வெள்ளி, 9 ஜனவரி, 2015

அலுவலகப் பயன்பாடுகள்

Word Processor --- சொல்செயலி
Spreadsheet --- விரிதாள்
Application Package --- பயன்பாட்டுத் தொகுப்பு
Office Suite --- அலுவலகக் கூட்டுத் தொகுப்பு
Data --- தரவு
Database --- தரவுத்தளம்
Presentation --- முன்வைப்பு
Document --- ஆவணம்
New --- புதிது
Open --- திற
Save --- சேமி
Save As --- எனச் சேமி
Close --- மூடு
Delete --- அழி
Remove --- நீக்கு
Edit --- திருத்து
Find --- கண்டறி
Replace --- மாற்றிடு
Find and Replace --- கண்டறிந்து மாற்றிடு
Goto --- அங்குச் செல்
Undo --- செய்தது தவிர்
Redo --- தவிர்த்தது செய்
Erase --- அழி
Ignore --- புறக்கணி
Format --- வடிவூட்டு / வடிவூட்டம்
Insert --- செருகு
View --- காட்சி
Page Layout --- பக்க உருவரை
Page Break --- பக்க முறிவு
Header --- முகப்பி
Footer --- முடிப்பி
Marquee --- நகர் உரை
Print --- அச்சிடு
Print Preview --- அச்சு முன்காட்சி
Cut --- வெட்டு
Copy --- நகலெடு
Paste --- ஒட்டு
Move --- இடம்பெயர்
Indent --- உள்தள்ளல்
Justify --- ஓரச்சீர்மை
Align --- நேரமை
Alignment --- நேரமைவு
Hyphen --- பிரிகோடு
Hyphenation --- சொல்பிரிகை
Padding --- இட்டுநிரப்பல்
Margin --- ஓரவெளி
Orientation --- திசைமுகம்
Portrait --- நீள்மை
Landscape --- அகன்மை
Page Break --- பக்க முறி
Bold --- தடிப்பு
Italics --- சாய்வு
Underline --- அடிக்கோடு
Footnote --- அடிக்குறிப்பு
Endnote --- கடைக்குறிப்பு
Table --- அட்டவணை
Worksheet --- பணித்தாள்
Row --- நெடுக்கை
Column --- கிடக்கை
Cell --- கலம்
Formula --- வாய்பாடு
Label --- சிட்டை
Macro --- குறுநிரல்
Sorting --- வரிசையாக்கம்
Filter --- வடிகட்டி
Font --- எழுத்துரு
Bullet --- பொட்டு
Bulleted List --- பொட்டிட்ட பட்டியல்
Template --- வார்ப்புரு
User Friendly --- பயனர் தோழமை
Graph --- வரைபடம்
Chart --- நிரல்படம்
Gridlines --- கட்டக் கோடுகள்
Horizontal --- கிடைமட்டம்
Vertical --- செங்குத்து
Image --- படிமம்
Window --- சாளரம்
Dialogue Box --- உரையாடல் பெட்டி
Tab --- கீற்று
Tab Key --- தத்தல் விசை
Tag --- ஒட்டு
Text Box --- உரைப்பெட்டி
Check Box --- சரிக்குறிப் பெட்டி
List Box --- பட்டியல் பெட்டி
Command Button --- கட்டளைப் பொத்தான்
Dropdown List --- கீழ்விரி பட்டியல்
Menu --- பட்டி
Menu Options --- பட்டித் தேர்வுகள்
Menu Bar --- பட்டிப் பட்டை
Menu Item --- பட்டி உறுப்பு
Tool Bar --- கருவிப் பட்டை
Scroll Bar --- உருள் பட்டை
Wizard --- வழிகாட்டி
Navigate --- வழிச்செலுத்து
Orphan --- உறவிலி
Widow --- துணையிலி
Pane --- பாளம்
Panel --- பலகம்
Frame --- சட்டகம்
Border --- கரை
Shading --- நிழலாக்கம்
Filling --- நிரப்பல்
Fill Color --- நிறம் நிரப்பு
Style --- பாணி
Pattern --- தோரணி
Wordwrap --- வரிமடக்கு
Wallpaper --- முகப்போவியம் 

பொது

Computer --- கணிப்பொறி / கணினி
Personal Computer --- சொந்தக் கணிப்பொறி
Desktop Computer --- மேசைக் கணிப்பொறி
Laptop Computer --- மடிக் கணிப்பொறி
Notebook Computer --- ஏட்டுக் கணிப்பொறி
Handheld Computer --- கையகக் கணிப்பொறி
Portable Computer --- கையடக்கக் கணிப்பொறி
Tablet PC --- பலகைக் கணிப்பொறி / கணிப்பலகை
Mini Computer --- குறுமுகக் கணிப்பொறி
Mainframe Computer --- பெருமுகக் கணிப்பொறி
Super Computer --- மீத்திறன் கணிப்பொறி
Real Time System --- நிகழ்நேரக் கணிப்பொறி
Multitasking --- பல்பணியாக்கம்
Hardware --- வன்பொருள்
Software --- மென்பொருள்
Firmware --- நிலைபொருள்
CPU --- மையச் செயலகம்
Monitor --- திரையகம்
Touch Screen --- தொடுதிரை
Flat Monitor --- தட்டைத் திரையகம்
Color Monitor --- வண்ணத் திரையகம்
LCD Monitor --- நீர்மப் படிகத் திரையகம்
Keyboard --- விசைப்பலகை
Keyboard Driver --- விசைப்பலகை இயக்கி
Function Key --- பணிவிசை
Keypad --- விசைத்தளம்
Touchpad --- தொடுதளம்
Mouse --- சுட்டி
Track Ball --- கோளச் சுட்டி
Printer --- அச்சுப்பொறி
Dot Matrix Printer --- புள்ளியணி அச்சுப்பொறி
Inkjet Printer --- மைபீச்சு அச்சுப்பொறி
Laser Printer --- லேசர் அச்சுப்பொறி
Impact Print --- தொட்டச்சு
Non-impact Print --- தொடாஅச்சு
Scanner --- வருடி
Plotter --- வரைவி
Hard Disk --- நிலைவட்டு
Compact Disk (CD) --- குறுவட்டு
DVD --- பல்திறன் வட்டு
Magnetic Disk --- காந்த வட்டு
Electro Magnetic Disk --- மின்காந்த வட்டு
Laser Disk --- லேசர் வட்டு
Blue Ray Disk --- நீலக்கதிர் வட்டு
Optical Disk --- ஒளி வட்டு
Disk Drive --- வட்டு இயக்ககம்
Floppy Disk --- நெகிழ்வட்டு
Magnetic Tape --- காந்த நாடா
Tape Drive --- நாடா இயக்ககம்
Tape Catridge --- நாடாப் பேழை
Tape Reader --- நாடாப் படிப்பி
Mocroprocessor --- நுண்செயலி
Chip --- சில்லு
Memory --- நினைவகம்
RAM --- அழியா நினைவகம்
ROM --- நிலையா நினைவகம்
Main Memory --- முதன்மை நினைவகம்
Expanded Memory --- விரிவாக்க நினைவகம்
Extended Memory --- நீட்டிப்பு நினைவகம்
Buffer Memmory --- இடையக நினைவகம்
Cache Memory --- இடைமாற்று நினைவகம்
Flash Memory --- அதிவிரைவு நினைவகம்
Virtual Memory --- மெய்நிகர் நினைவகம்
Virtual Disk --- மெய்நிகர் வட்டு
Memory Card --- நினைவக அட்டை
Memory Stick --- நினைவகக் குச்சி
Pen Drive --- பேனாச் சேமிப்பகம்
Motherboard --- தாய்ப்பலகை
Expansion Slot --- விரிவாக்கச் செருகுவாய்
Socket --- பொருத்துவாய்
Port --- துறை
Bus --- பாட்டை
Modem --- இணக்கி
Operating System --- இயக்க முறைமை
Application Softwate --- பயன்பாட்டு மென்பொருள்
Memory Management --- நினைவக மேலாண்மை
File Management --- கோப்பு மேலாண்மை
Peripheral Management --- புறச்சாதன மேலாண்மை
File --- கோப்பு
File Extention --- கோப்பு இனப்பெயர்
File System --- கோப்பு முறைமை
Directory --- கோப்பகம்
Root Directory --- மூலக் கோப்பகம்
Sub-directory --- உட்கோப்பகம்
Folder --- கோப்புறை
Sub-folder --- உட்கோப்புறை
Virus --- நச்சுநிரல்
Anti-virus --- நச்செதிர்ப்பி
Viral Infection --- நச்சுநிரல் தொற்று
Malware --- தீங்குநிரல்
Spyware --- உளவுநிரல்
Font --- எழுத்துரு
Multimedia --- பல்லூடகம்
Text --- உரை
Graphics --- வரைகலை
Animation --- அசைவூட்டம்
Audio --- கேட்பொலி
Video --- நிகழ்படம்
Stream --- தாரை
Abort --- முறி
Adapter --- தகவி
Access --- அணுக்கம்
Activation --- இயக்குவிப்பு
Space --- இடவெளி
Alert --- விழிப்பூட்டு
Analog --- உவமம்
Digital --- துடிமம்
Signal --- குறிகை
Backup --- காப்புநகல்
Bandwidth --- கற்றையகன்மை
Benchmark --- திறன்மதிப்பீடு
Bio-informatics --- உயிரித் தகவலியல்
Boot --- தொடக்கு
Crash --- செயல்முடக்கம்
Platform --- பணித்தளம்
Cross Platform --- பல்பணித்தளம்
Cursor --- காட்டி
Configuration --- தகவமைப்பு
Customize --- தனிப்பயனாக்கு
Credit Card --- கடன் அட்டை
Debit Card --- பற்று அட்டை
Cash Card --- பண அட்டை
Smart Card --- சூட்டிகை அட்டை
Defrag --- நெருங்கமை
Modulation --- பண்பேற்றம்
Demodulation --- பண்பிறக்கம்
Specification --- வரையறுப்பு
Concept --- கருத்துரு
Embed --- உட்பொதி
Embedded Chip --- உட்பொதி சில்லு
Embedded System --- உட்பொதி முறைமை
Emulation --- போலாக்கம்
Emulator --- போலாக்கி
Simulation --- பாவிப்பு
Simulator --- பாவிப்பி
Entity --- உருபொருள்
External Storage --- புறநிலைச் சேமிப்பு
Internal Storage --- அகநிலைச் சேமிப்பு
Feedback --- பின்னூட்டம்
Open Source Software --- வெளிப்படை மூலநிரல் மென்பொருள்
Free Software --- கட்டறு மென்பொருள்
Freeware --- இலவச மென்பொருள்
Global Positioning System --- உலக இருப்பிட முறைமை
Glyph Encoding --- சிற்பக் குறியாக்கம்
Install --- நிறுவு
Reinstall --- மறுநிறுவு
Morphing --- உருமாற்றம்
Computing --- கணிப்பணி
Multiuser System --- பல்பயனர் முறைமை
Multiuser Environment --- பல்பயனர் பணிச்சூழல்
Outsourcing --- அயலாக்கம்
Piracy --- களவுநகலாக்கம்
Privacy --- மறைபொதுக்கம்
Pixel --- படப்புள்ளி
Pop-up Window --- மேல்விரி சாளரம்
Pop-up Menu --- மேல்விரி பட்டி
Project --- திட்டப்பணி
Prompt --- தூண்டி
Zoom-in --- அண்மைக் காட்சி
Zoom-out --- தொலைவுக் காட்சி
Write-protect --- எழுது-தடுப்பு
Icon --- சின்னம்
Shortcut --- குறுவழி
Standard --- தரப்பாடு
Standardize --- தரப்படுத்து
Task Bar --- பணிப் பட்டை
Status Bar --- நிலைமைப் பட்டை
Telemedicine --- தொலைமருத்துவம்
Troubleshooting --- பழுதுகண்டு நீக்கல் 

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

அய்யா.

காவி உடைதரித்து
கழுத்தில் ருத்திராச்சமிட்டு
சுரைகூடு பிரம்பும்
சங்கும் கையில்கொண்டு
தலைப்பாகை அணிந்து
நேர்நாமம் நெற்றியில் இட்டு
கலி அழிக்க வந்த
வைகுண்டர்தான் நம் அய்யா.

அய்யா உண்டு

அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே! மெய்யாயெழுதி விதிப்பேன் நான் என்பதெல்லாம்! ஆனை நடை கண்டு, அன்றில் நடையதொக்கும்! சேனை சரிவதென்ன, சிற்றெரும்பு பற்றி என்ன ! குயில் கூவக் கண்டு, கூகைக் குரலாமோ! மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்! ( இன்றைய தினங்களில் வான்கோழிதான் ஆடிக்கொண்டிருக்கிறது ) மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து! கடந்தை தாடேற்றுங் கதை போலே யானடியேன்! ( இன்றைய நாடகளில் தேனீக்கள் தேடி வைத்த ரசத்தை கடந்தை வண்டுகள், அருந்திக் கொண்டிருக்கின்றன )நாலு மூணு கணக்கு நடுத்தீர்க்க வந்த பிரான்! மேலோன் திருக்கதையை எழுதுவேன் எனபதொக்கும்!!! எம்பிரானான இறையோனருள் புரிய! தம்பிரான் கதையை தமியேன் எழுதுகிறேன்! எழுதுகிறேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்! பழுதொன்றும் வாராமல் பரமேசொரி காக்க! ( இன்று அதற்கு பழுது வந்துவிட்டது ) ஈசன் மகனே இயல்வாய் இக்கதைக்கு! தோசமகலச் சூழாமல் வல்வினைகள்! காலைக் கிரகங் கர்ம சஞ்சலமானதுவும்! வாலைக் குருவே வாராமலே காரும்! '' அய்யா சொல்ல, ஆகமத்தை எழுதிய, அரி கோபால சீசரின் ( சகாதேவ சீசர் ) வார்த்தைகள். எவ்வளவு அடக்கமாக இருந்திருக்கிறார் அந்த சீசர்!'' மேலே பார்ப்போம், '' தோத்திரமென்று சுவாமிதனைத் தொழுது! ராத்திரித் தூக்கம் நான் வைத்திருக்கையிலே! ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்! கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்! தெய்தி இருபத்தேழில்,சிறந்த வெள்ளி நாளையிலே! நாதன் என்னருகில் நலமாக வந்திருந்து! சீதமுடன் எழுப்பி சொன்னாரே காரணத்தை! காப்பிலொரு சீர் கனி வாய் மிகத்திறந்து! தார்ப் பிரியமாகச் சாற்றினார் எம்பெருமாள்! ''மகனே இவ்வாய் மொழியை வகுக்குங் காண்டமதுக்கு! உகமோரறிய உறைநீ முதல் காப்பாய்! அதின்மேல் நடப்புன் னுள்ளே யகமிருந்து! சரிசமனாய் நான் வகுப்பேன் தானெழுது காண்டமதை! நானுரைக்க நீயெழுதி நாட பதினாலறிய! யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள் முன்னே! வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு! பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா! ('' இந்த அம்மானையை எழுதிய, தன்னுடைய சீசரான, அரிகோபாலருக்கு, எவ்வளவு சிறப்புக் கொடுக்கிறார், பாருங்கள்! அந்த மகாபரன்!'' ) இதோ மகாபரன் சொன்ன வரிகள், ''பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரியாய்ப் பறைந்தோர்! களித்தோர் வறுமை கண்டு கடுநரகம் புக்கிடுவார்!! '' அய்யா மக்களே, அகிலத்தைக் கைவிடாதீர்கள். அய்யா சொன்ன வார்த்தைகளை மறக்காதீர்கள். இவை அனைத்தும் இறைவனால் நமக்குச் சொல்லப் பட்டவை என்று நம்புங்கள். இன்று அய்யா வழியில் உண்மையான அகிலத்தை படித்துணராத மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது என்னுடைய மாறாத விருப்பம். செய்வீர்களா, அய்யாக்களே!! '' தினமொரு நேரமெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்! பனிவெள்ளம் போலப் பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்! கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்! துணிவுடன் கேட்டோர் உற்றார் தொலைத்தனர் பிறவி தானே!!! அகிலம்! அய்யா உண்டு!!!
'' அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே! மெய்யாயெழுதி விதிப்பேன் நான் என்பதெல்லாம்! ஆனை நடை கண்டு, அன்றில் நடையதொக்கும்! சேனை சரிவதென்ன, சிற்றெரும்பு பற்றி என்ன ! குயில் கூவக் கண்டு, கூகைக் குரலாமோ! மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்! ( இன்றைய தினங்களில் வான்கோழிதான் ஆடிக்கொண்டிருக்கிறது ) மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து! கடந்தை தாடேற்றுங் கதை போலே யானடியேன்! ( இன்றைய நாடகளில் தேனீக்கள் தேடி வைத்த ரசத்தை கடந்தை வண்டுகள், அருந்திக் கொண்டிருக்கின்றன )நாலு மூணு கணக்கு நடுத்தீர்க்க வந்த பிரான்! மேலோன் திருக்கதையை எழுதுவேன் எனபதொக்கும்!!! எம்பிரானான இறையோனருள் புரிய! தம்பிரான் கதையை தமியேன் எழுதுகிறேன்! எழுதுகிறேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்! பழுதொன்றும் வாராமல் பரமேசொரி காக்க! ( இன்று அதற்கு பழுது வந்துவிட்டது ) ஈசன் மகனே இயல்வாய் இக்கதைக்கு! தோசமகலச் சூழாமல் வல்வினைகள்! காலைக் கிரகங் கர்ம சஞ்சலமானதுவும்! வாலைக் குருவே வாராமலே காரும்! '' அய்யா சொல்ல, ஆகமத்தை எழுதிய, அரி கோபால சீசரின் ( சகாதேவ சீசர் ) வார்த்தைகள். எவ்வளவு அடக்கமாக இருந்திருக்கிறார் அந்த சீசர்!'' மேலே பார்ப்போம், '' தோத்திரமென்று சுவாமிதனைத் தொழுது! ராத்திரித் தூக்கம் நான் வைத்திருக்கையிலே! ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்! கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்! தெய்தி இருபத்தேழில்,சிறந்த வெள்ளி நாளையிலே! நாதன் என்னருகில் நலமாக வந்திருந்து! சீதமுடன் எழுப்பி சொன்னாரே காரணத்தை! காப்பிலொரு சீர் கனி வாய் மிகத்திறந்து! தார்ப் பிரியமாகச் சாற்றினார் எம்பெருமாள்! ''மகனே இவ்வாய் மொழியை வகுக்குங் காண்டமதுக்கு! உகமோரறிய உறைநீ முதல் காப்பாய்! அதின்மேல் நடப்புன் னுள்ளே யகமிருந்து! சரிசமனாய் நான் வகுப்பேன் தானெழுது காண்டமதை! நானுரைக்க நீயெழுதி நாட பதினாலறிய! யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள் முன்னே! வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு! பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா! ('' இந்த அம்மானையை எழுதிய, தன்னுடைய சீசரான, அரிகோபாலருக்கு, எவ்வளவு சிறப்புக் கொடுக்கிறார், பாருங்கள்! அந்த மகாபரன்!'' ) இதோ மகாபரன் சொன்ன வரிகள், ''பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரியாய்ப் பறைந்தோர்! களித்தோர் வறுமை கண்டு கடுநரகம் புக்கிடுவார்!! '' அய்யா மக்களே, அகிலத்தைக் கைவிடாதீர்கள். அய்யா சொன்ன வார்த்தைகளை மறக்காதீர்கள். இவை அனைத்தும் இறைவனால் நமக்குச் சொல்லப் பட்டவை என்று நம்புங்கள். இன்று அய்யா வழியில் உண்மையான அகிலத்தை படித்துணராத மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது என்னுடைய மாறாத விருப்பம். செய்வீர்களா, அய்யாக்களே!! '' தினமொரு நேரமெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்! பனிவெள்ளம் போலப் பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்! கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்! துணிவுடன் கேட்டோர் உற்றார் தொலைத்தனர் பிறவி தானே!!! அகிலம்! அய்யா உண்டு!!!

அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது. அய்யாவழி புராணத்தின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானை விளங்குகிறது. அகிலம் கூறும் ஒருமைக் கோட்பாட்டின் அடிப்படையாக விளங்கும் ஏகம், வைகுண்டராக அவதரிப்பதால் அவரை மையமாகக் கொண்ட ஓரிறைக் கோட்பாட்டை அய்யாவழி வலியுறுத்துகிறது.
அய்யாவழி புராண வரலற்றின்படி அய்யா வைகுண்டரின் தூல உடலையும், சூட்சும உடலையும் தாங்கி சம்பூரணத்தேவன் என்னும் தெய்வ லோகவாசி தாமரைகுளம் என்னும் ஊரில் பிறக்கிறார். வைகுண்ட அவதாரம் வரை அவதாரச்சடலத்தை சுமக்கும் பொறுப்பு சம்பூரணதேவனுக்கு கொடுக்கப்படுகிறது. இவர் 'முடிசூடும் பெருமாள்' என்று வரலாற்றில் அறியப்படுகிறார்
தூல மற்றும் சூட்சும உடல்களின் பிறப்பு[தொகு]
முக்கியக் கட்டுரை: சம்பூரணதேவன்
கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது.
அகிலம் இதைப்பற்றி கூறும் பொது அக்குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன் சம்பூரணதேவனின் ஆன்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால் அங்கு நடந்த எதையும் குழந்தையின் பெற்றோரோ, குடும்பத்தாரோ அறியவில்லை. பிறந்து சில நொடிகள் குழந்தை சலனமற்று இருந்ததை மட்டும் அவர்கள் அறிகிறார்கள். இச்செயல் குறோணியை அழிக்க இறைவன் எடுக்க இருக்கும் வைகுண்ட அவதாரத்துக்காக போடப்பட்ட திட்டத்தின் முதல் பகுதியாகும். ஆக சம்பூரணதேவனாகிய இக்குழந்தை இதுமுதல் முத்துக்குட்டி என்ற பெயரைத் தாங்கி வளர்ந்து வருகிறது.
முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக ஆகிலம் கூறுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தெவனை சந்தித்து அவருடன் இணைகிறார், அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள்.
பின்னர் முத்துக்குட்டி என்னும் இச் சம்பூரணத்தேவன் பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.
மாற்றியமைப்பு[தொகு]
இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்று வருகிறார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயாரான வெயிலாள் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறுகிறார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.
மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக உலகில் அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தாய்ப் பாசம் காரணமாக அவரை வெயிலாள் தனது மகன் முத்துகுட்டி என்றே பார்க்கிறாள். அவளுக்கு தனது நிலையை வைகுண்டர் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்,
"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"
ஆனால் அதை ஏற்றுக் கோள்ளும் நிலையில் வெயிலாள் இல்லை. அதனால் தான் பிறந்த கடற் பதியின் மண்டபங்களையும் அதன் மெடைகளையும் அவரின் பிறப்பு மற்றும் வருகைக்கு சான்றாகக் கட்டுகிறார். ஆனால் தாய்ப் பாசம் தடுக்க, அவளால் வைகுண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வைகுண்டர், தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் கூறக்கூடாது என்று கூறுகிறார்.
இவ்வாறு கூறிய வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்டசாமி அவதார வரலாற்றுச் சுருக்கம்

உலகில் தர்மம் குன்றி அதர்மம் மிஞ்சி நிற்கும் காலங்களில் எல்லாம், நிகழுகின்ற அதர்மத்தை அழிக்க இறைவன் மனித உருவில் தோன்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டி இருக்கிறார். அப்படி கலியுகத்தில் அவதரித்தவரே அய்யா வைகுண்டசாமி.
நிகழும் கலியுகத்திற்கு முன்புள்ள யுகங்களில் அதர்மம் புரிந்த அரக்கர்களுக்கு உடல் இருந்தது. எனவே இறைவனும் தாம் பிறப்பதற்கு தகுதியான தாயின் மணிவயிற்றில் ஜெனித்துப் பிறந்து அவ்யுக அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார். இத்தகு செயல்பாடுகளை மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் காக்கும் கடவுள் என்றும் போற்றப்படுகிறது. மகாவிஷ்ணு அவதரித்து செய்துள்ளார்.
ஆனால் கலியுகத்தில் அதர்மத்தின் மொத்த உருவமாக திகழும் கலிக்கு உடல் இல்லை. மாயையாகிய அக்கலி மனிதர்களின் மனங்களில் புகுந்து தீய எண்ணங்களை தூண்டிக்கொண்டிருப்பதால், மதவெறி, சாதிவெறி, பொருள் ஆசை, பெண்ணாசை போன்ற அவலங்களில் உலகம் சிக்கித் தவிக்கிறது.இந்நிலைகளால் பாமர மக்கள் பரிதவித்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளம் புழுங்கினர். ஆன்மீக புலமை உள்ளோர் அதற்கோர் விடிவு வேண்டி ஆண்டவனை நோக்கி முறையிட்டார்கள். விடிவு, யுகாயுகங்கள் தோறும் அவதாரம் புரிந்து அதர்மத்தை அழித்த விஷ்ணு மட்டும், மீண்டும் அவதாரம் எடுத்து கலியை அழிக்க முடியாது. நிகழுகின்ற கலியுகம் உருவமற்ற கலி என்னும் மாயையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அது ஆயுதத்தால் சாகாது. என உணர்ந்த இறைவன் அன்பை படையாகவும், தர்மத்தை ஆயுதமாகவும், பொறுமையையை கேடையமாகவும், புவனமெங்கும் விதைத்து அதன்மூலமே வம்பானகலியை வதைக்க வேண்டும் என வரையறுத்த இறைவன் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக திரண்டு கலியுக பரிபாலனம் செய்யவேண்டும் என திட்டமிட்டார் அதன்படியே கொல்லம் ஆண்டு 1008 மாசி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு சரியான 4.3.1833 ல் திருச்செந்தூர் கடலுக்குள் வைகுண்டப் பரமபொருள் உதித்து வந்தார். அனேக நாமங்களோடு அதுநாள் மட்டும் இயங்கிய இறைவன், ஏகப்பரம் பொருளாக, திருப்பாற்கடலுக்குள் உதித்து இவ்வுலகிற்கு எழுந்தருளும் தருணத்தில் தெச்சணா பூமியின் புருவ மத்தியாக விளங்கும் சாமிதோப்பில் பேறுகள் பல பெற்ற புண்ணியவதி அன்னை வெயிலாலின் மணி வயிற்றில் பிறந்த முடிசூடும் பெருமாள் அன்பு சொரூபியாக வாழ்ந்து, 22 வயதில் நோய்வாய்ப்பட்டு, 24-வது வயதில் இறைவனின் நியம்படி , திருச்செந்தூர் கடலில் தீர்த்த மாடச்சென்று அக்கடலிலேயே சங்கமித்தார்.சமுத்திரத்தில் சங்கமித்த அந்த சமதர்ம நாயகனின் உடல்தோற்றம் போல் உருவெடுத்து பூவுலகிற்கு செல்வதே, இவ்யுகத்தை பரிபாலனம் செய்ய ஏற்றதாக இருக்கும் என எண்ணிய இறைவன் தம் அரூப உடலுக்கு முடிசூடும் பெருமாளின் உடல் ரூபம் ஏற்பட எண்ணினார். 

இதுவே உபாயமாய உடல் எனப்படுகிறது.அவ்வுடலோடு மானிடர்களுக்கு காட்சி அளித்த அந்த மாயாதி, சூட்சன், வைகுண்டர் என்ற பெயரேடு தாம் காட்டும் உடலுக்கு உரியவன் வாழந்த சாமிதோப்பை நோக்கி வந்தார். "சாமி தோப்பு" ஆண்டாண்டு காலமாக ஆன்மீக வளம் பொருந்திய அற்புதமான பூமி. அதுவே பூமி பந்தின் திலர்தம் என போற்றப்படும் தெச்சணத்தின் தென்பகுதி ஆகும். அங்கே தம்மை ஒரு தபோதனைபோல் காட்டிக்கொண்டு நோயினால் வருந்துவோர்க்கும், வறுமையால் வாடுவோர்க்கும், தீண்டாமை என்னும் இனவெறியால் பாதிக்கப்பட்டோருக்கும், அவர் அவர் தம் குறை அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை அருள் பாலித்தார். வைகுண்டசாமியின் அருள் பிரதாபங்கள் அவனி எங்கும் பரவிற்று. சாதி, சமய, பேதங்களை கடந்து சாரைசாரையாக சாமிதோப்பை நோக்கி, ஜனவெள்ளம் வந்து தேங்கின. வைகுண்டசாமியை அய்யா என்று அன்பு செலுத்தி பக்தி பரவசத்தோடு மக்கள் பணிவிடை புரிந்தனர். வைகுண்டசாமியோ தம்மை நாடிவரும் பக்தர்களை, அன்புக்கொடி மக்களே என அரவணைத்தார். சர்வேஸ்வரனாக இருந்தும் சாதாரண மனிதனைப்போல் மக்களோடு மக்களாக ஒன்றி உறவாடினார். மக்களும் அவரை விண்ணகத்து அரசன் என நினைக்கவில்லை. நினைக்க முடியவில்லை மண்ணகத்தில் வாழ்ந்த முடிசூடும் பெருமாளாகவே கருதினர். அதையே இறைவனும் இக்கலி முடிக்க இதமாக எடுத்துக் கொண்டார். 

"தர்மம் வைகுண்டம், தான் பிறந்தேன் இப்போது" "தீமை என்ற சொல், இனிமேல் இருக்காது இப்புவியில்" என்று தன் நிலை விளக்கத்தை மறைமுகமாக மக்களுக்கு புகட்டிய வைகுண்டசாமி, காணிக்கை, கைகூலி, காவடிகள், தூக்காதீங்கோ, ஞாயமுறைதப்பி நன்றி மறவாதீங்கோ, மாய நினைவு மனதில் நினையாதீங்கோ, தீபாதாரனை காட்டாதீங்கோ, திருநாளை பாராதிருங்கோ, நிலையழியாதிருங்கோ, நீதியாய் நின்றிடுங்கோ, கருதி இருங்கோ, கருத்து அயர்ந்து போகாதீங்கோ, நல்லோரே ஆக வென்றால், ஞாயம் அதிலே நில்லுங்கோ, தர்மயுகத்திற்கு தானேற்ற வஸ்து எல்லாம் நீங்கள் இனி திட்டித்து வைத்திடவும் வேண்டுமல்லோ எனவே வைகுண்டா என்று மனதில் நினைத்திருங்கோ என்பன போன்ற எண்ணரிய உபதேசங்களை கூறி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். ஒடுக்கப்பட்ட ஆடவர்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக் கூடாது. அங்க வஸ்திரம் அணியக் கூடாது என்று அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் இறைவழிபாடு செய்யவேண்டும் என்றும், பெண்கள் தோள் சீலை அச்சம் அன்றி அணிய வேண்டும் என்றும், மனோத்ததுவ ரீதயாக புத்தி போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார். தீண்டாமை என்னும் தீயசக்தியை வேரோடு பிடுங்கும் விதத்தில் திருமண்ணை எடுத்த தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். உங்களுக்கு தெரிந்த பாசையில் இறைவனை போற்றி நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளயும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகபடுத்தி வழிபடச் செய்தார். எளியோர், வரியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி அன்னம் கொடுத்து சமபந்தி போஜனம் நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில், எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் செய்தார். கூட்டு வழிபாட்டு மூலமே கலி என்கிற அரக்கனை வேட்டையாட முடியும் என்று "தர்மம் பெரிது தாங்கி இருங்கோ மக்காள், தாழக்கிடப்பாறை தற்காப்பதே தர்மம்" என்று தர்ம நெறிகளை போதித்தார். "மானமாக வாழ்ந்தால் மாலும் கலி தன்னாலே" என்று கூறி மக்களுக்கு தன்மான உணர்வுகளை ஊட்டினார். "தர்மம் கொடுக்கிற பேர்கள் உண்டு, வாங்குகிற பேர்கள்" என்ற காலத்தை நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்தினால் அதுவே தர்மயுகம் ஆகும். தர்ம யுகத்தை நீங்கள் எல்லோரும் அடைய வேண்டுமானால் இறைவன் படைத்த எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி அரவணைத்து வாழவேண்டும். ஆடு, கிடாய், கோழி போன்றவற்றை பலிஇட்டு இறைவனை வணங்கும் மூடநம்பிக்கைகளை முற்றிலும் நீங்கள் துறக்கவேண்டும் என்று இறைவழி பாட்டிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். வைகுண்டசாமியின் உபதேசங்களாலும், அருள் பாலிப்புகளாலும், வழிபாட்டு, வழிகாட்டல்களாலும் பல சாதி மக்களும் பயன் அடைந்தனர் . தீண்டாமை என்னும் தீய சக்தியின் கொடுமையினால் உலகில் வேண்டா வெறுப்பாக வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் வைகுண்டசாமியை தன்னை பெற்றவராகவே நினைத்து போற்றி புகழ்ந்து பக்தி செலுத்தினர். இந்நிலை கலி வயப்பட்டோரின் கண்களை உறுத்தியது. சாமித்தோப்பில் சமதர்ம சாம்ராஜ்யம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கறதே என்று மனம் தவித்த அக்கொடியவர்கள், திருவாங்கூர் மன்னனிடம் புகார் செய்தார்கள். கலி ஆதிக்கத்தால் கருத்திழந்த மன்னவனும் வைகுண்டசாமியை சிறை பிடித்து வர தம் படைகளை அனுப்பினார். படைகள் சாமித்தோப்பை நாடி விரைந்தன. வைகுண்டசாமியை கைது செய்தார்கள். கயிற்றினால் வரிந்து கட்டி சாலையில் இழுத்துச்சென்றார்கள். சாராயத்தில் விஷத்தைக் கலந்து விருந்தென கொடுத்தார்கள். சுண்ணாம்பு காள வாயில் வைத்து நீற்றினார்கள். டன் கணக்கில் விறகுகளை அடுக்கி கொளுத்தி நெருப்பாக்கி அந்த நெருப்பிலே நடந்துவர செய்தார்கள்.

வைகுண்டசாமியோ விஷத்திற்கே விஷமானார். நெருப்பின் கொடிய நாக்குகள் அந்த நெடியேனை தீண்டவில்லை. இது கண்டு மிரண்ட மன்னன் இறுதியாக காட்டு புலியை பிடித்து வந்து மூன்று நாள் பட்டினிபோட்டு புலியை அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் புலிக்கு இறையாக்க வைகுண்டசாமியை தள்ளினான். பசித்த புலியோ அந்த பரம்பொருளின் பாதார விந்தங்களை வணங்கி நின்றது.
இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்த மன்னனும், மன்னனின் படைகளும் இவர் மனிதனே அல்ல, இவரே இந்த கலியுகத்தை முடிக்கும் பூரண இறை அவதாரம் என உணர்ந்தனர்.

சோதனைகளை எல்லாம் வென்று மீண்டும் சாமி தோப்பிற்கு வந்த வைகுண்ட பரம்பொருள். தம் மக்களை தவவலிமை மிக்கவர்களாக்க எண்ணி ஏழு நூறு குடும்பத்தார்களை துவையல் தவசு செய்யச் செய்தார். அவர்களின் மூலம் ஊர், ஊராக தம் வழிபாட்டு ஆலயங்களை ஏற்படச்செய்தார். சைவம், வைணவம் என பிரிந்து கிடந்த ஆன்மீக உலகத்தில் அய்யா சிவ சிவா அராகரா என்ற அகண்ட நாம மந்திரத்தை உச்சரித்து வழிபடும் முறையை உருவாக்கிக் கொடுத்தார். அன்புக்கொடி மக்களின் வழிபாட்டுமுறை சைவ, சித்தாந்திகளையும், அன்புக்கொடி மக்கள் நெற்றியில் இட்டு கொள்ளும் ஒன்றை திருநாமம் வைணவர்களையும் கவர்ந்து ஈர்த்தது. எனவே இன்று அய்யா வைகுண்டசாமி வழிபாட்டு ஆலயங்கள் இந்தியா முழுவதும் வேராயிரம் பெற்ற விழுதுகளாய் படர்ந்து ஆறாயிரத்திற்கு மேல் தோன்றி உள்ளது.

அகிலத்திரட்டு தரும் அறிவுரை

நாளும் பல ஊழியங்கள் நமக்கு மிகச் செய்திடுங்கோ!
பொருள்:
மனித வாழ்க்கையில் விடியும் ஒவ்வொரு நாளும் இறைவன் ஏற்றுக்கொள்ளத்தக்கதான பொதுச் சேவைகளை முடிந்தமட்டும் செய்துகொண்டே இருங்கள். 

ஏவல் கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வேன்!
பொருள்:
உங்களுடைய சேவையை இறைவன் தனக்குச் செய்த சேவையாக ஏற்று அந்தந்த சேவைகளுக்கு ஏற்ப நமக்கு நற்கதியை அருள்வேன்.

சுமந்த பொற்பதத்தின் சுகம் பெற்று நீ வாழ்வாய்!
பொருள்:
நீ உன் மனதில் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாயோ அதற்கேற்பவே உனக்கு பலன் அருளப்படுகிறது. 

விளக்கின் ஒளி போல் வீரத்தனமாய் இருங்கோ!
பொருள்:
விளக்கு ஏழை, பணக்காரன், வலியோர், எளியோர், படித்தோர், படியாதோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பேதம் பார்க்காமல் தனக்கே உரிய வெளிச்சத்தை கொடுப்பதைப் போல், நீங்களும் பாகுபாடற்ற நிலையில் பயப்படாமல் உங்களால் முடிந்த நற்செயல்களை செய்து கொண்டே இருங்கள். 

தாழக்கிடப்பாறை தற்காப்பதே தர்மம்!
பொருள்:
வாழ்க்கையை வாழ முடியாமல் வதங்குகின்ற ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு உதவியைச் செய்து அவர்களின் வாழ்நாளுக்கு வழி செய்வது, தர்மத்தில் எல்லாம் தலையாய தர்மமாகும்