புதன், 24 செப்டம்பர், 2014

அய்ய வைகுன்டர்தண்டனையை நிறைவேற்றுவதற்காக இழுத்து வரப்பட்ட மகானை, புலியின் கூண்டுக்குள் தள்ளிவிட்டார்கள். அது, அவரை அடித்துக் கொன்று தனது உணவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்கள் அந்த மகானுக்கு விதித்திருந்த கொடூர தண்டனை. ஆனால், அந்த மகான் கலியை அழிக்க வந்தவர் ஆயிற்றே! அவரை நெருங்கியதும், பாய வேண்டிய புலி, பூனைக்குட்டி போன்று அவருக்கு அருகில் வந்து சாதுவாகப் படுத்துக்கொண்டது. அதற்குத் தடவிக்கொடுத்துவிட்டு, புலிக்கூண்டில் இருந்து வெளியே வந்தார் மகான். அவரை எதிரியாக நினைத்தவர்கள்கூடத் தங்களை அறியாமல் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

தண்டனையை நிறைவேற்றுவதற்காக இழுத்து வரப்பட்ட மகானை, புலியின் கூண்டுக்குள் தள்ளிவிட்டார்கள். அது, அவரை அடித்துக் கொன்று தனது உணவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்கள் அந்த மகானுக்கு விதித்திருந்த கொடூர தண்டனை. ஆனால், அந்த மகான் கலியை அழிக்க வந்தவர் ஆயிற்றே! அவரை நெருங்கியதும், பாய வேண்டிய புலி, பூனைக்குட்டி போன்று அவருக்கு அருகில் வந்து சாதுவாகப் படுத்துக்கொண்டது. அதற்குத் தடவிக்கொடுத்துவிட்டு, புலிக்கூண்டில் இருந்து வெளியே வந்தார் மகான். அவரை எதிரியாக நினைத்தவர்கள்கூடத் தங்களை அறியாமல் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

முக்காலம் சொன்ன அய்யா வைகுண்டர்!

ல நாள் பட்டினி போடப்பட்ட புலி, கூண்டுக்குள் பலமாக உறுமிக்கொண்டி ருந்தது. நடக்கப்போகும் விபரீதத்தைக் காண வழக்கம்போல் திரண்டிருந் தனர் பொதுமக்கள். சிறிது நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப் பட்டது.
குற்றவாளி என்று பொய்யாகக் குற்றம்சாட்டி இழுத்துவரப்பட்டார் அந்த மகான். கருணை வழியும் அவரது முகத்தில் துளியும் பயமில்லை. தெய்வீகப் பேரொளி அவரது முகத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. புன்னகை சிந்தியபடியே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்கத் தயாராக வந்தார்.
கூடியிருந்த மக்களில், அந்த மகானுக்கு ஆதரவானவர்கள் பலர் இருந்தார்கள். ‘கலியை அழிக்க அவதாரம் எடுத்த இறைவனையே இந்தக் கலிநீசன்கள் தீண்டப் பார்க்கிறார்களே…’ என்று அவர்கள் கலங்கினாலும், அந்த மகானுக்கு எதுவும் நேராது என்கிற நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது.

அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள்

  • பூசை செய்யக்கூடாது.

  • பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது

  • யாகம், ஹோமம் கூடாது

  • மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.

  • எந்த வழிபாடும் கூடாது

  • ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது

  • காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது

  • மாலையிடுதல் கூடாது

  • யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்

  • லஞ்சத்தை ஏற்காதீர்கள்

  • ஆசைகளை துறந்துவிடுங்கள்.

  • உண்மையாக இருங்கள்
இவை அனைத்தும் அய்யா தனது வழியை பின்பற்றும் மக்களுக்கு கொடுத்த ஒழுங்குமுறைகள். இதன் வழி அய்யாவழி தனியொரு மதமாகவே இருப்பதை காணலாம்.

திருமணம்:

அன்புக்கொடி மக்கள் திருமணப் பொருத்தம் அறிய பதியில் ஏட்டில் நூல்வைத்துப் பார்த்தல், திருஉளச்சீட்டு எழுதி வைத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றுகின்றனர். திருமணத்தின்போது அய்யா வைகுண்டருக்குப் பணிவிடை வைக்கின்றனர். மவுனிக்கலியாண என்று தொடங்கும் திருமண வாழ்த்துப் பாடல் படிக்கின்றனர். மணமக்கள் மணமேடையில் தெற்குத்திசை நோக்கி அமர்கின்றனர்.
 
மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதை திருச்சரடு சேர்த்தல் என்று சொல்கின்றனர். தாலியில் உள்ள சுட்டியில் (லாக்கட்) தாமரை நாமம் பொறிக்கப்பட்டிருக்கும். மணமக்கள் மணமேடையை ஐந்துமுறை வலம் வருகின்றனர். அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற நிகழ்வுகள் கிடையாது.

பூப்புனித நீராட்டு:

குமரிமாவட்ட மக்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு பூப்புனித நீராட்டு விழா எடுப்பதைச் சடங்கு என்று கூறுவர். அய்யாவழி மரபில் அவரின் 5 சீடர்களின் வாரிசுதாரர்கள் அல்லது பதி பணிவிடைக்காரர்களில் ஒருவர் அய்யா வைகுண்டருக்கு பணிவிடை வைத்து உகப்பாட்டு படித்து ஆதியாம் வைந்தராசர் எனத்தொடங்கும் விருத்தப்பாக்களை பாடி அன்புக்கொடி மக்களின் பெண்குழந்தைகளுக்கு பூப்புனித நீராட்டுவிழா வைபவத்தை நடத்தி வைப்பது வழக்கம்.
 

குழந்தைவளர்ப்பு:

அன்புக்கொடி மக்கள் பதியில் கிடைத்த உண்பானையே குழந்தைக்கு முதலில் ஊட்டுகின்றனர். சிலர் குழந்தைக்கு முதலில் அன்னம் ஊட்டுவதை பணிவிடைக்காரர் மூலம் செய்வர். குழந்தைகளுக்கு பிறந்தமுடி எடுக்கும் வைபவத்தையும் பதியில் வைத்தே நடத்தி தருமம் செய்கின்றனர். பெண்குழந்தைகளுக்கு பதியில் வைத்து காது குத்தி கம்மல் போடுகின்றனர்.
 

குழந்தைவளர்ப்பு:

அன்புக்கொடி மக்கள் தலைமைப்பதி பள்ளியறை முன்னிலையில் தாங்கள் பெற்ற குழந்தையைக் கிடத்தி (ஆண்டவன் பாதத்தில் கிடத்துவதாகக் கருதி) கணவனும் மனைவியுமாக விரும்பிய பெயரை 5 முறை கூப்பிட்டு குழந்தைக்குப் பெயரிடும் வழக்கமும் அன்புக்கொடி மக்களிடையே உள்ளது.