அய்யா நாங்கள் அறிந்து அறியாமல் செய்ததெல்லம் அய்யா பொறுக்கனும்.
(5 முறை சொல்லவும்) அய்யா பொறுத்து அய்யா மாப்புத்தந்து அய்யா வைத்து ரெட்சிக்கனும் அய்யா பொருமை தரனும்அய்யா நாங்கள், ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு ஒண்ணுல் கொண்ணு நிரப்பாயிருக்கணும்.அய்யா நல்ல புத்தி தரனும்! அய்யா அன்னமும் வஸ்திரமும் தந்து அய்யா எங்களை, யாதொரு நொம்பலம் இல்லாமல் யாதொரு சஞ் சலம் இல்லாமல் அய்யா வைத்து ரெட்சிக்கணும்!அய்யா உண்டு
உச்சிப்படிப்புசிவசிவா அரிகுரு சிவசிவா சிவசிவா அரிகுரு சிவசிவா சிவசிவா ஆதிகுரு சிவசிவா மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் அல்லா இல்லல்லா இறைசூல் மகிழல்லா சிவசிவா சிவமண்டலம் அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம் பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம் திருவுக்கும் சடைகுறு சிவசிவா சிவமண்டலம் செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்
சந்நியாசி குரு சிவசிவா சிவமண்டலம் மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் அரி சங்காரகுரு சிவசிவா சிவமண்டலம் மகாகுரு சிவசிவா சிவகுருமண்டலம்மண்டலம் குருமண்டலம் மாயன் குருமண்டலம் குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருகுண்டலம் சங்கநிதி குண்டலம் தரணி குருகுண்டலம் தரணியது குண்டலம் தரணி புகழ் குண்டலம்சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய் நின்றவர் சிவசிவா ஏகக் குருவாகப் படைத்து அது நிறைந்தவர் சிவசிவா படைத்து நிறைந்தவர் பாலன் வடிவு கொண்டவர் பங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர்அளந்தவர் திருமால் ஆதிகுரு சந்நியாசி சிவசிவா சந்நியாசி செந்தில்வேல் வடிவுமவர் செந்தில்வேல் சந்நியாசி செந்தில் வேலவர் வடிவும் புகழ்படைத்தவர் மாய நிறமானவர் அவர் சிவசிவாகங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர் நிறைந்து நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர் எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர் மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சந்நியாசி சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய் சிவசிவா த....ம்.....அ.....சி.....அரி நன்றாகக் குருவே துணை சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய் சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய் தன்னானாய் சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோம் சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம் சிவசிவா தந்தேனனம் தந்தேனனம் தந்தேனனம் தந்தேனனம்மகாலிங்கம்சிவலிங்கம்குருலிங்கம்திருலிங்கம்ஏகாலிங்கம்ஏக்காலிங்கம்அரிலிங்கம்லிங்காலிங்கம்சொக்காலிங்கம்சுகாலிங்கம்ஆதிலிங்கம்அருள்லிங்கம்அடங்காலிங்கம்.
அய்யா! சிவசிவ சிவசிவ அரகர அரகரா! சிவசிவ சிவசிவ அரகர அரகரா!சிவசிவா குருவுக்கும், குருபண் டாரத்திக்கும் சிவசிவா! முறையோம்! முறையோம்! முறையோம்!
சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும் சிவசிவா! முறையோம்! முறையோம்! முறையோம்!சிவசிவா அய்யா நாராயணர்க்கும் நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும் சிவசிவா கட்டியம்! கட்டியம்! கட்டியம்!சிவசிவா அய்யா நாராயணசாமி ஜெயம்! ஜெயம்! ஜெயம்!சிவசிவா அரகரா! ஜெயம்! ஜெயம்! ஜெயம்!தேசம் மயம் ஏகம் திட்டித்த மகாபர இந்திரநாராயணர் அய்யா நிச்சயித்தபடி அல்லாது மனுசன் நிச்சயித்தப் படியல்ல அய்யாவே!
தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணற்றின்" சிறப்புகள். பதிகளில் தலைமைபதியாக திகழும் சுவாமிதோப்பு பதியில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வைகுண்ட அய்யா ஏற்படுத்தினார். அக்கிணறு பல்வகை சிறப்புகளை உடையது. "முத்திரிகிணற்றின்" தோற்றம்: பழங்காலத்தில் பொதுகிணற்றில் நீர் எடுப்பதற்க்கும் குளிப்பற்க்கும் மக்கள் சிலருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற தூய எண்ணம் கொண்ட வைகுண்ட அய்யா "முத்திரிகிணற்றை" தன் பதிகளில் ஏற்படுத்தினார். பக்தர்கள் புனிதமாகவும், நோயின்றி வாழவும் அய்யா ஏற்படுத்திய கிணறு "முத்திரிகிணறு" ஆகும். வைகுண்ட அய்யாவின் முன்னேற்றத்தில் பொறாமை கொண்ட கலிநீசர்கள் வைகுண்ட அய்யா ஏற்படுத்திய கிணற்றில் நஞ்சை ஊற்றி கொல்ல முயன்றனர். அய்யா வைகுண்டர் "பால்" என்று அருந்துபவர்களுக்கு "பாலாகவும்"; "நஞ்சு" என்று நினைப்பவர்களுக்கு "நஞ்சாக" இருக்கும் என்று கூறினார். பக்தர்கள் "சிவ சிவ அரகரா" பாடி அந்த முத்திரிபதத்தை அருந்தியதால் அது அவர்களுக்கு இனிய அமிர்தமாக தித்தித்தது.

வழிபடும் முறை: தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணறு" பல்வேறு சிறப்புகளை உடையது. அதனால் பதிக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் பதம் இட்டு(குளித்து); பதத்தை அருந்தி; அந்த முத்திரிகிணற்றை ஐந்துமுறை "அய்யா சிவ சிவ அரகர அரகரா" என்ற வைகுண்ட அய்யாவின் திருநாமத்தை உச்சரித்து சுற்றி சேவித்த பின்னர் பதிக்கு செல்ல வேண்டும். "முத்திரிகிணற்றின்" சிறப்புகள்: முத்திரிகிணறு ஓர் அதிசய கிணறு. முத்திரிகிணற்றில் பதம் இடுபவர்களுக்கு பாற்கடலில் தீர்த்தமாடுவது போல் தோன்றும். கங்கை ஆற்றில் நீராடினால் பாவவினைகள் தீறும் என்பது ஐதீகம். அதனினும் மேலான பலனைத் தரவல்லது இந்த தெச்சணத்தில் அமைந்துள்ள முத்திரிகிணற்றின் தீர்த்தமாகும். முத்திரிகிணற்றின் தீர்த்தத்தை குடிப்பவர்கள் அமுத்தத்தை அருந்துவது போன்ற எண்ணத்தை பெருவார்கள். அதை அருந்திய பிறகு மனதில் உள்ள மாசுகள் நீங்கி தூய்மையான உள்ளத்தை பக்தர்கள் அடைவர். அதன் பிறகு வழிபடும் பொழுது பக்தர்களின் மனதில் வைகுண்ட அய்யாவை பற்றிய எண்ணங்களே தோன்றும். பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையடைடும். பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் தீர்த்தமாக "முத்திரிபதம்" திகழ்கிறது. உடல் நோய்கள், தோல் நோய்கள், உடல் வலிகள் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஓர் அற்ப்புத் தீர்த்தமாக விளங்குகிறது. உடல் நோய்கள் மட்டுமல்லாது உளநோய்களையும் குணப்படுத்தி பக்தர்களின் துன்பங்களை அகற்ற வல்லது. இத்தகைய சிறப்புகள் உடைய முத்திரிகிணற்றில் அன்பர்கள் தங்களின் வாழ்வு மேன்மை அடையும். இத்தகைய சிறப்புகளை உடையது "முத்திரிகிணறு" அனைவரும் வருக, பதம் இடுக அய்யாவின் அருள் பெருக! அய்யா உண்டு!
பூப்பதியின் சிறப்பு
பூமடநாத அம்மையை மனம்புரிந்தால் பூப்பதி என பெயர்பெற்றது.கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருஏடுவாசிப்பு நடைபெறும்.
அய்யாவின் 5 பதிகளில் ஒன்று முட்டப்பதி. முட்டப்பதியில் பங்குனி மாதம் இரண்டாவது வெள்ளிகிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.
ஒவ்வொரு நாளும் வாகன பவனியும் தர்மங்களும் சிறப்பாக நடைபெறும்.கார்த்திகை மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும்.முட்டபத்தியில் திருவிழா முடிந்தது சுவாமிதோப்பில் இருந்து முத்துகுடை ஊர்வலம் முட்டப்பதிக்கு வருகிறார்கள்.முட்டப்பதி கடலுகருள் அய்யா இரண்டு முறை விஞ்ஞை பெற்றார் என்பது முட்டப்பதியின் சிறப்பாகும்.
அம்பலப்பதியில் ஐப்பசிமாதம் முதல் வெள்ளிகிழமை கொடியேறி 11நாள் திருவிழா நடைபெறும்.
96 தத்துவங்களை கொடைபதி அம்பலபதி.திரு ஏடுவாசிப்பு பங்குனிமாதம் 3வது வெள்ளி துவங்கி சித்திரை மாதம் முதல் ஞாயிறு பட்டாவிஷேகம் நடைபெறும்.