வெள்ளி, 21 நவம்பர், 2014

தெட்சணத்துத் துவாரகா பதி

கன்னியாகுமரிக்கு மேற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையில் இப்பதி அமைந்துள்ளது. இப்பதியினைக் குமரேசன் என்பவர் தாங்கலாகத் தொடங்கி, தற்போது தெட்சணத்துத் துவாரகா பதி என்னும் பெயரில் செயல்படுகின்றது.
தினப் பணிவிடை
    மூன்று வேளை தின வழிபாடு நடைபெறுகின்றது.
தினமும் ஆறு மணிக்கு திருநடை திறக்கப்பட்டுப் பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. அப்போது உகப்படிப்பும் படிக்கப்படுகின்றது
நண்பகல் பணிவிடை பகல் பன்னிரண்டு மணிக்கு நடை பெறுகின்றது. அப்பொழுது பால்தர்ம்ம் வழங்கப்படுகின்றது.
 மாலை ஆறு மணிக்கு மாலை நேர பணிவிடை நடைபெறுகின்றது. அப்பொழுது உகப்படிப்பு படிக்கப்படுகின்றது.
வாரப் பணிவிடை
ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. அன்று நண்பகல் பணிவிடைக்குப் பிறகு உச்சிப்படிப்பும் முடிந்த பின்னர் பகல் ஒரு மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது.
மாதப் பணிவிடை
     ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பணிவிடை முடிந்த பின்னர், நண்பகல் பணிவிடை பகல் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பமாகிறது. ஒரு மணிக்கு அய்யா வைகுண்டர் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. வாகனம் கடற்கரையோரமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றது. பகல் ஒன்று முப்பதுக்கு அன்னதானம் நடைபெறுகின்றது
ஆண்டுத் திருவிழா
    ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திரு ஏடு வாசிப்புத் திருவிழா பதினேழு நாட்கள் நடைபெறுகின்றது.    அவதார தின விழாவும் பங்குனி மாதம் பதினோரு நாட்கள் திருவிழாவும் விமரிசையாக நடத்தப்பெறுகின்றது.
பௌர்ணமி தவம்
     உவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் அன்று மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை பௌர்ணமி தவம் என்னும் பணிவிடை நடைபெறுகின்றது. அப்போது
“ அய்யா சிவ சிவ சிவசிவா அரகர அரகரா
      சிவசிவ சிவசிவா அரகர அரகரா”  - என 1008 முறை கூறுகின்றனர்.

வாகை பதி

கன்னியாகுமரியிலிருந்து வடக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இப்பதி அமைந்துள்ளது.
     அய்யா வைகுண்டர் தனது ஐந்து வருட தவத்தின் இறுதி நாட்களில் தனது பக்தர்களிடம் வாகை பதியில் சென்ற உடலையும், உள்ளத்தையும் சுத்தம் செய்யும் முறையையும், அதற்கான வழிபாட்டு முறைகளையும் கூறி அவர்களை வாகை பதிக்கு அனுப்பி வைத்தார்.
அதன்படி சுமார் எழு±று குடும்பங்கள் வாகை பதிக்குச் சென்று அய்யா வைகுண்டர் கூறியபடி உடலையும், உள்ளத்தையும் சுத்தம் செய்யம் வழிபாட்டு முறைகளை மேற்கொண்டனர். இது பற்றிய செய்திகள் துவையல் பந்தி பகுதியில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினப் பணிவிடை
    அதிகாலை ஐந்து மணிக்குத் திருநடை திறக்கப்பட்டு பணிவிடை நடைபெறுகின்றது. நண்பகல், மாலை பணிவிடையும் நடைபெறுகின்றது. தினமும் இப்பதிக்கு வரும் அன்பர்களுக்கு மதிய உணவு வழங்க்கின்றனர். அதிகம் பேர் வருதில்லை. ஒன்றிரண்டு பேர் வருகின்றனர்.
வாரப் பணிவிடை
    ஞாயிற்றுக்கிழமை சிறப்பான பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. சில வாரங்களில் அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
மாதப் பணிவிடை
     ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. அன்று சமபந்தி போசனமும் நடைபெறுகின்றது.
ஆண்டு வழிபாடு
இக்கோயிலில் ஆண்டுத் திருவிழா நடைபெறுவதில்லை. திரு ஏடு வாசிப்புத் திருவிழா, அவதார தினவிழா போன்ற திருவிழாக்கள் மட்டுமே நடைபெறுகின்றன.

தென்தாமரைகுளம்பதி

நாகர்கோவிலிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இப்பதி அமைந்துள்ளது. தலைமைப் பதிக்கு அருகாமையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
     அகிலத்திரட்டு அம்மானை எழுதிய அரிகோபாலன் அவர்கள் பிறந்த ஊர் தாமரைகுளம் பதியாகும். இவரைச் சகாதேவன் சீடர் என்றும் கூறுவர்.
அய்யா வைகுண்ட சுவாமியின் சீடர்களாகிய தர்மன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐந்து சீடர்களில் ஒருவரென்றும் கூறுகின்றனர்.
அகிலத்திரட்டு அம்மானை இப்பதியில் வைத்து எழுதப்பட்டதால் இப்பதியைத் தலைமைப் பதி என்று இப்பதியைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
தினப் பணிவிடை
தினமும் ஐந்து மணிக்குத் திருநடை திறக்கப்பட்டு பணிவிடைகள் நடைபெறுகின்றன. இப்பதியின் நிர்வாகம் இப்பதியைச் சார்ந்தவர்களால் நிர்வகிக்கப்படுகின்றது.
மாதப் பணிவிடை
     ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. அன்று சமபந்தி போசனமும் நடைபெறுகின்றது.
ஆண்டுத் திருவிழா
     ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை திரு ஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கி பதினேழு நாட்கள் நடைபெறுகின்றன. அகிலத்திரட்டு இப்பதியில் வைத்து எழுதப்பட்டதன் நினைவாக இப்பதியில் திரு ஏடு வாசிப்புத் திருவிழா முதன்முதலாக நடைபெறுகின்றது. அதன் பிறகே ஏனைய பதிகளில் நடைபெறுகின்றது.
     சித்திரை மாதம் ( ஏப்பிரல் 18 ) பதினோரு நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகின்றது.

முட்டப்பதி

கன்னியாகுமரியிலிருந்து வடக்கே இரண்டு மைல் தொலைவில் இப“பதி அமைந்துள்ளது. சின்னமுட்டம் எனப்படும் மீன் பிடித் துறைமுகம் இதனருகிலேயே அமைந்துள்ளது.
     வைகுண்டசுவாமிகள் தன் அன்பர்களுக்குத் துவையல் பந்தி தவசில் ஈடுபடுத்தி அத்தவசை வெற்றி பெறச் செய்த பெருமை இப்பதியையேச் சாரும்.
     அய்யா வைகுண்டர்  தனது தவத்தை நிறைவு செய்த பின்னர் முட்டப்பதியில் தீர்த்தம் ஆடினார் என்றும், அதனால் முட்டப்பதியில் தீர்த்தம் ஆடுவது சிறப்பு என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
     முட்டப்பதியில் கணக்குக் கூறும் நிகழ்வும் ( காலக் கணிப்பு ) நடைபெறுகின்றது. வேறு பதிகளில் கணக்குக் கூறும் வழக்கம் இல்லை. இப்பதியில் மட்டுமே கணக்குக் கூறும் முறை காணப்படுகின்றது.
ஆண்டுத் திருவிழா
            பங்கனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அய்யா வழி பக்தர்கள் சுவாமித்தோப்பிலிருந்து முட்டப்பதி நோக்கி தீர்த்த யாத்திரையாட செல்கின்றனர். அன்றைய தின முட்டப்பதி பணிவிடையையும், அன்னதானத்தையும் சுவாமித்தோப்புப் பதியினரே ஏற்றுக் கொள்கின்றனர்.
அவதாரத் தினவிழா, , திரு ஏடு வாசிப்புத் திருவிழா, தீர்த்தாமடுதல் திருவிழாவும் நடை பெறுகின்றன.
தினப் பணிவிடை
     அதிகாலை ஐந்து மணிக்குத் திருநடை திறக்கப்படுகின்றது. பணிவிடை காலை, நண்கல், மாலை என மூன்று வேளை நடைபெறுகின்றது. பணிவிடை தலைமைப் பதியில் நடைபெறுவது போன்றே நடைபெறுகின்றது.
வாரப் பணிவிடை
    வார வழிபாடாக ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.
மாதப் பணிவிடை
    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகின்றது.

அம்பலப்பதி

நாகர்கோவிலிலிருந்து தெற்குத் திசையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இப்பதி அமைந்துள்ளது. இப்பதியில் அய்யா வைகுண்டர் இரண்டு வருடங்கள் தவம் புரிந்தார். மேலும் இவ்வாலயத்தை எழுப்ப கருங்கல் அருகே பாÙர் என்னும் ஊரிலிருந்து பனை மரங்களைக் கடல் வழியே கொண்டு வந்து ஆலயத்தை எழுப்பியதாகக் கூறுகின்றனர்.
     அதன் பின்னரே இப்பகுதி அம்பலப்பதி எனப் பெயர் பெற்றது. அதற்கு முன் இப்பகுதி பள்ளம் என்ற பெயருடன் விளங்கிற்று. இப்பதியை அம்பலப்பதி, பள்ளப்பதி, மூலகுண்டப்பதி, என்றும் அழைக்கின்றனர்.
இப்பதியில்தான் அய்யா வைகுண்டர் தொண்ணூற்றாறு சட்டங்கள் ஒன்றாய் இணையும் வண்ணம் தத்துவக் கொட்டகை ஒன்றை நிர்மாணித்தார். அத்தோடு அய்யா வைகுண்டர் இப்பதியில் சிவ சொரூபியாக்க் காட்டசியளிப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
     அம்பலப்பதியில் அய்யா வைகுண்டர் பார்வதி மற்றும் பகவதியின் ஆற்றலைப் பெற்றுக் கொண்டதாகவும், முருகனாக வேடமிட்டு வள்ளி, தெய்வானையின் ஆற்றலைப் பெற்றுக் கொண்டதாகவும், பிரம்மனாக உருக் கொண்டு மந்தைகற்றலின் ( மண்டைகாட்டாள்) ஆற்றலைப் பெற்றதாகவும் கூறுகின்றனர்.
     இப்பதியிலிருந்து அய்யா வைகுண்டர் குதிரை மேல் பயணித்துக் கடம்பன்குளம், பாம்பன்குளம் போன்ற கிராமங்களுக்குச் சென்று நிழல்தாங்கல்களை ஏற்படுத்தினார் எனவும் தரவாளர்கள் மூலம் அறியமுடிந்தது.
தினப் பணிவிடை
    அதிகாலை ஐந்து மணிக்கு ஆலயத் திருநடை திறக்கப்பட்டு பணிவிடைகள் நடைபெறுகின்றன. பின்னர் நண்பகல் பணிவிடையும், மாலை நேர பணிவிடையும் என மூன்று வேளை பணிவிடைகள் நடைபெறுகின்றன.
வாரப் பணிவிடை
    வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பான பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. செவ்வாய்க்கிழமை வழிபாட்டில் அதிகம் பெண்களே கலந்து கொள்கின்றனர். இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளும் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், குழந்தை இல்லாத தம்பதியர்களுக்குக் குழந்தை பேறு கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.
ஆண்டுத் திருவிழா
    ஆண்டுத் திருவிழா ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி பதினோரு நாட்கள் நடைபெறுகின்றது. தலைமைப் பதியைப் போன்ற பல வகையான வாகனப் பவனி நடைபெறுகின்றது. அய்யா வைகுண்டரின் பதிகளில் பெண்கள் அதிகமாக்க் கலந்து கொள்ளும் பதி இதுவாகும். அவதார தின விழா, திரு ஏடு ( பதினேழு நாட்கள் ) வாசிப்புத் திருவிழா போன்ற ஆண்டுத் திருவிழாக்களும் நடைபெறுகின்றன.
¯ப்பதி
    நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் தெற்குத் திசையில் இப்பதி இடம்பெற்றுள்ளது. ஈத்தாமொழி என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அய்யா வைகுண்டரின் காலத்தில் புன்னை மரங்கள் நிரம்பிய ஒரு ¯ஞ்சொலையாக இவ் ஊர் காணப்பட்டது.
     இங்கு அய்யா வைகுண்டரின் பக்தையான ¯மடந்தை என்னும் பெண் வசித்து வந்தார். இவரைப் ¯மாதேவி என்று கூறுகின்றனர். இவர் அய்யாவின் புகழைப் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
     கிருஷ்ண பக்தையாக விளங்கிய ஆண்டாள் மற்றும் மீராவைப் போல் ¯மடந்தை அய்யா வைகுண்டரின் பக்தையாகத் திகழ்ந்தார். அவரது பற்றையும், அவரது உறவினர்களின் வேண்டுகோளையும், பக்தர்களின் வேண்டுகோளையும் ஏற்று அய்யா வைகுண்டர் தனது தேவியாக ¯மடந்தையை ஏற்றுக் கொண்டார்.
தினப் பணிவிடை
    அதிகாலை ஐந்து மணிக்குத் திருநடை திறக்கப்படுகின்றது. மூன்று வேளை பணிவிடைகள் நடைபெறுகின்றன.
வாரப் பணிவிடை
    ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.
ஆண்டுத் திருவிழா
     இக்கோயிலில் கொடிமரம் இல்லை. ஆண்டுத் திருவிழா ஐப்பசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றது. திருவிழாவின்போது கொடி ஏற்றப்படுவதில்லை. அவதார தின விழா, திரு ஏடு வாசிப்புத் திருவிழா ( 17 நாட்கள். கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.)

அவதார தினவிழா

கி.பி. 1833, மார்ச் 3 ஆம் தேதி அன்று முத்துக்குட்டி அவர்கள் அய்யா வைகுண்டராக அவதாரம் எடுத்தார் (மாசி மாதம் இருபதாம் தேதி). அந்நாளே அய்யா வழி மக்களால் அவதார தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்விழா மட்டும் அனைத்துப் பதிகளிலும், தாங்கல்களிலும் உரே நாளில் கொண்டாடப்படுகின்றது.
     இவ்விழாவினை அய்யா வழி மக்கள் கொண்டாடும் பொது விழா எனக் கூறலாம். இந்நாளில் தலைமைப்பதியிலும், அம்பலப்பதியிலும் அவதார தின ஊர்வலங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஊர்வலத்தின்போது நாமம் பொறித்த காவி வண்ணக் கொடிகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு அய்யா சிவ சிவ சிவா அரகராஎனக் கூறியபடி பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கு கொள்கின்றனர்.
     அனைத்துப் பதிகளிலும் அவதார தினவிழா ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் தலைமைப் பதியில் நடைபெறும் ஊர்வலமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அன்பர்கள் இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
     அவதாரத் தினத்தின் முதல் நாள் திருச்செந்#ர் கடலிலிருந்து தொடங்கும் ஊர்வலம் மறுநாள் தலைமைப் பதியை வந்தடைகின்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்தும் ஊர்வலமாக அன்பர்கள் தலைமையைப் பதியை நோக்கி வருகின்றனர் ( அய்யா வைகுண்டர் திருவனந்தபுரம் சிங்காரவனத்தோப்பில் சிறை வைக்கப்பட்டிருந்த்தன் நினைவாக இவ் ஊர்வலம் நடைபெறுவதாக அன்பர்கள் கூறுகின்றனர் ).

தைத் திருவிழா

தைத் திருவிழா ஒவ்வொரு வருடமும் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி பதினோரு நாட்கள் நடைபெறுகின்றன. பதினோரு நாட்களும் திருவிழாக்கள் மேலே கண்டவாறே நடைபெறுகின்றன.
வைகாசித் திருவிழா
    வைகாசித் திருவிழா ஒவ்வொரு வருடமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை தொடங்கி பதினோரு நாட்கள் நடைபெறுகின்றன. இத்திருவிழாக்களும் மேலே கண்டவாறே நடைபெறுகின்றன. குறிப்பிட்டுக் கூறும்படியான வித்தியாசங்கள் ஏதுமில்லை.
திரு ஏடு வாசிப்புத் திருவிழா
     ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அல்லது இரண்டாவது வெள்ளிக்கிழமை திருஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது.சிலவேளை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் திரு ஏடு வாசிப்புத் திருவிழாவை நடத்துகின்றனர். இத்திருவிழா பதினோரு நாட்கள் நடைபெறுகின்றன. இது மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை நிறைவடைகின்றது.
     அகிலத்திரட்டு அம்மானையை ஓலைச் சுவடியில் (ஏடு) எழுதி வைத்து வாசிக்கப்பட்டதால் ஏடு என்று அழைத்தனர். அதனையே இன்றும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அகிலத்திரட்டு ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பது என்னும் மரபில் அமைந்தது. தென் திருவிதாங்கூரில் பத்தொன்பதாம் ±ற்றாண்டின் இறுதிவரை ஏட்டில் எழுதிப் படிப்பது என்னும் பழக்கம் பரவலாக இருந்துள்ளது. இதற்குக் காரணம் அச்சுப் பயன்பாடு வெகுசனப்படவில்லை என உணரலாம்.
     அகிலத்திரட்டு முதன் முதலில் 1939 – இல் அச்சில் பதிப்பிக்கப்பட்டது. அ தனை அடியொற்றியே பிற பதிப்புகள் வரத் தொடங்கின.
     திரு ஏடு எழுதப்பட்ட இடமான தென்தாமரைகுளம் பதியில் மதலில் திரு ஏடு வாசிப்புத் திருவிழா தொடங்குகிறது. அங்கு பத்துநாள் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது. அதன் பின்னர் அங்கிருந்து திரு ஏடு சுவாமித்தோப்புப் பதிக்குக் கொண்டு வரப்படுகின்றது. சுவாமித்தோப்புப்பதியில் தொடர்ந்து பதினேழு நாட்கள் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது. சுவாமித்தோப்ப்ப் பதியில் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நிறைவு பெற்ற பின்னர் மீண்டும் தென்தாமரைகுளம் பதிக்குத் திரு ஏடு கொண்டு செல்லப்படுகின்றது. பின்னர் தென்மாமரைகுளம் பதியில் மீதி ஏழு நாட்கள் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது. அதன் பின்னரே தென்தாமரைகுளம் பதியில் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நிறைவடைகின்றது.
     அகிலத்திரட்டை அய்யா வைகண்டர் சொல்ல அய்யாவின் சீடரான தென்தாமரைகுளம் இராமகிருஷ்ண நாடார் மகன் சகாதேவன் என்னும் அரிகோபாலன் எழுதினார். இவர் அகிலத்திரட்டை மலையாளம் ஆண்ட 1016 கார்த்திகை 27 வெள்ளிக்கிழமை ( கி.பி. 1841 டிசம்பர 12 ஆம் தேதி) எழுதி முடித்துள்ளார்.
     அய்யா உரைக்க அடியேன் அதை எழுதி
       மெய்யான போதம் மேலோர்கள் முன்பதிலே
       அன்பான இந்த அகிலத்திரட்டு அம்மானை”           ( அகி. தொகு. 1 )
என்று அகிலத்திரட்டு அய்யா வைகுண்டர் கூறு அரிகோபாலன் சீடர் எழுதியதாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அரிகோபாலன் சீடர் தென்தாமரைகுளம் பதியில் வைத்து அய்யா வைகுண்டர் கூற எழுதியதால் ஏஐ வாசிப்புத் திருவிழா தென்தாமரைகுளம் பதியில் தொடங்கி தென்தாமரைகுளம் பதிணிலேயே நிறைவடையும் வழக்கத்தை மேற்கொள்கின்றனர் என சுவாமித்தோப்புப் பதியின் தர்மகர்த்தாக்களில் ஒருவரான பாலபிரஜாபதி அடிகள் கூறுகின்றார்.
     அனைத்துப் பதிகளிலும் பதினைந்து, பதினாறாவது திரு ஏடு வாசிப்புத் திருவிழாவை “திருக்கல்யாண ஏடு என அழைக்கின்றனர். இதனை “இகனைத் திருமணம் ஏடு வாசிப்பு என்றும் கூறுகின்றனர்.
     பதழினேழாம் நாள் நடைபெறும் திரு ஏடு வாசிப்புத் திருவிழாவை “பட்டாபிசேக வாசிப்புஎனக் குறிப்பிடகின்றனர். இதைனை அய்யா வைகுண்டர் ஆசி பெற்ற நாள் என்று அன்பர்கள் கூறுகின்றனர்.
     சுவாமித்தோப்புப் பதியில் திரு ஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கும் அன்று அம்பலப்பதி, முட்டப்பதி, ¯ப்பதி, தெட்சணத்துத் துவாரகா பதி, வாகை பதி போன்ற பதிகளில் நடைபெறுகின்றது. தென்தாமரைகுளம் பதியில் இருந்து திரு ஏடு இப்பதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை.
     ¯ப்பதியில் பத்து நாட்களோ, பதினைந்து நாட்களோ திரு ஏடு வாசிப்புத் திருவிழாவை மேற்கொள்கின்றனர். அம்பலப்பதியில் பதினேழு நாட்களும் துவாரகா பதியில் ( ஐப்பசி முதல் வெள்ளி ) பதினேழு நாட்களும் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடத்தப்பெறுகின்றது. வாகை பதியலும் பதினேழு நாட்கள் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது.
     பத்து நாட்கள் எனில் எட்டும் ஒன்பதும் நாட்கள் திருக்கல்யாண ஏடு வாசிப்பாகக் கொள்கின்றனர். பத்து நாட்கள் நடைபெறுவதாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும் வண்ணம் திரு ஏடு வாசிப்புத் திருவிழாவை நடத்துகின்றனர்.
     ஒடுக்கப்பட்ட மக்கள் வேதங்களைத் தொடவும், கேட்கவும், படிக்கவும் தடை விதிக்கப்பட்ட காலகட்டத்தில் அய்யா வைகுண்ட சுவாமிகள் அய்யா வழி மக்களின் புனித ±லாக அகிலத்திட்டு அம்மானையை வழங்கிச் சென்றார் என நம்பலாம். இகனை மணம் அய்யா வைகுண்டர் பெண் தெய்வச் சக்திகளைத் தன்னோடு இணைத்துக் கொள்ள என்று கூறுகின்றனர்.