வெள்ளி, 15 மே, 2015

அய்யா வழி இயக்கம்

வைகுண்டசுவாமியின் காலத்தில் திருவிதாங்கூர் ( கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தென் கேரளத்தின் பெரும்பகுதி) மன்னராட்சியில் தாழ்த்தப்பட்ட சாதயினருக்கு ஒரு நீதியும், உயர்த்தப்பட்ட சாதயினருக்கு ஒரு நீதியும் வழக்கில் இருந்தன. தீண்டாமையின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் உற்ற துயரினைப் போக்க,
     “தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்ற கொள்கையுடை  வைகுண்டசுவாமிகள் தனது “அய்யா வழி இயக்கத்தின் மூலம்,
v  சாதி சமயம் பொய்யானது.
v   உயிர்க் கொலை கூடாது.
v  கள் உண்ணலாகாது.
v  ஓரிறைக் கொள்கை உயர்வானது.
v  சிறு தெய்வ வழிபாடு தேவையற்றது.
v  அன்பு நெறியே உயர்வானது.
v  பெண்ணுரிமை.
v  அனைவருக்கும் கல்வி
போன்ற கொள்கைகளைப் பரப்பும் முகமாக ஊர்கள் தோறும் பதிகளையும், நிழல்தாங்கல்களையும் நிறுவி அவற்றை,
v  ஒளி வழிபாட்டுத் தலம்.
v  கல்விக் கூடங்கள்.
v  அறம் கூறும் அவையம்.
v  பசிப்பிணி அகற்றும் இடம்.
v  உடல் பிணி தீர்க்கும் இடம்.
v  சம  பந்தி போசனம் நடைபெறும் இடம்
என்று சமத்துவ சமுதாயத்தை மலரச் செய்ய அயராது உழைத்தார். இதன் காரணமாகப் பல எதிர்ப்புகளையம், அவமானங்களையும் எதிர்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தார். இதனால் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள்,
v  பெண்கள் தோள் சீலை அணிதல், பொன் நகைகள் அணிதல், இடுப்பில் குடங்களில் தண்ணீர் எடுத்தல்.
v  சமய நல்லிணக்கம் மேற்கொள்ளல்.
v   அனைவரும் கல்வி உரிமையைப் பெறல்.
v  அரசின் அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெறல்
என உயர் சாதியனருக்கு நிகராக அனைத்து உரிமைகளையும் பெற்றுச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக