ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வைகுண்டர் அருளிய 96 தத்துவங்கள் :

பூதங்கள்  - ( 5 )

1. அப்பு
2. பிருதிவி
3. வாயு
4. தேயு
5. ஆகாயம்

ஞானேந்திரியங்கள்  - ( 5 )

1. மெய்
2. வாய்
3. கண்
4. மூக்கு
5 .செவி

கன்மேந்திரியங்கள்  - ( 5 )
1. வாக்கு
2. பாதம்
3. பாணி
4. பாயுரு
5. உபத்தம்

தன்மாத்திரை - (5)
1. சப்தம்
2. ஸ்பரிசம்
3. ரூபா
4. ரசம்
5. ஸ்கந்தம்


அந்தக்கரணங்கள் - ( 4 )
1. மனம்
2. சித்தம்
3. புத்தி
4. அகங்காரம்

கன்மவிசயம் ( 5 )
1. பேசுதல்
2. கொடுக்கல் வாங்கல்
3. நடத்தல்
4. சம்போகமும் நீர்கழிதலும்
5. மலம் கழித்தல்


அறிவு - (1)
1. உள்ளம்

வாயுக்கள் ( 10 )
1. பிராணன்
2. அபானன்
3. சமானன்
4. வியானன்
5. உதானன்
6. நாகன்
7. கூர்மன்
8. கிங்கரன்
9. தேவதத்தன்
10. தனஞ்செயன்

நாடிகள் - (10)
1. இடகலை
2. பிங்கலை
3. கழுமுனை
4. சிங்குவை
5. பூடை
6. காந்தாரி
7. அத்தி
8. குகு
9. அலம்புடை
10. சங்கில

மண்டலம் - ( 3 )
1. அக்கினி மண்டலம்
2 சூரிய மண்டலம்
3. சந்திர மண்டலம்

கோசம் - ( 5 )
1. அன்மைய கோசம்
2. பிராணமய கோசம்
3. மனோமய கோசம்
4. விஞ்ஞாமைய கோசம்
5. ஆனந்தமய கோசம்

அவல்தைகள் - ( 5)
1. சாக்கிரம்
2. சொப்பனம்
3. கழப்தி
4. துரியம்
5. துரியாதிதம்

குணம் - (3)
1. சத்துவகுணம்
2. ராஜோகுணம்
3. தமோகுணம்

ஆதாரம் - (6)
1. மூலாதாரம்
2. சுவாதிஷ்டானம்
3. மணிபூரகம்
4. அனாகதம்
5. விசுத்தி
6. ஆங்ளை

இராகம் - (8)
1. காமம்
2. குரோதம்
3. லோபம்
4. மோகம்
5. மதம்
6. மாச்சரியம்
7. இடும்மை
8. அசூயை

கோசம் - (3)
1.வாகம்
2. பித்தம்
3. சிலேத்துமம்

ஈடணை - (3)
1. தாரேஷனை
2. புத்திரேஷனை
3. தனேஷனை

வினை - (2)
1. நல்வினை
2. தீவினை

மலம் - (3)
1. ஆணவம்
2. கன்மம்
3. மாயை

ஆசயங்கள் - (5)
1. ஆயாசயம்
2. ஐலாசயம்
3. மலசயம்
4. ஜலஞ்சயாசயம்
5. சுக்கிலாசயம்




 மொத்தமாக 96 தத்துவங்கள் .

அய்யா உண்டு

தத்துவக் கொட்டகை அமைக்க அய்யா நிகழ்த்திய அற்புதம்

அம்பலப்பதியில் அமைத்துள்ளது 96 தத்துவங்கள் குறிக்கும் தத்துவக் கொட்டகை அமைக்க அய்யா நிகழ்த்திய அற்புதம்



 விளவங்கோடு தாலுக்கா தேவியோட்டைச் சேர்ந்தவர் குட்டி ஆசாரி.  இவர் தீராத குஷ்ட நோய்யால் அவதிப்பட்டு வந்தார் . ஒரு நாள்  சுவாமிதோப்பு வந்து அய்யா வைகுண்டரை தரிசித்தார் . அய்யா வைகுண்டர் அருளால் குட்டி ஆசாரி க்கு நோய் தீர்ந்தது . குட்டி ஆசாரி அய்யா வைகுண்டரின் தவிர பக்தர் ஆனர் . குட்டி  ஆசாரியே அம்பலப்பதி தத்துவக் கொட்டகை அமைத்துக் கொடுத்தார் .

         அந்த காலத்தில் பச்சைப் பனை மரம் வெட்டுவது சட்ட விரோதமாகும் . ஆனால் தத்துவக் கொட்டைகை அமைக்க பனை மரம் வேண்டும் .

          அய்யா வைகுண்டர் புகழ் பெற்ற பெருமாள் நாடாரின் பனை மரம் கேட்டார். அரச கட்டளையை மீறி எப்படி அய்யாவிற்கு தேவைப்படும் அளவுக்கு பனைமரங்களை கொடுப்பது என சிந்தித்தார் பெருமாள் நாடார்.

         பெருமாள் நாடாரின் சிந்தனையை உணர்ந்து அய்யா வைகுண்டர்  பெருமாள் நாடாரை பார்த்து , அரச கட்டளைக்கு பயந்தா சிந்தனை செய்கிறாய் ? 

                  இதோ உமது கவலை மாறிவிடும் என அய்யா வைகுண்டர் கூறி முடிப்பதற்குள் ஒரு புயற் காற்று அந்த வட்டாரத்தில் வீசியது .


               அம்பலபதி தத்துவக் கொட்டைகை அமைக்க தேவையான பனை மரங்கள் மட்டும் சாய்ந்து கிடந்தன.

              இந்த பனை மரங்கள் கொண்டுதான் அம்பலப்பதியில் 96 தத்துவங்கள் குறிக்கும் தத்துவக் கொட்டகை நிர்மாணிக்கப்பட்டது .

               இதுவே அம்பலப்பதி தத்துவக் கொட்டகை அமைக்க அய்யா நிகழ்த்திய அற்புதம் .


அய்யா உண்டு

அய்யா வழி திருமணங்களில் மணமக்கள் தெற்கு நோக்கி அமர்வது ஏன் ?

தென் திசையில் தான் பத்ரகாளி தாய் உள்ளார்.நாம் எல்லாம் பத்ரகாளி பிள்ளைகள்.எனவே தான் தென் திசை நோக்கி திருமணம் நடத்தப்படுகிறது.

             அதுபோலவே,ஏழு கன்னிமார்களும் அய்யாவை திருக்கல்யாணம் செய்ய வேண்டி தெற்கு தேக்கி தவசிருந்து அய்யாவை திருக்கல்யாணம் செய்து கொண்டார்கள்.

               இதன் காரணமாக அய்யா வழி திருமணங்கள் தெற்கு திசை நோக்கி நடத்தப்படுகின்றன.

அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழி திருமண முறை

 அய்யாவின் அவதார காலத்திற்கு முன்பும், அவர் அவதார காலத்திலும் பிராமணர்கள் அதிகமாக இருந்தனார். சமஸ்கிருத மொழியில் மட்டுமே ஆலயங்களில் பூஜைகள் செய்தனர். திருமண மந்திரங்களும் சமிஸ்கிருத மொழிகளில் மட்டுமே இருந்தன.

      சமிஸ்கிருத மொழி தேவர்களின் மொழி எனவும்,அதை மற்ற ஜாதியினர் கற்கக் கூடாது எனவும் தடை செய்தனர்.

     ஆகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அய்யா அனைத்து நிகழ்வுகளையும் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தினார்.

      அய்யா வழி திருமண என்றால் புதுப் பாணியில் தமிழ் மொழியில் திருமண மந்திரங்கள் ஓதப்படும்.

      அய்யா வழி திருமணத்தில் மணப்பைண்ணும், மணமகனும் தெற்குப் பக்கத்தில் நோக்கி அமர்ந்திருக்க , அவர்களுடைய நெற்றியில் நாமம் சாத்தப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள வயதானவர் திருமணத்தை நடத்தி வைப்பார்.

     திருமணத்தில் அய்யா அருளிய கல்யாண வாழ்த்து பாடல் படிக்கப்படும்.

 " மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ" என்ற 56 வரிகள் கொண்ட வாழ்த்து படிக்கப்படும்.

    குரு அதைப் படிக்க கூடிய உள்ளவர்கள் அதை திரும்பக் கூறுவார்கள்.

       "அரகரா என்று சொல்லி அம்மையுமாய்தான் எழுத்து " என்ற வரியை குரு 5 முறை படிப்பார். அதன் பின் குரு தாலியை எடுத்துக் மணமகன் கையில் கொடுத்து பின்

         " சிவ  சிவா என்று சொல்லி திருச்சரடு சேர்த்தனரே " என குரு படிக்க மணமகன் தாலியை மணமகள் கழுத்தில் கட்டி விடுவான்.

        கல்யாண வாழ்த்தில் உள்ள மற்ற வரிகள் மணமக்களை வாழ்த்தும் வரிகள்.
     
        மணமக்கள் மணவறையை 5 முறை சுற்றி வருவர்களவ . பின் திருமணம் நிறைவேறிவிடும்.
     
        இதுவே அய்யா வழி திருமண முறை.

அய்யா வழி மஞ்சள் நீராட்டு விழா முறை

அய்யா வழி மக்கள் பெண்கள் பூப்பெய்திய நாளிலிருந்து 41 நாட்கள் கழித்து தான் சடங்கு முறைகளை நடத்துவர்.
         
          அதுவரை பூப்பெய்திய பெண் வீட்டார் புனித இடங்களுக்கு செல்வது கிடையாது.

            அதன் பின்னர் ஒரு அய்யா வழிபாட்டு தலத்திற்கு சென்று 5 முறை பதம் எடுத்து எரித்து தீட்டினை அகற்றி கொள்ளலாம் அல்லது வீட்டில் வைத்து சடங்கு செய்ய நினைப்பவர்கள் அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்தில் உள்ள பணிவிடை காரர் வீட்டிற்கு அழைத்து 5 முறை பதம் எரிந்து தீட்டினை போக்கி கொள்ளலாம்.


அய்யா உண்டு

அய்யா வழி புதுமனை புகுவிழா முறை

அய்யா வழி மக்கள் புதுமனை புகுவிழா வின் போது அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்தில் இருக்கும் பணிவிடை கரரை அழைத்து இல்லத்தில் விளக்கு ஏற்றி வைப்பார்கள்.

             பணிவிடைகரார் என்றால் யார் ?

             அய்யா வழிபாட்டு தலத்தில் பூஜை என்னும் முறை கிடையாது.அய்யாவிற்கு பணிவிடை மட்டுமே.அத்த பணிவிடையை செய்பவர்கள் பணிவிடைக்கரார் என அழைக்கப்படுகிறர்கள்.

               புதுமனை புகுவிழா வில் விளக்கு ஏற்றி வீட்டின் நடுவே புதுபானை வைத்து.அதில் திருநாமம் இட்டு பாலை பொங்க  விடுவார்கள். பால் பொங்கும் நேரத்தில் குழசை ஓசை முழங்க , அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா என சொல்லி பானையை இறக்கி வைப்பார்கள்.

                பிறகு வெற்றிலை ,பாக்கு, பழம் முதலியவை வைத்து அய்யாவிடம் மாப்பு கேட்டு.அய்யா அருளிய உகப்படிப்பு படித்து அய்யா அருள் பெருவர்கள்.

                 பின் அந்த பாலை தருமம் இடுவார்கள்.

                புசனிக்காய் உடைப்பது , தேங்காய் உடைப்பது அய்யா வழிபாட்டு க்கு எதிரனது .எனவே அதை செய்யமாட்டார்கள்.

அய்யா உண்டு

அய்யா வழியில் குழந்தைக்கு பெயர் இடும் முறை

 குழந்தை பிறந்த 41 நாள் கழித்து அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்திற்கு சென்று அய்யாவின் பள்ளியறை முன் குழந்தையை வைத்து அய்யாவின் ஆசியை பெற வேண்டும்.
         
            குழந்தைக்கு பெயாடும் போது அய்யா நிச்சயித்தப்படி பெயரிடுக்கிறோம் என சொல்லி, 5 முறை குழந்தையின் பெயரை கூறிக்,குழந்தையின் மேல் முத்திரி பதம் தெளித்து ,பின்பு வெற்றித் திருநாமம் சூட்ட வேண்டும்.

            அதுபோலவே குழந்தைக்கு முடி இறக்கும் போது , அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்திற்கு சென்று அய்யா நிச்சயித்த படி முடி இறக்க வேண்டும் என சொல்லி , பின் முத்திரி பதம் தெளித்து , முடி இறக்க வேண்டும். அதுபோலவே , பெண் குழந்தைக்கு காது கூத்து விழாவும் நடைபெரும்.

        குழந்தைக்கு முதலில் அன்னம் கொடுக்கும் போது தலைமைப்பதி உள்ள நித்தியப்பால் வாங்கி கொடுக்கலாம், முடியாதவர்கள் அய்யா நிச்சயித்தபடி அன்னம் கொடுக்கிறோம் என்று சொல்லி முத்திரி பதம் சிறிது வாயில் இட்டு, பின் அன்னம் கொடுக்க வேண்டும்.

              அய்யா உண்டு