செவ்வாய், 25 நவம்பர், 2014

அய்யா உண்டு

கடலெல்லாம் குளமாக குளமெல்லாம் கடலாக கண்ணுக்குத் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா

ஊசிமுனையதிலே கடலும் மலையுடனே ஊரும் பதியுங்கண்டேன் சிவனே அய்யா

கோரைக்குருத்துக்குள்ளே தாரணிதன்னிலுள்ள குடிகளும் வாழக்கண்டேன் சிவனே அய்யா

திரைக்கடலில் சிறுமீன் பெரியமீனைப் பிடித்துத்தின்னவும் கண்டேனையா சிவனே அய்யா

ஈரத்தின்மேல் கிடந்த ஆடையை அட்டைகண்டு எடுத்து விழுங்கக்கண்டேன் சிவனே அய்யா

போர்வெள்ளைக்கொக்கு புழுத்திங்க போனயிடத்தில் புழு வெட்டிக்கொத்திக் கண்டேன் சிவனே அய்யா

முடுக்கன்மார் பெற்றமக்கள் தூக்கம்வைத்த பாயதிலே மூச்சோடி போகக்கண்டேன் சிவனே அய்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக