வெள்ளி, 21 நவம்பர், 2014

முட்டப்பதி

கன்னியாகுமரியிலிருந்து வடக்கே இரண்டு மைல் தொலைவில் இப“பதி அமைந்துள்ளது. சின்னமுட்டம் எனப்படும் மீன் பிடித் துறைமுகம் இதனருகிலேயே அமைந்துள்ளது.
     வைகுண்டசுவாமிகள் தன் அன்பர்களுக்குத் துவையல் பந்தி தவசில் ஈடுபடுத்தி அத்தவசை வெற்றி பெறச் செய்த பெருமை இப்பதியையேச் சாரும்.
     அய்யா வைகுண்டர்  தனது தவத்தை நிறைவு செய்த பின்னர் முட்டப்பதியில் தீர்த்தம் ஆடினார் என்றும், அதனால் முட்டப்பதியில் தீர்த்தம் ஆடுவது சிறப்பு என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
     முட்டப்பதியில் கணக்குக் கூறும் நிகழ்வும் ( காலக் கணிப்பு ) நடைபெறுகின்றது. வேறு பதிகளில் கணக்குக் கூறும் வழக்கம் இல்லை. இப்பதியில் மட்டுமே கணக்குக் கூறும் முறை காணப்படுகின்றது.
ஆண்டுத் திருவிழா
            பங்கனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அய்யா வழி பக்தர்கள் சுவாமித்தோப்பிலிருந்து முட்டப்பதி நோக்கி தீர்த்த யாத்திரையாட செல்கின்றனர். அன்றைய தின முட்டப்பதி பணிவிடையையும், அன்னதானத்தையும் சுவாமித்தோப்புப் பதியினரே ஏற்றுக் கொள்கின்றனர்.
அவதாரத் தினவிழா, , திரு ஏடு வாசிப்புத் திருவிழா, தீர்த்தாமடுதல் திருவிழாவும் நடை பெறுகின்றன.
தினப் பணிவிடை
     அதிகாலை ஐந்து மணிக்குத் திருநடை திறக்கப்படுகின்றது. பணிவிடை காலை, நண்கல், மாலை என மூன்று வேளை நடைபெறுகின்றது. பணிவிடை தலைமைப் பதியில் நடைபெறுவது போன்றே நடைபெறுகின்றது.
வாரப் பணிவிடை
    வார வழிபாடாக ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.
மாதப் பணிவிடை
    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக