வெள்ளி, 21 நவம்பர், 2014

வாகை பதி

கன்னியாகுமரியிலிருந்து வடக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இப்பதி அமைந்துள்ளது.
     அய்யா வைகுண்டர் தனது ஐந்து வருட தவத்தின் இறுதி நாட்களில் தனது பக்தர்களிடம் வாகை பதியில் சென்ற உடலையும், உள்ளத்தையும் சுத்தம் செய்யும் முறையையும், அதற்கான வழிபாட்டு முறைகளையும் கூறி அவர்களை வாகை பதிக்கு அனுப்பி வைத்தார்.
அதன்படி சுமார் எழு±று குடும்பங்கள் வாகை பதிக்குச் சென்று அய்யா வைகுண்டர் கூறியபடி உடலையும், உள்ளத்தையும் சுத்தம் செய்யம் வழிபாட்டு முறைகளை மேற்கொண்டனர். இது பற்றிய செய்திகள் துவையல் பந்தி பகுதியில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினப் பணிவிடை
    அதிகாலை ஐந்து மணிக்குத் திருநடை திறக்கப்பட்டு பணிவிடை நடைபெறுகின்றது. நண்பகல், மாலை பணிவிடையும் நடைபெறுகின்றது. தினமும் இப்பதிக்கு வரும் அன்பர்களுக்கு மதிய உணவு வழங்க்கின்றனர். அதிகம் பேர் வருதில்லை. ஒன்றிரண்டு பேர் வருகின்றனர்.
வாரப் பணிவிடை
    ஞாயிற்றுக்கிழமை சிறப்பான பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. சில வாரங்களில் அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
மாதப் பணிவிடை
     ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. அன்று சமபந்தி போசனமும் நடைபெறுகின்றது.
ஆண்டு வழிபாடு
இக்கோயிலில் ஆண்டுத் திருவிழா நடைபெறுவதில்லை. திரு ஏடு வாசிப்புத் திருவிழா, அவதார தினவிழா போன்ற திருவிழாக்கள் மட்டுமே நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக