வெள்ளி, 15 மே, 2015

மலைக் கன்னிமார் தாங்காமல் பெற்ற நம்முடைய. மக்கள் வலியசீமை கட்டி அரசாள வாழ.

திருமாலின் விளையாடலுக்கு ஆட்ப்பட்ட கன்னிமார் கானகத்தில் பெற்றெடுத்த நம்முடைய
சான்றோர் மக்களின் குலம் வலிமை பொருந்திய பெரிய இந்நாட்டை பாதுகாத்து அரசாண்டு வாழ்ந்து வர வேண்டும்

பார்த்துவ்விட்டேன் இரண்டு கண்ணும் கொண்டு நம்முடைய பத்தினி மக்கள் நன்றாய்த் தழைத்து வாழ.

“சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ வேண்டும்” என்று எனது இரண்டு அருள் வீசும் கண்ணிணால் பார்த்து “நயன தீட்சை ” கொடுத்துவிட்டேன் .அதன் மூலம் சான்றோர்களது
குண்டலினி சக்தி வீரிட்டு எழுந்து அவர்கள் நன்றாய்த் தழைத்து வாழ வேண்டும்.

வில்லுக் கொண்டே எய்து விட்டேன் நம்முடைய விசயன் சான்றோர் நன்றாய்த் தழைத்து வாழ

நமது சான்றோர் இனத்திலுள்ள வில்லிரான் விசயன் வழியில் வந்த சான்றோர்கள் நல்ல முறையில்
தழைத்து வாழ வைகுண்டர் என்றும் வில்லின் மூலம் உபதேசம் “வாசக தீட்சை ” என்னும் அம்பு
எய்துள்ளேன். அதன் மூலம் அச் சான்றோர்கள் ஆன்மீக எழுச்சியுற்ற கொண்டையமுது உண்டு
நன்றாய்த் தழைத்து வாழ வேண்டும்.

கடலதிலே தவசிருந்தேன் நம்முடைய. கண்ணு சான்றோர் நன்றாய் தழைத்து வாழ

கண்ணைப் போல நமது சான்றோர்கள் தழைத்து வாழ வேண்டி திருச்செந்தூர் கடலினுள் மூன்று
நாள்கள் கடுந்தவம் புரிந்து விஞ்சைப் பெற்று வந்தேன். அவர்கள் நன்றாய் செழித்து வாழ வேண்டும்.
(மானச தீட்சை)

விழிமடவார் படைத்தலைவர் நம்முடைய. வெற்றிச் சான்றோர் நன்றாய் தழைத்து வாழ.

வெற்றியுடைய சான்றோர்கள் அழகு பொருந்திய விழிகளான சிறந்த பத்தினியை மனைவியாக
பெற்ற படைத்தலைவர் ஆவர். அவர்களது வாரிசான நம் இசை சான்றோர்கள் நன்றாய் செழித்து
வாழ வேண்டும்.

பத்திரத்தாள் பெற்ற மக்கள் நம்முடைய. பைந்தொடிமார் கன்னிமக்கள் கோத்திரத்தோடே நன்றாய்தழைத்து வாழ.

ஏழுக்கன்னியரும் ஈன்றெடுத்து காளியினால் வளர்க்கப்பட்டவர்கள் சான்றோர்கள் ,அவர்களுடைய
சந்ததியார் ஆகிய.நம் இசை சான்றோர்கள் தங்கள் அழகு பொருந்திய வளையல்க்களை அணிந்த
மனைவியோடும் சுற்றத்தோடும் நன்றாய் தழைத்து வாழ வேண்டும்.

சாஸ்திரததிலுள்ள கன்னிமக்கள் நம்முடைய சான்றோர்கள் நன்றாய் தழைத்து வாழ.

ஆறு சாஸ்திரத்திலும் கூறப்பட்டு வந்துள்ள ஏழுக்கன்னியரும் திருமாலின் மூலம் ஏழு மக்களைப்
பெற்றெடுத்தனர். அவர்களின் சந்ததியார் ஆகிய நம் இசை சான்றோர்கள் நன்றாய் செழித்து வாழ
வேண்டும்.