அதைத்தொடர்ந்து வந்த திரேதாயுகத்தில் 10 பெரிய மலைகளை 10
தலைகளாக்கி ராவணனை பிறவி செய்தார். அவனுக்கு தம்பி விபீஷணன் மூலம் புத்தி
சொல்லப்பட்டது. அதுவும் காதில் ஏறாததால், ராம பாணத்தால் அவனை திருமால்
கொன்றார். அடுத்த யுகம் துவாபர யுகம். இந்த யுகத்தில் துரியோதனாக பிறவி
செய்தார். அவனும் அநீதியின் மறு உருவமாய் திகழ்ந்தான். அப்போது பீஷ்மர்
புத்தி கூறியும் அவன் கேட்கவில்லை. போர்க்களத்தில் பீமன், தனது
கதாயுதத்தால் அவனை அடித்து கொன்றார். அவன் உயிர் போகும் தருவாயில்
திருமாலைப் பார்த்து, ‘உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பீமனின்
கதாயுதம் தான் என்னை துவம்சம் செய்தது’ என்று ஆணவமாக கூறினான்.
அப்போது மகாவிஷ்ணு கோபமுற்று அவனை பார்த்து, ‘கடந்த 6 யுகங்களிலும் நீ அரக்கனாக பிறந்து நீதிக்கு புறம்பாய் நின்றாய். ஆகவே உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய். அடுத்து வரும் கலியுகத்தில் கலிநீசனாக உன்னை பிறப்பித்து, உன் ஆயுள் கணக்கு முடியும் வரை அடுத்தடுத்து பிறவி செய்வேன். சிரசு ஒன்றாகவும், அறிவு புத்தியோடும், ஆணவங்கள் தன்னோடும், நல்ல கலையுணர்வோடும், என்னை நினைக்க நல்ல மனமும் தந்து உன்னை பிறவி செய்வேன். அப்போது என்னை அறியாமல், உணராமல், தர்ம நெறி தவறினாய் என்றால் தன்னாலே நரகத்தில் சேர்ந்து விடுவாய்’ என்று கூற துரியோதனன் உடலில் இருந்து உயிர் பிரிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக