ஒரு முறை அல்லது மூன்று முறை வலம் வந்து வணங்கும் முறை இந்துக்கள்
மரபில் உள்ளது. ஆனால் அய்யா வழியில் இந்த மரபு மாறுபடுகிறது. தலைமைப்பதி
வருகைதரும் அன்பர்கள் முத்திரிக்கிணறு, வடக்கு வாசல், கொடி மரம், பள்ளியறை
ஆகியவற்றை ஐந்துமுறைக் கட்டாய மாகச் சுற்றிவந்து வணங்கவேண்டும்.
இப்பழக்கத்தினைச் சுற்றி சேவித்தல் என்று குறிப்பிடுகின்றனர்.
சுற்றிச்
சேவிக்கும் போது அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா என்ற நாமத்தை உச்சரிக்க
வேண்டும். உடலில் உள்ள புலன்கள் ஐந்தும் ஒருமுனைப் பட்டு வானம் (வானுயர்ந்த
கொடி மர வணக்கம்), தீ (பள்ளியறை தீபதரிசனம்), மண் (திருநாமம்- திருமண்
பூசுதல்), தண்ணீர் (முத்திரிக்கிணறு வலம் வருதல்), காற்று (சுவாசித்துக்
கொண்டே சுற்றுவது) ஆகிய ஐம்பூதங் களை ஒரே சமயத்தில் வணங்குவதாக சுற்றிச்
சேவித்த லுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்........
வேதங்களும்,
புராணங்களும் பல்வேறு தர்மங்களை கூறுகின்றன. ஆனால் பகவான் வைகுண்ட
சுவாமிகளின் பார்வையில் `தர்மம்' சற்று வித்தியசமானது ஆகும். `நாட்டில்
சமுதாயத்தால் பின்தங்கிய நிலைகளுக்கு தள்ளப் பட்டவர்களுக்கும்,
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உதவி செய்து அவர்களின் நிலையை உயர்த்தப் பாடுபட
வேண்டும். இதுவே `தர்மம்' ஆகும்'' என்றார் வைகுண்டர்.
"தாழக்
கிடப்பாரை தற்காப்பதே தர்மம்'' என்பது அகிலத்திரட்டு வரிகள் ஆகும். பலரின்
கருத்துக்கள் `உபதேசம்' செய்யும் பாணியில் அமையும். `உபதேசம்
பிறருக்குத்தானே' என எண்ணி தங்கள் வாழ்க்கையன் நெறிகளை மறந்து
விடுகிறார்கள். ஆனால் பகவான் வைகுண்ட சுவாமிகள் `தாழக் கிடப்பாரை
தற்காப்பதே தர்மம்' என்பதை வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
மக்களின் வாழ்க்கை நிலை உயர பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக