நாகர்கோவிலிலிருந்து தெற்குத் திசையில் பத்து கிலோ
மீட்டர் தொலைவில் இப்பதி அமைந்துள்ளது. இப்பதியில் அய்யா வைகுண்டர் இரண்டு
வருடங்கள் தவம் புரிந்தார். மேலும் இவ்வாலயத்தை எழுப்ப கருங்கல் அருகே பாÙர் என்னும் ஊரிலிருந்து பனை
மரங்களைக் கடல் வழியே கொண்டு வந்து ஆலயத்தை எழுப்பியதாகக் கூறுகின்றனர்.
அதன்
பின்னரே இப்பகுதி அம்பலப்பதி எனப் பெயர் பெற்றது. அதற்கு முன் இப்பகுதி பள்ளம்
என்ற பெயருடன் விளங்கிற்று. இப்பதியை அம்பலப்பதி, பள்ளப்பதி, மூலகுண்டப்பதி,
என்றும் அழைக்கின்றனர்.
இப்பதியில்தான் அய்யா
வைகுண்டர் தொண்ணூற்றாறு சட்டங்கள் ஒன்றாய் இணையும் வண்ணம் தத்துவக் கொட்டகை ஒன்றை
நிர்மாணித்தார். அத்தோடு அய்யா வைகுண்டர் இப்பதியில் சிவ சொரூபியாக்க்
காட்டசியளிப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
அம்பலப்பதியில்
அய்யா வைகுண்டர் பார்வதி மற்றும் பகவதியின் ஆற்றலைப் பெற்றுக் கொண்டதாகவும்,
முருகனாக வேடமிட்டு வள்ளி, தெய்வானையின் ஆற்றலைப் பெற்றுக் கொண்டதாகவும்,
பிரம்மனாக உருக் கொண்டு மந்தைகற்றலின் ( மண்டைகாட்டாள்) ஆற்றலைப் பெற்றதாகவும்
கூறுகின்றனர்.
இப்பதியிலிருந்து
அய்யா வைகுண்டர் குதிரை மேல் பயணித்துக் கடம்பன்குளம், பாம்பன்குளம் போன்ற
கிராமங்களுக்குச் சென்று நிழல்தாங்கல்களை ஏற்படுத்தினார் எனவும் தரவாளர்கள் மூலம்
அறியமுடிந்தது.
தினப்
பணிவிடை
அதிகாலை ஐந்து மணிக்கு ஆலயத் திருநடை திறக்கப்பட்டு
பணிவிடைகள் நடைபெறுகின்றன. பின்னர் நண்பகல் பணிவிடையும், மாலை நேர பணிவிடையும் என
மூன்று வேளை பணிவிடைகள் நடைபெறுகின்றன.
வாரப்
பணிவிடை
வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையும்,
ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பான பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. செவ்வாய்க்கிழமை
வழிபாட்டில் அதிகம் பெண்களே கலந்து கொள்கின்றனர். இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளும்
திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், குழந்தை இல்லாத
தம்பதியர்களுக்குக் குழந்தை பேறு கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.
ஆண்டுத்
திருவிழா
ஆண்டுத் திருவிழா ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை
தொடங்கி பதினோரு நாட்கள் நடைபெறுகின்றது. தலைமைப் பதியைப் போன்ற பல வகையான வாகனப்
பவனி நடைபெறுகின்றது. அய்யா வைகுண்டரின் பதிகளில் பெண்கள் அதிகமாக்க் கலந்து
கொள்ளும் பதி இதுவாகும். அவதார தின விழா, திரு ஏடு ( பதினேழு நாட்கள் ) வாசிப்புத்
திருவிழா போன்ற ஆண்டுத் திருவிழாக்களும் நடைபெறுகின்றன.
¯ப்பதி
நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில்
தெற்குத் திசையில் இப்பதி இடம்பெற்றுள்ளது. ஈத்தாமொழி என்னும் கிராமத்திற்கு
அருகில் அமைந்துள்ளது. அய்யா வைகுண்டரின் காலத்தில் புன்னை மரங்கள் நிரம்பிய ஒரு ¯ஞ்சொலையாக இவ் ஊர் காணப்பட்டது.
இங்கு
அய்யா வைகுண்டரின் பக்தையான ¯மடந்தை என்னும் பெண்
வசித்து வந்தார். இவரைப் ¯மாதேவி என்று
கூறுகின்றனர். இவர் அய்யாவின் புகழைப் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
கிருஷ்ண
பக்தையாக விளங்கிய ஆண்டாள் மற்றும் மீராவைப் போல் ¯மடந்தை அய்யா வைகுண்டரின்
பக்தையாகத் திகழ்ந்தார். அவரது பற்றையும், அவரது உறவினர்களின் வேண்டுகோளையும்,
பக்தர்களின் வேண்டுகோளையும் ஏற்று அய்யா வைகுண்டர் தனது தேவியாக ¯மடந்தையை ஏற்றுக் கொண்டார்.
தினப் பணிவிடை
அதிகாலை ஐந்து மணிக்குத் திருநடை திறக்கப்படுகின்றது.
மூன்று வேளை பணிவிடைகள் நடைபெறுகின்றன.
வாரப்
பணிவிடை
ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.
ஆண்டுத்
திருவிழா
இக்கோயிலில்
கொடிமரம் இல்லை. ஆண்டுத் திருவிழா ஐப்பசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை
நடைபெறுகின்றது. திருவிழாவின்போது கொடி ஏற்றப்படுவதில்லை. அவதார தின விழா, திரு
ஏடு வாசிப்புத் திருவிழா ( 17 நாட்கள். கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை
தொடங்குகிறது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக