வெள்ளி, 21 நவம்பர், 2014

தெட்சணத்துத் துவாரகா பதி

கன்னியாகுமரிக்கு மேற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையில் இப்பதி அமைந்துள்ளது. இப்பதியினைக் குமரேசன் என்பவர் தாங்கலாகத் தொடங்கி, தற்போது தெட்சணத்துத் துவாரகா பதி என்னும் பெயரில் செயல்படுகின்றது.
தினப் பணிவிடை
    மூன்று வேளை தின வழிபாடு நடைபெறுகின்றது.
தினமும் ஆறு மணிக்கு திருநடை திறக்கப்பட்டுப் பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. அப்போது உகப்படிப்பும் படிக்கப்படுகின்றது
நண்பகல் பணிவிடை பகல் பன்னிரண்டு மணிக்கு நடை பெறுகின்றது. அப்பொழுது பால்தர்ம்ம் வழங்கப்படுகின்றது.
 மாலை ஆறு மணிக்கு மாலை நேர பணிவிடை நடைபெறுகின்றது. அப்பொழுது உகப்படிப்பு படிக்கப்படுகின்றது.
வாரப் பணிவிடை
ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. அன்று நண்பகல் பணிவிடைக்குப் பிறகு உச்சிப்படிப்பும் முடிந்த பின்னர் பகல் ஒரு மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது.
மாதப் பணிவிடை
     ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பணிவிடை முடிந்த பின்னர், நண்பகல் பணிவிடை பகல் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பமாகிறது. ஒரு மணிக்கு அய்யா வைகுண்டர் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. வாகனம் கடற்கரையோரமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றது. பகல் ஒன்று முப்பதுக்கு அன்னதானம் நடைபெறுகின்றது
ஆண்டுத் திருவிழா
    ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திரு ஏடு வாசிப்புத் திருவிழா பதினேழு நாட்கள் நடைபெறுகின்றது.    அவதார தின விழாவும் பங்குனி மாதம் பதினோரு நாட்கள் திருவிழாவும் விமரிசையாக நடத்தப்பெறுகின்றது.
பௌர்ணமி தவம்
     உவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் அன்று மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை பௌர்ணமி தவம் என்னும் பணிவிடை நடைபெறுகின்றது. அப்போது
“ அய்யா சிவ சிவ சிவசிவா அரகர அரகரா
      சிவசிவ சிவசிவா அரகர அரகரா”  - என 1008 முறை கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக