செவ்வாய், 25 நவம்பர், 2014

அய்யா துணை

மகனே உனக்கு வைத்தவிஞ்சை மனதி லறிந்து கொண்டாயோ

அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடத்து அல்லாமல்

யுகமே அழியு முன்னாக ஒருசொல் இதிலே குறைவானால்

தகமோ ரறியத் தீமூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே

நல்லோர் மகனே சொல்லுவதுகேள் நாணோ உரைத்த விஞ்சையெல்லாம்

வல்லோ னான திருமகனே மனதி லறிந்து அறிந்துநட

எல்லாம் நமதுள் ளாச்சுதென்று எண்ணி நடப்பெ னுன்னாலே

சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே

கொடுக்கும் வரங்கள் உனக்கீந்தேன் கொடுத்த வரத்தைப் பறிப்பதற்கு

உடக்கு வரமுந் தந்தேனான் உன்ற னாணைத் திருவாணை

அடக்கு முடக்குந் தந்தேனான் ஆதி சிவனா ரவரானை

நடக்கும் படியே சட்டமெல்லாம் நாரா யணனே தந்தேனே

தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுந் தரைமீது

எந்தன் மீது மறவாதே என்னாண் டருளு மிறையோனே

அந்தன் மீது மறவாதே ஆயா னெனவே அறிவில்வைததுச்

சிந்தை மகிழ்ந்து முறைநடந்தால் சிவனு முனக்குள் வசமாமே

தாயா ரோடு சிவமாது சரசு பதியே பொன்மாது

நேயா மாதர் மடமாது நீணில மறிய வந்துனது

பூசா பலன்கள் செல்லிமிகப் புலம்பித் திரிவார் துயர்தீர

மாயா திருக்கு மகனேவும் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே

செல்ல எளிதோ என்மகனே சொல்லா தனேகம் தோன்றுமினி

வெல்ல எளிதோ என்மகனே மேலோரா ராரா லும்

கொல்ல எளிதோ வுனைமகனே கோவேங் கிரியின் கோனாலும்

வெல்ல எளிதோ உனைமகனே மேலாங் கண்ணே மிகவளராய்

இந்தப் படியே நாரணரும் இயம்பு மகவு ஏதுரைக்கும்

கந்த னுறுவே லென்றகப்பா கடியா வுனது படிநடக்க

எந்தப் படியோ நான்றமியேன் எதோ அறியப் போறேனைனச்

சிந்தை மகிழ்ந்துத் தகப்பனுட திருத்தாள் பிடித்துச் செப்பலுற்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக