ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வழி புதுமனை புகுவிழா முறை

அய்யா வழி மக்கள் புதுமனை புகுவிழா வின் போது அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்தில் இருக்கும் பணிவிடை கரரை அழைத்து இல்லத்தில் விளக்கு ஏற்றி வைப்பார்கள்.

             பணிவிடைகரார் என்றால் யார் ?

             அய்யா வழிபாட்டு தலத்தில் பூஜை என்னும் முறை கிடையாது.அய்யாவிற்கு பணிவிடை மட்டுமே.அத்த பணிவிடையை செய்பவர்கள் பணிவிடைக்கரார் என அழைக்கப்படுகிறர்கள்.

               புதுமனை புகுவிழா வில் விளக்கு ஏற்றி வீட்டின் நடுவே புதுபானை வைத்து.அதில் திருநாமம் இட்டு பாலை பொங்க  விடுவார்கள். பால் பொங்கும் நேரத்தில் குழசை ஓசை முழங்க , அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா என சொல்லி பானையை இறக்கி வைப்பார்கள்.

                பிறகு வெற்றிலை ,பாக்கு, பழம் முதலியவை வைத்து அய்யாவிடம் மாப்பு கேட்டு.அய்யா அருளிய உகப்படிப்பு படித்து அய்யா அருள் பெருவர்கள்.

                 பின் அந்த பாலை தருமம் இடுவார்கள்.

                புசனிக்காய் உடைப்பது , தேங்காய் உடைப்பது அய்யா வழிபாட்டு க்கு எதிரனது .எனவே அதை செய்யமாட்டார்கள்.

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக