வெள்ளி, 15 மே, 2015

கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக நாராயணன் தெச்சணத்தில் வந்திருந்து பிச்சைகொடுத்த பக்தன் சித்தூவர் குடும்பத்தை வைத்தரசாளுவது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா.

நம்முடைய உயிருக்கு அடிப்படையானது மூச்சு ஆகும் இதை பிராணன் என்றும் சொல்வார்கள்.நம்முடைய மூச்சானது உடலெங்கும் 72000 நாடிகள் வழியாக பரவுகிறது.அவை மூலத்திலிருந்து மூன்று பிரிவாக மற்ற நாடிகளுக்கு செல்கிறது. சாதாரணமாக நாம் மூச்சு விடும்போது இடது அல்லது வலது நாசித்துவாரம் வழியாக காற்று செல்லும்.இரண்டு நாசிகள் வழியாக ஒன்று சேர்ந்து காற்று செல்வதை கழுமுனை என்கிறோம்.இடகலை, வலகலை வழியாக காற்று செல்லும் போது மூல ஆற்றல் கிடைக்கிறது. சுழு முனை வழியாக காற்றுச் செல்லும்போது நாளமில்லா சுரப்பிகள் செயல்பட்டு உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைகிறது.
இடகலை (சந்திரகலை), பிங்கலை (சூரியகலை), சுழுமுனை (சுக நாடி)
அதாவது..,
  1. இடகலை(சந்திரகலை):மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும். இடகலை சுவாசம் திங்கள்,புதன்,மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும். இதற்கு பதிலாக பிங்கலை சுவாசம் ஓடினால் ஜலதோசம்,தலைவலி,கண், காது நோய்கள் உண்டாகுமாம்.
  2. வலகலை (சூரியகலை):மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும். பிங்கலை சுவாசம் ஞாயிறு,செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும்
  3. சுழுமுனை:இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.வளர் பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இடகலையும்,தேய் பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் வலகலை சுவாசமும் நடைபெறும். நம்முள் உள்ள இடகலை, வலகலை ஆகிய இரண்டும் பின்னிய கொத்தாகிய சுழிமுனையில் பிரகாசமாக நிற்பவரும், பூரகம் (மூச்சை உள்ளிழுத்தல்), கும்பகம் (காற்றை கணக்குப்படி உடலினுள் நிறுத்துவது) , தேசகம் (மூச்சை வெளியிடுதல்) ஆகியவற்றில் முறையாக பயிற்சி அளிக்கும் நாராயணரும், தெச்சணா பூமியில் வந்திருந்து நமது பக்தர்களுக்குச் சகசுராரத்திலிருந்து (மூளைப் பகுதி) கொண்டை அமுதைக் கொடுத்தவரும், திருமாலின் பக்தரும் ஆனவர் வைகுண்டர் ஆவார். இவ்வாறு அமுதை அருந்த சகசுராரம் (மூளைப் பகுதி ) ஆகிய சித்தூரை அடைந்த குடும்பத்தை தமக்குக் கீழ் வைத்து அரசாண்டு வருவதும் எங்கள் அய்யாவே. பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, சிவனே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும், பிறவிகளையும், அழித்துவிட்டு, எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி, முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக