ஞாயிறு, 8 மார்ச், 2020

தத்துவக் கொட்டகை அமைக்க அய்யா நிகழ்த்திய அற்புதம்

அம்பலப்பதியில் அமைத்துள்ளது 96 தத்துவங்கள் குறிக்கும் தத்துவக் கொட்டகை அமைக்க அய்யா நிகழ்த்திய அற்புதம்



 விளவங்கோடு தாலுக்கா தேவியோட்டைச் சேர்ந்தவர் குட்டி ஆசாரி.  இவர் தீராத குஷ்ட நோய்யால் அவதிப்பட்டு வந்தார் . ஒரு நாள்  சுவாமிதோப்பு வந்து அய்யா வைகுண்டரை தரிசித்தார் . அய்யா வைகுண்டர் அருளால் குட்டி ஆசாரி க்கு நோய் தீர்ந்தது . குட்டி ஆசாரி அய்யா வைகுண்டரின் தவிர பக்தர் ஆனர் . குட்டி  ஆசாரியே அம்பலப்பதி தத்துவக் கொட்டகை அமைத்துக் கொடுத்தார் .

         அந்த காலத்தில் பச்சைப் பனை மரம் வெட்டுவது சட்ட விரோதமாகும் . ஆனால் தத்துவக் கொட்டைகை அமைக்க பனை மரம் வேண்டும் .

          அய்யா வைகுண்டர் புகழ் பெற்ற பெருமாள் நாடாரின் பனை மரம் கேட்டார். அரச கட்டளையை மீறி எப்படி அய்யாவிற்கு தேவைப்படும் அளவுக்கு பனைமரங்களை கொடுப்பது என சிந்தித்தார் பெருமாள் நாடார்.

         பெருமாள் நாடாரின் சிந்தனையை உணர்ந்து அய்யா வைகுண்டர்  பெருமாள் நாடாரை பார்த்து , அரச கட்டளைக்கு பயந்தா சிந்தனை செய்கிறாய் ? 

                  இதோ உமது கவலை மாறிவிடும் என அய்யா வைகுண்டர் கூறி முடிப்பதற்குள் ஒரு புயற் காற்று அந்த வட்டாரத்தில் வீசியது .


               அம்பலபதி தத்துவக் கொட்டைகை அமைக்க தேவையான பனை மரங்கள் மட்டும் சாய்ந்து கிடந்தன.

              இந்த பனை மரங்கள் கொண்டுதான் அம்பலப்பதியில் 96 தத்துவங்கள் குறிக்கும் தத்துவக் கொட்டகை நிர்மாணிக்கப்பட்டது .

               இதுவே அம்பலப்பதி தத்துவக் கொட்டகை அமைக்க அய்யா நிகழ்த்திய அற்புதம் .


அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக