|
அகிலத்திரட்டு அம்மானை
அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
நந்த சிவனுகத்தோர் நாடும்வா னோர்களையும் வாருங்கோ பிள்ளாய் வானோரே என்றுசொல்லி ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றா ரெம்பெருமாள் அப்போது வானோர் எல்லோரு மேமகிழ்ந்து செப்புகிறா ரந்தச் சிவனாதி தன்னோடு மாயவரே தூயவரே மற்றொப்பில் லாதவரே ஆயரே உம்முடைய அறிவின் படியாலே அமையு மமைத்தால் அதுமனதா மெங்களுக்கு சமயம் வழுவாத சாதித் திருமாலே என்றேதான் வானோர் இதுவுரைக்க அய்யாவும் நன்றென வேமனது நன்றா யகமகிழ்ந்து காலக் கலிதான் கலிமூழ்கி வையகமும் மேல யுகம்வரையும் மூழ்கியது கண்டீரே ஆனதா லீரேழு அவனி இருள்மூடி மான மழிந்து வரம்பழிந்து மானிடரும் ஆதி முதல்சாதி அடங்கல்வரை தேவரெல்லாம் நீதி நிலைமாறி நின்றதுவுங் கண்டீரே ஆனதா லிந்த அன்னீத இருள்தனையும் ஏனமென்ன பார்த்தேன் இதையறுக்க வேணுமென்று 20 பார்க்கும்போ திந்தப் படூரநீ சக்கலியை ஆர்க்கும் செயிக்க அடங்காது கண்டீரே ஆனதால் நாமள் எல்லோரு மின்னமொரு மானமாய்ப் பிறந்தால் மாளுங்கலி யல்லாது கலிக்குள்ளகப் பட்டசடம் கலியழிக்கக் கூடாது பெலிக்குக் கலியையிட பிறந்தல்லா லேலாது ஆனதால் நாங்கள் அம்புவி யில்வருவோம் வானவரே யுங்களுட வளப்பமென்ன சொல்லுமென்றார் அப்போது வானோர் எல்லோரு மேபயந்து செப்புவ தேதோ திருமாலே நாங்களினி சிவன்முதலே திருமால் திருவுக் கிதுவானால் எவனையாப் பூமியிலே இனிப்பிறக்கோ மென்பதுதான் ஆனதால் பின்னும் அடியார்க கொருவிதனம் ஈனமே கண்டு இரங்குதையா எங்கள்மனம் அவ்விதத்தைச் சொல்வோம் அடியார்க் கின்னபடி எவ்விதத்தி லேயும் இசைந்தனுப்பு மெங்கோவே என்றுவா னோர்பணிந்து இயம்புவா ரன்போரே அன்றுமுத லின்றுவரை அடியார்க ளெல்லோரும் சிவனுக் கடிமை செய்திந்தப் பூமியிலே எவனுக்கும் பதறாது இருந்தோமே இவ்வுலகில் 40 மாய்கையில்லை எங்களுக்கு மக்கள்பெண்டீர் தானுமில்லை சாய்கைத் துயிலுமில்லை தகையுமில்லை எங்களுக்கு இளைப்பில்லை தாகம் இல்லை பசிதாகமதும் வளப்பில்லை தேகம் மறுவில்லை நோவுமில்லை அலந்தா சையில்லை ஆணில்லை பெண்ணுமில்லை கலந்தா சையில்லை காமக் கழிவுமில்லை இத்தனையு மில்லாது ஈசன ருட்செயலால் நித்திய மனப்பூவால் நிமலன் பதம்போற்றி இன்பதுன்ப மற்று இருவினைகள் தானுமற்று வன்பத்து சம்பத்து வாக்குடனே போக்குமற்று மலமற்றுச் சலமற்று மயமும் சயமுமற்றுப் பெலன்பொறி யற்றுப் பேரற்று ஊருமற்று இத்தனையு மற்று இருந்தசிவத் தொண்டரிடம் புத்திகெட்ட மாகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே சொன்னமொழி மாறாமல் சுவாமிவிண் ணப்பமென்றார் என்னவித மாகிடினும் இரட்சிக்க வேணுமையா என்றந்த வானோர் இறைஞ்சித் தொழுதிடவே நன்றென்று கேட்டாதி நாரா யணருரைப்பார் நல்லதுகாண் வானவரே நானினிமேல் செய்பிறவி இல்லறத்தை விட்டுத்தவம் இல்லைகாண் வேறொன்று 60 ஆனதால் பேடென்றும் அருளியிருளி யென்றும் மானமில்லா ரென்றும் வாராது மேற்பிறவி ஆணுக்கொரு பெண் அன்றூழி காலமெல்லாம் தோணுதலா யொன்றாய்த் தொல்லூழி காலம்வரை வாழ்ந்திருப்பா ரென்றும் மக்கள் கிளையோடும் தாழ்ந்திருப்பார் பேராய்த் தழைத்தோங்க எந்நாளும் பேரு தழைக்க பெருமையாய் வாழ்ந்திருப்பார் ஊரொன் றுகமொன்று உரையொன்றுக் குள்ளாக்கி இறவாமல் பெண்ணோடு இருந்துமிக வாழ்வதல்லால் பிறவியற்று வாழ்வார் பெண்ணுடனே யல்லாது ஊர்மறந்து பேர்மறந்து உற்றக் கிளைமறந்து பார்மறந்து தேசப் பவிசு மிகமறந்து ஆடல் மிகமறந்து ஆயிழையைத் தான்மறந்து பாடல் மறந்து பக்கத் துணைமறந்து அன்ன மறந்து அதிக மணமறந்து சொர்ண மறந்து சுகசோ பனமறந்து நலமறந்து தேக நளினமிக மறந்து மலசல மறந்து வளருந்தவப் பேறுமில்லை இத்தனை நன்மைகள் எல்லாமிகக் கொண்டாடிச் சித்திரமாகத் திரும்பிப் பிறப்பற் றவராய் 80 என்பிள்ளை ஏழும் எடுத்தவழி ஓரினமாய் அன்புள்ள பேராய் அரசாள்வோம் கண்டாயே என்று மகாமால் இப்படியே சொல்லிடவே அன்றந்த வானோர் எல்லோரு மேயிரங்கி நன்மை பலதோடும் நன்னுதலாள் தன்னோடும் மேன்மை பலபெறவே மேற்பிறக்கச் செய்வோமென்று சொன்னீரே அய்யா சுகம்பெற்றோம் நாமளென்று பன்னீர்க் குணம்போல் பச்சம்வந்து வானோர்கள் ஆதியே எங்களையும் அதிலமைக்க வேணுமென்று சோதியே என்று தொழுநின்றார் வானோர்கள் நல்லதுதா னெனவே நாட்டமுற் றெம்பெருமாள் வல்லமக்க ளான வாய்த்தசா ணார்குலத்தில் ஏழு மக்களிலும் ஏற்றவா னோர்வழியில் மாளுவந்தா லுமதிலே மாறாப் பிறக்கவென்றும் நாரா யணர்புவியில் நல்லமக்க ளேழ்வரையும் சீராக வந்தேற்றுச் செய்தவினை யும்நீக்கி ஊழூழி காலம் உயிரழியா வண்ணமும்தான் ஆழிக்கரை யான்மகவு அரசாள்வா ரென்றுசொல்லி சொல்லிப் பிறவி செய்தார்காண் சாணாராய் நல்லதென்று வானோர் நாடி யகமகிழ்ந்து 100 சாணா ராய்வந்து தானுதித்தார் வையகத்தில் வாணா ளறிந்து வானோர் மிகப்பிறந்தார் பரலோகத்தார் மனுப்பிறப்பு அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள் சொந்தப் பரலோகச் சுத்தமுனி வோர்களையும் எல்லோ ரையுமழைத்து எம்பெருமாள் ஏதுரைப்பார் வல்லோரே உங்கள் வளப்பமென்னச் சொல்லுமென்றார் நீங்க ளெனைமறந்து நீணிலத்தி லில்லையென்று நாங்கள் மிகவறிய நன்றிகெட்டுச் சொன்னீரே ஆனதா லுங்களுக்கு அதிகப்பிழை யாச்சுதல்லோ ஏனமென்ன பார்த்து இயம்பு முனிவோரே அப்போது மாமுனிவர் எல்லோரும் தாம்பயந்து செப்புவ தேதோ சிவனுலகோர் செய்திகண்டால் கற்பனைக்குள் ளல்லால் கடருவமோ நாங்களினி அற்பரல்லோ கற்பனைக்கு அல்லவென்று சொல்வதுகாண் என்றுமுனி சொல்லி இயம்புவார் பின்னுமுனி எல்லா வுரையும் எடுத்துரைத்தீர் வானோர்க்கு நல்லா யறிந்தோம் நாதனேயவ்வகைபோல் படைத்தனுப்பு மும்முடைய பால ருடவழியில் நடத்தை யதிகமுள்ள நாராயணப் பொருளே என்று முனிவோர் இப்படியே சொல்லிடவே 120 அன்று பெருமாள் அவர்க்கேது சொல்லிடுவார் எல்லோரு மென்மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ வல்லோரே யுங்களைநாம் வந்தெடுப்போ மஞ்சாதே என்மக்க ளேழும் ஈன்றவழிச் சான்றோரை பொன்மக்க ளான பூமக்கள் தங்களுக்கு என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத் தன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன் இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப் பிறப்பிறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன் ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை என்றாணை யாதி நாரா யணர்கூற நன்றாக மாமுனிவர் நல்லதென்று சம்மதித்து அய்யா வுமது அருளின் படியாலே மெய்யா வுமது விந்து வழிக்குலத்தில் படையுமையா சாணாராய்ப் பரமனே யென்றுநின்றார் சடையு மணிந்தமுனி தானுரைக்க அய்யாவும் நல்லதுதான் பிள்ளாய் நாடுவது கருமம் வல்லவரே சான்றோர் வழியிலுங்கள் தம்மினத்தில் பிறக்கப்போ மென்று பெருமுனிவரை யனுப்பிச் 140 சிறக்கச் சிவனோடு செப்புவா ரெம்பெருமாள் திருமால் சிவனிடம் மேல்நடப்புரைத்தல் ஆதியே நாதி ஆனந்த மைத்துனரே சோதியே சான்றோராய்த் தொல்புவி ஏழிலுள்ளே சங்கமுதல் தெய்வ சத்திபர லோகம்வரை அங்கவரைச் சாணாராய் அவதரித்தார் பூமியிலே என்மக்க ளான இப்பூமி ஏழிலுள்ள பொன்மக்க ளெல்லாம் பொறுமையுள்ள சாணாராய்ப் பிறந்தார் புவிதனிலே புகலுமையா நம்மள்செய்தி கலிக்குள் ளகப்பட்டோர் கடந்துகரை யேறவென்றால் வலிக்கு வலுவான வகையல்லோ வேணுமையா தீட்டுக்குள் சென்றால் திரும்பக் குளியாமல் வீட்டுக்குள் போவாரோ மேதினியோர் நாமறிய இனிமேல் செய்தி இன்னதென் றீசுரரே கனியான மைத்துனரே கட்டுரைக்க வேணுமென்றார் அப்போது ஈசர் அச்சுதரைத் தான்பார்த்துச் செப்புவது நாமறியோம் செய்கரும மங்கேயல்லால் நம்மோடே சொல்ல நாரணரே ஞாயமில்லை தம்மோடே சொன்ன சத்தியத் தின்படியே நடத்தும் நீரென்று நவின்றாரங் கீசுரரும் திடத்திருமா லானோர் செப்புவார் பின்னாலே 160 தர்மயுகச் சிறப்பு இவ்வுகமும் நீசன் இனக்குலமும் நாமழித்துச் செவ்வுகத்த நம்மனுவோர் சிறந்ததர்மத் தாரணியும் புதுயுகம் புதுவிருச்சம் புதுமனு புதுநினைவும் நெதிவுசற்று மில்லாது நின்றிலங் கும்பதியும் புதுவாயு புதுவருணன் புதுமுகில் புதுமதியும் புதுமிருகம் புதுப்பறவை புதுவூர் வனங்கள்முதல் தர்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துவெல்லாம் நன்மையினித் திட்டித்து நடத்திடவும் வேணுமல்லோ இப்படியே ஞாயம் இருப்பதுவு மல்லாமல் முப்படித்தா னுள்ள முறைகேளு மீசுரரே துரியோ தனனைத் தொலைத்துக் கலிவருமுன் பதிரங்க மேவிப் பள்ளிகொண்டு நானிருந்தேன் ஸ்ரீரங்க மீதில் சிறந்திருக்கு மப்பொழுது நீதங்கள் கெட்டகலி நீணிலத்தில் வந்ததினால் நீதநெறி மானுபமும் நிசமான தர்மமதும் சாதமுள்ள வெள்ளானை தலையைந்து கொண்டதுவும் கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன் வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில் நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம் வல்ல வெண்ணரிகள் வளரும்வெண் காக்கைகளும் 180 ஆழியோடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும் வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள் வெண்கற்றா வெண்போத்து வெண்தோகை வெண்பறவை பண்புற்ற பட்சி பலமிருக மூர்வனமும் இத்தனையும் நீசனுக்கு எற்றுக் கொடாதபடி புத்தி யறிவோடு புவனமதை விட்டேகிக் கானகமே நடந்து கதறி யெனைவருந்தி மானுவமாய் நின்று வருந்தித் தவம்புரிந்தார் ஆனதா லூர்வனத்தில் ஐந்துதலை வெண்சாரை ஈனமில்லா மிருகம் ஏற்றவெள் ளானைகற்றா வெண்ணாடை வெண்ஞாளி வெண்முத்தி வெண்மிருகம் வெண்பட்சி யான மேல்பட்சி யானதிலே பொன்பட்சி வெண்பட்சி பூணுநிறத் தானபட்சி தென்பட்சி அன்பட்சி செந்தா மரையின்பட்சி இப்பட்சி யோடு இம்மிருக மூர்வனமும் அப்பட்சி யோடே அனைத்து மனுகூலமுமாய்க் கூடிக் குழையும் கொடிப்பிதிரு மொன்றதுபோல் தேடரிய அந்தத் தேதிதனில் தோன்றிவரும் விருச்சம் படைக்க வேணு மதுவிபரம் புரச்ச மதுபார்த்துப் புகலுது ஆகமந்தான் 200 என்பிள்ளை ஏழும் இயாபிக்க நாமீந்த மின்விருச்ச மான மிகவிருச்சம் நிலையாய் வன்னமது பூகம் வாசமது விருச்சம் தென்னை விருச்சம் செறியும்புன் னைவிருச்சம் ஆதி விருச்சம் அடர்ந்த பெருவிருச்சம் சோதி விருச்சம் சுபசோபன விருச்சம் தேச விருச்சம் செம்பொன் னிறவிருச்சம் ஆகமத்தி லுள்ள அனேக விருச்சமதும் வந்து மிகத்தோன்றும் வைத்திருக்குந் தேதிதனில் சிந்து பயில்வானம் சிறந்தவொரு வெண்வானம் வான மதிலுறையும் வளர்நிலவும் நேராக ஈனமில் லாததுதான் இலங்குமெந் நேரம்வெளியாய் சேத்திரங்க ளொன்று தினமு மதுவிளக்காய் சாத்திர வேதம் சமயமொன்றாய் நின்றிலங்கும் வாயுவே பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும் ஆயுங் கலைதமிழும் அறிவொன்று போல்பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளுமிகத் தழைக்கும் தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்கள் ஒக்க ஒருஇனம்போல் உவந்திருந்து வாழ்வார்கள் மிக்கத் திருச்சாதி மேற்சாதி சான்றோராய் 220 இருப்பார் வயது எண்ணிக்கையில் லாதபடி பருப்பார் பழமும் பாலு மிகஅருந்திப் புண்ணிய முள்ளோராய்ப் பூமிதனை யாண்டிருப்பார் மண்ணெல்லாந் தர்ம வயல்போல் விளைந்திருக்கும் தர்ம புவியிலுள்ள தண்ணீர் கலைக்கியானம் நன்மைவெள்ளங் காட்ட நாடுங் கருணைவெள்ளம் இப்படியே தர்மபதி இராச்சியமொன் றுண்டாக்கிச் செப்படிய பொன்பதிகள் திட்டித்து வைக்கவென்றும் முன்னமே யென்றனக்கு உகந்ததுவ ராபதியில் பொன்னம் பதியும் பெரியதங் கப்பதியும் உண்டுகா ணப்பதியும் உவரியதுக் குள்ளிருக்கு கண்டு கொள்ளார்கள் கலிமாசு கொண்டவர்கள் ஆனதா லப்பதிதான் ஆகுவது மக்களுக்குத் தான முடனமைக்கத் தர்மசாஸ்திரத்தி லுற்றிருக்கு தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும் நம்மிடத்தி லல்லால் நாட்டில் கணக்குமில்லை சாத்திர வேதம் சமயம்போ தித்தருளி சேத்திரவிப ரிப்புரைக்கச் செல்லநம் மனுவோரும் 240 காலனெனுஞ் சித்திரக் கணக்கனெனும் பேர்களுக்கு ஏலமே தவசு இடறாக நிற்கிறார்காண் ஆனதா லவர்கள் அழிவாகிப் போகுமையா ஊனக் கிரகம் ஒன்பது பேர்களையும் அழித்துவே றொன்றுக்குள் அருள்கொண் டிருக்குதுகாண் முன்னூலின் சாத்திர முறையெல்லாந் தப்பவைத்துப் பின்னூல்பு ராணமொன்று போதிப் பொருவனுமாய் இந்தப் படியேயான் நிச்சித் திருப்பதினால் அந்தப்படி யுள்ளதெல்லாம் ஆகுமந்தத் தேதிதனில் அதுக்குமுன்னே நாம் அமைப்பதெல் லாமமைத்துக் கதுக்கெனவே பார்ப்போம் கலியை யழிப்பதற்கு அம்மைமார் தவநிறைவு என்று விசாரித்து இருக்கின்ற நாளையிலே சான்றவரைப் பெற்ற தையல்தெய்வக் கன்னியர்கள் தவத்தி லவர்நின்று தலைவரையுங் கால்வரையும் உபத்திர மால்விருச்சம் உடலெல் லாமேமூடி கன்னியர்கள் ரோமம் கனத்தபுவி யில்வேராய் உன்னியே லோகமதில் ஓங்கிப் பரந்ததுவே நின்ற தவந்தான் நிலைத்து நிறைவேறி நன்றினியக் கன்னியர்கள் நாடுந் தவத்தருமை பார்த்தன் தவமதிலும் பத்துரெட்டிக் கூடவுண்டே ஏற்றரிய சீதை இருந்த தவமதிலும் 260 ஒட்டிரெட்டிக் கூடவுண்டே ஓவியத்தார் தந்தவங்கள் ஏட்டி லடங்காது இவர்தவசைச் சொல்லவென்றால் பொறுத்து முகியாதப் பெரிய தவத்தருமை மறுத்துரைக்கக் கூடாமல் வளர்ந்துதவ முற்றியதே சத்தி உமையாட்கும் சதாசிவ மானதுக்கும் முத்திக்கும் மாலுக்கும் முகுந்தன் பிரமனுக்கும் மனதில் மிகஅறிந்து மாதுசத்தி யேதுரைப்பாள் காட்டிலேழு பெண்கள் கனநாள் தவசுபண்ணி தாட்டிமையாய்ப் பெண்கள் சடைத்தார்காண் ஈசுரரே பெண்கள் தவசியல்லோ பொறுக்கமிகக் கூடலையே அங்கேபோய் நாமள் அவர்தவசு பார்ப்போமென்றாள் என்று உமையிரங்கி இப்படியே சொல்லிடவே அன்று அறம்வளர்த்தாள் அவள்பங்க ரேதுரைப்பார் நல்ல உமையே நாடும்பெண் ணார்தவத்தில் செல்லவென்றால் நாரணரும் தேனேவர வேணுமென்றார் அப்போது நாரணரை அடிவணங்கி மாதுமையும் ஒப்போ டுறவணங்கி உரைக்கிறா ளன்போரே அண்ணரே கோவே ஆதிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே காட்டிலேழு கன்னியர்கள் தவசுதனி லிருந்து சடைத்தார் கனநாளாய் 280 சிவனே அவர்கள்தவம் செப்பப் பொறுக்காது நாமள்போய்ப் பார்த்து நல்லபெண்க ளேழ்வரையும் ஆமான பதவி அருளவே வேணுமையா என்றுநா ராயணரை எழுந்தருளச் செய்துஉமை அன்று சிவனாரும் ஆதிநா ராயணரும் அம்மை உமையாளும் அரம்பை ஸ்திரிமாரும் செம்மையுட னடந்து சென்றார் வனமதிலே வனத்தி லவர்கள்வர மாதரேழு கன்னியர்கள் இனத்திலுள்ள மாதுமையை எல்லோருங் கண்டாவி தாயே வுனது தாள்கண்டு எத்தனைநாள் வாயே புவிக்குடைய மாதாவென் தாயாரே எனதேர மெங்களைநீர் இகழ்ந்து கடத்தாமல் தனதாக எங்கள் தயவில் குடியிருந்து கற்பகலாக் காத்த கண்ணெங்கள் மாதாவே உற்பனமா யெங்களைநீர் உலகில் தவறவிட்டு இருந்தாயே தாயே எங்கள்விதி நாயகமே அருந்தாமல் வாடினோமே அறமில்லார் தங்களைப்போல் காத்திருந்தா யென்றிருந்தோம் எங்களுட கட்டழியப் பார்த்திருந்த ஞாயமென்ன எங்களுட பார்வதியே எந்நேர மீசுரர்க்கும் என்னம்மை யுங்களுக்கும் 300 சொன்ன பணிமறந்து சொல்தப்பி நின்றோமோ ஈசருட சட்டம் யாங்கள் மிகமறந்து தேச மதில்வரவே சிந்தை யிச்சித்ததுண்டோ கற்பினை மறந்தோமோ காராவைக் கொன்றோமோ அற்புதவேள் தாயே அடியார் தமக்கருளும் என்றுகன்னி யெல்லாம் இப்படியே தானுரைக்க அன்று அறம்வளர்த்த அம்மை மனதிரங்கி நல்லதுகாண் பெண்ணேயுங்கள் ஞாயமெல் லாமுரைப்போம் வல்ல சிவனாரே வார்த்தையொன்று நீர்கேளும் தவத்தை நிறைவேற்றித் தார்குழலா ளேழ்வரையும் அகத்தே வரவழையும் ஆதியே யென்றுரைத்தாள் அப்போ சிவனார் ஆனகன்னி ஏழ்வரையும் கொப்போடு சூழ்ந்துநின்ற குழையெல்லாமே யுதிர்த்தி நிறைவேற்றித் தவத்தை நேரிழைமா ரேழ்வரையும் சிறைமாற்றிப் பெண்களையும் சிவனார் வரவழைத்து வந்து மடவார் மறையொத்த மூவரையும் சந்துஷ்டி யாகத் தாழ்ந்து நமஸ்காரமிட்டுக் கனகத் திரவியக் கப்பல்கரை சேர்ந்தாற்போல் மனமகிழ்ந்து மாதுமையை மாமடவார் முத்திமுத்திக் கொண்டாடிக் கொண்டாடிக் கூறுவார் கன்னியர்கள் 320 சென்றாடிச் சென்றாடிச் சிவனை மிகப்போற்றி வந்தனே வந்தாய் போற்றி மாதுமைக் கணவா போற்றி சந்தன மயிலே போற்றி சண்முகன் தாயே போற்றி நந்தகோ வேந்தே போற்றி நாதனே நீதா போற்றி சிந்தரென் கணவா போற்றி சிவசிவா போற்றிப் போற்றி மாதவா போற்றிப் போற்றி மறைமூடி காணா வல்ல நீதவா போற்றிப் போற்றி நிசரூபச் சித்தா போற்றி சீதவா ளுமையே போற்றித் தெய்வநன் மணியே போற்றி பாதவா வனத்தில் தொட்ட பாங்கனே போற்றிப் போற்றி மூவர் தேடியு முற்றாத முதலே யுனதுபதம் போற்றி தேவர்க் கரியத் திரவியமே தெய்வ மணியே சிதம்பரமே காவக் கானக வனமதிலே கற்பை யழித்துக் கைவிட்டகன்ற தாவத் துணையே யென்கணவா தவமே யுனதுபதம் போற்றி மாட்டி லேறும் மகாபரனே மாது உமையாள் பங்காளா காட்டி லடியா ரேழ்பேரும் கற்றா விழந்த பசுவதுபோல் ஊட்டி உறக்கா ரில்லாமல் ஊமை கண்டக் கனாவதுபோல் வாட்ட மறிந்து மனதிரங்கி வந்தாய்க் கவலை தீர்ந்தோமே தீர்ந்தோமினி எங்களைத் தானும் திரும்பக் கயிலைக் கழையாமல் ஈந்தோர் பிள்ளை ஏழ்வரையும் இனமு மேழுங் குறையாமல் சாந்தோ ரெங்கள் கணவரையும் தந்தே தரணி யரசாண்டு 340 வாழ்ந்தே யிருக்க வரமருளும் மாயா திருக்கு மறைமுதலே அய்யா முதற்பொருளே ஆனந்த மானவரே மெய்யான மூல மேல்வீட்டி ருப்போனே தூணாக அண்டபிண்டத் தூரைக் கடந்தோனே கோணவட்டத் துள்ளே குடியிருக்குங் கோவே ஈசரே யெங்களுட இளைப்பெல்லாம் நீர்மாற்றித் தேசமதில் வாழச் செல்ல வரந்தாரும் பெற்றமக்க ளேழும் பிள்ளை யதுவழியும் கொத்துக் கொடியும் குலவம்மி சமுழுதும் சான்றோர் வழிமுழுதும் தற்காத்து எங்களையும் பண்டூசல் செய்த பாரமுனி வன்பதத்தில் சேர்ந்திருக்க வுமவரின் திருப்பாத முந்தொழுது தாழ்ந்திருக்க வுஞ்சிவனே தாரும்வர மென்றுரைத்தார் அப்போது நல்ல ஆதிசிவ மேதுரைக்கும் இப்போது நாரணரே இக்கன்னி கேட்டதற்கு இன்னவித மென்று இசைந்து வரங்கொடுவும் சொன்னவிதங் கேட்டுச் சொல்லுவார் நாரணரும் கேட்ட வரமதுதான் கெட்டிதான் ஈசுரரே நாட்டமிந்தப் பெண்களுக்கு நான்சொல்ல நீர்துணையாய் மடமாதே பெண்ணரசே மடந்தைக் கிளிமொழியே 360 தடமான பொய்கையிலே தண்ணீர் தனைச்சுருட்டி ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து வாசமுடன் நாடோறும் வருகின்ற வேளையிலே இன்றேநீர் கொண்டு ஏகின்ற நீரையெல்லாம் இன்றென் தலையில் இயல்பாய் விடுவுமென்றேன் இரந்து திரியும் ஈசருக் கல்லாது பரந்தபுவி மாயனுக்குப் படாதே எனவுரைத்தீர் அப்போது உங்களைநான் ஆகட் டெனவுறுக்கி இப்போது பாரென்று இத்தனையுஞ் செய்தனல்லோ வண்ணத் திருமாலிவ் வகையுரைக்க மாதரெல்லாம் கண்ணையவர் பொத்திக் கவிழ்ந்துமிக நாணிநின்றார் அப்போது எம்பெருமாள் அவர்களுட னேதுரைப்பார் ஒப்போடு வொத்த ஓவியங்க ளேகேளும் நீர்பெற்ற பிள்ளைகள்தாம் நீணிலத்தி லேபெருகி வானத் தமிர்த மதுபா லமுதருந்தி வாழ்ந்தார் சிலநாள் மன்னரெனக் கோட்டையிட்டார் ஆழ்ந்ததொரு சோழன் அவன்பழிகள் ரண்டேற்றான் பின்னுள்ள சான்றோர்க்குப் பிறகுவந்த மாநீசன் அந்நீசன் சாபமிட்டு அவர்கள் துயரமுற்றார் துயரமுற்றுச் சான்றோர் துற்கலிக் குள்ளாகி 380 அயர்ந்து மிகவாடி ஆட்போலே நீசனுக்குத் தாழ்ந்து பணிவிடைகள் சான்றோர்கள் செய்தாலும் வாழ்ந்துமிகக் கெட்டகலி வைது மிகஅடித்து ஆருமற்றார் போலே அலையுகிறார் சான்றோர்கள் சேருமிட மில்லாமல் தியங்குகிறார் சான்றோர்கள் அப்ப னானிருக்க அவரம்மை நீயிருக்க அப்பனம்மை யில்லையென்று அடிக்கிறான் நீசனெல்லாம் நீரு மித்தனைநாள் நின்றுவிட்டீ ரித்தலத்தில் நானும் பரதேசம் நடந்துவந்தே னித்தனைநாள் சான்றோர் துயரம் தான்கேட்பா ராருமில்லை மீண்டே நாம்கேட்கவென்று மேதினியில் போகவென்றால் இச்சொரூபங் கொண்டு ஏகினால் மாகலியன் பொய்ச்சொரூபத் துள்ளே புக்கிடுவோ மல்லாது என்றையா நாதன் எடுத்துரைக்கக் கன்னியர்கள் அன்றவர்கள் தலையில் அடித்துக்கீழ் வீழ்ந்தழுதார் அழுதாரே பெண்கள் அருவரைகள் தானிளக ஒழுகான பெண்கள் ஓலிமிட் டேயழுதார் அய்யோயெம் மக்கள் ஐந்திரண் டானதிலே பொய்யோமெய் யோசோழன் பொன்றிவிட்ட ஞாயமது கற்பழியாக் கன்னியெங்கள் கற்பையெல்லாம் நீரழித்து 400 உற்பனமாய்ப் பெற்றபிள்ளை ஒன்றுபோல் நீர்பார்த்து வளர்க்காமல் மக்களையும் மாளக் கொடுத்தீரே பழவினையோ யெங்களுட பாவக் குறைச்சலிதோ கற்பிழந்தோ மென்றும் கௌவையில்லா தேயிருக்க இப்பிழையோ வந்து எமக்குத் தலைவிதிதான் மக்க ளிருபேரை வதைத்தகொடுஞ் சோழனுட அக்கபக்க மெல்லாம் அறாதோ எம்சிவனே மாபாவிச் சோழனுட வம்மிசங்க ளானதெல்லாம் தீயாவிக் கொண்டு செத்திடா தோசிவனே எம்மக்கள் தம்மை இடுக்கஞ்செய் தேயடித்த வன்மக்கலி நீசனெல்லாம் வாழ்விழந்து சாகானோ பழிசெய்த சோழனூர் பகலநரி ஓடாதோ வழிசோழ வம்மிசங்கள் வன்னரகில் மாளாதோ நீசக் குலங்கள் நெருநெரெனத் தானொடிந்து தோசப் புழுக்குழியில் தோயாதோ யெம்சிவனே பெற்றநா ளன்றுமுதல் பிள்ளைகளைக் காணாமல் நித்தம் பால்சுரந்து நெகிழுதே யெம்சிவனே பெற்றபிள்ளை ஏழுடைய பேருடம்பு தன்னிறத்தைச் சற்று மறிந்திலமே தலையிலேழு துஞ்சிவனே கொதிக்குதே யெங்கள் கும்பிமிகக் குமுறிக் 420 கதிக்குதே யெங்களுட கண்மணியைக் காணாமல் ஏழுகன்னி மாரில் யார்பெற்ற கண்மணியோ கோளுரைத்துப் பாவி கொன்றானோ யெம்சிவனே கொன்னவன்தா னின்னம் கொடுநரகில் வீழாமல் இன்ன மிருப்பானோ இறந்தானோ யெம்சிவனே பாவியவன் செத்துப் பஸ்பமாய்ப் போனாலும் ஆவியைக் கண்டாலும் ஆக்கினைகள் செய்திடுவோம் மக்கள்ரண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ பக்குவ வயசதிலோ பாழறுவான் செய்தவினை கலியாணஞ் செய்த கண்மணிக ளானாக்கால் வலியான மங்கையர்கள் மனஞ்சலித்து வாடுவரே இட்ட வுடைமை இறக்கா திருப்பாரோ கட்டின மங்கிலியம் கழற்றா திருப்பாரோ இத்தனையுங் கழற்றாது இருக்கச் சிவன்செயலால் புத்தி தனைக்கொடுத்துப் பெண்ணரசைக் காப்பாரோ ஏதென் றறிந்திலமே எங்களுட தாயாரே கோதண்ட மாதாவே கோவேயெந் தாயாரே வனத்தில்வந் தெங்களுட வாட்டமெல்லாம் தீர்த்தீரென்று புனத்தில்கனி கண்டதுபோல் பிரியமுற்றோ மாதாவே கைப்பிடித்த பண்டாரம் கட்டுரைத்த சொற்கேட்டு 440 மெய்ப்பிடித்த மெல்லாம் மிகவுழறு மாதாவே கன்னிப் பருவமதில் கைமோச மானதினால் உன்னி மனதில் உளறி யுளங்கலங்கிப் பாராமல் மக்களையும் பார்மீதி லேகிடத்திச் சீரா கவனத்தில் சென்றோ மிகநாணி பாவி கெடுவான் பழிசெய்வா னென்றுசொல்லித் தாவியே யெங்கள்மனம் சற்று மறியாதே எங்களையு மீடழித்து எம்மக்க ளேழ்வரையும் சங்கை யழிக்கத் தலையெடுத்தா ரிக்கூத்தர் நச்சுக் களையாய் நாங்கள்வா ழுமிடத்தில் சச்சுருவ மிட்டுவந்து சதித்தாரே பண்டாரம் எங்களுக் கென்றிவரைப் படைத்தா ரோபிரமன் கங்கை யணிசிவனார் கேட்டு மகிழ்ந்தாரோ இத்தனைக் கூத்தும் இக்கூத்தெல் லாம்பார்க்கக் கூத்துவன்போல் தோன்றி கோலங்கொண்ட பண்டாரம் இனியெங்க ளையேற்று ஈன்றபிள்ளை ஏழ்வரையும் மனுவேழ் குறையாமல் மக்களேழு வழியும் குறையாமல் தந்து குவலயத்தை மக்களுக்குத் திறவானத் தங்கத் திருமுடியுஞ் செங்கோலும் கொடுத்தெங்கள் மக்கள் குவலயத்தை யாண்டிருக்க 460 அடுத்துச் சிலநாளில் ஆக்கிவைக்கா திருந்தால் ஏழுபெண் பாவம் ஏற்பீர்காண் பண்டாரம் நாளு கடத்தாமல் நடத்தி மிகத்தாரும் எங்களையுங் கற்பழித்து இந்த வனந்தனிலே மங்கள சோபனமும் மறந்து மயிர்விரித்துத் தூங்காமல் வாடி தினமும் மிகவுணர்ந்து ஆங்கார மேமறந்து அவனியா சையறுத்துத் தலைவிரித்துக் கலையைச் சதமென்று எண்ணாமல் உலையில் மெழுகதுபோல் உறுவனத்தி லேநிலையாய் வெயில்பனியிலு மேகத் துளிர்விழிக் குள்ளாகிக் குயில்கூவும் வனத்தில் கோதையேழு பேரும் நின்றோமே காட்டில் நீர்செய்த மாயமதால் இனியெங்கள் மக்கள் ஏழ்வரையு மேழ்வழியும் அநியாய முமடக்கி ஆனமக்கள் வம்மிசத்தைக் கொத்தோடே சேர்த்தெடுத்துக் குறுங்கலியை யடக்கி அரசாள மக்களுக்கு ஆனபதி ஈயும்வரைக்கும் எங்களைப்போல் சுகமற்று இருப்பீர்காண் பண்டாரம் மங்களமல் லால்கலி மாளும்வரை வாராது என்று சபித்தார் ஏற்றகன்னி ஏழ்பேரும் அன்றுநா ராயணரும் அவர்கேட்டுத் துக்கமுற்று 480 என்னசொல்லப் போறோம் யாம்தா மினியெனவே வன்னத் திருமேனி மனதுநொந் தேதுசொல்வார் பெண்ணேநீ ரேழ்பேர்க்கும் பிரமா அமைத்தபடி எண்ணம் வந்ததல்லால் யானென்ன செய்தேனடி ஆனால் கலியை அழிந்துமக்கள் தம்வழியை நானாகச் சென்றெடுத்து நலங்கொடுக் கும்வரைக்கும் துயர மெனக்குத் தொடுக்குமெனச் சாபமிட்டீர் அசுரக் குடும்பம் அறுக்கும்வரை முன்னாளில் ஈசரிட்ட சாபம் ஈதோடே வாய்த்துதடி மாசங் கடந்து வரும்வரைக்கும் நீங்களுந்தான் எங்கே போயிருக்க ஏழ்பேர்க்குஞ் சம்மதங்காண் கொங்கை யினியழகக் கோதையரே சொல்லுமென்றார் அப்போது கன்னி அவரெல்லா மாராய்ந்து செப்புகிறா ரந்தச் சிவபத்தர் தன்னுடனே மக்கள்ரண்டு பேர்கள் மாண்டாரவ ருயிரை அக்கமது செய்தீரோ அயலோவது ஞாயமென்ன என்றுகன்னி ஏழ்பேரும் இரங்கித் தொழுதிடவே அன்றுநா ராயணரும் ஆதிசிவ னுமையும் தாதா மனமகிழ்ந்து சதுர்முகனைத் தானழைத்து வேதாவே மக்கள்ரண்டை வெற்றியுள்ள வைகையிலே 500 கொன்றானே சோழன் குருநன்றி யைமறந்து சென்றாரே மக்கள் சென்றவுயி ரெவ்விடங்காண் அப்போது வேதா அவர்தான் மிகமகிழ்ந்து செப்புகிறோ மென்று செப்பினா ரன்போரே இறந்தபிள்ளை ரண்டின் ஏற்றவுயி ரானதையும் அறந்தழைக்கு மாகயிலை அறைக்குள் ளடைத்திருக்கு மால்மக்க ளென்று மனமகிழ்ந்து நான்பதறி வாலைமுனி யுயிரும் வானவர்கள் தன்னுயிரும் ஆனதினால் பிறவி அமைக்கப் படாதெனவே நானிதற் கஞ்சி நற்பதியில் வைத்திருக்கு என்றுவே தாவுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார் அன்று படைத்திலையே அநேகமனு வாகுமல்லோ அஞ்சுமக்கள் பிள்ளை அவனியைம்பத் தாறதிலும் மிஞ்சிப் பரந்து மேல்சான் றோர்பெருக்காய் இப்பிள்ளை ரண்டும் ஏலமே நீர்படைத்தால் கொப்புநூ றாயிரம்போல் கூடிப்பெ ருக்குமல்லோ பாவி கெடுத்தான் படையாமல் நீர்கெடுத்தீர் தாவிக் கெடுத்தான் சளக்கலியன் மாபாவி இனியென் மக்களுயிர் இன்பமுடன் நீர்காத்து மனுவராய்ப் பூமியிலே வைகைக்கூ டவ்வோடு 520 எழுப்ப வேணுமென்று யாம்நிச்சித்தி ருப்பதினால் வெளுப்பாக அவ்வழியில் மேலுகத்தோர் தாம்பிறந்து இன்பமுள்ள வானவரும் இவ்வழியில் வாழ்வதினால் அவ்வழியி லவ்வழிகள் அநேகம் பெருகிடவே செவ்வாக நிருமிப்போ திடீர்திடீ ரெனப்படையும் என்றுசொல்ல மூலம் இசைந்துநல்ல வேதாவும் நன்று நன்றென்று நருள்பிறவி செய்தனராம் இப்படி யேபிறவி இவர்செய்வோ மென்றுசொல்லி அப்பிறவி வேதா அமைத்தார் மனுப்பெருக உடனேநா ராயணரும் உள்ளங் களிகூர்ந்து திடமான கன்னியர்கள் செய்முகம்பார்த் தேதுரைப்பார் நீர்கேட் டதற்கு நிண்ணயங்கள் கண்டீரே இனிநான் கேட்பதற்கு இன்னதென்று சொல்லிடுவீர் உங்களைப்பூ லோகமதில் உடைய வழிக்குலத்தில் நீங்களும் போய்ப்பிறக்க நிச்சித் திருப்பதினால் ஏதுபெண்கா ளுங்கள்மனம் ஏதென்று டனேசொல்லும் மாதுக ளெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடி எங்களுட நாயகமே எமையாளும் ரத்தினமே செங்கருட வாகனவா தேவி மணவாளா நீர் நிச்சித்த நினைவெள்ளுப் போலளவும் 540 சீர்பரன் முதலாய்த் தெரியாத சூட்சியதே எங்களைப்பூ லோகமதில் எங்கள் வழிக்குலத்தில் மங்களமாய்ப் பிறவி வகுப்போ மெனவுரைத்தீர் பிறவிய துநாங்கள் பெண்மனுப் போல்பிறந்தால் இறவி யாகாமல் இருக்க அருள்வீரோ அல்லாமல் பின்னும் அடியார் மிகப்பிறந்தால் வல்லாத நாயகமே வந்துநீ ரேற்குமட்டும் மாதவிடை மாமணங்கள் மலர்ந்துறக்க மில்லாமல் சீதமாய் மனுவோடு உறவாடிச் சேராமல் மூடாம லாடை முகமினுக்கிச் சேராமல் பாடாம லந்திசந்தி படுத்துத் துயிலாமல் நன்மை யறியாமல் நளிப்பேச்சுக் கேளாமல் தின்மை யறியாமல் தீன்ரசத்தைத் தேடாமல் கொய்து புடவை குக்குளித்துச் சூடாமல் மயிரு வளர்க்க மனதுவே றெண்ணாமல் கொங்கை திரளாமல் கூறுடம்பு வீசாமல் செங்கனிவாய்த் தேமல் தேகமதில் வீழாமல் பக்குவ ஞாயப் பருவம்வந்து வாய்க்காமல் மிக்குவ மான மிகுவாழ்வு சேராமல் சுற்றுக் கிளைகள் தொடுத்தன்பு கொள்ளாமல் ஒற்றுப் பிதற்றாமல் ஒருவர்முகம் பாராமல் 560 அல்லல்நோய் பிணிகள் அனுப்போலும் வாராமல் தொல்லை வாராமல் சுகமுமிக வாராமல் இந்த விதிப்படியே எங்களையும் நீர்படைத்துச் சொந்தமுடன் வந்துநீர் தொட்டெடுத்து நன்மைதந்து இரச்சிப்போ மென்று எமக்கு உறுதிபண்ணி நிச்சித்துத் தர்மகுலம் நீர்பார்த்து தான்படையும் என்றுகன்னி ஏழ்பேரும் இப்படியே சொல்லிடவே அன்றுஆ திநாதன் அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதுதான் பெண்ணேநீர் நம்மோடே கேட்டபடி வல்லவித மானாலும் மாறாதென வுரைத்தார் வாக்குரைக்க கன்னியர்கள் மனமகிழ்ந்து கொண்டாடி நாக்குரைப்பார் பின்னும் நாரா யணரோடு நாங்கள்போய்ப் பிறந்தால் நம்முடைய நாயகமே தாங்கள்வரு மென்றதற்குத் தருணமே தென்றுரைத்தார் அப்பொழுது அய்யா நாராய ணருரைப்பார் செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது ஆயிரத்தெட் டம்பலமும ஆன திருப்பதியில் வாயிதமோ ரம்பலமும் வளர்பதியி லொன்றதுவும் கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும் சங்கை யழிந்து தலையழிந்த தவ்வாண்டு 580 வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே லிங்கமொன்றி லேமூன்று இணையாகத் தோன்றினவென்(று) எங்கும் பிரகாசம் இட்டவ்வாண் டேவருவோம் கண்டிடநீர் நான்வருகக் காரண மநேகமுண்டு விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம் சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம் என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய் இத்தருணங் கேட்ட இப்பொழு தேமுதலாய் வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதுகா ணெங்களையும் நாயகமே நீர்படையும் வல்லப் பொருளே மறைமுதலே யென்றுரைத்தார் உடனையா நாதன் ஓவியத்தா ரேழ்வரையும் திடமான பூமியிலே செய்தர்ம அவ்வழியில் பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள் திறவி யொளிமாதர் தேசம தில்பிறக்க நாரா யணரும் நல்லசிவ னுமையும் சீராரும் நல்ல தெய்வத் திருமாதும் கயிலை தனிலேகிக் கட்டான மண்டபத்தில் 600 ஒயிலாகக் கூடி உவந்திருக்கு மப்போது காளி சிறை மாகாளி யென்ற வடபத்தி ரகாளி ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம் நன்றான கன்னி நாரா யணரிடத்தில் வந்து விழுந்து மண்ணி லவள்புரண்டு சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு உன்மக்கள் சான்றோர் உற்றமக்க ளேழதிலே நன்மையற்ற சோழன் நாடும்பழி ரண்டேற்றான் கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல் சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன் அல்லாமல் சோழனுட அக்கமறச் சாபமிட்டேன் பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன் இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்துவிட்டுப் புத்திரரின் செய்திசொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள் அப்போத னாதி அய்யாநா ராயணரும் செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார் கேட்கலையோ யென்றன் கிருபைச் சிவனாரே 620 ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான் பிள்ளைக்கோர் தீங்கு பிழையாம லெப்போதும் வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனா னென்றுசொல்லி மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும் திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ நான்தனிமை யல்லவே நால்பேரு முண்டல்லவோ தான்தனிமை யாகிடினும் தப்பிதமென் றேபுகல்வார் வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய் நானவளோ டேவாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன் மக்களுக்கோர் தீங்கு வந்ததே யுண்டானால் மிக்கச் சிறையுனக்கு மேவு மெனவுரைத்து ஈந்தோ மதலை இவள்கையில் ஈசுரரே மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள் புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள் தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப் பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது 640 மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச் சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில் இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம் நாச்சியார்க் கிச்சிறையால் நமக்கென்ன கேடோகாண் கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம் என்று சிலபேய்கள் எண்ணியெண்ணி யேதிரியும் மூன்று முறுக்குள்ள மூளிப்பே யேதுசொல்லும் கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால் மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டோடும் இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாய் 660 அப்படியே காளி அவள்சிறையி லேயிருக்க நல்லநா ராயணரும் நாடுஞ் சிவனாரை வல்லப் பொருளே மறைகாணா தோவியமே காளி சிறைதான் கவிழ்ந்திருக்கும் ஞாயம்வந்தால் ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம்வாய்க்கும் முதற்றான் கலியை முடிக்கப் பரகாளி விதத்தமுள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்கப் பார்த்துநா மிங்கிருக்கப் படுமோகா ணீசுரரே சாற்றும்நீ ரின்னதென்று சத்திகொண்ட ஈசுரரே உடனேதான் ஈசர் உரைக்கிறா ரன்போரே கடனோகா ணென்னோடு கலங்குமொழி பேசுவது நானோ தடுத்தேன் நாட்டுக்கலி தீட்டறுக்க ஏனோகாண் மைத்துனரே என்னோடு பேசுவது எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு எப்போ தருவீரென்று எண்ணிமிக வாடுறோமே தீட்டை மிகக்கழித்துச் சிவஞான முத்திதந்து வீட்டையெப்போ கயிலை விளக்குவீ ரென்றுமிக தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும் குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ என்றே காபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள் 680 நன்றென்றா கட்டெனவே நாரணருங் கொண்டாடி மகாலெட்சுமி மகரமாதல் லட்சுமியைத் தானழைத்து ஏதுரைப்பா ராதிமுதல் சச்சுடராய் நின்ற தருணத் திரவியமே இதுமுன் பிறப்பு இருந்தா யுருப்பிணியாய் மதுவினியப் பெண்ணே மாயக் கலியறுக்க நான்நிச்சித் திருப்பதினால் நாயகியே நீயுமொரு பூனிரைச்சப் பொன்மகரப் பெண்மயில்போல் நீவளர அலையி லறுமுகவன் அவன்பதியி னாழிதனில் நிலையிலே நின்று நீவளரு கண்மணியே நீவளரச் சூழ நிறைந்ததங்க மாமணியால் பவளக்கால் மண்டபமும் பவளமணி மேடைகளும் தேனினிய மண்டபமும் தேரும்பூங் காவனமும் சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க அகரத் தெருவும் அரம்பையர்கள் தந்தெருவும் சிகரத் தெருவும் சேர்த்துவைப்பே னுன்சூழ நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து தித்தியென வேமுழங்கி சேவிக்க வைத்திடுவேன் கோட்டைகள் சூழக் கோடிமண்டப முகித்து வீட்டலங் காரம்போல் வேலையிலுந் தருவேன் உந்தனுட மேனி உரைக்கெளிதாத் தங்கமெனச் 700 செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ கலியுகத்தை முடிக்கக் கண்ணான ஒருயிரை வலியுடனே யுன்னுடைய வயிற்றில் பிறவிசெய்து நாட்டு நருளின் நகர்சோ தனைபார்த்துத் தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனு தானெடுத்துத் நாடுன் மகன்றனக்கு நல்லமுடியுங் கொடுத்துத் தேடுந் தர்மச்சீமை செலுத்தசெங் கோல்கொடுத்து அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே துரைசானி போவெனவே சொன்னார்கா ணம்மையுடன் கேட்டுமிக லட்சுமியும் கிளிமொழிவாய் தான்திறந்து நாட்டுக் குடையவரே நாரா யணப்பொருளே மகரச் சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால் சிகரநற் கோபுரமே திருவுளமே நீர்தானும் வருகுவ தென்னவித மாக வுருவெடுத்து அருகில் நீர்வருக அடையாள மென்னவென்றாள் அப்போது அய்யா ஆனந்த மேபெருகி செப்புகிறோ மென்று திருவோ டிதுவு ரைக்க மூன்று சடையில் முறுக்குச்சடை யொன்றெனவும் பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்கு மென்விழியில் நெற்றி தனில்பிறையும் நெடியவட அக்கினியும் 720 சுற்றிக் கனல்மேனி துய்யமாற்றெண் ணாயிரமாம் பளிரெனவே லோகம் பதினாலுக் கோருருவாய்த் துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய்க் காதம் பன்னிரண்டில் கண்டகலி யன்றெரிய தீதக் கனலாய்ச் செயகுண்டமும் பதித்துக் காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்துப் பெண்ணரசே நான்வருகும் பெருமைக் கடையாளம் கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய் அப்படித்தா னென்பிறவி அருகே வருகையிலே இப்படியே வந்து இருபேரு மோர்பிள்ளைபெற்று நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்துக் கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத் தானெரித்து அதின்மே லுனக்கும் எனக்குமிகு ஆனந்தம் மதுவாக ஈன்ற மதலைநா டாளுமடி என்று பிறவிக்கு ஏற்றஅடையா ளமுரைத்து நன்றினிய மாதே நடப்பதற்குச் சங்கடமேன் உடனேதான் லட்சுமியும் உரைக்கிறா ளாதியுடன் திடமான கோவே செய்ய மணிவிளக்கே என்னை மகரச் சிலைபோல் பிறவிசெய்ய 740 என்ன விதமாய் இசைவீர்கா ணென்கோவே என்றுரைக்க அம்மை ஏதுரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று பெண்ணே நமக்குத்தொழி லோகடிது அலையி லுனையும் ஆமதியப் பொன்மகரச் சிலைபோல் வளருவெனச் சிந்தித்தா ரெம்பெருமாள் வடகயிலை வாசலிலே வந்தலைந்த வாரிதிரை மடமடென வந்து வாரியெடுத் தாயிழையைச் செந்தூ ரலைவாரி திரைமே லெடுத்திருத்தி அந்தூரு வாரி அம்மை தனையெடுத்துச் சந்தன வாரி சமுத்திரத்தி னுள்ளிருத்திப் பந்தியாய் வைத்த பரமமணிக் கோட்டையதுள் தெய்வரம்பை சூழத் தேவரெல்லா மோலமிட மெய்பரமக் கன்னியர்கள் மிகுவாய்க் குரவையிட இடம்மான மெக்காளம் டகுடகா வென்றிடவே மடம்மான வாத்தியங்கள் மடமடென வேயதிர வலம்புரிக ளெல்லாம் மாதுவந்தா ளென்றூத சிலம்புனைந்த ரத்தினங்கள் சில்விளக் கேந்திநிற்க முத்துகள் சிப்பி முன்வந் தொளிவீச கொத்துக் கொத்தாகக் கோமேதகஞ் சூழ கன்னிமா ரெல்லாம் கால்கவரி வீசிநிற்க 760 தன்னிகரில் லாமறையோர் சாஸ்திரங்க ளோதிநிற்க மகரச் சிலையாள் மாதுதிரு லட்சுமியாள் சிகரகோ புரத்தாள் திருவுருவந் தான்வளர்ந்தாள் பார்பதி மாதுமையும் பரமேஸ்வரித் தாயும் சீர்பதியு மங்கே தினமூன்று நேரம்வர ஈஸ்வரனும் வேதா இவர்கள் தினம்வரவே வாசவனும் வானவரும் வந்துநிதம் போற்றிசெய்ய செய்ய அமரரெல்லாம் சிவசிவா வென்றுநிற்க வெய்யவனுஞ் சந்திரனும் மெல்லிபதம் போற்றிநிற்க புஷ்ப மலர்தூவிப் பொன்னுலகத் தோர்சூழ செப்பமுள்ள மகரச் சிலைபோல் திருவளர்ந்தாள் 771 |
செவ்வாய், 30 செப்டம்பர், 2014
அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்திரட்டு அம்மானை
|
அகிலத்திரட்டு அம்மானை பகுதி-8
ஒது மணியலைக்குள் ஒவியம்போ லேவளர மாதை மகரச் சிலையாய் வளரவிட்டுத் தாதணியும் நாதன் சங்கரரோ டேதுரைப்பார் கூட்டுக்கிளி போலிருந்த கொடியிடையைப் போகவிட்டு நாட்டி லிருப்பேனோ நம்முடைய மைத்துனரே சீதை மகரச் சிலைபோ லங்கேவளரப் பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ அப்போ துசிவனார் அவரேது சொல்லலுற்றார் செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும் நடத்தும்படி யுள்ள ஞாயமெல்லா மிப்போது சடைத்து இருக்காமல் தானடத்து மென்றுரைத்தார் சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும் சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில் வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில் பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய் மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே ஆனதா லவரை அவனிதனி லேபிறவி ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால் 20 நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும் இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும் மூவர் நடுவன் முத்தனரி நாரணரின் சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால் எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச் சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று நாடி யகமகிழ்ந்து நாரா யணருடனே சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான் மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில் தானாகிய மான சங்குசரத் தங்கமுடி என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில் இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப் பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள் 40 வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால் எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன் வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும் நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண் அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால் இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும் அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான் அந்தப் பொழுதில் ஆதி சிவமுதலும் வந்தங்கு நின்றார் மாகிருஷ்ண மாலவரும் கண்டந்தத் தேவன் கைமறந்த நிஷ்டையோடு தண்டமிழ்சேர் பதத்தைத் தையலும்வந் தேவணங்கி இத்தனைநாள் யாங்கள் நின்றதவம் கண்டிரங்கிச் சித்த மிரங்கிச் சிவனேநீர் வந்தீரோ எந்தன் பெருமானே இறையவரே வந்தீரோ நந்தகோ பால நாரணரே வந்தீரோ குருவே அரிநாதா கோபாலா வந்தீரோ முருகக் குருபரனே முத்தாநீர் வந்தீரோ செல்வக் கடலே சீமானே வந்தீரோ 60 கல்விக் கடலான கறைக்கண்டா வந்தீரோ அரவணிந் தத்திவுரித்(து) அணிந்தோரே வந்தீரோ பரமசிவ மான பச்சைமால் வந்தீரோ இப்படியே மானாளும் ஏற்றசம் பூரணனும் அப்படியே வந்தோர் அடிபணிந்து போற்றிடவே மாய பரனும் மனமகிழ்ந்து கொண்டாடி ஆயனைப் பார்த்து அருளுவா ராதியுமே மாயவரே கேட்டீரோ வாய்த்தஇத் தேவனுந்தான் தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தா னில்லையிவன் முற்றுந் தவமும் முழுதும்நிறை வேறுகையில் சிற்றின்ப மாகித் திருமுடிமே லிச்சைகொண்டு வாடி யயர்ந்தான் மங்கையருந் தேவனுமே நாடி யிவன்தனக்கு நல்வளமை யேதுசொல்வீர் அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடிச் செப்புகிறா ரந்தச் சிவனோடு எம்பெருமாள் ஏது விதமாய் இருந்ததவ மேகுறைய தீதுவந்த ஞாயம் செப்பிடீ ரென்றுரைத்தார் அப்போ சிவனார் அகமகிழ்ந்து தேவனோடு இப்போ துன்சிந்தை எண்ணமெல்லாஞ் சொல்லுவென்றார் தேவ னதைக்கேட்டுச் சிந்தை மிகக்கலங்கி 80 ஆவி மறுகி அவனேது சொல்லலுற்றான் காரணரே நாங்கள் கருத்தில் நினைத்ததெல்லாம் பூரணமா யங்கே புகுந்துதோ யென்சிவனே ஐயோநான் சொன்னேனென் ஆயிழையோ டல்லாது கையோ கண்ணாலே காணேனே மற்றொருவர் ஊமை மொழிபோல் ஒதுக்கி லுரைத்தாற்போல் நாமறியப் பெண்ணறிவாள் நாடறியா தென்றிருந்தோம் இவர்க ளறிவதற்கு யார்சொல்லிப் போட்டாரோ எவர்களும் நாம்பேசுகையில் இங்குவரக் காணோமே ஆர்சொல்லிப் போட்டாரோ அறியோமே யென்சிவனே தார்சிறந்த என்சிவனே சர்வ தயாபரனே பூரணனே வாசவனே பொறுத்தினிக் கொள்ளுமையா நாரணரே என்சிவனே நாடிப் பொறுவுமையா என்றுசொல்லித் தேவன் ஏற்ற விருத்தமதாய் நன்றினிய முப்பொருள்மேல் நற்போற்ற லேபடிக்கப் பரதே வதையான பைங்கிளியு மப்போது திரமான தாயார் சிவசக்தி பேரதிலும் சிவநாமப் பேரதிலும் ஸ்ரீகிருஷ்ணர் பேரதிலும் விவமான ஆசிரிய விருத்தம்போல் போற்றலுற்றாள் 100 காரணா அரிநாரணா கவிபூரணா வெகுதோரணா கவிஞோர் தொழும் வாரணா கருணகரத் தருணாவெகு தருணா கவிவருணா கவிமால் சிவாபோற்றி காயாம்பூவின் மேனிநிறமாயா சிவசிவாயா கருவா யுருவுருவா யுனைத் தினமே யருள் நியாயா குறிமத்தகா கருணாகரா போற்றி குணசீரா வெகுதீரா நலிவீரா புவிநாதா திருவோடுறு மார்பா சிறியார்மிக அறியாச்செய்த வெறியானதைச் சிறிதாக்கியே சேர்ப்பாய் முகம்பார்ப்பாய் முடிவானதை யறியாமலே மோகமாய் வெகுதாகமாய் உளறித் தவங்குளறியே உன்சொற்பதம் அஞ்சல்லென ஒஞ்சிப்பத மஞ்சினோம் உன் செயல்தந் தருள்வாயே இப்படியே கன்னி ஏற்றபர தேவதையும் அப்படியே ஆசிரிய விருத்தமொன்று பாடிடவே கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில் இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால் அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும் நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால் பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில் எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே 120 இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில் கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும் கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால் கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப் பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக் கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக் கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து 140 மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும் கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த் தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால் வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய் நாட்டை யரசாண்டு நாச்சியார் போலிருப்பாய் என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார் அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம் மாது புவியில் வளரப் பிறந்தபின்பு தாது கரமணிந்த சங்கு சரத்தாமன் தேவன் தனைப்பார்த்துச் செப்புவா ரெம்பெருமாள் பூவுலகி லுன்றனுட பெண்பிறக்கப் போனதல்லோ ஏதுநீ தேவா இனியுனது செய்தியென்ன சீரொத்தத் தேவன் திருப்பாட்டு ஓதலுற்றான் ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே அலையிலேதுயி லாதி வராகவா நீறுமேனி நிரந்தரம் பூசிவா நீசிவாசிவ மைத்துன ராகவா வீறுசத்தி மணவாள ரானவா வீரலட்சுமி மன்னரரி ராகவா ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே 160 சீதமாங்குணச் செல்வனே போற்றி சிவசிவா சிவனே போற்றி நீதவா நட்பெய்துவா போற்றி நீசிவா சிவராகவா போற்றி மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரிசெல்லனே போற்றி ஆதவா அரிநாரணா போற்றி அனாதியேயுன் றன்போற்றிப் போற்றியே அய்யனேதவம் யானிற்கும் போதிலே அந்திராணி மன்னனிந்திர னானவன் பொய்யின் மாய்கைநினை வதினாலவன் பொற்பக்கிரீடமீ துற்பனத் தாசையால் மெய்யின்ஞா னத்தவம் விட்டுவாடினேன் வித்தகாவுன் சித்த மிரங்கியே செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள் சிவசிவா சிவசிவா சிவாபோற்றியே போற்றியென் றேத்தித் தேவன் பொற்பதம் வணங்கி நிற்க ஆத்தியே சூடும் வேதன் ஆகமே மகிழ்ச்சை கூர்ந்து தீத்திய ஆய னோடு செய்தியே தெனவே கேட்க நாற்றிசை புகழுந் தெய்வ நாரண ருரைக்கின் றாரே தேவன் வணங்கித் திருப்பாதம் போற்றிடவே ஆயனோ டந்த ஆதிசிவ மேதுரைக்கும் அச்சுதரே தேவனுக்கு ஆன வளமையது நிச்சயமாய்ச் சொல்லி நீரனுப்பு மென்றுரைத்தார் அப்போது நாரா யணரு மகமகிழ்ந்து செப்புகிறோ மென்று தேவனுக்கங் கேதுரைப்பார் கேளாய்நீ தேவா கீழான மங்கையரைத் தாழாத மேல்வகையில் சரியாக்க வேணுமென்று 180 நின்றாய் தவத்தில் நினைவொன்றைத் தானாட்டி சண்டாளா நீநினைத்த நினைவுதவத் தொத்திடுமோ சூழ வினையறுத்துச் சுருதிநே ருள்ளாக்கி நீளநூ லிட்டு நீதவசு நிற்கையிலே ஆசை நினைவாமோ அறிவுகெட்ட மாதேவா பாச மறுத்தல்லவோ பரகெதியைக் காணுவது ஏதுகா ணுன்றனக்கு இந்நினைவு வந்ததினால் மாது பிறந்ததுபோல் வையகத்தில் நீபிறந்து இந்த நினைவதற்கு இனிப்பிறந்து நீசிலநாள் தொந்துயர மெல்லாம் தொல்புவியி லேதொலைத்துக் கண்டந்த மங்கையரைக் கருவால் வசமாக்கிக் கொண்டு திரிந்து கோதையரின் தன்னாலே நஞ்சுதின் றானாலும் நாண்டுகொண் டானாலும் உன்சீவன் மாய்க்க உனக்கு மனதாகிப் பின்னுஞ்சில நாள்கழித்துப் பெண்ணோ டுறவாடித் தன்னோவியம் போல் தானிருக்கும் நாளையிலே உன்துயரந் தீர்த்து உன்னையெடுத் தென்மகவாய் என்துயர மெல்லாம் யானேநீ மாற்றல்செய்து என்வரிசை தானம் எல்லாமுனக் களித்துப் பொன்னரசு தந்து புவியாள வைத்திடுவேன் 200 என்றுமா கிருஷ்ணர் இப்படியே சொல்லிடவே அன்றந்தத் தேவன் அவரடியைத் தான்போற்றி அய்யாவே பூமிதனில் அவதரிபோ என்றீரே பொய்யா னகலியன் பூமிதனி லேபிறந்தால் பிறந்த வழியும் பிதிருமந் தக்குலமும் அறந்தழைக்கு மாலே அதுவுமென் னாற்கெதிதான் பெற்றுக்கொள் ளும்படியாய்ப் புத்தி கொடுத்தருளிப் பற்றுத லாகப் பலன்கொடுப்போ மென்றுசொல்லும் அல்லாம லென்னைவந்து ஆட்கொள்ளும் நாளதுதான் எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமையா அப்பொழு தந்த ஆதிநா ராயணரும் செப்புகிறா ரந்தத் தேவன் தனக்குத்திடம் தெச்சணா பூமிதனில் தேசபர சோதனைக்கு நிச்சயமாய் நான்வருகும் நிசத்துக் கடையாளம் பூமியி லோர்திக்குப் பொருந்தி மிகவாழும் சாமிவே தமறந்து சுழல்வேத முண்டாகும் சாதி வரம்பு தப்பி நிலைமாறும் பாரிகட்கு மூப்புப் பார்மீதி லுண்டாகும் நீசக் குலங்கள் நெளுநெளெனப் பூமிதனில் தூசியிடத் தெண்டம் தொடர்ந்து பிடிப்பார்கள் 220 வானத் திடிகள் வருடவரு டந்தோறும் நீணிலத்தில் வீழும் நின்று மலைமுழங்கும் சீமை தென்சோழன் சீர்பயிரு மேவிவரும் இலைகள் கருகும் இருவேதம் பொய்யாகும் தலைக்கண் படலம் தட்டழிய ஓடிநிற்கும் நச்சேத் திரமுதிரும் நடக்கும் வழிகுறுகும் பொய்ச்சேத் திரக்குருக்கள் பூமிதனில் மேவிவரும் நவ்வா துலுக்கு நாட்டில் கலசல்வரும் சிவ்வா லயங்கள் தேய்ந்து சுவரிடியும் கிணறு பாழாகும் கீழூற்றுப் பொய்யாகும் இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள் மனுக்கள் தங்களுக்கு மாகலச லுண்டாகும் மாமோக ஆசையினால் மாசண்டை யாகிவரும் காமோக வெறியால் கனபழிக ளுண்டாகும் மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும் தாதாவை வேலை சந்ததிகள் கொண்டிடுவார் மாடாடு தன்வயிற்றில் மனிதர்போல் தான்பிறக்கும் கோடா னதுபெருத்துக் கொல்வார் சிலபேரை காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும் 240 மாணிக்கத் தங்கம் வையிர மிகமறையும் நீணிலத்தில் பேய்கள் நிரந்துமிகக் கோட்டிசெய்யும் மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக்கேடுவரும் பேதையர்கள் பிள்ளை பிறக்கு மதிசயம்போல் கோதையர்கள் கொங்கை கூடாம லேவாழ்வார் கூடப் பிறப்பைக் கொடும்பகைபோ லெண்ணிடுவார் வான முறுமும் மழைகீழ்ச் சொரியாது தான மழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும் ஈனருக்குக் காலம் ரெம்பரெம்ப வுண்டாகும் வீணர் பெருப்பார் வீடதனைக் கெடுப்பார் தாணருட வேதம் தலையழிய விட்டிடுவார் பொய்வேதம் பூமிதனில் பெருத்துமிக வுண்டாகும் மெய்வேதந் தன்னை விரும்பா திகழ்ச்சிசெய்வார் கள்ளர் பெருப்பார் கறியுப்பு மேமலியும் கொள்ளையாய்ச் சம்பை கோடாமுக் கோடியுமாய் நாணி யிறப்பார் நஞ்சித்தின் றேயிறப்பார் கேணிக்குள் ளேயிறப்பார் கீறிக்கொண் டேசாவார் வயிர முழுங்கி மாள்வார் சிலபேர்கள் துயரம் பொறுக்காமல் தோயமதி லேவிழுவார் ஈக்கள் பெருகும் எறும்பு மிகப்பெருகும் 260 காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும் சன்னாசி நிஷ்டை தவறி யலைவார்கள் ஒன்னாமது சாதி உலைமெழுகு போலலைவார் கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும் சட்ட மழியும் சந்தியம்பல மிடியும் கூட்டங் குலையும் குடும்பம் பகையாகும் நாட்டை யரசாங்கம் நாலுரண்டு மூன்றாகும் கோட்டை யழியும் குச்சிக்கட் டைமதிலாம் சீவசெந் தெல்லாம் தீனில்லாத் தட்டழியும் சூவை பெருக்கும் சூறா வளிமீறும் அக்கினியால் தண்ணீரால் அநேக சீமையழியும் முக்கியமாய் லோகமதில் வாந்தி மிகமீறும் இப்படித்தா னல்லாமல் இன்னு மநேகவளம் செப்பத் தொலையாது செப்புவேன் பின்னுனக்கு நீகேட் டதற்கு நிலையாக இத்தனையும் நான்தேட் டமாக நாடியுன் னோடுரைத்தேன் உன்பேரால் நானும் உள்ளாசை கொண்டிருந்துன் தன்பேரா லென்றனக்குத் தலைச்சிறைதான் மாறுமென்று சொன்னே னுனக்குச் சொல்லுவே னின்னமுமே என்ன இனிப்பிறக்க ஏதுனக்குச் சங்கடங்கள் 280 என்றுரைக்க நாதன் இசைந்ததே வனுரைப்பான் அய்யாவே யென்னுடைய ஆதித் திருவுளமே பொய்யா னகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே சாதி பதினெண்ணாய்த் தான்பிரித்தா னேநீசன் ஆதித்தா திதனிலே அமையுமையா என்கோவே அல்லாம லுன்றனக்கு ஆதிவரை யெந்நாளும் நல்லாகத் தொண்டுபண்ணி நவ்வியிருக்கு மனுவில் படையுமையா யென்றன் பிதாவே யெனப்பணிந்தான் குடையொன் றாற்பெரிய குருவு மகிழ்ந்துரைப்பார் நல்லதுகாண் தேவாநீ நம்மக்கள் ஏழ்பேரில் வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகவித்தாய் அவ்வழியி லம்மனுவில் ஆனசான் றோர்குலத்தில் மெய்வழியி லங்கே மிகப்பிறக்கப் போநீயென்றார் நல்லதுதா னென்று நவிலுவான் தேவனுமே வல்லவரே மூவருக்கும் மைத்துனராய் நிற்போரே என்னைப் பிறவி இப்போது செய்யுமென்று வன்னத் தேவாதி வணங்கிநின்றான் மாயவரை ஆத்ம ஜெயம் அப்பொழுது அய்யா நாராயணர் மகிழ்ந்து முப்பொழுது வுள்ள முறைமையது கூறலுற்றார் ஆறுதரம் நம்மை அகம்வைத்துக் கொண்டசடம் 300 பேதுபெற்ற தில்லையே பேறுநா மீந்திலையே அச்சடல மம்மலையில் அருந்தவசு பண்ணினதே இச்சடல மீடேற இந்தநாள் வந்துதென்று தேவன் சடலமதைத் திக்கென் றழித்துவிட்டு மூவர் நடுவருட முச்சடலக் கூடதையும் வரவழைத்து வாருமென்று மறையோரைத் தானேவி விரைவாக வாருமென்று விடைகொடுத்தா ரெல்லோரும் நடந்து மறையோர் நல்ல மலைபார்த்துச் சடம் வீற்றிருந்த தங்கமலை மீதில்வந்தார் மலைமீதில் வந்து மலைப்புதுமை தான் பார்த்து அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய வடவாசல் நேரே வாழு மலையிதுதான் தடவரை யிம்மலையில் தானிருக்கும் நதிகள் தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே சங்கமகி ழிம்மலையின் தடாகமிது நன்றெனவே கரைகாணாத் தேவர் காட்சியிடு மிம்மலைதான் விரைவான மாமுனிவர் வீற்றிருக்கு மிம்மலைதான் மரித்தோரைத் தானெழுப்பும் வாய்த்தசஞ்சீ விவளரும் பதித்தான மிம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது என்றுசொல்லித் தேவர் ஏற்றமலைக் குள்ளேகி 320 நன்றுநன் றென்று நாடியவர் பார்க்குகையில் கண்டாரே காயாம்பூ கண்ணர்முக் கூடதையும் கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்தரத மீதேற்றி நடந்தார் கயிலை நாதர்திருக் கூட்டமதில் வடந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும் பார்த்துச் சடலமதைப் பதிந்தமுகத் தோடணைத்துத் தேற்றி உயிர்க்கொடுத்துச் செப்புவார் கூடுடனே எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகிப் பூமி கடலும் பொருப்புப்பூ லோகமெல்லாம் நேமித் தெனைச்சுமந்து நேட்டமுடன் திரிந்தாய் நீசெய்த நன்றி நினக்குரைக்கக் கூடாது நானுனக்குச் செய்யும் நன்றி மிகக்கேளு இத்தனை நாளும் எனைச்சுமந்து பாடுபட்டாய் புத்திரனாய் நீயெனக்குப் பெரியதெய்வ உயிரில் பிறந்து புவிமீதில் பின்னுஞ்சில நாட்கழித்துச் சிறந்த முகூர்த்தமதில் சேர்த்தே உனையெடுத்து உன்றனக்குப் புத்தி உபதேசங் களுரைத்து என்றன் துயரமாற்ற யுகசோதனைக் கனுப்பி உன்றன்துயர மாற்றி உகத்துயர மும்மாற்றி 340 என்றன்துயர மாற்றி ஈசர்துயரம் மாற்றி கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச் சலிவில்லாத் தர்ம தங்கநவ ரத்னபதி முத்துநவ ரத்தின முடியுனக்கு நானருளி எத்திசையு மெய்க்க ஏற்றமனு அன்போர்கள் கட்டியங் கூறிக் காட்சியிட்டு வுன்றனக்கு எட்டுத்திக்கும் நின்றேத்த ஏற்றகுடை யொன்றுதந்து அரசாண்டு நீயும் அழியாத் திருவுளம்போல் வீரசான்றோர் சூழ வீரக் கொடிநிறுத்திச் செங்கோற்கு தர்ம சிவசெங்கோ லுமருளி எங்கோ லரசு என்நாமச் சக்கரத்தால் சீமையைம்பத் தாறுமுன் சொல்லொன்றுக் குள்ளாக்கிப் பூமுகச்சிங் காசனமும் பொன்முகச்சிங் காசனமும் கோமுகச்சிங் காசனமும் குணமுகச்சிங் காசனமும் மாமுகச்சிங் காசனமும் மயில்முகச்சிங் காசனமும் அன்னமுகச் சிங்கா சனமீதோ டாகவேதான் பொன்னம் பலம்போல் பெரியசிங் காசனந்தான் முப்பத்தி ரண்டும் முழுது முனக்கருளி செப்பொத்த மாணாக்கர் சேவிக்க வுன்றனக்குத் தருவேனா னுன்னுடைய தாயார்பே ராணையதாய் 360 என்றையா நாதன் எடுத்தவர்க் கேவுரைக்க நன்றெனவே வானோர் நற்பூரணனைக் கொண்டாடிப் பேறுபெற்ற சென்மம் பிராணனிது நன்றெனவே பூருவத்தி லுள்ள பூசாந்திர மிவ்வளமை என்னதவஞ் செய்தாரோ இத்தேவன் தாய்தகப்பன் பொன்னப்ப நாரணர்க்கு பிள்ளையென வந்துதிக்க நாரண ரைப்பெறவே நல்ல தசரதரும் பூரணமாய் நின்றதவம் புகன்றிடவே கூடாது பன்னீரா யிரம்வருசம் பாரத் தவசுபண்ணி முன்னூறு வாரமதாய் உலகளந்தோர் ராமருரு கண்ணாளர் தந்தமக்கு கற்பகம்போ லித்தேவன் மதலையாகப் பிளந்து வையகத்தை ஆள்வானென்று கதலிவாய் நாதன் கற்பித்தா ரிப்படியே ஆருபெற்ற பேறும் அல்லப்பே றிப்பலன்தான் பேறுபெற்ற வரிவர்தான் பிறந்த இனமதிலே நாம்பிறந்தா லும்பெரிய நலங்கிட்டு மென்றுசொல்லித் தாம் பிறப்போமென்று சான்றோராய்த் தான்பிறந்தார் அவர்கள் பிறக்க ஆனதெய்வப் பூரணனை திவசமது பார்த்துச் செய்தார் பிறவியது 380 செய்யச் சிவமும் சிவவேதனும் மகிழ்ந்து வைய மளந்த மாலும்பிறவி செய்தார் கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்கத் தர்மச்சம் பூரணனைத் தரணிப் பிறவிசெய்தார் செய்த சடமதையும் சுமக்கச் சடம்பார்த்து மெய்யிசையும் நாதன் மேதினியில் செய்தனராம் சடம்பிறக்க லோகம் தட்டுமிக மாறி உடன்பிறக்கச் செய்தார் உலகளந்தோர் கற்பினையால் அன்று பிறவிசெய்தார் அவனிசோ தனைக்கெனவே எண்ணமில்லை யென்று ஈசுரரு மாயவரும் கொண்டாடி ஈசுரரைக் கூறுவா ரச்சுதரும் கெண்டையக்கண் ணீசுரரே கேட்டீரோ யென்றனெண்ணம் திருமால் கலைமுனிக்கு அருளல் பஞ்சவர்க்கு அஞ்சல்செய்து பார்மீதில் நானிருக்க வஞ்சகநீ சக்கலியன் வந்ததுகண் டேபதறி நடுநடுங்கி நானோட நல்லகலைக் கோட்டுமுனி பொடுபொடென வந்தான் போற வழிதனிலே ஏன்காணும் மாயவரே எய்த்திளைத் தோடுவதேன் கண்காணாப் போறேனென கலைக்கோட்டு டனுரைத்தேன் என்ன விதத்தாலே என்றே யவனிசைய சொன்னதுறு கலியன் சூட்சியினா லென்றவுடன் 400 அப்போ முனியும் அவனேது சொல்லலுற்றான் இப்போநீ ரோடுகிறீர் இவனை யழிப்பதற்கு எப்போ வருவீர் இசையுமென்றான் மாமுனிவன் அப்போ முனியோடு அருளினது நீர்கேளும் மாமுனியே நீகேளு வஞ்சகநீ சக்கலியை நாமுன்னின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ கலியனுட கண்ணு கண்டால் பவஞ்சூடும் திலிய அவனுயிரைச் செயிக்கயெவ ரால்முடியும் முன்னின்று கொல்ல மூவரா லுமரிது பின்னின் றவனவனால் பேசாதே மாழவைப்பேன் வல்லமையுங் காட்டேன் மாநீசன் கண்ணின்முன்னே உற்பனமுங் கொடேன் ஒன்றறியா நின்றிடுவேன் வந்தேனெனச் சொல்வார் வரவில்லை யென்றிடுவார் என்றன்பே ரோகாணும் யாரோஎனச் சொல்வார் இதோவந்தா னென்பார் இவனில்லை யென்றிடுவார் அதோவந்தா னென்பார் அவனில்லை யென்றிடுவார் இப்படியே சூட்சமொன்று எடுப்போம்நாம் மாமுனியே எப்படியு முள்ளறிவோர் எனையறிவார் மாமுனியே அறிந்தோ ரறிவார் அறியாதார் நீறாவார் செறிந்தோர்கள் வாழ்வார் சேராதார் போய்மாழ்வார் 420 சாத்திரத்தி லுந்தோன்றேன் சதுர்மறையைத் தாண்டிநிற்பேன் சேத்திரத்தி லுமடங்கேன் செய்தவத்தி லுமடங்கேன் அன்பிலு மடங்கேன் அறத்திலு மேயடங்கேன் வம்பிலு மடங்கேன் வணங்கிடி லுமடங்கேன் கும்பிடி லுமடங்கேன் குவித்திடி லுமடங்கேன் நம்பிடி லுமடங்கேன் ஞானத்தி லுமடங்கேன் யோகக் கிரியை உறுசரிதை யிலடங்கேன் விற்பனத்தி லடங்கேன் வினோத மதிலடங்கேன் சொற்பனத்தி லடங்கேன் தெரிசனத் திலடங்கேன் கனாவி லடங்கேன் கைகாட்ட லிலடங்கேன் அனாவி லடங்கேன் அச்சரத்திலு மடங்கேன் இத்தனையிலு மடங்காது இருந்து பகைமுடிப்பேன் என்றுநான் சொல்ல ஏற்றகலைக் கோட்டுமுனி மன்றுதனில் வீழ்ந்து மறுகியழு தேபுலம்பி மண்ணிலு மடங்கா மரத்திலு மடங்கா மறையிலு மடங்கா பலவசத்திலு மடங்கா கண்ணிலு மடங்கா கருத்திலு மடங்கா கவியிலு மடங்கா பலவிதசெபிப் பிலுமடங்கா எண்ணிலு மடங்கா இகத்திலு மடங்கா இறையினி லடங்கா இரங்கிலு மடங்கா ஒண்ணிலு மடங்காத உனைவந் தடைந்திட உரைத்திட மருளென பதத்தடிமிசை விழுந்தான் மறையினி லடங்கா இறøயினி லடங்கா வணங்கிலு மடங்கா பலவகையிலு மடங்கா துறையினி லடங்கா தொல்வியி லடங்கா சுகயினி லடங்கா சுருதியி லடங்கா உறவிலு மடங்கா ஒளியிலு மடங்கா உகத்திலு மடங்கா ஒருவிதத்திலு மடங்கா புறத்திலு மடங்கா அகத்திலு மடங்கா புகழ்ந்துனை யடைந்திட வகுத்துரையென பதத்தடிவிழுந்தான் 440 சரியையி லடங்கா கிரியையி லடங்கா சையோகத்தி லடங்கா ஞானத்தி லடங்கா கருத்தினி லடங்கா கலைக்கியானத் திலடங்கா கனாவிலு மடங்கா கருவிலு மடங்கா உருவிலு மடங்கா உருகினு மடங்கா ஒன்றிலு மடங்காத உனைவந் தடியாருன தருகினி லடங்கிட அருளுரைத் திடுவென அருள்முனி பதத்தடிமிசை விழுந்தான் உகத்திலு மடங்கா ஓதிலு மடங்கா உணர்விலு மடங்கா உற்பனத் திலுமடங்கா தவத்திலு மடங்கா தழுவிலு மடங்கா தனத்திலு மடங்கா தயவிலு மடங்கா அகத்திலு மடங்கா புறத்திலு மடங்கா அசத்திலு மடங்கா புசத்திலு மடங்கா - மனத் தகத் தடக்கியுன் பதத்தடி பணிந்திட வகுத்துரை யருளென பதத்தடிமிசை விழுந்தான் ஓரெழுத்து மீரெழுத்தும் உற்றபர மூன்றெழுத்தும் ஆறெழுத்து மஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும் ஏதெழுத்திலு மடங்காது இருந்துபகை முடிப்பேனென ஓதினீரே அய்யா உலகளந்த பெம்மானே எட்டாப் பொருளே எங்கும் நிறைந்தோனே கட்டாக் கலியைக் கருவறுக்க வந்தீரால் நாங்களுமைக் கண்டு நலம்பெறுவ தெப்படித்தான் தாங்கள் மனதிரங்கித் தான்சொல்ல வேணுமென்றான் அப்போ முனிக்கு அருளினது நீர்கேளும் இப்போது மாமுனியே இன்றுநீ கேட்டதுதான் ஒருவ ரறியாத உபதேசங் கண்டாயே கருதி வருந்தினதால் கட்டுரைப்பேன் கேட்டிடுநீ 460 எனக்கா கும்பேர்கள் இனங்கேளு மாமுனியே புனக்கார மில்லை பூசை முறையுமில்லை கோவில்கள் வைத்துக் குருபூசை செய்யார்கள் பூவதுகள் போட்டுப் போற்றியே நில்லார்கள் ஆடு கிடாய்கோழி அறுத்துபலி யிடார்கள் மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள் என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும் அன்போ டவரை ஆதரிக்கும் பேராகும் இரப்போர் முகம்பார்த்து ஈவதுவே நன்றாகும் பரப்போரைக் கைசேர்த்துப் பணிவதுவே நன்றாகும் என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும் அன்போராய் வாழ்ந்தாலும் அறிவுநினை வொன்றானால் நாம்வந்தோ மென்ற நாமமது கேட்டவுடன் தாம்வந்து வேடமிட்டோர் சாதியது நன்றாகும் அல்லாமற் கேளு அரிய முனியேநீ எல்லா அமைப்பும் ஏலமே விட்டகுறை எச்சாதிக் காச்சோ அச்சாதி நன்றாகும் எவர்க்கு மிகஈந்து இருப்போரே நன்றாகும் அவர்க்குதவி செய்வோர் அவ்வினமும் நன்றாகும் தாழ்மையாய் வாழ்ந்த சாதியது நன்றாகும் 480 ஏழ்மையாய் வருவோம் இரப்பன் பரப்பனென இரப்பனைக் கைகொண்டோர் எனையேற்றார் மாமுனியே பரப்பனைக் கைகொண்டோர் பரமேற்றார் மாமுனியே சினமு மறந்து செடமுழிக்கும் பேர்மனுக்கள் நினைவுக்குள்ளே நாம் நிற்போங்காண் மாமுனியே இனத்தோடே வொத்து இருந்துமிக வாழ்ந்தாலும் சொன்ன நினைவதுக்குள் துயிலாமல் வாழ்வோங்காண் மாசுக் கலியை மனதூடா டாதேயறுத்து வாசு நினைவில் வந்துநிற்போம் மாமுனியே பின்னுமொன்று கேளு ஒருவர்க்கோர் வாரமுமாய் நின்றோ முனியேயினி நீசக் கலியறுக்கச் சென்றோமே யானால் செய்யுந் தொழில்கேளு காலுக்குள் ளேதிரியாம் கையதுக்குள் ளேதிரியாம் மேலுக்குள் ளேதிரியாம் விழியதுக்குள் ளேதிரியாம் கண்டெடுத்தார் வாழ்வார் காணாதார் வீணாவார் பண்டைப் பழமொழிபோல் பார்மீதி லாட்டுவிப்பேன் கண்டெடுத்துக் கொண்டோர் கரையேறு வாரெனவும் தொண்டனெனக் கண்டு சொன்னேனா னுன்னோடு தாய்தமர்க ளென்றும் தனது கிளைகளென்றும் 500 வாயுரமாய்ச் சொல்லும் வம்பரென்றும் பார்ப்பதில்லை அன்பாகி வந்தவரை அலைச்சல்செய் தேற்பதுண்டு வம்பான மாற்றானை வளர்த்தே யறுப்பதுண்டு எட்டியு மெட்டாத எழைக் குணம்போலும் கட்டியுங் கட்டாத கடிய சொரூபமதும் வேளைக்கு வேளை விதக்கோல முமணிந்து நாளுக்கு நாளாய் நடக்கு மதிசயமாய் இரப்ப வடிவாய் இருந்து கலிதனையும் சங்கி லிரந்து தான்வளர்ப்பே னன்போரை என்றுரைக்க நாதன் எடுத்துமுனி யேதுரைப்பான் மன்று தனையளந்த மாயத் திருமாலே இந்த விதமாய் எழுந்தருளி வந்திருப்ப(து) எந்தச் சொரூபம் எடுத்தணிவீ ரெம்பொருமாள் கேட்டான் முனியும் கீர்த்தியுள்ள ஈசுரரே நாட்டான மாமுனிக்கு நானுரைத்தது கேளும் எகாபரத்தை நானினைத்து ஏழுபிள்ளை ஈன்றெடுத்து மகாபரனார் செயலால் மக்களுக்குச் சொத்தீய நானுப தேசித்து நாட்டில் மிகவிருத்தி மானுவஞ் சோதிக்க மகற்கு அருள்கொடுத்து மாசுக் கலியறுத்து மக்களொரு மித்தவுடன் 520 பாசு பதங்கொடுத்துப் பாலன்கை யால்விளக்கிக் கூப்பிடுத லொன்றில் குவலயத்தைத் தான்கிறக்கிச் சாப்பிடுவே னஞ்சைத் தன்பாலை யாளவைப்பேன் என்று கலைமுனிக்கு இயம்பிவந்தே னீசுரரே அன்று மொழிந்ததுக்கு அமைத்ததுகா ணிம்மகவு சந்தோச மாச்சுதுகாண் சங்கரரே நீருமிப்போ வெந்தோசந் தீர்ந்துதென்று வெள்ளிக் கயிலையிலே ஒருவிடத்தி லெக்கியத்தை ஊட்டிக் கனலெழுப்பித் திருநடன மாடுமென்று செப்பினா ரொப்புடனே அப்படியே நல்லதென்று அரனு முமையாளும் முப்படியே மாலினிக்கு ஒன்பதாம் பேறெனவும் வேதனுக்கோ ராயிரம் பிறவி யாச்சுதென்றும் மாது உமைக்கு வளர்பிறவி ஏழெனவும் திதுவுக்கோர் பத்தாம் செய்யப் பிறவியென்றும் சதுர்மறைக் கேழெனவும் சாஸ்திரத்துக் கோர்நான்கும் வானவர்கோன் றனக்கு வளர்பிறவி மூன்றெனவும் தானவர்க் கேழெனவும் சரசுபதிக் காயிரமாம் தொண்டர் தமக்கு சூல்பிறவி யொன்றெனவும் அண்டர்கள் மெய்க்க அரனடன மாடலுற்றார் திருநடன உலா நாதன் முறையார்க்கு நற்பிறவி யொன்றுபத்தாம் 540 வேதன் றனக்குப்பிறவி ஆயிரமாம் - வெண்டரள மாதுக்கு மாயிரமாம் மாதுமைக் கோரேழாம் சீதுக்குப் பத்தெனவே செப்பு இந்திரற்கு மூன்றெனவும் இறையவருக் கேழெனவும் சந்திரற் கோரேழாம் சாற்று - நன்றியுள்ள மறையதுக்கு மோரேழாம் மானமுள்ள தொண்டருக்கு இறப்பிறப்பில் லாப்பேறென் றியம்பு என்றிவகை ளெல்லா மிப்படியே வந்துதென்று ஒன்றியுள்ள சித்தாதி ஓதினான் - பண்டையுள்ள தாவடத்தை மேவிடத்திக் கோவிடத்தி லோமிடத்தி நாவிடத்திப் பூண்டாடி னார் தன்னாலே முளைத்த சற்கணையின் றண்வாங்கிப் பின்னாலே யோர்கணைப் பீறி - பின்னாளே பீறுங் கணையதினால் பெரும்புவியெல் லாந்தோன்றிச் சீறுங் கலிவயதால் சென்றுதோ வானத்தளவில் வளர்ந்த கம்பத் தண்ணருளால் சேனைச் செகம்படைத்த செல்வமோ - மானத்த மாகலிய னேதுவினால் வாழ்விழந் திவ்வுகமும் போகத்தருணம் வந்து பூட்டினதிப் போது நல்லாறு சாஸ்திரமும் நாலுமறை வேதமதும் 560 பொல்லாக் கலியினால் பொய்ச்சூடி - பொல்லாப் பொடியக் கலியோடு பொன்றியடி வேரறவே இடியத்தான் வந்தொத்த தின்று பக்கம் பதினைந்தும் பார்மேடம் பன்னிரண்டும் வக்கணைக் கோளொன்பதுவு மங்கி - அக்கிகொண்(டு) அழிந்த கலியோ டலமாந் தழிந்திடவே சுழிந்தகன லாறுவந்து சுற்றிச்சோ மாந்திர தந்திரத்தை வைத்திய வாகடத்தைச் சூழ்ந்திருந்த அட்சரத்தைச் சோதித்து - ஏய்ந்திருந்த இழகு கலியோ டிம்முறையெல் லாமொடுக்கிக் களவறுக்கச் சோதியொன்று காணுதோ அய்யமிட் டுண்ணாத அரும்பாவி யாவரையும் பொய்யரையும் வெட்டிப் பெலியாக்கி - மெய்யிழந்து நையுங் கலியோடு அனலாவிக் கொண்டெரிக்க வெய்யவன்போல் சோதியொன்று மேவுதோ பத்திசோ தித்தே பலநாளுங் காத்திருந்த வித்தகனை வந்து வேண்டார்மேல் - வீடிழந்து செத்திறந்து தீநரகச் சீக்கூட்டி லேயடையக் கொத்தியருந் தப்புழுக்கள் கொஞ்சுதோ பாங்கலிய னேதுவினால் பண்டுண்டு செய்ததெல்லாம் 580 மூங்கிக் கலியதனுள் மூடி - மூச்சுவிட்டு ஓங்குவ தோங்கி உறங்குவது தானுறங்கி மூங்கிக் குளிப்பதுநாள் முற்றுதோ இலச்சைகெட்ட பாவி யென்றுவந்தா னன்றுமுதல் நற்சடலங்கள் நல்வகைகள் நாடிழந்து - நாணமுற்றுப் பட்சிமுதல் மாமிருகம் பால்நரிகள் கற்றாவும் அச்சமற்று வாழ்புவியொன் றாகுதோ பொல்லாத் துரங்கள்கொண்ட பேய்ச்செடிகள் தானொழிந்து கல்லாத புல்லர் கருவொழிந்து - எல்லாம் நல்லோராய்ச் சாகாமல்நாளும் நகரொன் றானதுக்குள் சொல்லொன்றாலாள சோதியொன்று தோணுதோ தாணுமால் வேதன் தற்பொருளாய் முப்பொருளும் ஆணுவமா யொன்றி லடங்குதோ - அஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும் ஆங்கார மூன்றெழுத்தும் ஓநமோ வென்றதுக்குள் ளொடுங்குதோ ஆகாத்த வஸ்துவெல்லாம் அழித்துநர கத்திலிட்டு வாகாய்க் குழிமூட வந்துதோ - சாகாத சனங்கள்பல வஸ்துவையும் தர்மபதி ராச்சியத்தில் இனங்களொன்றாயாள ராசாவொன் றாகுதோ பொன்னூற்றுத் தன்னூற்றுப் புரவுதன்னால் விளையூற்று 600 முன்னூற்று யோசனை யுலாவுசுழி - பன்னூற்றுப் பாலூற்று மேலூற்றுச் சேலூற்று வாலூற்று மாலூற்று மாபதியு மாகுதோ செப்பொத்த பொன்னும் சிவமேடைசிங் காசனமும் முப்பத்தி ரண்டறமு மோங்குதோ - ஒப்பற்ற ஊர்தெருவு மொன்றதுக்குள் ஓர்யோசனைத் தெருக்கள் சீர்பதினா யிரத்தெண் சேருதோ தெருக்கள்பதி னாயிரத்தெண் செந்திருமால் வாழ்பதிக்குக் குருக்களொன்று விஞ்சையொன்று கூறுதலோ - மருக்கள் மாறாமல் வாழ்பதிக்கு மணங்கொடுத்து நிற்பதல்லால் வேறார்க ளும்பறிக்க வேண்டுமோ பொற்மைப் பதியில் பொன்வாச லொன்றதிலே தர்மமணி யொன்று தாங்குதோ - தருமமனு மணியினது கூறறிய மணிகணீரென் றதல்லால் இனியிரு ளில்லா தேகுதோ அலைந்தலைந்த சூரியனும் அவனலையச் சாயாமல் நிலந்தெரிய எப்போதும் நேரே - குலைந்தலைந்த கார்மேகத் தட்டதெல்லாம் கூண்டுடைந்து வானமதில் ஊர்மேகமெல்லம் ஒருமேக மாகுதோ தோணிக்கச் சிந்தை துலங்கிவெளி காட்டுமல்லால் 620 காணிக்கை யென்றயிறை காணாதோ - மாணிக்கக் கல்லால் வளர்ந்தபதி காணுமொளி யல்லாது பொல்லாரெனப் பேச்சுப் போச்சுதோ ஈசர் நடன மிருபத்து ஒன்றதுக்குள் தேசமது தீதுநலஞ் செப்பினார் - வாசமுடன் வன்னி யமர்த்தி மாதுமையைத் தானோக்கி உன்னிச் சிவமுரைப் பார் ஈசர் மகிழ்ந்து ஏந்திழையைத் தானோக்கி வாச முடனீசர் வகுப்பா ரம்மாதோடு முன்னே மொழிந்த முற்றாண்ட வமதுக்குப் பொன்னே யிந்நேரம் புரிந்ததுநீ கண்டாயே அப்பொழுது ஈஸ்வரியும் அரனை மிகப்போற்றி இப்பொழுது என்னுடைய இராச மகாபரனே செப்போடு வொத்தச் சிவனே சிவபரனே ஆடினீரே தாண்டவந்தான் அநேக வளங்கள்சொல்லிப் பாடினீரே அய்யா பாட்டு வழுகாதே தாண்டவ மாடிப்புரிந்தால் சத்திசிவம் வரைக்கும் மாண்டாரைப் போற்கிடந்து மறுத்தெழும்ப வேணுமல்லோ அல்லாம லென்னுடைய அண்ணர் நினைப்பதிலே நல்லவரே கொஞ்சம் நானறிந்தது கேளும் 640 காரணமா யண்ணர் கலியுகத் தைமுடிக்க நாரணர்தான் பூமியிலே நடப்பது நிசமானால் நம்மையு மிங்கிருக்க ஓட்டார்காண் நாரணரும் எம்மழையி லானாலும் எவ்வெயிலி லானாலும் கொந்தலி லானாலும் கூர்பனியி லானாலும் கந்தத் துணிகள்தந்து கையில்திரு வோடுதந்து என்றனக்கு நல்ல இளங்குறத்தி வட்டிதந்து மைந்தன் சரவணற்கு மறிப்பு மிகக்கொடுத்துப் பிரமனுக்குக் கோலமிட்டுப் பிசாசுத னைவிரட்டி வரமுள்ள தேவதைக்கு மாற்றி யுருக்கொடுத்து லோகமதில் நம்மையும் உகக்கோலங் களிட்டி வேகத்துடனே மேதினியெல் லாந்திரிந்து கலிக ளகலக் காண்டங் கழிக்கவென்று பலிகாண வைப்பார் பரசோ தனைக்கனுப்பி இப்படியே தோணுதுகாண் என்னுடைய சிந்தையிலே எப்படியும் வந்து இதுசமையு மீசுரரே என்று உமையாள் ஈசர்தனை வணங்கி அன்று மொழிந்து அவள்நிற்கும் வேளையிலே நாரா யணரும் நல்ல சிவனிடத்தில் சீராக வந்து தெண்டனிட்டுத் தானிருந்தார் 660 இருந்து மாலோனும் இருதயத்தி னுள்மகிழ்ந்து பொருந்துவிழி தங்கையோடு புகலுவா ரம்மானை என்னுடைய தங்கையரே எனைமேனி யாக்குவளே உன்னுடைய தன்பொருட்டால் உலகளந்தோ னானாகி நாட்டி லென்பேரு நடத்திவைத்த நன்னுதலே கோட்டு வரையாளே கோவே யென்தங்கையரே நீயும் நம்மீசுரரும் நீணிலத்தில் போகவென்று நானும் நினைத்திருந்தேன் என்று நவின்றாயே ஈஸ்வரிக்கு மீசுரர்க்கும் இந்த நினைவானால் தேசமதில் போக வேண்டாமென்று சொல்வாரோ நானுங் களைவலிய நாட்டிற்போ மென்றிலனே தானுங்கள் தம்நினைவில் தரித்ததுபோ லேபோவும் நீங்கள் நடப்பதென்றால் எனக்குவெகு சந்தோசம் தாங்கள் மனதிரங்கி சாற்றிமிகப் போவுமென்றார் அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தானோக்கி மைப்போடுங் கண்ணினிய மைத்துனரே யென்றாவி சொல்லுச் சொல்லாதபடி சொல்லுதற்கு உம்மையல்லால் அல்லும் பகலும் அலைந்தாலுங் கிட்டாது போங்களென்று சொல்லாமல் புத்திசொன்னாப் போலேநீர் தாங்கி யுரைத்தீரோ சத்தியுள்ள மைத்துனரே 680 புத்தியிது நன்று புண்ணியநா ராயணரே தத்தியுட னடக்க தருணமெப்போ தென்றுரைத்தார் நடக்கக் கருமமிது நல்லதுதா னென்றுசொல்லி அடக்க முடனே அய்யாநா ராயணரும் ஒத்திருந்து தங்கள் உற்பனமா யாராய்ந்து புத்திபோல் வாசகங்கள் பூத்தான மாயெழுதி நாட்டு நருளறிய நடைசீவ செந்தறிய காட்டு மரமறிய கல்லப்பு தானறிய புற்பூ டறிய பூமிதெய் வாரறிய நற்பறிந்து பேய்கள் நடுங்கி மிகஅறிய சேட னறிய சிறுவாய்வு தானறிய மேக மறிய மேலோர்கள் தாமறிய பூக மறிய பொழுதுசந் திரனறிய நட்சேத் திரமறிய நமனறிய கொளறிய பொய்ச்சரியை கிரியை பேர்நா லுந்தானறிய வேத மறிய விளங்கு மறையறிய வாதை யறிய மன்றுபதி னாலறிய சங்கறிய முத்தறிய சகலமச்ச முமறிய அங்கறிய நாம்படைத்த எல்லோருந் தானறிய எழுதி விடுவோங்காண் ஏற்றரிய புத்திவைத்து 700 பழுதுவைத்தா ரென்று பார்பலதுஞ் சொல்லாமல் நம்பேரில் குற்றம் நகத்தளவு மில்லாமல் பம்முதலாய் நாமும் பரிந்தெழுதி தான்விடுவோம் என்று திருமாலும் இறவாத ஈசுரரும் மன்று படைத்த மறையோனும் பார்வதியும் சரசு பதியும் சத்தியுள்ள லட்சுமியும் விரசு முனிமாரும் வேத மறையோரும் சாஸ்திரரும் கின்னரரும் சங்கத் துறைவோரும் பார்த்திவனுந் தெய்வ பாவாணர் தாமுதலாய் வானவருந் தேவர்களும் மற்றுஞ்சித் தாதிகளும் தானவரும் வேதத் தம்புருக் காரர்களும் சங்கம் வரையும் தாண்டவர்கள் தாமுதலாய் எங்கெங்கு முள்ள இருஷிமுதல் தான்வருத்தி எல்லோருங் கயிலை இடம்விட் டெழுந்தருளி வல்லோர்கள் வாழும் வைகுண்ட மீதில்வந்து கங்கைநதி கண்டு கறைக்கண்டர் தேவர்வரை கங்கை தீர்த்தமாடி கிருஷ்ணர் பதிபுகுந்து மேடை விதானமிட்டு மிகுமேடை பொன்னழுத்தி வாடை கமழவிட்டு வானவர்கள் பாடவிட்டு எக்காள டம்மானம் எங்கு முழங்கவிட்டு 720 மிக்க புராணக்கலை மிகுமறையோர் போற்றவிட்டு ஆகமங்கள் போற்றவிட்டு அரம்பையர்கை காட்டவிட்டுப் போகமுனி சித்தரெல்லாம் புராணகவி யோசையிட்டு மும்முதற்குத் தேவரெல்லாம் முறையிட்டு வாழ்த்தவிட்டுச் சங்குத் தொனிகளிட்டு சகலோரும் போற்றவிட்டு இத்தனை நற்சிறப்பும் இதமா யலங்கரித்து வித்தையருள் தண்டரள விழியாளைத் தான்வருத்தி அப்போ சரசுபதி ஆனந்த மேபெருகி இப்போ எழுந்தருளி இன்பமுடன் போகவென்று கங்கை நதிமூழ்கி கிரணப்பச்சை யாடைபெய்து சங்கையுட னாபரணம் சரசு பதியணிந்து குழல்முடித்து குழையில் குவிந்ததங்கத் தோடணிந்து வளையல் முறுக்குமிட்டு மாதுசந் தோசமுடன் பச்சைநிறக் காப்பணிந்து பவளமணித் தண்டையிட்டு மச்சமதில் மையெழுதி மகிழ்ந்து மூக்குத்தியிட்டுக் கொண்டைதனில் தேமலரைக் குவிய மிகச்சூடி பொற்சரிகைச் சேலை பெரியயேத் தாப்புமிட்டு அச்சரக்கைத் தோழி அரம்பையர்முன் னாடிவர அன்ன நடைநடந்து அனல்கொழுந் திட்டாப்போல் வன்ன அழகுடனே வந்தாள்திரு முன்பதிலே 740 மாது வரவே மறையோனும் மாயோனும் ஏதுகோ லமெனவே எண்ணமதி லுன்னினராம் உன்னித் திடமாய் உளமகிழ்ந்து மாயவனும் கன்னி தனைப்பார்த்துக் கறைக்கண்டர் தானுரைப்பார் வன்னத் திருவடிவே மறையோனி னோவியமே அன்ன மடமாதே அரசுக் குகந்தவளே கருத்துடைய சோதி கவியுடையீ ருந்தனையும் வருத்தின காரியந்தான் வகுக்கக்கே ளொண்ணுதலே நாட்டிலொரு நீசன் நன்றியறியாப் பிறந்து மேட்டிமையாய் லோகமெல்லாம் மெய்யழித்தான் கண்டாயே கோட்டிப் பவம்பிறந்து குருநீதி யைக்கெடுத்தான் கேட்டிருக்கக் கூடாது கெடுநீசன் பொல்லாங்கு நம்மை நினையாததுதான் நமக்குசற் றெண்ணமில்லை செம்மையுள்ள சான்றோரைச் செய்தபங்க மேற்கலையே தெய்வப் பிறவியல்லொ திசைவென்ற சான்றோர்கள் மெய்வரம்பை யெல்லாம் மிகக்கெடுத்தான்மாபாவி கற்பகலாப் பெண்களுட கற்புக்கிரங் காதிருந்தால் உற்பனமோ நாமள் உடையபர னென்றாமோ எளியவனை வம்பால் இடுக்கஞ்செய் தேயடித்தால் விளியிட் டழுதாலும் மேதினியிற் கேட்பதில்லை 760 கேளாத காரணத்தால் கீர்த்திகொண்ட பேரெளியோர் நாளான நாள்வழியாய் நம்பிநம்பேரில் வைத்தார் அல்லாமல் நம்முடைய அரிதன்மகா நாமமதை இல்லாம லேமறைத்தான் இயல்புகெட்ட மாநீசன் ஆனாலும் பாரமில்லை அன்னீதம் பொறுக்கரிது மானாபர ஞாயமதை வரம்பழித்தான் மாநீசன் ஆகமத்தைக் கூறழித்தான் அன்னீத மாபாவி தாக மடைந்தார்கள் தவசுமுனி மார்களெல்லாம் நீசப் பாசாசு நீணிலத்தைக் கொள்ளைகொண்டு தோசப் பயலோடு துணையாய் மிகக்கூடிக் கெடுக்குதுகாண் பசாசு கேட்பார்க ளில்லாமல் கொடுக்கவொன் றில்லா நருட்பார்த்துக் கொல்லுதுகாண் அதுவே யொருகொடுமை அநேகம் பொறுக்கரிது எதுவும் வரம்புதம்பி இருக்குதுகாண் வையகத்தில் ஆனதால் நாங்கள் அவனிதனிற் போயிருந்து மானமுறை சோதித்து மனுவிடுக்கந் தான்தீர்த்து நாட்டிலுள்ள குற்றம் நாங்கள்பார்த் துத்தீர்த்து ஓட்டுவதை யோட்டி உறைப்பதை யுறைப்பித்து நாடையொரு சொல்லதுக்குள் நலமாக வாழ்விக்கவே பேடையன்ன மாமயிலே பெண்ணரசே இப்போது 780 நாங்கள் நடப்பதற்கு நாளான நாளிதுவே ஆனதால் பாவி அவனிழுக்குச் சொல்லாமல் மானமுள்ள புத்தியைப்போல் வாசகமொன் றேயெழுதி வருவோமென அயச்சால் மாபாவி தானறிந்து கருவி குழறி கற்பினைக்குள் ளாகுவதும் என்னவோ வென்று இடும்புசெய்வ துமறிய அவனறிய விட்டதுபோல் அவனிபதி னாலறிய எவரும்புற் பூண்டுவரை எவ்வகையுந் தானறிய எழுதியொரு வாசகந்தான் இப்போவிட வேணுமென்று முழுது முன்னிங்கே ஓடிவா வென்றதுதான் அப்போ சரசுபதி ஆனஅயன் மாமயிலும் இப்போ திவ்வகைக்கு யானென்ன செய்கருமம் எல்லாங் கிருபை எம்பரனே யுன்செயலு அல்லாம லென்றனக்கு ஆகுமோ ஏதாலும் ஆட்டுவதும் நீயல்லவோ ஆடுவானும் நீயல்லவோ ஓட்டுவதும் நீயல்லவோ ஓடுவானும் நீயல்லவோ சொல்லுவதும் நீயல்லவோ சொல்லவைப்பானும் நீயல்லவோ அல்லும்பகல் நீயல்லவோ அழியாத வனும்நீயல்லவோ எல்லா முமது கிருபை யெனக்கல்லாது சொல்லீது வந்ததென்ன சுவாமியெனப் பணிந்தான் 800 மாது திருமால் மலர்ப்பாதம் போற்றிடவே ஆதித் திருமால் அவரேது சொல்லலுற்றார் நீயுரைக்க நானெழுதி நீணிலத்தில் விட்டதுண்டால் வாயுரைக்கக் கூடாது மற்றோர்க ளாராலும் வம்புரைக்கக் கூடாது வம்புரைத்தால் வன்னரகம் உம்பதுவே யல்லால் உறுகெதிகள் காணார்கள் ஆனதா லுன்வாக்கும் அரியச்சரமுங் காண்பித்தால் மானமென்ன வாகுமென்று வகுத்துரைத்துப் பார்ப்போம்நாம் அப்போ சரசுபதி அன்போ டுளமகிழ்ந்து செப்புகிறாள் நல்ல திருவாசகந்தா னம்மானை கலையொடு கலையைத் தாக்கிக் கண்ணின்மேல் கருணை நாட்டி மலையொடு மலையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு சிலையொடு சிலையி னாளும் சிவபரா கிருபை யென்றே அலைதலை முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள் கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண மீறிய மொழிகள் சொல்லி விளம்புவர் நாச மாகும் தேறிய பூதத் தோடு தேர்ந்துணர்ந் தவரே வாழ்வார் கூறிய வாசகத்தை யுள்ளங் கொண்டவர் குருவைக் காண்பார் ஒருதிரு விபூதி யுண்டை ஒருயிரு மிச்ச மாகும் ஓருதிடத் தேங்காய்ப் போலும் ஒருமனத் திரணை போட்டுக் 820 கருதிட வெற்றிலை பாக்கும் கனிந்திடு வோர்க்கு மூவர் வருகிட ஞாய மெய்யின் வழியிது வாகுந் தானே மனுமொழி யிதுவா மென்று மதத்துடன் பேசு வோர்க்கு இனிதல்ல வீண்தா னென்று இயம்பிய பகைஞர் தம்மை குனிதவள் துர்க்கை சென்று கொன்றவள் நரகம் பூத்தி கனிதுடன் துர்க்கை வாரி கடல் தீர்த்த மாடுவாளே வேறு எறும்புகடை யானைமுதல் எண்பத்துநான் குயிர்கள் எழுகடல் பதினாலு புவிகளும் இரதிமதி சூரியர்கள் பருதி பாலாழியும் இயல்வானம் வாயு முதலாய் தெறும்பு மாமலை மாமரச் சோலையும் சேடனுந் தலைமோடனு மறியவே தென்கீழத் தேவரு மிங்குள்ள மூவரும் தேசதெய் வேந்திர னறியவே வாச முனிவோர்களும் வேதசன் னாசியும் மறையாறு சாஸ்திர மறியவே மண்டல மளந்தகை கொண்டெழுதும் வாசகம் மண்டலர்க ளெவரு மறியவே வறும்பகல் தொளாயிரத்து தொண்ணூற் றெட்டாண்டினில் வளர்ஸ்ரீ சாம்பசிவ மூர்த்தியும் பராபர ஸ்ரீராமரும் பதியேறும் மூர்த்தியும் பார்த்திந் தக்கலி யுகத்தில் படூரநீ சக்கலியால் வரும்வாறு வண்மையாய்ப் பகர்ந்து திருவாசக மெழுதிப் பலநூ லறிந்தவ ரெவர்க ளாயினும் பக்தியுட னெக் காலமும் பணிந்துதிரு வாசகத்தை முத்தியணைந் தோர்க்கு மிகுபல னுண்டாம் பகரக்கேளு நத்தியுடன் பூலோகக் கலியுகா தேசத்தில் நடக்கு முறைதானுங் கேளீர் திருவாசம் - 1 நல்ல வீரபுரந்தரத் தர்மராசா வங்கிசத்திலே நாடும் ஒரு மதலை பிறந்து வந்தவுடன் நல்ல அருணாசலத்திலே வாலிபப் பிள்ளையாயிருக்கிறார். அந்தப் பூலோகக் கலியுகத்திலே ஆசாரமாயிருக்கிற பேர்களும் அழுக்கான புத்திமதியா யிருக்கிற பேர்களும் அவரவர் ஆங்காரமாகியே அழிந்து போவார்கள். அதின்மேல் பதினெட்டுத் துர்க்கையம்மாள் பிறந்து அந்தக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே வருகிறார்கள். வந்தவுடனே மூன்றுநாள் இருள்மூடி ஆனைத் துதிக்கைபோல் மழைபெய்யும். அதிலே சில துர்ச்சனர்களெல்லாம் மாண்டு போவார்கள். அதின்மேல் பக்தியாயிருக்கிற பேர்களுக்கும் பிள்ளை யில்லாமலிருக்கிற பேர்களுக்கும் கண்ணில்லாமலிருக்கிற பேர்களுக்கும் தனமில்லாமலிருக்கிற பேர்களுக்கும் பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும் ஸ்ரீராமச்சேயரும் தீட்சையாகித் திருமனதிரங்கிப் பக்திகாரணங்களைச் சோதித்துப் பகிர்ந்து அவரவர் கேட்ட வரங்களைக் கொடுப்பார்கள். இன்னுஞ்சிறிது நாளையிலே சிலபேர்கள் தெய்வீகமாய்ப் போவார்கள். முன்னுக்கு மழைதட்டும் உலகிற்பல பல வஸ்துவும் பலிக்குமென வகுத்தார். சிலநீசர் மிகக் கறுப்பை நினைவில்லாத்தொட்டு மிகப் பாசமடைந்து அலைந்து அழிந்து போவார்கள். வாலி சுக்ரீபனும் பண்டாரமாகிப் போவார்கள். வாச்சி கொழு கலப்பையெல்லாம் நாசமாகிப் போய்விடும். முன்னாலே துலுக்கர் தம்மை நாசம் பண்ணுகிறதற்காகவே துர்க்கையம்மாளைப் பிறவி செய்தனுப்புகிறோம். பிராமணர் நன்றாய் சுகத்துடன் வாழ்வார்கள். புவியில் முகத்துலிங்க மில்லாத பேர்க்குப் பிரமதேவரை யனுப்புகிறோம். பிரமதேவர் புவிமீதில் வந்து பக்தி காரணங்களைச் சோதித்துப் பொல்லாத பேரைத் தெரிந்து பிடித்துப் புதுக்கிராம தேசத்தில் வாழுந் தேவதைக்குப் பூசைப்பண்ணிப் போடுவாரெனப் புகட்டினார். காவேரியாற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கிலியம் கவிழ்ந்து அடையவேணுமென்றும் காசினியில் ஒரு ஏழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை அடர்ந்து பிடிப்பார் களென்றும், அறுத்த மங்கிலியத்தை மிகுத்துக் கட்டுவார்களென்றும், இன்னுஞ்சிறிது நாளையிலே கேள்விகேளாமலிருக்கிற பேர்களும் துர்ச்சனராயிருக் கிறபேர்களும் வர்த்தகனாயிருக்கிற பேர்களும் தம்மில் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு மாண்டுபோவார்கள், போனபேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷரைத் தெரிசனம் பண்ணிக் கொண்டு சர்வபாக்கியத்திலே யடைவார்கள். மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி யுண்டாக்கி நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம். அதினால் மானிடரெல்லாம் உறழ்ந்து உட்கொள்ளைப் பிறக்கொள்ளை யடிப்பார்களென்று நமக்கு நன்றாய்த் தெரியும். நாமதற்குமேல் பூலோகக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே பண்டார வேசமாய் வருகிறோம். நாம் வருகிறபோது மண்ணெல்லாம் கிடுகிடென்றாடும், மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும், அப்போது அதிலே அநேக துர்ச்சனர்களெல்லாம் மாண்டு போவார்கள். போனபேர்கள் போக இருக்கிறபேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். மந்திர தந்திர வைத்தியங்களெல்லாம் மறைந்து போய்விடும். வாதை பேய்களெல்லாம் வட கயிலாசத்திலே போய்ச் சட்டுத்தீர்ந்து போவார்கள். ஏழு சமுத்திரத்திலே மூன்று சமுத்திரம் நீருள்வாங்கிப் போய்விடும். ஒரு சேர்வை விபூதி ஆறு சக்கரத்திற்கு விற்கவும், ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும், ஒரு கழஞ்சிச் சலமெடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு ஒரு தர்மசாலை மடமும் நன்றாய் முடியும். தர்மங்கொடுக்கிற பேர்களுண்டு வாங்கிறபேர்களில்லை யென்று சொல்லுகிற வெயிலாள் மடக்கொடியாள் வயிற்றிலே நாடுமொரு மதலை பிறந்து பத்து வருசமாச்சுது. நாங்களும் மகா அருணா சலத்திலே வாலிபப் பிள்ளையா யிருக்கிறோம். அந்த வாலிபப் பிள்ளை என்ன சொல்கிறா ரென்றால் வீர புரந்தர தர்மராசா வழியிலே விகிநாராயணர் இங்கே வந்து மூன்று மாதத்துக்குத் தவசுபண்ணி இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார். வந்தவுடனே அந்நியோன் னியக் கலகமாகும். அந்தக் கலகத்திலே ஒருவருக்கொருவர் சத்தியமாய்ப் போவார்கள். போன பேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பாக்கியத்தைக் கொடுப்போம். பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார் 840 தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும் துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர் ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர் கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும் தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார் திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல் ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில் வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக் கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோ ரவர்க்கே தக்கும் உருத்தில்லாக் கேட்போ ரெல்லாம் ஓருரை வெளியே காணார் சிரித்துரைக் கேட்போ ரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார் உலகில் மனுக்கள் தமிழாலே உவமை யுரைத்து விட்டாப்போல் கலக முடனே யென்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை 860 அலகைத் துளைத்து நரகதிலே ஆணி யறைந்து அவனிதனில் குலையக் குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே எந்தன் மொழியு மென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில் சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத் திறமா யெழுதி வைத்தேன் எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும் சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரண மில்லாமல் காண்பா ரென்றுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராய்க் கவ்வையற்றுக் காண்பா ரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பா டதுகேளு கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி எந்த இடமும் அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரி லுண்மை யதாய் எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன் ஒப்பா ரொருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே அப்பா நாத னெழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே என்றே யிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது கன்றே மேய்த்தோ னெழுதிமிகக் கலியுக மதிலே விட்டிடவே நன்றோர் மறையோ னிடமேகி நாட்டி லறியச் செய்யெனவே அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே 882 |
அகிலத்திரட்டு அம்மானை
|
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)