையின்ன தென்று விரித்துக்கேள் மாகாளி மாலையிலுங் காலையிலும் வானவர் கோன்றனக்குப் பூவெடுத் திட்டுப் பூசைபுனக் காரமிட்டுக் கோவெடுத்த ராசனுக்குக் குஞ்சமிட ஆடிநிதம் ஏவல் புரியுகின்ற இராசதெய்வக் கன்னியர்கள் நாவுலகு மெய்க்க நடந்துவரும் நாளையிலே பூவுலகு மன்னர்களைப் பூத்தான மாகவெண்ணி 880
பாவினியக் கன்னி பஞ்சமது வேறாகிப்
பூவெடுக்கக் கன்னி போகாமல் வாட்டமதாய் ஆவடுக்கங் கொண்டு அவர்க ளொருப்போலே காச்சல் குளிரெனவே கவ்வையுற்றுத் தானிருக்க மாச்சல் தனையறிந்தான் மகவானு மப்போது ஆனதால் வேதாவின் அண்டை யவனணுகி தீனம்வந்த தேதெனவே தேவியர்க்கு வேதாவே வேதா தெளிந்து விரித்துரைப்பா ரப்போது சூதான மான தோகை யேழுபேரும் பூலோக மன்னருக்குப் பிரியமுற்று மையல்கொண்டு காலோயு தென்று கவ்வையுற்ற தல்லாது வேறில்லை யென்று வேதா இதுவுரைக்க தேறியே வாசவர்கோன் தேவியெழு பேர்களையும் அப்படியே பூவுலகில் அமையுமென்றார் வேதாவை இப்படியே வந்து இவர்பிறந்தா ரென்றுமுனி சொல்லச் சிவகாளி சிரித்து மனமகிழ்ந்து நல்லதிது மாமுனியே நன்முகூர்த்தம் பார்த்துரைநீ உடனே முனியும் உகந்த முகூர்த்தமென்று திடமே நிருபனுக்குச் செய்திசொல்ல ஆளும்விட்டு நாளை முகூர்த்தமென்று நாற்றிசையுந் தானறிய 900
கோழையில்லா மன்னர் குலதெய்வச் சான்றோர்க்கு
முகூர்த்தமென்று சாற்றி மூவுலகுந் தானறிய பகுத்துவமாய் நல்ல பந்தலிட்டா ரம்மானை வயிரக்கால் நாட்டி வயிர வளைகளிட்டுத் துயிரமுள்ள தங்கத் தூண்கள் மிகநாட்டி முத்து நிரைத்து முதுபவள வன்னியிட்டுக் கொத்துச் சரப்பளியைக் கோர்மாலையாய்த் தூக்கி மேற்கட்டி கட்டி மேடைபொன் னாலேயிட்டு காற்கட்டி பட்டுக் கனமா யலங்கரித்து வாழை கரும்பு வகைவகையாய் நாட்டிமிக நாளை மணமென்று நாட்டுக்குப் பாக்குவைத்து வெடிபூ வாணம் மிகுத்தகம்பச் சக்கரமும் திடிம னுடன்மேளம் சேவித்தார் பந்தலுக்குள் வாச்சியங்க ளின்னதென்று வகைசொல்லக் கூடாது நாச்சியார் மாகாளி நாயகியுங் கொண்டாடி பாலருக் கேற்ற பணியெல்லாந் தான்பூட்டிச் சாலமுள்ள சிங்கத் தண்டிகையில் தானிருத்தி பட்டணப் பிரவேசம் பகல்மூன்று ராமூன்று இட்டமுடன் பூதம் எடுத்துமிகச் சுற்றிவந்து மண்டபத்துள் வைத்து மாபூதஞ் சூழ்ந்துநிற்க 920
தெண்டனிட்டு மன்னர் தேசாதி சூழ்ந்துநிற்க
பதினெட்டு வாத்தியமும் பட்டணமெங் குமுழங்க ததிதொம் மெனவேசில தம்புருசா ரங்கிகெம்ப பந்தமது பிடித்துப் பலபூதஞ் சூழ்ந்துநிற்க நந்தகோ பால நாரா யணர்மகிழ்ந்து மைந்தருக் கின்று மணமுண்டு என்றுசொல்லி வைந்தர்பல தேவர்களை வாருமென வேயழைத்துப் பாலருட முகூர்த்தம் பார்க்கப்போ மென்றுசொல்லி சீலமுட னனுப்பி ஸ்ரீரங்க மேயிருந்தார் தேவதே வர்புகழத் திசைவென்ற சான்றோர்க்கு மூவர்களும் வந்து உதவிசெய்தா ரம்மானை நல்ல முகூர்த்தம் நாள்பார்த்துச் சான்றோர்கள் எல்லாச் சடங்கும் இயற்றிவைத்தா ரம்மானை சடங்கு முகித்துச் சான்றோரை யொப்பமிட்டுத் தடங்கொண்ட மன்னவரைத் தண்டிகையின் மீதிருத்தி அரசர் மிகச்சூழ அணியீட்டி யாட்கள்வர விரைவாகக் காளி வித்தகலை யேறிவர அரம்பையர்க ளாடிவர அயிராவதத் தோன்வரவே வரம்பெரிய தேவர் மலர்மாரி தூவிவர ஆலத்தி யேந்தி அணியணியாய்த் தான்வரவே 940
மூலத்தி கன்னி மோகினியாள் தன்னுடனே
பூதம தாடி பிடாரியது சூழ்ந்துவர நாதம் ரெட்டையூதி நடந்தார்மாப் பிள்ளைகொண்டு விருதிற் பெரிய வீரதெய்வச் சான்றோர்கள் நிருபன் மகளை நியமித்து மாலையிட வீரியமாய் நல்ல விவாகமிட வாறாரெனப் பூரியலிற் சொல்லி பேர்கள் சிலரூத இப்படியே வாத்தியங்கள் இசைந்திசைந் தேவூதி அப்படியே நிருபன் அரசன் மகள்தனையும் மாலை மணமிட்டு வாழவந்தா ரம்மானை வாலையது வான மாகாளி வாழுகின்ற மண்டபத்துள் வந்து மகிழ்ந்திருந்தா ரம்மானை 952 |
செவ்வாய், 30 செப்டம்பர், 2014
அகிலத்திரட்டு அம்மானை
|
அகிலத்திரட்டு அம்மானை
கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும் தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமே மாளிகையும் வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள் மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றா ரம்மானை நெய்த்தெளிய கன்னி நேரிழைமா ரெல்லோரும் இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக அப்படியே மதலைபெற்று அகமகிழ்ந்தா ரம்மானை பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர சீலமுள்ள வித்தை சிறக்க அவர்வருத்தி எமத்திறைவ ராக எங்கும் புகழ்ந்திடவே சமர்த்த ரெனஅவர்கள் தலையெடுத்தா ரம்மானை முத்து வியாபாரம் முதல்வியா பாரமுதல் பத்தரை மாற்றுப் பசும்பொன்வியா பாரமுடன் மாணிக்க வியாபாரம் வியிரப்பொன் வியாபாரம் ஆணிப்பொன் வியாபாரம் அழகுகச்சை வியாபாரம் கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம் ஒப்பமுள்ள வியாபாரம் ஒக்கமிகச் செய்தனராம் தாலம தேறித் தைரியப் பால்வாங்கி 20 மேலுள்ள சான்றோர் மிகுதியா யாண்டிருந்தார் நெய்த்தொழிலும் வில்தொழிலும் நெறடுவிதத் தொழிலும் மெய்த்தொழில்கள் கற்று மேலோ ரெனவளர்ந்தார் சோழ னதையறிந்து தெய்வச்சான் றோர்களுக்கு வேழம்பல கொடுத்து மிகுகற்பமுங் கொடுத்து நல்லமன்ன ரென்று நாடி மகிழ்ந்திருந்தார் செல்லமன்ன ரான தெய்வச்சான் றோர்களுக்கு அடிக்கல் லெழுதி ஆயிரம் பொன்கொடுத்து முடிக்கு முடிச்சோழன் முத்துமுடியுங் கொடுத்து வீர விருதுகளும் வேழம் பரிகொடுத்து பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து ஆழமுள்ள சான்றோர் அரசாண்டா ரம்மானை சோழனுட னெதிர்த்துச் சோரவந்த மாற்றானை வேழமுடி மன்னர் வெற்றிகொண் டாண்டிருந்தார் வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று அட்டாளத் தேசம் அடக்கியர சாண்டிருந்தார் இப்படியே சான்றோர் இராச்சியத்தை யாண்டிருக்க அப்படியே சீமை அவர்க்குள்ளே யாக்கிவைத்துத் தர்மமுடன் பூமி தானாண் டிருக்கையிலே 40 வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கே ளொண்ணுதலே கலியன் பிறப்பு சீரங்க மானதிலே சீரங்க நாதருந்தான் பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே நாட்டுக்குக் கேடு நாட்பிடித்த செய்திதன்னை கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே அன்னேகே ளஞ்சுதுண்டம் அவனி தனிலேபிறந்து ஆதி தனைநினைத்து ஆளாம லவ்வுயிர்கள் நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி முப்பிறவி யோடாறும் முதலோனைப் போற்றாமல் அப்பிறவி யாறும் அழித்ததின்மே லாயிழையே குருமுனிவ னான கூர்மையுள்ள மாமுனிவன் அருமுனிவ னான ஆதிமுனி யைநோக்கி சிவனெனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன் தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண் டாக வுடல்பிளந்து தன்னே வுயிரோ டஞ்சுசெய்து சுவாமி யுனைநினை யாத்ததினால் வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடல மிழந்துகுண்டம் இன்னம் பிறப்பொன் றுண்டல்லவோ இறந்த குறோணி யவன்தனக்கே வாசமுள்ள நேசா மற்றொப்பில் லாதவனே 60 ஈசனே நானுமொன்று இயம்புகிறேன் கேளுமையா குறோணி யவனுடலைக் கூர்மையுட னேபிளந்து சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய அஞ்சுதர முயிரு அவனிதனி லேபிறந்து பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல் மாயனையு மெண்ணாமல் மதமா யிருந்ததினால் ஆயனந்தச் சூரரையும் அழித்தார்கா ணீசுரரே முச்சூர னோடாறு யுகமு முயிரழித்து அச்சூரக் குடும்பம் அறுத்தந்த மாயவரும் கொண்டிருந்த பொய்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தா ரம்மானை முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய் ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும் வீறாக ஈசுரரை விண்ணப்பஞ் செய்துநின்றான் நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும் வல்லவனே மாமுனியே மாயன்வர வேண்டாமோ என்றுநல்ல ஈசர் இயம்பமுனி யேதுசொல்வான் நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோ ராம்பிறவி பிறக்கத் தவசு புரியப்போய்க் கீழுலகில் 80 உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கி றாரெனவே தேவமுனி சொல்ல சிவனா ரகமகிழ்ந்து கோவுகத்தி லுள்ள குருவசிஷ்டர் தங்களையும் தெய்வலோ கத்திலுள்ள தேவரை யும்வருத்தி வைந்தலோ கத்திலுள்ள வாய்த்ததர்மி தங்களையும் கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரை யும்வருத்தி இணையாக மேலோகத்(து) எல்லோரை யும்வருத்தி சத்தி மறையும் சாஸ்திரத்தை யும்வருத்தி அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும் சங்கமறையை வருத்தித் தான்கேட்பா ரீசுரரும் இங்குண்டோ மாலும் எங்கிருப்ப துண்டனவே எல்லோ ருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார் அல்லோ ருங்கேட்க அரன்சொன்னா ரம்மானை வேழமொத்த தேவரெல்லாம் மேகவண்ண ரிங்கேயில்லை கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார் முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத் 100 தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால் இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும் அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும் குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன் மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை அப்போது தேவர்களும் ஆனமறை வேதியரும் எப்போது மிறவா(து) இருக்கும் முனிவர்களும் நல்லதுதா னென்று நாடி யகமகிழ்ந்து வல்லப் பிறவி வகுக்கத் துணிந்தனராம் பிறவி வகுக்கவென்று பெரியோ னகமகிழ்ந்து 120 திறவி முதலோன் தெளிந்துநிற்கும் வேளையிலே துண்டமது பிண்டமதைத் துளைத்துக்கால் மேல்நீட்டி மண்டைகீழ் கால்மேலாய் வந்துதித்தா னம்மானை எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே அல்லோரும் வந்து ஆதியோ டேவுரைத்தார் உடனே சிவமும் உள்ள மிகக்களித்து இடமே தான்பேர்ந்து எழுந்தருளி ஈசுரரும் அதிசயத்தைப் பார்ப்போமென்று அவரேகும் வேளையிலே எதிராக நின்றுநந்தி ஏதுரைப்பா ரம்மானை மூவர்களுந் தேவர்களும் மூர்த்திகளுங் காணாத தேவரீ ரெழுந்தருளி திசைநோக்கி வந்ததென்ன அப்போது நந்தியுடன் ஆதி மிகவுரைப்பார் இப்போ தோரற்புதமாய் இருக்குதென்றா ரெல்லோரும் வானோக்கிக் காலும் மலர்நோக்கிச் சிரசும் தானமது மாறி தலைகீழாய் நிற்பதுவும் பார்த்துவர லாமெனவே பையநடை கொண்டேனென்றார் சாற்றுமொழி கேட்டுநந்தி தானுரைப்பா ரம்மானை அங்கல்லத் தானம் அழிந்ததுகா ணீசுரரே இங்கு நான்கண்டேன் எழுந்தருளி வந்ததினால் தலந்தா னிளகி தான்வந்த தாலேதான் 140 குலந்தா னழியும் குசல்பிறக்கும் ராச்சியத்தில் வரம்பழியு மாரி மனுநீதங் குன்றுமையா பரம்பெரிய வேதம் பழுதுவருங் கண்டீரே என்றந்த மாமுனியும் ஈசுரரை யுங்கூட்டி குன்றுபொன் னான கிரிமேவித் தானிருந்தார் நடந்த புதுமையென்ன நாம்வருத்திப் பார்க்கவென்று திடந்தெளிந்த மாமுனிவன் செப்பவே ஈசுரரும் சாத்திர வேதச் சதுர்மறையைத் தான்வருத்தி சித்திர புத்திரரைச் சீக்கிரத்தி லேயழைத்து வந்த புதுமை வகையென்ன நம்கணக்கா இந்தக் கணக்கை எடுத்துரைநீ யென்றனராம் அப்போது ஈசுரரை அன்போ டுறவணங்கி செப்போடு வொத்த சித்திரருஞ் செப்பலுற்றார் சாத்திரத்தி லுற்ற தன்மை மிகக்கேளும் சீத்துவ மாகச் சித்திரரும் செப்பலுற்றார் முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே தன்பிறவி யோடாறு தான்பிறந்தான் சூத்திரமாய் மண்தா னுடம்பு வந்துதித் தோன்றனக்கு விண்தா னுடம்பு விலாசக் குருவோடு சலந்தா னுடம்புக்(கு) உறுதி தைரியங்கள் 160 வலந்தா னிளகி வன்னியோ டுங்கூடி கலந்து திரண்ட கட்டைமுண்ட மானதுக்குப் பிலந்தூக்கும் வாயு பிராணன்கா ணீசுரரே முப்பழியோ டாறு உயிரழித்த மாயனுக்கு இப்போது வந்த இவன்தான் கொடிதுவையா மாயனாலு முழமாய் மனுச்சிங் கமுகமாய் வாயமாய் நம்மை வதைத்தானே யென்றுசொல்லி அன்றா யனெடுத்த அளவா யுருவெடுத்துச் சென்றா லவனுடைய திறத்தைநாம் பார்ப்போமென்று வேகத்தால் துண்டம் வெடித்ததுகா ணிப்புதுமை ஏகந்தா னாளும் ஈசனே யென்றுசொல்லி இப்படியே சித்திரரும் எடுத்துரைக்கவே ஈசர் அப்படியே வந்தவனுக்(கு) ஆயுசு மவன்பலமும் கரணமுதல் நடப்பும் கட்டாக நீதேர்ந்து மரணமுதல் நடப்பும் வகுத்துரைநீ நம்கணக்கா அப்போது சித்திரரும் ஆதியருள் நெஞ்சில்வைத்துப் பொற்பாத முண்டெனவே புகல்வா ரியல்கணக்கர் அப்பனு மம்மை அடங்கிமிகப் பெறாமல் கொப்பளித்துத் தானாய்க் குறுத்துவந்த நீசனுக்குத் தத்துவந் தொண்ணூற்(று) ஆறுந் தடிக்குணந்தான் 180 புத்தி புலனைந்தும் பொய்ப்பூண்ட பூதமுமாய் சத்துருக்கன் கண்கால் தலையும் வெறும்நீசம் உற்றுணர்ந்து பாராத உடலு மவன்காலும் மாயக் காயமதுக்கு வருசமொரு நூறிருப்பு தோயநாதத் துளிர் தொகைபத்துநூ றாயிரந்தான் வாழ்வுவந்து சேர்க்கை வருசம் பதினாலு தாழ்வு தசைநரம்பு சனித்தமுப்பத் தோராண்டில் ஆர்க்கை எலும்பு அடைக்கும் நரம்புடனே மூர்க்கத் தசையும் உதிரப் புனலுடம்பும் மண்தண்ணீ ரோடே வகைக்காகாப் பாண்டமிது விண்பரந்த வீடு வெளிவாயில் ஓட்டலுமாய் ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே வீட்டைப் பிரித்தால் விறகுக்கு மாகாது விசையிட்டு ஆட்டும் வித்தாரப் பாவையிலும் பசையில்லாப் பாவையிது பட்சியொன் றாடிவரும் பட்சிக்குக் காயம் பகைத்துக்கிட்ட முட்டுகையில் குச்சியைக் கீழ்ப்போட்டு குதித்தோடு மக்குருவி இக்குருவிக் கூடு இவன்மணிய மீசுரரே அக்குருவி யேகும் அவ்வளவு மிந்நீசன் பண்ணுகிற நீசம் பரமனுக்கு மேராது 200 கண்ணிமைக்கு முன்னே கனவுருட்டுச் செய்திடுவான் இப்படியே வுள்ள இயல்பு மிவன்நினைவும் அப்படியே நீசம் அடைந்த மனவீடும் உள்ளவனாய் வந்து உருவெடுத்தா னாகையினால் எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும் அன்று அவன்தனக்கு ஆளனுப்பித் தான்வருத்தி ஆரைவிடு வோமென்று ஆராய்ந்து ஈசுரரும் சூரமுள்ள காலன் தூத னெமன்தனையும் துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும் மொட்டைக்குற ளிகளையும் முக்கோடிக் கூளியையும் விட்டழைத்து வாருமென்று விடைகொடுத்தா ரீசுரரும் துட்டக் குணத்தோர் துடியாய் மிகநடந்து கொட்டங் கீழாகக் குருத்துநின்ற பாதகனை தட்டு மிகமாறி தலைகீழாய் நின்றவனை ஈச ரழைத்தார் எழுந்திருந்து வாவெனவே நீசன் தனையழைக்க நெளிந்தே வுருண்டவனும் பிரண்டுருளப் பிண்டம் பிசைபிசைந்து தான்மலங்க மருண்ட விழியால் மாகம துகலங்கி மண்ணை விட்டுயர மண்டைவர மாட்டாமல் 220 விண்ணெல்லா மெத்த வெம்மருண்ட தம்மானை கயிலைக் கிடுகிடெங்கும் கண்டபேர் தாம்பதற அகிலங் கிடுகிடெங்கும் அழைக்கவந்தோர் தாம்பதற அரனா ரிடத்தில் அவர்கள்சில ரோடி சிரமா னதுவெளியில் செல்லவர மாட்டாமல் பூமி கலங்கிப் பொறுக்கமிகக் கூடாமல் சாமியந்த நீசன் தான்வரவே மாச்சலுண்டு என்றந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே அன்று சிவனார் அதற்கென்ன செய்வோமென்று தம்மாலே யாகும் தந்து தெளிந்தெடுத்துக் கம்மாளன் வேலையினால் கவ்வையொன் றுண்டாக்கி குத்திப் புறத்தே கோதிவையு மென்றுசொல்லி எத்திசையும் நந்தி ஈசுவரனார் கைக்கொடுத்து வேண்டியந்த நந்தி விரைவா யவர்நடந்து ஊண்டிநின்ற நீசனையும் ஒருகவ்வை யால்கோதி வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம் பளிரெனவே வந்து பொருந்தியதே யம்மானை பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும் சுவாமிமுன் பானதிலே சுரண்டியத னாலிழுத்து கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே 240 கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லா மிப்போது என்றனிடங் கேளென்று ஈசுரனார் தானுரைக்க உடனே யவனும் உள்ள மிகக்களித்து விடமேதான் பூண்டு விரிகந்தைத் தானுடுத்து மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுடத் தோலி லிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான் என்று களிப்பாய் ஈசுரரை யந்நீசன் அன்று மொழிய அமர ரதையறிந்து பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல் எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண் ஏகம் நிறைந்தவர்காண் இறவா திருப்பவர்காண் பட்சிப் பறவை பலசீவ செந்துகட்கும் நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமு மளிப்பவர்காண் மாயவனும் நான்முகனும் மறையு மிகக்காணாமல் தேயவா றுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண் இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும் புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான் கலிச்சி தோற்றம் ஆனால்தான் தேவர்களே அப்படிநீ ரொப்பினீரே 260 தானா யிருந்து சர்வமதுமுண் டாக்கிவைத்த ஆனா லெனதுடைய அளவி லளவாக மானா ரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போங்காண் என்றந்த நீசன் இழிவாகச் சொல்லிடவே அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார் நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று வல்லபர மேசுரனார் வகையே தெனப்பார்த்து உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ வென்றுரைத்தார் அப்போது நீசன் அரனார் தனைநோக்கி ஒப்பமாகா தென்பலத்தில் ஒன்றி லரைப்பலமாய் அழகி லதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய் குழகிய வாயழகாய்க் குரும்பத் தனத்தழகாய் மேனி யழகாய் விழியழகாய் வீச்சழகாய் யோனி யழகாய் ஒடுங்கு மிடையழகாய் கரமழகாய்க் காலழகாய்க் கண்ணழகாய்ப் பல்லழகாய் சரக்கூடு முன்னழகாய்த் தலைகண்டம் பின்னழகாய் தொடையழகாய் விரலழகாய்ச் சொல்லழகாய்ப் பல்லழகாய் நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய் இடையழகாய் மேனி இறுக்கத் துடனழகாய் 280 உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய் அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல் மூவர்தே வர்களையும் மோக மாய்மயக்கச் சீவ னதுகொடுத்துத் திட்டித்துத் தாருமென்றான் அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது கேட்டதற்கு என்செய்வோ மென்றுசொல்லி அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும் திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தா ரம்மானை கேட்டமா நீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே தேட்டமுட னிப்போ செப்பென் றெனவுரைத்தார் அப்போது சத்தி ஆதி யடிவணங்கி ஒப்பொன் றில்லாத உடைய பெருமானே பாதியாய் நீசனையும் பகுந்தே யவனுடம்பில் விதியாயிடது விலாவி லொருயெலும்பைத் தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே என்று உமையாள் இப்படியே சொன்னவுடன் அன்றுஅந்த நீசனுட அரையிலோ ராக்கையிட்டு இருக்கக் கீழ்கட்டி எழுந்திருநீ யென்றவுடன் 300 பொருக்கென வேயிடது புறத்தி லொருயெலும்பைத் தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து வெறிகொண்ட நீசன் விலாவி லொடித்ததினால் நீசன் பலத்தில் நேர்பாதி யாகுமென்று வாசமட வாய்வரவே மதனன் தனைநினைத்தார் மதனை யரன்நினைக்க மாநீசன் தன்னெலும்பு வதன மடமாதாய் வந்ததுவே யம்மானை நீசன் நினைத்த நினவுபோ லம்மடவை பாசக்கலை தூவி பகட்டிவிழித் தாள்மருட்டி மும்மடங்காய் மோகம் முருகுக் குழல்சரிய கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள் கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியுடன் அண்டாளைச் சென்று ஆவிமுகத் தோடணைத்து நன்றாகத் தர்மம் நாள்தோறுஞ் செய்துகுண்டம் கண்டாரைப் போலே கட்டினான் மங்கையரை மங்கையரை நீசன் வாயாரா முத்தமிட்டுக் கொங்கைதனைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று எடுப்பா னவளை இடுப்பிலே வைத்திடுவான் படுப்பமோ வென்று பாய்விரிக்க நின்றிடுவான் பெண்ணோ டுறவாடிப் பேதலித்து அந்நீசன் 320 மண்ணோடு மண்ணும் மருவுவது போல்மருவி ஆசை யவள்பேரில் அங்கமெல்லாந் தானுருகி நீச னவள்பேரில் நினைவாக நின்றதல்லால் படைத்தருளி வைத்த பரமனையு மெண்ணாமல் தடதடெனப் பெண்ணைத் தானெடுத்து முத்திடுவான் அப்போது தேவர் அமரர்களும் பார்த்தவனை இப்போது உன்விழிக்கு ஏற்கும் படியாகப் பெண்படைத்துத் தந்த பெரியோனைத் தான்வணங்கி மண்பரந்த மன்னா வரங்கேளு என்றனராம் என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன் அன்றந்த ஈசர் அடிவணங்கி யேதுசொல்வான் என்றனக்கு ஏற்ற இளமயிலை யுண்டாக்கித் தந்தருளுங் கோவே சர்வ தயாபரனே இனியெனக்கு ஏற்ற இயல்வரங்க ளானதெல்லாம் கனியிதழும் வாயானே கையில்தர வேணுமென்றான் கலியன் கேட்ட வரங்கள் அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி இப்படியே உன்றனக்கு ஏதுவரம் வேணுமென்றார் என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன் தெண்டனிட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு கேட்பான் வரங்கள் கீழுமேலும் நடுங்க 340 வீழ்ப்பாரங் கெட்ட விசைகெட்ட மாநீசன் மாயவனார் தன்னுடைய வாய்த்த முடிதனையும் தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாருமென்றான் அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தன்பிறப்பும் வரமுடைய சத்தி வலக்கூறுந் தாருமென்றான் சிவமூலஞ் சத்தித் திருமூல மானதுவும் தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும் மாலுடைய மூலம் வாய்த்தலட்ச மிமூலம் மேலுடைய தெய்வ விதமூலமுந் தாரும் காலனின் மூலம் காமாட்சி தன்மூலம் வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம் கணபதி யின்மூலம் கிங்கிலியர் மூலம் துணையதிப னான சுப்பிரமணியர் மூலமதும் ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மூலமெல்லாம் வாயிதக் கண்ணே வரமாகத் தாருமென்றான் அல்லாமற் பின்னும் அந்நீசன் கேட்டவரம் பொல்லாத வித்தை புகலக்கே ளொண்ணுதலே கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவதுவும் நாடு பாழாக்கி நகரிகொள்ளை யாக்கிடவும் துயில்வோர் போலுலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு 360 அயதிமோ கினிக்கருவும் அரனேநீர் தாருமென்றான் ஆவடக்கு மோகினியும் அழைக்கவெகு மோகினியும் நாவடக்கு மோகினியும் நருளழைக்கும் மோகினியும் ஆண்பெண் பிரிக்க அதிகவெகு மாரணமும் கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுக்கும் மாரணமும் கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும் தொல்லை வருத்தி சோலிசெய் யுச்சாடனமும் லோகமது வாழாமல் உள்ளமுங்கித் தாழ்ந்திடவும் ஏகமாய்த் தம்பனமும் இதின்கரு வுந்தாரும் கொட்டிக் கலைக்க கூறுகெட்டச் சல்லியமும் ஒட்டியமுந் தாரும் உள்ளகரு வுந்தாரும் பூசை முறையும் புவனச்சக்க ரமுடனே தீட்சை விதிமுறையும் சிவவிதியுந் தாருமையா சலமேல் கனல்மேல் தானிருக்கு மோடிகளும் கலைமேல் குடைபிடிக்கக் கருவது வுந்தாரும் மிருக மதைவருத்தி வேலையது கொண்டிடவும் இறுக்கமுள்ள வாதை எனக்குவிட்டுத் தாருமையா அட்டகர்ம மெட்டும் அடக்கிவரந் தாருமையா மொட்டக் குறள்களையும் முன்னேவலாய்த் தாரும் மந்திர சாலம் மாய்மாலத் தந்திரமும் 380 இந்திர சாலம் எனக்கருளு மென்றுரைத்தான் நோவுக் கிரகம் நுழையாம லென்றனக்குத் தாவுகெவுனக் குளிகை தாருமென்றான் மாநீசன் வந்த பிணிதீர்க்க வைத்திய வாகடமும் தந்துதந் தாகப்பல சாஸ்திர முந்தாரும் மூவருட வடிவும் உதித்துவந்த முற்பிறப்பும் தேவருட பிறப்பும் தெளிந்தெழுதித் தாருமென்றான் பறக்குங் குளிகை பரனையழைக் குங்குளிகை மறைக்குங் குளிகை மாலைவருத் துங்குளிகை சாலக் குளிகை சத்திவருத் துங்குளிகை வாலைக் குளிகை மறையைவருத் துங்குளிகை காளிதனை வருத்திக் கைக்குள் விடுங்குளிகை கூளிகணத் தைவருத்திக் கொண்டுவரும் நற்குளிகை தேவரையும் வானவரைச் சென்றழைக் குங்குளிகை மூவரை யுமழைத்து மோடிசெய்யுங் நற்குளிகை பழிசெய்தால் வெல்லப் பாரத் தொழில்கள்முதல் சுழிவரைகள் தானறிய சூதானமாய்த் தாரும் மருட்டு விதமும் மாஞாலக் குண்டணியும் உருட்டுங் கொடிய உரம்பேசிய மதமும் வாள்வெடிக ளாயுதங்கள் வாய்தடுக்கத் தந்திரமும் வேழ்வருத்தி வேலைகொள்ள விசையடக்குந் தந்திரமும் 400 துட்ட மிருகம் தூறுவிசங் கொண்டதெல்லாம் கட்டுக்குள் கட்டிக் கீழ்ப்படியத் தந்திரமும் கட்டுச் சுருக்கும் கடியபல வித்தைகளும் நட்டு முட்டுள்ள நவநிதிய வஸ்துக்களும் தந்திந்தப் பெண்ணுடனே சார்ந்துவிளை யாடிருந்து விந்து சனங்கள் மிகுவாகத் தானுதித்துக் கிளையோடே வாழ்வு கெறுவித மாயாண்டு வளையான மாதை மறவாம லெப்போதும் புத்திக் கருத்தும் பெண்பேரி லென்றனக்குச் சற்றும் நெகிழாமல் தாரும்வர மென்றுரைத்தான் அப்படியே வுள்ளவரம் அந்நீச னுக்கருள எப்படித்தா னென்று எண்ணினா ரீசுரரும் எண்ணியே ஈசர் ஏந்திழையாள் சத்தியுடன் புண்ணிய நாதன் புகலலுற்றா ரம்மானை முப்பத்தி ரண்டறமும் முகித்திருந்த வொண்ணுதலே செப்புத் தனத்தழகு செவ்வே கருங்குயிலே வின்னோத நீசன் விபரீதமாய்க் கேட்டதற்கு இன்ன விதமென்று இயம்புநீ பெண்மயிலே அப்போது சத்தி ஆதி யடிவணங்கி 420 நற்போது மறவா நல்லகன்னி யேதுரைப்பாள் சாத்திரமும் வித்தைகளும் தந்திரமுங் கேட்டதினால் சூத்திரச் சித்தனொன்று சுறுக்காயுண் டாக்குமென்றாள் அகத்தீசர் பிறப்பு உடனேதான் ஈசர் உள்ளங்களி கூர்ந்து திடமாய்த்தான் ஈசர் சிந்தைதனி லுத்தரித்து அகத்தீச னென்று ஆதிமன துள்ளிருந்து செகத்தோர்கள் காண சித்தாதி தானாகி சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே சூத்திரச் சித்தாதி தோன்றினன்கா ணம்மானை எல்லோருங் கண்டு இவராகு மென்றுசொல்லி அல்லோரு மெச்சி அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதென்று ஈசர் நன்முனியைத் தானோக்கி வல்ல கவியோடு வந்துதித்த சாஸ்திரியே என்னென்ன சாஸ்திரங்கள் ஏதேதுக் கானாலும் இன்னாநிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவுமென்றார் அப்போ தகத்தீசர் ஆதிமறை முதலாய் மைப்போடும் வித்தை மாஞால அச்சரமும் கொடுத்தோ மெனவே கூறினார் மாமுனியும் கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும் 440 அக்கறுகு சூடும் ஆதிமுத லந்தம்வரை வசமாகும் வித்தை மரணம்வரா வித்தைகளும் நிசமாகும் வித்தையெல்லாம் நீசனுக் கேகொடுத்தோம் கொல்லவே மெத்தக் கோபத்தால் நீசனையும் வெல்லவகை யில்லையல்லோ விடையேறு மீசுரரே இந்நீசன் லோகமதில் இருந்தாளும் நாளையிலே அன்னீத மல்லால் அறமறிய மாட்டானே அல்லாமற் பின்னும் அச்சுதனார் சக்கரமும் பொல்லாதான் கொண்டு போறான்மால் கிரீடமும் இவ்வரிசை ரண்டும் இவனிடத்தி லேயிருந்தால் எவ்வொருவ ரால்வதைக்க ஏலாது நீசனையும் கலியரசன் சத்தியம் என்று அகத்தீசர் இப்படியே தான்கூற அன்றுஸ்ரீ ரங்கர் ஆண்டியுரு தானாகித் தலைவிரித்துக் கந்தை சற்றே கலைபூண்டு சிலையில்லா வெங்கையால் சென்றாரே நீசனிடம் நீச னிடத்தில் நெடுமால்தான் முன்னேகி வாசமுடன் வார்த்தை வழுத்தினா ரம்மானை ஈச னிடத்தில் இறைஞ்சிவரம் பெற்றதிலே தேச இரப்பனுக்குச் சிறுகா யென்றுரைத்தார் தாரா தேபோனால் சாபமிடு வேனுனக்குப் 460 பாராய்நீ யென்று பகட்டினா ரெம்பெருமாள் அப்போது நீசன் ஆண்டி தனைப்பார்த்து இப்போது போடா இரப்பனோ டேதுசண்டை மாயன் வரவேணும் வலுப்பார்த்து விட்டிடுவேன் பேய னுடனெனக்குப் பேச்சென்ன நீபோடா என்று அந்தநீசன் இவ்வளமை கூறிடவே அன்று பரதேசி அவனோடங் கேதுரைப்பார் பிச்சைக் காரன்தனக்குப் பெலமில்லை யென்றோநீ அச்சம தில்லாமல் அடமா யிதுவுரைத்தாய் பண்டாரந் தன்பலமும் பழிநீசா வுன்பலமும் சண்டையிட்டுப் பார்த்தால் தான்தெரியும் மாநீசா என்று பண்டாரம் இதுவுரைக்க அந்நீசன் குன்று கரத்தெடுத்த கோபால ரோடுரைப்பான் ஆள்படை களில்லாமல் ஆயுதங்க ளில்லாமல் வேழ்படை களில்லை வெட்டவா ளிங்குமில்லை தடியில்லை சக்கரமும் தானில்லை உன்கையிலே முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோ டுயுத்தமிட்டால் ஆண்மையில்லை யென்றனக்கு ஆயிழைமா ரேசுவரே தாண்மைமொழி பேசாதே தலைவிரித்துப் பேயாநீ மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் 480 தேவரையும் வேலைகொள்ள சிவமூலம் பெற்றிருக்க ஒன்றில்லாப் பேயனோடு யுத்தமிட்டா லென்றனையும் நன்றினியப் பெண்கள் நகைப்பார்நீ யப்புறம்போ என்று அந்தநீசன் இயம்பத் திருமாலும் நன்றுநன்று நீசா நானுரைக்க நீகேளு பண்டாரத் தோடே படையெடுத்தா லாண்மையில்லை என்றேதா னிப்போ(து) இயம்பினையே மாநீசா பண்டார மென்றும் பயித்தியக் காரனென்றும் ஒண்டியாய் வந்தவனொ(டு) யுத்தமிட மாட்டேனென்றும் பிச்சைக் காரனெனவும் பெரிய இரப்பனென்றும் கச்சையில்லா னென்றும் கணைகம்பில் லாதானென்றும் இப்படியே பண்டாரம் என்றிருக்கும் பேர்களுக்கு எப்படியும் வம்புசெய்வ(து) இல்லையென் றுண்மையுடன் சத்திய மாகத் தானுரைநீ பார்ப்போமென்றார் புத்தியில்லா நீசன் புகலுவான் பின்னாலே பண்டார மென்றும் பரதேசி யானவரைத் தண்டரளக் கந்தைத் தலைவிரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன் அவரோடு சண்டையிடேன் ஒட்டியே வம்பு ஒருநாளுஞ் செய்வதில்லை என்றான்காண் நீசன் எம்பெருமாள் தானுரைப்பார் 500 நன்றாக இப்படியே நட்டிசெய்ய மாட்டேனென்று ஆணையிட்டுத் தாவென்று அருளினா ரெம்பெருமாள் வீணமட நீசன் விளம்புவா னப்போது ஆரார்கள் பேரில் ஆணையிட வேணுமென்று பேராகச் சொல்லு பிச்சையெடுப் போனேயென்றான் அப்போது பண்டாரம் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது நீதான் ஈசன்தனை வணங்கி வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும் பெண்டிவள் பேரதிலும் பெலமாக இப்போது ஆண்டி பரதேசி ஆகிவந்த பேர்களையும் வீண்டிடறு செய்யேன் எனவேநீ யாணையிட்டால் ஆணைக் கிடறுசெய்து ஆண்டிகளைச் சில்லமிட்டால் வீணேபோ மென்வரங்கள் வீட்டுப்பெண் ணார்கள்முதல் பெண்தோற்று நானும் பெற்றவர முந்தோற்று மண்தோற்று வாழ்வும் மக்கள்கிளை தோற்றுச் சேனைத் தளந்தோற்று சீமையரசுந் தோற்று ஆனைப் படைதோற்று அரசுமே டைதோற்று என்னுயிருந் தோற்று என்கிளையோ டேநானும் வன்னரகில் போவேன் என்றேவாக் குரைத்திடுநீ அப்போது நீசன் ஆண்டி யுரைத்தபடி 520 எப்போதும் மறவேன் இதைமறந்து வம்புசெய்தால் சொன்னபடி யெல்லாம் தோற்றிறந் தென்னுயிரும் வன்னரகில் போவேனென்று ஆணையிட்டான் மாநீசன் சக்கராயுதம் பணமாதல் நல்லதுதா னென்று நாட்டமுற்றுச் சன்னாசி வல்ல பெலமுள்ள மாநீசா நீகேளு மந்திரங்க ளாலே மகாகோடி ஆயுதங்கள் தந்திரங்க ளாலே தான்வருத்த லாகிடுமே அப்படியே யொத்த அச்சரங்கள் தானிருக்க இப்படியே ஆயுதத்தை எடுத்துச் சுமப்பதென்ன நீகேட்ட சக்கரத்தை நிமலனவர் தாராமல் தொனிகெட்ட வெற்றிரும்பைச் சுமவென்று தந்தார்காண் இரும்பைச் சுமந்தால் இல்லைகா ணொன்றுபயன் தரும்பொருள்போ லுள்ள சம்பாத்தியந் தாறேன் மண்டலங்கள் தேசம் வாழ்வுக ளுண்டாவதற்கும் கண்டார்கள் மெய்க்கக் கனக திரவியம்போல் தருகிறே னுன்றனக்குத் தான்வேண்டு நீயெனவே பருமுறுக் காயாண்டி பகர்ந்தாரே நீசனுக்கு அப்போது நீசன் அகமகிழ்ந்து கொண்டாடி இப்படியே தாருமென்று ஈந்தானே சக்கரத்தை சக்கரத்தை வேண்டி சங்குசரத் தாமன் 540 மிக்கப் பணமாக்கி மிகுத்தசக்க ராயுதத்தைச் சபிக்கவே மாயன் சக்கரா யுதங்கேட்கும் நீச னிடத்தில் என்னைப் பணமாக்கி ஈயுறீரே சுவாமி இப்போது சாபமிட்டு இப்போ திடுஞ்சாபம் எப்போது தீருமென்று அப்போது சக்கரமும் ஆண்டியடி போற்றிடவே கலிமா றும்போது கடருமென்றா ருன்சாபம் வலியான சக்கரமும் வாய்த்தபண மாகியதே பணமாகிக் கீழே பறந்து குதித்திடவே இணமான நீசன் எட்டி யவன்பிடித்துக் கண்ணில்மிக வொற்றிக் காரிகையாள் கைகொடுப்பான் பெண்ணே நமக்குப் பெலங்கள்வந்து வாய்த்துதடி என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி மன்று தனில்போக வரந்தாரு மென்றுரைத்தான் அப்போது தன்னில் ஆண்டியவ ரங்குசென்று இப்போது இங்கேவைத்து இவன்தான் மொழிந்ததெல்லாம் தப்பாம லாகமத்தில் தானெழுதி வையுமென்றார் முப்போது வுள்ள முறைபோலே மாயவரும் ஆகமத்திற் பதித்து ஆண்டார் துரிதமுடன் நாகரீக நாதன் நடந்தார்ஸ்ரீ ரங்கமதில் 560 கலியுகம் நீசனையு மூரேபோ என்று நிமலனுந்தான் ஈயுகிற போது ஏதுரைப்பாள் சத்தியுமே வன்னச் சிவனாரே மாபாவி கேட்டவரம் என்னென்ன வாயமதாய் இருக்குதுகா ணுத்தமரே வலியான மாதே மாநீசன் கேட்டதுதான் கலியுகம் போலிருக்கு கண்ணமுதே யென்றுரைத்தார் சிவம்வாய் திறந்து செப்பக் கலியுகமாய் இதமான தேவர் எழுதினா ரகமத்தில் கலியுக மெனச்சிவம் கருதிடத் தேவர்கள் பொலிவுடன் சேர்த்தனர் புராண மீதினில் சலிவுடன் நீசனும் தரணியில் போந்திட வலியுள்ள மாயன் ஸ்ரீரங்க மேவினார் மாயனுக்கு ஆணை மாநீச னிட்டதெல்லாம் தூய பெருங்கணக்கில் தொகுத்தெகுதி வைத்தனராம் நீசக் கலியன் நிறைவோன் பதம்போற்றித் தேச மதில்வரவே சென்றான்கா ணம்மானை கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே சிலிரெனவே லோகம் திணுக்கிடவே யம்மானை நல்லவை மறைதல் தர்மமாய்ப் பூமி தானிருக்கும் நாளையிலே வர்மமாய் நீசன் வரவேகண் டம்புவியில் 580 நல்ல பறவை நல்மிருக ஊர்வனமும் வல்ல வகைநீதம் மாற்றங்கே ளன்போரே வெள்ளானை வெள்ளை வேங்கையொடு வெண்கடுவாய் தள்ளாத சற்பம் தலையைந்து கொண்டதுவும் வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில் கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன் நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம் வல்லவெண் நரிகள் வளர்ந்துவரும்வெண் காகம் ஆளியொடு சிங்கம் ஆனையி றாஞ்சிப்புள்ளும் வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள் மிருகமதில் வெள்ளைகொண்ட மேல்மிருக மானதெல்லாம் அறியவே குண்டம் அதுநோக்கிப் போயிடவே பால்நிற மான பட்சிப் பறவைகளும் மேல்பரனார் குண்டம் மிகநோக்கி நாடிடவே வெண்சாரை யைந்துதலை விசஅரவ மானதெல்லாம் துஞ்சாத நாதன் துணைதேடி நாடிடுமாம் முன்னிருந்த சாஸ்திரமும் முறையும்பஞ் சாங்கமதும் பின்வந்த நீசனினால் போகவழி தேடிடுமாம் நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபமும் போயகல்வோ மென்று புத்திதனி லெண்ணிடுமாம் 600 முன்னிருந்த ரத்தினங்கள் முத்துவை டூரியங்கள் பன்னுமறை சாஸ்திரமும் பாதையது கொண்டிடுமாம் சங்கு சமூலம் சலக்கண் சலத்தில்விழ பொங்குநவ ரத்தினமும் போகவழி தேடிடுமாம் கடல் விளைவெல்லாம் கண்காணா தோடிடுமாம் தடவரையி லுள்ள தங்கமது மண்கோர்க்க சிலைகள் பதிகள் தெய்வத்திருச் சமூலம் அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய்மறைய மாரி மறைய மலர்க்கண் மிகமறைய ஏரி பாழாக எண்ணினதே யம்மானை கர்மக் கலியதனால் கடல்கோபித் தேயடிக்க தர்மந் தலைகவிழ்ந்து தானிருந்து தம்மானை தருமமெய் நீதமதும் தாரணியில் உர்வனமும் பொறுமை யுடைய பெரிய மிருகமதும் நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும் தாகமுள்ள முத்து சாஸ்திர மாமறையும் நீதத்தோ ரெல்லாம் நீலவண்ணர் சங்குடனே பாதத்திருக் குண்டம் பாதைவழி தேடிடுமாம் நடந்தோர்க ளெல்லாம் நாடி வழிவரவே கடந்தார்கள் வல்ல கலியைவிட்டுக் காடதிலே 620 காடதிலே செல்ல கனத்தபஞ்ச பாண்டவர்கள் வாட லுடவாய் வைகுண்டந் தானேக கண்டாரே தர்மர் கடந்துநின்ற நீதமதைப் பண்டாரத் தர்மர் பகர்ந்தா ரதினோடு நாட்டிலுள்ள நீதமெல்லாம் நடந்துகா ணாதேசென்றால் வீட்டி லுறுதியுள்ள மேல்வீடு காண்பதற்குப் போவேனோ தர்மம் போனதினால் நாயடியேன் சேர்வேனோ குண்டம் செய்தர்ம மில்லையென்றால் என்றுரைக்கப் பாண்டவர்கள் இயல்தர்ம மேதுரைக்கும் பொன்றுவந்து லோகம் பொய்ப்பூண்ட தானதினால் எங்களுக் கங்கே இருந்தா லாகாதெனவே செங்கண்மா லாயனையும் தேடியே போறோமென்றார் அப்போது பாண்டவர்கள் அன்பாய்ப் பதம்பணிந்து இப்போது உங்களையும் இழந்துவிட் டிங்கிருந்தால் கர்மக் கலிமூழ்கிக் காண்பதில்லை குண்டமது தர்மத் தோடங்கே தான்வருவோம் கண்டீரே தர்மமும் நீதமதும் தாட்டீகப் பாண்டவரும் வர்மமில்லாக் குண்டம் வழிநோக்கிச் செல்லுகையில் மேலான மாமிருகம் வேதக் காராவுகளும் நாலா மொருதலையும் நல்ல அரவமதும் 640ந வெண்பட்சி யான மேலான பட்சிகளும் இன்பட்சி யெல்லாம் எங்கினிப் போவோமென்று கதறி யழுது கனைத்துநின்றார் காடதிலே பதறி யழுது பறவை மிருகமொடு நிற்கு மளவில் நீலவண்ணர் தானறிந்து பக்குவப் பிராயப் பண்டார மாகிவந்து ஏதுகா ணீங்கள் இந்தவன வாசமதில் ஓதிக் கரைய உங்கள்விதி யானதென்ன செப்போடு ஒத்த திருமால் தனைப்பார்த்து அப்போது எல்லாம் அழுதழு தேதுசொல்லும் நீசக் கலியன் நீணிலத்தில் வந்ததினால் தேசமதி லெங்களுக்குச் செல்லவிருப் பில்லையையா என்றுரைக்கச் சன்னாசி ஏதுரைப்பா ரன்போரே நன்றுநன்று கேளும் நான்சொல்ல நீங்களுந்தான் பாண்டவரைத் தர்மமதைப் பாரநீ தமதையும் ஆண்ட வைகுண்டம் அடையப்போ மென்றுரைத்தார் தெய்வக் காராவைச் சிறந்தவெள் ளானைகளை மெய்வரம்பு கொண்ட மிகுத்த மிருகமெல்லாம் கும்பக் குருமலையில் கூடியே நீங்களெல்லாம் சம்பு சதாசிவத்தைத் தான்போற்றி யுள்ளிருத்தி 660 நீசன் தனையறுத்து நீதயுகந் தானாள வாசமுட னேவரவே வரம்வேண்ட நில்லுமென்று ஐந்தலை நாகமதை அந்தமுனி தானழைத்து உன்றனக்குச் செய்தி உரைக்கிறேன் கேளெனவே அலைமுகத்தில் நூற்றொன்று ஆழம் வரைக்கீழே நிலைதனிலே நின்று நெடியோனை உள்ளிருத்தி கலியை யழித்துக் கடியதர்ம மாகவேதான் வலியயுக மாளுதற்கு வைகுண்டா வாவெனவே நிற்பாய்த் தவசு நீபோவென அனுப்பி நற்பாக நீங்கள் நற்றவசு செய்யுமென்று சற்பமதுக் கரசு சங்குவெள்ளைச் சாரைதன்னை பற்பக் கிரிதனிலே பைம்பொன்னிறப் பொய்கையிலே வம்பை யழித்து வாய்த்ததர்ம ராச்சியத்தில் அன்பரோ டேயரசு ஆளத்திரு மால்வரவே வேணுமென்று நிட்டை விரும்பிச்செய் யென்றேதான் ஆணுவ நாதன் அதற்கு விடைகொடுத்தார் அன்னப்பட்சி யான அதிகப் பறவைகளும் பொன்னம்பல கிரியில் போய்த்தவசு பண்ணுமென்றார் சாத்திர மாமறையைத் தானெடுத்து மாமுனியும் சூத்திர நெஞ்சத்து உள்ளிருத்தி வைத்தனராம் 680 கலைமுனி ஞானமுனி தவசு இருத்திஸ்ரீ ரங்கம் ஏகவென் றெம்பெருமாள் கருத்தி லுறயிருத்திக் கட்டாய் வருகையிலே ஞான முனியினொடு நல்ல கலைமுனிவன் தானமுள்ள மாமுனிவர் தலைகவிழ்ந் தேதவசு சடைத்து முகம்வாடித் தானிருக்கு மப்போது திடத்தமுடன் நல்ல திருமா லருகேகி நன்றியுள்ள மாமுனியே நல்லகயி லாசமதில் கண்டதுண் டுங்களையும் காட்டில்வந்த வாறேது அப்போது மாமுனிவர் ஆதி பதம்பணிந்து செப்போடு வொத்தத் திருமாலே நாங்களுந்தான் கயிலாச மீதில் கறைக்கண்டர் பாதமதை ஒயிலாகப் போற்றி ஒழுங்கா யிருந்தவர்காண் இருக்குமந்த நாளையிலே எங்களிரு பேர்களையும் தருக்குகந்த ஈசர் தன்னையவர் வருத்தி மாயன் மேல்பிறக்க மண்ணுலோ கந்தனிலே காய மிழந்து காணா துருவெடுத்து மறைந்திருக் கிறாரெனவே வானோர்கள் சொல்வதினால் சிறந்தபுகழ் மாயவனுக்குத் தேருஞ் சிங்காசனமும் மண்டபங்கள் மேடை வாய்த்தநீ ராவிகளும் பண்டையுள்ள நல்ல பைம்பொன்னிறப் பொற்பதியும் 700 உண்டுகாண் துவாரகா யுகத்திலே யென்றுசொல்லி கண்டுகொண்டா னானால் கலியனதை யாண்டுகொள்வான் முன்போய்த் தானீங்கள் உவரிதனை வருத்தி இன்பமுள் ளவகைகள் எல்லாமதி னுள்ளேவைத்து வைகுண்ட ரங்கே வந்தா லிதைக்காட்டி மெய்கொண்ட வுங்கள் இடத்திலே போவுமென்று அல்லாதே போனால் அக்கினியா லுங்களையும் இல்லாதே செய்வார் என்றுசொல்லி வாருமென்று அனுப்பினா ரெங்களையும் அதற்காக இங்குவந்தோம் துனுப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம்வைத்து ஏகினோங் கயிலை இடைவழியில் மாநீசன் தாவி வரக்கண்டு தவலோக மேமறைந்து கர்ம விதிப்பயனால் கலக்க மிகவடைந்து தர்மச்சிறப் பில்லாது தலைகவிழ்ந் திருந்தோமென்றார் அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும் இப்போது கூட்டி ஏகின்ற அப்பொழுது கருங்குரங்கு காரானை கரியகடு வாய்புலியும் இருங்கருட னூர்வனமும் எறும்புஈ மூட்டைகளும் கள்ளக் கசடுள்ள கரிய மிருகமதும் கொள்ளைகொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும் 720 தரந்தரமாய்க் கூடித் தாமே திரளாக வரவேகண் டெம்பெருமாள் மாமுனியைத் தான்பார்த்து ஏதேது மாமுனியே இந்த வழிதனிலே ஈதே தெனவே எனக்கேட்க மாமுனிவர் நீச னுதிரம் நீதிகெட்ட இம்மிருகம் வாசமுள்ள பட்சிகளும் மானிலத்தி லூர்வனமும் பிறந்துதித்து வந்து பேருலகி லம்மானை சிறந்தறிந்து எம்பெருமாள் செவியிலே கையறைந்து விலகியே போக வேணுமென் றெம்பெருமாள் மலகிய மாமுனிவர் மாயனடி போற்றி எங்களுக் கெங்கே இருக்கவே சொல்வீரென்று அங்கந்த மாயவரின் அடிதொழுதா ரம்மானை அப்பொழு தெம்பெருமாள் அந்தமுனிக் கேதுரைப்பார் இப்பொழுது நீங்கள் ஏகுங்கோ செந்தூரில் செந்தூர்ப் பதியில் சிறந்தவா ரிக்கரையில் நந்த கோபால நாராய ணாவெனவே மாயநீ சக்கலியை வதைசெய்து தர்மமதாய் ஞாயமுடன் வைந்தர் நாட்டையொரு சொல்லதுக்குள் ஆளவர வேணுமென்று அருந்தவசு பண்ணுமென வேழமொத்த மாமுனிக்கு விடைகொடுத்தார் மாயவரும் 740 விடைவேண்டி மாமுனிவர் வேல னுறைந்திருக்கும் கடலான தற்கரையில் கடுந்தவசு பண்ணினரே அப்படியே மாமுனிவர் அங்கே தவசிருக்க இப்படியே மாயன் இசைந்தஸ்ரீ ரங்கமதில் போகமுனி தவசு போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன் தாவு மொருமலையில் தலைசிதறிச் சாகவென்று வேகித்து மாமுனிவன் விசையாக முட்டுகையில் ஆகமுற்று எம்பெருமாள் அவனோடங் கேதுரைப்பார் மலைதனிலே முட்டி மாளவென்று மாமுனிநீ குலைகுலைந்து நின்றவிதம் கூறுநீ யென்றனராம் அப்போது மாயவனார் அடிபோற்றி யேதுரைப்பான் செப்பமுள்ள மாயவரே சீமைதனை யளந்த மாயவரேநானுமினி மாள்வதல்லா லிங்கிருக்க ஞாயமில்லை அய்யா நாரா யணப்பொருளே என்றுரைக்க மாமுனியும் ஏதுரைப்பா ரெம்பெருமாள் உன்று வசனம் உரையென்றார் மாமுனியை என்றெம் பெருமாள் இவையுரைக்க மாமுனியும் அன்று முனிசொன்ன வசனங்கே ளன்போரே தர்மநீ தமதுவும் தரணிதனில் மானுபமும் கர்மக் கலியால் கட்டழிந்து போச்சுதையா 760 நன்மையெல்லாம் நாடுவிட்டு நடந்து மறைந்ததினால் வன்மம்வந்து வையகத்தில் வளர்ந்த படியாலும் நானிருந்த நிட்டை நாலிரண் டாகையிலே மானிபங்கள் தர்மம் மறையத்தான் போனதினால் என்தவந்தான் வம்பில் இழந்தேனே யென்றுசொல்லித் தன்தலையைத் தான்சிதறிச் சாகவே ணுமெனவே மலைதனிலே முட்டி மாண்டுவிட வேணுமென்று அலைமேல் துயின்ற ஆண்டியோ டேயுரைத்தான் நல்லதென்று யுன்றனக்கு மாளவென்றால் வேறில்லையோ கல்லிலே முட்டிக் கண்தவர்ந்து சாவதென்ன சொல்லுநீ யென்று திருமா லிதுவுரைக்க மலைப் புதுமை அப்போது மாமுனியும் அந்தமலைப் புதுமை இப்போது சொல்லுகிறேன் என்றே வுரைக்கலுற்றான் வேதா விதித்த மேலான ஆகமம்போல் நாதாந்த வேதம் நாலுண்டு கண்டீரே கலியன் பிறந்தபின்பு கட்டான வேதமொன்று சலிவாகி வேதம் தான்விளங்கா வண்ணமுந்தான் இளகாமல் கற்போல் இருந்ததுகாண் வேதமது குழைவான வேதா குறியா யதையறிந்து 780 கல்வி யிளகாமல் கற்போ லிருந்ததினால் பல்லுயிர்கள் வாழும் பாரிலொரு பங்காக மலையாய் வளர்ந்து வைந்தர் வருகையிலே அலைபோலிளகி அவனிதனில் பாயவென்று சபித்தார் காண்வேதா தானறிந்து வேதமது குபிந்தான மான குன்றுபோலே வளர்ந்து அன்றந்த வேதம் ஆனதினால் நானடியேன் இன்றென் சிரசை இதிலிடறி மாண்டதுண்டால் வைகுண்டங் கிட்டுமென்று மாளவந்தே னிம்மலையில் கைகண்ட வேதக் கருணாகரக் கடலே என்றுரைக்க மாமுனிவன் எம்பெருமாள் நல்லதென்று அன்று முனியை அவரோ டுடன்கூட்டிப் போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன் ஏகின்ற வேளை எம்பெருமா ளேதுசொல்வார் மாமுனியே நீகேளு மாச்சலா யென்னுடம்பு தாமுனியே யென்றனக்குச் சடைவா யிருக்குதுகாண் ஆனதால் கங்கைபார்த்(து) அதிலே குளித்துமிகப் போனால் சுகமெனவே போகனோ டேயுரைத்தார் சலந்தவசு அப்போது நல்ல அருள்கொண்ட மாமுனிவன் இப்போது மாயவரே இதோ தெரியுகின்ற 800 அருணகிரி மலையில் அருவியொன் றுண்டுமையா கருணை யிரங்கினதால் காட்டியே தாறேனென்றான் நல்லதுதா னென்று நல்ல முனியோடே வல்ல திருமேனி வாவிதனைக் கண்டார்காண் கண்டு திருமேனி கனத்தநீ ராவிதனில் சென்றிறங்கி மேனிதனில் செலங்கோரி விட்டிடவே ஆவி தனிலிறங்கி அச்சுதனார் நின்றிடவே தேவி யொருபெண் செலமெழுந்து மாயனையும் வந்து பணிந்திடவே மாயனதைப் பார்த்துச் சந்துபயில் மாமுனியே தண்ணீரைக் காணாமல் பெண்ணாக வந்த புதுமையென்ன மாமுனியே கண்ணான மாமுனியும் கட்டுரைப்பா னம்மானை எண்ணாத தெண்ணி ஏதுரைப்பான் மாமுனியும் பெண்ணோடு கேட்டால் புதுமை யதுதெரியும் என்றுரைக்க மாமுனியும் ஏந்திழையோ டேதுரைப்பான் நன்றுநன்று பெண்ணேநீ நதியா யிருந்ததுவும் பெண்ணாக வந்ததுவும் பேசுநீ ஒண்ணுதலே தண்ணீராய் நின்ற தார்குழலா ளேதுரைப்பாள் அய்யாவே நானும் அதிகயி லாசமதில் மெய்யாக ஈசுரர்க்கு வேலையது செய்திருந்து 820 வருகின்ற வேளையிலே மனங்குழறி நானடியாள் அரையில் கலைபூணா(து) ஆவியிலே சென்றிறங்கிக் குளித்தே னதையும் கொன்றையணி வோனறிந்து அழித்தே யெனையும் ஆவிபோலே படைத்தார் படைக்கும் பொழுதில் பரமனோ டிச்சாபம் கடருவதெப் போதெனவே கறைக்கண்ட ரோடுரைத்தேன் ஆவியாய் நீகிடந்தால் அச்சுதனா ரங்குவந்து தாவிக் குளிக்க சாபமது மாறுமென்றார் என்றுரைக்கப் பெண்ணாள் எம்பெருமா ளேதுரைப்பார் அன்றந்தப் பெண்ணதையும் ஆகமப் போகனையும் நானாண் டிருந்த நல்லதுவா பரத்தில் தானாக ஆண்டு தானிருக்கு மப்பொழுதில் சூரிய வொளிகாந்தம் துலங்கும்வை டூரியத்தில் வீரிய மான வெற்றிவிரு துக்குடையும் தங்கப்பொன் னாயுதமும் தளிருநிறச் சக்கரமும் பங்கமில்லா முத்துப் பவள நிறக்குடையும் கட்டான வைரக் கற்கோட்டை வாவிகளும் மட்டான செம்பவள வைரக்கால் மண்டபமும் உண்டுகா ணத்தனையும் உடனேபோய் நீங்களுந்தான் என்றுநான் வருவேன் இதுவரைக்குங் காத்திருங்கோ 840 நான்வந்த போது நல்லகதி யுங்களுக்குத் தான்தருவேன் போகுமெனத் தங்களிரு பேர்களுக்கும் விடைகொடுத்து ஸ்ரீரங்கம் மேவி யவரிருக்கத் திடமுடனே போகமுனி தேவி சலமடவும் வந்தந்த மாயவரின் வாழ்வெல்லாங் காத்திருந்தார் சென்றந்த மாயவனார் ஸ்ரீரங்கமே யிருந்தார் மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்கு மப்போது மாயக்கலி செய்த மாயங்கே ளன்போரே சாத்திரத்தை யாறாய்த் தான்வகுத்து வேதமதை மாத்திரமே நாலாய் வகுத்தனன்கா ணம்மானை நட்சேத் திரத்தை நல்லிருபத் தேழாகப் பொய்ச்சேத் திரமாய்ப் பிரித்தான்கா ணம்மானை கோளொன் பதுக்குக் கூடுபன்னி ரண்டாக நாளேழு வாரம் நாட்டிவைத்தா னம்மானை பக்கமது பத்தஞ்சு ஆகப் பவம்பிரித்து தக்கமது லோகம் தானாண் டிருக்கையிலே மாந்திரத்தால் செய்த வறுமைகே ளன்போரே பாந்தள்வாய்க் கட்டி பரிசுகெட ஆட்டிடுவான் சந்திரனை மங்கவைப்பான் சமுத்திரத்தைப் பொங்கவைப்பான் மந்திரத்தால் தெய்வமதை மாடுபோல் வேலைகொள்வான் 860 கற்பைக் கலக்கிடுவான் கன்னி யழித்திடுவான் வெற்பைத் தகர்த்திடுவான் வெடியைத் தடுத்திடுவான் ஆண்பெண்கள் தம்மை அலைச்சலது செய்திடுவான் கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுப்பான் மானிடரை பசுவை யடைத்துப் பட்டினிகள் போட்டிடுவான் கசுவை மறைத்திடுவான் கண்ணைக் கெடுத்திடுவான் மிருகமதைக் கட்டி இரையிடாக் கொன்றிடுவான் கருவை யுருவழிப்பான் கன்னி சிறைவைப்பான் மானிடர்க்குக் குட்டம் வருத்தியே கொன்றிடுவான் வீணிலே மானிடரை விசமடக்கிக் கொன்றிடுவான் மாரிதனை மறைப்பான் வருத்தவென் றாலழைப்பான் ஏரிதனை வெட்டி இயலழியச் செய்திடுவான் அடப்பமிடத் தாயை ஆளாக்கி வைத்திடுவான் குடைப்பிடிக்கப் பிதாவைக் கொண்டிடுவான் வேலையது பேயை வருத்திப் பூசை மிகக்கொடுத்து தேயமதில் மானிடரைச் செத்திறக்க வைத்திடுவான் கடலதுக்கும் மாமலைக்கும் கற்கோட்டை தாண்டவிட்டுத் தடவரைக ளெல்லாம் தகர்த்துப் பொடிப்படுத்திப் பூலோகத் தேசம் புவனமெல் லாம்பரந்து மேலோக மெல்லாம் மிகப்பரந்தா னம்மானை 880 கயிலை யெமலோகம் கரியதெய்வ லோகமெல்லாம் அகிலமே ழும்புரண்ட அதிசயங்கே ளன்போரே சிவந்தா னினைத்தால் செல்லார்கள் தேவர்களும் தலந்தா னிளகித் தான்வந்த தாலேதான் மூவர்க ளூரும் முறைமை மிகத்தவறி தேவர்க ளூரும் தியங்கிமிகத் தான்புரள நந்திவரவு தெய்வலோ கமுறைமை திசைமயங்கித் தான்புரள மெய்கொண்ட லோகமெல்லாம் மிகமயக்க மானதினால் ஈசுரனா ரப்போ ஏதெனவே தான்வெகுண்டு வீசுபுகழ் நந்திதனை விரைவாய் வரவழைத்து மாமுனி யேகயிலை வரம்பழியக் காரணமேன் ஓமுனியே நீயும் உள்ளதெல்லாஞ் சொல்லெனவே என்றந்த நந்தியோடு ஈசுரனார் தான்கேட்க அன்றந்த மாமுனியும் அரனா ரடிதொழுது நல்லதுகா ணீசுரரே நம்மள்தனக் கிங்கேதான் செல்லாது இங்கிருந்தால் சிவனே யெனத்தொழுது பூலோக மேழும் பொன்னுலோக மேழும் தாலோக முதலாய்த் தவலோ கம்வரையும் ஈரேழு லோகம் இருபுத்தி யானதெல்லாம் பாரெல்லா மிப்படியே பரந்து இருப்பதெல்லாம் 900 சொல்லவே ணுமென்றால் சிவகயிலை விட்டேநாம் நல்லபர லோகமதில் நாம்போவோ மீசுரரே என்றந்த ஈசுரரை இறைஞ்சி முனிதான்கூட்டி அன்றந்த மாமுனியும் அரனாருந் தானேகி சென்றார் பரலோகச் சீமையிலே வந்திருந்து வண்டாடுஞ் சோலை வைடூரியக் கோயில் கோவிலவர் புக்கிக் குருவை மிகப்போற்றி ஆவலுடன் மாமுனியும் அருளுவா ரம்மானை நல்லபர மேசுரரே நாடுதடு மாறினதை எல்லாம் நீர்கேட்க எடுத்துரைப்பே னென்றுமுனி மாமுனியு மீசுரரை வணங்கிப் பதங்குவித்து ஓமுனியும் நன்றாய் உரைப்பார்கா ணம்மானை கேட்டீரோ ஈசுரரே கேடுவந்த செய்தியெல்லாம் தீட்டுகிறே னென்று செப்புவா ரன்போரே மாயன் வைகுண்டம் மறையவென்று பொய்ச்சடலக் காய மிழந்து காணா துருவெடுத்து ஏகி வரும்வழியில் ஏந்திழையாள் தெய்வகன்னி தாவிச் சுனையாடித் தாங்கள்நிற்கும் வேளையிலே கண்டந்த மாயன் கன்னியர்மே லிச்சைகொண்டு பண்டந்த யோகமுனி பச்சைமால் தன்றனக்கு 920 மேலோகத் தார்களெல்லாம் விஷ்ணுவின் நாதமதில் பூலோகந் தன்னில் பிதிராகு வாரெனவும் பிதிரில் தவமிருந்து பிறந்தவழி தன்னையெல்லாம் சதிராக வந்தெடுத்துத் தர்மயுக மாள்வாரென்று யோகமுனி யிட்ட உறுசாப மத்தனையும் போகமதில் மேலோகப் பிறப்பெல்லாந் தோணவைத்துக் கன்னி வயிற்றிலுறக் காட்டில் மிகப்பிறந்து தன்னிக ரில்லாத சான்ரோ ரெனவளர்ந்தார் வளர்ந்தவர்கள் ராச்சியத்தை வகையாக ஆண்டிருக்க இழந்த கலிதோன்றி இவன்சென்றா னவ்வுகத்தில் கலிய னவன்செல்லக் கைமறந் தவ்வுலகில் பொலிவுள்ள தர்மம் பொன்றிச்சே நீதமதும் முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் மிகத்தவறி பின்னுதித்த நீசன் பிரித்தான்காண் வெவ்வேறாய் ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி ஊன மடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள் தந்திர மந்திரத்தால் சான்றோரைத் தான்மயக்கிப் பந்தி யழித்ததினால் பத்தினியாள் பெற்றமக்கள் ஒண்ணுக்கொண் ணெதிர்த்து ஒத்துமிக வாழாமல் பெண்ணுக்கு ஆணும் பிரிவு முறிவாகித் 940 தாய்க்குத்தான் பிள்ளை தாழாம லேபேசும் வாய்க்குவாய்ச் சொன்னாலும் மங்கைநல்லா ளென்றிடுவான் பிதாவை மிகநம்பார் புண்ணியமென் றேபாரார் இதாகவெல்லாம் நீசன் இடறுவரச் செய்ததினால் ஆனதா லிந்த வழிவழியே யங்குளது போனதால் நீசம் பொன்னுலோ கம்வரையும் ஏகிச்சு தையா இடறுநீ சக்கலியும் கோவிச்சு தையா கொடுங்கலியு மங்கேகி ஈதல்லால் பின்னும் இன்னுஞ் சிலநாளில் ஏதெல்லா மாகுதென்று ஈசுரரே பார்த்திருவும் மாயனை யும்வருத்தி வார்த்தைகே ளாதிருந்தால் தேய மிருள்மூடிச் சென்றிடுங்கா ணீசுரரே அப்போது ஈசுரரும் அதற்கேது செய்வோமென்று செப்பேடு வொத்த சிவனாரும் நொந்திருந்தார் மாமுனியே மாயவனை வருத்தவென்ன செய்திடுவோம் ஓமுனியே நீயும் உரையென்றா ரன்போரே பேய்ப்பிறப்பு அப்போது மாமுனியும் அரனா ரடிவணங்கி இப்போது தானதவம் இல்லையே லோகமதில் தவஞ்செய்து மாயவரைத் தான்வருத்த வென்றாலும் பவஞ்செய்த காலம் படுமோ தவமிருக்க 960 என்றுரைத்து மாமுனியும் இன்னமொன்று சொல்லிடுவான் நன்றுநன்று ஈசுரரே நானுரைக்கக் கேட்டருளும் இருள்கொண்ட காலமதால் ஏற்றதர்மஞ் செல்லாது மருள்கொண்ட காலமதால் வம்புக்கேநே ராகுமையா ஆணுவஞ்சேர் பேய்க்கணங்க ரம்பைக்கோர் மாலைதன்னைப் பூணும்நீர் தவசு புரிந்தா லரிவருவார் என்று முனிசொல்ல ஈசுரனார் சம்மதித்து அன்று பேய்க்கணங்க அசுமாலை யையணிந்து இருந்தா ரரிதான் இப்போவர வேணுமென்று தருந்தார மார்பன் தானறிந் தேதெனவே இருக்க வகையில்லாது எழுந்திருந்தா காயமதில் சுறுக்கா யுதித்துத் தோன்றினார் ஈசர்முன்னே அப்போது மாயவரை ஆதி யாவிப்பிடித்து இப்போ திதுவரையும் எங்கேநீர் போனீர்காண் என்றுதான் ஈசர் எய்த்திளைத்துச் சொல்லிடவே அன்றுதான் ஈசுரரை அரியாவித் தான்சேர்த்து பாண்டவர்க் குபகாரம் பண்ணி யிருந்ததுவும் வீண்டதுரி யோதனனை வெற்றிகொண்ட செய்தியதும் பொருப்பேறிப் பொய்ச்சடலம் போட்டுஸ்ரீ ரங்கமதில் இருப்பதுவுஞ் சொல்லி எனைவருத்துவா னேனென்றார் 980 அப்போ தரனார் ஆதிமா லோடுரைப்பார் இப்போது கலியன் இராச்சியத்தி லேபிறந்து பதிநாலு லோகமதும் பாரஇருள் மூடினதால் இதுநாள் வரையும் யானுமும்மைக் காணாமல் மனங்கலங்கிப் பேய்க்கணங்க மாலையிட்டு நானிருந்தேன் கனங்கொண்ட மாயவரே கயிலையிருள் மாற்றுமென்றார் நல்லா யிருக்குதுகாண் நவின்றதெல்லாங் கேட்பதற்கு எல்லா மிருக்கட்டென்(று) ஈசுரரே உம்முடைய கழுத்தில் தரித்ததையும் கழற்றி யெறியுமென்றார் வழுத்திடவே ஈசர் மாலை தனைக்கழற்றி கோபத்தா லக்கினியில் குறியா யெறிந்தனரே வேகத்தால் மாலை வெடித்ததுகாண் பேய்க்கணம்போல் கொள்ளைகொண்ட பேய்கள் கோடாமுக் கோடியுமாய்த் துள்ளிக் குதித்துச் சுற்றிக் குதித்தாடும் அப்போது பேய்கள் அரனா ரடிவணங்கி இப்போது ஈசுரரே எங்கள்பசி தீர்த்து மந்திர சாலம் மாய்மால மாரணமும் தந்திர சாலம் சர்வதுமே தாருமையா கொல்லச்சாவு சங்கிலியும் கொன்றவரைத் தானெழுப்ப வெல்லப்பிழை சங்கிலியும் வெடிப்பாக வேதாரும் 1000 ஈசுரரும் தேவர்களும் எங்கபடத் துள்ளாக வீசுபல வரங்கள் விடையாகத் தாருமையா அப்போது பேய்கள் அதுகேட்ட தத்தனையும் இப்போது கொடுக்க ஈசுரருஞ் சம்மதித்து மாலோடும் வேதா மறையவனோடுங் கேட்பார் கேட்டிருந்த நாரணரும் கிருபையுட னீசுரரைத் தேட்டமுடன் பார்த்துச் செப்புவா ரம்மானை ஈசுரரே பேய்களுக்கு இவ்வரங்க ளீந்தாக்கால் வீசுங்காண் லோகமதை விழுங்குங்கா ணிப்பேய்கள் தூயவரே பேய்கேட்ட சுத்தவர மத்தனையும் ஞாயமில்லை யென்று நானுரைக்கப் போகாது ஆனாலும் பேய்களுக்கு அருள்வீரா லிவ்வரங்கள் ஞானாந்திர மான நாரத மாமுனியை வருத்தியே பேய்களுக்கு வரங்கொடுத் தவன்கையிலே இருத்தி யணைவைத்து ஏழ்ப்பியும் பேய்களைத்தான் பேய்களுட பேரில் பிழைத்ததுதான் குற்றமென்றால் தேயக்கலி மாளுகையில் சிவவடகை லாசமதில் முனிசிறையும் பேய்களுக்கு உயிரழிவு மென்றுசொல்லித் துனிவான முனியுடனே சொல்லி யனுப்புமென்றார் அப்போது ஈசுரரும் அந்தமுனியை வருத்தி 1020 இப்படியே சொல்லி ஏழ்ப்பித் தனுப்பிடவே மாமுனியுஞ் சம்மதித்து வரம்வேண்டிப் பேய்களுந்தான் தாமுனிந்து பூலோகம் தன்னிலே வந்திடுமாம் பேய்ப்பூ லோகமதில் போயிடவே ஈசுரரும் ஆயனா ரோடே அருளுவா ரன்போரே கயிலை யிருளைக் கடத்திவைக் காதிருந்தால் அகில மதிலிருப்பு அல்லவே அச்சுதரே அப்போது மாயவனார் ஆதி தனைநோக்கி இப்போது நீங்கள் எல்லோரு மிக்கவேதாம் நன்றான ஆண்டிகள்போல் நற்றா வடங்களிட்டுப் பண்டார வேசமதாய்ப் பதிந்திருங்கோ வென்றுசொல்லி நடந்தார் சீரங்க நகரிதனி லெம்பெருமாள் மாயனுரை மாறாமல் வாய்த்தமே லோகமுள்ளோர் ஈசர்முத லாண்டியென இருந்தார்கா ணம்மானை ஆனதால் கலியன் அங்கே யனுவிலகி மான மனுப்போலே வாழ்ந்திருந்தா ரம்மானை 1036 | ||||
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)