மனதில் இருக்கும் அறியாமை அழுக்குகளை அகற்றி, தெய்வீக அனுபவம் பெற வைக்கும்
"துவையல் தவம்'' என்கிற தவத்தை மேற்கொள்ளுமாறு எல்லோரையும் அய்யா
வைகுண்டர் கேட்டுக் கொண்டார்.
அது என்ன துவையல் தவம்ப
இந்த தவம் செய்பவர்களுக்கு மனத் தூய்மையுடன் உடல் தூய்மையும் அவசியம்.
அதனால், அந்த தவம் மேற்கொண்டவர்கள் தினமும் மூன்று வேளை கடலில் குளித்து புனிதம் பெற்றார்கள். உடல் தூய்மை பெற்றால் மாத்திரம் போதாது. உணவு கட்டுப்பாடும் அவசியம். பச்சரிசி, சிறுமணியை வேக வைத்து, அதையே உணவாக சாப்பிட வேண்டும். மேலும், அலைபாயும் மனதை நம் வசப்படுத்த தெய்வீக அனுபவத்தை பெற... சில போதனை வகுப்புகளும் அதில் இடம்பெற்றன.
காலையில் உகப்படிப்பு, மதியம் உச்சிப்படிப்பு, இரவில் உகப்படிப்பு மற்றும் உச்சிப்படிப்பு... என்கிற, பிரார்த்தனை பாடல்களை குருவாக இருந்து ஒருவர் சொல்ல.... மற்றவர்கள் பின்சொல்லும் பிரார்த்தனை வகுப்புகள்தான் அவை. இவ்வாறாக உடல்தூய்மையுடன், மனதூய்மையும் பெற்றவர்களை, நல்வழிப்படுத்த பல்வேறு அறிவுரைகளையும் அவர்களுக்கு வழங்கினார்.
வாழ்க்கை என்பது என்ன இல்லறம் எப்படி போற்றப்பட வேண்டும் என்பதில் தொடங்கி... ஆன்மீகம் என்பது என்ன என்பது வரை போதித்தார் அய்யா... இதோடு துவையல் தவம் நின்றுவிடவில்லை. அதில் ஈடுபட்டோரை கடற்கரையோரத்தில் தங்கச் செய்தார். கடும் வெயில், காற்று, மழை... என எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவத்தை அந்த தவத்தின் மூலம் அவர்களை பெறச் செய்தார். இப்படி பல்வேறுபட்ட பக்குவப்படுத்துதல்களால் துவையல் தவம் கொண்ட அனைவரும் புது மனிதராக தங்களை உணர்ந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக