கி.பி. 1833,
மார்ச் 3 ஆம் தேதி அன்று முத்துக்குட்டி அவர்கள் அய்யா வைகுண்டராக அவதாரம்
எடுத்தார் (மாசி மாதம் இருபதாம் தேதி). அந்நாளே அய்யா வழி மக்களால் அவதார தினமாகக்
கொண்டாடப்படுகின்றது. இவ்விழா மட்டும் அனைத்துப் பதிகளிலும், தாங்கல்களிலும் உரே
நாளில் கொண்டாடப்படுகின்றது.
இவ்விழாவினை
அய்யா வழி மக்கள் கொண்டாடும் பொது விழா எனக் கூறலாம். இந்நாளில் தலைமைப்பதியிலும்,
அம்பலப்பதியிலும் அவதார தின ஊர்வலங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஊர்வலத்தின்போது
நாமம் பொறித்த காவி வண்ணக் கொடிகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு ” அய்யா சிவ சிவ சிவா அரகரா” எனக் கூறியபடி பக்தர்கள்
ஊர்வலத்தில் பங்கு கொள்கின்றனர்.
அனைத்துப்
பதிகளிலும் அவதார தினவிழா ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் தலைமைப் பதியில்
நடைபெறும் ஊர்வலமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. பல்வேறு
மாவட்டங்களில் இருந்தும் அன்பர்கள் இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டு அய்யா
வைகுண்டரின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
அவதாரத்
தினத்தின் முதல் நாள் திருச்செந்#ர் கடலிலிருந்து
தொடங்கும் ஊர்வலம் மறுநாள் தலைமைப் பதியை வந்தடைகின்றது. கேரள மாநிலம்
திருவனந்தபுரத்திலிருந்தும் ஊர்வலமாக அன்பர்கள் தலைமையைப் பதியை நோக்கி
வருகின்றனர் ( அய்யா வைகுண்டர் திருவனந்தபுரம் சிங்காரவனத்தோப்பில் சிறை
வைக்கப்பட்டிருந்த்தன் நினைவாக இவ் ஊர்வலம் நடைபெறுவதாக அன்பர்கள் கூறுகின்றனர் ).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக