புதன், 26 நவம்பர், 2014

அய்யாவழி ஆகமமான அகிலதிரட்டு அம்மானையில் காலத்தால் முற்பட்டது தமிழ் என்பதை காணலாம்:

அலகைதுளைத்து தீ நரகத்திலே ஆனியரைந்து அவனிதனில் குலையக் குலைத்துத் தீ நரகில் கொண்டெ போடச்சொல்வேனே.

மாய தோற்றத்தில் மயக்க முற செய்து குடும்பத்தை குலைந்து, செயலிழக்க வைத்து அவனி வாழ்வு முடியும் போது பொல்லாத நரக குழியில் போய் விழவைபேன்.


உலகில் மனுக்கள் தமிழாலே உவமை உரைத்து விட்டாற்போல் கலகமுடனே என்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை

முற்காலத்தில் மக்கள் உதாரணத்திர்கு தமிழ் மொழியில் இருந்துதான் சிறப்பான உதாரணம் கொடுத்திருக்கின்றார்கள், அப்படிப் பட்ட தமிழ் மொழி இன்று ஆங்கில மோகத்தால் அடிமை பட்டுகிடக்கின்றது. இப்படிப் பட்ட எம் தாய் மொழியான தமிழை புறக்கணிப்போரை,


வாயுவே பூப்போல் மலர் எடுத்து வீசி நிற்கும் ஆயும் கலை தமிழும் அறிவும் ஒன்று போல் பரவும்.

தென்றல் வீசுகின்றபோது மலர் எடுத்து மேனியை தடவுவது போல் இருக்குமாம். இது ஒரு இனிமையான சூழல் இது போன்றதே தமிழும், அறிவும், கலையும் ஒன்றை ஒன்று சார்ந்து என்றும் நிலைத்து நிற்கும்.


மேகம் குடை நிழற்ற மேலவர்கள் போற்றி நிற்க யோக முனிமார் ஓதித் தமிழ் கூற.

முற்காலத்தில் தவமுனிமார்கள் எல்லாம் தமிழில் மந்திரங்கள் ஓதி இறைவனை துதிக்கும் போது, கார் மேகங்கள் திரண்டு வந்து குடை பிடிக்குமாம். வானலோகத்தார்கள் எல்லாம் வந்து கண்டு போற்றி நிற்ப்பார்களாம். அத்தகைய இனிமையும், பழமையும் கொண்டது தமிழ் மொழியாம்.


ஆராய்ந்து பாட அடியோன் சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் என் நாவினில்.

முற்காலத்தில் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பு இறைவனை நினைத்து தொடங்க வேண்டும், என்பதை உலகிற்கு உணர்த்தியது தமிழ் மொழியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக