ஞாயிறு, 8 மார்ச், 2020

அர்த்தமுள்ள அய்யா வழி

 சமதர்மம் , சமத்துவம் , சமூக நீதி , சுயமரியாதை மற்றும் சமூக சீர்திருத்திற்கான வழியே நம் அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழி .

         இறைவனிடம் அனைவரும் சமம் , ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் , சாதி பேதமில்லை அனைவரும் அய்யாவின் பிள்ளைகளே.

          பிறப்பால் உயர்ந்தவர் , தாழ்ந்தவர் , தீண்டத்தகாதவர் என்ற சாதிய பேதம் இல்லாத உலகின் ஒரே வழி.

         இறைவன் ஒருவனே , அவர் நம் அய்யா வைகுண்டர் மட்டுமே என் நம்பும் வழி.

         பரம்பொருளான இறைவனுக்கு உருவம் கிடையாது. அவர் எங்கும் நிறைந்தவர் , ஏகமயமானவர் , வடிவம் புகழ் படைத்தவர் என நம்பும் வழி.

       நம் ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் இருக்கிறார் , அவர் நம்மை வழி நடத்துகிறார் என நம்பும் வழி.

       "மானத்தோடு வாழ்ந்தால் மாளும் கலி தன்னாலே "

         என சுயமரியாதையோடு , வாழ்வாதே சிறப்பு என சொல்லும் வழி.

         " விளக்கின் ஒளி போல் வீரதனமாய் இருந்திடுக்கே "
         
         என விளக்கின் ஒளி போல வீரமாக இருந்திட வேண்டும் என வீரத்தை ஊட்டும் வழி.

          "இல்லறத்தை விட்டுத் தவம் இல்லைகாண்  வேறொன்று  "

          என உறவுகளோடு ஒன்றி வாழ்வதே வாழ்வு என உணர்த்தும் வழி.

         "தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் "
     
        என தாழக்கிடக்கும் ஏழை எளியவர்களுக்கு உதவுதல் , தான தர்மங்கள் செய்தல் , கல்வியறிவு வழங்குதல் முதலியவை முதன்மையாக கொண்ட வழி.

          ஒருவர் செய்யும் தர்மம் , அதர்மம் கொண்டே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என கருதப்படுகிறது எனவும் , பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என நம்புகின்ற வழி.

          இதுவே , நம் அய்யா வைகுண்டர் அருளிய அர்த்தமுள்ள அய்யா வழி.

           அந்தககைய புனித வழியின் படி செயல்ப்படுவோம் !

            தர்மயுக வாழ்வு பெறுவோம் !

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக