வெள்ளி, 21 நவம்பர், 2014

தென்தாமரைகுளம்பதி

நாகர்கோவிலிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இப்பதி அமைந்துள்ளது. தலைமைப் பதிக்கு அருகாமையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
     அகிலத்திரட்டு அம்மானை எழுதிய அரிகோபாலன் அவர்கள் பிறந்த ஊர் தாமரைகுளம் பதியாகும். இவரைச் சகாதேவன் சீடர் என்றும் கூறுவர்.
அய்யா வைகுண்ட சுவாமியின் சீடர்களாகிய தர்மன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐந்து சீடர்களில் ஒருவரென்றும் கூறுகின்றனர்.
அகிலத்திரட்டு அம்மானை இப்பதியில் வைத்து எழுதப்பட்டதால் இப்பதியைத் தலைமைப் பதி என்று இப்பதியைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
தினப் பணிவிடை
தினமும் ஐந்து மணிக்குத் திருநடை திறக்கப்பட்டு பணிவிடைகள் நடைபெறுகின்றன. இப்பதியின் நிர்வாகம் இப்பதியைச் சார்ந்தவர்களால் நிர்வகிக்கப்படுகின்றது.
மாதப் பணிவிடை
     ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. அன்று சமபந்தி போசனமும் நடைபெறுகின்றது.
ஆண்டுத் திருவிழா
     ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை திரு ஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கி பதினேழு நாட்கள் நடைபெறுகின்றன. அகிலத்திரட்டு இப்பதியில் வைத்து எழுதப்பட்டதன் நினைவாக இப்பதியில் திரு ஏடு வாசிப்புத் திருவிழா முதன்முதலாக நடைபெறுகின்றது. அதன் பிறகே ஏனைய பதிகளில் நடைபெறுகின்றது.
     சித்திரை மாதம் ( ஏப்பிரல் 18 ) பதினோரு நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக