ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வழியில் குழந்தைக்கு பெயர் இடும் முறை

 குழந்தை பிறந்த 41 நாள் கழித்து அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்திற்கு சென்று அய்யாவின் பள்ளியறை முன் குழந்தையை வைத்து அய்யாவின் ஆசியை பெற வேண்டும்.
         
            குழந்தைக்கு பெயாடும் போது அய்யா நிச்சயித்தப்படி பெயரிடுக்கிறோம் என சொல்லி, 5 முறை குழந்தையின் பெயரை கூறிக்,குழந்தையின் மேல் முத்திரி பதம் தெளித்து ,பின்பு வெற்றித் திருநாமம் சூட்ட வேண்டும்.

            அதுபோலவே குழந்தைக்கு முடி இறக்கும் போது , அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்திற்கு சென்று அய்யா நிச்சயித்த படி முடி இறக்க வேண்டும் என சொல்லி , பின் முத்திரி பதம் தெளித்து , முடி இறக்க வேண்டும். அதுபோலவே , பெண் குழந்தைக்கு காது கூத்து விழாவும் நடைபெரும்.

        குழந்தைக்கு முதலில் அன்னம் கொடுக்கும் போது தலைமைப்பதி உள்ள நித்தியப்பால் வாங்கி கொடுக்கலாம், முடியாதவர்கள் அய்யா நிச்சயித்தபடி அன்னம் கொடுக்கிறோம் என்று சொல்லி முத்திரி பதம் சிறிது வாயில் இட்டு, பின் அன்னம் கொடுக்க வேண்டும்.

              அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக