மக்களை காப்பாற்ற, கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20–ம் நாள்
திருச்செந்தூர் திருப்பாற்கடலில் இருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய
மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து விஞ்சை
என்ற ஆழ்ந்த சுய ஞானத்தோடு, 8 ஆயிரம் கோடி சூரிய பிரகாச ஒளியுடன் அய்யா
வைகுண்டர் வெளிவந்தார். திருச்செந்தூரை அடுத்த தருவைக்கரை என்ற இடத்தை
அடைந்த போது தெய்வமும் அவராய், திரு உள்ளமும் அவராய், மனிதன் கண் காண
மனுச்சொரூபம் எடுத்தார். இவ்வாறு கலி அழிக்க அய்யா வைகுண்டர் அவதரித்த அந்த
நாள், அய்யா வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித ரூபம் எடுத்த வைகுண்டர் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு தெட்சணம் என்று அழைக்கப்படும் சுவாமிதோப்பில் வந்திருந்து கலி என்ற மாயையை அறுக்க 6 வருடம் அருந்தவம் புரிந்தார். கலியை அழிக்க மக்களுக்கு அன்பு, பொறுமை, தர்மம் இவற்றை ஆயுதமாக கொடுத்தார். சாதி, மத பேதம், தீண்டாமை, மூடநம்பிக்கை இவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகளை அருளினார். இந்த கலியை அழிக்க வேண்டுமென்றால் எவ்வாறு வாழவேண்டும் என்பதை கற்று உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அகிலத்திரட்டு அம்மானை என்ற ஆகமத்தை அருளினார். கலியை அழிக்க அன்பு ஒன்றே முதன்மை வழி என்று அவர் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக