அடுத்த யுகமாகிய கிரேதாயுகத்தில் சூரபத்மன், சிங்காமுகாசுரன்
என்ற அசுரர்களை சகோதரர்களாக பிறவி செய்தார்கள். இந்த அசுரர்களும்
சிவப்பெருமானிடம் பல வரங்களை பெற்று இந்த உலகம் முழுவதையும் அடக்கி ஆட்சி
செய்தனர். வானுலக தேவர்களையும், தேவேந்திரனையும் அடிமையாக்கி
சிறைப்படுத்தினார்கள். இந்த அசுரர்களுக்கு வீரபாகு தேவர் மூலம் புத்தி
கூறப்பட்டது. அதையும் கேட்காத காரணத்தால், திருமால் ஆறுமுக கடவுளாக தோன்றி
சக்தி என்ற வேலாயுதத்தால் அசுரர்களை சாய்த்தார். அசுரர்கள் உயிர்விடும்
வேளையில், உனக்கு உரைத்த நல்மொழிகளை கேட்டு அதன்படி நடந்து இருந்தால்
இப்போது நான் உன்னை கொன்று இருக்கமாட்டேன் என்று திருமால் சொன்னார்.
அப்போது அந்த அசுரர்கள் ‘நீயா என்னை வீழ்த்தினாய்?, இல்லை சக்தி என்ற வேல் தான் என்னை வதம் செய்தது’ என்று கூறி உயிர் விட்டனர். அதே யுகத்தில் மற்றொரு துண்டம் இரணியனாக படைக்கப்பட்டது. அவனுக்கு தன் மகன் பிரகலாதன் மூலம் புத்தி சொல்லப்பட்டது. அதுவும் கேட்காத காரணத்தால் திருமால், நரசிம்மராக வந்து அவனை வதைத்தார். அவன் உயிர் விடும் நேரத்தில் 10 பெரிய மலைகளை உன்னுடைய நகங்களாக்கி என்னை கொன்றாயே தவிர நீ என்னை வதம் செய்யவில்லை என்று கூறி மாண்டான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக